பெரும் சிக்கல் உருவாகிவிட்டது

உலக நாடுகளின் பெரு நகரங்களில் ஒரு பெரும் சிக்கல் உருவாகிவிட்டது, அது சடலங்களை அடக்கம் செய்வது

ஜப்பான் போன்ற நாடுகள் அடுக்குமாடி குடியிருப்பு போல அடுக்குமாடி கல்லறைகளை அமைத்தாலும் அது வளர்ந்துகொண்டே செல்கின்றது

சில பெருநகரங்களிலில் கல்லறை நிலம் அதாவது 6 அடி நிலம் வாங்கும் செலவு சில லட்சங்களை தாண்டுகின்றது,

இது எல்லோருக்கும் சாத்தியமில்லை

இதனால் உலகம் இந்துக்களின் பாதைக்கு திரும்புகின்றது

ஆம் எரித்துவிடுகின்றார்கள், எரித்துவிட்டு சாம்பலை ஆற்றில் கலந்துவிட்டு அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

கல்லறை அமைத்து பழக்கபட்ட சமூகம் எரித்த உடலின் சாம்பலை 1 அடி அல்லது அரையடி நிலம் வாங்கி புதைக்கின்றது

கல்லறை அமைக்கும் பழக்கம் குறைகின்றது, பரபரப்பான உலகில் தொலைதூர இடுகாடுகள் கல்லறை பராமரிப்பு என பல விஷயங்களை யாரும் தேடுவதில்லை

நகரின் பெரும் மக்களுக்கு கல்லறை நிலங்களும் ஈடுகொடுக்கமுடியவில்லை, நிலம் விலை விண்ணை முட்டுகின்றது

குழந்தைகள் பிறக்கும் அளவுக்கு இறப்புகளும் நிகழ்வதால் கல்லறை மாபெரும் சிக்கலான விஷயமாக பெருநகரங்களில் ஆகிவிட்டது,

வீட்டையே புறாக்கூடு போல அப்பார்ட்மென்ட் என ஆக்கிவிட்ட நகரங்கள் கல்லறைக்கு எங்கே செல்லும்?

பழைய கைவிடபட்ட கல்லறைகளை என்ன செய்வது என புதிய தலைமுறைக்கும் தெரியவில்லை

இதனால் எரிக்கும் கலாச்சாரம் பெருகிவருகின்றது

“விட்டுவிட போகுதுயிர் ..சுட்டுவிட போகின்றனர்” என்ற பட்டினத்தாரின் வரிகள் அகிலமெங்கும் கேட்க தொடங்கிவிட்டன‌

இந்துக்கள் அன்றே உலகின் மிக எளிமையான ஆனால் தத்துவமான வழியினை உலகிற்கு சொல்லியிருக்கின்றார்கள் என இந்து தத்துவங்களை ஆச்சரியமாக பார்க்க்கின்றது உலகம்

ஆம் இறந்தபின் ஒன்றுமில்லை, கல்லறை அமைப்பது இரு தலைமுறைக்கு சரி அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அது தொந்தரவு, 7ம் தலைமுறையில் வரும் ஒருவனுக்கு அவனின் முப்பாட்டன் சமாதி முதல் தந்தை சமாதிவரை பார்க்க நேர்ந்தால் அவன் சமாதியினையே சுற்றி சுற்றித்தான் வருவான்

ஊரும் உலகமும் சமாதியால் நிறைந்திருக்கும், இதை தடுக்கும் நோக்கில்தான் அன்றே உடலை எரிக்கும் வழக்கத்தை பாரத தர்மம் சொல்லியிருக்கின்றது

அற்புதமான ஏற்பாடு அது, அதன் பலன் இப்பொழுதுதான் உலகுக்கே புரிகின்றது

எல்லோரும் ஒருநாள் சாம்பலாவோம் என நெற்றியில் பூசிதிரியும் சமூகம் அல்லவா இது?

ஒன்றுமே இல்லாதது வாழ்வு எனும் தத்துவத்தை ஆலயம் முதல் சுடுகாடு வரை சொல்லும் மார்க்கம் அல்லவா?

சிவனையே சுடுகாட்டில் ஆடும் கடவுள் என குறித்து வைத்த அந்த மதம் உலகுக்கே பல விஷயங்களில் வழிகாட்ட தொடங்கிவிட்டது

இந்த உலகம் எங்கேயும் முட்டட்டும் மோதட்டும், ஒரு நாள் இந்த தர்மத்தின் ஒவ்வொரு ஏற்பாட்டின் பின்னிருக்கும் நுட்பமான விஷயங்களுக்காக இதை சிலாகித்து அதன் பக்கம் வந்தே தீரவேண்டும்

நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம்???

நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம் என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பும் கூட்டம் அதிகரித்தாயிற்று

அப்படி என்ன எதிர்பார்த்தார்கள் என்பதுதான் தெரியவில்லை, எம்மை பொறுத்தவரை அப்படியேதான் இருக்கின்றோம், மாற்றம் என்பது எம்மில் அல்ல‌

அவர்களுக்கு விரும்பியது கிடைக்கவில்லை எனும் ஒருவித சலிப்பில் செல்கின்றார்கள் செல்லட்டும்

சில இடங்களில் இந்நாட்டை பற்றியும் இந்துமதம் பற்றியும் சில உயர்ந்த மதிப்பீடுகளையும் அது காக்கபடவேண்டும் என்ற கருத்து நம்மிடம் இருக்கலாம் அது அவர்களுக்கு பிடிக்காதிருக்கலாம்

வரலாற்றை தேடுபவன் என்றமுறையில் அரேபியாவினை பார்க்கின்றேன், யாருக்கும் இல்லா பெரும் வரலாறும் பெருமையும் அவர்களுக்கு உண்டு

சுமேரிய நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் என உலகுக்கே வழிகாட்டிய நாகரீகம் அது, கலையும் கணிதமும் அங்கு கொஞ்சி விளையாடின, அரேபிய கவிதை கதை முதல் பண்டைய அரசின் சாதனை வரை அப்படி

ஹமுராபியும் நெபுகாத்நேச்சரும் சிங்கமென வந்த பகுதி

இன்று என்னாயிற்று? எல்லாம் மூடபட்டாயிற்று புதிய மத எழுச்சியில் அவர்களின் நாகரீகம் பாலைவனத்துக்கு அடியில் புதைக்கபட்டு அவர்களுக்குள் சண்டையிட்டு யாரோ வருகின்றார்கள் என்னவோ நடகின்றது, அந்த பூமி தன் தனிதன்மையினை இழந்தாயிற்று

இந்த எகிப்து எப்படிபட்ட நாகரீகம்? தனி இனம் தனி மதம் தனி அடையாளங்களை கொண்டிருந்தது, அதுவும் இப்பொழுது இல்லை

அலெக்ஸாண்டரின் மதம் இன்று கிரீஸில் இல்லை பண்டைய கிரேக்க மதமும் நாகரீகமும் இல்லை

ஜூலியஸ் சீசரின் மதமும் நாகரிகமும் கலாச்சாரமும் உலகாண்ட ரோமை இனத்தின் பெருமையினை கிறிஸ்தவம் அமுக்குவிட்டது

அது மாயன்களை அமுக்கியது, செவ்விந்தியர்களை அமுக்கியது

உலகின் மிகபெரும் சாம்ராஜ்யமான செங்கிஸ்கானின் கல்லறை கூட இல்லை, அவனின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் மதத்தின் கலாச்சாரத்தின் சுவடு கூட இன்றி துடைத்துவிட்டார்கள்

பன்னெடுங்கால தொடர்ச்சிகள் மிக நீண்ட தலைமுறையாக அழியாமல் தொன்மை மாறாமல் பாதுகாக்க்கபடுவது உலகின் மிக சில இடங்களே

அது சீனத்து சில பகுதிகள், ஜப்பானின் சில பகுதிகள் அதன் பின் இந்த அருமை பாரத நாடு

ஆம் உலகில் ஐரோப்பியருக்கு அடிமைபடா சீனாவும் ஜப்பானும் அதை காப்பது பெரிதல்ல‌

கிரேக்கர் தொடங்கி பிரிட்டானியர் வரை சிக்கிய இந்த தேசம் போராடி தன் மதத்தையும் அடையாளத்தையும் தன் தனிதன்மையும் காப்பதுதான் ஆச்சரியம்

புத்தம் சமணம் இஸ்லாம் கிறிஸ்தவம் என எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அந்த தர்மத்தின் ஜோதி அணையவில்லை

கிரேக்கம் , எகிப்து , அரேபியா, மங்கோலியா, மாயன், செவ்விந்தியர் என தன் சமகால பண்டை மதங்கள் அழிந்துவிட்ட நிலையிலும் அதன் ஜோதிமட்டும் தனித்து இந்த உலகில் நிற்கின்றது

பண்டைய பாபிலோன் இல்லை, எகிப்தின் நகரங்கள் இல்லை, கிரேக்க நகரங்கள் இல்லை , பண்டைய கலாச்ச்சார அடையாளங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. மிக தொன்மையாக எஞ்சி இருப்பது காசியும் இமயமலை பகுதிகளே..

அது போதிக்கும் தர்மமுமே

அதை கலாச்சார பெருமையுடன் நாம் காக்க வேண்டுமா இல்லை அரேபியா, எகிப்து, ரோம் போல அடையாளமற்று போகவிட வேண்டுமா?

உருக்கமாக ஒன்று கேட்கலாம்

அழிந்துவரும் உயிரினம் என எப்படி எல்லாம் துடிக்கின்றீகள்? அழிந்து வரும் தாவரம் காடுகள் என எப்படி எல்லாம் வேதனைபடுகின்றது உலகம்

ஒவ்வொரு தாவரத்தின் விதையினையும் சேர்த்து வைக்கின்றது பிரிட்டன், ஒவ்வொரு உயிர்ன் அடிப்படை விஷயங்களை வெளிநாட்டில் சேமித்து வைக்கின்றார்களே ஏன்?

அழிந்தால் உருவாக்கி கொள்ள, ஆம் அந்தபாடு படுகின்றார்கள். இழக்கும் வரை அதன் அருமை தெரியாது ,இழந்துவிட்டு தேடினால் கிடைக்க்கவே கிடைக்காது

அப்படி திரும்ப கிடைக்கா பொக்கிஷங்களில் இந்து தர்மமும் இன்று

அதைத்தான் நாம் சொல்கின்றோம், ஒவ்வொரு மதத்துக்கும் ஏகபட்ட நாடுகள் இருக்கின்றன‌

ஆனால் இந்த பறவைக்கு வேறு எங்கு கூடு உண்டு? இந்த புலிக்கு வேறு எங்கு குகை உண்டு, இந்த மீன் வேறு எந்த நீரில் வாழும்

அழகான பாண்டா கரடி சீனத்துகாடுகளில் மட்டும் வாழ்வது போல, பென்குயின்கள் அண்டார்டிக்காவில் மட்டும் வாழ்வது போல இந்த மதம் இங்குமட்டும்தான் வாழும் , வாழ முடியும்

அதை வாழவிடுங்கள் என்றுதான் சொல்கின்றோம், அது அதன் போக்கில் வாழட்டும் வளரட்டும்

இதில் உங்களுக்கு கேள்வி எழலாம், வட இந்தியாதானே இந்துத்வா நாம் அப்படி அல்ல என்பீர்கள்

நிச்சயம் நம்மை விட அவர்களுக்கு வலி அதிகம், அவர்கள் இழந்தது அதிகம்

சோமநாதபுர ஆலயம் அழிவினை நாம் சந்தித்தோமா? இல்லை ராமனுக்கான இடத்தை நாம் பறிகொடுத்தோமா?

அதுவுமில்லை நம் பக்கம் இந்து ஆலயங்கள் அகற்றபட்டதா? அந்த வலி அவர்களுக்குத்தான் புரியும்

இன்னும் தேசம் பிரிந்து நடந்த கலவரத்தின் வலிகள் அவர்களுக்கு மிக அதிகம், அந்த வலியில் அங்கு சில சத்தங்கள் அதிகமிருக்கலாம்

நமக்கோ நாயக்க மன்னர்கள் அக்காலத்தில் எழும்பியதாலும் மராட்டிய அரசு இருந்ததால் இன்னும் பல விஷயங்கள் சாதகமாக இருந்ததால் வலியான சம்பவங்கள் இல்லை

அவர்கள் வலிபெரிது, அதனால்தான் சீக்கிய சமூகம் இன்றும் இந்தியாவோடே நிற்கின்றது

அகில இந்திய கட்சி என்பதாலும் இந்நாட்டின் தொன்மங்களை காக்க விரும்பும் கட்சி என்பதாலும் அவர்களின் சில கொள்கைகள் நாட்டின் பண்டைய விஷயங்களை பாதுகாக்கும் என்பதாலும் அதில் சில உடன்பாடானவை

எல்லா கொள்கையும் அல்ல, அதுவும் ஊழலுக்கும் குடும்பத்துக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மோடியினை ஏன் வீணாக பழிக்க வேண்டும்?

இங்கு பொக்கிஷமாய் காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய விஷயம் ஏராளம் உண்டு, முந்தைய தலைமுறையிடம் பெற்றதை அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுத்துவிட்டு செல்ல வேண்டும், அழியவிட கூடாது.

உலகின் அதிசயங்கள் என இன்று சொல்லும் 7 அதிசயங்கள் அதன் பண்டைகால 7 அதிசயங்கள் அருகில் கூட வாரா

அந்த பண்டைய 7 அதிசயங்கள் இன்று உலகில் இல்லை, ஆம் இல்லவே இல்லை

அந்த 7 அதிசயங்களை விட மகா அதிசயமும் ஆச்சரியமுமானது இந்துமதம்

அதை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு, நாம் அந்த கடமை எமக்கு இருப்பதாக கருதுகின்றோம்

அந்த கடமை என்பதெல்லாம் இல்லை இந்நாடு எகிப்து ரோம் கிரீஸ் போல தன் அடையாளங்களை தொலைத்து வந்தவழி தெரியாமல் செல்லும் வழியும் தெரியாமல் குழம்பி திரியட்டும் என நினைப்போர் ஓடிகொண்டிருகின்றார்கள்

ஆழமாக நிதானமாக சிந்தித்தால் உங்களுக்கும் உண்மை புரியும்..

நம்மை புரிந்துகொள்ளாதோர் விலகுவதே நமக்கும் நல்லது

அதில் ஒருசிலர் மிக இக்கட்டான நேரத்தில் உதவியவர்கள், அந்த நன்றியினை மட்டும் நாம் மறக்கவில்லை

என்றாவது ஒருநாள் நாம் அவர்களை சந்திக்கும் பொழுது நாம் மாறவில்லை என்பதை எம் கண்ணீர் காட்டும்

இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு

இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு போல் ஆகிவிட்டது, எதை நினைத்து இந்த விளக்கை தொட்டாலும் உடனே ஏதாவது ஒரு பூதம் வந்து வரம் கொடுக்கின்றது

நல்ல விளக்காக இருக்கும் போலிருக்கின்றது

அப்படி இந்த யோகியின் சுயசரிதை புத்தகமும் கிடைத்துவிட்டது, பெரிய புத்தகம் கிட்டதட்ட 1200 பக்கங்களை கொண்டிருக்கின்றது , நேற்றுபடிக்க தொடங்கினேன் பாதி முடித்துவிட்டேன், விரைவில் முடித்துவிடலாம்

நாம் தமிழில் வாசிக்க விரும்புவர்கள், தொழில்முறை புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிக்கலாம் ஆனால் மனதை தொடவேண்டிய விஷயங்கள் தமிழில் வாசிப்பதுதான் பரமானந்தம், வேகமான வாசிப்பு, அதனூடாக விரியும் கற்பனை, எங்கிருந்தோ அதில் வந்து கலக்கும் விஷயங்கள் எல்லாம் வேறு மொழியில் கிடைக்காது

அதனால் ஒரு நண்ப பூதம் தமிழாக்கத்தை கொடுத்தது.

நிச்சயம் ஆச்சரியங்களும், எளிய தத்துவங்களும், ஞானமும் உண்மை போதனையும் நிரம்பிய புத்தகம் அது, படிக்க படிக்க ஆச்சரியம், வியப்பு

பால் பிராண்டன் என்ற வெள்ளையன் உலகெல்லாம் ஞானம் தேடி அலைந்தானாம் எகிப்து பிரமீடு , லெப்னான் குகைகள், வாடிகன் ஆலயம் , சீன மடாலயம், இமயமலை என எங்கெல்லாமோ அலைந்து இறுதியில் நம் திருவண்ணாமலையில் ஞானம் அடைந்தார், சுவாரஸ்ய வரலாறு அது

அவரை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு நம்மை அசரடிக்கின்றது புத்தகம்

இன்னும் முழுக்க முடிக்கவில்லை எனினும் புத்தகத்தில் இருந்து இப்போதைக்கு சொல்லும் விஷயம் இதுதான்

படத்தின் சில காட்சிகளை அப்படியே பாபா படத்தில் வைத்திருக்கின்றார்கள், ஆக ரஜினிகாந்த் அந்த புத்தகத்தை மிக நன்றாக படித்திருக்கின்றார் என்பது புரிகின்றது

அவர் அடிக்கடி இமயமலை செல்ல அந்த யோகியின் வாழ்வும் காரணமாக இருக்கலாம்

மிக அவமானமாக கருதுகின்றது அமெரிக்கா

சவுதியின் மேல் நடத்தபட்ட தாக்குதல் அமெரிக்கா மேல் சில விஷயங்களை கிளப்புகின்றன அதை மிக அவமானமாக கருதுகின்றது அமெரிக்கா

விஷயம் ஒன்றுமில்லை ஹவுத்தி கோஷ்டி அராம்கோ எண்ணெய் நிலையத்தை ஏவுகனை மற்றும் ட்ரோன் மூலம் கடந்தவாரம்தாக்கியது நமக்கு தெரியும் அதற்கு முன்பே சவுதி விமான நிலையம், அரண்மனை என சில இடங்களை தாக்கியது வரலாறு

இதனால் அமெரிக்கா தன் பேட்ரியாட் ரக வான் பாதுகாப்பு சாதனங்களை சவுதிக்கு கொடுத்தது, சவுதி அதை அரோம்கோ பக்கமும் நிறுத்தியது என்கின்றார்கள்

சம்பவத்தன்று 20 பறக்கும் குண்டுகள் அதாவது ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் அரோம்கோ இலக்கினை தாக்க வந்தபொழுது இந்த பேட்ரியாட் சிஸ்டம் எதிர் ஏவுகனைகளை அனுப்பியது அதில் ஒன்றுதான் எதிர் ஏவுகனையினை அழித்தது, மீதி 19 ஏவுகனைகள் இலக்கை தாக்கின‌

ஆக அமெரிக்காவின் பேட்ரியாட் சிஸ்டம் தோல்வி படுதோல்வி என விஷயம் கிளம்ப அவமானத்தில் கண்கள் சிவக்கின்றது அமெரிக்கா

உண்மையில் அமெரிக்காவிடம் உள்ள மிக நவீன சிஸ்டம் தாட் எனப்படும் தடுப்பு சிஸ்டம், அதை ஏன் சவுதிக்கு வழங்காமல் பழைய பேட்ரியாட் சிஸ்டத்தினை வழங்கினார்கள் என்றால் அதுதான் ராஜ தந்திரம், ராணுவ தந்திரம் இன்னும் ஏக இன்னபிற‌

இந்த பேட்ரியாட் சிஸ்டம் 1990 வளைகுடா போரில் இஸ்ரேலில் நிறுவி முதலில் சோதிக்கபட்டது, சதாமின் ஸ்கர் ஏவுகனைகளை சமாளிக்க நிறுவபட்டது, அன்றே இது தோல்விதான் ஆனால் சதாமிடம் ஸ்கர்ட் ரக ஏவுகனை தீர்ந்ததால் பேட்ரியாட்டின் தோல்வி அமுக்கபட்டது

அமெரிக்கா அதை பின்பு தலைகீழாக பழுதுபார்த்து அது சரியானதாக சொன்னது, கூடுதலாக முற்றிலும் வேறு தொழில் நுட்பத்தில் தாட் சிஸ்டத்தை உருவாக்கியது

தாட் சிஸ்டம் அவர்களின் நம்பர் 1 சிஸ்டம் அதை ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவுக்கு எதிராக நிறுவ பார்த்தார்கள், ஜப்பான் தென்கொரியாவிலும் சில முகாமில் உண்டு

ஆனால் சவுதிக்கு பேட்ரியாட் சிஸ்டம்தான் கொடுப்பார்கள், ஏன் என்றால் அப்படித்தான் இஸ்ரேல் உட்பட பலசக்திகள் அதைத்தான் விரும்பும்

இந்த பேட்ரியாட் இப்பொழுது மறுபடியும் பல்லிளித்துவிட்டது, சவுதி அரசர் அமெரிக்காவினை பார்த்து இதானா உங்க டக்கு என்பது போல் பார்க்கின்றார், அமெரிக்கா சாரி டெக்கினிக்கல் பிராப்ளம் என்பது போல் முடித்து கொண்டது

இந்த பேட்ரியாட் சிஸ்டத்தை ரஷ்யாவின் எஸ் 400க்கு பதிலாக துருக்கிக்கி கொடுக்கும் திட்டம் இருந்தது , இது பல்லிளித்ததை பார்த்த துருக்கி ஒருமாதிரி அமெரிக்கா நோக்கி தலையசைக்க அமெரிக்கா கடும் அப்செட்

விஷயம் கசிவதை கண்ட ரஷ்யா சும்மா இருக்குமா? உடனே அது எங்கள் எஸ் 400 இதை எல்லாம் சமாளிக்கும் உடனே வாங்குவீர், வேறு எங்கும் எமக்கு கிளைகள் இல்லை என கிளம்பியாயிற்று

இன்றைய உலகில் பாதுகாப்பான வான் பாதுகாப்பு தடுப்பு என இஸ்ரேலின் அயர்ன் டோம் தவிர ஏதுமில்லை, சும்மா பின்னி எடுக்கின்றது. ஒரே நேரத்தில் 400 ஏவுகனைகள் வந்தாலும் அசராமல் சமாளிக்க்கின்றது அவர்களின் சிஸ்டம்

மற்றபடி அமெரிக்காவின் தாட் மற்றும் ரஷ்யாவின் எஸ் 400 எல்லாம் களத்தில் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை

சரி இஸ்ரேல் எப்படி அயர்ன்டோமை இவ்வளவு அழகாக செய்தது

விஷயம் ஒன்றுமில்லை இதே பேட்ரியாட் சிஸ்டத்தை சதாம் உசேன் காலத்தில் இஸ்ரேலுக்கு கொடுத்ததது அமெரிக்கா, அது தோல்வி

அமெரிக்கா சதாமை தேடிகொண்டிருக்க இஸ்ரேல் மகா பொறுமையாக பேட்ரியாட்டை கழற்றி என்னவெல்லாமோ கற்று அதை ஆரோ எனும் எதிர்ப்பு ஏவுகனையாக உருவாக்கி பின் ரேடாரில் சில மாற்றங்களை செய்து அட்டகாசமான சிஸ்டமாக மாற்றிவிட்டது

அவர்கள் அப்படித்தான், பைபிளில் வரும் 5 தாலந்தை இன்னும் பலமடங்காக பெருக்கிய கூட்டம் அது

சவுதி அப்படி அல்ல ஒரு தாலந்தை புதைத்து வைத்தவகை நாடு, அதாவது எதை கொடுத்தீர்களோ அதை அப்படியே பத்திரமாக வைத்திருந்து பாதுகாத்து திருப்பி தருவார்கள், அவ்வளவு நல்லவர்கள்

ஐரோப்பியர் நூதன கொள்ளை

இந்த திருச்சி திருவாரூர் பக்கம் சில ஐரோப்பியர் நூதன கொள்ளையில் ஈடுபட்டிருகின்றார்களாம், அழகான வெள்ளைகாரி ஒருத்தி இன்னும் சிலருடன் அப்பக்கம் இருக்கும் கடைக்கு செல்வாராம், எனக்கு குறிப்பிட்ட நம்பர் உள்ள 500 ரூபாய் வேண்டும் என கேட்பாராம்

அட வெள்ளையராயிற்றே பணம் அவர்களுக்கு சிக்கலே இல்லையே, நமது குப்பை 500 ரூபாய் அவர்களுக்கு சில 3 டாலர் கூட வராதே, பல லட்சம் செலவழித்து வருபவர்கள் வெறும் 500 ரூபாய்க்கா , அய்யோ பாவம் என பரிதாபட்ட கடைக்காரர்கள் முழு பணத்தையும் கொட்டி தேடுங்கள் என விட்டுவிடுவார்களாம்

அம்மணி தன் அரைகுறை தமிழில் பேசும்பொழுது மொத்த கடையும் இந்த மதராச பட்டணம் எமி ஜாக்சன் போல அவரையே பார்க்க அவருடன் வந்த நபர்கள் 500ரூபாய் நோட்டை தேடுவது போல பல நோட்டுகளை அமுக்கிவிடும்

பின் எங்களுகான நோட்டு கிடைக்கவில்லை சாரி என சொல்லிவிட்டு அடுத்த கடைக்கு ஷாப்பிங் கிளம்பிவிடுவார்கள்

விஷயம் மெதுவாக வெளிவந்து வெள்ளைகாரியினை தேடி கொண்டிருக்கின்றது காவல்துறை

அந்த கோஷ்டி இப்பொழுது எங்கிருக்குமோ தெரியாது.

வெள்ளையர்களின் தொண்டு முகம் மற்றும் கிறிஸ்தவ நடிப்பு முகமே தமிழகத்துக்கு தெரியும், அவர்களிலும் மகா மகா கேடிகள் உண்டு

அதில் ஒரு கோஷ்டி இங்கு வந்து ஆட்டையினை போட்டுகொண்டிருக்கின்றது, விரைவில் சிக்கலாம்

எனினும் நெல்லை பக்கம் இந்த Kasi Lingam என்பவன் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது, ஐரோப்பிய மாப்பிள்ளை ஆகும் கனவில் அவன் ஏதும் இழக்க வாய்ப்பு அதிகம் என்பதால் எச்சரிக்கின்றோம்

“ஹய்யா..ஜாலி”

அமெரிக்காவில் ஐ.நா கூட்டம் நடைபெறும் நிலையில் எல்லா நாட்டு தலைகளும் அங்கே செல்ல தொடங்கிவிட்டன, வழக்கம் போல மோடி “ஹய்யா..ஜாலி” என கிளம்பிவிட்டார்

அங்கு ஐ.நா கூட்டம் மற்றும் இந்தியர் மாநாட்டில் பேசுகின்றார், இரு இடத்துக்கும் டிரம்ப் வரலாம் என்கின்றார்கள்

இந்த கூட்டத்துக்கு ஈரானிய அதிபருக்கு விசா இல்லை என சொல்லிவிட்டது அமெரிக்கா, இதில் ஈரான் கடும் அப்செட்

இதனால் சவுதியினை அடித்தது போல வேறு எங்காவது அடிக்கலாம் அல்லது கப்பலை கடத்தி வம்பிழுக்கலாம் என எதிர்பார்க்கின்றது

சொல்லமுடியாது அவர்கள் சவுதியின் ஸ்டைலில் இஸ்ரேலை அடிக்கலாம் என்கின்றார்கள்

ஆனால் இஸ்ரேலை தொடுவது ஈரானுக்கு அவ்வளவு எளிதாய் இராது, காரணம் அவர்கள் யுத்தத்தை சித்தத்தோடு அனுதினமும் எதிர்பார்ப்பவர்கள்

சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1857ம் ஆண்டு இதே நாளில் நடந்தது

என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான்

ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது

எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் பின்பே பல சீர்திருத்தம் தொடங்கபட்டு அது 1947ல் சுதந்திரமாக முடிந்தது

1857ல் நடந்ததுதான் முதல் இந்திய விடுதலைபோரா என்றால் இல்லை, 1500களில் வாஸ்கோடகாமா கால் வைத்ததில் இருந்து அவனை கொன்று இத்தேசம் தன் போராட்டத்தை தொடக்கியது

ஆங்கிலபடைகளில் இருந்த சிப்பாய்கள் அவர்களை எதிர்த்ததை மருத நாயகம் தொடங்கி வைத்தான்

1806ல் வேலூர் கோட்டை புரட்சியே 1857 புரட்சிக்கு முன்னோடி, ஆனால் வரலாறு வட இந்தியாவினை முன்னுறுத்துவதால் வேலூர் புரட்சி பின்னுக்கு தள்ளபட்டது

உண்மையில் வேலூர் புரட்சி என்பது திப்பு சுல்தானின் வாரிசுகள் நடத்திய வீரப்போர்,

அது இருக்கட்டும் 1857ல் என்ன நடந்தது?

இந்துமதம் மகா உயர்வானது, அது இயற்கையோடு இணைந்தது, கிட்டதட்ட எல்லா மிருகங்களையும் அது தன் மதத்தின் ஒரு அங்கமாகவே இணைத்துகொண்டது.

காகம் பித்ரு, மயில் முருகனுக்கு, சிம்மம் துர்க்கைக்கு, புலி ஐயப்பனுக்கு, யானை பிள்ளையாருக்கு, எருமை எமனுக்கு, கருடன் விஷ்ணுவுக்கு,குரங்கு அனுமாருக்கு, மான் சீதைக்கு, என சகல விலங்குகளையும் தன் மதத்தோடு இணைத்துகொண்ட மதம் அது.

அப்படியானால் இந்துக்கள் எல்லோரும் ஜெயின்களை போல மகா சைவமாக இருந்துவிட்டாலாவது பரவாயில்லை. தமிழ்நாட்டில் அசைவமான மீன் வங்கத்து பிராமணருக்கு சைவமாயிற்று.

இந்துமதம் எல்லாவற்றையும் இப்படி ஏற்றுகொள்கின்றது, சிலவிஷயங்களை சகித்துகொள்கின்றது

1854ல் இந்தியா என்பது கிழக்கிந்திய கம்பெனியின் நிலம், இந்திய அடிமை வீரர்களுடன் திபெத், ஆப்கன் என அக்கம்பெனி கடும் யுத்ததில் இருந்த நேரம். ஆப்கனையும் பிடித்து , அப்படியே உஸ்பெக் பிடிது, ரஷ்யா பிடித்து “அகண்ட இந்தியா” அமைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தது.

காரணம் ஐரோப்பாவிற்கு நிலவழிச்சாலை துருக்கி வழியாக ஐரோப்பா சென்றது, அது அப்பொழுது ஆட்டோமான் துருக்கியர் வசம் இருந்தது, வலுவான அரசு அது, பிரிட்டிசாரை சுக்குநூறாக்கும் பலம் அவர்களிடம் இருந்தது.

பலசாலியிடம் ஒருநாளும் மோதமாட்டான் பிரிட்டிஷ்காரன், இதோ இப்பொழுது சிரியாவில் யாராவது ரஷ்யாவிற்கு எதிராக இறங்குவார்களா? ம்ஹூம்.

இதனால் பட்டுசாலையினை குறிவைத்து திபெத்தையும், நிலம் வழியாக ரஷ்யாவினை அடைவதற்காக ஆப்கனையும் குறிவைத்து கம்பெனியின் யுத்தம் நடந்தது

அப்படி ஆப்கன் போரில் புதுவித தோட்டாக்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு கொடுத்தார்கள், அன்று கீரீஸ் ஆயில் இல்லை, அதனால் தோட்டா சுலபமாக வெளியேற பசு கொழுப்பு அல்லது பன்றிகொழுப்பு பூசபட்ட தோட்டாக்களை கொடுத்தார்கள், சில நேரங்களில் அந்த உலோக உறை பற்களால் இழுக்கபடும் அவசியமும் இருந்தது.

பசு கொழுப்பு இந்து வீரன் வாயிலும், பன்றி கொழுப்பு இஸ்லாமிய வீரன் வாயிலும் பட முடியுமா? பட்டால் சும்மா இருப்பார்களா?

கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கிழக்கிந்திய கம்பெனி அடங்கவில்லை. வீரர்கள் புரட்சியில் இறங்கினர். புரட்சி என்றால் தலைவர்,தளபதி,திலகம் வரிசை புரட்சி அல்ல வெள்ளையரை அடித்துவிரட்டுவது.

அது பெரும் கலவரமாகி 1857ல் சிப்பாய் கலகமுமாகி, கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் அரசால் எடுத்துகொள்ளபட்டு, கம்பெனி முக்காடு போட்டு உட்கார்ந்திருந்தது.

இந்த பசு,பன்றி தகறாறு மட்டும் இல்லை என்றால் ஆப்கன் தாண்டி கிழக்கிந்திய கம்பெனி பிடித்திருக்கும், இந்த நாடும் பிரிட்டிஷ் அரசுக்கு சென்றிருக்காது.

இன்றைய ஊழல் அரசுகளை போல ஜாம் ஜாம் என்றிருந்த கம்பெனி நொடிந்துபோனது இப்படித்தான், அந்த சாம்ராஜியத்தை அசைத்தது பன்றிகறியும், மாட்டுகறியும்.

ஆம் மிக உணர்வுபூர்வமான விஷயத்தை கைவைத்தால் என்னாகும் என்பதை ஆனானபட்ட பிரிட்டிஷ்காரனுக்கே சொல்லிகொடுத்த சம்பவம் இது

அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் ஒன்றாக போராடியிருகின்றார்கள், ஒரு மத ஒற்றுமையும் சகிப்புதன்மை சகோதரத்துவம் இருந்திருக்கின்றது

அதில் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, வரலாறு அதை மறைக்கின்றது என்கின்றது ஒரு தியரி

அதாவது பசுகொழுப்பு இந்துக்களுக்குத்தானே எதிரி உங்களுக்கு என இஸ்லாமியரிடமும், பன்றிகொழுப்பு அவர்களுக்குத்தானே விலக்கு உங்களுக்கு எதற்கு என இந்துவீரர்களிடம் சொல்லபட்டதாகவும் எம் சகோதரர்கள் மனம் புண்பட நாம் நடக்கமாட்டோம் என இருதரப்புமே வாதிட்டதாகவும் அதை கண்டு பிரிட்டானிய கம்பெனி அச்சபட்டதாகவும் தகவல் உண்டு

ஆனால் இவை எல்லாம் வரலாற்றில் இல்லை எனினும் அன்று மத ஒற்றுமை இருந்திருகின்றது, ஒன்றாக சேர்ந்து பிரிட்டனை ஓட அடித்திருக்கின்றார்கள்

அந்த கலகத்தில் உயிரிவிட்டு கிழகிந்திய கம்பெனியின் காட்டாட்சிக்கு முடிவு கட்டி, பிரிட்டன் அரசு வந்து இந்தியா ஓரளவு உரிமை பெற காரணமான அந்த தியாகிகளுக்கு மகத்தான அஞ்சலி

அப்படியே இந்திய மத விவகாரம் எவ்வளவு சிக்கலானது என சொன்ன கிழக்கிந்திய கம்பெனிக்கும் நன்றிகள்

அப்படி இருந்த கிழக்கிந்திய கம்பெனி 1857க்கு எப்படி இருக்கின்றது?

அந்த மாபெரும் சாம்ராஜ்யம் மதவிவகாரங்களை மதிக்கா ஒரே காரணத்திற்காக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி இன்று பெட்டி கடையாக சுருங்கி லண்டன் தெருவில் இருக்கின்றது, ஒரு இந்தியந்தான் வாங்கி இருக்கின்றார்

1857 சிப்பாய் கலகம் தோல்விதான், ஆனால் அடுத்த 90 ஆண்டுகளில் இத்தேசம் விடுதலை அடைய அதுதான் வழிகாட்டிற்று

1857 மே 10ம்தேதி தொடங்கிய கிளர்ச்சி இந்தே செப்டம்பர் 20 1857ல் முடிதது வைக்கப்ட்டது

இதன் பின்பே இந்து இஸ்லாமிய வீரர்களை பிரித்துவைக்கும் வஞ்சக திட்டம் ஆங்கிலேயருக்கு உருவானது, முன்பே திப்பு சுல்தான் வீரர்களை அப்படி பிரித்துத்தான் அவனை வீழ்த்தினார்கள்

மதரீதியாக இந்தியாவினை பிரிக்கும் விஷயம் அதன்பின்பே வேகமெடுத்தது, அந்த விதைகளை விதைத்தான் வெள்ளையன்

அது தேசபிரிவினையில் வந்து கலவரத்திலும் காந்தி கொலையிலும் முடிந்தது

இன்றும் அணுகுண்டுகளுடன் மோத இரு தேசமும் காத்திருக்கின்றது

இதற்கெல்லாம் மூலகாரணம் அன்று 1857ல் இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து செய்த அந்த கிளர்ச்சி

அதில் இருந்து இன்றைய இந்தியர் கற்றுகொள்ளவேண்டியபாடம் ஏராளம் உண்டு, வரலாற்றில் இருந்துதான்பலவற்றை கற்கமுடியும், கற்றுகொள்வதில் தவறில்லை

அசாமில் மட்டும் 19 லட்சம் வெளிநாட்டினர்

அசாமில் மட்டும் 19 லட்சம் வெளிநாட்டினர் உரிய ஆவணமின்றி தங்கியிருக்கின்றனர், அவர்களிடம் அகதி அந்தஸ்துமில்லை உரிய ஆவணமுமில்லை

அவர்கள் உரிய ஆவணங்களை பெற்றுகொள்ள உரிய கால அவகாசம் வழங்கபட்டும் அவர்களால் தங்கள் இந்திய வம்சாவழியினை நிரூபிக்கமுடியவில்லை

கிட்டதட்ட மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவில் பிடிபட்டு திருப்பி அனுப்பபடுவது போன்ற சூழல் இது

அமித்ஷா மிக உறுதியாக ஆவணமில்லாதோர் வெளியேற்றபடுவர் என்கின்றார், அது போக நாடு முழுக்க இங்கு ஆவணமின்றி தங்குவோர் கணக்கெடுக்கபட்டு வெளியேற்றபடுவார்கள் என்கின்றார்

இது நாட்டுக்கு நல்லதா என்றால் நல்லது, நிச்சயம் எல்லா நாடும் இதைத்தான் செய்யும்

அகதிகளை கூட சில நாடுகள் ஏற்காது, அமெரிக்காவே மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க மக்களை ஓட விரட்டுகின்றது

நிச்சயம் 19 லட்சம் பேர் இஸ்லாமியர் என்பதற்காக இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை அப்படி பார்த்தால் மெக்ஸிகோ மக்களும் கிறிஸ்தவர்கள், டிரம்ப்பும் கிறிஸ்தவர்

சிரியா இஸ்லாமிய நாடு அதன் அகதிகளை ஏற்க மறுத்த துருக்கியும் சவுதியும் இஸ்லாமிய நாடு

இது நாட்டு நலனுக்கான நடவடிக்கை, ஆனால் நிச்சயம் மதசாயம் பூசி திசைதிருப்புவார்கள், அமித்ஷா நிச்சயம் அதை காதில் வாங்காமல் நடவடிக்கை எடுப்பார் போல் தெரிகின்றது

எனினும் சட்டத்தில் கொஞ்சம் தர்மமும் மனிதாபிமானமும் கலந்து நடவடிக்கைகள் எடுக்கபட்டால் நல்லது

நீட் தேர்வில் ஒரு மாணவன் ஆள்மாறாட்டம்

இந்த நீட் தேர்வில் ஒரு மாணவன் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிவிட்டான், விஷயம் பற்றி எரிகின்றது.

கடும் கட்டுபாடுகள் நிரம்பிய நீட் தேர்வில் எங்கோ ஓட்டை இருந்திருகின்றது, அதில் இந்த வசூல் ராஜா மற்றும் 3 இடியட் பட பாணியில் தன் டூப்ளிக்கேட்டை எழுத வைத்து சீட் வாங்கிவிட்டான் ஒருவன்

பின் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து அவனை ஈரசாக்கு போட்டுபோட்டு தூக்கி சென்றுவிட்டார்கள்

அதிகாரிகள் துணையுடன் இது நடந்ததா? இல்லை இக்கோஷ்டி திட்டமிட்டு ஏமாற்றியதா என்ற விசாரணை நடக்கின்றது

பொதுவாக நீட் என்றாலே ஒருவருக்கு பெரும் கோபம் வந்துவிடும் அவர் பெயர் முக ஸ்டாலின்

நீட், மருத்துவ படிப்பு என்றாலே அவர் பழைய கேப்டன் படம் போல கண்கள் சிகப்பாகி, டி.ஆர் போல அழுது கொண்டே பிளாஷ் பேக்கில் மூழ்கிவிடுவார், ஆம் அந்த கொடுமைய்யும் வஞ்சகமும் துரோகமும் அவ்வளவு வலியானவை

ஆம் அந்த திருகுவளை முத்துவேலர் அந்நாளில் லத்தீனும் சமஸ்கிருதமும் தெரியாமல் மருத்துவராக முடியவில்லை,

அவருக்கொரு மகன் இருந்தார் அவர் பெயர் கருணாநிதி, முத்துவேலர் அவரை மருத்துவராக்க விரும்பினார்

“மருத்துவர் கருணாநிதி” ஆக விரும்பி லண்டன் மருத்துவகல்லூரிக்கு செல்ல முயன்ற கருணாநிதியினை பிராமண உலகம் கதற கதற அவர் கையில் இருந்த ஸ்டெதெஸ்கோப்பை பிடுங்கிவிட்டு இதோ பேனா போய் ஒழுங்காக தமிழ் எழுது என விரட்டிவிட்டது

இல்லையெனில் புற்றுநோய்க்கு மருந்து கண்டறியும் மருத்துவராக அவர் வந்திருப்பார்

மருத்துவ கருணாநிதி கலைஞர் கருணாநிதி என மாறியது ஒப்படித்தான்

இப்படி தந்தையும் மகனும் டாக்டராகும் கனவினை டெல்லியும் பிராமண சமூகமும் கெடுத்த நிலையில் மாறன் என்பவரும் விரும்பினார், அவரையும் பிராமண உலகம் முரசொலிக்கு எழுத அனுப்பிவிட்டது, மருத்துவ சிகாமணியாகவேண்டியர் முரசொலிமாறன் என்றானார்

இந்த சமூக குடும்ப கொடுமையினை கண்டு மனமெல்லாம் வெறுப்பும் வைராக்கியமும் கலந்து படித்தார் ஸ்டாலின், ஏதும் விடுபட கூடாது என்பதற்காக சில வகுப்புகளை பலமுறை படித்தார்

தன் தாத்தா, தந்தை மற்றும் மாமா போன்றவர்கள் அடையமுடியா மருத்துவபட்டத்தை அடைய கடுமையாக முயன்றார் ஸ்டாலின் ஆனால் அவரை 10ம் வகுப்போடு பள்ளிவிட்டு விரட்டிவிட்டார்கள் பிராமணர், இதில் பிராமணர் மற்று ஐரோப்பிய சதியும் இருந்தது

ஆம் ஸ்டாலின் டாக்டராகி தீரா நோய்க்கெல்லாம் மருந்தை கொடுத்துவிட்டால் எப்படி ஐரோப்பிய பிசினஸ் நடக்கும்? டாக்டர் சாந்தா எனும் பாப்பாத்தியின் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை எப்படி இயங்கும்?

இதனால் நடந்த கூட்டு சதியில் ஸ்டாலின் விரட்டபட்டார், அவருக்கான இடத்தில் தமிழிசை அக்கா படித்து பொறுப்பான டாக்டரானது வேறு விஷயம்

மருத்துவ கனவு நொறுங்கிய வெறுப்பில் ஸ்டாலின் சலூன் கடைக்குசென்று மொட்டை போட்டுவிட்டு அப்படியே திமுக இளைஞர் அணியினை தொடங்கினார்

தன் மகனை அவர் குலகனவுபடி டாக்டராக்க விரும்பினார் , அந்த உதயநிதிக்கு பாடிபில்டிங் சரியில்லை ஸ்டெதெஸ்கோப்பினை தூக்க பலமில்லை என விரட்டிவிட்டது பார்ப்பன உலகம், 4ம் தலைமுறை மருத்துவ கனவும் பார்ப்பன சதியால் நொறுக்கபட்டதை பார்த்து மனமுடைந்தார் ஸ்டாலின்

நோஞ்சான் போலிருக்கும் மகனை என்ன செய்வது என தெரியாமல் இருந்தவர் தனுஷ் என்பவனை பார்த்து மகனை நடிகனாக்கியது வேறு விஷயம்

இனி தன் பேரன் இன்பநிதி மருத்துவராகி தன் குடும்பத்து 4 தலைமுறை கனவினை நிறைவேற்றுவான் என அவர் மகிழ்ந்து, அவனுக்காக சன் ஷைன் எனும் பள்ளியே திறந்து அவனை படிக்க வைத்தார்.

அவன் படித்து முடித்து வெளிவந்ததும் அவனை மருத்துவராக்க திமுகவினரும் மருத்துவ கல்லூரி திறந்து வைத்து தயாராக இருந்தனர்.

ஆம் கலைஞர் கருணாநிதி எழுதி கொடுத்த சம்பாத்தியத்தில் ஸ்டாலினால் ஆங்கில இந்தி பள்ளி மட்டும்தான் கட்டமுடிந்தது, அந்த ஏழையின் நிலை அப்படி.

அதனால் மற்ற திமுக ஏழைகள் ஒன்று கூடி மருத்துவ கல்லூரி கட்டிகொண்டனர்

இன்பநிதி மருத்துவராகி முத்துவேலர் சமாதியில் ஸ்டெதஸ்வைத்து பழிமுடிப்பான் என எதிர்பார்த்த நிலையில்தான் நீட் தேர்வு அறிவிக்கபட்டு இன்பநிதியின் கனவு உடைந்தது

நொறுங்கி சரிந்தார் ஸ்டாலின்

அவரின் நினைவலைகள் சுழன்றன, ஒரு சூத்திர குடும்பம் 5 தலைமுறையாய் மருத்துவகனவினை பார்ப்பன மற்றும் டெல்லி சதியால் இழப்பதை அனுபமாக கண்டார்

மருத்துவ குடும்பம் கலைஞர் குடும்பமாய் மாறியதில் ஒரு தமிழன் டாக்டராக கூடாது அதுவும் சூத்திரன் ஆகவே கூடாது என சதி இருப்பதை கண்டார், பொங்கினார்

ஏகபட்ட மருத்துவர்களை உருவாக்க இப்பொழுது உழைக்கின்றார், நீட் தேர்வினை எதிர்த்து பெரும் போராட்டம் எல்லாம் நடத்த்தினார்.

இப்பொழுது இந்த ஆள்மாறாட்ட மோசடி அவர் பார்வைக்கும் வந்ததும் பொங்கிவிட்டார்.

ஆம் அவர் கலைஞர் புள்ள ஒரு விஷயமும் அவரிடம் இருந்து தப்பமுடியாது

ஆள்மாறாட்ட விஷயத்தினை பார்த்தவுடன் அவர் தாத்தா இப்படி ஏமாற்றபட்டது, அவர் தந்தை விரட்டபட்டது, 10ம் வகுப்பில் இவருக்கு பதிலாக இன்னொருவனை பள்ளி எழுதவைத்து இவரை பெயில் ஆக்கியது போன்ற நினைவலைகள் வந்தன‌

மகன் தன் சினிமாவில் டூப் கலைஞர்களை வைத்து நடிக்கும் காட்சிகளும் நிழலாடின, அது இயக்குநரின் சம்பதமின்றி நடக்காததை உணர்ந்தார்

ஆக இந்த ஆள்மாறாட்ட மோசடியில் மத்திய அரசு இருப்பதை கண்டறிந்தார், ஆம் மத்திய அரசு தேனிக்கு வந்து ஒருவனை எப்படி ஆள்மாற்றியது என்பது அவரின் ஞான கண்ணில் தெரிந்துவிட்டது

விடுவாரா? தப்பமுடியுமா? ஆம் அவர் கலைஞர் புள்ள அல்லவா?

இதோ ஆள்மாறட்ட மோசடியில் மத்திய அரசுக்கு தொடர்பு என கிளம்பிவிட்டார், இன்பநிதியின் மகன் காலத்துக்குள் நீட் தேர்வு நீக்கபட்டு முத்துவேலர் சந்ததியின் முதல் மருத்துவர் உருவாகிவிட வேண்டும் என்ற துடிப்புமட்டும் அவரின் வீர தீர போராட்டத்தில் தெரிகின்றது

ஆம் அந்த எளிய சூத்திர தமிழ் திராவிட குடும்பத்தின் டாக்டர் கனவினை பார்பானியமும் டெல்லி அரசியலும் அவ்வளவு முடக்கியிருகின்றன,

அந்த வலி அவர் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய வலி

இஸ்ரேல் தேர்தல் மறுபடியும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் முடிந்துவிட்டது

இஸ்ரேல் தேர்தல் மறுபடியும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் முடிந்துவிட்டது இனி கடந்த 6 மாதத்தில் 3ம் தேர்தலை அந்நாடு சந்திக்கும் போல தெரிகின்றது

ராணுவம் உளவு பொருளாதாரம் விஞ்ஞானம் என அசத்தும் தேசம் இஸ்ரேல், அதை எல்லாம் அந்த அந்த துறை பார்த்துகொள்ளும், ஆட்சியாளர் யார் என்பதில்தான் அங்கு கடும் விழிப்பு

பொதுவாக உளவு, ராணுவம் இவற்றில் சாத்தவர்கள் மட்டுமே அங்கு வெற்றிபெறமுடியும் இந்த நெதன்யாகு சாதாரண ஆசாமி அல்ல , உகாண்டா எண்டபேயில் இவர் அண்ணன் உயிரை விட்டார்

இவரோ இன்னொரு விமான கடத்தலில் காலில் குண்டு பாய்ந்த நிலையிலும் தீவிரவாதிகளை கொன்றுவிட்டு மக்களை மீட்டவர்

அந்த சாகசகாரருக்கே அங்கே இந்த நிலை, அட இவர் என்ன எகுல் ஓல்மார்ட் என்ற மாபெரும் சாகசகாரர் அங்கு ஊழலுக்கு சிறையில் இருக்கின்றார்

அங்கு அப்படித்தான், “இந்த சாகசம் தீரவீரமெல்லாம் நாட்டிற்கு ஒருவன் செய்யும் கடமை அவ்வளவுதான், நீ செய்யாவிட்டால் இன்னொருவன் செய்வான். விஷயம் உன் ஆட்சி பற்றியது..” என அவர்கள் கடும் கவனமாய் இருப்பார்கள்

ஆனானபட்ட கோல்டா மேயரும், மோஷே தயானுமே அங்கு அரசியலில் ஆடிகொண்டுதான் இருந்தார்கள்

அப்படிபட்ட இஸ்ரேலில் இப்பொழுதும் கூட்டணி ஆட்சியே, அதுதவறினால் மறுபடி தேர்தல்தான்

நாட்டுக்காக பெரும் சாகசங்களை செய்தவர்கள் எல்லாம் அங்கு அப்படி மக்களால் ஆட்டிவைக்கபடுகின்றார்கள், நாடு வளமும் பலமும் கொண்டதாய் இருக்கின்றது

ம்ம்ம் அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும், இந்தியாவில் குறிப்பாக‌ தமிழ்நாட்டில் அதை நினைத்தாலே பெருமூச்சுதான் வரும்