சுயமரியாதை..

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்றதும், 786 அல்லாவின் டெலிபோன் நம்பரா என கேட்டதும் அதே கோஷ்டிதான்.

கன்னிக்கு குழந்தை பிறக்குமா? பிறந்தால் இயேசு என ஏற்பீர்களா என்று கூட தொடக்கத்தில் சொன்னார்கள்

கிறிஸ்துவத்தையும் இஸ்லாமையும் அவர்கள் லேசாக சாடினார்கள் ஆனால் எதிர்ப்பு பலமானதும் அமர்ந்தார்கள்

பின் ஒரு கட்டத்தில் அந்த மதங்கள் பக்கமே செல்லாமல் தவிர்த்தார்கள்

கிறிஸ்தவ மூட நம்பிக்கையினை, இஸ்லாமிய நம்பிக்கையினை தொட அவர்களுக்கு அவ்வளவு பயம்

அட அவ்வளவு ஏன்? முத்துராமலிங்க தேவரின் குருபூஜை பக்கமே செல்லமாட்டார்கள்

அவர்கள் ஏரியா எல்லாம் திருப்பி அடிக்காத பிராமணன் மேல் மட்டுமே..

அதன் பெயர்தான் பகுத்தறிவு, ஏழாம் அறிவு இன்னபிற ஏகபட்ட அறிவுகள்

அதெப்படி இனி வரும் மனிதனுக்காக 2 ஆயிரம் வருடத்துக்கு முன் ஒருவன் சாகமுடியும் என்பதும், இன்னும் சில விவகாரங்களை அவர்களின் பகுத்தறிவில் கிளறட்டும் பார்க்கலாம்

அந்த அச்சத்தின் பெயர் சுயமரியாதை..

இது தெரியாமல் கிறிஸ்த இஸ்லாமிய அன்பர்கள் அவரின் பகுத்தறிவினை சுயமரியாதையினை கைதட்டி வரவேற்கின்றார்களாம்

உங்களையும் உங்கள் மதத்தின் புனித கருத்துக்களையும் சுட்டால் எப்படி வலிக்கும்?

அப்படித்தான் இந்துக்களுக்கும் வலிக்கும்

“தன்னை போல் பிறரை நேசி..” என்றார் இயேசு

“உங்கள் வழிஉங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு..” என மற்ற மதத்தாரிடம் கண்ணியமாக கூறியவர் நபி பெருமான்

மத்திய அரசுக்கு நேரம் சரியில்லை

மத்திய அரசுக்கு நேரம் சரியில்லை என்பது அமைச்சர்கள் பேசிய பேச்சுக்களிலும் இன்னும் பல விவகாரங்களிலும் தெரிகின்றது

அதெல்லாம் விட மிகபெரும் விவகாரம் வெடிக்க இருக்கின்றது, இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது, பெரும் அலை வீசலாம், பாஜக அரசு இதை தாண்டி வருவது கடினமே

விஷயம் நீர்மூழ்கி கப்பல் விவகாரத்தில் வெடிக்கின்றது, அதாவது இந்திய கப்பல்படைக்கு 9 நீர்மூழ்கி கப்பல் கட்டவேண்டும்

இவை சாதாரண தாக்குதல் ரகம் என்பதால் சில தொழில்நுட்பங்களை வெளிநாடுகளிடம் பெற்றாலே போதும் நாமே கட்டிவிடலாம்

இந்தியாவில் இதற்கு அதாவது நீர்மூழ்கி கப்பல் கட்ட விண்ணபித்த நிறுவணங்கள் 3

முதலாவது எல் & டி எனும் பரகாசுர கம்பெனி இரண்டாவது மத்திய அரசின் மரைன் கழகம் மூன்றவாது அம்பானியின் நேவல் கம்பெனி

இதில் அம்பானியினை நாம் குறை சொல்லமுடியாது காரணம் ஏற்கனவே கப்பல் கட்டிய கம்பெனி ஒன்றை ரிலையன்ஸ் குழுமம் வாங்கி சில வருடங்களாக கட்டுகின்றது, கொஞ்சம் அனுபவம் உள்ள கம்பெனி

இந்த மூன்று கம்பெனிகளில் ஒன்றுக்குத்தான் கப்பல் கட்ட அனுமதி கிடைக்கும் எனும் நேரத்தில் 4ம் கம்பெனி உள்ளே வருவதுதான் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு சிக்கல்

ஆம் அது அதானியின் கம்பெனி, அவருக்கான கப்பல் கட்டும் அனுபவம் உதயநிதியின் அரசியல் அனுபவத்தை விட பன்மடங்கு குறைவு, அதாவது சுத்தமாக இல்லை

அதானிக்கு கப்பல் உண்டு, துறைமுகங்கள் உண்டு எல்லாமே ஏற்றல் இறக்கல் மாறாக நீர்மூழ்கி கப்பல் எல்லாம் தெரியாது

பின் எப்படி கப்பல் கட்டுவீர்கள் என கேட்டால் அதானி குழுமம் அசால்ட்டாக சொல்கின்றது, எங்களுக்கு அனுமதி இல்லாவிட்டால் என்ன பொதுதுறை நிறுவணங்களோடு சேர்ந்து செய்வோம்

இவர்கள் குறிவைப்பது இந்துஸ்தான் ஷிப்பிங்க் லிமிட்டெட் எனப்படும் எச்.எஸ்.எல்

இந்த கப்பல் பட்ஜெட்டின் விலை அதிகமில்லை அதாவது 45 ஆயிரம் கோடி மட்டுமே

கவனியுங்கள், அதானியிடம் கப்பல் கட்டும் அனுபவம் கிடையாது வசதி கிடையாது, அதற்கான துறைமுகமோ வசதியோ கிடையாது

ஆனால் மத்திய அரசின் நிறுவணத்தை சப்கான்டிராக்ட் எடுக்கும் அளவு அது துணிந்து நிற்கின்றது என்றால் அரசில் அதன் கரங்கள் அப்படி ஊடுருவியிருக்கின்றன‌

நமக்கெல்லாம் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்

அதானிக்கு கப்பல் வேலையினை கொடுத்து அதை இந்த எச்.சி.எல் எனப்படும் அரசு நிறுவணம் செய்வதற்குபதில் நேரடியாக அதை எச்.எஸ்.எல்லுக்கே கொடுத்தால் என்ன?

அதுதான் சரி அதுதான் தர்மம், நாட்டுக்கு அவசியம்

இந்த விவகாரம் வெடிகுண்டாய் வெடிக்கலாம், காங்கிரஸ் இதை கையில் எடுக்கும் என்கின்றார்கள், சுதாரிக்கும் அரசு ராபர்ட் வதேரா எனும் பிரியங்கா கணவனின் மேலான சங்கிலிகளை தளர்த்தி அவனை வெளிநாட்டுக்கு போகலாம் என்கின்றது

எதற்கோ அஞ்சுகின்றது மத்திய அரசு

இந்திரா காலத்தில் அவரின் ஆட்டத்தை அடக்க கலைஞர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், முரார்ஜி தேசாய் என ஏகபட்ட தலைவர்கள் ஒன்றாய் இணைந்தார்கள்

இப்பொழுது அப்படி அல்ல, பாஜகவுக்கு எதிரி காங்கிரஸ் மட்டுமே அவர்களை அடக்கும் வித்தை பாஜகவுக்கு தெரியும் போல‌

திமுக என்பது மாறிவிட்டது, இதை கையில் எடுத்து அரசியல் செய்ய முக ஸ்டாலினுக்கு தெரியாது அல்லது வராது

லாலு, சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட் என யாரும் களத்தில் இல்லை

ஆனால் வலுத்த ஆதாரங்களோடு அதாவது 45 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அதானி வந்து நாக்கை சுழற்றி நிற்கும்பொழுது பெரும் புகைச்சல் வருகின்றது

இருந்து பாருங்கள், இப்பொழுதான் புகைகின்றது இனி வெடிக்கும்

இரண்டாம் சுற்று பாஜக ஆட்சி அவ்வளவு சுமூகமாக நடக்காது போலத்தான் தெரிகின்றது

எனினும் இன்னும் டென்டர் அதானிக்கு ஒதுக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது

இப்பொழுதே அதானியினை தள்ளி வைத்தால் பிழைப்பார்கள் இல்லாவிட்டால் அந்த கோஷத்துக்கு வாய்ப்பளிப்பார்கள்

என்ன கோஷம் “குஜராத்தியன் பிரதமர் , அவரை பிடித்து பல்லாயிரம் கோடியினை தகுதி இல்லாமல் பெரும் தொழிலதிபர் குஜராத்தி

இதை ஏனென்று கேட்டால் நம்மை பிடித்து உள்ளே போடும் அமித்ஷா ஒரு குஜராத்தி

இது இந்தியவா இல்லை குஜராத்திகளின் சாம்ராஜ்யமா?” என்றெல்லாம் கிளம்புவார்கள்

அதை தவிர்ப்பது பாஜகவின் கரங்களிலேதான் இருக்கின்றது

சரி, இந்தியாவில் கசியா விஷயம் வெளிநாட்டு பத்திரிகைகளில் சரியாக வருவதேன்?

45 ஆயிரம் கோடி திட்டம் இது, எவ்வளவு போட்டி இருக்கும்? எவ்வளவு சண்டை இருக்கும்

பாதிக்கபட்டவன் போகிற போக்கில் செய்தியினை தட்டிவிட்டு செல்லாமலா இருப்பான்?

ஏன் அம்மு ஏன்?

அம்மு, உன்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன், நீ அவசரமா இங்க வந்து என்ன கட்டிபிடிச்சிட்டு இருக்கே..

ஏன் அம்மு ஏன்?

என்ன மன்னிச்சிருங்க, கலைஞர் கருணாநிதின்னு ஒரு ஜாம்பவான்கிட்ட சண்டை போட்டவா நான், இப்போ முக ஸ்டாலின் வந்திருக்கார்உதயநிதின்னு ஒருத்தரும் வாராராம், அவங்க கூட‌ எல்லாம் அரசியல் செய்றதுக்கு பதிலா உங்க கூட 4 படம் நடிச்சிட்டு போயிரலாம் ராமு…..”

பிள்ளையார் சிலையினை ஏன் பெரியார் அடித்தார் தெரியுமா?

பிள்ளையார் சிலையினை ஏன் பெரியார் அடித்தார் தெரியுமா?

ஏன்?

இம்மாம் பெரிய உருவம் ஒரு எலிமேல் ஏறியிருக்கு, இது பகுத்தறிவான்னு சொல்லி சொல்லி அடிச்சாரு

இயேசுநாதர் 24X 7 சிலுவையில தொங்கிட்டே இருக்காரு, பாவம் வலிக்காதா? அவரை ஏன் பெரியார் இறக்கிவிடவில்லை

போடா சங்கி..

இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாரின் தத்துவ முத்துக்கள் இதோ…

இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாரின் தத்துவ முத்துக்கள் இதோ…

“தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்.

தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

ஆக வள்ளுவனும் தமிழரில்லை, தொல்காப்பியனுமில்லை அட கம்பனுமில்லை

இந்த மாணிக்கவாசகர் அப்பர் கோஷ்டிகள் எல்லாம் துரோகிகள், அவ்வையாரும் துரோகி

எல்லோரும் மானம் கெட்டவர்கள், அறிவே இல்லாதவர்கள்

பெரியாரும் அவரின் அடிப்பொடிகள் மட்டுமே மானமும் அறிவும் உள்ளவர்கள்

ஆம் வள்ளுவனை விட அவர்களுக்கு அறிவு அதிகமாம்..