பாடிய வாய் சும்மா இருக்குமா?

15 நாளில் தெலுங்கு கற்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

வேண்டாம் அக்கா வேண்டாம் , தெலுங்கில் என்ன சொல்வீர்கள்?

பாடிய வாய் சும்மா இருக்குமா?

“தெலுங்கானாவில் தாமரை மலர்ந்தே தீரும்” என்பீர்கள், அது உங்கள் பதவிக்கே ஆபத்தாக முடியலாம்

உங்கள் குடியரசு தலைவர் பதவி கனவுக்கு காலம் இருக்கின்றது அக்கா..

இதனால் வழக்கமான சிரிப்பினை மட்டும் உதிர்த்துவிட்டு சென்றால் நல்லது

15 நாளில் தெலுங்கு, ஆனால் கடைசி வரை அரசியலை மட்டும் கற்க போவதே இல்லை, அப்படித்தானே அக்கா?

நமக்கு அதுதான வேணும்…

“என்னய்யா அந்த ஆளு இந்தியாவுல 100 நாள் சாதனைன்னு சொல்லிட்டு இருக்காரு, நாம என்ன சொல்ல‌?

100 நாளாகியும் பாகிஸ்தான்மேல் படை எடுக்காமல் இருப்பதே பெரிய சாதனைன்னு போட்டு தாக்குங்க

வேணாம் டென்ஷனாயிருவாரு

நமக்கு அதுதான வேணும்…”

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக்கு முதலிடம்

அகில இந்திய அளவில் தேசிய தரமதிப்பீட்டு குழு (NACC) பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக்கு முதலிடம் கொடுத்ததாக தெரிவிகின்றது

கலை அறிவியல் கல்லூரியில் அதுதான் இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றதாம்

இந்த மதிப்பு 5 ஆண்டுகளுக்கு இருக்கும், அதன் பின் மறுமதிப்பீடு செய்வார்களாம்

நமக்கு அறிவு கொடுத்த கோவில் அது, அனுதினமும் நாம் வணங்கும் ஆலயம் அது என்றவகையில் நமக்கு பெருமையே

அங்கு கணிப்பொறி பிரிவில் சேர்ந்தாலும் அதை தவிர வேறு எல்லாவற்றையும் உருப்படியாக படித்தது அங்கேதான்

கணிப்பொறி அறிவியலை தவிர வேறு எல்லாவற்றையும் நன்றாக அங்குதான் கற்றோம், அது போதித்த பாடம் கொஞ்சமல்ல, ஆயுளுக்கும் மறக்காது

நிச்சயம் மிக சிறந்த கல்லூரி, அன்றே மிக நுட்பமான வகையில் மாபெரும் சேவைக்கான அஸ்திவாரத்தில் அது அமைக்கபட்டது

தமிழகத்தில் இயேசுசபை குருக்களின் அர்பணிப்புக்கும் சேவைக்கும் மகா சான்றான கல்லூரி அது

100 வருடமாக தங்களின் நிலையினை உச்சத்தில் வைத்து கொள்வது சாதாரணம் அல்ல‌

எவ்வளவு பெரும் பிம்பங்களை உருவாக்கிய கல்லூரி அது?

வைகோ அக்கல்லூரியின் மாணவர் என்பதை தவிர ஒரு கரும்புள்ளியினையும் யாரும் காட்டமுடியாது, அவரும் கல்லூரி காலத்தில் ஒழுங்காக இருந்திருக்கின்றார், வளாகத்தினை தாண்டித்தான் பேய் பிடித்திருக்கின்றது

இன்னும் சில ஆண்டுகளில் அது நூற்றாண்டு விழாவினை காணும் நேரத்தில் அதற்கான பெருமை அதற்கு கிடைத்திருக்கின்றது

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கபடும் பாளையங்கோட்டையில் அக்கல்லூரிக்கு மிகபெரும் கவுரவம் கிடைத்திருப்பதற்கு அக்கல்லூரியின் குருக்களையும் பேராசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்

மிக பொருத்தமான இடத்தை மிக மிக தகுதியுள்ள கல்லூரிக்கு கொடுத்திருக்கின்றார்கள், அதன் நிர்வாகமும் பாடதிட்டமும் நொடியும் தாமதிக்கா புதுப்பித்தலும் அப்படி

இதுபற்றி முன்னாள் மாணவியும் இந்நாள் சாரா டக்கர் பேராசிரியையுமான Adline Rajasenah Merryton என்பவரிடம் கேட்டால் அவரின் பதில் இப்படி இருக்கின்றது

“இதுதான் நாட்டின் நம்பர் 1 கல்லூரி என்றால் மற்ற கல்லூரியின் நிலமையினை யோசித்து பாராய் மகனே”

சாரா டக்கர் கல்லூரி பட்டியலிலே இல்லை என்பதை தவிர இந்த வார்த்தைக்கு வேறு காரணம் இருக்க முடியாது

(பாஜகவின் பாசிச ஆட்சியிலும் இந்துவெறி தறிகெட்டு ஓடும் ஆட்சியிலும் ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்கு முதலிடம் என்றால் அதெல்லாம் இந்த பாசிச இந்து பயங்கரவாத ஆட்சியின் நாடகமன்றி வேறேன்ன என் திராவிட இனமே….)

மணிசார் இதற்கெல்லாம் சரி படமாட்டார்

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 12 பாடல்கள்

நாம் முன்பே சொன்னோம், மணிசார் இதற்கெல்லாம் சரி படமாட்டார்.

அந்த கதையினை கொன்று குதறி வைப்பார்

மன்னர் கதைகளுக்கு வசனமும் தமிழும் நீண்ட வசனமும் இன்னபிற நுட்பங்களும் முக்கியம்

இந்த மணிரத்னம் பாணியான ம்ம், ஆம், ச்சீ.. கொன்னுரு..அவன்..வேண்டாம்..” இம்மாதிரி நவநாகரீக ஒரு வார்த்தை வசனங்கள் எடுபடாது

மொத்ததில் மணல் சிற்பம் நுட்பம் கற்சிலை செதுக்குவதற்கு சரிவாராது

படம் வரும்பொழுது செத்து போல கல்கியே வந்து மணிரத்னம் தலையில் அடிப்பார் , இருந்து பாருங்கள்.

பனை வடலி நட்ட அந்த தருணம்

ஈழ போராட்டத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு அன்னார் அதில் பனை வடலி நட்ட அந்த தருணம்

(அடேய் கிறுக்கு பயலுகளா, பனைக்கு விதை என தமிழ் சொல்லவில்லை, அதெல்லாம் உங்களுக்கு நீக்கபட்ட சமாச்சாரம்

பனங்கொட்டை, பீலி, வடலி என்றுதான் தமிழ் அதை சொல்லும்

தமிழும் தெரியாது, தமிழ் பெயரும் தெரியாது ஆனால் பெயர் மட்டும் நாம் தமிழர்கள்

தமிழையும் அதன் நல்ல பழம் வார்த்தைகளை அழிக்க நீங்கள் மட்டும் போதும்)

விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, பார்த்தவுடனே சிரிப்பு வரவழைக்கும் குபீர் சிரிப்பு கோஷ்டி அது

விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம் என தொடங்கியிருக்கின்றது

புத்தருக்கான ஆடை மஞ்சள் அல்லது சிகப்பு, ஆனால் இவர்களுக்கோ காண சகிக்காத கருப்பு

சரி இவர்களுக்குத்தான் மதமே கிடையாதே? ஊர்வலம் செல்ல வேண்டுமானால் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ், லெனின் போன்ற நாத்திகர்களை அல்லவா சுமக்க வேண்டும்? ஏன் புத்தர்

அதை கேட்டால் அம்பேத்கர் புத்தமதத்தை தழுவினாராம்

அம்பேத்கர் பெரும் மக்களோடு புத்தமதம் தழுவியது உண்மை, ஆனால் அம்பேத்கரை அம்போ என விட்டுவிட்டு அம்மக்கள் வேறு மதம் பக்கம் தலைதெறிக்க ஓடிவிட்டனர்

ஆம் அம்பேத்கரின் புத்த தழுவல் படுதோல்வியில் முடிந்தது, அது வெற்றி என்றால் இங்கே புத்தமதம் எழுச்சி பெற்றிருக்க வேண்டும்

ஆனால் புத்தமதம் என ஒருபயலும் இல்லை, இருந்தால் நம் அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா என்ன?

ஆக வழக்கொழிந்த மதத்தை வீம்புக்கு சுமக்கின்றார்கள்

இப்படி சுமக்கும் பயல் எவனாவது புத்தமதத்து மாறி மொட்டை அடித்து பிச்சை எடுத்து சாந்த சொரூபியாக மாற தயரா என்றால் இல்லை

அம்பேத்கர் சொன்னதையும் செய்ய கூடாது, புத்தர் சொன்னதையும் செய்ய கூடாது ஆனால் புத்தர் சிலையினை தூக்குவோம் என்பதெல்லாம் என்ன வகையோ

இந்த அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

இலங்கையில் சிங்கள பவுத்த பயங்கரவாதம் தமிழரை கொல்கின்றது என ஓலமிட்டவரும் இவர்களே

இப்பொழுது அய்யய்யோ புனிதமான புத்தன் என அவரை தூக்கி சுமப்பதும் இவர்களே

அட சிங்களன் என்ன?

அன்று பவுத்த பர்மிய பயங்கரவாதம் பர்மாவில் இருந்து தமிழரை அடித்து விரட்டுகின்றது என ஒப்பாரி வைத்தவர்களும் இவர்களே

வெளிநாட்டில் புத்தமதம் தமிழருக்கு எதிராக செய்யும் கொடுமைகளை கண்டிக்கும் இவர்கள்தான் இங்குதமிழனுக்கு புத்தமே ஆதரவு என பொங்குக்கின்றார்களாம்

ஏன் தமிழனை பர்மாவிலும், இலங்கையிலும் அடித்தான் அவன் தமிழ் பேசினான் என்றா?

இல்லை, அவன் இந்துவாக இருந்தான் என்பதற்காக, ஆம் அதுதான் அடியாழத்து உண்மை

பர்மா, ஈழ தமிழன் புத்தமதத்து காரனாக இருந்தால் அங்கு ஒருபயலும் தொட்டிருக்கமாட்டான்

சைவ சமயத்தை காக்கவே ஈழத்திலும் பர்மாவிலும் அடிவாங்கி செத்தான் தமிழன்

ஆக இந்த அய்யய்யோ கோஷ்டிகள் சொல்லவரும் உண்மை என்ன தெரியுமா?

ஏ தமிழனே இந்து மதத்தை தூக்கி எறி, நாமெல்லாம் புத்தமதத்தில் கலந்து அகண்ட தமிழ்நாட்டை இலங்கை பர்மா வரை அமைப்போம்

இதுதான் உண்மை, இவர்களின் நோக்கம் சிங்களனுக்கும் பர்மா புத்த மொட்டைகளுக்கும் உதவுவது

சிங்கள கைகூலியாகிவிட்ட இந்த திராவிட சிங்கங்களிடம் தமிழர்கள் மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது

ஒரு காலத்தில் தமிழனை அடிக்கும் பொழுது இந்துக்களை அடிக்கின்றார்கள் என சொல்லாமல் தமிழனை அடிக்கின்றார்கள் என சொல்லி, இன்று அதே சிங்களனுக்கு ஆதரவாக புத்த கொடி பிடிக்கின்றார்கள் அல்லவா?

இதுதான், இதுவேதான் திருட்டு திராவிடம்

இதன் வேர் இந்தியாவில் அல்ல, ஐரோப்பா அமெரிக்கா பாகிஸ்தானில்தான் உண்டு , இலங்கையின் கரங்களும் அதில் ஊடுருவியிருப்பது இப்பொழுது கண் கூடாக உங்களுக்கே தெரியலாம்

எல்லாம் ஆத்தா உத்தரவுங்க..

“உங்கப்பாவுக்கு கருப்பு சட்டை, எனக்கு சிகப்பு சட்டை. அங்கே பெரியார் இங்கே அம்பாள் அவ்வளவுதானுங்க வித்தியாசம்

ஆக உங்களுக்கு பிறகு அடுத்த அம்மா உங்க மகளுங்களா?

பின்னே, எல்லாம் ஆத்தா உத்தரவுங்க..

நம்ம வீட்டிலேயும் அப்படித்தானுங்க….

ஹிஹிஹி கட்சிதலைவன் காப்பாத்துவான்னு நம்புற கோஷ்டியும், கடவுள் மனுஷனாக வருவான்னு நம்புற கோஷ்டியும் இருக்குற வரைக்கும் நமக்கும் நம்ம பரம்பரைக்கும் என்னங்க கவலை?