சாய் பல்லவி சார்பாக வரவேற்கின்றோம்

மாமல்லபுரத்துக்கு வரும் உலகின் பெரும் தலைவர்களின் ஒருவரான, சீனாவின் நிரந்தர தலைவாரன ஜின் பெங்கை இந்தியாவின் நடமாடும் மயிலும் சிற்பமுமான எங்கள் தலைவி சாய் பல்லவி சார்பாக வரவேற்கின்றோம்

சீன பட்டை விட, சீன கல்கண்டை விட சீரிளமை மிகுந்த தலைவி பெயரால் உம்மை வரவேற்கின்றோம்

இதைவிட பெரும் வரவேற்பு இந்தியாவில் வேறு எந்த நாட்டு தலைவருக்கும் கிடைக்காது என்பதால் , “ஏ சீன பொதுவுடமையின் தலைமகனான ஜின் பெங்கே நீ வரலாற்றில் கொடுத்து கொடுத்து வைத்தவனாகின்றாய்…

மாவோவுக்கும் சன்யாட்சனுக்கும் டெங் ஜியோ பிங்குக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கின்றது..”

திமுக முகத்தில் கப்பல் கப்பலாக கரியினை பூசியிருக்கின்றது டெல்லி

இதே மாமல்லபுரம் அருகே உள்ளது திருவிடந்தை, அங்குதான் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சர்வதேச ஆயுத கண்காட்சி நடந்தது, உலக நாடுகளின் முன்னணி நிறுவணம் எல்லாம் கலந்துகொண்ட மிகபெரிய கண்காட்சி அது

அதில் தலைமையேற்று சிறப்புரை ஆற்ற வந்த மோடியினை இப்படி எல்லாம் சொல்லி விரட்டி, கருப்பு கொடி , கருப்பு பலூன் எல்லாம் பறக்கவிட்டு கடும் அழிச்சாட்டியம் செய்தது திமுக‌

எப்படி சொல்லி விரட்டியது?

“‘ரஃபேல் விமான பேர ஊழல் மோடியே திரும்ப போ”, “களவாணி மோடியே திரும்பி போ”, “”இது பெரியார் மண் – இங்கே ஹிந்துத்வா பேச வந்தால் விரட்டி அடிப்போம், திரும்பி போ” “‘மோடி Go பேக்” என ஆடி தீர்த்தார்கள்

உலக நாடுகள் எல்லாம் கூடி இருக்க, தன் சொந்த நாட்டு மண்ணில் பாரத பிரதமரான மோடி தலைகுனிந்து செல்லும் நிலை அன்று இருந்தது

ஒரே வருடத்தில் காட்சிகள் மாறிவிட்டன‌

அதே மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் சகிதம் வருகின்றார் மோடி, இன்னும் நீட் களையபடவில்லை, பாஜக தன் இந்துத்வா கொள்கையினை விட்டுவிட்டதாக சொல்லவில்லை, எதுவுமே மாறவில்லை

சொல்லபோனால் திமுகவின் எதிர்ப்பை புறந்தள்ளி காஷ்மீரில் சாதித்திருக்கின்றது, நிச்சயம் திமுக பொங்க வேண்டிய நேரமிது

ஆனால் திமுக தன் கருப்பு கொடியினை கலைஞர் சமாதிக்குள்ளும் , கருப்பு பலூனை பெரியார் திடலுக்குள்ளும் ஓளித்து வைத்துவிட்டு “சீன அதிரபரே வருக, சீனி கல்கண்டு தருக” என வரவேற்றுவிட்டது

திமுக தலமை நாங்குநேரி திண்ணையில் போய் அமர்ந்தாயிற்று

வைகோ என்பவரை ஐஹோர்ட்டில் ஹேவியஸ் கார்பஸ் மனுபோட்டு தேடவேண்டும் போலிருக்கின்றது, திருமா என்பவர் கீழடிக்கு கீழே 100 அடி தோண்டி ஒளிந்து கொண்டார்

எந்த மகாபலிபுரத்திற்கு வரும்பொழுது அவரை திமுக விரட்டியதோ அதே மகாபலிபுரத்துக்கு வருகின்றார் மோடி,

காட்டில் சிங்கம் கம்பீரமாக வரும் அந்த சாயல், பின் என்ன அந்த வசனம்தான்

“நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எப்படிபோனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு,

வாங்கடா..டேய்.கருப்புகொடி கோஷ்டி எல்லாம் வாங்கடா. இது என் நாடுடா” என தில்லாக வருகின்றார் மோடி

ஆழ யோசியுங்கள்

அதே மாமல்லபுரம் அதே மோடி, இம்முறை கொசுவின் ரீங்காரம் கூட திமுகவிடம் இல்லை

ஆக வெற்றி யாருக்கென்றால் சாட்சாத் மோடிக்கே, நிச்சயம் படுபயங்கரமான பதிலடி.

திமுகவின் முகத்தில் ஓங்கி திருப்பி குத்திய லாவகம்

அடுத்து மோடியின் விஜயம் கோபாலபுரத்தின் வேணுகோபாலசாமி ஆலயமாக இருக்கலாம், ஆம் கருணாநிதி வீட்டின் அடுத்தால் இருக்கும் அந்த ஆலயம்

அதற்கு அடுத்து கலிங்கபட்டி, சிதம்பரம் என பல இடங்களுக்கு அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர், பிரிட்டன் பிரதமருடன் மோடி வரலாம்…

திமுக முகத்தில் கப்பல் கப்பலாக கரியினை பூசியிருக்கின்றது டெல்லி என்பது மட்டும் நிஜம்..

இனி மானம், சுயமரியாதை இதெல்லாம் பற்றி பேசினால் உலகமே வாய்விட்டு சிரிக்கும், திமுகவின் மானமும் சுயமரியாதையும் சீன அதிபரை வரவேற்று சிரித்து கொண்டிருக்கின்றது

மகா நுட்பமான திட்டம் தீட்டபட்டிருக்கலாம்

இயக்குநர் வெற்றிமாறன் நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் அவர் மேல் விசாரணை தேவை என இந்துமகா சபை புகார் அளித்துள்ளது

இப்படம் சமூக அமைதியினை கெடுக்கும் நோக்குடன் எடுக்கபட்டிருப்பதாக அவை புகார் அளித்திருக்கின்றன‌

வெற்றிமாறன் மேல் இந்துமகா சபை சந்தேகத்தை கிளப்பும் நேரம் எமக்கும் ஒரு சந்தேகம் வருகின்றது

எமக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால் இந்துமகா சபைக்கும் தனுஷூக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம், படம் இன்னும் பிய்த்து கொண்டு ஓட ஏதோ மகா நுட்பமான திட்டம் தீட்டபட்டிருக்கலாம்.

சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது?

சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது என்பது தெரியவில்லை ஆனால் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது

தூத்துகுடி மாவட்டம் உடன்குடியில் ஒரு அணல் மின் நிலையம் அமைக்க அதிமுக ஆட்சி முடிவு செய்தது ஒப்பந்தத்தை பெற சீன கம்பெனி வந்தது

அவர்கள் உலகெல்லாம் தொழில் செய்பவர்கள் இங்கும் வந்தனர், தமிழ்நாட்டில் இரு பட்ஜெட்டை பார்த்து குழம்பி இது என்ன இருபட்ஜெட் என கேட்டனர். ஒன்று அணல் மின் நிலையத்துக்கு நாங்கள் கொடுக்கும் தொகை இன்னொன்று அதே அணல் மின் நிலையத்துக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை என அதிமுக அரசு சொன்னவுடன் ஓடிய சீன அதிகாரிகளை அதன் பின் காணவே இல்லை

அப்படியே கள்ளதோணியில் ஏறி ஓடிவிட்டார்களோ எனும் அளவு அலறி அடித்து ஓடினார்கள், சம்பவம் 2015ல் நடந்தது

மறுபடியும் சீன கம்பெனியினை பார்த்து கண்ணடிக்க போகின்றார்களோ என்னமோ..

சீன அதிபரை ஆளாளுக்கு வரவேற்கின்றார்கள், அதில் முக்கியமானவர் முக ஸ்டாலின். அவரை வரவேற்று அறிக்கை வாசித்துவிட்டு நான்குநேரி திண்ணையில் சென்று அமர்ந்துவிட்டார்

ஒருவேளை வருங்காலத்தில் திமுக ஆட்சியிலும் அணல் மின் நிலையம் கட்டும் கனவு இருக்கலாம் போல…

மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞர் வடிவேலு

எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எத்தனை தலைமுறை மாறினாலும் சீனனுக்குள் ஒரு சூதாடி உறங்குவது போல‌ எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது, அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான்.மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு பல‌ ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன‌குறிப்பாக ஆதித்த்யா சேனல் மீது அவர் வழக்கே தொடுக்கும் அளவிற்கு அவரை நம்பியே நடந்துகொண்டிருக்கின்றது.இன்றும் முகநூலில் அதிகமாக பதிவிடபடுவது அவர் பாணி நகைச்சுவையும் அவர் படமுமே., அவர் இல்லாவிட்டால் மீம்ஸும் இல்லை காமெடியும் இல்லைஎல்லா இடங்களிலும் இன்னும் அவர் காமெடிதான் ஓடுகின்றது, அவ்வளவு ஏன் டாஸ்மாக்கில் கூட அவர் ஸ்டைலில்தான் பாட்டில் உடைத்து குடித்துகொண்டிருக்கின்றார்கள்.புகழின் உச்சத்தில் சில அடிகளை தவறாக எடுத்துவைத்ததின் விளைவு, அரசியலும் சினிமாவும் கலந்த தமிழகத்தில் அவர் தடுமாறிவிட்டார்.கலைஞர் அரசியல் வித்தியாசமானது, மக்கள் அபிமானம் பெற்றோர் யாராயினும் அருகில் அமர்த்திகொள்வார். ஆனால் அவர்களால் கலைஞரின் இலக்கினை பூர்த்தி செய்யமுடியாமல் போகும்போது அவர்களை தூக்கி எறியவும் அவர் தயங்குவதில்லைஒருமாதிரியான ஆசாமி அவர். இதை முதலில் உலகுக்கு சொன்னது ராமசந்திரன் அடுத்து உரக்க சொன்னவர் டி.ராஜேந்தர் இன்னும் பலர்பின்னாளில் இதனை வடிவேலு புரிந்துகொள்ளும் போது நிலமை எல்லை மீறி சென்றிருந்தது. அதுவும் கலைஞர் விஜயகாந்த் வீட்டு வாசலில் தவமிருந்தபொழுது வடிவேலு நிலை சொல்லி தெரியவேண்டியதில்லைசினிமா உலகில் அரசியல் முத்திரை விழுந்தபின் ஒரு மாதிரியான விளைவுகள் வரும். காரணம் சினிமாவால் அமைந்த தமிழக அரசு எப்பொழுதும் அதன் மீது ஒரு கண் வைத்துகொண்டே இருக்கும், இன்னொன்று அரசியலை மீறி இனி சினிமா ஜெயித்துவிடாதவாறு பலகண்ணிகள் வைத்தாகிற்றுஇவ்வளவிற்கும் முதல்வர் ஜெயலலிதாவே ஒரு கூட்டத்தில் “வடிவேலு மக்கள் சொத்து, மக்களை அவர் மகிழ்விப்பதை எனது அரசு ஊக்குவிக்கும் ” என பகிரங்கமாக பச்சைகொடி காட்டியும் நிலமை சுமூகமாக இல்லை.சினிமா உலகில் ஒதுங்கிய அல்லது ஒதுக்கபட்டபின் மறுபடி விட்ட இடத்தினை பிடிப்பது பெரும் சவால் எம்ஜிஆர் ஒருவர் செய்தார், அதன் பின் சந்திரபாபு, சாவித்திரி, மோகன், ராமராஜன், பாக்யராஜ் போன்ற யாராலும் அச்சாதனையினை செய்யமுடியவில்லைஆனால் வடிவேலுவிற்கு வாய்ப்பு இருக்கின்றதுஅவரும் கொஞ்சம் மாறவேண்டும், ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதெல்லாம் விட்டு கொஞ்சம் இறங்கி வந்தால் இன்னும் நல்லது, அப்படி மாறி இருக்கின்றார் என்கின்றார்கள், பார்க்க்கலாம்காரணம் தமிழன் தான் இழந்த கிராமத்து எளிய, யதார்த்த, வெகுளியான பாத்திரத்தினை அவனிடம் தேடுகின்றான், அந்த நடையில், அந்த பேச்சுமொழியில், அந்த ஸ்டைலில் தன் குடும்பத்தில், உறவினர்களில் ஒருவனாக , சொந்த கிராமத்துகாரனாக அழகாக வந்து ஒட்டிகொள்கின்றார் அவர்.வடிவேலுவினை தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை
மலேசியாவில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருக்கின்றேன், பொதுவாக மக்கள் அமைதியாக படம்பார்ப்பார்கள், அதில் பெரும்பான்மையான மலேசிய தமிழர்களுக்கு தமிழ் எழுததெரியாது எனும் அளவிற்கு நிலை.ஸ்டைலாக எத்தனையோ நடிகர்கள் வருவார்கள், படித்த பாத்திரம், அதிரடி பாத்திரத்தில் வருவார்கள், யார் முகத்திலும் சலனம் இருக்காது, ஒரு சொடுக்கு போடும் ஓசையும் கேட்காதுஆனால் “அப்புறம்…..” என வடிவேலு திரையில் வந்துவிட்டால் போதும், அரங்கம் அதிரும், தானாக அவரை கைதட்டி வரவேற்பார்கள்எப்படி என்றால்? அதேதான் அந்த தமிழக கிராமத்து மனம் அவர்களில் இருக்கின்றது, அவரை கண்டதும் அது அடையாளம் கண்டுகொள்கின்றது, நம்மில் ஒருவன்
மலேசியா என்றெல்ல, தமிழர்கள் வாழும் நாடெல்லாம் அவருக்கு வரவேற்பு அப்படி.காரணம் அவர்களின் பூர்வீகம் எளிய, வெகுளியான கிராமம். அவர்களின் தாத்தா பாட்டி, அல்லது அம்மா அப்பா எளிய தமிழக கிராமத்துகாரர்கள். மனதில் எங்கோ ஒளிந்திருக்கும் அந்த கிராம நகைச்சுவையே, மக்களின் அந்த ரசனையேதான் வடிவேலுவின் வெற்றிக்கு பெரும் காரணம்அன்றே நடிகர்களுக்கு சொன்னார் கண்ணதாசன் “கலைஞர்கள் எந்த கட்சியிலும் சேராமல் இருப்பது நல்லது”ரஜினி அதனைத்தான் இன்றுவரை செய்துவருகின்றார் அவர் பட்டண வாழ்க்கைக்காரர், நகரத்து அரசியல் சூது தெரிந்திருக்கின்றதுவடிவேலு கிராமத்து எளிய கலைஞர், அரசியல் சேற்றில் சிக்கி விட்டு இப்பொழுதுதான் தெளிந்துகொண்டிருக்கின்றார்.எத்தனை கனத்த கவலையுள்ள மனமாக இருந்தாலும் அவரின் காட்சிகளை கண்டுவிட்டால் மனம் எளிதாகிறது, கிராமத்து உறவுகளுடன் கலந்துவிட்ட ஒரு திருப்தி கிடைத்துவிடுகின்றதுஒன்று மகா நிச்சயம், அவருக்கு இன்னும் வரவேற்பு இருக்கின்றது, ஒரு ரவுண்ட் அல்ல பல இன்னிங்க்ஸ்கள் அவர் ஆட்டத்தை காண மக்கள் ரெடி நிச்சயம் வருவார், அதே வடிவேலுவாக வருவார், காத்திருப்போம்.ஆயிரம் இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் ஹீரோக்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் கிராமத்து கதைகளுக்கு ஒரே ஒரு பாரதிராஜாதான், இசைக்கு ஒரே ஒரு இளையராஜாதான்கிராமத்து வரிகளுக்கு ஒரே ஒரு வைரமுத்துத்தான்அப்படி அந்த எளிய வெகுளியான, ஜனரஞ்சகமான காமெடிகளுக்கு கிராமத்து பாமரனாக ஒரே ஒரு வடிவேலுதான்.அவருக்கான ரசிகர் கூட்டம் அப்படியே இருக்கின்றது, அவருக்கான இடமும் அப்படியே காலியாகவே இருக்கின்றது அதனால் சொல்லலாம்பழைய வடிவேலுவாக வாருங்கள் அய்யா, அப்படியே வரவேற்க தமிழகம் தயாராகவே உள்ளது
பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அப்படியே இழுக்கின்றோம்வாருங்கள் அய்யா, இந்த கிராமத்தை தொலைத்துவிட்டு காங்கீட் காட்டு சந்துபொந்துகளில், அக்கம் பக்கம் யாரென்றே தெரியாத வாழ்க்கையில் வாழ்பவர்களுக்காவது வந்து,கிராமத்து எளிய மனிதனை திரையிலாவது காட்டுங்கள், அது உங்களை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.அந்த கலைஞனுக்கு இன்று பிறந்தநாள், அவருக்கு கலகலப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்

மனோரமாவிற்கு ஈடாகுமா?

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள்

சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார்.

அவரின் அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை

மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று பெயரிட்டுகொண்டவர் மனோரமா.

இயற்பெயர் கோபிசாந்தா, தஞ்சாவூர் அருகே பிறந்தவர், குடும்பம் வறுமையில் சிக்க பின் பள்ளத்தூரில் குடியேறிய குடும்பம் அது, 12 வயதிலே நாடக கம்பெனிகளில் நடிக்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில் இவர் பெயர் பள்ளத்தூர் பாப்பா.

வைரம் நாடக சபாவில் மனோரமா எனும் பெயரில் நடித்துகொண்டிருந்த இவர், நடிப்பு திறமையினால் பெரும் நாடகங்க‌ளில் நடிக்க வைக்கபட்டார்.

பெரும் நடிகர்கள் என்றால் அண்ணாவின் நாடகங்கள், கலைஞரின் நாடகங்களில் எல்லாம் அவர்களோடு நடித்தார்.
அந்தகாலங்களில் அண்ணா,கலைஞர் எல்லாம் நாடகம் போடுவார்கள், திராவிட கருத்துக்கள் கடுமையாக எதிரொலிக்கும்.

இருவருமே மிக சிறந்த நாடக ஆசிரியர்,வசனகர்த்தா எல்லாவற்றிற்கும் மேல் மிகசிறந்த நடிகர்கள், அதாவது நாடகத்தில் மட்டும் நன்றாக நடிப்பவர்கள் என மிக அழுத்தமாக சொல்லிகொள்கிறேன்.

பின்னாளில் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கையில் அறிமுகமானார் மனோரமா, அதுதான் முதல்படம்.

அதன்பின் தமிழக படங்களிலும், தெலுங்கு படங்களிலெல்லாம் நடித்தார், ஒரு சிங்கள மொழிபடத்திலும் அவர் நடித்த செய்தி உண்டு, ஆனால் படம் வரவில்லை.

ஒரு நடிகைக்கு தேவை ஏற்ற இறக்கத்துடன் கூடிய கணீர் குரல்,எல்லா உணர்சிக்கான‌ முகபாவம் எல்லாவற்றிற்கும் மேல் உடல்மொழி, இந்த மூன்று விஷயங்களிலும் சந்தேகமே இல்லாமல் முதல் இடம் மனோரமாவிற்கு.

தமிழ் திரையுலகம் மகா விசித்திரமானது, அதுவும் ரசிகர்கள் மிக கண்டிப்பானவர்கள். ஒருவர் ஒரு வேடத்தில் மிக பிரமாதமாக நடித்தால் அவர் அந்த வேடத்திற்காக ஒதுக்கிவைக்கபடுவார். எம்ஜிஆரின் வாள் சண்டை, சிவாஜி கணேசனின் அழுகை,மோகனின் மைக் , ராமராஜனின் பசுமாடு என அது மிக பெரிது, அப்படியே மிக சிறந்த வில்லன் நடிகராகான ரஜினிகாந்தும் ஹீரோவாகவோ வைக்கபட்டார்.

அப்படி மனோரமாவும் நகைச்சுவை நடிகை என குறிக்கபட்டாலும், எல்லா வேடங்களிலும் நடித்து தான் மிகசிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். அவர் இருக்கும் காட்சிகளில் அவர் மட்டும்தான் தெரிவார், அப்படித்தான் தில்லானா மோகனம்பாளில் சில இடங்களில் சிவாஜிகணேசனையும் மிஞ்சினார்.

எம் ஆர் ராதாவிற்கு பின் அது மனோரமாவிற்கு மட்டும் சாத்தியம்.

சோ ராமசாமி, நாகேஷ், எம் ஆர் வாசு, சுருளிராஜன் என அக்கால கட்டத்தில் அவர் கொடுத்த காமெடி காட்சிகளாகட்டும், பின்னாளில் சின்னதம்பி, சின்ன கவுண்டர் போல கொடுத்த குணசித்திர வேடமாகட்டும், விசு படங்களின் பாத்திரமாகட்டும், பின்னாளைய பாட்டி வேடங்களாகட்டும், அவர் தனித்து நின்றார்.

உலகில் 90 சதவீத சினிமா நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு மகா சோகம் நிறைந்தது, அதிலும் 95% தமிழக நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு சந்தோஷமாக அமைவதில்லை, அதற்கு மனோரமாவும் விதிவிலக்கு அல்ல, சந்தித்த சவால்கள் ஏராளம்.

ஆனாலும் அந்த கவலைகள் எல்லாம் தன் திரைவாழ்வினை பாதிக்காமல் பார்த்துகொண்டார், தடுமாறிய இடமென்றால் வடிவேலு போல அரசியல் பிரச்சாரத்தில் மாட்டியது, ஆனாலும் சீனியர் அல்லவா? மீண்டு வந்துவிட்டார்.

கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்தவர், 5 முதல்வர்களோடு பணியாற்றியவர், 100 பாடல்களை சொந்தமாக பாடிய ஒரு பாடகி, 4 தலைமுறை நடிகர்களுடன் போட்டியிட்டு நடித்த ஒரு மிக சிறந்த நடிகை என அவருக்கு பல முகங்கள் உண்டு.

பத்திரிகையாளர் சோ மிக சிறந்த நகைச்சுவை நடிகர், அவரின் பல காட்சிகள் நெஞ்சைவிட்டு அகலாதவை, அவருடன் மனோராமா சொந்த குரலில் பாடி ஆடிய “ஜாம் பஜார் ஜக்கு” , “கைபடாத ரோசாப்பூ” போன்ற பாடல்களெல்லாம் சென்னை மொழிவழக்கினில் இருவரும் பின்னி எடுத்த படங்கள்.

ஒரு நடிகன் நல்ல நடிகன் என்றால், தங்களின் பாதிப்பைனை அடுத்த தலைமுறையினரிடம் பதிய வைக்கவேண்டும், ஒரு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும், சிவாஜி கணேசன், சந்திரபாபு, எம் ஆர்ராதா போன்றோர் அதனைத்தான் செய்தனர், பின் ரஜினிகாந்தும் அதனையே செய்தார், நடிப்பால் பாதித்தார்.

ஆனால் தமிழக நடிகைகளில் அப்படி சாதித்த ஒரே நடிகை மனோரமா மட்டுமே, பல நடிகைகள் தன் நடிப்பினை பின் தொடருமாறு அவர் பாதித்திருந்தார்.

இன்றுசின்னதிரை நாடகங்களிலும், திரையியுலகிலும் சில நடிகைகள் மனோரமாவின் இடத்தினை பிடிக்க படாதபாடு பட்டுகொண்டிருப்பது ஒன்றும் பரம ரகசியம் அல்ல,

இதுதான் மனோரமாவின் வெற்றி, மாபெரும் வெற்றி.

இன்று அந்த அற்புத நடிகையின் நினைவு நாள் நாள்

இன்றும் திரைபடங்களில் பாட்டி வேடத்தில் “அய்யா..சாப்டியாய்யா ” என அவர் வந்து நிற்கும்பொழுது, பலருக்கு தங்கள் பாட்டி நியாபகம் வராமல் போகாது

அவ்வளவு உருக்கமான பாசம் நிறைந்த குரல் அது. அன்னை, அண்ணி, பாட்டி என எல்லா குடும்ப உறவுகளுக்கும் தன் நடிப்பால் தனி இடம் பெற்று கொடுத்தவர்.

மனோரமாவின் குரல் போலவே அவரின் மனமும் இரக்கம் நிறைந்தது, உங்களின் நிறைவேறாத ஆசை எது என கேட்டதற்கு சொன்னார்

“இந்த திருநங்கைகள் வாழ்க்கை வலி நிறைஞ்சதுங்க, ஊனமுற்றோரை விட மிக கஷ்டமான வாழ்க்கை அது. அவங்க கையேந்தி நிற்கும்போது கண்ணீர் வருமுங்க. கொஞ்ச நேரம் அவங்கட்ட பேசினா மனசு கலங்கமுங்க‌

ஆண்டவன் அவங்கள‌ அப்படி படைச்சிட்டான், அவங்க வலியினை சொல்றமாதிரி ஒரு படத்துல திருநங்கையா நடிக்கணும்னு நினைச்சேன் அது நடக்காமலே போயிட்டு”

இதைவிட அவரின் மனதை சொல்ல என்ன வேண்டும்?

“மன்மத லீலை” பட வெற்றிவிழா, மேடையில் கண்ணதாசன் சொன்னார், ” பாலசந்தர் எத்தனையோ நடிகைகளை அறிமுகபடுத்தினார், என்னால் மனோரமாவினை மட்டும்தான் அறிமுகபடுத்த முடிந்தது”

பாலசந்தர் சொன்னார், ” நான் ஆயிரம் நடிகைகளை கொண்டு வந்தாலும், அது நீங்கள் கொண்டுவந்த ஒரே ஒரு மனோரமாவிற்கு ஈடாகுமா?”

திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்

1972ல் இதே நாளில்தான் திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்கருணாநிதிக்கு எதிரான அஸ்திரமாக ராமசந்திரன் இந்திராவினால் ஏவபட்ட நாள் இது, தன் வாழ்வின் மிகபெரும் பிழையாக கருணாநிதி அந்த காரியத்தை செய்த நாள் இதுபாகிஸ்தானை பிரிய விட்டிருக்க கூடாது எனும் இந்தியாவின் பெரும் தவறு போல நிச்சயம் ராமசந்திரனையும் நீக்கி இருக்க கூடாதுஇதயகனி என்றார்கள், முகம் காட்டினால் போதும் என்றார்கள் இப்படி எல்லாம் அவரை வளர்த்துவிட்டு நுனி கிளையில் இருந்து அடிகிளையினை வெட்டினார்கள்.கட்சி உடைந்ததில் இருவருக்கும் சமபங்கு உண்டு, இருவரின் சுயநலத்திலே அது உடைந்ததுபெரியாரே மன்றாடியும் ராமசந்திரன் இறங்கிவரவில்லைவிளைவு இன்றுவரை தமிழக சோகம் தொடர்கின்றதுஆனால் யானை தடம் தப்பியது போல தடுமாறிய கருணாநிதி பின்பு கட்சிகளை இணைக்க விரும்பினார், பல நடவடிக்கைகளை எடுத்தார், அப்பொழுது இணைப்பு பற்றி விரும்பாமல் ஓடியது ராமசந்திரனேஇதில் ஒரு விசித்திரம் உண்டுஆனால் கட்சி கணக்கு வேண்டும் என கேட்டு கட்சி தொடங்கிய ராமசந்திரனின் கட்சி கணக்கும் கட்சிக்காரர் கணக்கும் இன்றுவரை தெரியாதுஅப்படி ஒரு சவாலால் கட்சியே உடைந்தபின்னும் திமுகவின் சொத்து கணக்கும், கட்சிக்காரன் கட்சி கணக்கும் இன்றுவரையும் தெரியாதுஇதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது, அரசியலில் இதெல்லாம் சகஜம்தேசதுரோகி மணிரத்னம் தன் இருவர் படத்தில் அந்த காட்சியினை மிக அழகாக வைத்திருப்பார்கணக்கு கேட்டு கட்சியினை உடைத்துவிட்டு ஆட்சியினையும் பிடித்துவிட்டு தன் கட்சியில் ஊழல் பெருகியபின் கிளைமேக்ஸில் ஒரு திருமணத்தில் (தமிழிசை அக்கா திருமணம் போல) இருவரும் சந்திக்கும் பொழுது ஒருவித வெட்கமான, அசிங்கமான, இயலாமை, ஏமாற்று சிரிப்பு சிரிப்பார்கள்அந்த சிரிப்பினை மிக அழகாக கொண்டு வந்திருப்பார் தேசதுரோகி மணிரத்னம், அந்த சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தம் உண்டு

வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள்

இன்று அந்த வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள்

சும்மா சொல்லகூடாது தங்கவேல் , சுருளிராஜன் மற்றும் நாகேஷின் கலவை நிறைந்த அற்புத நகைச்சுவை நடிகன் அவன், மூன்று ஜாம்பவான்களை ஒரே ஆளாக நம் கண்முன் நிறுத்தியவன்

காலம் அவனுக்கு வழிவிட்டது, தமிழ் உலகம் அவனை கொண்டாடியது. மகா உச்சத்துக்கு எழும்பினான், எல்லா தரப்பு மக்களும் அவனை கொண்டாடினர்

எதையுமே உருப்பட விடாத திமுக அவன் வாழ்விலும் குறுக்கிட்டது அவன் சிக்கினான், விஜயகாந்த்துக்கு எதிராக அவனை கொம்பு சீவிவிட்டார்கள்

அவனும் மதுரையின் அப்பாவி வடிவேலுவாக அரசியல் சூது தெரியாமல் அப்படி ஆடினான்

ஒரு மாபெரும் கலைஞனின் வீழ்ச்சி தொடங்கிற்று, அரசியல் சகதியில் அவன் சிக்க காலம் அவனை கைவிட்டது

தமிழக இயல்பு அது அரசியலில் சிக்கிவிட்டபின் ஒருவன் மேலெழ முடியாது, ரஜினி அதில் கில்லாடி எல்லோரும் அவராகிவிட முடியாது

தனக்கு கொடுக்கபட்ட நஞ்சினை வடிவேலு உணரும் பொழுது அவர் கண்ணெதிரே விஜயகாந்திற்காக தவம் இருந்தது திமுக‌

அந்த நொடியில் வடிவேலு மனம் வெடித்து செத்திருக்கலாம், கதறி கதறி அழுதிருக்கலாம் ஆனால் அவரின் வாழ்வினை நொறுக்கிவிட்ட திமுக திருப்பி கொடுக்கவா முடியும்?

மாபெரும் இடத்தில் இருந்தவனை சூப்பிய மாங்கொட்டையாக‌ வீசிவிட்டு அதன் போக்கில் சென்றுவிட்டது திமுக‌

அவனுக்கான இடத்தை சினிமாவிலோ இல்லை அரசியலிலோ கொடுக்க கூட அது விரும்பவில்லை அப்படி ஒரு நடிகன் இருப்பதாகவோ அவன் திமுகவுக்காக தன் வாழ்வை பலிகொடுத்தான் என்றோ அது கொஞ்சமும் உணரவில்லை

விட்ட இடத்தை பிடிக்க படாதபாடுபட்டுவிட்டு இப்பொழுது ஓரமாக நடக்கின்றார் வடிவேலு..

“செஞ்சோற்று கடனல்ல, செய்துவைத்த போதையில்
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
வடிவேலு
வஞ்சகம் திமுகடா…”

கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது

இந்த மண்ணில் கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது, கடவுள் பக்தர்களும் அவர்களுக்கு எதிரான கோஷ்டிகளுக்குமான சண்டை தேவர் xஅசுரர் சண்டை என பன்னெடுங்காலத்துக்கு முன்பே இருந்திருக்கின்றது

பல நேங்களில் பகவானே அவதாரமாய் வந்து காத்தும் நின்றிருக்கின்றார்

தொன்றுதொட்டு வரும் சண்டை இப்பொழுதும் நடக்காவிட்டால் கடவுளின் இயக்கமே நின்றுவிட்டது என பொருள் அல்லவா?

அதனால் தான் தொடர்ந்து இயங்குவதை நிருபிக்க கடவுளும் அந்த சண்டை தொடர்வதை விரும்புகின்றார்

அந்த தேவர்x அசுரர் ,ஆத்திகர்x நாத்திகர் தகறாறு இப்பொழுது சங்கிx மங்கி என தொடர்ந்து நடக்கின்றது

ஆனால் ஒருநாளும் அசுர தரப்பு வெற்றி பெற்றதே இல்லை அது ஒருநாளும் நடக்காது என்பதுதான் வரலாறு,

ஆனால் தவறாமல் ஆட்டத்துக்கு வந்துவிடுவார்கள் இப்பொழுதும் வந்து ஆடிகொண்டே இருக்கின்றார்கள், வழக்கம் போல அடிபட்டு செல்வார்கள்

அதன் பின் திரும்பவும் ஏதாவது உருவில் அடிவாங்கவே வருவார்கள்

கடவுள் தொடர்ந்து தன் இயக்கத்தை காட்டிகொண்டே இருப்பார்.

தன்னை நம்பிய யாரையும் நாத்திகம் காத்ததுமில்லை, தன்னை நம்பிய விலங்கினை கூட தெய்வம் கைவிட்டதுமில்லை

திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம்

திருச்சியில் காவேரிகரையில் முதலை பிடிபட்டிருக்கின்றது, அது மோடி சிறுவயதில் பிடித்து விளையாடியது போன்ற சிறிய முதலை அல்ல, 250 கிலோ எடைகொண்ட ராட்சத முதலை

விலங்கு நல பிரிவினர் அதை மிக சரியாக பிடித்து அமுக்கி கொண்டு சென்றுவிட்டனர், காவேரி கரை மக்கள் கொஞ்சம் விழிப்பாய் இருப்பது நல்லது

திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம்

நகைகடை கொள்ளையனோ இல்லை காவேரி முதலையோ உடனுக்குடன் பிடிக்கபடுகின்றன‌

அந்த ராமஜெயம் கொலையும் இப்பொழுது நடந்திருந்தால் குற்றவாளிகளை பிடித்திருப்பார்கள் போல…