ஏன் நிறுத்தினார்கள் என்பது புரியாமல் இருந்தது, இப்பொழுதுதான் புரிந்தது

சீனாவின் ஷாங்காய் முதன் ஷின் ஜின் வரை, பிலிப்பன்ஸில் , சிங்கப்பூரில்,
மலேஷியாவில் ஜப்பானில் தென்கொரியாவில், தைவானில் ஐடி பார்க் கொண்டுவந்தது எந்த நாட்டு கலைஞர் என தெரியவில்லையே?

ஹூண்டாய் காரின் மிகபெரும் உற்பத்தி சாலை தாய்லாந்தில் உண்டு , இந்தோனேஷியாவில் கூட சில பிரிவுகள் உண்டு, அங்கெல்லாம் முக ஸ்டாலின் கொண்டு வந்திருக்கலாம்

போர்டு கம்பெனி உலகின் பெரும்பான்மை நாடுகள் எல்லாவற்றிலும் உண்டு, இப்பொழுது உற்பத்தியினை நிறுத்திவிட்டார்கள்

ஏன் நிறுத்தினார்கள் என்பது புரியாமல் இருந்தது, இப்பொழுதுதான் புரிந்தது

ஆம் கலைஞர் இல்லாத தமிழகத்துக்கு எதற்கு போர்டு கார் என நிறுத்தியேவிட்டார்கள், நிச்சயம் நன்றியுள்ளவர்கள அவர்கள்

ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டம் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கபடும்

ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டம் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கபடும் என தெரிவித்த நிலையில் எஸ் 500ம் தயாராக இருப்பதாக அறிவிக்கின்றது

எஸ் 300 சிஸ்டம் சிரியாவில் இருக்கின்றது, எஸ் 400 துருக்கி மற்றும் சீனாவில் நிற்கின்றது, விரைவில் ஈரான் மற்றும் இந்தியாவுக்கு வரலாம்

இந்தியா நிச்சயம் ஈரான் அவர்கள் லட்சியம்

இப்பொழுது எஸ் 500 எனும் மேம்படுத்தபட்ட சிஸ்டத்தை தயார் செய்துவிட்டதாக சொல்லும் ரஷ்யா அதை சீனாவுக்கு கொடுக்கும் போல் தெரிகின்றது

இந்த எஸ் சீரிஸ் வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யா எந்த யுத்தத்திலும் பயன்படுத்தவில்லை, டெமோ எனும் சோதனை பார்த்ததோடு சரி

இது தரை, வானம், கடல் உட்பட 6 வழிகளில் வரும் அதாவது வான்வெளி ஆபத்தான விமானம் , ஹெலிகாப்டர், தரை ஏவுகனை, கப்பல் ஏவுகனை,நீர்மூழ்க்கி ஏவுகனை , விமான ஏவுகனை என 6 வழி ஆபத்தை தடுக்குமாம்

அதாவது எஸ் சீரிஸ் வகைக்கு 6 முகங்கள் இருக்கின்றன, இதனால் அதை ஆறுமுகம் என அழைக்கலாம் அல்லவா?

முருகன் கையிலும் வேல் இருக்கின்றது, அவர் அதைத்தான் வீசி காப்பார்

இந்த சிஸ்டமும் ஏவுகனைகளை வீசித்தான் எதிரியினை அழிக்கும்

இதனால் எஸ் 400 சிஸ்டத்துக்கு ஆறுமுகம் பெயரை தாராளமாக சூட்டலாம்..

பாஜக அரசுக்கு இதை எல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்?

வாக்குக்காக அரசியலில் எதுவும் பேசுவார்கள்

வாக்குக்காக அரசியலில் எதுவும் பேசுவார்கள், அதுவும் தேர்தல் நெருங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம்

இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல‌

அமெரிக்கா என்றால் ரஷ்யா சீனா என சீறும், பாகிஸ்தானுக்கு ஒரே ராகம் காஷ்மீர், ஈரானுக்கு இஸ்ரேல், ஜப்பானுக்கு ரஷ்யா என காட்சிகள் உலகெல்லாம் அதிகம்

தமிழ்நாட்டில் திமுகவுக்கு திராவிடம் மாநிலசுயாட்சி என சில பிராண்டுகள், அதிமுகவுக்கு ஊழல் கருணாநிதி, கன்னடத்துக்கு காவேரி, இந்தியாவில் பாஜகவுக்கு ராமர் கோவில், பாகிஸ்தான் என ஏகபட்ட உதாரணம் உண்டு

இஸ்ரேலுக்கு சந்தேகமின்றி ஜெருசலேம் மற்றும் பாலஸ்தீன் இதைவிட்டால் அவர்கள் அரசியல் இல்லை

இரு தேர்தலிலும் பெரும்பான்மை கிடைக்கா நேதன்யாகு இம்முறை பெரும் சர்ச்சையினை கிளப்புகின்றார்

தான் வெற்றிபெற்றால் பாலஸ்தீனத்தின் மேற்குகரையின் ஒரு பகுதியினை இஸ்ரேலோடு இணைப்பேன் என்கின்றார்

பாலஸ்தீனம் இன்னும் கதறுகின்றது, விடுதலை இல்லை அதை கொடுப்பாரும் இல்லை

ஒரே ஆறுதல் அராபத் கொடுத்த அல்லது பெற்றுகொடுத்த எல்லை

அந்த எல்லையினை தாண்டி சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க போவதாக மிரட்டுகின்றார் நேதன்யாகு

அரபு நாடுகள் இதை கண்டிக்கின்றன, இஸ்ரேல் வழக்கம் போல் கைதட்டுகின்றது, ஐநா கூட முறைக்கின்றது

நேதன்யாகு இதை எல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை

அந்த மேற்குகரை பகுதிகள் குறித்து சர்ச்சை இருந்தது நம்முடைய காஷ்மீரின் எல்லை பகுதி போன்ற சர்ச்சை அது

அதை மீட்பேன் என நேதன்யாகு முழங்கினால் என்ன அர்த்தம்?

ஆக மோடியிடம் இருந்து நேதன்யாகு பாடம் படித்திருக்கின்றார் என்ற கோணத்தில் பார்க்கலாம் அல்லவா?

குட்வின் செல்லுலாய்ட்

அவர் பெயர் குட்வின் செல்லுலாய்ட், அமெரிக்க வாசி

1850களில் பல அமெரிக்கர்கள் கண்டுபிடிப்பு புரட்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தானும் எதனையாவது கண்டுபிடிக்காவிட்டால் மதிக்கமாட்டார்கள் என மண்டையினை உருட்டிகொண்டிருந்தார்

நாம் காணும் கனவுகள் நினைவுகளில் இருக்கும், காட்சிகள் நினைவுகளில் இருக்கும் ஆனால் நம்மை தவிர யாரும் அவற்றை பார்க்க முடியாது

இந்த மனிதருக்கு நாம் பார்க்கும் காட்சியினை அப்படியே நிறுத்தி வைத்தால் எல்லோரும் எப்பொழுதும் பார்க்கலாமே என சிந்தனை வந்தது

அதில் உருவானத்தான் புகைபட சுருள், அதை இவர்தான் உருவாக்கினார்

அவர் பெயரில் அது செல்லுலாய்ட் என்றே அழைக்கபட்டது

அந்த புகைபட சுருளை அவர் அறிமுகபடுத்திய நாள் இன்று

அந்த புகைபட சுருள் உலலையே புரட்டி போட்டது, முதலில் புகைபடம் எடுத்தார்கள் பின் எடிசன் போன்றோர் அதை வீடியோவாக மாற்றினார்கள்

அது உலகின் தவிர்க்கமுடியா அங்கமானது, புகைபடங்களும் சினிமாக்களும் உலகையே புரட்டி போட்டன‌

அதுவரை வரைய தெரிந்தவர்களை வைத்து காட்சிகளை வரைந்து கொண்டிருந்தவர்கள் அதையே தொழிலாக வைத்திருந்தவர்கள் வயிற்றில் அடித்தது புகைபட சுருள்

முதலில் கருப்பு வெள்ளை பின்பு கலர் என அது மாறியது

அந்த காலம் சுவாரஸ்யமானது புகைபட சுருளை வெளிச்சத்தில் பிரித்தால் ஒன்றுமில்லாமல் காட்சிகள் போய்விடும்

அதனை இருட்டறையில் பல திரவங்களில் குளிப்பாட்டி என்னவெல்லாமோ செய்துதான் காட்சிபடுத்த வேண்டும்

அமெரிக்காவின் பெரும் தொழிலாக புகைபட சுருள் தயாரிப்பு இருந்தது, ஜப்பானை மீட்டெடுக்க அந்நாட்டுக்கு இத்தொழிலை தாரைவார்த்தது அமெரிக்கா

அதன் பின்புதான் கோடக் போன்ற கம்பெனிகள் புகைபட சுருள் தயாரிப்பில் கொடிகட்டிபறந்தன‌

ஸ்டூடியோ, சினிமா என அதன் தேவை உச்சத்தில் இருந்தபொழுது காமராஜரும் ஊட்டியில் அரசு சார்பில் ஆலைதிறந்தார்

அவரின் தொலைநோக்கு அப்படி இருந்தது

1990வரை மிகபெரும் தொழிலாக இருந்த புகைபட சுருள் தொழிலுக்கு ஆப்பு டிஜிட்டல் வடிவில் வந்தது

நொடியில் காட்சிபடுத்தும் ,ஏகபட்ட விஷயங்களை எளிமைபடுத்தும் டிஜிட்டல் நுட்பம் புகைபட சுருள் தொழிலையே ஒழித்தது

விரைவில் அது விடைபெற கூடும், மியூசிங்களில் மட்டும் அச்சுருளை நாம் காணகூடும்

உங்களிடம் புகைபட சுருள் இருந்தால் பத்திரபடுத்தி வையுங்கள் பின்னொருநாளில் பழைய பொருட்களை ஏலம் விடும் கடைகள் பெரும் விலை கொடுத்து வாங்குவார்கள்

நம்பர் சுற்றும் போன், அட பழைய செங்கல் வடிவ மோட்ரோலா போனே இப்பொழுது அபூர்வ பொருளாம் பெரும் விலைக்கு செல்கின்றது

புகைபட சுருளை கொடுத்தவன் அந்த செலுலாய்ட், அவன் பெயரே அதற்கும் வைக்கபட்டது

செல்லுலாய்ட் காட்சிகளே செல்லுலாய்ட் பிலிம் என்றும் சினிமா என்றும் வந்தன‌

செல்லுலாய்ட் எனும் சினிமா உலகமே அப்படித்தான் உருவானது

அந்த உலகம் மூலமாகவே குஷ்பு எனும் தேவதை உலகிற்கு வந்தது

ஆக குஷ்பு எனும் மகா லட்சுமி உருவாக அந்த செல்லுலாய்ட் எனும் பிரம்மனே காரணம், அவனே மூலம்

செல்லுலாய்ட் உலகுக்கு வந்த நாள் இது என அதன் நினைவுகளில் உலகம் மூழ்கி கிடக்கும் வேளைகளில், தலைவியினை கொடுத்ததற்காக ஸ்பெஷல் நன்றி என சங்கமும் செல்லுலாய்டுக்கு நன்றி சொல்கின்றது

மோடி ஏன் பத்திரிகை முன்னால் வராமல்

அமைச்சர் பியூஸ் கோயலின் ஐன்ஸ்டீன் காமெடி வைரலாகி உலக கவனம் பெற்றுவிட்டது

அதிமுக அமைச்சர்களும் , திமுக தலமையும் தமிழில் தமிழ்நாட்டில் காமெடி செய்வதால் உலகபுகழ் அடையவில்லை

ஆனால் டெல்லியில் உளறியதால் அமைச்சர் கோயல் உலகபுகழ் பெற்றுவிட்ட்டார்

புவிஈர்ப்பு விசையினை கண்டறிந்தது ஐன்ஸ்டின் என அவர் சொன்னது உலக கலாய்ப்பாகிவிட்டது

அப்படியா அவரா கண்டறிந்தார்? வேறு யாரெல்லாம் என்னவெல்லாம் கண்டறிந்தார் சொல்லுங்கள் என அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

பாஜக அமைச்சர்களுக்கு நாக்கில் சனி, நல்ல பரிகாரம் செய்துவிட்டு அவர்கள் வாய்திறப்பது நல்லது

இல்லை ஊமைகளுக்கான செய்தி போல சைகையில் பேசிகொள்ளலாம்

முன்பு மொரார்ஜி தேசாய் என்றொருவர் இருந்தார், ஒருமாதிரியான முரட்டு ஆசாமி

சம்பந்தமில்லா கேள்விகளை கேட்டால் மனிதர் டென்சனாகிவிடுவார் , ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் முதுமையிலும் நீங்கள் உற்சாகமாக இருப்பது எப்படி என கேட்டார்கள்

கடுப்பான மனிதர் “அதுவா நான் காலை எழுந்தவுடன் சிறுநீர் குடிப்பேன், நீனும் முயற்சி செய்..” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

காலை எழுந்தவுடன் மொரார்ஜி சிறுநீர் குடிப்பார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது

அது பெரும் செய்தியாகி , உலகெல்லாம் பரவி, சிறுநீர் ஆய்வெல்லாம் தொடங்கி ஏன் மொரார்ஜிக்கே போன் போட்டு “அய்யா காலை எப்பொழுது குடிப்பீர்? சாப்பாட்டு முன்பா பின்பா?

எவ்வளவு குடிப்பீர்? உம் சிறுநீர் மட்டுமா இல்லையா?

மதியம் என்ன குடிப்பீர்? இரவு என்ன குடிப்பீர்? எவ்வளவு அளவு?” என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள்

அவர் பதிலே சொல்லவில்லை

பின்பு எதிர்கட்சிகள் எல்லாம் சிறுநீர் குடிப்பவருக்கு ஏது மூளை என்றளவு கலாய்த்தான‌

இன்றளவும் மொரார்ஜி சிறுநீர் குடிப்பார் என்ற பிம்பம் அவர்மேல் விழுந்துவிட்டது, அதை மாற்றமுடியாது

ஆனால் அவர் குடித்ததே இல்லை, கோபத்தில் சொன்ன வார்த்தை அவரை அப்படி ஆக்கிவிட்டது

மத்தியில் இருப்பவர்கள் அவ்வளவு கவனமாக பேசவேண்டும் அல்லது நம் முக அழகிரி பேசாமலே அமைச்சராக இருந்தது போல் இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் சிக்கல்தான், மத்திய அமைச்சர்கள் பெறும் கவனமும் அதை உலக மீடியாக்கள் சொல்லும் வீச்சும் அதிகம்

மோடி ஏன் பத்திரிகை முன்னால் வராமல் தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளின் உரையினை தன்னந்தனியே வாசித்துவிட்டு செல்கின்றார் என்றால் இதுதான் காரணம்..

இவரும் பாதிசம்பளம் வாங்கும் அரசு ஊழியர்

இந்த சவுக்கு சங்கர் என்பவர் என்னமும் எழுதட்டும்

ஆனால் நாட்டின் பிரதமரான மோடியினை “டேய்.. போடா.. வாடா.. அவனே.. இவனே..” என சொல்வது சரியல்ல‌

மிக மிக தரம்தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிப்பதும் கொஞ்சமும் சரியல்ல..

பிரதமர் யாராக இருந்தாலும் அந்த பதவிக்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும்.

எங்கே முக ஸ்டாலினை அவர் “டேய் , வாடா ..போடா” என சொல்லட்டும்?

பழனிச்சாமியினை “டேய் பழனி..” என சொல்லட்டும்?

கனிமொழியினை அடியே கனிமொழி நில்லடி, சொல்லடி என சொல்லட்டும்?

மாட்டார், அதுவும் கனிமொழி பக்கமே செல்லமாட்டார்

ஜக்கிசாமியினை மலையினை முழுங்குகின்றார் என சொல்லிவிட்டு பால் தினகரனிடம் பம்முவதிலே அவரின் புரட்சி தெரிகின்றது

இப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் மிக சரியென்று தோன்றுகின்றது

ஆம், அந்த ஜாபர்சேட் என்பவர் மிக சிறந்த காவல்துறை அதிகாரி. சவுக்கு சங்கரை முதன் முதலில் மகா ஆபத்தானவன் என்றும், மரியாதை கொஞ்சமும் தெரியாதவன் என்றும் கணித்தது அவரே தான்

செய்ய வேண்டியதை செய்ததும் அவரேதான்

கவுசல்யா எனும் அரைகுறை போராளி பொங்கியதும் அவரை லேசாக தட்டி செய்ய வேண்டியதை செய்த அரசு, இவரை மட்டும் ஏன் விட்டுகொண்டிருக்கின்றது என்பதுதான் புரியவில்லை

இவரும் பாதிசம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்பது குறிப்பிடதக்கது

நாம் தமிழர் கோஷ்டியின் மகளிர் பிரிவு ஓணம்

நாம் தமிழர் கோஷ்டியின் மகளிர் பிரிவு ஓணம் கொண்டாடியிருக்கும் போல…

இம்மாதிரி சிந்தனைகள் அவர்கள் அறிவினை தவிர வேறெங்கும் உதிக்காது..

எனினும் கருப்பு சட்டையினை பார்த்தால் திக கோஷ்டிகள் மேலும் சந்தேகம் வலுக்கின்றது