சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு

சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு : செய்தி

சாதாரண எலுமிச்சை பழத்துக்கே அப்படி பொங்கிய கோஷ்டி பூரண கும்ப மரியாதை என்றால் சும்மா இருக்குமா?

இந்த சமய சார்பற்ற நாட்டில் ஏன் கிறிஸ்தவ முறைபடி “ஸ்தோத்திரம் இயேசப்பா” என சொல்லவில்லை, இஸ்லாமிய முறைபடி சலாம் அலைக்கும் சொல்லவில்லை, காட்டுவாசிகள் முறைப்படி” குஞ்ஞாணி குஞ்சாணி” என ஏன் சொல்லவில்லை என ஆளாளுக்கு கிளம்புவார்கள்

சும்மா சொல்ல கூடாது, திட்டமிட்டு வெறுப்பேற்றி அடிக்கின்றார்கள் பாஜக கோஷ்டி

பூரண கும்ப மரியாதை கொடுக்கபட்டதை அடுத்து இக்கோஷ்டி இனி தலையில் கும்பம் வைத்து கரகாட்டம் ஆடும், நிச்சயம் இப்பொழுது வருவார்கள்

நாம் ஒவ்வொருவரின் கரகாட்டமாக வேடிக்கை பார்க்கலாம்..

அதே காட்சி மறுபடியும் அரங்கேறியிருக்கின்றது

சுதந்திரம் பெறும் பொழுது வங்கம் எரிந்தது, இந்துக்கள் மகா கொடுமையாக கொல்லபட்டனர். காந்தி நவகாளி யாத்திரை எல்லாம் சென்ற காலங்கள் அவை

மிக பெரும் அழிவு, மனுகுல நெருக்கடி, இந்துக்கள் மேல் கொலைவெறி தாக்குதல் என காலம் மறக்கமுடியா கொடுமை அது

அதே காட்சி மறுபடியும் அரங்கேறியிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் குடும்பத்தோடு கர்பிணி மனைவியோடு கொல்லபட்டிருக்கின்றார், மனதை ரணமாக்கும் விஷயம் அது

இதுவே ஒரு இஸ்லாம் உபியில் கொல்லபட்டிருந்தால் பொங்குவார்கள், காஷ்மீரில் கொல்லபட்டால் ஆளாளுக்கு அலறுவார்கள்

ஆனால் வங்கத்தில் ஒரு இந்து என்பதால் ஒரு சலனமுமில்லை, மம்தா பானர்ஜி வாயில் ரசகுல்லா போட்டதை போல அமர்ந்திருக்கின்றார், அவரின் கூட்டாளிகளிடமும் சலனமே இல்லை

ஏன் என்றால் இதுதான் இந்தியா

இம்மாதிரி விஷயங்களை ஏற்றுகொள்ளமுடியாது, மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் முன் அரசு விழித்து கொண்டு குற்றவாளிகளை தண்டிப்பதுதான் சரி

இல்லையேல் விளைவுகள் படுமோசமாக இருக்கலாம்..

குடும்பத்தை ஒழித்த சாகசகாரி

கொலையும் செய்வாள் பத்தினி என்பார்கள், பத்தினியே ஒரு கொலை செய்யும் பொழுது பரத்தை செய்யமாட்டாளா?

கேரளாவில் அப்படி நடந்திருக்கின்றது, கணவனையும் அவன் குடும்பத்தார் 7 பேரையும் மாட்டு சூப்பில் சயனைடை கலந்து கொடுத்து கொன்று கணவனின் தம்பியோடு மொத்த சொத்தையும் ஆட்டையினை போட்டிருக்கின்றாள் ஒருத்தி

அவள் கொன்றதில் 10 மாத குழந்தையும் அடக்கம்

எல்லா கொலைகளையும் செய்துவிட்டு சிரித்த முகமாக மகா பவ்வியமக அக்கம் பக்கத்தில் நடமாடியிருக்கின்றாள், பல்ல்லாண்டுகளாக காக்கபட்ட ரகசியம் வெளிவந்து அவளிடம் விசாரணை நடக்கின்றது

காக்கபடும் ரகசியம் என உலகில் எதுவுமில்லை என்பது இதுதான்

ஆட்டோ சங்கரையும் மிஞ்ஞ்சும் அளவு அந்த கொலைகாரியின் ரகசிய கொலைகள் இருந்திருக்கின்றன, அவள் இன்னும் பல கொலைகள் செய்திருக்கலாம் என்ற வகையில் விசாரணை நீள்கின்றது

இந்த கொலைகள் பற்றி மேலதிக தகவல் பெற நக்கீரனைத்தான் தேடவேண்டும் இம்மாதிரி விவகாரங்களில் அவர்கள்தான் மிகுந்த ரசனை மற்றும் ஆர்வமாய் செய்திகளை தருவார்கள்

கணவனின் தம்பியோடு சேர்ந்து குடும்பத்தை ஒழித்த சாகசகாரி என டைட்டில் போட்டு அசத்துவார்கள்

ஆனால் விஷயம் கேரளா என்பதால் மகா அமைதியோ என்னமோ?

சன் டிவி தயாரிப்பில் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு

சன் டிவி தயாரிப்பில் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு

இந்த கலாநிதி மாறன் என்பவர்தான் கருணாநிதியிடமிருந்து பல விஷயங்களை உள்வாங்கி வளர்ந்திருப்பார் போல, இவரின் அணுகுமுறைகள் அப்படித்தான் இருக்கின்றது

ராம்சந்திரன், ஜெயா என பலருக்கு தண்ணி காட்டிய ரஜினி பழனிச்சாமிக்கு மேட்டூர் அணையினை திறந்துவிட்டதை போல காட்டிகொண்டிருக்கின்றார்

அங்கே கலாநிதி மாறனை நினைத்து தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது திமுக தரப்பு, இப்பக்கம் சன்டிவி படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டு மோடியுடன் விருந்துக்கு வரும் ரஜினியினை நினைத்து தலையினை பிய்க்கின்றது பாஜக தரப்பு

ஆளாளுக்கு எல்லோரும் குழம்பி கொண்டிருக்க இவரை வைத்து எவ்வளவு சம்பாதிக்கலாம் என கலாநிதி மாறனும், அவரிடம் எவ்வளவு வசூலிக்கலாம் என ரஜினியும் கால்குலேட்டரை தட்டி கொண்டிருக்கின்றார்கள்

சிரியா யுத்தம் திசைமாறுகின்றது

சிரியா யுத்தம் திசைமாறுகின்றது, குர்து இயக்கத்தை ஒடுக்க நேரடியாக சிரியா உள்ளே இறங்கிவிட்டது துருக்கி ராணுவம்

இது சிரியாவின் இறையாண்மையினை மீறும் செயல் என கடும் எச்சரிக்கைகள் வருகின்றன, இவ்வளவுக்கும் சிரியாவில் அமெரிக்க படைகள் உண்டு

அமெரிக்காவின் முகாம்களை ஒட்டித்தான் குர்துகளின் முகாம்களும் உண்டு

வட சிரியாவின் கடும் குழப்பத்தில் சிறைசாலைகள் எல்லாம் உடைக்கபடுகின்றன ஆயிரகணக்கான கைதிகள் தப்புகின்றனர், அதில் ஐ.எஸ் கைதிகளும் உண்டு, மனித வெடிகுண்டுகளும் உண்டு

துருக்கி குர்து இனம் பலம் பெற்றால் துருக்கிக்கு ஆபத்து என முளையிலே கிள்ளி எறிய சிரியாவுக்குள்ளே வந்து நிற்பது வித்தியாசமான சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது

இனி அமெரிக்க பின்னணியில் குர்துகள் ஆடுவார்களா, இல்லை ஈரான் பின்னணியில் துருக்கியினை சிரியா எதிர்க்குமா? ரஷ்யாவின் முடிவு என்ன? இம்மாதிரி ஏக கேள்விகள் எழுகின்றன‌

யாரை யார் அடிக்கின்றார்கள் என தெரியாமலே மகா குழப்பமாக நடந்த சிரிய யுத்தம் அடுத்தகட்ட மகா குழப்பத்தை நோக்கி செல்கின்றது

சரி வேற யாரெல்லாம் சந்திக்கணும்?

“ஜி பெங், மோடி சென்னையில் வெயிட் பண்றாராம், போன உடனே நாம சந்திக்கணும்

சரி வேற யாரெல்லாம் சந்திக்கணும்?

கவர்ணர் அப்புறம் இன்னும் ரெண்டு பேர்

அவங்க பெயர் என்ன?

ஜிங்கு ஜாங் , ஜாங் ஜிங்கு

அதென்ன சீனபெயர் மாதிரி?

அவங்க மொழியில் ஜால்ரான்னு அர்த்தமாம், தமிழ்நாட்ல அப்படி 2 பேர் மோடிக்கு இருக்காங்களாம், டெல்லில இருந்து அவ்வளவுதான் சொன்னாங்க”

வம்பான டிரம்ப் அவர்களுக்கு

வம்பான டிரம்ப் அவர்களுக்கு

அய்யன்மீர் நீர் அமெரிக்காவுக்கு நல்லது செய்கின்றீரா இல்லையா என்பது எமக்கு தெரியாது , ஆனால் உம்மால் ஒரு உதவியினை எமக்கு செய்யமுடியும்

விஷயம் ஒன்றுமில்லை, இந்த ஜின்பெங் வருவதால் பல கோடிகளை செலவழித்து மாமல்லபுரம் ஏரியாவினை உங்கள் நியூயார்க் அளவுக்கு மாற்றி வைத்திருகின்றார்களாம், சாலைகள் பளபளக்கின்றன, எங்கும் தூய்மை இன்னபிற அவசரமான நடவடிக்கைகள்

எங்கள் பக்கம் ரோடு சரியில்லை , அரச அமைப்புகள் இயங்கவில்லை எதுவுமே சரியில்லை. நாங்கள் தொலைதூர பகுதி என்பதால் வாக்கு வங்கி இல்லா பகுதி என்பதால் மாநில அரசும்கண்டு கொள்ளாது, மத்திய அரசு ஒருபோதுமில்லை

ஆக எங்களுக்கு உதவ உங்களால் மட்டுமே முடியும், உடனே மோடிக்கு போன் செய்து அவரை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சந்திக்க விரும்புவதாக அடம் பிடியுங்கள்

அவர் மறுப்பார், ஆனால் நீங்கள் விடாபிடியாக நின்று வள்ளியூர்தான் வேண்டும் என அடம்பிடித்து வந்து எங்களுக்கான வசதிகளை பெற்று தருமாறு கேட்டுகொள்கின்றோம்

வந்து போகும் செலவினை கூட நாங்கள் தந்துவிடுவோம்

நீர் இந்த உதவியினை செய்தால் உங்களின் குடும்பமும் முன்னாள் மனைவியர் குடும்பமும் வாழும், டிரம்ப் டவர் 200 மாடி உயரத்துக்கு எழும்பும்

நீர் உலகை காப்பீரோ இல்லையோ எங்களை தயவு செய்து காக்க வந்து செல்லவும். உம்மால் முடியாவிட்டால் அந்த புட்டீனுக்கு இந்த கடிதத்தை அனுப்பி உதவவும்..