தொடரட்டும் இந்த பொற்காலம்..

புராதனமான மாமல்லபுரத்தில் மோடி சீனாவின் நிரந்தர அதிபரான, உலகின் அதி சக்திவாய்ந்த தலைவரை சந்தித்திருப்பது உலகில் பலத்த அதிர்வினையும் பார்வையினையும் கொடுத்திருக்கின்றது

உலகெல்லாம் மாமமல்லபுரத்தை உற்று பார்கின்றார்கள், பெரும் கவனத்தை பெற்றிருக்கும் அந்த நிகழ்வில் பல விஷயங்களை மோடி உலகிற்கு சொல்கின்றார்

இந்த சந்திப்பு இருவருமே இறங்கி வந்த விஷயம், உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு பீரங்கி எடுப்போம் என மிகுந்த நுட்பமாக அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஒத்திகை நடத்திகொண்டே இங்கு அந்நாட்டு அதிபருடன் பேசுகின்றது இந்தியா

அமெரிக்காவுடனான மோதல், ஒரே பெல்ட் ரோடு சிக்கல் , சரியும் பொருளாதாரம் என பல விஷயங்களால் சீனாவும் இறங்கிவரவேண்டியதாயிற்று

நிச்சயம் காஷ்மீரின் லடாக் பகுதி யூனியன் பிரதேசமான நிலையில் சீனா அதைபற்றி பேசாமல் பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பது ஆச்சரியமான விஷயம்

பொதுவாக ஒரு சந்திப்பு நடக்கும் இடம் உற்று நோக்கபடும், மிக பெரும் குறியீடு அது. அப்படி மாமல்லபுரம் எனும் புராதான சீன தொடர்புடைய ஊரில் மோடி அவரை சந்தித்திருப்பது புதிய அத்தியாயத்தினை தொடங்குகின்றது

மோடியின் உடை உலகத்தார் வாவ்வ்.. என சொல்லும் விஷயமாகிவிட்டது, மாமல்லபுரத்தில் இந்து மதத்தின் காட்சிகள் உள்ள சிற்பங்களை விளக்கிய மோடி, ராமாயணம் காட்சிகளையும் சீன அதிபருக்கு காட்டி, வேட்டி சட்டையில் நின்றது கைதட்ட வைத்த காட்சி

ஆம் தமிழர் வேட்டி அணிந்து கோவிலுக்கு செல்வதுதான் கலாச்சாரம் , ஈழதமிழரிடமும் உலகளாவிய தமிழரிடமும் அது உண்டு, தமிழக தமிழனிடம் சுத்தமாக இல்லை

கத்துபவர்கள் கத்தட்டும், ஆனால் அவர் சொல்ல வந்தது இதுதான், “ஆம் தமிழன் ஒரு இந்து நான் பண்டைய தமிழனின் சாயலாக இந்த புராதன மண்ணில் நிற்கின்றேன்”

தமிழகம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று , தமிழனின் உடையினை இந்திய அடையாளமாக ஏற்று அணிவதில் தனக்கு தயக்கமில்லை என காட்டிவிட்ட மோடி பலரின் வாயினை அடைத்த்தே விட்டார்

நிச்சயம் வேட்டிகட்டிய முதல் பிரதமர் தேவகவுடா (நரசிம்ம ராவின் உடை வேறு ரகம்) , வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருந்தது, மூப்பனாருக்கு அந்த வாய்ப்பு வந்தபொழுது நடக்கவில்லை

இன்று வேட்டி கட்டிய பிரதமராக மோடி வந்து நின்றது வரவேற்கதக்க விஷயம், இது நம் நாடு உங்கள் கலாச்சாரத்தை ஏற்க நான் தயார் என அவர் வந்து நின்றது இப்படி ஒரு தலைவனைத்தான் நாடு தேடியது என சொல்ல வைத்தது வாழ்த்துக்கள்

உலகமே உற்று நோக்கிய ஒரு சந்திப்பினை நடத்தி முடிப்பது சாமான்யம் அல்ல, தமிழகம் அதை செய்தது

பேனர்கள் வைக்கபடவில்லை ஆனால் பாரம்பரிய வரவேற்பினை கொடுத்து அசத்தியது தமிழக அரசு நிச்சயம் அது பாராட்டதக்கது

திமுகவினை இந்த இடத்தில் வாழ்த்தவேண்டும், பொறுப்பான எதிர்கட்சியாக இம்முறை நடந்து கொண்டார்கள் அதிலும் துரைமுருகன் “இந்த சந்திப்பினை வரவேற்கின்றோம், இருநாட்டு உறவுக்கு இது அவசியம்” என சொல்லியிருப்பது வரவேற்கதக்க விஷயம்

இம்மாதிரி திமுக நாட்டுபற்றொடு இருந்தால் யாருக்கு பிடிக்காது, திமுக இப்படியே இருக்கட்டும்

தமிழகத்துக்கு வந்த உலகின் சக்திவாய்ந்த தலைவனை, சீனாவின் நிரந்தர தலைவனை மிகுந்த மரியாதையோடு வரவேற்று அதே மரியாதையோடு அனுப்பி வைத்துவிட்டோம், ஒவ்வொரு தமிழனும் பெருமைபடு விஷயம் அது

அடுத்து டிரம்ப் அல்லது பிரிட்டன் பிரதமர் மதுரைக்கு வருவார் என எதிர்பார்ப்போம், அங்கு வேட்டி சட்டையோடு மோடியும் கலந்து கொள்வார் அல்லவா?

டிரம்ப் வம்பானவர், நாம் கனடிய பிரதமரை அழைப்போம் அவர் தயக்கமே இல்லாமல் வேட்டி சட்டை அணிவார் , பக்கத்தில் மோடி பழைய சின்னப்ப தேவர் , நாட்டாமை விஜயகுமார் அல்லது இந்த விணுசக்கரவர்த்தி ஸ்டைலில் நின்றுகொண்டிருப்பார்

எது எப்படியாயினும் உலக அளவில் தமிழகத்தையும் தமிழக கலை பொக்கிஷங்களையும் தமிழக உடையினையும் உலக பிரசித்தியாக்கிவிட்ட மோடிக்கும் மத்திய அரசுக்கும் வாழ்த்துக்கள்..

தொடரட்டும் இந்த பொற்காலம்..

பலர் சேர்ந்து வருவோம்

சீனாவின் குவாங்சூ நகரில் எமக்கொரு சக அலுவலர் உண்டு, அவர் சீன மக்கள் குடியரசின் குடிமகன் , கொஞ்ச நாளில் எம்மோடு பணியாற்றினார் பின்பு குவாங்சூ அலுவலகத்திற்கு சென்றுவிட்டார், நேற்று மனிதர் கடும் உற்சாகம்

“ஹேலோ ஸ்டேன் லீ.. இந்தியாவில் மம் மல் புரம் எங்க இருக்கு?

அது மாமல்லபுரம், இந்தியாவில் நம் மாநிலத்தின் ஊர், சீனாவுக்கு அதற்கும் தொடர்பு அதிகம்

இங்கு எல்லோரும் எங்கள் அதிபரின் சுற்றுபயணத்தை பார்த்துகொண்டிருகின்றோம், அந்த சிற்பங்களும் கடலும் அவ்வளவு அழகு

ஆம், அவை வரலாற்று பொக்கிஷங்கள்

இம்மாதிரி இடங்களுக்கு எங்கள் அதிபர் செல்வது சந்தோஷம், விரைவில் நிறைய சீன மக்கள் அங்கு சுற்றுபயணம் வருவார்கள், அந்த ஊர் மிகவும் இங்கு விளம்பரமாயிற்று

உங்கள் அதிபரின் வருகைக்கு நன்றி, அவரால் இது சாத்தியம்

உங்கள் பிரதமர் ஒரு உடை அணிந்திருந்தாரே அது என்ன?

வேட்டி சட்டை , எம் தமிழர் உடை

உங்கள் பிரதமரின் எளிமை வியக்க வைக்கின்றது, உங்கள் உடையினை அணிந்து உலகமே உற்றுபார்க்கும் ஒரு சந்திப்பில் கலந்துகொள்வது ஆச்சரியமானது. ஐரொப்பியரும் அரேபியரும்தான் இப்படி இருப்பார்கள்

ஓஹோ

ஆம் எங்களின் ஜின்பெங் கூட எம் நாட்டு பாரம்பரிய உடை அணியமாட்டார், நீங்கள் நல்ல பிரதமரை பெற்றிருக்கின்றீர்கள்

நன்றி

உங்கள் நாட்டை பற்றிய நல்ல அபிமானம் இங்கே வருகின்றது, குறிப்பாக மம் மல் புரம் எல்லோரும் தேடும் ஊர் ஆகிவிட்டது, உலக அளவில் உங்கள் பிரதமர் அதை கொண்டுவந்துவிட்டார்

நன்றி

நானும் அந்த ஊருக்கு விரைவில் வருவேன், பலர் சேர்ந்து வருவோம்

வாருங்கள், நாங்களும் உங்கள் தேசத்திற்கு வருகின்றோம்

நன்றி

இந்தோ சீனா பாய் பாய்

ஆம் “வோ மென் ஷி ஷோங்டி” (நாம் சகோதரர்கள்)

சிய சிய (நன்றி)