நாசாவின் நுழைவு தேர்வு போலவா இருக்கும்?

5ம் வகுப்பு குழந்தைக்கு தேர்வு நாசாவின் நுழைவு தேர்வு போலவா இருக்கும்? நிச்சயம் 5ம் வகுப்பு குழந்தைக்கு எது தேர்வோ அப்படித்தான் இருக்கும்

தன்னம்பிக்கையாக தேர்வுகளை எழுத மாணவர்களை தயாரிக்க வேண்டிய இடத்தில் அவர்களை மிரட்டி ஒடுக்கும் காரியத்தை பலர் செய்து கொண்டிருக்கின்றார்கள்

எல்லா தேர்வினை போல அதுவும் ஒரு தேர்வு, அவர்கள் அளவுக்குத்தான் கேள்விதாள் இருக்க போகின்றது

இதற்கு ஏன் கடும் அழிச்சாட்டியம் என கேட்டால் நாம் சங்கி.

அதற்கு மேல் கேட்டால் நம் குழந்தைகளை 5ம் வகுப்பு தாண்ட கூடாது என மத்திய அரசு செய்யும் ஆரிய சதி என்கின்றார்கள்

அண்ணா தவிர எந்த திராவிட தலைவன் 5ம் வகுப்பினை தாண்டினான் அவர்கள் எல்லாம் ஆளவில்லையா? திராவிட ஆட்சி பொற்கால ஆட்சி என நீங்கள்தானே சொல்கின்றீர்கள் என கேட்டால் பதில் வராது

அந்த கோஷ்டியே ஒரு நாடக கம்பெனி

அவருக்கு இச்சமூகமும் ஏழை மக்களும் முக்கியம் என்றால் எனக்கு பின் என் சொத்துக்கள் தலித் மக்களை சேரும் என உயில் எழுதியிருக்கலாம்

அதை முறைபடுத்தி என் காலத்துக்கு பின்னால் எப்படி எல்லாம் பயன்படுத்தவேண்டும் என விதிகளை வகுத்து மறைந்திருக்கலாம்

மாறாக மணியம்மையினை திருமணம் செய்யும் அவசியம் என்ன?வயதான காலத்தில் கவனிக்க என்ற சமாளிப்பெல்லாம் தேவையில்லை எத்தனையோ தாதிகளை வைத்திருக்கலாம்

ஏன் மணியம்மையே காந்திக்கு மனுகாந்தி இருந்தது போல பேத்தியாக இருந்திருக்கலாம்

ஆனால் மணம் செய்யும் அவசியம் என்ன?

ஆக தனக்கொரு வாரிசு வேண்டும் என அவர் விரும்பியிருக்கின்றார், வாரிசு எதற்கு ஒரு பணக்காரன் ஆசைபடுவான் என்பது சொல்லிதெரியவேண்டியதில்லை

தன் திரண்ட சொத்து தன் வாரிசுக்கே வரவேண்டும் என விரும்பியிருக்கின்றார், மணம் செய்திருக்கின்றார் ஆனால் விதி வழிவிடவில்லை

பின் வேறுவழியின்றி அவை அறக்கட்டளைக்கு வந்தன‌

மணியம்மை வரும்முன்பு கிளம்பா கோஷ்டி, மணியம்மை மணைவியான பின் ஏன் கிளம்ப வேண்டும்?

பகுத்தறிவும் சாதி ஒழிப்பும் முக்கியமென்றால் மணியம்மை என்ன எந்த பெண்ணை அவர் கட்டியிருந்தாலும் அங்கேயே இருந்திருக்கலாம்

ஆனால் பெரியாரின் வாரிசு என ஒன்று வந்துவிட்டால் நாம் இலவுகாத்த கிளியாகிவிடுவோம் என அஞ்சி பறந்துவிட்டார்கள்

பகுத்தறிவு என்பது அதுதான்

பெரியார் தன் சொத்துக்களை காக்க மணம் செய்திருக்கின்றார், ஏழைகளுக்கு அல்லது இல்லாதவருக்கு அதை கொடுக்க அவருக்கு மனமே இல்லை

விதி வலியது என்பதாலும் சொத்துக்களை சுடுகாடு தாண்டி கொண்டு செல்லமுடியவிலை என்பதாலும் விட்டுவிட்டு போய்விட்டார் மானமிகு வீரமணி அதை கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டார்

இன்றும் பெரியாரின் நூல்கள் அரசுடமை ஆகாது என அடம்பிடிக்கும் காரியக்காரர் அவர்

அந்த கோஷ்டியே ஒரு நாடக கம்பெனி அதில் எல்லோரும் நடிகர்கள்

அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

அண்ணாவினை ஏன் சீமான் என்கின்றாய் அப்படி அவர் என்ன சொன்னார் என்றால் ஈழவிவகாரத்திலே அவர் சொன்னதை சொல்லலாம்

அண்ணா காலத்தில் ஈழத்தில் ஆயுதபோராட்டம் இல்லை மாறாக மலையக தமிழர்மேல் தாக்குதல், ஈழதமிழர் மேல் அடக்குமுறை என தொடங்கியிருந்த காலம்

இது பற்றி அன்றைய தமிழக தலைமகனான அண்ணாவிடம் கேட்டார்கள்

அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

“தமிழருக்கு லங்காபுரியில் சிக்கல் என்றால் சிங்களனுக்கு ஒன்றை சொல்கின்றேன்

4 கோடி தமிழரும் இறங்கி நடந்தால் கடலும் திடல் தானே”

இதற்கு பேரரிஞர் அண்ணாவின் அறிவுசிந்தனை என்றொரு கூட்டம் கைதட்டியது

கவனியுங்கள் , இதில் கடல் திடல் எனும் ரைமிங்கான வார்த்தையினை தவிர ஒன்றுமே சாத்தியமில்லை

4 கோடி பேர் கிளம்பமுடியுமா, கடலை திடலாக்க முடியுமா? நடக்குமா?

ஆனால் அவர் போக்கில் கைதட்டி கொண்டிருந்தார்கள்

அண்ணாவின் புகழ்மிக்க வசனம் “நான் ஆணையிட்டால் ரயில்கள் ஓடாது”

ரயில் ஓடவில்லை என்றால் மக்கள் எப்படி பயணிப்பார்கள்? சரக்கு போக்குவரத்து எப்படி நடக்கும், என்றெல்லாம் கவலையற்ற கூட்டம் அதற்கும் கைதட்டியது

அண்ணாவின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அப்படித்தான் இருந்தன.

அண்ணாவும் நெப்போலியன் கதையினை எழுதினார், உண்மையில் நெப்போலியனை தோற்கடித்தது யாரென்றால் மக்களட்சியினை முடியாட்சியாக திருப்பியதில் அதிருப்தியான பிரான்ஸ் கவுன்சில் , போப்பாண்டவரை அவன் விரட்டியதால் அதிருப்தியான கத்தோலிக்க மன்னர்கள் அதன் பின் அவன் ரகசியங்களை ஊடுருவி கொடுத்த அந்த ஆஸ்திரிய மனைவி

முக்கியமாக ரஷ்யாவில் அவன் செய்த முட்டாள்தனம்

இப்ப்படி ஏக சிக்கலில் நெப்போலியன் வீழ அண்ணா எப்படி கதையினை முடித்தார் தெரியுமா?

ஒரே மொழி, ஒரே நாடு என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பதை வீழ்ந்து உலகுக்கு சொன்னான் நெப்போலியன், ஏ ஆரியமே உன்னை எச்சரிகின்றேன்

அட பதர்களா? நெப்போலியன் என்ன பிரெஞ்ச் மொழி வெறியனா இல்லை அகண்ட பிரான்ஸை அமைத்தானா?
ஆட்டோமன் துருக்கியர் பக்கம் அவன் தலைவைத்தே படுக்கவில்லை அவ்வளவு பயம்

அவன் செய்ததெல்லாம் பிரெஞ்ச் ஆங்கில பன்னெடுங்கால யுத்தத்தை தொடர்ந்தான் பிரிட்டிசாருக்கு துணையானவர்களை அடக்க்கினான் கடைசியில் பிரிட்டிசாரால் வீழ்ந்தான்

சமத்துவ புரட்சி பிரான்சும் அவனின் முடியாட்சியினை ரசிக்கவில்லை

ஆக உண்மை ஒன்றிருக்க இல்லாத ஒன்றை எழுதி குழப்பி தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய அவர் அன்றைய சைமன் என்பதில் மிகை ஏதுமில்லை

ஆனால் ஒரு விஷயம் உண்மை

அண்ணாவுக்கு ஆங்கிலம் அனாசயமாக வந்தது நல்ல வேளையாக சைமனுக்கு வரவில்லை, ஒருவேளை வந்து தொலைத்திருந்தால் இப்பொழுது டிரம்புக்குத்தான் சோதனை வந்திருக்கும்

விஜயகாந்த் எங்களுக்கு அத்திவரதர்

விஜயகாந்த் எங்களுக்கு அத்திவரதர் : தேமுதிக தொண்டர்கள்

எதற்காக?

எப்பொழுதும் தண்ணீருக்கு அடியில் கிடப்பதாலா என எதிர்கட்சி திருப்பி கேட்டால் என்னாகும்??

ப.சிதம்பரத்தின் பக்கத்து செல்லில் அடைத்துவைக்க வேண்டும்

வெளிநாட்டு தொழிலாளி வருடகணக்கில் பாமாயில் காட்டிலும் வளைகுடா பாலைவனத்திலும் வருடகணக்கில் தனித்து கிடக்கின்றான்

அவன் சம்பளமும் குறைவு, வசதியும் குறைவு, பாதுகாப்பும் குறைவு

எத்தனையோ வருடத்திற்கு ஒருமுறை அவன் ஊருக்கு வரும்பொழுது குடும்பத்தார் அழுவதில் நியாயம் இருகின்றது

ஆனால் வெறும் 100 நாட்களுக்காக கொழுத்த சம்பளத்தில் பிக்பாஸ் வீட்டில் தங்கும் இம்சைகளை அவர் வீட்டுக்காரர்கள் சந்திப்பதும் ஏதோ நிலாவுக்கு சென்றுவிட்டு இந்த இம்சைகள் திரும்பியது போல கதறி அழுவதும் எரிச்சலூட்டும் விஷயங்கள்

இவைகளை எல்லாம் ப.சிதம்பரத்தின் பக்கத்து செல்லில் அடைத்துவைக்க வேண்டும்

அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான கொடுமையினை பேனர் வைத்து நாம் தமிழர் தும்பிகள் கண்டித்ததாக சில தகவல்கள் வருகின்றன‌

அப்படியே திமுகவில் பேனரை ஒழித்த முக ஸ்டாலினுக்கு பேனர் வைத்து திமுகவினர் நன்றி தெரிவித்ததாகவும் சில செய்திகள்

விஷயம் உறுதிபடுத்தபடவில்லை என்றாலும் அவர்கள் அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்

இதனால் பாதுகாப்பும் அதிகம்

சீன அதிபரும் மோடியும் மகாபலிபுரத்தில் சந்திக்க போவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்

அதற்கான கடும் பாதுகாப்பில் இரு நாட்டு ரகசிய பாதுகாப்பு குழுக்களும் இறங்கிவிட்டன‌

சீன அதிபர் வருவதால் அவரின் பாதுகாப்பினை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டார்கள், சர்வதேச நடைமுறைபடி அவர்கள் குழுதான் வந்து உறுதி செய்யும் சம்பந்தபட்ட இடத்தையும் சுற்றி 5 கிமீ அவர்கள் கட்டுபாட்டில் எடுக்கும்

கட்டுபாடு என்றால் துப்பாக்கியோடு 1000 பேர் நிற்க, வாகனங்களை தடுத்து , உள்ளாடை வரை சோதனை செய்து அந்த பகுதியினையே களபேரமாக்குவது அல்ல‌

மாறாக கூலிங்க் கிளாஸ் சகிதம் ரகசியமாக பார்த்து கண்காணித்து பாதுகாப்பினை வலுபடுத்துவது

கண்காணிப்பென்றால் மகாபலிபுரத்தில் சில ஜோடிகள் என்ன செய்யுமோ அதை எல்லாம் ஆர்வமாக பார்ப்பது அல்ல, மாறாக ஆபத்துக்கு வாய்ப்பு உண்டா, எவனும் அல்லது ஏதும் குழுக்கள் ரகசிய திட்டமிடுகின்றதா? என பல வகைகளில் கண்காணிப்பார்கள்

திபெத் , உய்க்குர், ஜப்பான், தைவான் , வியட்நாம் என ஏகபட்ட இடங்களில் வம்பு இழுத்து வைத்திருக்கும் நாடு சைனா, அத்துடன் அமெரிக்கா இந்தியாவோடு நல்லுறவும் இல்லை எதிகள் அதிகம்

இதனால் பாதுகாப்பும் அதிகம்

மிக மிக ரகசியமான ஆனால் கடும் பாதுகாப்பில் மகாபலிபுரம் வந்துவிட்டது என்கின்றார்கள்

ஆனால் பார்க்க அப்படி தெரியாது, சீனர்கள் நடமாடியது போலவே தெரியாது ஆனால் எல்லாம் மகா பலமாக கண்காணிப்பு பாதுகாப்பு என நடந்துகொண்டிருக்கின்றது

மோடி வரும்பொழுது கருப்புகொடி காட்டுவார்களா என தெரியாது, காஷ்மீர் விவகாரம் முதல் பல விஷயங்களில் கொதிக்கும் எதிர்கட்சி இம்முறை கருப்பு கொடி காட்டுமா என்பது தெரியவில்லை

ஆனால் மகா முக்கியமான இந்த சந்திப்பில் ஏதும் வம்பு செய்தால் விளைவுகள் சாதரணமாய் இரா

சரி திமுகவினை விடுங்கள், இறுதி யுத்தத்தில் ராஜபக்சேவுக்கு ஆயுதங்களை அள்ளிகொடுத்த நாடு சீனா, அந்த தமிழின விரோதி சீனாவின் தலைவர் தமிழகம் வர நாம் தமிழர் எப்படி அனுமதிக்கும்

இதுபற்றி தும்பிகளிடம் கேட்டால், லூசாண்ணே நீங்க, இங்க காய்கறி விஷம், தண்ணி விஷம் எல்லாமே விஷம்

தமிழனுக்கு பனையோட அருமை தெரியல, பனை அழிந்தால் ஒரு இனமே அழியும்

பனையினை மீட்டெடுத்தால் தமிழ்நாடே மீண்டெழும் தமிழினமே மீண்டெழும், எங்களுக்கு லட்சம் கனவு இருக்குண்ணே உங்கள மாதிரி இல்ல”

டேய் அந்த சைனா ராஜபக்சேவுக்கு என்னவெல்லாம் உதவிச்சி, அந்த இனபடுகொலை, போர்குற்றம் என சொன்னால்

அண்ணே உங்ககிட்ட பேச நேரமில்லை , இன்னைக்குள்ள 1000 பனைவிதை விதைக்கணும், எங்க லட்சியத்துல குறுக்க நிக்காதீங்க என சொல்லிவிட்டு ஓடிவிட்டது தும்பி

ஆக இன விடுதலை என கிளம்பிய மாபெரும் இயக்கம், அதிகாரத்தை கைபற்றி ஈழத்தை விடுவிக்க வேண்டிய இயக்கம் பனை வளர்க்கின்றது

சிங்களனை பிரபாகரன் வழியில் அடித்து விரட்ட வேண்டிய வீரபடை பட்டினத்தாரின் கௌதாம்பினி கோலத்தில் பனை ஏற போகின்றது, பரிதாபம்