இவா கவர்ணர், இவா தலைவர், இவா செயலாளர்…

அவன் இவன் படத்தில் ஒரு காட்சி ஓடிகொண்டிருக்கது, மரத்தடி கோவிலில் மல்லாக்க கிடக்கின்றார் ஆரியா, தலையெல்லாம் எலி கடித்திருகின்றது, கரையன் கூட அரித்திருக்கின்றது

அவ்வழியே கல்லூரிக்கு செல்கின்றனர் மதுஷாலினி கோஷ்டி, அது அடிக்கடி பெயிலாகும் கோஷ்டி

அவர்களை அழைத்து கேட்கின்றார் ஆர்யா” இந்த சாமி ரொம்ப பவர்புல், அவர கும்பிடாம போனா எப்படி பாஸ் கிடைக்கும்?

கையில பையில இருக்கிறதெல்லாம் உண்டியல்ல போடுங்க, சாமி எல்லோரையும் பாஸாக்கி விட்டிருவார் எல்லாம் போடுங்கோ”

உடனே அந்த பெண்களும் காணிக்கையிடுகின்றனர்..

“இவா கலெக்டர், இவா தாசில்தார், இவா கிளார்க்” என எல்லோருகும் ஆசி வழங்கிகொண்டிருகின்றார்

இதை பார்த்தபொழுது தமிழக பாஜகவும் அவர்கள் செய்யும் அரசியலும் நினைவுக்கு வருகின்றது

இவா கவர்ணர், இவா தலைவர், இவா செயலாளர்…

சிக்கலில் இருக்கின்றார் வி.சேதுபதி

சும்மாவே விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை, இம்முறை அவரை சிக்கலில் இழுத்துவிடுபவர் முத்தைய்யா முரளிதரன்

சும்மாவே முரளிதரன் வாழ்க்கைபடத்தில் நடிக்க ஒப்புகொண்டு சிக்கலில் இருக்கின்றார் வி.சேதுபதி

முரளிதரன் இனதுரோகி, சிங்களன் ஜால்ரா என பல எதிர்ப்புகள் வருவதை நாமெல்லாம் பார்த்துகொண்டிருப்பதை விட முரளிதரன் அதிகமாக கவனித்திருப்பார் போல‌

மனிதர் தன் அட்டகாசமான கூக்ளி பந்த்தை வீசிவிட்டார், இது வி.சேதுபதியின் விக்கெட்டையே கழற்றலாம்

ஆம், 2009ல் புலிகள் ஒழிக்கபட்டதே என் வாழ்வின் பொன்னாள், இலங்கையின் நன்னாள் என உருகி உருகி பேசியிருக்கின்றார் முரளி

எஸ்டேட் தமிழன் என்றும் இழித்து பழித்தும் ஈழதமிழரால் புறக்கணிபட்ட மலையக வம்சாவளியான முரளி அப்படி சொல்வது ஆச்சரியம் அல்ல, ஈழ மலைய தமிழர் சிக்கல் அப்படி

இந்த தொப்புள் கொடி உறவெல்லாம் அங்கே ம..று உறவு

ஆக தன் அட்டகாச பந்துவீச்சை தொடங்கிவிட்டார் முரளி, விஜய் சேதுபதி இதை தடுத்து ஆடுவது மகா கடினம்

எதையுமே பல கோணங்களில் பார்த்துவிட்டதால் நம் புத்தி வேறுமாதிரி செல்கின்றது

ஒருவேளை முரளிதரனை பிடித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்படி சொல்ல‌
வைத்திருப்பார்களோ?…ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது

அறிவாலயத்துக்கு தெரிவியுங்கள்

70 ஆண்டுகால அரசியல் கொண்டது திமுக, அதில் அண்ணாவு கலைஞரும் ஒருநாளும் சில இடங்களுக்கு சென்றதில்லை

பசும்பொன் தேவர் சமாதியும் , இம்மானுவேல் சமாதியும் அதில் சில‌

கோவில்களுக்கு செல்வதை தவிர்ப்பது போலவே அதை கவனமாக தவிர்த்தார்கள், தேவர் அஞ்சலிக்கு சென்றால் நாம் பாட்டாளி போராளிகள் என்பது தவறாகிவிடும் என்பதல்ல தேவர் தேசியம் மற்றும் இந்துமத அடையாளம் என்பது கணக்கு

இம்மானுவேல் சேகரன் சமாதிக்கும் செல்லவில்லை, சென்றால் அது ஒருபக்கம் அதிருப்தியினை உண்டாக்கும் என்பதும் கணக்கு

திராவிட கட்சிகளில் இதை முதலில் உடைத்தவர் ஜெயா, அவருக்கு அந்த சமுதாய வாக்கு முக்கியம் மற்ற வாக்குகள் வந்தால் நல்லது எனும் கணக்கு இருந்தது

அதிமுக கோவில், கொடை, ஜாதி என திரிந்துவிட்ட கட்சி அது செல்லாவிட்டால்தான் ஆச்சரியம்

ஆனால் திமுக இதுகாலம் சென்றதில்லை

முதல்முறையாக இரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றார் ஸ்டாலின் ஆக திமுக அதிமுகவாக மாறிவிட்டது

இன்னொரு பக்கம் சொல்வதாக இருந்தால் அண்ணாவும் கலைஞரும் தங்களை நம்பினர், ஆனால் ஸ்டாலின் ஜாதிகளை நம்ப ஆரம்பித்துவிட்டார் அவர்மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை

அடுத்து திமுக தலமை செல்லுமிடம் காடுவெட்டி குரு சமாதியாக இருக்கலாம்

அப்படியே நெல்லை பக்கம் கட்டதுரை சமாதியில் ஒரு அஞ்சலி கராத்தே செல்வின் சமாதியில் ஒரு வீரவணக்கம்

தொடர்ந்து வெங்கடேச பண்ணையார் சமாதியில் கண்ணீர் அஞ்சலி அப்படியே பசுபதி பாண்டியன் சமாதியில் சாதிமறுப்பு உறுதிமொழி என திமுக தலைவரின் பகுத்தறிவு ஜாதி ஒழிப்பு பயணம் தொடரலாம்

உங்களுக்கு தெரிந்த சாதி தலைவர் சமாதி இருந்தால் உடனே அறிவாலயத்துக்கு தெரிவியுங்கள் , அஞ்சலி செலுத்த தலைவர் நிச்சயம் வருவார்

பெரியார் அண்ணா கலைஞர் சொன்ன‌ திராவிட பகுத்தறிவு சித்தாந்தம்

முதன் முறையாக இம்மானுவேல் சேகரன் கல்லறைக்கு முக ஸ்டாலின் சென்றிருப்பதாக செய்திகள் சொல்கின்றன‌

முன்பு அவர் பசும்பொன் தேவர் சமாதிக்கும் சென்றார், குங்குமம் வைத்தார்கள் திருச்சி திருவரங்கத்தில் அழித்தது போல் உடனே அழிக்காமல் சிரித்து கொண்டே நின்றார் திராவிட பகுத்தறிவு தலைவர்

ஆம் அங்கே குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியாததல்ல‌

இப்பொழுது இம்மானுவேல் சேகரன் கல்லறையில் நெற்றியில் விபூதி சிலுவை பூசினார்களா என தெரியவில்லை

எனினும் ஒன்றை நோக்கினீர்கள் என்றால் உங்களுக்கே சிரிப்பு வரும் , அட உங்களுக்கென்ன ஈசன் படியளக்கும் ஒவ்வொரு உயிரும் சிரிக்கும்

ஆம் இம்மானுவேல் கொலையில் குற்றம்சாட்டபட்டவர் தேவர்

ஆக கொன்றவருக்கும் மாலை, செத்தவனுக்கும் மாலை

இதுதான் பெரியார் அண்ணா கலைஞர் சொன்ன‌ திராவிட பகுத்தறிவு சித்தாந்தம்

விக்ரம் பைன்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது

தன் முயற்சியில் சற்றும் பின்வாங்காத விக்ரமாதித்யன் போல இஸ்ரோ விக்ரம் பைன்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது, முதல் கட்டமாக அந்த ஆர்பிட்டருடன் தொடர்பினை ஏற்படுத்திவிட்டோம் என்கின்றது இஸ்ரோ

நம் நாட்டின் விண்வெளி தந்தை விக்ரம் சாராபாய், அவர் பெயரில் நிலாவில் ஒரு பக்கமே உண்டு, அவரின் நினைவாகத்தான் நிலாவில் கலமிறங்கும் கலனுக்கு விக்ரம் பெயர் சூட்டபட்டது

ஆர்பிட்டர் என்பது சுற்று கலன், அதாவது அதுதான் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை சுமந்து சொன்ற பறக்கும் கலன்

இப்படி சொன்னால் உங்களுக்கு புரியும், இந்த ஆர்பிட்டர் எனப்படும் சுற்றும் கலன் ஒரு கண்டெய்னர் அது இறங்காது, அதில் இருந்து பிரிந்து நிலவில் தரையிரங்கியது அந்த விக்ரம் பைண்டர், அதில் இருப்பதுதான் ரோவர்

ஆக பொருளை இறக்கிய கண்டெய்னர் லாரியினை பிடித்துவிட்டோம், பொருளை எங்கே இறக்கினாய் ஏதும் தெரியுமா என அந்த கண்டெய்னரிடம் விசாரணை நடக்கின்றது

ஆர்பிட்டருன் பொதுவாக தொடர்பு கொள்ளமாட்டார்கள், ஆனால் சில விஷயங்களை எதிர்பார்த்து ஆர்பிட்டருக்கும் பைண்டருக்கும் சில தொடர்புகளை வைத்திருந்து அதை இஸ்ரோ கட்டுபாட்டு மையத்துக்கும் வைத்திருப்பதாக சொல்கின்றார்கள்

மிக பெரும் முன் தயாரிப்போடுதான் இறங்கியிருகின்றார்கள், ஆர்பிட்டரோடு தொடர்பில் இருக்கின்றோம், நிலவில் சுற்றிகொண்டிருக்கும் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை எப்பொழுதும் தொடர்பு கொள்ளும் ஆச்சரியம் நிகழலாம்

கைலாஷ் சிவன் எனும் தமிழர் அகில உலக பிரபலமாகிவிட்டார் நாசா முதல் நாசமாய் போன சீனா வரை அவரை குறிப்பிட்டு வாழ்த்துகின்றது

வீரத்தை வீரம் அறியும், அறிவினை அறிவாளி அறிவான் என்பது போல நாசா இந்திய விஞ்ஞானிகளின் அபார சாதனையினை வியந்து வாழ்த்துகின்றது

மழைக்கு காத்திருக்கும் விவசாயில் போல , பிறைக்கு காத்திருக்கும் சிலரை போல, வெளிநாட்டு தகப்பன் வரும் விமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் குழந்தை போல வானத்தில் இருந்து நல்ல செய்தி வரும் என போராடிகொண்டே காத்திருக்கின்றது நம் விஞ்ஞான குழுமம்

அவர்கள் வரலாறு என்ன?

ஆங்காங்கே நாம் பாஜகவிடமும் குறிப்பாக நயினார் நாகேந்திரனிடம் பணம் வாங்கிவிட்டுத்தான் எழுதுகின்றோம் என முன்னாள் திமுக தும்பிகளும் நம் முன்னாள் நண்பர்களும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் வரலாறு என்ன?

1967வரை அவர்களின் இதயகனியாக இருந்த ராமசந்திரன் அவர்களை முறைத்தவுடன் மலையாளி, அட்டகத்தி ஆகிவிட்டார் அல்லவா? அப்படித்தான்

அவர்களோடு இருக்கும்வரை எல்லோரும் அவர்களில் ஒருவர், விலகிவிட்டால் வசைகளை அப்படித்தான் பொழிவார்கள்

நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்தார் அப்பொழுதும் நாம் புலிகளை விமர்சித்து, குறைந்தபட்சம் புலிகளுக்காக திமுக செய்த உதவிகளை சொன்னபொழுது இவர்கள் எல்லாம் அப்படி ஆர்பரித்தார்கள்

அப்பொழுது நயினார் அதிமுகவில் இருந்தார், அதிமுக பற்றி நாம் என்றாவது நல்லபடியாக சொன்னதுண்டா?

ஒருகாலமும் இல்லை, அது சர்கஸ் கூடாரம்

நம் மேல் வேறு ஒரு பழியும் சொல்லமுடியா கூட்டம் இப்படி இறங்கிவிட்டது

திமுக அடியார்களே, அவரிடம் கையேந்தும் நிலையில் நாமும் இல்லை, நமக்கு தரவேண்டிய அவசியம் அவருக்கும் இல்லை

எல்லோரையும் உங்களை போல 200 ரூபாய்க்கு கை ஏந்துவது முதல் எம்பி எம்.எல்.ஏ சீட்டுக்கு முழங்காலில் நிற்பது போல் நினைத்து கொள்வீராயின் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது

அமெரிக்க தாலிபான்கள் பேச்சு பாதியில் முறிந்திருக்கின்றது

அமெரிக்க தாலிபான்கள் பேச்சு பாதியில் முறிந்திருக்கின்றது

விஷயம் வேறு ஒன்றுமல்ல அமெரிக்காவும் தாலிபான்களும் பேசிகொண்டிருக்கும் பொழுதே தாலிபான்கள் வழக்கமான ஆட்டத்தை ஆடிவிட்டார்கள்

ஆம் பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது காபூலில் குண்டுவெடித்தது, தாலிபானும் பெருமையுடன் பொறுப்பேற்றது

கடுப்பான அமெரிக்கா நீங்களெல்லாம் மனுஷனாடா? என கேட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டது, நாங்க மனுஷனு எவன் சொன்னான்? என தாலிபானும் சென்றாயிற்று

இந்த சம்பவத்தை ஈழவிவகாரத்தோடு தொடர்பு படுத்தலாம்

2005ல் புலிகளும் இலங்கை அரசும் நார்வே ஊடாக பேச்சு நடத்தின, இலங்கை அரச பிரந்தியாக வந்தவர் லஷ்மண் கதிர்காமர் அவர் ஒரு தமிழர்

பேச்சுவார்த்தை நடக்கும் பொழுதே லட்சுமன் கதிர்காமரை இனதுரோகி என கொன்றனர் புலிகள்

அத்தோடு 26 நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தன பெரும் போரும் தொடங்கி புலிகளும் அழிந்தனர்

அதன் பழியினை கலைஞரும் சோனியாவும் இன்றுவரை சுமக்கின்றனர்