ஹேக்கிங் நடந்ததா

கூடங்குள அணுவுலையில் சைபர் அட்டாக் எனப்படும் ஹேக்கிங் நடந்ததா என பலத்த சர்ச்சை இப்பொழுதுதான் கிளம்புகின்றது

நாம் இதை நேற்றே சொல்லியிருந்தோம் , அதை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். முக ஸ்டாலினும் அதுபற்றி கேட்டிருந்தார்

அதுவரை அமைதிகாத்த அணுமின் நிலையம் நேற்று மெதுவாக அணுவுலைக்கு வெளியில் இருந்த வாட்ச்மேன் வைத்திருந்த கருப்பு வெள்ளை கம்பியூட்டரில் வைரஸ் புகுந்தது அவ்வளவுதான் என்ற ரீதியில் முடித்துவிட்டார்கள்

நிச்சயம் அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக விளக்கமாட்டார்கள், உண்மையினை சொல்லவும் மாட்டார்கள்

ஆக ஏதோ நடந்திருப்பது உண்மை

இந்த சைபர் தாக்குதலால் அணுவுலைக்கு ஆபத்தா என்றால் இல்லை, அவ்வளவு சொத்தைகாக அணுவுலைகள் அமைக்கபடாது மாறாக தகவல்களை திருடலாம்.

மிக முக்கியமான தகவல்கள் லீக் ஆகலாம் என்பதுதான் உண்மை

என்ன தகவலாக இருக்கும்?

கூடங்குளம் அணுவுலை இயங்கவே இல்லை, உள்ளே உட்கார்ந்து எல்லோரும் சீட்டு விளையாடுகின்றார்கள் எனும் ரகசிய தகவலாக இருக்கலாம். அது பராமரிப்புக்காக அடிக்கடி மூடபடுகின்றது எனும் செய்தி அடிக்கடி வரும்பொழுது அப்படித்தான் தோன்றுகின்றது

சரி, ஒருவழியாக ஒரு கம்பியூட்டரில் வைரஸ் புகுந்துவிட்டது என்பதோடு நிறுத்திகொண்டார்கள்,

இதற்கு நம் அரசியல்வாதிகள் “வைரஸுக்கு மருந்து மாத்திரை கொடுத்தீர்களா? ஏன் முன்பே தடுப்பு ஊசி போடவில்லை. இதற்கு காரணம் மருத்துவர்கள் ஸ்ட்ரைக், ஆக பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்” என கிளம்பாவதை வரை நல்லது.

சர்தார் வல்லபாய் பட்டேல்

சுதந்திர இந்தியாவில் மறக்கமுடியாத மனிதர் அவர், இன்று இந்தியா சுல்தான்கள், மன்னர்கள், நவாப்கள் இம்சையின்றி ஜனநாயக நாடாக இந்தியா இருக்க அவர்தான் முதல் காரணம், இந்தியாவின் பெரும் அடையாளம் அவர்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர்.

காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது பிரிட்டிஷ் அரசாங்கம்

விளைச்சல் இல்லை என சொன்ன விவசாயிகள் கதறல் அவர்களுக்கு கேட்கவில்லை, நிலத்தை ஜப்தி செய்ய வந்தார்கள், இங்குதான் பட்டேல் போராட வந்தார், அது வெற்றியும் ஆயிற்று

அதனை வாழ்த்த வந்த காந்திஜி கொடுத்ததுதான் சர்தார் பட்டம், சர்தார் என்றால் தலைவர் என பொருள்.

அதன் பின் காந்தி பட்டேல் நட்பு வலுபெற்றது. காந்தியின் எல்லா போராட்டங்களிலும் பட்டேல் இருந்தார், எல்லா மாநாடுகளிலும் அவரோடு கலந்துகொண்டார், பல சிறைகளில் அடைக்கபட்டாலும் காந்தியோடு கலந்திருந்தார்

எரவாடா சிறையில் காந்தியினை மிக நன்றாக கவனித்துகொண்டவர் பட்டேல்

ஒருவழியாக சுதந்திரம் கிடைக்கும் காலம் நெருங்கிற்று, இந்திய வரலாற்றின் துரதிருஷ்டம், சுதந்திரம் பெற போராடியதை விட, பெற்றபின்புதான் சவால் அதிகம் இருந்தது

முதல் சிக்கல் அந்த ஜின்னா வடிவில் வந்தது, நேரடி நடவடிக்கை என அந்த ஜின்னா பொறுப்பே இல்லாமல் பாய, இந்தியாவில் ரத்த ஆறு ஓடிற்று

காந்தியின் பேச்சினை கொஞ்சமும் மதிக்காமல் தேசத்தை பிரித்துகொண்டு ஓடினார் ஜின்னா

காந்தி மனமொடிந்து இருக்க , நேரு அவர்களும் சகோதரரே எனும் மிகபெருந்தன்மையில் இருக்க, பட்டேலின் முன்னிலையிலே இத்தேசம் பிரிக்கபட்டது

காந்தி என்னமோ சொல்லி அழுதுகொண்டிருக்க, மிக தைரியமாக தன் அதிரடி கருத்தை இப்படி சொன்னார் பட்டேல்

“உடலில் வளர்ந்துவிட்ட கட்டி மற்ற உறுப்புகளை தாக்குமுன் அப்புறபடுத்தபடுவது போல, இத்தேசத்திற்கு வந்த ஆபத்தை வெட்டி எறிந்துவிட்டோம், இனி இத்தேசம் தன் வழியில் வளர்ச்சி நோக்கி செல்லட்டும்”

ஆம், அடம்பிடித்த ஜின்னாவினை இங்கே வைத்துகொண்டு சதா காலமும் சர்ச்சையினை வளர்ப்பதை விட, சனியனை அடித்து விரட்டுவது சரி என ஆணித்தரமாக சொன்னார் பட்டேல்

காந்தி பட்டேல் மோதல் தொடங்கியது, பட்டேல் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி எனும் சர்ச்சை எல்லாம் வந்தது, கொஞ்சமும அசரவில்லை பட்டேல்

காங்கிரசுக்கும், நாட்டின் பிரதமர் பதவிக்கும் ஒருவரே இருக்கவேண்டும் என்றார் காந்தி, ஆனால் காங்கிரஸ் பட்டேலின் கையில்தான் இருந்தது, அவருக்குத்தான் கட்சி ஆதரவு இருந்தது, நினைத்தால் நொடியில் பட்டேல் பிரதமராகியிருக்க நேரமது

ஆனால் விட்டுகொடுத்தார் பட்டேல், உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர் ஆனார். காந்தியின் சொல்லுக்கு வழிவிட்டார் பட்டேல். பாராட்டவேண்டிய குணம் அது.

இப்பொழுதும் காந்தி திருந்தியபாடில்லை, பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய 55 கோடி ரூபாயினை கொடுக்க சொன்னார், பட்டேல் மறுத்தார். அவர்கள் வெறிபிடித்த நிலையில் இருக்கின்றார்கள், இதனை கொடுத்தால் நம்மீதுதான் பாய்வார்கள், இது கொடுக்க வேண்டிய நேரம் அல்ல என மறுத்தார்

உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி, இறுதியில் காந்தியின் பிடிவாதம் வென்றது, பட்டேலுக்கு மனம் சோர்ந்தது

ஆனால் குஜராத்தின் ஜூனாகத் சர்ச்சையில் அவர் கவனம் செலுத்தினார். அங்கு இஸ்லாமிய மன்னன் இருந்தான் அவன் பாகிஸ்தானோடு இணைய விரும்பினான், மக்களோ இந்தியாவோடு இணைய விரும்பினர்

பெரும் குழப்பம் ஏற்பட்டது, இறுதியில் பொது வாக்கெடுப்பில் மக்கள் தேர்வு இந்தியா என முடிந்தது, பாகிஸ்தானுக்கு பெரும் அவமானம் ஆயிற்று. ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இதற்கு பெரும் காரணம் பட்டேல்

இங்கு சறுக்கிய பாகிஸ்தான் காஷ்மீரில் தேர்தல் என்றாலும் அம்மக்கள் மனம் இந்தியாவிற்குத்தான் செல்லும் என உணர்ந்தது, காரணம் மதவாத பாகிஸ்தானை இஸ்லாமியரில் பலரே விரும்பவில்லை, சோஷலிச இந்தியா , காந்தியும் நேருவும் வாழும் இந்தியா அவர்கள் விருப்பமானது

இதற்கு அஞ்சிய பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது, மன்னன் ஹரிசிங் முதலில் இந்திய உதவியினை கோரவில்லை என்றாலும் பின் இறங்கி வந்தார், இந்தியா காஷ்மீரை மீட்டுதரவேண்டும் என்றார்

இந்தியாவோடு இணைய சம்மதம் என்றால் தயார் என சொன்னது இந்தியா, இந்தியா என்றால் பட்டேல், போரில் பாதி காஷ்மீர் இந்தியா வசம் ஆயிற்று, மன்னரும் கையெழுத்திட்டார்

பட்டேல் உறுதியாக சொன்னார், இதோ மன்னரின் ஒப்பந்தம் அதாவது முழு காஷ்மீரும் மன்னருடையது. மன்னர் இந்தியாவிற்கு தந்துவிட்டார், ஆக பாகிஸ்தான் தான் பாதி காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. நியாய நம்பக்கம் இருக்கின்றது, போர் மூலம் அதனை மீட்கலாம் என வாதிட்டார்

நேருவோ அமைதி பேர்வழி, பாகிஸ்தானிய சகோதரனிடம் பாதி காஷ்மீர் இருப்பதில் என்ன தவறு என்பது போல பேசிவிட்டு போருக்கு சம்மதிக்கவில்லை

ஐ.நா அது இது என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார்.

“மிக பெரும் தவறு செய்கின்றீர்கள் நேரு, இது பிற்காலத்தில் தீரா தலைவலி கொடுக்கும்” என்ற பட்டேலின் எச்சரிக்கையினை புறக்கணித்தார் நேரு.

மனம் நொந்த பட்டேல் காந்தியினை சந்தித்து தான் அரசியலிலிருந்தும், உள்துறை அமைச்சர் பதவியிலும் இருந்தும் விலகுவதாக சொன்னார், காந்தி இதுபற்றி அடுத்தமாதம் பேசலாம் என சொல்லி சமாதான படுத்தினார்

காந்தியினை உயிரோடு சந்தித்த கடைசி பிரபலம் பட்டேல்தான்

கடும் அதிருப்தியில் இந்தியாவும் ஏராளமான இந்துக்களும் இருந்தபோது 1948 ஜனவரி 20ம் தேதி காந்தி மீது குண்டு வீசபட்டது , தப்பினார் காந்தி, அந்த குண்டை வீசிய மதனாலால் எனும் அகதியினை பிடித்து விசாரித்தார்கள், ஆனால் காந்தியினை கொல்ல பல குழுக்கள் அலைந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை

அடுத்தம் 10ம் நாள் காந்தி கோட்சேவால் கொல்லபட்டார்

பழி எங்கு விழுதது என்றால் பட்டேல் மீது விழுந்தது, ஆம் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை பட்டேல் கட்டுபடுத்தவில்லை, அவர்களுக்கு சாதகமாக நடந்தார். அவர்தான் கொலைக்கு பொறுப்பு என்றெல்லாம் கடும் குற்றம் சாட்டபட்டன‌

மனம் நொந்தார் பட்டேல், பாகிஸ்தான் மதவெறியில் பிரிந்தது போல இந்தியாவிலும் எறியும் மதவெறி அவருக்கு வேதனை கொடுத்தது

காந்தியின் கொலை அவர் மனதை பெரிதும் பாதித்தது , ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிகாட்டா இரும்பு மனிதர் அவர் அதனையும் காட்டிகொள்ளவில்லை

அடுத்து அவர் உயிரோடு இருந்தது 2 வருடங்களே

அந்த 2 வருடத்தில் பட்டேல் செய்ததுதான் உச்சபட்ச சாதனை

ஆம் 527 சமஸ்தானமாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா, வெள்ளையன் வெளியேறியதும் பல தாங்கள் சுதந்திர நாடு என அறிவித்தன. அதில் ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இன்னும் ஏராளமான பகுதிகள் குதித்தன‌

அவற்றை எல்லாம் இந்தியாவோடு சேர்த்தார், பேச வேண்டிய இடங்களில் பேசினார், மிரட்ட வேண்டிய இடங்களில் மிரட்டினார், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தார்

பெரும் தொல்லை கொடுத்தது ஐதராபத் சமஸ்தானம், அதன் மன்னர் இணைய மறுத்தார், போருக்கு தயார் என்றார், பாகிஸ்தான் உதவிக்கு வரும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது

அவர் துருக்கி மன்னருக்கு சம்பந்தி என்பதால் பல கணக்குகள் அவருக்கு இருந்தன.

அவருக்கு ஆதரவாக மேற்கு பாகிஸ்தான், கிழக்குபாகிஸ்தான் போல தெற்கில் ஒரு பாகிஸ்தான் வேண்டும் என்ற குரல்களும் எழும்பின‌

ஒருவித பரபரப்பு தொற்றிகொண்ட நேரமது, ஆனால் இந்திய படைகளுக்கு முழு உரிமை கொடுத்தார் பட்டேல் , போரில் சில அழிவுகளுடன் ஐதரபாத் இந்தியாவோடு இணைந்தது

தெற்கு பாகிஸ்தான் எனும் விஷ வித்து அன்றே பிடுங்கி தூர எறியபட்டது

இன்று நாம் காணும் சுதந்திர இந்தியாவின் முழு வடிவம் பட்டேல் எனும் இரும்பு மனிதன் கொடுத்தது

நேருவுக்கு ஏகபட்ட நல்ல குணங்கள் இருந்தாலும், பட்டேல் என்ற மாமனிதன் இல்லையென்றால் இத்தேசம் இந்த வடிவம் பெற்றிருக்குமா? என்பது சந்தேகம்

காரணம் நேரு பெருந்தன்மையான போக்கு கொண்டவர், அது தேசத்திற்கு சில பாதகங்களை கொண்டுவரத்தான் செய்யும், கொண்டு வந்தது

சீன யுத்தமே நேருவுக்கு உண்மையினை கற்று கொடுத்தது

பட்டேல் கொடுத்த எச்சரிக்கையிலேதான் போர்ச்சுகலின் கோவா, பிரான்சின் பாண்டிச்சேரி ஆகியவை பின்னாளில் நமக்கு கிடைத்தன, அதனை காண அவர் உயிரோடு இல்லை

ஆனால் அவர் இந்த அளவு அடித்து நொறுக்கி இந்தியாவினை ஒன்று சேர்க்கவில்லை என்றால் இந்த இணைப்புகள் இன்னும் தாமதமாகியிருக்கும்

ஆய்வாளர்கள் சொன்னபடி இந்தியாவின் பிரதமராக பட்டேல்தான் வந்திருக்க வேண்டும், அவர் இருந்திருந்தால் காஷ்மீர் உள்ளிட்ட பெரும் சிக்கல்கள் முளைத்தே இருக்காது

ஜூனாகத், ஐதராபாத் போல காஷ்மீரும் இன்று அமைதியாக இந்தியாவோடு இருந்திருக்கும்

பட்டேலின் நாட்டுபற்றும், அவரின் தியாக வாழ்வும் நெருப்பு போன்றது. அதில் ஒரு குறை சொல்ல முடியாது

நெருப்பில் ஏது மாசு?

நாட்டுபற்று மிக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது, காஷ்மீர் போரின் பொழுது நாட்டுபற்றை பேசிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்திருந்தது

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது அகதிகளாய் ஓடிவந்தவர்களுக்கு முகாம் அமைத்து உதவிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்தது

இது நாட்டுபற்று மிக்க எல்லோருக்கும் வரும் உணர்வு, பட்டேலுக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை, வராவிட்டால்தான் ஆச்சரியம்

ஆனால் காந்தி கொலைக்குபின் அவர் பார்வை மாறுபட்டது, அதன்பின் அவர் தீரா போராட்டம், உழைப்பு என பரபரப்பாக தேசத்திற்கு வடிவம் கொடுத்து கொண்டிருந்தார், ஆர்.எஸ்.எஸ் பக்கம் எல்லாம் செல்லவில்லை

இந்த நாட்டின் உண்மையான பாதுகாவலர்கள் ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என நம்பினார் பட்டேல், அவர்கள் பணி அரசியல்வாதிகள் குறுக்கிடாமல் நடந்தால் ஒழிய இத்தேசம் நன்றாக இயங்காது என்பது அவரின் கொள்கை

அது மகா உண்மையானதும் கூட‌

இத்தேசத்தின் உண்மையான சவால் சுதந்திரத்திற்கு பின்பே இருந்தது, இத்தேசம் இரண்டல்ல இரண்டாயிரம் துண்டாக உடையும் என உலகம் நம்பிகொண்டிருந்தது

அதனை எல்லாம் பொய்யாக்கி, இந்த மாபெரும் தேசத்தை அமைத்து கொடுத்த அந்த மாபெரும் மனிதனுக்கு இன்று பிறந்த நாள்

பிரதமராகும் வாய்பிருந்தும் கொஞ்சமும் சுயநலமின்றி உள்துறையில்தான் இத்தேசத்தை காக்கும் வாய்ப்பு உண்டு என சொல்லி ஏற்று அதனை சாதித்தும் காட்டியம் மாமனிதர் பட்டேல்

இத்தேசத்தின் சர்தார் எனும் சொல்லுக்கு மிக பொருத்தமானவர் அவர். ஆம் இத்தேசத்தின் தலைவன் அவரே தான்.

இத்தேசம் காலம் தந்த அந்த மாமனிதனை அவர் பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குகின்றது

அவருக்கு மிகபெரும் சிலை திறந்தார்கள், பட்டேல் நிச்சயம் போற்றுதலுக்குரியவர் ஆனால் அவர் பாஜகவுக்கான அடையாளம் என்பது சரியல்ல, அவர் தேச தலைவர்களில் ஒருவர்

ஏராளமான தலைவர்கள் பாடுபட்ட இந்தியாவில் பட்டேல் ஒருவருக்கே வானுயர்சிலை என்பதை ஏற்றுகொள்ளவே முடியாதுதான், பட்டேலே அதை விரும்பியிருக்கமாட்டார்

வல்லபாய் பட்டேல் பல சிறந்த இந்திய தலைவர்களில் பட்டேலும் ஒரு இந்திய அடையாளம் என்பதே மிகச்சரி, ஆனால் மகா வலுவான இரும்பு தலைவர்

இத்தேசம் ஒரே தேசமாக இருக்க வேண்டும் என பாடுபட்ட அந்த மாமனிதனுக்கு தேசத்தின் அஞ்சலிகள்.

பட்டேலின் கனவுபடி இந்தியா ஒரே தேசமாக, பாதுகாப்பான தேசமாக வளர்ந்து நிலைத்திருக்க இத்தேசம் உறுதிமொழி எடுக்கின்றது

ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லலாம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து , பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்கு என்பதிலெல்லாம் பட்டேலுக்கு உடன்பாடே இல்லை. காஷ்மீரை இந்தியாவின் பூரண பகுதியாக்குவதுதான் அவர் கனவு, ஆனால் நேரு விடவில்லை

பட்டேலின் நெஞ்சில் குத்திய முள் அது, இந்த அரசு 370 பிரிவினை நீக்கி அந்த முள்ளை எடுத்துவிட்டது, பட்டேல் சிலையினை விட அவருக்கு மகா பெருமையான விஷயம் அதுதான்

இந்தியாவின் இரும்பு மனிதனுக்கு, கரிபால்டி, பிஸ்மார்க் என்ற உலக‌ வரிசையில் வந்த மாமனிக்கு ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சார்ந்த‌ அஞ்சலிகள்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

இந்திராவின் இந்தியா : ‍ 01

இந்திராவின் இந்தியா : ‍ 01இன்று அன்னை இந்திராவின் நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம்அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம்உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி.இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான்.மோதிலால்,ஜவஹ‌ர்லால்,மவுண்பேட்டன்,காந்தி,பட்டேல்,விஜயலட்சுமி பண்டிட் என சுற்றி, சுற்றி பெரும் அரசியல் ஜாம்பபான்களுடன் வளர்ந்தவர். அரசியல் காற்றைத்தான் அவர் சுவாசித்தார், அரசியலை பார்த்தபடியேதான் வளர்ந்தார்.சீனாவின் துரோகம் நேருவிற்கு தாங்கமுடியாத வலி, அந்த சோகத்திலே இறந்தும்போனார். அதன் பின் வந்த இந்திரா பக்கத்துநாடுகளின் விஷயங்களை எல்லாம் அதிரடியாக கையாண்டதற்கு முதல்காரணம் துரோகி மாவோவும், அவரிடம் ஏமாந்த நேருவும்.இந்திரா இந்தியாவை ஆட்சிசெய்தவிதம் அனைவரும் அறிந்தது, அதனை மறுபடி விளக்கி சொன்னால், இதோ பாய்விரித்து படுத்துவிட்ட காங்கிரசை எழுப்பிவிட ஒருவன் வந்துவிட்டான் என அரசியலாக்குவார்கள், நமக்கு அவரின் அரசியல் வேண்டாம்.அவரின் காலத்தில் விண்வெளி துறை முழு பாய்ச்சல் காட்டியதையும் அந்த அனுபவத்தில் ஏவுகனை மற்றும் செயற்கைகோள் நுட்பத்தில் இன்று இந்தியா பெரும் ஆதிக்கம் செலுத்துவதும் எல்லோரும் அறிந்ததுஆரியபட்டா முதல் இன்றை எம்சாட் வரை அவரின் உழைப்பு இருக்கின்றது. அக்னி ஏவுகனை முதல் இந்நாளைய செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகனை வரை அவரின் அஸ்திவாரம் உண்டுஇந்திராவின் பெரும் சாதனையான இந்திய உளவுதுறை வெற்றிகளை பார்ப்போம்.இந்திய உளவுதுறை “ரா” அவர் காலத்தில்தான் தொடங்கபட்டது, அதுவரை இந்திய உளவு அமைப்பு இந்தியாவிற்குள் மட்டும் உளவுபார்க்கும் (தமிழக உளவுதுறை போல 🙂 ) , இந்திரா காலத்தில்தான் வெளிநாட்டு உளவு பார்க்கும் அமைப்பு கே.என்.காவ் தலமையில் தொடங்கப்ட்டது, அதன் பிராதான பாத்திரம் பி.ராமன்(இந்த தமிழர்தான் இந்திய உளவுதுறையின் பிராதான மூளை).சில உணர்வாளர்கள் உண்டு, ஒரு நாள் நரசிம்ம”ராவ்” படத்தினை கடுமையாக திட்டிகொண்டிருந்தார்கள், விசாரித்ததில் ஈழகுழப்பத்திற்கு “ராவ்”வின் நடவடிக்கை காரணம் என எங்கோ படித்தார்களாம், அவர்கள் கண்ட “ரா” அப்படி.சீனா இந்திராவின் முதல் எதிரி , காலம் மாறியது சோவியத் மாவோ தகறாறில் மாவோ தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையும் மறந்து அமெரிக்க பக்கம் சாய, இந்திரா ரஷ்ய பக்கம் சேர்ந்து அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தார்.இந்திராவும் அமெரிக்க அதிபர் நிக்சனும் நடத்திய பனிப்போர் பிரமாதமானது, இனி ஒரு இந்தியபிரதமர் அப்படி சவால்விட‌முடியுமா என்றால் அது சந்தேகம். நிக்சனே வாய்விட்டு சொன்னார், “இந்திரா ஒரு அரசியல் சூனியக்காரி”இந்திய உளவுதுறையின் பெரும் சாதனைகளில் ஒன்று வங்கப்போர், ஒரு பாகிஸ்தான் எல்லையே எந்நாளும் தொல்லை, இதில் கிழக்கில் ஒரு பாகிஸ்தான் என்றால் தாங்குமா? அவர்களுக்குள் பிணக்கு எழுந்தநேரம் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவின் செல்லபிள்ளையானார், குழப்பம் தலைதூக்க வைத்து இந்தியா ராணுவ நடவடிக்கை வரை வந்து, என்றும் பாகிஸ்தான் மறக்காதவாறு மரண அடிகொடுத்தது, பிண்ணனியில் இருந்தது ரா,ராவின் அறிக்கைபெறும் தலைவர் பிரதமர் இந்திராகாந்திஇந்திராவின் திறமையான ரா, மற்றும் அதிரடி ராணுவம் கொடுத்த அடியில்தான், பாகிஸ்தானுக்கும் அந்த வெட்டு தழும்பு, தினம் கண்ணாடி பார்த்து தடவி தடவி அழுகிறது அது.அதோடு விட்டாரா பூட்டோவை கிட்டதட்ட மனோகரா சிவாஜி போல இழுத்து வந்து சிம்லா உடன்படிக்கை எனும் பாகிஸ்தான் தோல்வி பத்திரத்தில் கையெழுத்துவாங்கிய பெருமை அவருக்கே சேரும்.பின்னர் எல்லையில் போக்கு காட்டிய சிக்கிம் மன்னரை மிரட்டி இந்தியாவோடு சிக்கிமை இணைத்ததில் ராவும் இந்திராவும் மகத்தான வெற்றி பெற்றார்கள்.உச்சகட்டமாக நிக்சனின் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவில் “புத்தர் சிரித்தார்”, அந்த அணுகுண்டு சோதனைக்கு ஏன் அந்தபெயர்?, திபெத்தில் புத்தரை அழவைத்தார்கள் அல்லவா? சப்பைமூக்கர்கள், அந்த புத்தர் இந்தியாவின் அணுவலிமை கண்டு சிரித்தார்.(காரணம் இல்லாமல் இந்தியா எந்தபெயரும் வைக்காது)பின்னர் இந்திராவின் வரிசையில் பர்மா,மாலத்தீவு நாடுகளும் சேர்ந்தன, அல்லது நாங்கள் சமத்துபிள்ளை என ஓடிவந்து காலில் விழுந்தன. கிட்டதட்ட இந்திய துணைகண்டம் அதிகார உச்சம் பெற்றது.இந்திய வலிமைய தாங்கமுடியாத நிக்சன் அரசாங்கம், பொருளாதார தடை எனும் இன்றைய அநியாயத்தை அன்று ரூபாய் மதிப்பு இறக்கம் என மறைமுகமாக பழிவாங்கிற்று, அதில் விழ ஆரம்பித்ததுதான் ரூபாயின் மாகாசரிவு.அதனையும் சமாளித்தார் இந்திரா, தெற்கில் பெரும் ராஜதந்திரியான ஜெயவர்த்தனே. பாகிஸ்தான் வாழ்க,அமெரிக்க நிலைக்க என கோஷம்போட்டபொழுது ஈழபிரச்சினையில் தலையிட்டு அவரை கதறவைத்த வரலாறுகளும் உண்டு.ஈழ தலைவர் அமிதலிங்கத்தை அழைத்து ஒரு குடியரசு விழாவில் தனதருகே அமரவைத்த அந்த‌ ராஜதந்திரம் ஒன்று போதும், எழுந்து நின்று கைதட்டலாம்.இந்திய உளவுதுறைக்கு இரு பெரும் அவமானங்கள் உண்டு ஒன்று கனிஷ்கா விமானவெடிப்பை தடுக்கமுடியாமல் போனது இன்னொன்று ஈழபிரச்சினைய குழப்போ குழப்பு என குழப்பி தள்ளியது, இரண்டும் இந்திரா காலத்திற்கு பிந்தியவை.இந்திராவின் காலத்தில்தான் “ரா” பெரும் நடவடிக்கைகளில் வெற்றிமேல் வெற்றிபெற்றது, அங்குதான் இந்திராவின் வலிமையும், அவரின் ஆளுமையும் தெரிகிறது.இவ்வாறாக சர்வதேசத்தில் உயரபறந்த இந்திரா உள்நாட்டு மக்களால் கொல்லபடும் நிலைக்கு எப்படி தள்ளப்ட்டார் என்பதுதான் சோகமான வரலாறு அதனை ஒரு இந்தியராக எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டியது.(வருவார்..)

இந்திராவின் இந்தியா ‍: 02

இந்திராவின் இந்தியா ‍: 02

அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது ஒரு கூட்டாட்சி அமைப்பின் உச்சதலைவருக்கு தெரியாத விஷயமல்ல‌, சமாளித்தார்.

தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது.

டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் சில உண்மைகள் புரியும்.

அதாவது இந்தியா அப்படித்தான். பல இடங்களில் அதன் போக்கு வித்தியாசமானது, கடுமையானது. இல்லாவிட்டால் இந்தியா இருக்காது.

இந்தியாவிற்கு அதிகம் உழைக்கும் அல்லது உழைத்த இனம் என பஞ்சாபியரை சொல்லலாம், இன்றும் இந்தியராணுவத்தை தாங்கி நிற்பவர்கள், சகல துறைகளிலும் பங்கெடுப்பவர்கள், கடும் உழைப்பாளிகள். மேலாக இந்திய விசுவாசிகள்.

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலிகாலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.

பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.

திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை. ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.

இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை.

விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.

ஒரு கட்டத்தில் உலகநாடுகளையே அடக்கிய இந்திரா? சும்மா இருப்பாரா?, அதிசயமாக உள்நாட்டில் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் பல மாநிலங்களில் உடைய ஆரம்பித்தன,

தமிழகத்தில் திமுக அப்படி உடைந்தது, அவ்வகையில் எடப்பாடியின் பாட்டி இந்திராகாந்தியே

அவ்வாறாக அகாலிதளத்திற்கு எதிராக அவரும் அவரின் வாரிசு சஞ்சயும் கண்டெடுத்த ஒருவர்தான் பிந்திரன்வாலே.

காங்கிரஸ் மேடையில் சஞ்சாயால் அமரவைக்கபட்ட பிந்திரன்வாலே பின்னாளில் “புனித பூமி” (காலிஸ்தான்) அடையாமல் ஓயமாட்டேன் எனும் தீவிரவாதியானான்? எப்படி கதர் பஞ்சாபி துப்பாக்கி எடுத்தார்?

அந்த காலம் அப்படி, அந்த பக்கம் ஆப்கனை விழுங்கி ரஷ்யா பாகிஸ்தானின் எல்லைக்கு வந்தது, இந்த பக்கம் இந்தியா, பாகிஸ்தான் அழுதால் நாட்டமைக்கு தாங்குமா? ஏராளமான பணமும் ஆயுதமும் பாகிஸ்தானுக்கு வந்தது, அவர்களால் பப்பாளி மரத்தில் ஏற்றபட்ட ஒரு அப்பாவி சீக்கியன் பிந்திரன்வாலே.

இது சுதந்திர‌ போராட்டம் என்றார் அவர், பல கொலைகள் அரங்கேறின. இந்துக்கள் குறிபார்த்து கொல்லபட்டனர்.(அப்பொழுதுதானே கலவரம் வரும்). ஊரை ரத்தகறை ஆக்கிவிட்டு பொற்கோயிலுக்குள் ஒளிந்தனர். பொற்கோயிலுகுள் சென்ற இந்திய ஜனாதிபதியே மயிரிழையில் உயிர்தப்பினார்.

துணிந்த இந்திரா ராணுவ நடவடிக்கை தொடங்கினார், பொற்கோயில் ரத்த்தால் கழுவபட்டது, தீவிரவாதம் முடித்துவைக்கபட்டது.

பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று. ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.

அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.

பின்னர் ஏன் படுகொலை நிகழ்ந்ததென்றால், அதுதான் உலக அரசியல். பொற்கோயில் சம்பவத்தில் சீக்கியர்களுக்கு கோபம் இருந்ததே தவிர அவரை கொலை செய்யும் அளவிற்கு அல்ல.

ஆனால் கோபத்தை கூடுதல் பயமும் கூட்டி, இனி இந்திரா இருந்தால் சீக்கியர் வாழ முடியாது என ஒரு பிம்பத்தை உருவாக்கியது பல வெளிநாட்டு சக்திகள்.

சுருக்கமாக சொன்னால் உயிரோடு வைத்து பிந்திரன்வாலேயால் செய்யமுடியாததை அவன் செத்தபின்னால் செய்தார்கள். அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல் ஹக், திட்டம் கொடுத்தது ஒரு பெரிய கை.

அவர்களின் குறி இந்திய எல்லைகளில் பதற்றம் உண்டாக்குவது, அது முடிந்தது இந்திரா படுகொலையில்

(வருவார்..)

இந்திராவின் இந்தியா ‍: 03

இந்திராவின் இந்தியா ‍: 03அந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி இறக்கை கட்டி பறந்தது, அதாவது பாகிஸ்தான் ராணுவத்தினை உள்வாங்க விடுவாரம், பின்னர் விரட்டுகிறேன் என சகலத்தையும் அழித்துவிடுவாராம்.கவனியுங்கள் இது முதலில்வந்த செய்தி, ஒரு வாரத்தில் ஜியா உல்கக் பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபில் படைகுவிக்கிறார், போர் பரபரப்பு பற்றிகொள்கிறது.இங்குதான் சீக்கிய சமூகம் அச்சத்தில் ஆழ்ந்தது, இந்திரா இனி தங்களை அழிக்காமல் விட மாட்டார் என பயத்தில் உறைந்தனர். இனி வாழ முடியாது என அவர்களுக்கு தோன்றிற்று, ஒரு கலாச்சாரமிக்க இனம் அழிவதை விட இருவர் அழிவது தவறில்லை என முடிவாயிற்று, பின்னர் நடந்த கொடூரம் உலகறிந்தது.32 தோட்டாக்கள் இந்திரா மீது பாய்ந்தன.அவரது பலமான உளவுதுறை அவருக்கு சீக்கிய காப்பாளர்களை மாற்ற சொன்னது, அப்படியானால் ராணுவத்து சீக்கியர்களை என்ன செய்வீர்கள் என கேட்டு மறுத்தார், இந்திராகிட்டதட்ட 7 முறை உயிர்தப்பிய இந்திரா, மெய்காப்பளரிடம் சிக்கினார். சஞ்சயின் மரணத்தின் பொழுதே கிட்டதட்ட மரணித்த இந்திரா, இம்முறை தப்பவில்லை.ஒரு திட்டமிட்ட வதந்தி, அதற்கு வலுசேர்க்கும் படைகுவிப்பு என்ற மாயையில் நொந்திருந்த சீக்க்கிய சமூகம் சிக்கியதால் நிகழ்ந்த நிகழ்வு இது, பின்னாளில் அவர்கள் உண்மை உணர்ந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் இந்திய பார்வை இருந்ததே தவிர பஞ்ஞாப் எல்லையில் அல்லவே அல்ல.சீக்கியருக்கு ஆபத்து என இறக்குமதியான வதந்தி, இப்படுகொலை மூலம் உண்மையானது கிட்டதட்ட 2000 சீக்கியருக்கு மேல் டெல்லியில் வன்முறையில் கொல்லபட்டனர்.ஆனாலும் சீக்கிய இனம் உயர்வானது, சகல வலிகளையும் தாண்டி இன்னும் நாட்டிற்காக உழைக்கின்றது.இந்திரா அமரர் ஆனார், இந்தியா பன்னாட்டுகம்பெனிகளின் வேட்டைகாடானது, தனியார் வங்கிகளை ஒழித்து வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா, பின்னாளைய மன்மோகன்சிங் பற்றி உங்களுக்கே தெரியும்அண்டை நாடுகள் எல்லாம் ஆசுவாசமடைந்தன, சில திருமணவீடுகள் அல்லது மறைவு துக்கங்களில் எதிர் அரசியல்வாதிகள் எல்லாம் சந்திப்பார்கள், கேட்டால் நாகரீகம் என்பார்கள், ஆனால் அவர்கள் மனது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.ஜியா உல்ஹக், ஜெயவர்த்தனே என எல்லோரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர், அமெரிக்க மேலிடம் மகிழ்ந்தது.அப்படித்தான் இந்தியா மறைந்தபொழுது, எல்லா தலைவரும் வந்தார்கள்,சூத்திரதாரி பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல்கக் வந்தார், அஞ்சலி செலுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்று சொன்னார்”அல்லா இருக்கிறார், அமெரிக்கா இருக்கிறது, இந்திரா சாம்பலானார் இனி எனக்கென்ன கவலை”இநதியாவும், அவர் உருவாக்கிய உளவுதுறையும் , இந்திரா உருவாக்கிகொண்டிருந்த புதிய இந்தியாவும் கதறி அழுதது, அவர்களோடு அழுதது ஈழதமிழர்களும். ஆம் அவர்களின் மிகபெரும் நம்பிக்கையாக இந்திரா இருந்தார், அவர்களை காக்க எண்ணிய முதல் சர்வதேச தலைவர் இந்திரா ஒருவர்தான்அவ்வகையில் அவர்கள் மனம் விட்டு அழுதனர்.கருணாநிதி அன்று ஒரு அர்த்தமுள்ள வார்த்தை சொன்னார், அது நிதர்சனமான உண்மை”இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல கண்ணீரில் மிதக்கின்றது”(முற்றும்)

இந்திரா போட்டு சென்ற பாதையில்தான் மோடி அரசும் பழனிச்சாமி அரசை பாதுகாக்கின்றது

நேரு என்பவர் மிக மிக பெருந்தன்மையான மனிதர், அவரின் பரோபகார பெருந்தன்மை கட்சிக்கு சரிவரலாம் ஆட்சிக்கு சரிவராதுஇந்தியாவில் இஷ்டத்துக்கு கட்சி தொடங்குவதை தடுக்குமாறு சட்டமியற்ற சுதந்திர இந்தியாவில் சொன்னார்கள், நேரு இது ஜனநாயக நாடு என மறுத்தார். அந்த ஓவர் ஜனநாயகமே இன்று அங்கிள் சைமனார் போன்றவர்களெல்லாம் கட்சி தொடங்க காரணமாயிற்றுஇந்திரா காலத்தில் திமுக பெரும் தலைவலியாயிற்று, காமராஜரும் சரிக்கபட்டார். இனி திமுகவினை வீழ்த்த இன்னொரு திமுக வந்தால்தான் உண்டு என்ற அளவில் நிலமை இருந்ததுதிமுகவின் நகர்வுகள் பிரிவினையினையினை விதைப்பது போலவும் தமிழகத்தில் தேசியத்தை குழிதோண்டி புதைப்பது போலவும் இருந்தன‌தகப்பன் செய்த தவறை வேறுவிதமாக சரிசெய்தவர் இந்திரா, எதிரியினை ஒழிக்கமுடியாவிட்டால் அவனுக்கு சரியான எதிரியினை உருவாக்கி அவனை குழப்பிவிடு என்பது அவரின் ராஜதந்திரம்அவரின் ஒவ்வொரு அணுகுமுறையும் அப்படித்தான் இருந்தது. திமுகவினை அப்படித்தான் அணுகினார் அவர்அவருக்கு வாய்ப்பு எம்.ஜி ராமசந்திரன் வடிவில் வந்தது. கருணாநிதிக்கும் அவருக்கும் பிணக்குகள் உருவான நேரம். ராமசந்திரனை தன் கட்டுபாட்டில் வைத்தல் ஒன்றே இங்கு தான் எக்காலமும் முதல்வராக வழி என கருணாநிதி சித்தித்த நேரம். ம்ம்ம் என்னை வைத்தே ஆட்சிக்கு வந்துவிட்டு என்னை அடக்க பார்க்கின்றாரா? முக முத்து எல்லாம் என் எதிரியா? என ராமசந்திரன் மனதால் புழுங்கிகொண்டிருந்த நேரம்அந்நேரம் மிக சரியாக களம் இறங்கினார் இந்திரா, அவரின் மிரட்டலில் தானாக விழுந்தார் ராம்சந்தர், விளைவு அண்ணா திமுக உருவானது.(நாம் ஒன்றும் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. ராமசந்திரன் எனும் யானையின் அங்குசமாக வலம் வந்தவர் டிஜிபி மோகன் தாஸ். அவர் சொன்னவை இவை)திமுகவுக்கு மிக சரியான தலைவலியினை உருவாக்கினார் அவர், அதிலிருந்து தொடங்கியது கருணாந்தியின் தீரா தலைவலி, கடைசிகாலம் வரை தீரவில்லைராமசந்திரன் கட்சி தொடங்கியதும் அவர் வெல்ல ஆரம்பித்ததும் பின் மிசா காலத்தில் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யபட்டதும் உலகறிந்ததுமிசா காலங்களின் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உட்பட தன் எதிரிகள் வரிசையில் திமுகவினை இந்திரா குறித்து வைத்து அடித்ததும் , அதற்கு பழிவாங்க 1977ல் இந்திராவினை திமுகவினர் தாக்கியதும் ரகசியமல்ல‌அந்த தாக்குதலுக்கு பின் காட்சிகள் மாறின, அதாவது அந்த தாக்குதல் மிசாவுக்கு பழிவாங்க நடத்தபட்டது என்றாலும் திமுகவினர் மனதில் உள்ளூர கட்சியினை உடைத்ததே முதல் காரணம் , மொரார்ஜி தேசாயினை குளிரிவிக்க செய்தது இரண்டாம் காரணம்அந்நேரம் இந்திராவுக்கு பெருத்த அதிர்ச்சி இருந்தது அது ராமசந்திரனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம்ஆம் முதலில் இந்திராவுக்கு அடிமையாக இருந்தவர் மெல்ல கருணாநிதியோடு ரகசிய கைகோர்ப்பில் ஈடுபட்டார். காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ந்துவிட கூடாது எனும் ஒப்பந்தம் அவருக்கும் கருணாநிதிக்கும் ரகசியமாக இருந்ததுஇதை மெல்ல புரிந்தார் இந்திரா, தஞ்சையில் அவர் போட்டியிட வந்தபொழுது ராமசந்திரன் தந்திரமாக ஓடி ஓளிந்ததில் அவருக்கு பல விஷயங்கள் புரிந்தன‌பின் அரசியலை அரசியலாக ஆடினார். ராமசந்திரனே அதிரும் வண்ணம் கருணாநிதியோடு கை கோர்த்தார், கருணாநிதியும் ராமசந்தினை நோக்கி “ஹவ் இஸ் இட்” என சிரித்துகொண்டார்.கருணாநிதி மேல் இருந்த கோபத்தை விட பன்மடங்கு கோபத்தை ராமசந்தர் மேல் காட்ட தொடங்கினார் இந்திரா, ராம்சந்தர் அரசு நிதி சுழலில் சிக்கி மதுகடை எல்லாம் திறந்தது அந்த நேரத்தில்தான்வாய்ப்புக்காக காத்திருந்த இந்திராவுக்கு வழி ஜெயலலிதா வடிவில் வந்தது, வராது வந்த மாமணியாக அவரை கருதி தனக்கு அருகில் அமர்த்தி ராமசந்திரனை நோக்கி புன்னகைத்தார் இந்திராவெடவெடத்த ராம்சந்தருக்கு என்னவோ புரிந்து போக “ஆத்தா மகமாயி” என ஓடிசென்று காலில் விழுந்தார்ஆம் அதுபோக‌ கலைஞருக்கு சர்காரியா கமிஷன் போல ராமசந்திரனுக்கு ரே கமிஷன் உட்பட பல கமிஷன்களை ஏவிவிட்டிருந்தார் இந்திராசர்காரியா மற்றும் ரே கமிஷன்களில் சிக்கி திணறிய கருணாநிதிக்கும் ராமசந்திரனுக்கும் தமிழ்நாட்டில் இமேஜ் கெட்டது. இருவரும் இணையவும் முடியாமல் அதே நேரம் இந்திராவினை பட்டவர்த்தனமாக எதிர்க்கவும் முடியாமல் திணறினர்இந்த நேரத்தில்தான் ஈழ சிக்கல் இங்கு வந்தது, கருணாநிதி சில கோஷ்டிகளையும் ராம்சந்தர் பிரபாகரனையும் பிடித்து கொண்டு அரசியல் செய்தனர் .இந்த இருவரையும் கோமாளிகளாக முன்னிறுத்தி ஈழபோராளி லகானை இந்திராவே பிடித்திருந்தார்அந்த காலகட்டத்தில் எதிர்பாரா விதமாக
இந்திரா கொல்லபட்டார்அந்த அனுதாபத்தில் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டிய காங்கிரஸ் அதிமுகவினை அரியணை ஏற்றிவைத்ததுதாய் வழியில் ராஜிவ்காந்திக்கும் அதிமுகவே விருப்பமாய் இருந்தது, திமுக புலிகளோடு சேர்ந்து செய்த அட்டகாசம் அவருக்கு கடும் அதிருப்தியானதுதிமுகவினை சமாளிக்க‌ தன் தாய் செய்த வழியே சரியானது என முடிவு செய்தவர் அதிமுக பக்கமே சரிந்தார், அவர் சாவிலாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததா என்றால் இல்லை ஜெயலலிதாதான் வந்தார்இனி யார் செத்தாலும் கவனமாக ஆட்சியினை பிடிக்கவேண்டும் என காங்கிரஸ் சுதாரித்த நேரம் காங்கிரஸில் சாக இனி யாரும் இல்லை காரணம் கட்சியே செத்துவிட்டதுஇந்திரா உலக அரசியலை எப்படி ஆட்டிவைத்தார் என்பதை ஆங்காங்கே பார்த்திருக்கின்றோம், நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலையும் புரட்டி வைத்தவர் அவர்தான்இந்திரா துணிந்து திமுகவினை உடைத்திருக்காவிட்டால் இந்நேரம் 50 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்திருப்பார், நடந்திருக்கும் ஊழல்களை நீங்களே முடிவு செய்யுங்கள்ஊழலை விட கொடுமையானது இந்திய எதிர்ப்பு, அப்படி அசுர பலத்தில் திமுக இருந்திருந்தால் புலிகள் உட்பட இந்திய எதிரிகள் இங்கு என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்மிக சரியான வழியினை மிக அட்டகாசமான முன்னேற்பாட்டினை இங்கு செய்துவிட்டு சென்றவர் இந்திராஅதில்தான் இன்றும் திமுகவினை அடக்கி அதற்கு சரியான எதிர்வினை கொடுக்க எதிர்சக்தி இருகின்றது, அது எந்நாளும் இருக்கும்இந்திரா போட்டு சென்ற பாதையில்தான் மோடி அரசும் பழனிச்சாமி அரசை பாதுகாக்கின்றதுஇந்திரா இந்தியாவின் எல்லா திசைகளுக்கும் தலைகீழ் திருப்பம் கொடுத்தவர், அதில் தமிழக அரசியலும் உண்டு

சங்கம் மிக வருந்துகின்றது

தங்க தலைவி ஆத்திரபட்டு ஒருவனை திட்டிவிட்டதாக செய்தி அறியபெற்றோம், கொஞ்சம் தாமதமாகிவிட்டதால் சங்கம் மிக வருந்துகின்றது

அதாவது எவனோ ஒரு மானிட பதர், பூமியின் பாரம், சோற்றால் அடித்த பிண்டம், அறிவு கெட்ட முண்டம், உலகுக்கே தண்டம் தலைவியிடம் உன் மகள் அழகாக இல்லை என சீண்டியிருக்கின்றான்

தலைவியிடம் உள்ள மிக நல்ல குணங்களில் ஒன்று குடும்ப கட்டமைப்பினை பேணுவது, நடிகைகளில் அவர் அளவு அப்படி யாருமில்லை

கவனித்தால் தெரியும் பெரும்பாலும் குடும்ப புகைபடமே வெளியிடுவார், பேட்டிகளில் கூட தன் மகள்களை பற்றி அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பார், மகள்களின்றி அவர் விமானம் ஏறியது குறைவு

அப்படி மகள்களை பார்த்து பார்த்து வளர்க்கும் தலைவி இந்த மூடன் வம்பிழுத்ததும் கொதித்துவிட்டார் அவனை கடுமையாக வறுத்தெடுத்திருகின்றார்

தலைவி இம்மாதிரி விஷயங்களை நம்மிடம் தட்டிவிட்டாலே போதும் நாம் பார்த்துகொள்வோம் , தலைவி உத்தரவிட்டால் சிரியாவின் அல்பத்தாதி என்பவனையே டிரம்புக்கு முன்பாக தூக்கியிருக்கம் சங்கம் இவனை விடுமா?

எனினும் அந்த அற்ப மானிட பதருக்கு, வாசனை தெரியா கழுதைக்கு சங்கம் சொல்லி கொள்வது இதுதான்

ஏ உலகம் அறியா அற்பனே, பெற்றவரை போல் பிள்ளைகள் வந்துகொண்டே இருந்தால் இவ்வுலகில் கடவுளின் இயக்கம் சரிவர நடக்கவில்லை என பொருள்

ஒரு தலைமுறை எழும் பொழுது அடுத்த தலைமுறை சரியும், இன்னொரு பக்கம் ஏதோ ஒரு தலைமுறை எழும்பும், உலக நியதி இது

கடவுளின் இயக்கம் அப்படி சரியாக நடக்கின்றது

மாவீரன் அலெக்ஸாண்ட, நெப்போலியனின் வாரிசுகள் அவர்களை போல் இல்லை. காந்தியின் பிள்ளைகள் ஒன்றும் அவரைபோல் வரவில்லை

ஏன் இந்திராவின் வாரிசுகளே அவரை போல் இல்லை

கம்பன், பாரதி, கண்ணதாசன் வாரிசுகள் எல்லாம் அவர்களை போல் இல்லை. அவர்களை போலவே வாரிசுகளும் வந்தால் கடவுள் படைப்பில் ஏதோ குழப்பம் என்று பொருள்

அதனால் ஒரு அற்புத பிறப்பு பிறக்கும் பொழுது அது உச்சம் பெற்று அத்தோடு சரியும் என்பதுதான் விதி, மிக சில இடங்களில் இரண்டாம் வாரிசு எழலாம் அது மிக மிக மிக அபூர்வமே

ஆக தலைவியிடம் உன்னை போல் உன் மகள் இல்லை என கேட்டால் உன்னை போல் முட்டாள் இல்லை, ஆம் கடவுளால் ஒரே ஒரு குஷ்புவினைத்தான் மானிட வரலாற்றிலே ஒருமுறை மட்டும்தான் படைக்க முடியும் அவரின் வல்லமை அவ்வளவுதான், இன்னொரு குஷ்பு வர இன்னொரு கடவுள்தான் வேண்டும்

புரிகின்றதா?

சரி இதை விட்டு நாம் சொல்வதை செய்வாயா?

நேரே மெரினா பக்கம் செல், அண்ணா கல்லறை ஓட்டினாற்போல் ஒரு கல்லறை இருக்கும் , அங்கு சென்று அய்யா உம் அறிவில் உம் மகன் ஏன் பிறக்கவில்லை? என கேட்டுவிட்டு வந்துவிடு பார்க்கலாம்

(படத்தில் இருக்கும் இந்த இழிபிறப்பே, நல்ல குடும்பத்தில் பிறக்கா நாதாரியே எம் தலைவினை சீண்டியிருக்கின்றான்

இவனை பின்லேடன் , அல்பத்தாதியினை அமெரிக்கா தேடியதை விட கடும் வேகத்தில் சங்கம் தேடுகின்றது

இவன் தலைக்கு 1 பில்லியன் டாலர் சன்மானம் வழங்கபடும்

தலையினை தவிர கண் , காது, மூக்கு, நாக்கு, கைவிரல் என ஒவ்வொன்றாக கொண்டுவந்தாலும் சிக்கல் இல்லை சில மில்லியன் டாலர்கள் ஒவ்வொன்றுக்கும் வழங்கபடும்..

எனினும் இவனை உயிரோடு பிடிக்கவே சங்கம் விரும்புகின்றது, இவனை பிடித்து தலைவி காலில் போட்டு அடித்து துவைத்து இவன் ரத்தத்தால் தலைவிக்கு பாதபூஜை செய்யாமல் சங்கம் ஓயாது.. அடங்காது)

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான்..

அடடே.. திமுகவில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான் உண்டென நினைத்தால் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானுக்கும் ஆதரவாளர்கள் இருக்கின்றார்களேதான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான்..

இது எதில் சென்று முடியுமோ தெரியாது

நடிகர் தேவன் என்பவர் ரஜினி வாழ்வில் விளையாடிவிட்டார், இது எதில் சென்று முடியுமோ தெரியாது

தேவனார் என்ன கொளுத்தி போட்டார் என்றால் “பாட்சா படத்தில் நான் ரஜினியோடு நடித்தபொழுது அவர் என்னிடம் மனம் விட்டு பேசினார்

அப்பொழுது பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்த காலத்தில் நிர்மலா என்றொருவரை காதலித்தாராம்,

பெரும்காதலாம்

அந்த பெண் மருத்துவ மாணவியாம் , ரஜினி நடிகராக அவளே காரணமாம், முதன் முதலில் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியது அவளாம்

ரஜினி சினிமாவுக்கு அலைந்த காலத்தில் அவளை காணவில்லையாம், ரஜினி சல்லடை போட்டு தேடியும் நிர்மலா அகபடவில்லையாம்

இப்பொழுதும் ரஜினி அப்பெண்ணை காண துடிக்கின்றாராம், போன வருடம் கூட தேடினாராம், ரஜினியின் முதல் காதல் அவ்வளவு தூய்மையானது

அவரின் காதல் வெற்றி அடையாமல் போனதில் எனக்கு வருத்தம், ” என சொல்லிவிட்டார்

பாட்சா படம் தனுஷ் தொட்டிலில் பால் குடித்துகொண்டிருந்த பொழுது வந்தது, இப்பொழுது தனுஷ் மகனே பள்ளிக்கு செல்கின்றான் இந்த இரு தலைமுறை காலம் பேசாமல் இருந்த தேவன் இப்பொழுது ஏன் பேசினார்?

நாம் நம் வழக்கமான பல கோணங்களில் இதை பார்க்கலாம்

இந்த தேவன் அதிமுக மற்றும் திமுக கைகூலியாக இருப்பாரோ இல்லை நாம் தமிழர் தும்பிகளிடம் லஞ்சம் வாங்கியிருப்பாரோ?

ஒருவேளை ரஜினியினை மிரட்ட அமித்ஷா சொல்ல சொல்லிய விஷயத்தை இவர் திசைமாறி சொல்லிவிட்டாரோ?

இல்லை ரஜினியே தன் முன்னாள் காதலி “அந்த” லதா அல்ல இந்த நிர்மலா என சொல்லவைத்து வீட்டில் நிம்மதியினை தேடியிருப்பாரோ?

தர்பார் உட்பட பல படங்களில் தனக்கு வாய்ப்பு தரபடவில்லை என்பதால் தேவன் பழிவாங்குகின்றாரோ?

தனுஷோ இல்லை அவரின் மருமகனோ ரஜினியினை பழிவாங்குகின்றார்களோ?

ஒருவேளை அந்த காதல் தோல்விதான் அவரை ஆன்மீகவாதி ஆக்கிற்றோ?

பல மர்மங்கள் இருக்கலாம்

இனி அந்த லதா ரஜினிகாந்துக்கும் ரஜினிக்கும் போதாத காலம் “நானே அந்த நிர்மலா” என பலர் சந்திக்க முயற்சிக்கலாம், ரஜினி சந்தித்துவிட்டு அது நீ இல்லை என்றால் அதனால் என்ன? பின் உங்களை சந்திக்கும் வாய்பினை எப்படி பெறுவதாம்? என ரஜினியினை வெறுப்பேற்றலாம்

அந்த பேராசிரியை நிர்மலா தேவி நானே அந்த நிர்மலா என கிளம்பினால் ரஜினி நிலை என்னாகும்?

சந்தடி சாக்கில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில் யாராவது “அது வெண்ணிற ஆடை நிர்மலாவாக” இருக்குமோ என கிசுகிசுத்தால் என்னாகும்?

ரஜினி நிலை சிக்கல்தான்

எனினும் நம்மால் ஒரே ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகின்றது

ரஜினி சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை மாறாக ஆன்மீகம் மற்றும் இமயமலையினை மிக விரும்புகின்றார், ஆனால் குடும்ப சிக்கல் அதற்கு வழிசெய்யவில்லை

விடுதலையினை தேடிய ரஜினி தேவனுக்கு கண்ணை காட்டிவிட்டாரோ என்னமோ, இதனால் ஆத்திரமடையும் லதா ரஜினி அவருக்கு விவாகரத்து கொடுப்ப்பார் மஹா உற்சாகமாக காவி கட்டலாம் என நினைக்கலாம்

ஆனால் லதா ரஜினிகாந்த் பற்றி ஓரளவு தெரிந்ததால் சொல்கின்றோம், அவர் என்ன சொல்வார் தெரியுமா?

“ஓ மேன்.. வீரா படத்தின் மீனா பாத்திரத்தை நீதான் வடிவமைத்தாயா? இப்பொழுதுதான் உண்மை புரிகின்றது

இவ்வளவு காலம் என்னிடம் விஷயத்தை மறைத்து ஏமாற்றியதால் இன்னும் 20 படம் நடித்து கொடுத்துவிட்டு இமயமலைக்கு போ.. அதுதான் உனக்கான தண்டனை”

இது கூட தெரியாமல் எப்படி அய்யா?

என்னய்யா நீ பொழைக்க தெரியாத ஆளாக இருக்கின்றீர்? தமிழ்நாட்டில் இப்படியா பேசவேண்டும்?

“நான் தாழ்த்தபட்டவன் என்பதாலும் , நான் சிறுபான்மை மதத்தவன் என்பதால் ஓட விட்டு அடிக்கின்றார்கள். இதெல்லாம் சூத்திர கிறிஸ்தவன் எப்படி ஹிட் படம் கொடுக்கலாம் எனும் வன்மம் அன்றி வேறல்ல‌

அஜித்குமார் பிராமணர் என்பதால் அவர் படத்துக்கும் இயக்குநருக்கும் சிக்கல் இல்லை, நானும் விஜயும் ஒடுக்கபட்டவர்கள் என்பதால் மேல் வர்க்கம் சதி செய்கின்றது” என போட்டு தாக்க வேண்டாமா?

இது கூட தெரியாமல் எப்படி அய்யா?