முளையிலே சிலவற்றை முடித்துவிடுவதுதான் சரி

ஒரு காஷ்மீரி பாகிஸ்தானில் இருக்கும் ஷபீஸ் சயீத், ஜெய்ஷ் இ முகமட் தலைவன் மசூத் அசார் என்பவனை தலைவன் என சொன்னால் பிடித்து நொறுக்குகின்றார்கள்

மும்பை பக்கம் எவனாவது என் தலைவன் தாவூத் என சொன்னால் நொறுக்குகின்றார்கள்

இன்னும் எவானவது அந்நிய நாட்டு தீவிரவாதி பின் லேடனோ இல்லை அல் பத்தாதியோ என் தலைவன் என்றால் அமுக்குகின்றார்கள்

ஆனால் இங்கொருவன் அந்நியநாட்டு தீவிரவாதி என் தலைவன் என சொல்கின்றான், என்.ஐ.ஏ ஏன் பாயவில்லை?

இஸ்லாமியர் மேல் பாய்வதற்குத்தான் சட்டத்தை திருத்தினார்களோ?

இவனை தூக்கி உள்ளே அடைக்காவிட்டால் நாடுமுழுக்க இப்படி பலர் கிளம்புவார்கள், பாதுகாப்பு அமைச்சுகள் விழிப்பது நல்லது

இலங்கையில் இருந்து இஸ்லாமிய தீவிரவாதி வந்தால் அமுக்குவார்களாம், ஒருவன் பகிரங்கமாக அதே இலங்கை தீவிரவாதி என் தலைவன் என்றால் விட்டுவிடுவார்களாம்

என்ன யழவு [பாதுகாப்பு அமைப்புகளோ தெரியவில்லை…

இந்திய உளவுதுறை ஏற்கனவே புலிகளை நம்பித்தான் ராஜிவினை பலிகொடுத்தது, இந்த சண்டாளனையும் தன் கைகூலியாக பாவிக்க அது நினைத்தால் பெரும் அழிவுகளே எஞ்சும்

முளையிலே சிலவற்றை முடித்துவிடுவதுதான் சரி.

மரியம் திரேசியா என்பவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டிருக்கின்றது

கேரளாவில் வாழ்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியா என்பவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டிருக்கின்றது

தனி சபையினையே உருவாக்கி பெரும் சேவையினை செய்தவர் திரேசியா, அவருக்கு நேற்று புனிதர் பட்டம் வழங்கினார் போப்

அன்னை தெரசா போன்ற வாழ்ந்த அந்த தேவதைக்கு புனிதர்பட்டம் மிக சரியானது
இந்திய சார்பில் நம் வெளியுறவுதுறை அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பித்தார்

இந்த கொண்டாட்டத்தை மோடி வரவேற்றிருக்கின்றார் ,மோடி தன் செய்தியில் “இந்தியர் ஒருவரின் சேவைக்கு உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை , முன்மாதிரி வாழ்வு வாழ்ந்த அந்த இந்திய பெண்மணிக்கு புகழாஞ்சலி” என சொல்லியிருக்கின்றார்

அவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டதால் அவரிடம் வேண்டும் வேண்டுதல் பலிக்கும் என்பது கத்தோலிக்க நம்பிக்கை

அந்த புனித மரியம் திரேசியாவிடம் நாம் இப்படி வேண்டிகொள்ளலாம் “புனித மரியம் திரேசியாவே இந்தியாவுக்காக வேண்டிகொள்ளும்”

தொண்டன் என்றால் தும்பிகள் போலத்தான் இருக்க வேண்டும்

“அண்ணே வாங்கண்ணே, நீங்க சிங்கம்ணே இல்ல புலிண்ணே

இவனுககிட்ட தைரியமா ராஜிவ்காந்திய கொன்னது நாங்களேதான், இன்னும் கொல்லுவோம்டா முடிஞ்ச்சா தடுத்து பாருங்கடான்னு சொல்லுங்கண்ணே, அட சொல்லுங்கண்ணே

பூரா பயலும் நீங்க பயந்துட்டதா நினைச்சிட்டான், நீங்களாவது பயப்படுறதாவது

சொல்லுங்கண்ணே.. அப்படித்தாண்டா கொல்லுவோம் இன்னும் நிறைய பேர கொல்லுவோம்டான்னு கைய தூக்கி சொல்லுங்கண்ணே….”

-என சீமானை நோக்கி சொல்லி கொண்டிருக்கின்றன தும்பிகள்,

இனி சீமான் கையினை பிடித்து இழுத்து வந்து சொல்ல சொல்வார்கள் போல..சீமான் மறுத்தால் அடித்து இழுத்து பேசவைப்பார்கள் போலிருக்கின்றது

தொண்டன் என்றால் தும்பிகள் போலத்தான் இருக்க வேண்டும்..

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்தபொழுது இங்கு அச்சிடபட்ட நாணயங்கள் இவை

வெள்ளையன் இந்நாட்டை ஆள தொடங்கிய , அதாவது 1800களில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்தபொழுது இங்கு அச்சிடபட்ட நாணயங்கள் இவை

இந்நாட்டை அவன் இந்து நாடாக கருதி, இந்து மட்டுமே இநாட்டின் அரசு மதம் என சொல்லி அவன் அச்சிட்ட நாணயங்கள் இதோ..

இந்நாடு இந்துநாடு என்பது வெள்ளையனுக்கு தெரிந்திருக்கின்றது, அவன் ஆள தொடங்கும்பொழுது அதை ஏற்றுகொண்டிருக்கின்றான்

ஆனால் இன்று நாம் இந்தியா ஒரு இந்துநாடு என சொன்னால் உடனே பொங்கி வந்து இது சமயசார்பற்ற நாடு என வரிந்து கட்டிவருவார்கள்

எந்நாளும் இது இந்துநாடே அதை அன்று பிரிட்டிஷ்காரனும் உறுதிபடுத்தியிருக்கின்றான்

இன்னமும் இது இந்துநாடு அல்ல அப்படி இருந்ததே அல்ல‌ என எவனாவது சொன்னால் அவனிடம் பேசவே கூடாது..

கீழடி நிலத்தின் எதிர்காலம் தெரியவில்லை

கீழடி நிலத்தின் எதிர்காலம் தெரியவில்லைஅரசு அதை கையபடுத்தி அழியாமல் காக்க வேண்டும், அரசிடம் பணம் இல்லையாம்சரி ஆளும் கட்சி எதிர்கட்சியினரிடம் இல்லா பணமா?ஜெகத்ரட்சகனின் முதலீடு 28 ஆயிரம் கோடியாம், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா விலை மதிப்பே இல்லா சொத்துஒவ்வொரு கட்சிக்காரனும் வைத்திருக்கும் பணம் கொஞ்சமல்ல, ஆனால் ஒருவருக்கும் மனமில்லைஅரசியல் மாநாடு , வெற்று கோஷம், சாதி ஊர்வலம், வீணான ஆர்ப்பாட்டம் என ஒவ்வொன்றுக்கும் கோடிகணக்கில் செலவழிக்கும் மாநிலம் இதுஅதில் தமிழர் வாழ, தமிழர் கலாச்சாரம் வாழ என தவறாமல் சொல்வார்கள்., ஆனால் தமிழனின் அடையாளத்தை காக்க ஒருவரும் வருவாரில்லைதமிழர்கள் ஆளுக்கு ஒரு பங்கை கொடுத்து அந்த நிலத்தை மீட்டு வைத்தால் நலம், ஆனால் செய்வது யாரென்பதுதான் தெரியவில்லைநிச்சயம் அந்நிலம் அடையாளமாய் காக்கபட வேண்டும்அரசும் அமைதி எதிர்கட்சியும் அமைதி அதன் உதிரி கட்சிகளும் அமைதி, எல்லோரும் மகா அமைதி..எதற்கெல்லாமோ தானாக தலையிடும் நீதிமன்றம் இதில் தலையிட்டு அந்நிலத்தை மீட்டு கொடுக்கட்டும், அப்படி செய்தால் அந்த 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் ஆத்மாக்கள் அவர்களை ஆசீர்வதிக்கும்அவனவன் 300 ஆண்டுக்கு முற்பட்ட அடையாளம் இல்லை என ஏங்கி கொண்டிருக்கும் உலகில் 2600 ஆண்டுக்கு முற்பட்ட அடையாளம் கிடைத்தும் அதை காக்க பணமின்றி தவிக்கின்றார்களாம்இடைதேர்தலில் கட்சிகள் செலவழிக்கும் தொகை மட்டும் பல்லாயிரம் கோடிஒரு திரைபடத்தின் ஒரு நாள் வசூலும், ஏன் டாஸ்மாக்கின் ஒரு நாள் வசூலும்,பிரபல தொலைகாட்சிகளின் ஒருநாள் வசூலுமே போதும்ஆனால் செய்யமாட்டார்கள்இப்படிபட்ட விசித்திரமான மக்களையும் காட்சிகளையும் உலகில் எங்குமே பார்க்கமுடியாதுநெஞ்சு கனக்கும் நேரமிது..

நாட்டுக்கான காவல் ஆகாது..

ஒரு இனத்தை ராணுவத்தை வைத்து அழித்தார் ராஜீவ் காந்தி. அவரை எங்கள் மண்ணில் கொன்று புதைத்தோம் என்பதில் எனக்கு பெருமையே : சீமான்

இவனை இன்னமும் விட்டுவைத்திருந்தால் அமித்ஷாவின் சட்ட திருத்தமும் இந்த ஐ.என்.ஏ போன்ற அமைப்பும் இஸ்லாமியருக்கு மட்டுமானது என இந்தியா நம்ப தொடங்கிவிடும்

தன் மேலான சந்தேக கறையினை போக்கும் கடமை பாஜக அரசுக்கு உண்டு, இவனை பிடித்து உள்ளே போடாவிட்டால் அது இந்த அரசுக்கு மாபெரும் களங்கம் தீரா அவமானம்

இந்த தீவிரவாதியினை , ஒரு தீவிரவாத கும்பலை வளர்ப்பவனை இன்னும் விட்டுவைத்திருப்பது எப்படி சாத்தியம்?

அதுவும் 18 லட்சம் தீவிரவாதிகளை வைத்திருக்கின்றானாம்..

இவனை விட்டுவைத்து விட்டு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ் தீவிரவாதியினை மட்டும் பிடிப்போம் என்பதெல்லாம் நாட்டுக்கான காவல் ஆகாது..

நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது

நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது. முதலில் ஒரு கோவில் இருந்திருகின்றது பின்பு புத்த சமண மத ஆளுமையில் அந்த கோவில் அடையாளம் மாற்றபட்டாலும் அதன் அருகே ராமருக்கான வழிபாடு இருந்து கொண்டே இருந்திருகின்றது

எத்தனையோ இஸ்லாமிய மன்னர்கள் வந்து ஆண்டாலும் அங்கு சிக்கல் இல்லை, அந்த வழிபாடு தொடர்ந்தே இருந்திருக்கின்றது பாபர் என்பவரும் அப்படி வந்திருக்கின்றார்

பாபர் ஆப்கானிய மன்னர்களில் வித்தியாசமானவர், இந்த மக்களை எதிரியாக பாராமல் அவர்களோடு கலந்து இங்கே வசிக்க நினைத்தவர். அதனால் இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்துவாழ, இம்மக்களோடு கலந்து வாழ எண்ணினார்
இந்துக்களை எதிர்த்து வாள்முனையில் அடக்கிவிட்டு ஒரு சாம்ராஜ்யம் அமைக்கலாம் என்பதை அவர் நம்பவில்லை, கஜினியும் கோரியும் அதில் தோற்றார்கள் இந்துக்களை அடக்க முடியாது ஆனால் அனுசரித்து வாழலாம் என்ற கருத்தில் பாபர் உறுதியாய் இருந்தார்.

அந்த அஸ்திவாரத்தில்தான் அக்பர் போன்றோர் அவர் வழியில் வந்து மிக பெரும் முகலாய சாம்ராஜத்தை கட்டி காத்தனர். அவர்கள் இந்நாட்டை ஆள அவர்களின் அந்த மத நல்லிணக்கமும் மிக முக்கியமான விஷயம்

ஓளரங்கசீப் காலம் வரை நன்றாக இருந்தது, அவர் கடும்போக்கான விஷயங்களில் இறங்கவும் , சிவாஜி போன்றவர்கள் எதிர்த்து வாள்பிடிக்கவும் எல்லாம் நாசமாயிற்று

சிவாஜி இஸ்லாமினை எதிர்க்கவில்லை மாறாக ஓளரங்கசீப்பின் அடாவடியினையே எதிர்த்தார், அவுரங்கசீப் சிவாஜியினை மட்டும் பகைக்கவில்லை , சீக்கியருக்கு கொடுத்த சித்தரவதையும் அடாவடியும் கொஞ்சமல்ல‌

அப்படிபட்ட முகலாய வம்சத்தின் பிதாமகன் பாபர் நிச்சயம் அடாவடியாக அந்த மசூதியினை கட்டியிருக்க முடியாது, கட்டியிருந்தால் அன்றே ஓட அடித்திருப்பார்கள்

பொதுவாக முன்னோர்கள் தொழுத இடம், மகான்கள் அவதரித்த இடங்களை அந்நாளைய‌ இஸ்லாமியர் மகா விருப்பமாக தேடுவார்கள், பாபர் அந்த ரகம்

இந்திய அபிமானத்தை பெற விரும்பிய பாபர் அந்த ராமர்பிறந்த இடம் என சொல்லபட்ட இடத்தின் ஒரு மூலையில் தொழுதிருக்கலாம் அது மசூதி ஆயிருக்கலாம்

இந்துக்கள் விட்டு கொடுத்துவிட்டு மறுபக்கம் ராமர் வழிபாட்டை தொடர்ந்திருக்கலாம்

இந்த அனுமானங்கள் உண்மையாக இருக்க ஒரே ஆதாரம் வெள்ளையர் வருமளவு அங்கு சிக்கல் இல்லை. அவர்கள் வந்தும் பெரும் சிக்கல் இல்லை

400 ஆண்டுகளாக சிக்கல் இல்லை எனினும் பசுவதை தடுக்க வேண்டும் எனும் குரல் போலவே, அயோத்தியில் ராமருக்கான ஆலயம் வேண்டும் என்ற குரலும் இருந்தது, மரத்தடியில் ராமரை வணங்கிகொண்டே அதை சொல்லிகொண்டும் இருந்தார்கள்

இந்துக்கள் ஒரு புறமும் சிறிய ராமர் ஆலயத்திலும், இஸ்லாமியர் மறுபுறமும் மசூதியில் அந்த் இடத்தில் பிரார்தித்துகொண்டுதான் இருந்தார்கள்

திப்பு சுல்தானை வீழ்த்த இந்து முஸ்லீம் பிரிவினை கையில் எடுத்த வெள்ளையனுக்கு அது அனுகூலமாயிற்று, பின் காந்திவழி தொடங்கிய அந்த புனிதமான போராட்டத்தை கூட இந்து முஸ்லீம் என கீறி, இந்த தேசத்தை இரண்டாக்கினான் வெள்ளையன்

அப்பொழுது அதி தீவிரமாக எழுப்பபட்டதுதான் இந்த ராம் ஜென்ம பூமி பிரச்சினை, அதுவரை அயோத்தி சுல்தானுக்காக அஞ்சிய இந்துக்களும் துணிந்து கேட்க ஆரம்பித்தனர்

பிரிவினைக்கு பின் அது பூதாகரமாக எழும்பும்பொழுதுதான் காந்தி கொலையும் அதன் பின் இந்த அமைதியும் ஏற்பட அப்பிரச்சினை அடங்கியது, ஆர்.எஸ்.எஸ் தடை செய்யபட்ட காலங்கள் அவை

அதன் பின் ஜனசங்கம் (பாஜகவின் முப்பாட்டன்) இப்பிரச்சினையினை தோண்டினாலும் சாஸ்திரி, இந்திரா போன்ற பெரும் ஜாம்பவான்கள் இருந்ததாலும் அப்பிரச்சினை எழமுடியவில்லை

இந்திரா கொல்லபட்டு அனுபமில்லா ராஜிவ் இருந்த காலங்களில் பாஜக அதை கையில் எடுத்தது

உண்மையில் பாஜக அவர்கள் சொந்த கருத்தாக அதை எடுக்கவில்லை, வடக்கத்திய இந்து மக்களின் குரலை ஏற்றார்கள் அதன் பின் வேகமாக வளர்ந்தார்கள்

விபி சிங் இருந்தகாலத்தில் இந்த விஷயங்களை எல்லாம் அடக்கியே வைத்திருந்தார், ஆனால் ராஜிவ்காந்தியினால் அவர் வீழ்த்தபட அத்வாணியின் குரல் ஓங்கி ஒலித்தது

எனினும் அந்த மசூதி இடித்ததை ஏற்றுகொள்ள முடியாது, அதை மத்திய அரசு தடுத்திருக்க வேண்டும்.

கல்யாண் சிங் எனும் உபியின் முதல்வர் அதனை தடுக்க நினைக்கமாட்டார் என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் நரசிம்மராவ் அரசும் அமைதியாக இருந்ததுதான் ஆச்சரியம்

அவர்கள் ஏன் அப்படி இருந்தார்கள் என்பதற்கு இன்றுவரை விடை இல்லை

அந்த மசூதி இடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் கொஞ்சமல்ல, நாடு முழுக்க அது கலவரமானது மும்பையில் மட்டும் சில ஆயிரம்பேர் கொல்லபட்டார்கள், சொத்து சேதகணக்கு வேறு

நாடு முழுக்க கொல்லபட்டவர் எண்ணிக்கை கணக்கே இல்லை

பின் அது மும்பை குண்டுவெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் வரை தொடர்ந்தது

தொடர்ந்து வழக்கு விசாரணை தொல்பொருள் ஆய்வு என பலவிஷயங்கள் நடந்தன

ஒருவிஷயம் உறுத்தலான உண்மை. பிரிவினையின் பொழுது எரிந்த இந்தியா பின் அமைதியாகியிருந்தது, மறுபடி அதனை பற்றி எரிய செய்து இன்றுவரை நீருபூத்த நெருப்பாக ஆக்கி வைத்தது இந்த சிக்கல்தான்

வழக்கு நடக்கின்றது , இன்று இறுதி வாதம் தொடங்குகின்றது, டிசம்பர் 10 வரை அப்பகுதிக்கு 144 போடபட்டிருக்கின்றது

ஏன் இவ்வளவு முன்னேற்பாடு என்றால் நடக்கபோகும் சம்பவங்களை யூகித்துவிடலாம், காஷ்மீரில் செய்த அதே முன்னேற்பாடு

என்ன இருந்தாலும் காலம் அதில் ஒரு மசூதிக்கும் வாய்ப்பளித்துவிட்ட நிலையில் அதை இடித்து இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்திய நிலையில் தனி ஆலயம் என்பது சரிவராது

மசூதி இருந்த இடத்தில் மசூதியும், ராமர் கோவில் சிறிதாக இருந்த அந்த மரத்தடியில் ராமர்கோவிலும் அமைக்கபட்டு மத நல்லிணக்கம் காணபடவேண்டும்

கெட்டது நடந்த இடத்தில் சில நல்லது நடக்காமல் அமைதி திரும்பாது, திரும்பினாலும் நிலைக்காது

மகா ஆச்சரியமாக பெரும்பான்மை மக்கள் இத்தேசத்தில் மத நல்லிணக்கத்தை கடைபிடிப்பதால் இத்தேசம் அதனை கடந்தும் வெற்றிநடையினை அமைதியாக போட்டுவருகின்றது

மதகலவரத்தில் இடிக்கபட்ட முதல் மற்றும் கடைசி மசூதி அதுவே என்று வரலாறு எழுதட்டும்.

பாபர் மசூதி சிக்கலுக்கு வயது வெறும் 70 ஆண்டுகளே, ஆனால் அதற்கு முன்பு 450 வருடம் இத்தேசம் அமைதியாக இருந்திருக்கின்றது. மகா ஒற்றுமையாக இந்துக்களும் இஸ்லாமியரும் அந்த வளாகத்தில் வலம் வந்திருக்கின்றார்கள்

நாம் அந்த 50 கசப்பான‌ வருடங்களை கடந்து அந்த ஒற்றுமையான 450 ஆண்டு காலகட்டத்திற்கு செல்ல முடியாதா? அந்த நீண்ட பொற்காலத்தை மீட்க முடியாதா?

நிச்சயம் முடியும்.

கசப்பான நாட்களை கடக்கும்பொழுது இனி இவ்வாறு நடக்கவே கூடாது எனும் வைராக்கியம் மகா முக்கியம்

அந்த வைராக்கியத்தோடு தேசமும் உலகமும் தீர்ப்பினை எதிர்பார்க்கின்றது..