உங்கள் ராக்கெட்டின் பெயர் என்ன‌

நாம் தமிழர் தும்பிகளோடு பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமான விஷயம்

அப்படி ஒரு தும்பி வந்தது, சந்திராயனை தவறவிட்ட சோகத்துடன் இருந்தது பரவாயில்லை தும்பிகளுக்கும் நாட்டுபற்று வந்துவிட்டது போல திருந்திவிட்டதோ என பேச்சு கொடுத்தால் தும்பி அதிர்ச்சி கொடுத்தது இப்படியாக‌

“அண்ணே சந்திராயன் இன்னும் கிடைக்கவில்லை

இதெல்லாம் சகஜ வெளிநாட்டில் உயிர்பலி எல்லாம் வாங்குது, நமக்கு வெறும் பணம்தானே போகட்டும்

அது இல்ல்லை இது தமிழருக்கு எதிரான சதி

நிலாவுமா தமிழருக்கு எதிராக சதி? உதயசூரியன் மட்டும்தானே வழக்கமாக‌ சதி செய்யும்

அண்ணே இந்த இஸ்ரோ தலைவர் ஒரு தமிழர், தமிழன் வெல்ல கூடாது என உலக நாடுகள் சதிசெய்துவிட்டன‌

ஓஹோ, வழக்கமான ஸ்லோகனுக்கு வந்துவிட்டீர்களா? ம்ம் மேற்கொண்டு சொல்லுங்கள்

பின்ன என்னண்ணே, அமெரிக்கா நினைத்தால் 1 நிமிடத்தில் சந்திராயனை கண்டறியலாம், ரஷ்யாவுக்கு 1 நொடி போதும் சீனாவுக்கு சில நொடி போதும் ஆனால் செய்யவில்லையே ஏன்?

இது ஒருவகையான விண்வெளியுத்தம் அப்படி எல்லாம் வரமாட்டார்கள், ஒருவேளை வீரர்கள் சிக்கி இருந்தால் வெளிநாடுகள் உதவ வரும்

அப்பொழுதும் வெள்ளைக்காரன் சிக்கி இருந்தால்தான் வருவார்கள், தமிழன் என்றால் ஒருநாடும் வராது, தமிழன் சாதிக்கவே கூடாது அவன் சாக வேண்டும் என்பது வெளிநாட்டுக்காரன் ஆசை

அப்படியா ஏன்?

தமிழன் அறிவு, ஆற்றல் புத்தனுக்கு முன்பே அவன் கட்டிய கோவில் விட்ட கப்பல்….

போதும் நிறுத்து சொல்ல வந்ததை சொல்..

தமிழன் சிவன் என்பவர் சாதித்துவிட கூடாது என்பதற்காக இந்தியாவும் உலக நாடுகளும் சேர்ந்து சதிசெய்துவிட்டன‌, ஆமாம், தமிழனுக்கு எதிரான சதி, அவன் நாடு அடைந்தாலும் பிடிக்காது, நிலாவினை அடைந்தாலும் பிடிக்காது கிரிக்கெட் ஆடினாலும் பிடிக்காது, அவன் சாதிக்க பிடிக்காது, ஏனென்றால் கேட்க நாதியற்ற இனம் இது

ஒஹோ, சரி இதற்கு உங்களிடம் தீர்வு

அதிகாரம் எம்மிடம் வந்தவுடன் மயிலோன் என ஒரு கருவி செய்வோம் தமிழ்வார்த்தை, பிரபாகரன் இறங்கி என இன்னொரு கருவி செய்வோம் அதை சீமான் எனும் உந்திசை கப்பல் ஏற்றி அனுப்பி நிலாவினை அடைவோம், அங்கு புலிகொடி பறக்கும்

பிரபாகரனையே காணவில்லை இதில் அவன் பெயரில் லேண்டரா?

ம்ம்ம் அதிகாரம் வரட்டும் நடக்கும், தமிழனின் விண்வெளி உந்திசை கப்பல் பறக்கும்

அதென்னடா உந்திசை?

ராக்கெட் என்பதன் தமிழ்

சரி கப்பல் என்பது தமிழா?

தெரியவில்லை

தமிழன் ராக்கெட் சீவக சிந்தாமணி மயில்பொறி வடிவமா?

சீவக சிந்தாமணின்னா எந்த ஊர்ணே தஞ்சாவூர் பக்கமா?

ஓ நீ தும்பி அல்லவா? மறந்துவிட்டது. சரி உங்கள் ராக்கெட்டின் பெயர் என்ன‌

சீமான் உந்திசை கப்பல், பிரபாகரன் இறங்கி , மயிலோன் கருவி

அதற்கு மயிரோன் என பெயர் வைத்து சீமானையும் ஏற்றி அனுப்பு, முடிந்தால் நீயும் சேர்ந்து போ, அந்த புலிகொடியினை மறக்காமல் கொண்டு போ”

ராபர்ட் முகாபே

சமீபத்தில் ஒரு பெருமகன் இறந்தார், ஆனால் உலக நாடுகளோ அதன் தலைவர்களோ அவனை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவனுக்கும் மாபெரும் வரலாறு உண்டு

ராபர்ட் முகாபே ஜிம்பாப்வே தலைவர்

அவன் வாழ்வு முழுக்க ஜிம்பாப்வே நாட்டுக்காக, ஆப்ரிக்காவுக்காக‌ அர்பணிக்கபட்டது, முழு நீண்ட போராட்ட வாழ்வது

நமக்கெல்லாம் அரபு அரசியல் தெரியும் எண்ணெய் ஒன்றுக்காக பொம்மை தலைவர்களை வைத்துகொண்டு வல்லரசுகள் ஆடும் ஆட்டம் உலகறிந்தது மதம் மன்னர் இன்னபிற அவைகளுக்கு வாய்ப்பாயின

இதே போன்றதொரு அரசியல் பார்வை தெற்கு ஆப்ரிக்காவிலும் உண்டு, அங்கு வல்லரசுகள் அழிச்சாட்டியம் செய்ய எண்ணெய் காரணம் அல்ல இயற்கை வளம்

காடுகள் முதல் தாது சுரங்கம் வைரம் தங்க சுரங்கம் வரை அங்கு ஏராளம் குறிப்பாக தென்னாப்ரிக்க ஜிம்பாப்வே பகுதிகளில் ஏராளம்

இதை வெள்ளையன் பிடித்து வைத்து சுரண்டினான், மகா சுரண்டல்

மக்களின் அறியாமையும் ஒற்றுமையின்மையும் அவனுக்கு சாதகமாயின‌

தென் ஆப்ரிக்க பகுதி வெள்ளையனுக்கு தங்க சுரங்கமாக கொட்டி கொடுத்தது இந்தியரும் இன்னும் பல இனமும் அங்கு கொண்டு செல்லபட்டனர், அதில்தான் பின்னாளைய தில்லையாடி வள்ளியம்மை காந்தி போராட்டம் எல்லாம் நடந்தது

விஷயத்துக்கு வருவோம்

வெள்ளையன் ஆளுமட்டும் அமைதியாக இருந்த நாடு அப்படி வைத்திருந்தான் அவன்

உலகெல்லாம் கேட்ட விடுதலைகுரல் அங்கும் கேட்டது , உலக நாடுகள் எல்லாம் விடுதலைபெற்றன‌

இந்த ஆப்ரிக்கர்கள் சபிக்கபட்டவர்கள் அவர்களுக்காய் பேச யாருமில்லை

ஆப்ரிக்காவின் தாதா எகிப்து லிபியா டுனினிசியா எல்லாம் அரபு நாடுகள் பட்டியலில் இணைந்துகொள்ளும் தாங்கள் ஆப்ரிக்கர் அல்ல என சொல்லிகொள்ளும்

ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்தாலும் அவற்றின் நிலைப்பாடு அப்படி

இந்த எத்தியோப்பியா, காங்கோ, கென்யா, ஜிம்பாப்வே தென்னாப்ரிக்கா போன்றவை பாவபட்ட அனாதைகள் அவர்களுக்காய் யாருமில்லை

சே குவேரா காங்கோவுக்காக போராட சென்றபொழுதும் அவனால் ஆப்ரிக்கர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை

வெள்ளையன் இங்கு இந்து முஸ்லீம் சாதி என வைத்தது போல அங்கு இனகுழுக்களை உருவாக்கி வைத்தான்

ஒரு கட்டத்தில் மற்ற நாடுகளை விட்டாலும் தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே போன்ற வளமான நாடுகளை விட அவன் தயாரில்லை

இனவெறி கொடுமை என்றபெயரில் பெரும் சுரண்டல் நடந்தது, பரதேசி சினிமாவினை விட வலியான வரலாறு அது. அங்கே எஸ்டேட் இங்கே சுரங்கம் அவ்வளவுதான்

மக்களின் அறியாமையும் இன்னொரு சாபம், அங்கு கம்யூனிசமும் வரவில்லை ஒரு புரட்சியும் வரவில்லை

சிந்தனையில்லா மக்கள் ஒருவகை சாபம், அப்படிபட்ட மக்கள் இருக்கும் தேசம் குழப்பமாக இருக்குமே தவிர வாழா..

உலகமும் அவர்களை புறக்கணித்தது

இதில் தென்னாப்ரிக்கா நெல்சன் மண்டேலா தலமையில் போராடியது

அப்படி ஜிம்பாப்வேக்கு கிடைத்த பெருமகன் இந்த முகாபே

வரலாற்றில் லெனின், சே, மாவோ, காஸ்ட்ரோ, மண்டேலா வரிசையில் அவனுக்கும் இடம் உண்டு

ஆனால் அவன் அஹிம்சை பேசவில்லை, கம்யூனிசமும் பேசவில்லை சிங்கப்பூர் லீ போல மேற்கத்திய அடிமையும் அல்ல‌

அவனின் சிந்தனையும் சாயலும் சதாம் போல இருந்தது. ஆப்ரிக்கர் வளம் ஆப்ரிக்கருக்கே எனும் கோஷத்தை முழங்க்கினான்

போராளி, ஜிம்பாப்வேயின் அடையாளம் என பெரும் பலமாக வலம் வந்தார் முகாபே

ஜிம்பாப்வே அவர் காலத்தில் விடுதலை பெற்றது, விடுவானா வெள்ளையன்?

ஆம், தனக்கு இல்லா நாடு சண்டையிட்டு சாகட்டும் என்பது அவன் சித்தாந்தம். இந்தியா பாகிஸ்தான், இந்தியாவிலுளள குழப்பம் போல எல்லா நாடுகளிலும் அவன் விதைத்துவிட்டுத்தான் சென்றான்

முகாபே நாட்டை நன்றாகத்தான் ஆண்டார்

ஆனால் வல்லரசுகள் தொல்லை கொடுத்தன பெரும் நெருக்கடிகளை எல்லா வகையிலும் கொடுத்தன‌

முடிந்தவரை போராடினார் முகாபே, ஆனால் வஞ்சகமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய மேற்குலகம் வெள்ளையன் இருக்கும் வரை ஜிம்பாப்வே ஒழுங்காக இருந்தது, அவன் இல்லை என்றவுடன் நாசமானது என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டன‌

பழி முகாபே மேல் விழுந்தது

முகாபே பல சீர்திருத்தங்களை செய்தார், ஆப்ரிக்க ஒன்றியம் அமைத்து கருப்பரிடம் தனி ஒற்றுமையும் பலமும் வர போராடினார்

ஆனால் அதெல்லாம் பலனளிக்கா வண்ணம் பல வகைகளில் அவரை மேற்குலகம் முடக்கி,இன கொலையாளி அது இது என பட்டம் சூட்டி குழப்பியது

ஜிம்பாப்வே கரன்சியினை உலகின் மோசமான கரன்சியாக்கி அவரை பழிவாங்கியது மேற்குலகம்

அவமானமும் வேதனையும் மேற்குலகை தனியாக எதிர்க்க முடியாத இயலாமையிலும் அந்த கடும் நிலையினையும் நகைச்சுவையாக கடந்தார் முகாபே

அவரின் நகைச்சுவை துணுக்குகளில் கலைஞர் கருணாநிதியின் சாயலும் இருந்தது, அவரின் புகழ்பெற்ற மொழிகள் சில‌

அவற்றில் எல்லாம் மேற்குலகை மறைமுகமாக நயமாக சீண்டினார், தங்கள் இயலாமையினை காட்டினார், தங்களின் அவல நிலையினை நயமாக சொன்னார்

சிரிப்பு வரும் கூடவே கண்ணீரும் வார்த்தைகள் அவை, அவன் மாபெரும் அறிவாளியாய் இருந்தலான்றி அது சாத்தியமில்லை

அவைகளில் சில இப்படியாக உண்டு

“இலைகளை ஆடையாக கொண்டு ஆட்டுமுன் நில்லாதே”

“அழகாய் இல்லை என கருப்பாய் இருப்பதாக கவலைபடாதே, எக்ஸ்ரே மெஷின் அதை காணாமல் ஊடுருவி பார்ப்பது போல் மனதை மட்டும் நன்றாக வைத்துகொள்”

“உன் ஆடு காணாமல் போய் பக்கத்து வீட்டுவீட்டில் மட்டன் சூப் வாசனை வந்தால் சுதாரித்து கொள்”

“பெண்ணுக்கு செலவழிக்கும் பொழுது உன் அன்னைக்கும் அவர்கள் முன்னால் பணம் கொடு அப்பொழுது சூனியம் என்றால் என்ன என்பதை உணர்வாய்”

“உன் டவலை சரியாக பராமரி, அதில் ஓட்டைஇருந்தால் முகத்தை சரியாக துடைக்காது”

“ஒரு பக்கம் தீயும் மறுபக்கம் முட்டாளையும் இணைப்பதுதான் சிகரெட்”

“ஒபாமா ஓரின திருமணத்தை ஆதரிக்கின்றார், சரி அவருக்கு அதில் விருப்பமென்றால் அவர் ஓரின திருமணத்துக்கு தயார் என்றால் என்னை பார்த்தபின் முடிவெடுக்கவும்”

“முன்பு வெள்ளையர் கப்பலில் வந்தனர் , ஆப்ரிக்காவில் இருந்து அவர்கள் ஐரோப்பா செல்ல பல மாதம் ஆகும்., இப்பொழுது நாம் அவர்களை திருப்பி அனுப்ப விமான சகிதம் தயாராக இருக்கின்றோம், நொடியில் செல்லலாம் ஆனால் செல்லமாட்டேன் என்கின்றார்கள்”

“கால எந்திரம் என் கையில் கிடைகுமானால் 1946க்கு முன் சென்று டிரம்பின் தகப்பனுக்கு காண்டம் கொடுப்பேன்”

இந்த நூற்றாண்டின் புரட்சியாளர்களில் ஒருவன் முகாபே, ஜிம்பாப்வே தாண்டி ஆப்ரிக்கரின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்டான்

வெனிசுலாவின் சாவேஸ் சாயலும் அவரிடம் இருந்தது

ஒரு நல்ல மானமுள்ள அறிவுள்ள அந்த ஆப்ரிக்கனை ஆளவிடாமல் மேற்குலகம் சதி செய்தது, ஆப்ரிக்கர்களின் அறியாமையும் அதற்கு ஒத்துழைத்தன‌

ஏதேதோ கனவு கண்டு அதை செய்யமுடியாமல் செத்துவிட்ட நல்ல தலைவன் அவன்

அறியாமையும் சுயநலமும் கல்வியும் சிந்தனையும் இல்லா மானிட கூட்டம் நல்ல தலைவன் கிடைத்தாலும் வாழா

நல்ல அறிவார்ந்த இனம் முட்டாள் தலைவன் கிடைத்தாலும் வாழா

ஜிம்பாப்வே துயரம் முதல் வகை

கடைசி வரை மேற்குலகை, அவர்களின் சுரண்டலை எதிர்த்து போராடி செத்த அந்த கருஞ்சிறுத்தைக்கு வீரவணக்கம்.

நிச்சயம் உலக நாடுகள் எல்லாம் அஞ்சலி செலுத்தவேண்டிய மாபெரும் தலைவன் அவன், ஆனால் பெரும் சர்ச்சைகுரிய நபராக அவரை மாற்றுவதில் மேற்குலகம் தந்திர வெற்றி கண்டது

பெரும் கண்ணீரோடும் அஞ்சலியோடும் நடக்க வேண்டிய அவன் கடைசி ஊர்வலம் யாருக்கும் தெரியாமல் அமைதியாய் நடக்கின்றது

வெள்ளையனையும் அவன் உலகையும் ஆளுமையினையும் எதிர்த்தால் என்னாகும் எனும் கொடும் விதிக்கு அவனும் தப்பவில்லை

இது அவர்கள் காலம், ஆடட்டும்

ஒரு காலத்தின் ஆப்ரிக்க இனம் அறிவும் விழிப்பும் பெறும், அப்பொழுது அந்த மாமனிதனின் புகழ் உலகெல்லாம் பரவும்

இம்மானுவேல் போன்றோருக்கான மகத்தான அஞ்சலி

அந்த சம்பவமும் அதை தொடர்ந்த கலவரமும் தமிழகத்தின் இருண்ட நாட்கள், தமிழகம் முழுக்க அக்கலவரம் பரவி விடுமோ என அஞ்சிய நாட்கள்என்ன நடந்தது?1957ல், அந்த‌ தேர்தலில் முத்துராமலிங்க தேவரின் ஆதரவு பெற்ற சசிவர்ணதேவர் வெற்றிபெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் பக்கம் கலவரம் பரவியது,ஏன் பரவியது என்பதுதான் மர்மம்.அந்த கமுதி ராமநாதபுரம் முதல் மதுரை தேனி வரையான பகுதியில் கடவுளுக்கு நிகராக வணங்கபட்டவர் பசும்பொன் தேவர். தேசாபிமானியான தேவர் இந்து மத அபிமானம் மற்றும் குற்றபரம்பரை சட்ட எதிர்ப்பால் அங்கு மங்கா புகழோடு இருந்தார்முருகபெருமானின் வடிவமாகவே அவரை அப்பகுதி வணங்கிகொண்டிருந்ததுதேவரின் கம்பீரமான பேச்சும் ஒரு வகையான வசீகரமும் அவருக்கு அங்கு தனி செல்வாக்கை கொடுத்ததுதாழ்த்தபட்ட மக்களும் இருந்த அப்பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இருந்தன, நிச்சயம் தேவரை முழுக்க சொல்லவும் முடியாது.மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்ட மக்கள் நுழைய போராடியவர் தேவர் அவரின் அடிப்பொடிகள் நிகழ்த்திய கலவரங்களை அவர் ஏன் தடுக்கவில்லை என்பதுதான் வரலாற்று மர்மம்இம்மானுவேல் சேகரன் என்பவர் யார் என்றால், அவரும் அப்பகுதிக்காரர், அன்றே ராணுவத்தில் இருந்தவர், படித்தவர். 7 மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தன. அப்பக்கம் தாழ்த்தபட்ட மக்களின் குரலாக உருவானார், ஒரு கட்டத்தில் ராணுவ பணியினை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தார்.அப்போது திமு கழகத்தால் பலமிழந்துகொண்டிருந்த காங்கிரசுக்கு இம்மானுவேல் போன்றோரை இணைக்க வேண்டிய அவசியம் இருந்தது.இன்னொன்று இம்மானுவேல் சேகரனை சேர்த்துகொள்ள மற்ற கட்சிகளுக்கு தயக்கமும் இருந்தது எல்லாம் வோட்டு கனக்குஎன்னதான் சமதர்மம் பேசினாலும் இம்மானுவேல் சேகரனை சேர்த்துகொள்ள அண்ணாவுக்கும் தயக்கம் இருந்தது, அது பயமா அல்லது வேறுவிஷயமா என தெரியவில்லை.முக்குலத்தோர் வாக்கு வங்கியினை இழக்க திமுக விரும்பவில்லை என பின்னாளில் சொல்லபட்டாலும் இறுதிவரை அண்ணா அதுகுறித்து பேசவில்லைகலைஞர் கடைசி வரை அதுபற்றி மூச்சே விடவில்லைசாதி ஒழிக்கவேண்டிய திமுக அன்று காங்கிரசை ஒழிப்பதிலே குறியாக இருந்தது.ஏதோ ஒன்றிற்கு அஞ்சி யாரும் இம்மானுவேல் சேகரனை சேர்க்க தயங்கிய காலத்தில்தான் காமராஜர் அவருக்கு கை கொடுத்தார்.இந்நிலையில்தான் தேர்தலும் நடந்து அதில் கலவரமும் வெடித்தது. ஏன் கலவரம் வெடித்தது என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை, பெரும் கலவரங்கள் எல்லாம் இந்தியாவில் அப்படித்தான்.அழிவு தெரியுமேயன்றி வெடித்தபுள்ளி தெரியாது, ஆனால் நெடுநாள் வன்மம் மட்டும் காரணம் என்பது புரியும்.அப்படி அந்த கலவரத்தை தடுக்க சில அமைதி முயற்சிகளும் எழுந்தன, அவற்றில் ஒன்றுதான் ஆட்சியர் தலமையிலான கூட்டம். அதில் தேவர், சரிவர்ணதேவர் போன்றோர் அப்பக்கமும், இம்மானுவேல் சேகரன் உட்பட 7 பேர் இப்பக்க சார்பாகவும் கலந்துகொண்டனர்.அதில் உணர்ச்சிகரமாகவும், துணிவாகவும் பேசினார் இம்மானுவேல் சேகரன்.மறுநாள் கொல்லபட்டார், தேவரை எதிர்த்து பேசியபின் அவர் கொல்லபட்டதால் பழி பசும்பொன் தேவர் மீது விழுந்ததுகொல்லபடும்பொழுது இம்மானுவேலின் வயது 33.விவகாரம் விஸ்வரூபமானது, கொலையாளிகளை பிடிக்க முயன்றபொழுதுதான் கீழ தூவல் துப்பாக்கி சூடு எல்லாம் நடந்து அப்பகுதி எரிந்தது.ரத்த ஆறு பொங்கி ஓடியது, தென்னகம் முழுக்க கலவரம் பரவி விடுமோ என்ற அச்சம் மேலோங்கியதுதாழ்தபட்ட மக்களுக்கு தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில் முதல் தலைவனாக தோன்றிய இம்மானுவேல் சேகரனை அரவணைத்த பாவத்திற்காக காமராஜர் சாதிவெறியினை தூண்டிவிட்டவர் என்ற பழி சுமந்தார்பலர் அதை ரசித்தனர், ஆனால் யாரும் கலவரங்களை கண்டித்தோ ஜாதிவெறியினை கண்டித்தோ பேசவில்லைபெரியார் மட்டும் துணிச்சலாக “அந்த முத்துராமலிங்கம் (சாதிபெயரை பெரியார் சொல்லமாட்டார்) என்பவரை பிடித்து உள்ளே போட்டால் ஒழிய அங்கு கலவரம் நிற்காதுங்க” என தைரியமாக சொன்னார்.சாதி ஒழிப்பு போராளிகளான‌ அண்ணாவோ, கலைஞரோ ஏன் கம்யூனிஸ்டுகள் கூட அந்த கலவரத்தை கண்டிக்க தயங்கினர், அவ்வளவு பெரிய வெறியாட்டம் அதுகாரணம் அவருக்கு வோட்டு கணக்கு இல்லை, வேறு வகை கணக்கே இருந்ததுவேறு ஒரு தலைவனுக்கும் அதை பற்றி கருத்து சொல்ல தைரியமில்லை அண்ணா, கலைஞர் உட்பட.பின்பு பல சர்ச்சைகள் எழுந்தன, வழக்குகள் எல்லாம் நடந்தன. முத்துராமலிங்க தேவர் இம்மானுவேல் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கபட்டார்.அதாவது தா.கிருட்டினன் வழக்கிற்கு இம்மானுவேல் சேகரன் வழக்குதான் முன்னோடி, கிட்டதட்ட மூடபட்ட வழக்குஇம்மானுவேல் சேகரனின் ரத்தம் அந்த சாதி வெறி கொலையாளிகளின் கரங்களில் மட்டுமா உண்டு என்றால் இல்லைதாழ்த்தபட்ட மக்களின் தலைவனான இம்மானுவேலை ஆதரிக்க எல்லோருக்கும் பயம், அம்மக்களை எட்டிபார்க்க எவனுக்கு அக்கறையில்லை.அன்று திருமா இல்லை, கி.சாமி இல்லை, பா.ரஞ்சித் இல்லை.நிச்சயம் இம்மானுவேல் சேகரனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கவேண்டியது அந்நாளைய சாதி ஒழிப்பு போராளிகள் செய்தார்களா?தி.க செய்ததா? திமுக செய்ததா இல்லை, அப்படி ஒரு எண்ணமே இல்லைஇம்மானுவேல் சேகரனுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் காத்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லைஅவர்களுக்கு திருப்பி அடிக்க தெரியாத‌ பிராமணன் மட்டுமே கண்ணுக்கு தெரிவானன்றி, திருப்பி அடிக்கும் எந்த சாதியும் கண்ணுக்கு தெரியாதுஇம்மானுவேல் செய்த தவறு என்னவென்று கொலை வழக்கில் விசாரிக்கும்பொழுது தெரிந்த உண்மை, ஒரு தாழ்த்தபட்டவன் தேவருக்கு எதிராக கலெக்டர் முன் நாற்காலியில் அமர்ந்துவிட்டான் என்பதுஅந்த வெறிதான் கொலைக்கு காரணமேயன்றி, தேவரை கடவுளாக வழிபட்ட கூட்டத்தின் வெறியே காரணமன்றி வேறு அல்ல என்பது பின்னாளில் விளங்கிற்றுதேவரும் கொலைக்கு காரணம் அல்ல என நீதிமன்றமும் சொல்லிற்று.ஆனால் இம்மானுவேல் சேகரனின் சாவு வீணாகவில்லை, அதுவரை அவர்களுக்கொரு தலைவன் இல்லை, அவர்கள் குரலை சொல்ல யாருமில்லைநாமெல்லாம் திராவிடர்கள் அதனால் எங்களுக்கு வாக்களிக்க வெண்டும், தமிழையும் பிராமண எதிர்ப்பையும் காப்பாற்ற எங்களை அன்றி யாருமில்லை என சொல்லி கொண்ட திமுகவோ திகவோ அவர்களை எட்டிபார்க்கவில்லைஇந்தியினை எதிர்த்த அளவு, இந்த சாதிவெறி கொலைகளை திமுக எதிர்க்கவில்லை என்பது இன்னொரு கோணம்எல்லாம் சமூக நீதி எனும்பெயரில் நடந்த வாக்கு அரசியல் அன்றி வேறல்ல‌ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், தாழ்த்தபட்ட மக்களுக்கு இம்மானுவேல் சேகரன் மிக உறுதியான தலைவராக திகழ்ந்தார் ஆனால் வீழ்த்தபட்டார்இன்று அவர் வழியிலே திருமா போன்றவர்கள் வந்தார்கள், நிலைத்தார்கள். இன்று வலுவாக அவர்களால் கத்தவாவது முடிகின்றதுஇம்மானுவேல் சேகரன் கொல்லபட்டாலும் திருமா போன்றவர்களின் உருவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்தமிழகத்தின் கொடூர சாதிவெறிக்கு பலியான இம்மானுவேல் சேகரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்எப்படிபட்ட கொடூர காலங்களை எல்லாம் தமிழகம் கடந்திருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இம்மானுவேல் சேகரனின் கல்லறை நிற்கின்றதுஇனி அப்படிபட்ட மோதல்களும் வேண்டாம், சாவுகளும் வேண்டாம்ஒழியட்டும் சாதி, வலுக்கட்டும் மானிட நேயம். அதுவே இம்மானுவேல் போன்றோருக்கான மகத்தான அஞ்சலிஅந்த அஞ்சலில் அவருக்கானது மட்டுமல்ல, அதன் பின் அவர் சாதியிலும் எதிர் சாதியிலும் ஏராளமானோர் செத்தனர், எல்லோருக்கும் சேர்த்தே அஞ்சலிஇம்மானுவேல் சேகரனின் நினைவு நாளுக்காக பலத்த ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கின்றன, சாதி கொடுமைக்காக செத்தவர் அவர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நினைவுநாள் அமைதியாக நடக்க வேண்டும்அதுதான் அவருக்கான மகத்தான அஞ்சலி, அந்த நினைவு அஞ்சலி மிக மிக அமைதியான முறையில் நடப்பதே அவருக்கு பெருமையும் கவுரவமும் ஆகும்

பழியினை சுமந்து நின்றது அந்த கோவில் யானை

பாரதியின் கடைசி காலங்களை அருகிருந்து பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள்

அனுதினமும் கோவிலுக்கு சென்று அப்பனே கணேசா உன்னை வணங்குகின்றேன் என யானைக்கு பழம் கொடுப்பது பாரதி வழக்கம்

அன்றும் அப்படித்தான் பழம் கொடுத்திருகின்றார், யானை தள்ளிவிட்டிருக்கின்றது

அதற்கு மதம் பிடித்த காலமுமல்ல, அது அவரை வேண்டுமென்றே தாக்கவுமில்லை

மாறாக எல்லா நாளும் விளையாடுவது போல விளையாடியிருக்கின்றது, ஆனால் படக்கூடா அடிபட்டு பாரதி விழுந்துவிட்டார்

பாரதி விழுந்து அவரை எல்லோரும் சூழ்ந்திருக்கும் பொழுது அந்த யானை மிகுந்த வருத்தத்துடன் அவர் அருகே நின்றதாக குறிப்புகள் சொல்கின்றன‌

அதற்கு அவன் மகா கவிஞன் என தெரியுமா? தேசாபிமானி என தெரியுமா?

பழம் கொடுத்து கொஞ்சுபவன் என்ற ஒன்றை தவிர அதற்கு என்ன தெரியும்?

யானை தாக்கியதில் இருந்தே அவருக்கு சுகக்கேடு தொடங்கி கொஞ்சநாளில் மரித்தும் போனார் அந்த அறிவு சுடர்

முதலில் அவனை தாக்கியது அவனின் பார்ப்பன‌ சமூகம், அடுத்து தாக்கியது ஆங்கிலேயன், அடுத்தடுத்து தாக்கியது அவனின் அறிவை புரிந்துகொள்ளாத சமூகம்

கடைசியாக அதுவும் விளையாட்டாக தாக்கியதுதான் யானை, ஏற்கனவே மனதால் செத்திருந்த பாரதி அதன்பின் உடலால் செத்துவிட்டான்

பழியினை சுமந்து நின்றது அந்த கோவில் யானை

ஒரு பயலிடமும் பதில் இருக்காது

அந்த இம்மானுவேல் சேகரன் கொலையிலும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சாதி கலவரத்திலும் திமுக என்ன செய்தது என கேளுங்கள்

ஒரு பயலிடமும் பதில் இருக்காது

ஆனால் இது பெரியார் மண், சாதி ஒழித்த அண்ணா கலைஞர் மண் என ஆளாளுக்கு அளந்து விடுவார்கள்

அன்று தேவரை வெளிப்படையாக‌ கண்டிக்க அஞ்சி ஓடி ஒளிந்த மாவீரமான இயக்கம்தான் அது

உலகெல்லாம் செப்டம்பர்மாதம் கருப்பு மாதம்

உலகெல்லாம் செப்டம்பர்மாதம் கருப்பு மாதம், பல துயரமான விஷயங்கள் அப்பொழுதுதான் நடந்தது

செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது.

அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள்.

இம்மானுவேல் சேகரனுக்காக ஒரு இனம் அழுதுகொண்டிருக்கும்

நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள்.

மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர்,

தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன்.

ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது?

விதி.

6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில்தான் தமிழை கற்றார், பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார், ஆங்கிலம், பிரென்ஞ், சமஸ்கிருதம், வங்கம் என பலமொழிகளை படித்ததனால் தான் திமிராக சொன்னார்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை காணோம்”,

உண்மைதான் பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும், அது அவருக்கு தெரிந்தது.

தமிழை கற்றார் தமிழ்கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார் உண்மை உணர்ந்து பெண்விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார், சமூக அவலங்களை கண்டார் சமூகவாதியானார், பிரிட்டிசாரின் கொடுமையை கண்டார் போராளியானார்.

எந்த வம்புதும்புக்கும் போகாமல் எழுதிமட்டும் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடபட்டிருப்பார்

ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலபுலமை அப்படி.

ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம் 4 மில்களோடு நெல்லையை அல்லது தூத்துகுடியினை ஆண்டுகொண்டிருக்கும்.

அவ்வளவு ஏன் ஆசிரியபணியினை ஒழுங்காக செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான்,
அந்த பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைகாட்சி நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.

அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று சமூக கொடுமைகளை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது.

முதலாவது ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது, இன்னொன்று சொந்த மக்கள் பாரதியை விரட்ட வைத்தது.
வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும்,மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார், மனித நேயத்தோடு வாழ்ந்தார்.

உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குதான் பொருந்தும்,

பிரிட்டிசார் விரட்டினர் ஓடினார், வறுமை விரட்டியது ஓடினார், சமூக கொடுமைகள் விரட்டியது ஓடினார்,ஓடினார் முடிந்தவரை ஓடினார், முடியவில்லை இறந்தார்.

ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை,

அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது, பாவம் அவன் “நல்லதோர் வீணை செய்தே” என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, “சக்திகொடு” என கெஞ்சத்தான் முடிந்தது,

அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசகூட யாருமில்லை, ஒதுக்கினார்கள்,விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம்.

அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை.

உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழவிடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது.

குடும்பமும் வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்து கொண்டிருந்த காலமது, அப்பொழுதும் பாரதபோரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான். கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று,

கனவு வேறு,கடமை வேறு, வாழ்க்கைவேறு, இதனை உணர்த்தியது அவரது தோழரான‌வ.உ.சியின் சிறைகொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிகாலமும்

விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார்,

விறகு பொறுக்க யானை, எலி வேட்டைக்கு சிங்கம், புல் புடுங்க புல்டோசர் போல ஆனது நிலை.

இறுதிகாலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழதெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிகொண்டிருந்தார், அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்தி பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும்.

ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறுபாடல்களில்லை.

ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள், எந்த பாடல் 1911ல் ஜார்ஜ் மன்னருக்காக‌ தாகூர் எழுதியதாக சர்சையில் சிக்கிய‌ அதே பாடல், “ஜண கண மன” எனும் அந்த பெரிய பாடல்

அன்று தாகூர் எழுதியது மிக பெரும் பாடல், அதை பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம், அதனை 5 நிமிடமாக சுருக்கி “இந்திய தேசிய கீதம்” என அறிவித்துவிட்டார்கள், என்ன செய்வது, பாடித்தான் ஆகவேண்டும். பாடுகின்றோம்

இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும்,
வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திகொண்டிருக்கின்றோம், ஆனால் அதன் கரையிலேதான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டபட்டுகொண்டிருக்கின்றது என்ன கொடுமை இது.

ஆனால் “தாயின் மணிக்கொடிபாரீர்” அல்லது “வந்தே மாதரம் என்போம்” போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்.

ஒன்றும் சொல்வதற்கில்லை ,”ஏழை சொல் அம்பலம் ஏறாது, தமிழன் சொல் டெல்லிக்கு கேளாது”.

தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய “நோபல் பரிசு”, பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என பாடிகொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது “தேச துரோகி” பட்டமும் சிறைதண்டனையும்.

பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன? என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் “கணல்” அல்லது “உணர்ச்சி” அவர் பாடலில் இல்லை.

இன்றும் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என அவன் பாடியதே நடந்து கொண்டிருகின்றது

அவரது கனவுபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை 1947ல் இறந்திருப்பார். எப்படியோ பெண்விடுதலைக்கும், தீண்டாமை கொடுமைக்கும், சாதி கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி.

அவர் பாஷையில் சொல்வதென்றால் “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு”.
அவர் வைத்த அந்த‌ தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.

பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவ‌து அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிபட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான், ஆனால் பாரதியாரின் சில செயல்கள் எந்த மனைவியையும் அம்மிகுளவி தூக்கவைக்கும்.

வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக‌ வாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதைபாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார், பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிபடும் இந்தியருக்காக‌

உலகின் கஷ்டத்த்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி.

இறுதியாக சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும்பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார்.

கோயிலின் தெய்வம் கோபபடவில்லை, ஆனால் கோயில் யானை கோபபட்டது, வழக்கம்போல பழம்கொடுக்க “அப்பனே கணேசா..” என அருகில் சென்ற பாரதியை லேசாக தாக்கிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11ல் காலமானார்.

இன்று அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்த‌ பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தகாரன். 60 வருடம் 100 வருடம் கழித்து போடபடும் இசைக்கும் கட்டுபடும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு.

ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேச கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தபட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன்.

ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக நெல்லையின் மக்களான நாமும் பெருமை அடையலாம்.

தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய்,நெல்லையனாய் அஞ்சலி செலுத்துவோம்.

வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டபட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதர்க்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கபட்டது.

பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கபட்டான்,

தமிழ் பக்தரான பாரதிதாசன் கொண்டாடபட்டான்

இப்பொழுது தமிழகத்தில் பாஜக குரல் எழும்புகின்றது, அந்த பாஜகவினராவது அவனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையினை கொடுக்கட்டும்

தமிழக பாஜகவினர் அவனுக்கு செய்வதாக இருந்தால் அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம், வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன விற்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது.

தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும் , பாடலிலும் சொல்லி சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதியிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடாலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது.

தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசிய‌கொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?

அவன் பாடல்களையும் தேசியமயமாக்க சொல்லலாம், எல்லா இந்தியனும் அதனை படிக்கலாம்

அதனை காங்கிரஸ் செய்யவில்லை, பாஜகவும் செய்யாவிட்டால் செய்வதற்கு யாருமில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக கடந்த சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார் மோடி

பாரதிக்கான மிகபெரும் அங்கிகாரம் அது, அது இன்னும் தொடரவேண்டும், பாரதி புகழ் இந்தியா எங்கும் பரவி நிலைக்க வேண்டும்

நலங்கெட அந்த வீணை புழுதியில் எறியபட்டாலும் அதன் இன்னிசை எந்நாளும் இந்நாட்டில் கேட்டுகொண்டே இருக்கும்

நாட்டிற்காகவும், இச்சமூகத்திற்காகவும் ஒலித்த வீனை அது

தமிழ்சமூகத்தின் அறிவுடை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மாபெரும் தேசபற்றாளனுக்கு “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்..” என்ற அவரின் வரிகளுடன் வீர வணக்கம்

தாலிபன் தன் வேலையினை காட்டிவிட்டது

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முறிந்த மறு நொடியே தாலிபன் தன் வேலையினை காட்டிவிட்டது

காபூலின் அமெரிக்க தூதரகம் தாக்கபட்டிருகின்றது, அதாவது அமெரிக்க தாலிபன் போர் மறுபடியும் தொடங்கிவிட்டது

தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல அமர்ந்திருக்கின்றது பாகிஸ்தான்