அவனுகளும் அவனுக வீரமும்..

ஒரு பெண்ணை பிடித்து அவள் முதுகில் வெடிகுண்டை கட்டி , பொட்டை தனமாக வெடிக்க வைத்ததற்கு பெயர் வீர தாக்குதலாம்

ஏவி விட்டவன் வன்னிகாட்டு பங்கரில் ஒளிந்து கிடப்பானாம்..

கொல்ல வந்த கும்பல் நளினியின் சேலைபின்னால் ஒளிந்து நிற்குமாம்..

ஆனால் இது மாபெரும் வீரமான தாக்குதலாம்.அது வரலாறில் நிற்குமாம்

எல்லோரையும் சாக அனுப்பிவிட்டு பங்கருக்குள் கடைசி வரை பதுங்கியவன் மாவீரனாம்..

அவனுகளும் அவனுக வீரமும்..

இப்படித்தான் இருக்கின்றது தமிழக பத்திரிகைகளின் லட்சணம்

மோடிக்கும் ஜின்பெங்குக்கும் இடையில் நிற்பவர் அதிகாரி மதுசூதனன், பன்மொழி தெரிந்த அவர் அங்கு இருவருக்குமான மொழிபெயர்ப்பாளராக இருந்தார்

இந்த பத்திரிகையாளருக்கு மதுசூதனன் என்பவர் மொழிபெயர்த்தார் என்பது தெரிந்திருக்கின்றது, எந்த மதுசூதனன் என தெரியவில்லை உடனே அதிமுக மதுசூதனன் என்பவரின் படத்தை போட்டுவிட்டார்

அதையும் அப்பக்கத்திரிகையின் தலமை எடிட்டர் அனுமதித்திருக்கின்றார்

இப்படித்தான் இருக்கின்றது தமிழக பத்திரிகைகளின் லட்சணம்

(அதிமுக மதுசூதனன் குடும்பத்தாரும் உறவினரும் ஒருவேளை ரகசியமாக மாறுவேடத்தில் மதுசூதனன் அங்கு நின்றிருப்பாரோ? பாருங்கள் மனிதர் அண்ணா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றதை கூட சொல்லவில்லையே என ஒருவித ஏகாந்த பரவச நிலையில் இருந்திருப்பார்கள்)

நல்ல வேளையாக பகவான் கிருஷ்ணனின் படத்தை மதுசூதனன் என்றவுடன் போடவில்லை அதுவரைக்கும் நல்லது

விரைவில் முதல்வர் பழனிச்சாமி என்றால் பழனிமலை கௌதாம்பினி முருகனை படமாக போட்டு செய்தி வெளியிட்டாலும் வெளியிடுவார்கள்.

சீமானை இந்திய உளவுதுறை ஏன் இயக்குகின்றது என்றால் இதற்காகத்தான்..

இந்த மன்றத்தில் சென்று “அங்கிள் சைமன் நாங்களே ராஜிவினை கொன்றோம்” என சொன்னதை தமிழக அரசின் சார்பாக இல்லை இந்தியாவின் சார்பாக யாராவது சொல்வார்கள்

ஏன் அங்கிள் சைமனே சொன்னாலும் சொல்வார்

அத்தோடு தடை அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிக்கபடும்

சீமானை இந்திய உளவுதுறை ஏன் இயக்குகின்றது என்றால் இதற்காகத்தான்..

அந்த மதுரை மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

இந்தியாவில் வெள்ளையன் கண்ட மாவீரர்கள் மூவர். இந்த மூவரை வீழ்த்திய பின்பே இந்தியாவினை பிரிட்டானியரால் கைபற்ற முடிந்தது என அவர்களின் வரலாற்று குறிப்பு சொல்கின்றது

மருதநாயகம், திப்பு சுல்தான் மற்றும் பஞ்சாபின் ரஞ்சித் சிங்

இந்த மூவரில் முதன்மையானவன் யூசுப் கான் எனும் மருதநாயகம், பிறப்பால் அவன் ராமநாதபுரத்துக்காரன், பின் கம்பெனி படையில் குதிரை பராமரிப்பாளனாக சேர்ந்து தன் பராக்கிரமங்களால் உயர்ந்தவன்

அவனாலேதான் இங்கு வெள்ளையர் ஆட்சியும் காலூன்றியது , அதை அகற்ற முயன்று வஞ்சகத்தால் செத்தவனும் அவனே

இந்தியாவில் வெள்ளையன் ஆட்சி ஏற்பட முதல் காரணம் ராபர்ட் கிளைவ், அவனே ஐரோப்பிய போரின் தொடர்ச்சியாக சென்னையில் ஆர்க்காடு நவாப்பிற்க்காக தன்னோடு மோதிகொண்ட பிரெஞ்ச் காரர்களுடனான யுத்தவெற்றியில் அப்படி சிந்திக்க தொடங்கினான்

அதுவரை இந்தியாவினை ஆள்வோம் என்றெல்லாம் வெள்ளையன் நினைத்ததே இல்லை

ஆனால் அந்த கிளைவிற்கு முழுபலமுமாய் இருந்தவன் ஒரு தமிழன், தன்னை அறியாமல் வெள்ளையர் காலூன்ற அவனே காரணம். அவன் இல்லை என்றால் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி அப்போதைக்கு சாத்தியமில்லை

அவன் தான் யூசுப்கான் எனும் கான் சாகிப் எனும் மருதநாயகம்.

அந்த ஆர்காட்டு போரில் அவன் சாந்தா சாகிப் பக்கம் இருந்தான், கிளைவ் முகமது அலி பக்கம் இருந்தான். ஆற்காடு கோட்டைபோரில் யூசுப்கானின் வீரத்தை நேரில் பார்க்கின்றான் கிளைவ்

வீரத்தை வீரம் மெச்சும் என்பது அதுதான், தந்திரங்களுக்கு பெயர் போன கிளைவ் அவனை வளைத்து கொள்கின்றான், அதிலிருந்து தொடங்குகின்றது பிரிட்டானியரின் வெற்றி

சாதரண போர்வீரன், அவனது போர்முறையில் வியந்த ராபர்ட் கிளைவ் அவனை அணைத்துகொண்டு மெருகேற்றினான். பிரெஞ்சுகாரர்களின் புகழ்பெற்ற தளபதி டூப்ளே அவனால்தான் ஓட விரட்டபட்டார்.

கிளைவின் கையில் வேட்டை நாயாக இருந்தான் யூசுப்கான். 6 அடி உயரமும் பெரும் உடற்கட்டும் கொண்ட அவனை ராட்சதனாகவே தென்னகம் பார்த்தது

வரலாற்றின் முதல் விடுதலை வீரனான பூலித்தேவனை அடக்கியவன் அவனே, வரிபிரித்து வெள்ளையனை அமர செய்ததும் அவனே, கட்டபொம்மனின் முப்பாட்டனிடம் வரி வசூலித்ததும் அவனே

ஒரு கட்டத்தில் ஹைதர் அலி தென்னகம் பாய அவனை விரட்டி அடித்ததில் யூசுப்கானின் பங்கும் இருந்தது முதலில் யூசுப்கானே ஹைதர் அலியினை விரட்டி அடித்தான், திருச்சி பக்கம் வராமல் விரட்டி அடித்த மாவீரன்

ராமநாதபுர முத்துவடுக மன்னரும் அவனிடம் அடங்கித்தான் கிடந்தார், மருது சகோதரர்கள் காலத்தான் இவனுக்கு பிந்தையவர்கள்

அவன் யூசுப்கானாக இருந்து கான் சாகிப் என உயர்த்தபட்டான் அதாவது தலமை தளபதி. திருச்சி தஞ்சை மதுரை என எல்லா பகுதிக்கும் அவனே அதிகார அதிபதி ஆனான்

கவனிக்க வேண்டும் அப்பொழுது ஆட்சி ஆற்காடு நவாபிடம் இருந்தது, நவாபினை வைத்து வெள்ளையர் ஆண்டுகொண்டிருந்தனர், நவாப் ஒரு பகுதி வருமானத்தை டெல்லிக்கு கட்டுவார் ஒரு பகுதியினை வெள்ளையருக்கு கட்டுவார், மீதியில் ஆம்பூர் பிரியாணி உண்டுவிட்டு தூங்குவார்

இப்படி அதிக பணம் தேவைபட்டபொழுது மதுரை நாயக்கரால் கட்டமுடியவில்லை அவரின் நிர்வாகமும் சரியில்லை, அவரை நீக்கிவிட்டு கான் சாகிப்பை அங்கு ஆளுநராக அமர்த்தினார் நவாப்

நவாபை மகிழ்விக்க மீனாட்சியம்மன் கோவில் அருகிலோ உள்ளோ நாயக்கன் ஒரு மசூதிகட்ட திட்டமிட்டதாகவும் அதை கான் சாகிப் தடுத்ததாகவும் அந்த மோதலின் உச்சத்திலே நாயக்கரைவிரட்டி விட்டு கான்சாகிப் ஆளுநரனாதாகவும் சில குறிப்புகள் உண்டு

அந்த மதுரைக்கு அவன் ஆளுநரானதும் அவன் அட்டகாசமாக ஆண்டான், நாயக்கர் செய்த தவறுகளை சீர்படுத்தினான்

புதிய கால்வாய் , வயல்கள் என பெருக்கினான், செல்வம் கொட்டியது. மதுரை மீனாட்சியம்மனுக்கு முழு காவலாய் இருந்தான். ஒருமுறை அவன் ஊரில் இல்லா நேரம் நடந்த ஆலய கொள்ளைக்காக கள்வர்கள் 200 பேரை கழுவேற்றி தண்டித்தான் அதன் பின் கொள்ளை பற்றி ஒரு பயலும் நினைக்கவில்லை

வெறும் குதிரை பராமரிப்பாளனாக இருந்த யூசுப்கான் கான் சாகிப்பாக மாறி மதுரை ஆளுநராக நின்றான்

வரி வசூலிக்க அவன் குதிரை மட்டும் போதும் என்ற நிலை இருந்தது, அவன் குதிரையினை வணங்கி கப்பம் வைத்து விட்டு சென்றனர் குறுநில பாளையத்தார்

மதுரையினை அவன் மிக மிக நன்றாக வளர்த்தெடுத்தான் வெறும் 7 ஆண்டுகளில் அதை மிக வளம்கொழிக்கும் நகராக மாற்றியிருந்தான், அப்பொழுதுதான் அவன் “மருத நாயகம்” என கொண்டாடபட்டான்

மதுரை தாண்டியும் தன் ஆட்சியில் அசத்திகொண்டிருந்தான்

மதுரைக்கு அடுத்த அபகுதி கான் நாடு என்றே அழைக்கபட்டது, அது பின்பு கானாடு என மாறி இன்று கானாடு காத்தான் என மாறி நிற்கின்றது

நெல்லை தாமிரபரணியில் அவனால் ஒரு அணைகட்டபட்டது, கான்சாகிப்புரம் எனும் ஊர் ஏற்படுத்தபட்டது, இன்னும் உயர உயர சென்றான்

அதன் பின் ஆற்காடு நவாபின் பொறாமை பார்வை அவன்மேல் விழுந்தது, நவாப் கூடுதல் வரி கேட்க அவன் கட்டமறுத்தான், விளைவு கம்பெனியாரிடம் மருதநாயகத்தை போட்டு வைத்தான் நவாப்

வரலாற்று தரவுபடி அப்பொழுது ராபர்ட் கிளைவ் இந்தியாவில் இல்லை இருந்திருந்தால் மருதநாயகத்தை கைவிட்டிருக்கமாட்டான்

வெள்ளையர் கூடுதல் வரியினை நவாபுக்கு கட்ட சொன்னார்கள், நவாபுக்கு கட்டுவதை விட கம்பெனிக்கு கட்டுகின்றேன் மதுரை மன்னனாக நானே இருப்பேன் இது என் சொந்தமண் என சீறி நின்றான்

ஆங்கிலேயரோ நவாபின் கருணை தங்களுக்கு வேண்டும் என்பதால் மருதநாயகத்தை பதவியினை துறக்க சொன்னார்கள் அவன் மறுத்தான்

“எங்களுக்கு கட்டுபட்டவன் நீ , நாங்கள் சொன்னபடி கீழே இறங்கு..” என்ற ஆங்கிலேயரை துணிந்து எதிர்க்க தொடங்கினான், அவன் களமாடிய போர்கள் அனைத்தும் சாகசங்கள், இவ்வளவிற்கும் தமிழக வழக்கபடியே ஒரு பாளையக்காரரும் அவனுக்கு துணை இல்லை

அவனின் அந்த மாபெரும் போர் வரலாற்றில் குறிப்பிடதக்க போர் ஆனால் மறைத்துவிட்டார்கள்

திப்புவின் மைசூர் போருக்கும், ஸ்ரிரங்கபட்டினம் போருக்கும் கொஞ்சமும் குறைந்ததல்ல அந்த போர்

மதுரை கோட்டையில் ஆங்கில கொடியினை இறக்கிவிட்டு தன் கொடியினை ஏற்றினான் மருத நாயகம், இந்தியாவில் முதலில் ஆங்கிலேய கொடி இறங்கிய இடம் அதுதான்

அவனை தோற்கடிக்க ஆங்கிலேயர்,, நவாப் மற்றும் பல பாளையக்காரர்கள் ஒன்று கூடித்தான் போர் நடத்தினார்கள், தனி மனிதனாக அவர்களை ஓடவிரட்டினான் அவன், பிரன்ஞ்ச்காரரின் உதவி இருந்தது

பிரெஞ்ச் படை, பாளையக்காரர்படை என எல்லாவற்றையும் சேர்த்து ஆங்கிலேயபடையினை ஓடவிரட்ட முயன்றான் அவன்

ஆனால் பாளையக்கார கோஷ்டி அவன் வென்றால் தங்களிடம் கப்பம் வாங்குவான் ஏன் அடித்து விரட்டினாலும் விரட்டுவான் என வர மறுத்தது

ஆயினும் மருதநாயகத்தை ஆங்கிலேய படைகளால் நெருங்கமுடியவில்லை அவன் கோட்டை மகா உறுதியாய் இருந்தது, அவன் அவன் போக்கில் ஆங்கிலேய படைகளை சங்காரம் செய்துகொண்டிருந்தான்

இந்த இடத்தில் ஹைதர் அலி வாழ்த்துகுரியவன், மருத நாயகத்துக்கு சிக்கல் என்றதும் உதவ ஓடி வந்தான், அவன் வந்து மதுரையினை அடைந்திருந்தால் வரலாறு மாறியிருக்கும்

இரு பெரும் எதிரிகளை ஒன்று சேரவிட கூடாது என திட்டமிட்ட கம்பெனி படை ஹைதருக்கு திண்டுக்கல்லை தாண்டி எதிர்ப்பு கொடுத்ததுகொண்டே மதுரையில் கீழறுப்பு வேலையினை செய்தது

கோட்டைக்கு செல்லும் குடிநீரை தடுத்தல் இன்னும் பல கொடுமைகளை செய்தனர் உச்சமாக சிலருக்கு லஞ்சம் கொடுத்து வளைத்தனர்

மருதநாயகத்தை போரில் வெற்றி கொள்ளமுடியாமல் அவன் தொழுகையில் இருந்தபொழுது அவனை பிடித்தார்கள். அதுவும் வஞ்சகமாக. அது ஒரு ரமலான் மாத நோன்பு நேரம் வேறு. இன்னொன்று பிடித்துகொடுத்தது அவனது உற்ற நம்பிக்கையாளர்கள்.

அவர்கள் வஞ்சகமாக அவனை பிடித்து அவன் ஆயுதமற்று இருந்த நேரம் அதுவும் தொழுகையில் இருந்த நேரம் பிடித்தார்கள், நவாப் அவனை கொல்ல சொன்னான்

விசாரணை என எதுவுமில்லை, நவாபின் எதிரி சாக வேண்டும் அவ்வளவுதான்

அவனை பலவாறு கொன்றும் அவன் சாகவில்லை, மாறாக தூக்கு கயிறே 3 முறை அறுந்து அவனை காப்பாற்றியது.

அவன் இடுப்பிலிருந்த ஒரு தாயத்து கழற்றிய பின்புதான் அவனை கொல்ல முடிந்தது என்பார்கள். ஆனால் அவன் யோக சித்துக்கள் கற்றவன் என்பதால் அவன் சாகவில்லை என்பது இன்னொரு குறிப்பு

வர்மகலையில் அவன் தேர்ந்திருந்தான் அதனால் அவனை கொல்லமுடியவில்லை அவன் பீரங்கி குண்டுக்கே சிதறவில்லை பின்பு வர்மகலை வித்தகர்களை கொண்டு பார்த்தும் பலனில்லை எனவும் சில குறிப்பு உண்டு

அதன் பின் பலநாள் அவனுக்கு உணவின்றி போடபட்டுதான் அவனை பலம் குன்ற வைத்து கொன்றார்கள் என்கின்றது அவன் வரலாறு

அப்படியும் அஞ்சிய ஆங்கிலேயர் அவன் தலையினை திருச்சியிலும் கையினை பாளையங்களோட்டையிலும் உடல் கால்களை தஞ்சையிலும் உடலை மதுரையிலும் புதைத்தனர்

அவன் மீது எவ்வளவு அச்சமிருந்தால் இப்படி செய்திருப்பர் வெள்ளையர்? அவன் அந்த அளவு வெள்ளையரை மிரட்டி இருக்கின்றான்.

உண்மையில் ஆங்கிலேயருக்கு அவனை கொல்ல மனம் இல்லை, தங்கள் ஆளுமை பெற முதலில் அவனே உதவினான் எனும் ஒரு இரக்கம் அவர்களிடம் இருந்தது, ஆனால் நவாப்பின் பிடிவாதம் அதனை தோற்கடித்தது, இன்னொன்று பிதாமகன் ராபர்ட் கிளைவ் அப்போது அங்கு இருந்ததால் இவ்வவிஷயம் நடந்தது என்ற கோணமும் உண்டு.

கிளைவின் கண்களில் மின்னிய பெரும் வீரன் மருதநாயகம், அவருக்கு அவன் மீது பெரும் அபிமானம் இருந்தது என்பது வரலாறு

அவன் கொல்லபட்டு கொஞ்சநாளிலே ராபர்ட் கிளைவும் லண்டனில் தற்கொலை செய்து கொண்டான் என்பது இன்னொரு சோகம்.

ராபர்ட் கிளைவ் பெரும் வரலாறு, அவன் புகழும் லண்டனில் கொஞ்சமல்ல, ஆனால் தற்கொலை செய்துகொண்டதால் கிறிஸ்தவ மதிப்பினை இழந்தான். அவன் கதையினை படமாக்க சில ஹாலிவுட் இயக்குநர்கள் முயற்சிப்பதாக செய்தி உண்டு.

கான்சாகிப் எனும் மருதநாயகம் பெரும் வரலாறு, எப்படிபட்ட வரலாறு என்றால் அக்கால வெள்ளையன் குறிப்பு இப்படி சொல்கிறது, இந்தியாவில் நாங்கள் வியந்த போர்திட்டக்காரர்கள் ஹைதர் அலியும், கான் சாகிப்பும், ரஞ்சித் சிங்கும்

ஹைதர் அலியும் மருதநாயகமும் இணைந்திருந்தால் தென்பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கமுடியாது, நமது அதிர்ஷ்டம் அவர்கள் ஒன்று சேரவில்லை, கான்சாகிப்பினை வீழ்த்தும் வரை ஆர்க்காடு அரசினை கைபற்றுவோம் எனும் நம்பிக்கை இல்லை,

ஒரு சாதரண குதிரைகாரனுக்கு இந்த அரச அறிவு சாத்தியமில்லை, அந்த அளவு அவன் போர்களம் நிர்வாகம் என அசத்தினான் அவன் அவதாரமாகவோ அல்லது அரசகுடும்பத்துகாரனவோகத்தான் இருக்க முடியும்

இதற்குமேலும் என்ன சொல்வது?

அவன் அந்த மதுரை வீரன் சாமியின் மறுபிறப்பு என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தது..

நிச்சயமாக சொல்லலாம், தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். அவர்களை அலறவிட்டவன், எப்படியோ தன்னை அறியாமல் சிக்கி வஞ்சகமாய் கொல்லபட்ட மாவீரன், வரலாற்றில் அவன் ஒரு பெரு வீரன்.

அவன் கதையினை கமலஹாசன் தன் கனவுபடமாய் எடுக்க நினைப்பது வரலாறு அறிந்தவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு, ஒருமுறை சோனிநிறுவனம் தயாரிக்க அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் பட்ஜெட்?

காரணம் கதைபடி பல பாத்திரங்கள் வரும், அனைத்தும் சாதாரணம் அல்ல‌

ராபர்ட் கிளைவ், டூப்ளே, சாந்தா சாகிப், நவாப் முகமது அலி, ஒண்டிவீரன், பூலித்தேவன், கட்டபொம்மன் தாத்தா, கான்சாகிப் கிறிஸ்தவ மனைவி என பெரும் பாத்திரங்களே ஒரு பெரும் கணக்கு.

இனி படை அக்கால கட்டடட செட், இதர செலவுகள் எல்லாம் தனி.

ஆர்க்காடு படை, கம்பெனியார் படை, பிரெஞ்ச் படை என அதற்கே கட்சிமாநாடு போல ஆட்கள் வேண்டும்

உடை உட்பட எல்லாமும் அக்காலத்திற்கு செல்லவேண்டும்.

இதனால் சோனி நிறுவணம் பின்வாங்கிவிட்டது அதன் பின் மருத நாயகம் கமலின் கனவில் மட்டும் வந்தார்.

கமலஹாசன் அதை எடுக்கட்டும், அப்படி இல்லாவிட்டால் அந்த ராஜமவுலி எடுக்கட்டும்

ராஜமவுலி அதை மிகசிறப்பாக எடுப்பார், அவர் முயற்சிக்கலாம்

பாகுபலி போன்ற படங்கள் வந்து வெற்றிபெரும் பொழுது, முறையாக நிதானமாக எடுக்கபட்டால் அது பெரும் வெற்றி என்பது மட்டும் உறுதி

காரணம் மதுரை நாயகம் எனும் மருதநாயகத்தின் பெரும் ஆச்சரியமான வீர வரலாறு அப்படி. மதுரையினை தலைநகராக கொண்டு ஆண்ட மாமன்னன் அவன்

ஆனால் அவனுக்கு அவன் சம்மட்டிபுரம் கல்லறை தவிர வேறு எங்கும் நினைவுசின்னம் கிடையாது, இப்படி ஒரு கல்லறை இருப்பதே பலருக்கு தெரியாது.

அவன் வாழ்வு எல்லா தமிழரையும், ஒவ்வொரு இந்தியனையும் சென்றடைய வேண்டிய ஒன்று என்பதால் வாழ்த்தலாம்

இன்று மருதநாயகம் எனும் மாவீரனின் நினைவு நாள்

எந்த வெள்ளையரிடம் போர் கற்றானோ அதே வெள்ளையரிடம் அவர்கள் கற்றுதந்த வித்தையினை காட்டி கதற அடித்து விரட்டியவன் இறந்த நாள்

வெறும் குதிரைக்காரனாக படையில் சேர்ந்து மருதநாயகமாக உயர்ந்து தென்னகத்தில் மிகபெரும் ஆட்சியினை கொடுத்தவனின் நினைவுநாள்

காலம் அவனை சரியாக அனுப்பியது, அன்று வெள்ளையரிடம் யுத்தம் கற்று அவர்களையே விரட்டி அடிக்கும் அறிவும் துணிவும் அவனை தவிர யாருக்கும் இல்லை, ஆனால் இங்குள்ள பாளையக்காரர் செய்த தவறு அவனை இழக்க வைத்தது

அவனின் தலையும் காலும் கையும் புதைத்த இடம் தெரியாது, அவை திருச்சி பாளையங்கோட்டையில் புதைக்கபட்டன என்பார்கள்

உடல் மட்டும் மதுரை சம்மட்டி புரம் தர்காவில் புதைக்கபட்டிருக்கின்றது , அந்த வீரமகனின் வரலாற்றை அது சொல்லிகொண்டே இருக்கின்றது

இந்திய வரலாற்றில் மருதநாயகத்தின் சாயலில் ஹைதர் அலியும் மாவீரன் ரஞ்சித்சிங்கும் வருவார்கள்

அவர்கள் இருவருக்கும் பிதாமகன் மருதநாயகம்

அந்த மதுரை மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

அவர் நிச்சயம் அரசியல் ஞானி

அடேய் அவர் செய்தது போலி உண்ணாவிரதமாக இருக்கட்டும், 2009ல் ராஜினாமா செய்யாமல் காலம் கடத்தியதாகவும் இருக்கட்டும்

இன்று 39 தொகுதிகளிலும் திமுகவால் வெல்லமுடிகின்றதா இல்லையா?

அடுத்து ஆட்சிக்கு வரும் அளவு அது மகா பலமாய் இருக்கின்றதா இல்லையா?

அதற்கு என்ன அர்த்தம்?

பிரபாகரனையும் அவன் கும்பலையும் மட்டுமல்ல இந்த சைமனையும் அவன் தும்பிகளையும் தமிழகம் ….க்கு கூட மதிக்கவில்லை என அர்த்தம்..

அரசியலில் ஊறிய அந்த கலைஞர் கருணாநிதி என்பவரால் இதை கணிக்க முடிந்தது, அதனால்தான் அவர் போக்கில் இருந்தார். அவர் நிச்சயம் அரசியல் ஞானி

நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்

இந்த நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்

அந்நாட்டு அமைவிடம் தமிழக அரசியல் போல அடிக்கடி சீற்றம் நிகழும் இடம்தான். பூகம்பமும் சுனாமியும் புயலும் அவர்களின் அன்றாட வாடிக்கை

மலேசியாவுக்கு மழை என்பது போல புயலும் அலையும் அவர்களின் வாழ்வியலில் ஒன்று

அப்படிபட்ட ஜப்பானியர் ஒரு சூறாவளியியால் நிலை குலைந்து போனார்கள் என்றால் அதன் வலிமை எப்படி இருந்திருக்கும்?

கிட்டதட்ட 4 லட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள், 70பேர் பலி என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாயிற்று

ஏராளமானவர்களை காணவில்லை என்பது கலங்கடிக்கும் செய்தி

வீடு மற்றும் வாகனம் உட்பட சேதாரம் பில்லியன் டாலர்களாக இருக்கலாம்

கிழக்காசியாவின் மிகபெரும் பேரழிவாக கருதபடும் இந்த சூறாவளியின் அழிவு அலற வைக்கின்றது, உலக நாடுகள் ஓடி ஓடி உதவுகின்றன‌

இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இப்படித்தான் இருக்கும் என்கின்றார்கள், சென்னைவாசிகள் முன்ன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது

முன்னெச்செரிக்கை என்பது ஊரை காலி செய்தல் என்பதல்ல குறைந்த பட்சம் ரப்பர் படகுகளையாவது வாங்கி வைத்திருப்பது..

நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்

இந்த நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்

அந்நாட்டு அமைவிடம் தமிழக அரசியல் போல அடிக்கடி சீற்றம் நிகழும் இடம்தான். பூகம்பமும் சுனாமியும் புயலும் அவர்களின் அன்றாட வாடிக்கை

மலேசியாவுக்கு மழை என்பது போல புயலும் அலையும் அவர்களின் வாழ்வியலில் ஒன்று

அப்படிபட்ட ஜப்பானியர் ஒரு சூறாவளியியால் நிலை குலைந்து போனார்கள் என்றால் அதன் வலிமை எப்படி இருந்திருக்கும்?

கிட்டதட்ட 4 லட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள், 70பேர் பலி என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாயிற்று

ஏராளமானவர்களை காணவில்லை என்பது கலங்கடிக்கும் செய்தி

வீடு மற்றும் வாகனம் உட்பட சேதாரம் பில்லியன் டாலர்களாக இருக்கலாம்

கிழக்காசியாவின் மிகபெரும் பேரழிவாக கருதபடும் இந்த சூறாவளியின் அழிவு அலற வைக்கின்றது, உலக நாடுகள் ஓடி ஓடி உதவுகின்றன‌

இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இப்படித்தான் இருக்கும் என்கின்றார்கள், சென்னைவாசிகள் முன்ன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது

முன்னெச்செரிக்கை என்பது ஊரை காலி செய்தல் என்பதல்ல குறைந்த பட்சம் ரப்பர் படகுகளையாவது வாங்கி வைத்திருப்பது..