எருமைமாட்டையா ராணுவம் அனுப்பி கொன்றார்?

பிரபாகரனின் காலம் 1975க்கு பின்னர் ஆரம்பிக்கின்றது, அதாவது இலங்கை கல்விதுறை இட ஒதுக்கீட்டை அதாவது இங்கு பிராமணருக்கு நடக்கும் அதே அநீதியினை ஈழதமிழருக்கு இலங்கை அரசு செய்தபொழுது போராட்டம் ஈழ மாணவர் கைகளில் இருந்து ரவுடி கும்பல் கைக்கு மாறும் பொழுது தொடங்குகின்றது

அந்த ஆயுத போராட்டத்தை குட்டிமணியும் தங்கதுரையும் தொடுத்தனர், பிரபாகரன் அவர்களுக்கு டீ வாங்கிகொடுத்த பையன் , படிப்பு சரியாக வராததால் 13 வயதிலே அந்த ரவுடி கும்பலோடு தொடர்பில் இருந்தார்

ரவுடிகள் தமிழ்போராளி வேடம் போட்டு காவல் நிலையங்களை உடைப்பதும் பின் சிங்கள அரசு தேடும் பொழுது தமிழகம் தப்புவதுமாக இருந்த காலம் அது, இலங்கை வங்கிகளையும் கொள்ளை அடிப்பார்கள்

ஈழபோராட்டம் ஆயுத போராட்டமாக‌ மாறி ரவுடிகள் சண்டையாக மாறிய இடம் இதுதான்

இது பெரும் வரலாறு என்பதால் சில இடங்களை மட்டும் பார்க்கலாம்

அப்பொழுதெல்லாம் பிரபாகரன் சிவகாசிக்கு வெடிமருந்து வாங்க வருவார், வயது 20க்கு மேல் இருக்கலாம் , பிரபாகரன் சிவகாசிக்கு வரும்பொழுது வைகோ கூட தெரியாது. தனியாக வந்து வாங்கி சென்ற நபர் அவர், அப்பொழுது சீமான் 3 வயது பையனாக மாட்டுப்பால் குடித்து கொண்டிருக்கலாம் கிராமங்களில் டவுசர் கூட அணியமாட்டார்கள்

1980களில் பிரபாகரன் தனி ஆட்டம் ஆடுகின்றான், அந்த பஸ்தியாம் பிள்ளை எனும் அதிகாரி நம்ம ஊர் கமிஷனர் விஜயகுமாருக்கு நிகரான அதிகாரி புலிகளால் கொல்லபட்டபொழுது இலங்கை அதிர்ந்து தேடிய பொழுது பிரபாகரனின் கோஷ்டி மும்பை வரதராஜ முதலியாரிடம் அடைக்கலமாகின்றது, பிரபாகரன் தமிழகம் தப்பினார்

அப்பொழுது அங்கிள் சைமன் மாடு மேய்ப்பது எப்படி என பார்த்து கொண்டிருக்கின்றார்

பாண்டிபஜார் மோதலில் அவன் பிடிபட இந்திரா பிரபாகரனை காக்கும் பொழுது அங்கிள் சைமன் எந்தமாட்டு காலில் மிதிவாங்கினாரோ தெரியாது

1983 கலவரமும் குட்டிமணி கொலையும் நடந்து ஈழம் எரிந்தபொழுது பிரபாகரனை இந்தியா பயிற்சிக்காக இங்கு அழைத்து வந்தபொழுது டவுசர் அணிவது எப்படி என பட்டன் மாட்டி பழகுகின்றார் சைமன்

சென்னையில் பிரபாகரனும் கிட்டுவும் தங்கும் பொழுது, பலத்த காவலில் அவர் வியூகம் வகுக்கும் பொழுது, பள்ளியில் பெயிலாகி அடிவாங்குகின்றார் சைமன் அப்படியே கிராமத்தில் மாடு மேய்த்தல் மண் வெட்டுதல் என சகல வேலை

1987ல் பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தார் ராம்சந்தர், உண்ணாவிரதத்தை தொடங்கினான் பிரபாகரன் அவனுக்கு அருகில் இருந்து ஆறுதல் சொன்னார் கி.வீரமணி

அப்பொழுது தன்வாழ்வின் முதல் சினிமாவினை தன் கிராமத்தில் பார்க்கின்றான் சைமன்

அதிமுக திமுக திராவிட கழகம் எல்லாம் ஈழ அரசியல் செய்யும் பொழுது 10ம் வகுப்பு பாஸ் செய்வோமா எனதவிக்கின்றான் சைமன்

1987 – 1989 அமைதிபடை காலம் தமிழகத்தில் சர்ச்சையான காலம், கருணாநிதி மிக துணிச்சலான நடவடிக்கையால் டெசோ என்றும் இன்னும் பல சாகசங்களை செய்து ஆட்சியே டிஸ்மிஸ் ஆகின்றது, புலிகள் எல்லை மீறி செல்கின்றனர் பத்மநாபா கொல்லபடுகின்றான், திமுக நெருக்கடியில் சிக்குகின்றது

அப்பொழுது சினிமா எப்படி எடுப்பார்கள் என யோசிக்கின்றான் சைமன்

1991 ராஜிவ் கொலை நடக்கின்றது, திமுக தடை செய்யபடும் சூழல். புலிவேட்டையில் இந்தியா கடும் வேகத்துடன் இறங்க திராவிட கழகத்தினர் மட்டும் 20 பேர் சாகின்றனர்

இன்னும் வாழ்வினை தொலைத்த திராவிட கழகத்தார் ஏராளம், மாபெரும் இக்கட்டான நிலை

உறுதியாக சொல்லலாம் அவர்களை நமக்கு பிடிக்காது என்றாலும் ராஜிவ் கொலையில் முழு பழியும் சுமந்து நின்றது திமுகவும் திகவுமே

அப்பொழுது பாரதிராஜா கேமராவினையும் அவர் செருப்பையும் துடைத்து கொண்டிருந்தான் சைமன்

1995ல் யாழ்பாணத்தை மீட்டு புலிகளை விரட்டி அடித்தார் சந்திரிகா, புலிகளுக்கு எதிர்காலமில்லை என தமிழகம் அஞ்சிய நேரம் தன் முதல் சினிமா கனவில் இருக்கின்றான் சைமன்

1999 புலிகளுக்கு திருப்பம் கொடுத்த காலம், முதல் முறையாக சிங்கள ராணுவத்தை வென்று 40 ஆயிரம் பேரை சிறைபிடித்து யானை இறவு முகாமை தகர்த்து யாழ்பாணத்தை கைபற்றி புலிகள் தனி ஈழம் அமைக்கும் நேரம்

ஆனால் வாஜ்பாய் அரசு அனுமதிக்கவில்லை அவர் அரசில் இருந்த வைகோவும், திமுகவும் அமைதி காரணம் ஜெயின் கமிஷன் முடிவு வந்திருந்த நேரம்

1987ல் ஆக்ரோஷ சண்டை தொடங்கிய புலி 1999ல் முழுவெற்றி பெற்றது சந்தேகமில்லை, ராணுவரீதியாக முதல் வெற்றி அந்த பெருவெற்றி வீணாய் போய் புலிகள் சோர்ந்தபொழுது சைமன் அடுத்த கதை விவாதத்தில் இருந்தார்

அதன் பின் புலிகளுக்கு உண்மை புரிந்தது, இனி தமிழகத்தில் பெரும் எழுச்சி தங்களுக்கு சார்பாக வேண்டும் அதாவது ராஜிவ் கொலையினை தாண்டி தமிழகம் பொங்க வேண்டும்

அதுவரை கருணாநிதியினையே தள்ளிவைத்த புலிகள் இறங்கி வந்தனர், தமிழக கட்சி தலைவர்கள் எல்லோரும் பிரபாகரனை சந்தித்தனர்

இந்த திருமா போன்றோர் சென்ற காலமது, திருமா கலைஞரின் அடிமை என்பது புரியாததல்ல‌

சினிமா எனும் பெரும் ஊடகத்தை வளைக்க விரும்பினர் புலிகள், ஒரு பக்கம் ஐரோப்பிய ஈழ முதலாளிகள் சினிமா தயாரிக்க வந்தனர் , பணம் புலிகளுடையது

ஒரு பக்கம் இங்கிருந்து இயக்குநர்கள் நடிகர்கள் எல்லோரும் சென்றார்கள், புலிக்கதை எடுக்க நடையாய் நடந்தார்கள்

அந்த கரகாட்ட கோஷ்டியில் ஒருவர்தான் சைமன், அந்த சைமன் அப்பொழுது பெரியார் பேரன் சேகுவேராவின் கொள்ளுபேரன், கார்ல் மார்க்ஸின் கார் டிரைவர்

மணிவண்ணன், ராஜ்கிரன், இந்த மகேந்திரன் என யாரெல்லாமோ பிரபாகரனை சும்மா பழனிமலைக்கு செல்வது போல் பார்த்து வந்தார்கள்

இதை இந்திய அரசு எப்படி அனுமதித்தது? எப்படி விட்டுவைத்தது என்பதுதான் ஆச்சரியம்

2001க்கு பின்பு அமெரிக்காவின் பார்வையில் வந்த மாற்றத்தை அடுத்து இந்திய உளவுதுறை இதை அனுமதித்தது எனும் பேச்சும் உண்டு

ஆக இதுவரை புலி வரலாறையும் சீமானையும் பார்த்த்துவிட்டோம்

2006ல் மகிந்தாவினை அதிபராக்கினார் பிரபாகரன், ஆனால் இனி உலகில் தீவிரவாதி என ஒரு மயிராண்டியும் இருக்க கூடாது என முடிவெடுத்த அமெரிக்கா எல்லோருக்கும் ஓலை அனுப்பிற்று

புலிகள் அதை கிழித்தெறிந்தனர், ஓலை ராஜபக்சேவுக்கு போயிற்று, புலிகளால் தாக்கி தப்பிய பொன்சேகாவும் களம் வந்தார்

பேச்சுவார்த்தை நடந்தபொழுதே லட்சுமண் கதிர்காமர் கொல்லபட ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் கனடாவும் புலிகளுக்கு தடை விதித்தன‌

அப்பொழுது தம்பி படம் எடுத்து புலிகளை நோக்கி சிரித்தார் சைமன், புலி அப்பொழுது டென்சனில் இருந்ததால் காரி துப்பிவிட்டது, அங்கிள் துடைத்துகொண்டார்

உலகமே சேர்ந்து புலிகளை கொன்றபொழுது சைமன் பெரும் சத்தமில்லை அடுத்த சினிமா எது என யோசித்துகொண்டிருந்தார்

2009ல் புலிகள் இல்லை என தெரிந்தபின் இனி பிரபாகரன் வரவே மாட்டான் என தெரிந்தபின் தன் கதைகளை பொய்களை அள்ளிவிட்டார், ஏகபட்ட பில்டப்

புலிகள் ஆதரவு குரல் தமிழகத்தில் முடிந்துவிட கூடாது அப்படி முடிந்தால் இலங்கையிடம் பேசமுடியாது என உணர்ந்த இந்திய உளவுதுறையும் அவனை வளைத்தது

கலைஞரை திட்டி தீர்க்க ஜெயாவும் அவனின் நாக்கினில் கீறி ஆசீர்வதித்தார்

அந்த உற்சாகத்தில் இன்று ராஜிவினை கொன்றது நான் என வந்து நிற்கின்றான் சைமன்

அமைதிபடை இலங்கைக்கு சென்று மோதிய பொழுது இங்கே சிவகங்கை பக்கம் ஒன்றுமே தெரியாமல் மாடு மேய்த்துகொண்டிருந்தவன் இனம் காக்க ராஜிவினை கொன்றானாம் அவனே சொல்லி கொள்கின்றான் பாவம்

ராஜிவ் என்ன இவன் இனமான எருமைமாட்டையா ராணுவம் அனுப்பி கொன்றார்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s