கீழடி காலம் வெறும் 2500 ஆண்டுகளை ஒட்டியதே

கீழடி காலம் வெறும் 2500 ஆண்டுகளை ஒட்டியதே, அது ராமன் கண்ணன் தொடங்கி பைபிளின் ஆபிரஹாம் காலம் தொடர்ந்து வந்த காலங்களை , சிலப்பதிகார காலங்களை ஒப்பிடும்பொழுது வெகு சொற்பம்

காரணம் கிமு 2500 முதல் கிமு 2300 இடைபட்ட காலங்களில் கிரேக்க பேரரசு எழும்பியிருந்தது, கீழடி அதை ஒட்டிய கால‌ பகுதியாய் இருத்தல் வேண்டும்

உலகிலே கீழடியில் மட்டும் தமிழன் வாழ்ந்ததாகவும் அவனுக்கு மதமில்லை என்பதெல்லாம் என்ன அபத்தமோ தெரியவில்லை

சிலப்பதிகார காலம் இதை விட தொன்மையானது, அது இந்திரவிழாவினை சொல்கின்றது, ஆரியங்காவு இயக்கி எனும் இசக்கி அம்மனை சொல்கின்றது இன்னும் எதை எல்லாமோ சொல்கின்றது

ஒரு வாதத்துக்கு கீழடியில் கிடைத்தவற்றை ஆதாரமாக எடுத்தால் கூட சிலப்பதிகாரம் பொய்யா? பொய்யான கதையினையா கலைஞர் புத்தகம் கதை சினிமா என கொண்டாடினார்?

அகத்தியர் காலமென்ன? தொல்காப்பிய காலமென்ன?

ஆழ்வார், அடியார்கள் காலமென்ன?

லேசாக திருப்பி பார்த்தாலே புலவர்களின் வரிசை பலநூறை தாண்டுகின்றது, அதில் எல்லாம் தெய்வங்கள் பெயரும் கடவுளர் பெயரும் பக்கம் பக்கமாக வருகின்றன‌

இவை எல்லாம் சாமிநாதய்யாரால் அச்சிக்கு வந்தவை இன்னும் காணாமல் போனவை எத்தனையோ?

தமிழனின் தொன்ம அடையாளமெல்லாம் கடலில் கிடக்கின்றன, எஞ்சிய அடையாளமே இங்கு ஆங்காங்கே தென்பட்டும் புதைந்தும் கிடக்கின்றன‌

இதில் கீழடியில் வெறும் 2000 ஆண்டுகள் அதாவது இயேசுநாதர் காலத்தையொட்டிய சில வகைகளை வைத்துகொண்டு கும்மியடிப்பது சரியல்ல‌

சரி இவ்விவகாரத்தை இப்படியும் நோக்கலாம்

நாம் முன்பே சொன்னபடி இங்கு இந்துமதத்தை அழித்து புத்தமும் சமணமும் வாழ்ந்தன‌

ஏன் கீழடியில் கிடைத்தவை புத்த விகார சுவராக இருந்திருக்க கூடாது, சில புத்த பிரிவுகளின் படி அவை ஏன் உருவற்ற கடவுளை சுமந்த கட்டடங்களின் இடிபாடாய் இருத்தல் கூடாது?

அப்படியாயின் தமிழனுக்கு மதம் புத்தமதம் என ஏற்பார்களா? உடனே இவர்கள் எல்லாம் நாம் புத்தர்கள், புத்தர் முன்னேற்றே கழகம் புமுக என கிளம்புவார்களா?

கிளம்பி ஈழதமிழரிடம் சென்று ஏ தொப்புள் கொடியே, நாமெல்லாம் பவுத்தர்கள் வீணாக சிங்கள ரத்தகொடியுடன் வம்பு செய்யாதே, நாமெல்லாம் புத்த இனம் என சொல்வார்களா?

முடியுமா? சொல்லட்டும் பார்க்கலாம்..

One thought on “கீழடி காலம் வெறும் 2500 ஆண்டுகளை ஒட்டியதே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s