ஏன் அப்படி?

இந்திராகாந்தியினை திமுக கொல்ல முயற்சிக்கவில்லை எவனோ ஒருவன் கல்லை வீசிவிட்டான்

ஆஹான்..

ராஜிவ் கொலைக்கு திமுககாரணம் அல்ல, திமுகவின் ஆதரவினை புலிகள் தவறாக பயன்படுத்திவிட்டனர்

சரி காந்தியினை கொன்றது?

அய்யய்யோ ஆர்.எஸ்.எஸ் பார்ப்பானிய மதவாதம்

பாபர் மசூதியினை இடித்தது

அய்யய்யோ பாஜக…அய்யய்யோ சங் பரிவார்

ஏன் அப்படி?

அப்படிதாண்டா சங்கி

முதலில் தமிழக டிவிக்களை மூட வேண்டும்

இத்தனை டிவி மீடியாக்கள் தமிழகத்தில் இருக்கின்றன‌

டீக்கு வழியற்றவன், துண்டுபிடிக்கு காத்திருப்பவனை எல்லாம் விவாதம் என அழைத்து என்னென்ன காமெடியல்லாமோ செய்கின்றன‌

கார்த்தி சிதம்பரம் லட்டு போல சிக்கியிருக்கின்றார்

ஒரு டிவி அழைத்து உங்க அப்பாவுக்கு அநீதி நடந்ததா? ஏர்செல் வழக்கில் தயாநிதி உள்ளே செல்ல வேண்டுமா? அந்த வழக்கில் மன்மோகன் என்ன செய்தார்

என்னய்யா பிரதமர் அவர்? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தெரியாது என்றார், நிலக்கரி தெரியாது என்றார்,உரம் விவகாரம் தெரியாது, ஏர்செல்லும் தெரியாது என்றால் என்ன பிரதமர்

சரி உங்க டாடி என்ன செய்தார்? டாடி கூட தயாநிதிமாறனும் இருக்க வேண்டும் என்கின்றீர்களா என விவாதித்தால் எப்படி இருக்கும்?

ஆனால் செய்யமாட்டார்கள்

எவனாவது ஆலமரத்தடியில் மல்லாக்க கிடப்பவனை இழுத்து வந்து ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டில் உனக்கு அரிசி எவ்வளவு குறையும் சொல் என கேட்டுகொண்டே இருப்பார்கள்

அவனும் அண்டார்டிகாவின் அடியாழம் வரை சென்று அலசுவவதாக நினைத்து அறுத்து தள்ளிகொண்டிருப்பான்

முதலில் தமிழக டிவிக்களை மூட வேண்டும்

காந்திமேல் அக்காலத்தில் இருந்து வரும் விமர்சனங்கள்

காந்திமேல் அக்காலத்தில் இருந்து வரும் விமர்சனங்கள் பல உண்டு சிலவற்றை சொல்லிவிடலாம்

இந்தியாவில்தான் பிறந்து வளர்ந்தார் காந்தி, லண்டனுக்கு படிக்க சென்று இங்குதிரும்பினார் அதுவரைக்கும் அவருக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் மோதல் இல்லை

மோதல் தென்னாப்ரிக்க ரயிலில் அவரை வெள்ளையன் இழுத்து போட்டதில் தொடங்கியது, அதில்தான் போராட்டத்திற்கு வந்தார்

அந்த போராட்டமும் தென்னாப்ரிக்க விடுதலைக்கு அல்ல, சில உரிமைளை பெறத்தான் நடத்தினார் அவை கிடைத்தபின் இந்தியாவுக்கு வந்தார்

இங்கு ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் போராடிகொண்டிருந்தவர்கள் அவர் தலமைக்கு வந்தபின் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கினர் அல்லது ஒதுக்கபட்டனர்

யாரும் துப்பாக்கி தூக்காமல் அதே நேரம் நேரடி போராட்டமும் நடத்தாமல் ஏதோ செய்துகொண்டிருந்தார்

உரிமை போதும் சுதந்திரம் பின்பு பார்த்துகொள்ளலாம் எனும் வகையில் அவரின் அணுகுமுறை இருந்தது

தேசம் பிரியவும் எரியவும் தயாரான காலங்களில் அவர் முதிர்ந்த வயதில் பிரம்மசரியம் காக்க முடியுமா? இல்லறத்தை தவிர்க்கலாமா என என்னென்ன ஆய்வுகளையோ செய்துகொண்டிருந்தார்

ஒருமாதிரியான குணத்துக்கு மாறியிருந்தார்

நாட்டின் உற்பத்தி பாதிக்கவோ இல்லை உலகபோர் காலங்களில் வெள்ளையனுக்கு நெருக்கடி கொடுக்கவோ அவர் எண்ணவில்லை

இரண்டாம் உலகபோர் மட்டும் நடைபெறாவிட்டால் இந்திய சுதந்திரம் காந்தி காலத்தில் கிடைத்திருக்காது

காந்தி சம்பாதித்த அதிருப்திகள் ஏராளம்

உச்சமாக ஜின்னாவினை அவர் நினைத்திருந்தால் முடக்கியிருக்கலாம், பாகிஸ்தான் பிரிவினையினை தடுத்திருக்கலாம் அதை செய்யவில்லை

ஏதேதோ சொல்லி பார்த்தார் அத்தோடு விட்டுவிட்டார்

அது தவறு , அரசியல் ரீதியாக மாபெரும் தவறு

ஒருநாடு உருவாகி அது தனக்கு எதிராக திரும்பும் சாத்தியம் இருந்தால் அதை உருவாக விடவே கூடாது

அதை அமெரிக்க உள்நாட்டுபோர் சொன்னது, லிங்கன் அதை சாகசமாக தடுத்து அமெரிக்கா உடையாமல் காத்தார்

ஒருவேளை உடைபட்டிருந்தால் இந்நேரம் கருப்பர் வெள்ளையர் தேசமாக இரு நாடுகள் மோதிகொண்டிருக்கும் இந்த வல்லரசு வந்திருக்காது

பாலஸ்தீனை உள்ளே வைத்து இஸ்ரேல் அடைகாப்பது அப்படித்தான்

எதிரி உனக்கு எதிராக வருவான் என்றால் அவனை ஏன் வெளியே விடவேண்டும்? உள்ளே வைத்து கண்காணி என்பது ராஜநீதி

காந்தி அதில் தோற்றார்

அதுவும் இஸ்லாமிய நாடு ஒன்று உதித்து அது பெரும் கலவரத்தில் ஈடுபடும் பொழுது இங்கிருக்கும் இந்துக்களை அமைதி காத்து 50 கோடி கொடுங்கள் என்பதெல்லாம் வேறு வகை கொடுமை

அதுவும் இஸ்லாமிய தேசம் உருவான பின் இத்தேசம் மட்டும் சமயசார்பற்ற தேசம் என்பது இங்குள்ள மக்களின் மனதை நோகடித்தது

இந்நாட்டு இந்து சமூகம் தனக்கு யாருமில்லை என அஞ்ச தொன்றியது அப்பொழுதான்

இஸ்லாமியருக்கு ஜின்னா சாதித்து காட்டிவிட்டான், எங்களுக்கான தலமை எது என இந்து சமூகம் கேட்டபொழுது அந்த கேள்வியினை காந்தி தவிர்த்தார்

அவர் அப்படி செய்திருக்க கூடாது

சுருக்கமாக சொன்னால் இந்துக்கள் தன்னை போல பெருந்தன்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியும் அல்ல‌

மொத்தத்தில் இந்த தேசத்து மக்களின் உணர்வுகளை அவர் மதிக்க தவறினார், பல கொலைமுயற்சிகளில் சிக்கினார்

கோட்சேவுக்கு வெற்றிகிடைத்தது

நிச்சயம் கோட்சே ஒரு கிறுக்கன், தானாக சாகும் நிலையில் இருந்த முதியவரை சுட்டு கொன்றது பைத்தியகாரதனமான செயல்

விட்டால் காந்தி தானகவே இறந்திருப்பார் அல்லது வேறு யாரும் தள்ளியாவது விட்டிருப்பார்கள்

அந்த பழியினை வலிய சென்று ஏற்றான் கோட்சே, இந்த ஆர்.எஸ்.எஸ் , இந்துமகா சபை எல்லாம் கொஞ்சம் விவரமில்லா கோஷ்டி, அவர்கள் உருவாக்குவது எல்லாம் உருப்பாடாதவர்கள் என பலர் சொல்வது இதனால்தான்

ஏம்ப்பா எல்லோருக்கும் கேட்டுச்சா?……

ஏர்செல் வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதிமாறனை கைது செய்யாதது ஏன் : கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

வாய்ய வாய்யா.. செட்டி புள்ள கெட்டி

ஆக எல்லோரும் சேர்ந்துதான் ஊழலை செய்தார்கள் என்கின்றார் கார்த்தி..

இந்த ஆட்சியின் பிரதமர்தான் மன்மோகன் சிங்

ஏம்ப்பா எல்லோருக்கும் கேட்டுச்சா?……

சரி அவர் பிரதமரானால் என்னாகும்?

மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது, அதனால் அது ராஜினாமா செய்துவிட்டு மன்மோகன் சிங்கிடம் ஆட்சியினை கொடுக்க வேண்டும்

சரி அவர் பிரதமரானால் என்னாகும்?

எதுவும் ஆகட்டும் ஆனால் திமுக மந்திரிசபையில் வரும்

அவர்தான் கலைஞருக்கு துஷ்டி கூட விசாரிக்கவில்லையே, இன்னும் அஞ்சலி கூட சொல்லவில்லையா

ஆமாம்

அவர் அவையில் எப்படி திமுக?

அது அப்படித்தான்

மானமே இல்லையா?

நாட்டுக்கும் நாட்டின் வளப்பத்துக்காகவும் பொருளாதார வலிமைக்க்காகவும் திமுக மானமிழக்க கூட தயங்காது

டேய்..

முதலில் நான் ஒரு இந்து..

பன்னீர் செல்வத்து மகன் ரவீந்திரநாத் “முதலில் நான் ஒரு இந்து..” என சொல்லிவிட்டதை ஆளாளுக்கு கலாய்க்கின்றார்கள்

இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லா கோஷ்டிகளும் உண்டு

ஆனால் தூய்மையான இந்து கோஷத்தை முதலில் இங்கு எழுப்பியவர் பசும்பொன் தேவர்

அவர் தூய இந்துவாக வாழ்ந்தார், இந்துநெறியில் நின்றார், நான் ஒரு இந்து என எல்லா வகையிலும் நிரூபித்தார்

நாடும் மதமும் இரு கண்கள் என்றார் அவர்

அவர் சொன்னதைத்தான் இவரும் சொல்கின்றார்

ஆனால் அவர் நினைவிடத்துக்கு எல்லா கட்சி தலமையும் செல்லும் வணங்கும், குங்குமம் வைக்கும் கொண்டாடும்

அவர் சொன்னதை ரவீந்திரநாத் சொன்னால் பரிகசிப்பார்கள்

ஏதும் புரியுமா?

புரியாது, இதுதான் தமிழக அரசியல்

எங்கே இவரை கலாய்க்குமுன் அவரை அதாவது பசும்பொன் தேவரை கலாய்க்கட்டும் பார்க்கலாம்

உன்னால் மட்டும் எப்படி சில விவகாரங்களை சொல்லமுடிகின்றது

உன்னால் மட்டும் எப்படி சில விவகாரங்களை சொல்லமுடிகின்றது என பலர் கேட்பதால் பதில் இதுதான்

எது தலைப்பு செய்தியில் வரவேண்டுமோ அதை தமிழக மீடியாக்கள் ஒரு வரியில் கடந்து செல்வார்கள்

எது ஒருவரியில் வரவேண்டுமோ அதை பக்கம் பக்கமாக எழுதுவார்கள்

அதனால் தமிழக பத்திரிகைகளின் முக்கிய செய்தியினை தூர எறிந்துவிட்டு ஒருவரி செய்திகளை படியுங்கள் உங்களுக்கும் பல விஷயம் தெரிய வரும்

இன்றைய தமிழக மீடியாக்களின் முக்கிய செய்தி என்ன தெரியுமா?

வெறித்தனம் பாடல் பிறந்தது எப்படி? பிகில் படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வரும்?

அனுஷ்கா ஏன் குண்டாகிவிட்டார்?