யாரும் முதல் முயற்சியிலே வென்றவர்கள் இல்லை

விண்வெளி தரவுகளை எடுத்து பாருங்கள், யாரும் முதல் முயற்சியிலே வென்றவர்கள் இல்லை

வார்ன் பிரவுண் காலத்திலே அமெரிக்கா தடுமாறியது, சோவியத் யூனியன் ஒரு காலத்தில் விரக்தியில் இருந்தது

தன் பிரசித்தி பெற்ற மிர் கலத்தையே நொறுக்கி தள்ளியது ரஷ்யா

அமெரிக்காவின் ஸ்கைலேப் வகையெல்லாம் சந்தி சிரித்த விஷயம்

ஆம் அவர்கள் 1950களிலே பாய ஆரம்பித்தார்கள், நாம் 30 வருடம் கழித்துத்தான் களத்துக்கு வந்தோம்

30 வருட இடைவெளிக்கு பின் வந்தும் இன்று அவர்களை விட 3 மீட்டர்தான் பின் தங்கி இருக்கின்றோம்

முதல் பாய்ச்சலிலே அதாவது தரையிறக்கத்தில் முதல் முயற்சியிலே 95% வெற்றியினை பதிவு செய்திருக்கின்றோம்

அதுவே மாபெரும் வெற்றி, முத்திரை பதித்துவிட்ட வெற்றி

எதிர்பார்த்த தோல்விதான் இது, ஆனால் இவ்வளவு நெருக்கமாக வருவோம் என்பதுதான் நினைக்கவில்லை

அதுதான் லேசாக வலிக்கின்றது

மற்றபடி எவரெஸ்டை நெருங்கமுடியாது எனும்பொழுது அதில் ஏறி சில இன்ஞ் தூரத்தில் தோற்றிருக்கின்றோம், அது தோல்வி அல்ல

உலகை அதிரவைக்கும் வெற்றி

இந்தியன் என்பதை விட மனிதன் என்றே சொல்லமுடியாது

இந்த நேரத்திலும் மோடியின் மீதான வெறுப்பை கொண்டாடுபவனை இந்தியன் என்பதை விட மனிதன் என்றே சொல்லமுடியாது

இது இந்திய விஞ்ஞானிகளின் சோதனை காலம், நாம் அவர்களுடன் இருத்தல் வேண்டும் ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்து உற்சாக படுத்துதல் வேண்டும்

அரசியல் பேச இது நேரமல்ல, நடந்திருப்பது நாட்டு விஷயம்

இதற்கு மகிழ்பவன் நிச்சயம் நல்ல குடிமகன் அல்ல, நாளை அவன் முழுக்க சுயநலவாதி, எந்த நாட்டுக்கு சென்றாலும் அவன் உருப்படபோவதில்லை அவன் வாழும் நாடும் உருப்படாது

முழு அயோக்கியன் யார்? தேசத்தின் விரோதிகள் யார் என்பது அப்பட்டமாக தெரியும் நேரமிது

இவர்களின் நன்றிகெட்ட தனத்தால், நாட்டையே கேவலபடுத்தும் இந்த ஈன புத்தியினை கண்டு நாணி நிற்கின்றோம்

இம்மாதிரி புல்லுருவிகள் எக்காலமும் உண்டு

ஆம் இந்த தேசம் என்றெல்லாம் ஒன்றாகுமோ, என்றேல்லாம் மொத்தமாக ஒரே குரலில் ஒரே கண்களில் ஒரு விஷயத்தை பார்க்குமோ அப்பொழுதெல்லாம் இவர்கள் முகம் கறுத்துவிடும்

இதோ சந்திராயன் அகில இந்திய விஷயமாக எல்லா மக்களும் ஒரே குரலில் அதை பேசுவதால் அது பொறுக்காமல் இறங்கிவிட்டார்கள் கயவர்கள்

இந்த சீழ்பிடித்தவர்களை, குறை புத்தி கொண்ட மடையர்களை தூக்கிபோட்டு மிதித்து நம் வழியில் தேசத்தை வளர்ப்போம்

தோற்றாலும் நாட்டுபற்றை மக்கள் உள்ளத்தில் நெருப்பாக எரிய வைத்திருக்கின்றது சந்திராயன், இந்த வெற்றி போதும், அவ்வகையில் மாபெரும் வெற்றி இது

ஜெய்ஹிந்த்

சந்திராயன் 2

நீண்ட பெருமூச்சுடன் தேசம் நம் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தும் ஆறுதலும் ஊக்கமும் தெரிவித்து கொண்டிருக்கின்றது.

விண்வெளி ஆய்வு என்பது திராவிட தத்துவமோ அரசியலோ அல்ல, அது மிக கடுமையான சிரமான விஷயம், நாம் முன்பே சொன்னபடி இன்னொரு கிரகத்தில் தரையிரக்கம் என்பது மிக மிக சிரமான விஷயம்

முன்பு சந்திராயன் 1 நாம் நிலவில் சுற்ற விட்டோம் , அது வேறுவகையான தொழில் நுட்பம். ஒரு கிரகத்தின் சுற்றுபாதையில் ஒரு பொருளை நிறுத்தினால் சுற்றிகொண்டே இருக்கும், அது விதி

ஆனால் தரையிரக்கம் அப்படி அல்ல, மிக மிக கடினமான விஷயம், அதன் முதல் முயற்சியில் நாம் வெற்றியினை தவறவிட்டிருகின்றோம்

இது நமக்கு புதிதா இல்லை உலகுக்குத்தான் புதிதா??

1957லே செயற்கைகோளினை உருவாக்கி விண்ணும் அனுப்பி
, ஏன் நாய் முதல் மனிதன் வரை விண்ணுக்கு அனுப்பியது சோவியத் யூனியன்

ஆனால் 1970வரை இன்னொரு கிரகத்தில் கலத்தை இறக்குவதில் அவர்கள் பெரும் தோல்வி அடைந்தார்கள்

ஏன் அமெரிக்காவே கடும் தோல்விகள் ஏராளம் அடைந்தபின் மனிதன் நிலாவுக்கு சென்றதாக அறிவித்தது, ஆனால் அந்த முயற்சியில் முண்ணணியில் இருந்த ரஷ்யா அது சாத்தியமில்லை என அன்றே சொன்னது

ஆம் ஒரு கலன் இன்னொரு கிரகத்தில் இறங்குவது அவ்வளவு சிரமம்

1990களுக்கு பின்பே கலத்தை வெற்றிகரமாக லேண்ட் செய்யும் நுட்பத்தை அவர்கள் பெற்றார்கள் அதிலும் நிறைய தோல்வி

செவ்வாயில் அவர்கள் இறக்கிய பாத் பைண்டர் தோல்வி, அதன் பின் இறக்கிய ரோவர் ஓரளவு வெற்றி

எல்லா நாடுகளின் நிலையும் இதில் சிக்கலே இதுவரை நிலாவில் கலத்தை வெற்றிகரமாக இறக்கிய நாடு அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீனா

இதில் சீனாமேல் எல்லோருக்கும் பலத்த சந்தேகம்

மிக பெரிய கில்லாடி நாடான இஸ்ரேல் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவினை விட மோசமான தோல்வியினை சந்தித்தது வரலாறு

ஆம் இன்னொரு கிரக தரையிறக்கல் அவ்வளவு சிக்கல்

இதில் நாம் ஒரு விஷயத்தை நோக்குகின்றோம்

அமெரிக்கா இதற்கான சோதனையில் இழந்த உயிர்கள் அதிகம்

நமக்கெல்லாம் ஆம்ஸ்ட்ராங் கோஷ்டி தெரியும் ஆனால் அதற்கு முன்பே சோதனை ராக்கெட் வெடித்து செத்த பலரை தெரியாது

ரஷ்யாவின் சக்திவாய்ந்த ராக்கெட் தளத்திலே வெடித்து அன்றே 150 பேரை கொன்றது

ஆம் ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆய்வென இழந்திருக்கும் உயிர்கள் ஏராளம்

நாம் வெறும் கலத்த்தைத்தான் இழந்திருக்கின்றோம்

1970களில் நாம் பார்க்காத தோல்வியா?

மாபெரும் தோல்விக்கு பின் அப்துல் கலாம் மனம் வெறுத்து
, விரக்தி நிலையில் ஒடுங்கி குழம்பி அமர்ந்த காலங்கள் உண்டு

பெரும் தோல்விகளுக்கு நானே பொறுப்பு என் கீழ் இருக்கும்
விஞ்ஞானிகள் அல்ல என சதீஷ்தவான் பொறுப்பேற்று அவர்களை ஆறுதல்படுத்திய காட்சிகளும் உண்டு

எவ்வளவு அவமானம்? எவ்வளவு தோல்விகள்?

அவற்றை எல்லாம் தாண்டித்தான் இவ்வளவு வெற்றிகளை குவித்தோம்

யார் வரலாற்றில் தோற்கவில்லை? ஹிட்லருக்கு சரியான ஏவுகனைகளை கொடுக்கமுடியாமல் தோற்ற வார்ண் பிரவுணே அமெரிக்காவுக்கு பின்னாளில் பெரும் நுட்பம் கொடுத்தான்

1970களில் தடுமாறிய கலாமே பின்பு அழியா நுட்பங்களை கொடுத்தார்

ஆம், என்னாயிற்று? ஒன்றும் ஆகவில்லை. எங்கோ நமக்கு பயிற்சி போதவில்லை, எதிர்பார்த்த கணக்கு பிழைத்துவிட்டது, அவ்வளவுதான்

நம் அன்பிற்கும் நன்றிக்கும் பெருமைக்குமுரிய விஞ்ஞானிகள் பக்கம் தேசத்தின் தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி நிற்பதை போல நாமும் நிற்க வேண்டும்

ஆம், என்ன இழந்துவிட்டோம் வெறும் பணம் அவ்வளவுதான்

அதை மறுபடி கொட்டினால் அடுத்த முயற்சி. வெற்றி கிடைக்கும் வரை முயற்சி

இந்நாட்டின் அறிவு தெய்வங்களான எம் விஞ்ஞானிகளே

வெற்றிகோட்டை இறுதி நொடியில்தான் விட்டிருக்கின்றீர்கள் ஆனால் மிக நீண்ட போராட்டத்தில் 99% வென்றுவிட்டீர்கள் , உங்களை வாழ்த்துகின்றோம்

இந்த முடிவு எதிர்பார்த்ததுதான், ஆனால் இந்தியாவின் விண்வெளி ஆற்றலின் அடைவுநிலை வியக்கவைக்கின்றது, முதல் முயற்சியிலே எல்லை கோட்டை மிக எளிதாக தொட முயன்றுவிட்டார்கள் என ஆச்சரியபடுகின்றது உலகம்

உலகம் உங்களை ஆச்சரியமாக பார்க்கலாம், ஆனால் நாங்கள் உங்களை மிக்க நன்றியோடு கைகூப்பி வணங்கி சொல்கின்றோம்

எங்கள் விண்வெளி தெய்வங்களே உடைந்துவிடாதீர்கள் , கலங்கிவிடாதீர்கள். உங்களின் 100% உழைப்பினை கொட்டிவிட்டீர்கள், கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தயவு செய்து எதையும் சிந்திக்காமல் ஓய்வெடுங்கள், குடும்பத்தோடு கலந்திருங்கள், பிடித்த விஷயங்களில் இறங்கி கவலையினை மறங்கள்

அதன்பின் திரும்பி வாருங்கள்

உட்சென்ற கடல் சுனாமியாய் திரும்புவது போல் அதன் பின் சீறிவாருங்கள்

என்ன இழந்துவிட்டோம் வெறும் பணம், அதற்காக நம்பிக்கையினை இழக்கலாமா?

பணத்தை சம்பாதிக்க எங்களுக்கு தெரியும், நாம் வயலில் உழைக்கின்றோமா இல்லை தெருதெருவாக சுற்றுகின்றோமா, வியாபாராமோ இல்லை எதுவாக இருக்கட்டும், ஒவ்வொரு இந்தியனும் சம்பாதிக்கின்றான்

ஆனால் விண்வெளி வித்தை உங்களுக்குத்தான் தெரியும்

இந்த 120 கோடி மக்களும் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்தாலும் 1200 கோடி குவியும், போதாதா இன்னும் தருகின்றோம்

ஒரு அரசியல்வாதியினை பிடித்து உலுக்கினாலே இங்கு 3000 கோடி விழும், அப்படிபட தேசமிது

ஆம், ஒவ்வொரு இந்தியனும் உங்கள் பின்னால் இருக்கின்றோம், முழு ஒத்துழைப்பை வழங்குகின்றோம்

நாடு நாடாக அலைந்து தொழில்நுட்பம் பெற்றுதர தலமையும் இருக்கின்றது

எங்களுக்கு புரிகின்றது, இஸ்ரேலின் கலம் வீழ்ந்ததை போல் அல்லாமல் கொஞ்சம் போராடி விழ்ந்தது இந்திய கலமென்றால் எங்கோ ஒரு நூலிழை இருப்பது புரிகின்றது

அதை இந்த தருணத்திலும் மவுனமாக பார்த்தபடி கடக்கின்றோம்

உலகில் இதெல்லாம் சகஜம் , ஒரு நாட்டு நுட்பம் இன்னொரு நாட்டுக்கு நல்ல உறவு இருந்தால் கிடைக்கத்தான் செய்யும்

ஆனால் அந்த நுட்பத்தை நாம் வெற்றிகரமாக இனி செய்தல் வேண்டும், நீங்கள் செய்யுங்கள் நாங்களும் தேசமும் துணையிருக்கின்றோம்

எம் அருமை விஞ்ஞானிகளே

நீங்கள் நேருவின் கனவு, இந்திராவின் பெருங்கனவும் விக்ரம் சாராபாய் முதல் தவான் கலாம் வழிவந்த பெருமை மிக்க குடும்பம் நீங்கள்

அந்த கனவும் பெரும் ஆற்றலும் அர்பணிப்பும் உங்களில் ஓடிகொண்டேதான் இருக்கின்றது

நீண்ட போராட்டத்தின் சில படிகளில் நீவீர் சறுக்கியிருக்கலாம், அப்பொழுதெல்லாம் உங்களை கைதூக்கிவிடும் கடப்பாடு எமக்கு உண்டு

இதோ கைகொடுக்கின்றோம், அந்த கரங்களுக்கு கண்ணீரில் நனைய நனைய நன்றிதெரிவித்து தூக்குகின்றொம்

எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்

இந்த தேசத்து குடிமகன் ஒவ்வொருவன் முகத்தையும் பாருங்கள், எல்லோரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உங்களையே பார்த்துகொண்டிருக்கின்றோம்

அதில் அடுத்து எப்பொழுது சாதிப்பீர்கள் எனும் ஏக்கமும் எதிர்பார்ப்புமே மிகுந்திருக்கின்றன‌

எம் தேவதைகளே

நாங்கள் வேறு யாரை நம்ப முடியும்? யாரை எதிர்பார்க்க முடியும், எங்களின் நம்பிக்கையும் ஆறுதலும் பெருமையும் நீவீர் அல்லவா?

முதலில் கொஞ்சம் ஓய்வெடுங்கள், அதன் பின் உழையுங்கள்

இத்தேசம் எக்காலம் போல் உங்களுக்கு துணையாய் எக்காலமும் இருக்கும்

விரைவில் நிலா என்ன செவ்வாயிலும் நம் கலன்கள் இறங்கட்டும், அந்த வெற்றியில் இந்த தோல்வி எல்லாம் கரைக்கபடும்

இஸ்ரோ விஞ்ஞானிகளே, இது தோல்வி அல்ல எச்சரிக்கை

இந்தியனை விண்வெளிக்கு அனுப்ப இன்னும் 3 ஆண்டுகளே இருக்கின்றது

ஆம் ககன்யான் திட்டம் மூலம் 2022ல் 3 வீரர்களை நாம் அனுப்ப போகின்றோம், 30 பேர் தேர்ந்தெடுக்கபட்டும் ஆயிற்று

ரஷ்யாவும் பயிற்சிக்கு சம்மதித்திருக்கின்றது

அதை மிக சிறப்பாக செய்ய இந்த தொல்வியினை ஆண்டவன் அனுமதித்திருகின்றான்

சந்திரயான் 2ன் தோல்வி, இனி ககன்யான் திட்டத்தை மாபெரும் வெற்றியாக்க நமக்கு பெரும் பாடமாய் அமையும்

எல்லாம் நன்மைக்கே, எல்லாம் நமக்கு நன்மைக்கே

எழுந்துவாருங்கள் எமதருமை விஞ்ஞானிகளே, நாங்கள் உங்களுக்காய் உழைக்கின்றோம், நீங்கள் நாட்டுக்காய் உழையுங்கள்

100 முறை தோற்றாலும் ஒரு வெற்றி ஒரே ஒருமுறை வெற்றி அந்த 100 தோல்வியினை அடையாளமின்றி செய்துவிடும்

விழவிழ எழுவோம், விழுந்து விழுந்து வான்வெளி நடைபயில்வோம்

முதலில் பறக்க தெரியாது என்றார்கள் பறந்தோம், எல்லை தாண்ட தெரியாது என்றார்கள் தாண்டினொம், இப்பொழுது கலனை இறக்க தெரியாது என்கின்றார்கள் இதையும் ஒருநாள் இறக்கி காட்டுவோம்

உழைப்பவனுக்கு எல்லாமே சாத்தியம் நாம் உழைப்போம்

உங்கள் கரங்களை உறுதியாக பற்றியபடி சொல்கின்றோம்

இழக்கவோ வருந்தவோ ஒன்றுமே இல்லை, இனிதான் நாம் பெற கூடியதும் போராட கூடியதும் நிறைய இருக்கின்றது

தேசம் உங்களை கைவிடாது, தொடர்ந்து கடமையாற்றுங்கள்

உங்களோடு சேர்ந்து வரபோகும் வெற்றியினை கொண்டாட தயாராக இருக்கின்றோம், ஒருநாள் எம் எல்லோரின் கனவும் உங்களால் நிறைவேறும்

சதீஷ்தவான், கலாம் போன்ற உங்கள் வழிகாட்டிகளை நினையுங்கள், அவர்களின் தோல்வி பட்டியலில் இது ஒரு துளி

ஆனால் அந்த தோல்விகளை அவர்கள் வெற்றிகளாய் மாற்றியதில்தான் நீவீர் எல்லாம் இவ்வளவுதூரம் வந்திருக்கின்றீர்கள்

அப்படி நீங்களும் தோல்விகளை வெற்றிகளாய் மாற்றிவிட்டு வருங்கால சந்ததிக்க்கு வரலாறாய் நில்லுங்கள், காலம் அதற்கான வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது

250 கோடி கரங்கள் உங்களை வாழ்த்தி வணங்கிகொண்டே 125 கோடி பேரின் உற்சாக‌ வார்த்தைகள் ஒரு சேர உற்சாகமாய் சொல்கின்றன‌

“ஜெய்ஹிந்த் , பாரதம் ஒரு போதும் தோற்காது, இந்தியா இஸ்ரோ விஞ்ஞானிகள் பக்கமே மொத்தமாய் நிற்கின்றது”

இதைவிட என்ன வேண்டும் எம் விஞ்ஞான கோவில்களே, இனி உங்கள் செயலும் சிந்தையும் புதுவேகம் பெறட்டும், வெற்றிகள் தேசத்துக்கு குவியட்டும்