நல்லதே நடக்கும் என நம்புவோம்..

ராம் ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக இறுதி வாதம் இன்று நிறைவு பெறுகின்றது, அதன் பின் வாதமே கிடையாது, தீர்ப்பு விரைவில் வழங்கபடும்

அந்த மசூதியின் தரவுகள் குழப்பமாகவே இருக்கின்றது, காரணம் பாபர் வருமளவும் அதாவது 1500களுக்கு முன்பு அங்கு அந்த மசூதி இல்லை,

ஆனால் பாபருக்கு முன் பெரும் கோவில் ஏதும் அங்கு காணபடவில்லை எனினும் அப்பகுதி ராமனின் கோட்டை என்றே அழைக்கபட்டிருக்கின்றது

இன்றும் பாருங்கள் அது மேடான பகுதியே

அதில் குழந்தை ராமன் அதாவது பால ராமன் கோவில் ஒன்று சிறியதாக இருந்திருக்கின்றது

அந்த காலகட்டம் வித்தியாசமானது ஆப்கன் மன்னர்கள் வருவதும் ஆலயங்களை கொள்ளையிடுவதுமாக இருந்திருக்கின்றார்கள்,

அந்த பால ராமன் கோவில் அதில் இடிபட்டு மறுபடியும் வழிபாடுகள் தொடங்கும் பொழுது பாபர் வந்திருக்கலாம்

புத்தமும் இந்துமதமும் மாறி வந்த பகுதியில் அந்த வளாகம் ஜெருசலேம் போல மாறி மாறி உருமாறி வந்திருந்தாலும் அந்த பகுதியின் பெயர் ராமா கோட்டை என்பது மாறவில்லை என்பது கவனிக்கதக்கது

பாபர் தளபதி மசூதி கட்டும் பொழுது கூட அது “பிறந்த இடத்து மசூதி” ((Masjid-i Janmasthan) என்றுதான் அழைக்கபட்டதற்கான வரலாறு உண்டு, யார் பிறந்த இடத்து மசூதி என பாபர் கோஷ்டி சொல்லி வைத்திருந்தால் சிக்கலே இல்லை

ஆனால் அவர்களும் சொல்லவில்லை

அந்த மசூதியின் உண்மை பெயர் அதுதான், அப்பகுதியில் அது Masjid-i Janmasthan என்றுதான் அழைக்கபட்டது

இந்து ஆலயத்தின் மேல் கட்டபட்ட மசூதி அது என்பது 500 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்துவரும் வாதம்

வெள்ளையன் அந்த மசூதிபக்கம் இந்துக்களும் வழிபட அனுமதி கொடுத்து பிரித்தும் கொடுத்திருந்தான், எனினும் இந்த இந்து இஸ்லாம் மோதல் தன் ஆட்சிக்கு நல்லது எனவும் கண்டான்

வாதங்கள் மோதல்கள் என மாறி மாறி சென்ற விவகாரம் கரசேவகர்களின் தாண்டவத்துக்கு பின் கோவில் இருந்த இடத்தில் கோவில் வேண்டும் என்றும் மசூதி இருந்த இடத்தில் மசூதி வேண்டும் என வரிந்து கட்டல்கள்

இடையில் அகழாய்வு எல்லாம் நடந்து பெரும் கட்டடம் இருந்தது என்ற முடிவும் வந்தது

அது ராமர் கோட்டை என அழைப்படுவதும், பாபர் பிறந்த இடத்து மசூதி என அதற்கு பெயர் சூட்டியதும் அதற்கு முன் இடிபாடுகளுடன் சிறிய பால ராமன் கோவில் இருந்ததும் உண்மை

பாலராமன் கோவிலுக்கு முன் அது புத்த விகாரையாக இருந்திருக்கலாம் என்பதும் வாதம் ஆனால் அது எந்த அளவு உண்மை என தெரியவில்லை

நிச்சயம் இந்த தீர்ப்பு இந்தியாவினை அதிரவைக்கும் அதை தாண்டி உலக அதிர்வினையும் கொடுக்கும்

நல்லதே நடக்கும் என நம்புவோம்..

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்..

ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்?

அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை

ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை சீண்டிவிட்டு ஆடியவன், அவனுக்கு புலிகளும் எதிரி , இந்தியாவும் எதிரி

ஆனால் இருவரையும் மோதவிட்டு இந்தியாவினை ஓரங்கட்டி , பின் புலிகளை எப்படி ஒழிக்கவேண்டும் என அஸ்திவாரம் எழுப்பியவனும் அவனே

புலிகள் வீரர்கள், மானமுள்ளவர்கள், பழிவாங்குவதில் சூரர்கள் என்றால் ஜெயவர்த்தனேவினை கொன்றிருக்கவேண்டும் செய்தார்களா?

அட அதன் பின்னாவது கோத்தபாய, மஹிந்த என தொட்டார்களா?

புலிகள் என்பது யார்? தனக்கு பிடிக்காதவர்களை அவர்கள் எதிர்பாரா நேரத்தில் நம்ப வைத்து அடித்து கொல்லும் கூட்டம்

ராஜிவ், பிரேமதாசாவினை அப்படித்தான் கொன்றார்கள், விழிப்பாக இருப்பவன் பக்கம் செல்ல கூட மாட்டார்கள்

அதுவும் ஜெயவர்த்தனே போல அமெரிக்க விசுவாசி என்றால் அவன் பக்கமே செல்லமாட்டார்கள், அதுதான் புலிகள்

ஒருசிலர் இன்று அமைதிபடை , பழி என என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றான்

அப்படி மானமுள்ள புலி ஏன் ஜெயவர்த்தனே பக்கம் செல்ல கூட இல்லை என பதில் கேள்வி கேட்டால் பதிலே இல்லை

அமைதிபடையினை வரசொல்லி கேட்டதே ஜெயவர்த்தனே தான், அவன் மகாராஜா போல வாழ்ந்து நிம்மதியாக செத்தான்

ஏன் புலிகள் ஜெயவர்த்தனேவினை கொல்லவில்லை என எவனாவது மலையாள மந்திரவாதியினை பிடித்து, பிரபாகரன் ஆவியினை துப்பாக்கி முனையில், சயனைடு குப்பியில் வரவழைத்து கேட்டால் தான் உண்மை தெரியும்..

இப்படியான கோணங்கள் எல்லாம் சீமானிய அடிப்பொடிகளிடம் இல்லை, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலைஞர் ஒழிக…

சிதறி செத்திருக்க வேண்டியவன் ஜெயவர்த்தனேவே தவிர ராஜிவ் அல்ல, இதுதான் உண்மை

வரலாறு இப்படி இருக்க சிலர் இன்று குதித்துகொண்டிருக்கின்றான்

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்

ஈழம் பற்றி உனக்கு என்ன தெரியும்?

ஒரு பிரபாகரன் விசுவாசி, சீமானின் விஷ விழுது ஒன்று விவாதித்தது

அதிகம் பேசுகின்றாய் இனதுரோகி நீ, ஈழம் பற்றி உனக்கு என்ன தெரியும்?

அந்த குடியுரிமை பறிப்பு சட்டம், தரபடுத்துதல் சட்டம், மாணவர் போராட்டம் ஆயுதபோராடமாக மாறிய காலம், சிவகுமாரனின் போராட்ட காலமுதல் தெரியும்

யாரவன் சிவகுமாரன்? சும்மா கதை விடாதே

அவன் தான் முதல் தற்கொலைபோராளி, யாழ்பாண உலகதமிழ்மாநாட்டை தொடர்ந்து 7 தமிழர் செத்த வேகத்தில் போராட வந்தவன்?

அப்படியா கதை விடாதே, தஞ்சாவூரில் மட்டும்தான் மாநாடு நடக்கும், நீ பொய்யன்.

சரி, சிவகுமாரனை தெரியாது, குட்டிமணி தங்கதுரை தெரியுமா?

அவர்கள் யார்? சிங்கள ராணுவ தளபதிகளா?

இல்லையப்பா முதலில் ஆயுதம் தூக்கியவர்கள்

அப்படியா, பிரபாகரன் ஒரு இடத்திலும் அவர்களை பற்றி சொல்லவில்லை, மாலதி படையணி, சார்லஸ் ஆண்டனி படையணி, கிட்டு படையணி வைத்திருந்தார், குட்டி மணி அணி, செல்லகிளி அணி எல்லாம் கிடையாது, அதனால் அப்படி ஒரு தமிழரே கிடையாது நீ பொய்யன்.

சரி நீ என்ன சொல்ல வருகின்றாய்

பிரபாகரன் தமிழருக்காய் போராடி செத்த மாவீரன், பாவி சோனியா,துரோகி கலைஞரால் வீழ்த்தபட்ட நெப்போலியன்.

அப்படியானால் மற்ற போராளிகள் எல்லாம் யாருக்காக போராட வந்தார்கள்? அர்ஜெண்டினா விடுதலைக்கா? அல்லது கம்போடிய சுதந்திரத்திற்கா? அவர்கள் ஏன் பிரபாகரனால் கொல்லபட்டார்கள்?

யாரை சொல்கிறாய்?

உமா மகேஸ்வரன், சபாரத்தினம், பத்மநாபா.

இல்லை அவர்களை எல்லாம் பிரபாகரன் கொல்லவில்லை, நீ பொய்யன், வடுக வந்தேறி

அய்யா சென்னையில்தான் பத்மநாபா கொல்லபட்டார் தெரியுமா?

அப்படியா? யார் அந்த பத்மநாபா? என்ன கிழித்தார் ஈழத்தவருக்கு

ஓஓஓ நீ அந்த வகையராவா? உனக்கு பத்மநாபா தெரியாதா?

தெரியாது

சபாரத்தினம்?

தெரியாது

அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம்

தெரியாது,

ஜெயவர்த்தனே இனவாதம், அதுலத்முதலி இனவெறி அவர்கள் திட்டம் எல்லாம் தெரியுமா?

நீ எவ்வளவு பெரிய பொய்யன், மகிந்த ராஜபக்சே மட்டும்தான் இனவெறியன், ஜெய்வர்த்தனே எல்லாம் எனக்கு தெரியாது.

மாத்தையா பற்றி தெரியுமா?

தெரியாது? எனக்கு ஏன் இவர்களை தெரிந்திருக்க வேண்டும்?

உனக்கு ராஜிவ்காந்தியாது தெரியுமா? சைமன் கொன்றானே அந்த ராஜிவ்காந்தி..

(இதோடு அவர் முறைத்துவிட்டு நீ வந்தேறி, தெலுங்கு வந்தேறி இனதுரோகி என சொல்லிவிட்டு போனவர்தான், இன்னும் காணவில்லை.

ஒரு மண்ணாங்கட்டியும் தெரிவதில்லை, தன்னை தவிர யாரும் போராட கூடாது எனும் புலிகளின் கொலைவெறி தெரிவதிலை, படித்தவர்களை கண்டாலே புலிகள் கொன்றகதையும் தெரியவில்லை

இவர்கள்தான் சீமான் தலமையில் பொற்கால தமிழகம் படைக்கபோகின்றார்களாம், விளங்கும்டா….”)

எல்லோருக்குமான உணவினை உறுதி செய்வோம்

கொடுமைகளில் எல்லாம் பெரும் கொடுமை பசி கொடுமை, பசியினை போல ஒரு பெரும் பிணி இல்லைஎல்லா உயிரும் இப்பூமியில் வாழ மகா அவசியம் உணவு, அதுவும் மனிதன் இச்சமூகத்தை இயக்க அவசிய தேவை உணவு, மானிட வாழ்வு அதற்காகவே ஓடுகின்றது உழைக்கின்றதுமனிதன் உணவுக்காக ஓடி ஓடியே உலகத்தை மாற்றினான், உணவில்தான் உலகின் எல்லா முன்னேற்றங்களும் வந்தன, உணவு தேவை மட்டும் இல்லையெனில் அவன் இன்றொரு மிருகமாக காடுகளில் தூங்கிகொண்டிருப்பான் இந்த பூமி இப்படி மாறி இருக்காதுமதங்களும் ஞானிகளும் உணவின் தேவையினை அவசியத்தை உணர்ந்து உணவு தானத்தை வலியுறுத்தினர்இது எல்லா மதங்களிலும் உண்டு, எல்லா இனங்களிலும் உண்டு, எல்லா ஞானிகள் வாக்கிலும் உண்டுஇந்துமதம் அதை மிக நுட்பமாக வலியுறுத்தும், அவர்களின் எல்லா வழிபாடும் பிரசாதம் கொடுத்துத்தான் நிறைவுபெறும்படையலிடுவது முதல் பிரசாதம் வரை பசிபோக்கும் கருத்துக்களை வலியுறுத்தியது இந்துமதம், அதன் தொடர்ச்சித்தான் சீக்கிய குருத்துவாரா உணவு தானம் முதல் வள்ளலார் வரைதானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது தமிழகம் சொல்லும் ஒன்று, வள்ளுவன் முதல் பாரதி வரை அதை பாடினர், காமராஜர் பள்ளிகளுக்கும் கொண்டுவந்தார்இந்தியாவில் பெரும்பாலும் பஞ்சம் என்பது வெள்ளையன் ஆட்சிக்கு முன்பு இல்லை, அப்பொழுது வந்த பஞ்சகாலங்களை கூட சமாளிக்கும் அளவு இங்கே வழி இருந்தது, ஏதோ ஒரு கூழோ கஞ்சியோ குடித்து சமாளித்தார்கள்இந்தியாவில் பஞ்சம் என்பது வெள்ளையன் காலத்தில் வந்தது, அந்த கிழக்கிந்திய கம்பெனி சுரண்டிய சுரண்டலில் ஏற்பட்ட செயற்கை பஞ்சத்தின் கோர காட்சிகளை கண்டுதான் ராபர்ட் கிளைவே தற்கொலை செய்தான்காலணி ஆதிக்கம் வந்தபின்பே உணவு பஞ்சம் பல நாடுகளில் வந்தன அதுவும் இரு உலகபோர்கள் உலகில் பெரும் உணவு பஞ்சத்தை கொண்டுவந்தன‌பஞ்சம் என்றால் பெரும் பஞ்சம், உலகம் கொஞ்சம் மீண்டெடுழுந்தது. 1945ல் உலகில் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும், உணவு உற்பத்தி பெருக வேண்டும் என்ற நோக்கில் ஐநாவில் உலக உணவு மற்றும் வேளான்மைதுறை அக்டோபர் 16ல் தொடங்கபட்டது அது உலக உணவு நாள் ஆயிற்றுஒவ்வொரு நாட்டிலும் சமூகமும் அரசும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்கின்றன, வளர்ந்த நாடுகளின் நிலையே வேறுஅங்கும் வறியவர்கள் உண்டு ஆயினும் சமூகம் அவர்களின் உணவினை உறுதி செய்கின்றது, உணவகங்களில் காசு இல்லாதவர்களுக்காக ஒரு மேஜை உண்டு, வழியில்லாதோர் அங்கு சாப்பிடலாம் அதற்கான தொகையினை அங்கு அந்நேரம் உண்ணும் மற்றவர்கள் பகிர்ந்து அளிப்பார்கள்அரபு நாடுகள் பணக்கார கோலம் பூண்டபின் அங்கு உணவுக்கு உத்திரவாதம், போரில் சிக்கிய நாடுகளை தவிர‌கிழக்கே சீனாவும் ஜப்பான் போன்ற நாடுகளின் கவனமே தனி, சீனா ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எல்லாம் விளையவைத்து தன் நாட்டு பசியினை போக்குகின்றதுஇந்தியா 1940களில் கடும் பஞ்சத்தில் சிக்கியது, உலகபோரும் வெள்ளையனின் ஏனோதானோ மனநிலையும் அதற்கு காரணம், இவ்வளவுக்கும் வங்கம் பஞ்சாப் தஞ்சை கோதாவரி டெல்டா என வளமான பகுதிகளை கொண்ட நாடு இதுஅந்த போர்கொடுமையில்தான் சப்பாத்தியும் பரோட்டாவும் தென் இந்தியா வந்தது, அதுவரை தமிழருக்கு அந்த உணவு அந்நியமேசுதந்திர இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மேல் எழுந்தது, அதில் நேருவும் அவரின் உணவு கொள்கையும் மறக்க முடியாது, அணைகளை கட்டி விவசாயத்தை பெருக்கி பஞ்சத்தைபோக்கினார்கள்தமிழகத்தில் பெருமகன் காமராஜர் அதை செய்தார் பெரும் அணைகளை கட்டி விளைச்சலை பெருக்கி பசிபோக்க எண்ணினார், பள்ளி குழந்தைகளின் பசி உணர்ந்த ஒரே தலைவன் அவரே, அதற்காக அவர் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் இன்றும் உலக நாடுகள் பலவற்றில் உண்டு”வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்” என மனமார நம்பியவர் அவர்அவர் காலத்தில் உலக பஞ்சம் மற்றும் காஷ்மீர் போரினால் ஏற்பட்ட பஞ்சத்தை வைத்து இங்கு அரசியல் செய்து அவரை வீழ்த்தினர் என்பது வேறு விஷயம்இன்று நமக்கெல்லாம் உணவு கிடைக்கின்றது, அது ஆர்கானிக்கா இல்லையா மகா சுவையான விருந்தா இல்லையா என்பதல்ல விஷயம், பசியால் வாடுவோர் என யாருமில்லை130 கோடி மக்களுக்கும் இன்று ஓரளவு உணவு பாதுகாப்பினை இத்தேசம் உறுதி செய்திருக்கின்றது, இது மாபெரும் சாதனை. இதற்கு அடிதளமிட்டது நிச்சயம் நேருதான், இன்றிருக்கும் அரசும் அதை மேம்படுத்துகின்றதுஇந்தியர் என்றல்ல திபெத்தியர், வங்க அகதி, ஈழ அகதி என எல்லா நாட்டுமக்களையும் வரவேற்று உணவளித்து காக்கின்றோம்நிச்சயம் இந்தியர் ஆசீர்வதிக்கபட்டவர், இப்பொழுதெல்லாம் எல்லா நாட்டு அரிசியும் காய்கறியும், மாமிசமும் எல்லா வகை உணவும் இந்தியாவில் கிடைக்கின்றது, குக்கிராமங்கள் வரை உணவு தட்டுப்பாடு இல்லைஉற்பத்தியும் நுகர்வும் இறக்குமதியும் ஏற்றுமதியும் அந்த சமநிலையினை காக்கின்றன, அரசு அதில் சரியாக இருக்கின்றதுஉணவின் அருமை தெரியவேண்டுமானால் ஒரு நேரம் விரதம் இருந்து பாருங்கள் அல்லது எதுவுமே கிடைக்கா காட்டில் ஒரு நாள் பசியோடு அமர்ந்து பாருங்கள், கையில் பணமோ கார்டோ இல்லாமல் நகருக்குள் சுற்றி பாருங்கள்அப்பொழுது தெரியும் உணவின் அருமைஅப்படியும் தெரியவில்லை என்றால் தமிழக டிவிக்களை மாற்றிவிட்டு உலக செய்திகளை பாருங்கள்ஒரு சொட்டு பாலுக்காக அழும் ஆப்ரிக்க குழந்தை, ஒரு துண்டு ரொட்டிக்காக ஏங்கி நிற்கும் சிரிய குழந்தை, ஒரு கவளம் உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் போன்றவர்களை பாருங்கள் உணவின் அருமை கண்ணீரோடு புரியும்நல்ல அரசும், விவசாய வசதிகளும் உற்பத்தியும் இல்லா நாடுகள் அப்படித்தான்..நாமெல்லாம் எவ்வளவு ஆசீர்வாதமான நாட்டில் இருக்கின்றோம் என்பது அப்பொழுதுதான் புரியும், நாம் பணக்காரனா ஏழையா என்பதல்ல விஷயம் ஆனால் நமக்கான உணவு உறுதி செய்யபட்டிருக்கின்றதுஇந்தியாவில் காணப்படும் ஒரு கொடுமை உணவு விரயம், உணவகமோ பந்தியோ நான் பணம் கட்டுகின்றேன் நான் மொய் வைக்கின்றேன் என அள்ளி போட்டு யானை புகுந்த வயலாக ஆக்கி அதை தூர எறிகின்றார்கள்இது பல இடங்களில் நடக்கின்றது ,உணவு வீணாகின்றதுபுனிதமான உணவினை வீணாக்குவது பெரும் பாவத்தில் ஒன்றுஉணவு விவசாயியின் உழைப்பில் வருகின்றது , இப்பூமி அதைவிளைய வைக்கின்றது, வானம் நீர் தெளித்து வளர்க்கின்றது, கடலும் அள்ளிகொடுக்கின்றதுஇவை எல்லாம் மாபெரும் இறைவனின் ஆசிகள், அந்த ஆசீர்வாதத்தை வீணடித்தல் கூடாதுஎல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும், உலகில் பசி பட்டினி ஒழியட்டும் என பிரார்த்திப்போம்இந்தியாவில் பசி ஒழிந்திருக்கின்றது அது இன்னும் ஆதரவற்றோர், முதியவர், ஏழைகள், நோயுற்றோர் என எல்லோரும் நிறைவு பெறும் அளவு ஒழிக்கபட வேண்டும்அந்த பசியினை போக்கும் விவசாயியும் காக்கபடல் வேண்டும்உணவிட்ட அவதாரங்களான கண்ணன் , இயேசு முதல் குருநாணக் வள்ளலார் வரையும், கரிகாலன் முதல், அந்த பென்னிகுயிக் முதல், நேரு காமராஜர் முதல் இன்று மாபெரும் அணைகட்டி திறந்த மோடிவரையும்பசுமை புரட்சி விஞ்ஞானிகள் முதல் கிராமத்து விவசாயி வரையும் பசிபோக்கும் அனைவரையும் நன்றியோடு நினைப்போம்அளவோடு உண்போம், அடுத்தவரையும் உண்ணவைப்போம் , எல்லோருக்குமான உணவினை உறுதி செய்வோம் என்பதே இந்நாளின் நிலைப்பாடுசங்கம் இப்பொழுதெல்லாம் சைவமாகிவிட்டது, மீன்குழம்பெல்லாம் இல்லை. என்னமோ தெரியவில்லை காய்கறிகளில்தான் இப்பொழுதெல்லாம் ஒரு சுவை தெரிகின்றது.எந்த ஆடும், கோழியும், மீனும் நமக்காக கொல்லபடவில்லை என்பதில் ஒரு நிம்மதியும் கூட

மாவீரனாய் நிலைத்து விட்டான்

இன்று வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவு நாளாம், நல்ல வேளையாக அவன் இன்று இல்லை

கட்டபொம்மன் இன்று இருந்து நாட்டுபற்றோடு வசனம் பேசினால் அவன் பெயர் “சங்கி”

கட்டபொம்மன் இன்று இருந்தாலும் அவன் பெரியார் அண்ணா கலைஞர் வழியில் சமூக நீதிக்கு என்ன செய்தான் என்றுதான் கேட்பார்கள்,

அடேய் நீ வந்தேறி வடுகன் என கண்களை உருட்டும் ஒரு கோஷ்டி.

ஒரு கோஷ்டி தமிழனுக்கு என்ன செய்தாய் என அவன் மீசையினை இழுக்கும்,

இன்னொரு கோஷ்டி தலித் உரிமை காத்தாயா? அரசு உன்னுடையதா? நிலமெல்லாம் உன்னுடையதா? என அவன் வேட்டியினை இழுக்கும்

கட்டபொம்மன் தானாகவே தூக்குமாட்டி செத்திருப்பான்

நல்ல வேளையாக அவன் இப்போது இல்லை, முன்பே பிறந்ததால் மாவீரனாய் நிலைத்து விட்டான்

மாவீரன் கட்டபொம்மன்

அவன் பெரும் பேரரசன் அல்ல, மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தவன் அல்ல, ஆனால் அவனின் துணிவும் தைரியமும் மான உணர்வும் அவனை நிலைக்க செய்தது ஆம் தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன்,

கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி,

வீரபாண்டியபுரம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த கெட்டிபொம்மு எனும் பெயரால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் கதைதான்)

ஒருவழியாக கிளைவின் அதிரடியில்,கல்கத்தா தொடங்கி வெள்ளையன் ஒவ்வொரு அரசனாக பெண்டு நிமிர்த்தி மொத்த இந்தியாவை விழுங்கி தென்னகம் வந்து ஆற்காடு நாவாப்பையும் பிடித்தனர்.
நவாப் வடிவேலு பாணியில் “சொன்னார் நாட்டை நான் வச்சிக்கிறேன்..கப்பத்தை நீ வச்சிக்க”

இதுதானே வெள்ளையருக்கு வேண்டும், நவாப் பாளையத்தாரிடம் வரிபிரிப்பார், அதனை கமிஷன் எடுத்துகொண்டு வெள்ளையருக்கு கொடுப்பார், அவர்களும் “தேங்க் யூ..தேங்க் யூ” என வாங்கிகொள்வர். யாராவது வரிகொடுக்காமல் அடம்பிடித்தால் அவர்களை வெள்ளையனுக்கு கை காட்டிவிடுவார், அவர்கள் வந்து அன்னாரை தண்டிப்பார்கள்.

வல்லாட்சி நடந்தது.

அப்படி நவாப் முதலில் கைகாட்டியது பூலித்தேவன், ஒரு குறுநிலமன்னர் எப்படியோ நாயக்கரை மீறி ஆட்சி செய்த தமிழ்மன்னன். பெரும் படையோடு வந்து அவரை ஆட்சி அகற்றியது யூசுப்கான் எனும் ராமநாதபுர தளபதி

அவர் பின்னாளில் மருதநாயகம்.

பூலித்தேவனை இறுதி வரை யாரும் கைதுசெய்யவில்லை. பெர்முடா மர்மம் போல இவரும் விடை தெரியா மகா மர்மம்.

ஆனால் நாயக்க மன்னர்களின் உதவி கிட்டவில்லை, தனிமனிதனாக போராடினார்,வீழ்ந்தார்.

மிக சரியாக 40 வருடம் கழித்து ஒரு நாயக்க மன்னனும் அதேபோல வெள்ளையனை எதிர்க்க ஆரம்பித்தார், ஆச்சரியமாக அவருக்கும் எந்த பாளையமும் உதவவில்லை, உயிரை விட்டார்.

அந்த நாயக்கமன்னன் தான் கட்டபொம்மன், எல்லோருக்கும் அவரைபற்றி தெரியும் என்பதால் அ,ஆ,இ.. என தொடங்கவேண்டாம். ஆனால் அவரை ஆழ்ந்து படித்தால் பல உண்மைகள் தெரியும்.

அதாவது அந்த காலத்தில் வெள்ளையருக்கு பெரும் சவால் மாவீரன் திப்புசுல்தான். சவால் என்றால் ராக்கெட் வீசி வெள்ளையனை அதிரசெய்யும் அளவிற்கு திகில் கொடுத்தார், இவரை அடக்காமல் இந்தியா நமக்கெல்ல என கம்பெனி முடிவுசெய்த நேரம். கடும் பண நெருக்கடியால் வரிகளை உயர்த்தினர்.

பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறிவிலையும் உயரும் அல்லவா?, நவாப்பும் வரி உயர்த்தினார். இங்குதான் கட்டபொம்மனுக்கு கோபம் வந்தது, ஆனால் நியாயமான வரியை அவன் செலுத்தித்தான் வந்தான்.

“வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்” என எல்லா பாளையத்தையும் அழைத்தான் யாரும் வரவில்லை, மறைமுகமாக அந்த பாளையத்தாரை எச்சரித்தான், எச்சரிப்பு என்றால் எல்லை தகறாறு, “நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் கிராமங்களில் வரிபிரிப்பேன்” என்ற அதிரடி,

அப்படி செய்தும் காட்டினார்.

மற்ற‌ பாளையத்தார் கட்டபொம்மனை குறிவைத்தார்கள். வரிசை பெரிது எட்டயபுர பாளையம்,சிவகிரிபாளையம் என எல்லோருக்கும் கட்டபொம்மன் எதிரி ஆனார்.

உச்சமாக கூடுதல் வரியை செலுத்தவில்லை என கட்டபொம்மனுக்கு உரித்தான‌ திருவைகுண்டம் பகுதியை வெள்ளையர் கைபற்றினர்.

அப்பகுதி முப்போகம் விளைந்து அள்ளிகொடுக்கும் பகுதி சுருக்கமாக சொன்னால் இன்றைய பெட்ரோல் கிணறு.

பாஞ்சாலங்குறிச்சி வானம்பார்த்த பூமி.

வரி வசூல் பிரச்சினை இருந்தபொழுதே ஒரு பஞ்சகாலத்தில் திருவைகுண்டம் நெல்குடோனை அடித்து சென்றான் கட்டபொம்மன், இங்குதான் பிரச்சினை பெரிதானது.
ஆனால் திப்பு சுல்தானை தீவிரமாக எதிர்கொண்ட வெள்ளையர், கட்டபொம்மனை பின்னாளுக்கு மாற்றினர்.

அதாவது சர்ச்சைக்கிடமான கலெக்டர் ஜாக்சன் துரையை கூட இடம்மாற்றி தாங்கள் உத்தமர் என்பது போல காட்டிகொண்டனர், அதே நேரம் கட்டபொம்மனுக்கு பின்னால் எந்த பாளையமும் செல்லாதவாறு தந்திரமாக பார்த்தும் கொண்டனர்.

அக்காலம் கம்பெனி ஆட்சி, கம்பெனி எப்படிபட்ட ஆட்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தது என்றால் அது சுவாரஸ்யமானது

லண்டன் தெருக்களில் ரவுடிதனம் செய்தவர்கள், படிக்காதோர், கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாதோர், கொலை செய்துவிட்டு தலைமறைவானோர் எல்லோரையும் பிடித்து இந்தியாவில் நீ கலெக்டர், நீ தாசில்தார், நீ எழுதுவியா? அப்படியானால் கவர்ணர் என அனுப்பிகொண்டிருந்தார்கள்

ஆம் தொலைதூர இந்தியாவுக்கு வர அன்று படித்த நல்ல லண்டன்வாசிகளுக்கு ஆசையில்லை, வந்ததெல்லாம் ஒரு மாதிரி கூட்டம்

ஜாக்சன் துரை அப்படி பட்டவன். கட்டபொம்மன் முதலில் செலுத்திய வரிகளை குழப்பி அவனுக்கு சினமூட்டியதே ஜாக்சன் துரைதான், அது பெரும் சர்ச்சையாகி ஜாக்சன் மாற்றபட்டாலும் கட்டபொம்மன் வெள்ளையன் கண்களில் அச்சமூட்டுபவனாகவே இருந்தான்.

ஒருவழியாக மைசூர் புலியினை மதவெறி தூண்டிவிட்டு சாய்த்தபின் மொத்த கோபத்தை கட்டபொம்மன் மேல் காட்டினர், பின்னர் விரட்டினர். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பின் மருது சகோதரர்கள் ராமநாதபுரம் பக்கம் போராடிகொண்டிருந்தனர்.

அவர்களிடம் உதவிபெரும் பொருட்டுதான், கட்டபொம்மன் புதுகோட்டை ராமநாதபுரம் பகுதிகளில் சுற்றிகொண்டிருந்தார், அப்படி நடந்திருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.

எட்டப்பன் காட்டிகொடுத்தான் என்பது வரலாற்று பதிவாயினும் உண்மையில் கட்டபொம்மன் கைதுக்கு காரணம் புதுகோட்டை சமஸ்தானம் என்பது இன்னொரு கோணம்.

புதுகோட்டையில் கைது செய்து பெரும் குற்றபத்திரிகை வாசித்தனர். அடுத்த பாளையங்களை அச்சுறுத்தியது,நெல்குடோனை கொள்ளையிட்டது (அது கொள்ளையா?), வரிகட்ட மறுத்தது, என என்னவெல்லாமோ குற்றம் சொல்லி அவரை தூக்கிலிட்டது கம்பெனி.

இது நடந்த வீர சம்பவம், ஒரு பெரும் வரலாறு, ஒரு சுதந்திர போராட்டம். நடந்தநாள் அக்டோபர் 16

நெல்லை பகுதியில் 1940வரை கதைபாடலாக அல்லது ஜக்கம்மா கோயில்கொடை போன்ற கொண்டாட்டங்களில் நடைபெற்ற நாடகம் இது. அப்பொழுதெல்லாம் கட்டபொம்மனை பற்றி நெல்லை தாண்டி யாருக்கும் தெரியாது.

சிலம்பு செல்வர் ம.பொ.சி தான் முதன்முதலாக “அட இங்கேயும் ஒருத்தன் வெள்ளைக்காரனை அடிச்சிருக்கான்” என ஆச்சரியபட்டு அந்த வரலாற்றை வெளிகொணர்ந்தார்.
உண்மையில் தமிழருக்கும், தமிழக உரிமைகளுக்கும், வரலாறுகள் நிலைத்திருக்கவும் பாடுபட்ட தமிழர்களுள் தலையானவர் ம.பொ.சி.

இன்று கட்டபொம்மனின் நினைவுநாள், ம.பொ.சி கண்ணில் பட்டபின் கட்டபொம்மன் தமிழகம் தாண்டி,இந்தியா தாண்டி எகிப்து அதிபரால் கூட கொண்டாடபட்டார் , உபயம் சிவாஜி கணேசன்

தனக்கு மங்கா புகழ் கிடைக்க காரணமான கட்டபொம்மன் தூக்கிலடபட்ட இடத்தினில் சிவாஜி கணேசன் சொந்தமாக நினைவு சின்னம் நிறுவினார்

கயத்தாறில் முன்பு கட்டபொம்மன் தூக்க்கிலிடபட்ட இடத்தில் மக்கள் கல் வைத்து அஞ்சலி செலுத்துவார்களாம், மிக பெரும் கல் குவியல் குவிந்து கிடந்தது என்கின்றார்கள்

பின்னாளில் சிவாஜி சிலை வைக்கும்பொழுது அதெல்லாம் அப்புறபடுத்தபட்டு விட்டதாம், என்ன தான் சிவாஜி கணேசன் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தாலும், மக்கள் குவித்து வைத்த அந்த கற்குவியலே மாபெரும் நினைவு சின்னம்

அது அழிந்திருக்க கூடாது.

மக்கள் நாடி பார்ப்பதில் கலைஞருக்கு நிகர் இல்லை, மக்கள் அபிமானம் பெற்றவர் யாராக இருந்தாலும் கலைஞர் ஓடிப்போய் இணைத்துகொள்வார், அவர் இறந்திருந்தால் சிலைவைத்து போற்றுவார், அவரின் அரசு ஒரு பாஞ்சாலங்குறிச்சியில் மாதிரி கோட்டையை கட்டிவைத்து அவரின் அடையாளத்தை பாதுகாத்தது.

ஆயினும் பழம் கோட்டையின் அழிவுகளை கலைஞர் கை வைக்கவில்லை, அவரால் முடியவும் முடியாது காரணம் அது தொல்பொருள் கட்டுபாட்டுக்கு சென்றாயிற்று, அது வேலியிடபட்டு அப்படியே இருக்கின்றது,

இன்று கட்டபொம்மன் மாவட்டம் பெயர் மாற்றமாகிவிட்டது, கட்டபொம்மன் போக்குவரத்து கழகும் மாறிற்று,

ஆனால் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் ஒருகாலமும் மாறபோவதில்லை, காரணம் ராணுவத்திற்குத்தான் போராட்டத்தின் கடினமும்,பெருமையும் புரியும்.

கட்டபொம்மனை தூக்கிலிட்ட மரம் இப்போது இல்லை, அவரை விசாரித்த சிறை பாழ்பட்டு கிடக்கிறது. கோட்டை தரைமட்டமாக்கபட்டிருக்கின்றது. அவரை தூக்கிலிட்ட கயிறு நெடுங்காலம் பத்திரமாக இருந்தது இப்பொழுது காணவில்லையாம்,

என்ன செய்வது அரசாங்க கோப்புகளே காணாமல் போகும் தேசம் இது.

அங்கிருந்து 90 கி.மீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை மிக அழகாக எழுந்து நிற்கிறது நிற்கட்டும். ஆனால் இரண்டையும் காணும் ஒரு இந்தியனின் மனதில் உயர்ந்து நிற்பது இன்னும் பாஞ்சாலங்குறிச்சி மண்கட்டை இடம்தான் சந்தேகமே இல்லை ,

இதுதான் கட்டபொம்மனின் வெற்றி.

தாமிரபரணி நதிக்கரை நெல்லின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட கட்ட பொம்மனுக்கும், ஈராக்கிய எண்ணையின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட சதாம் ஹூசைனுக்கும் என்ன வித்தியாசம் காட்டமுடியும்?

இருவரும் தூக்கு கயிற்றுமுன் வீரமாக முழங்கினார்கள், அவர் அரேபியாவின் கட்டபொம்மன் என்றால் இவர் நெல்லையின் சதாம் உசைன். நிச்சயமாக சொல்லலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம், எகிப்திலும் இன்னபிற சினிமா விரும்பும் அமைப்புக்களாலும் கொண்டாடபட்டுகொண்டிருந்த பொழுது, தமிழக நிலமை எப்படி தெரியுமா? சென்னையில் சினிமா முடிந்து வெளியே வரும்பொழுது இருவர் பேசிகொண்டார்கள்

“இந்த சிவாஜி கணேசனே இப்படித்தாம்பா, முடிவுல செத்துபோய்ருவாரு..இது மட்டும் நம்ம வாத்தியார் படமா இருந்துண்ணு வச்சிக்கோ”..அப்புடியே அவ்ளோபேரையும் சாய்ச்சிபுட்டு அந்த பாணார்மேன பந்தாடிருப்பாரு..

ஒரு வெள்ளக்கார பயலும் பாஞ்சாலங்குறிச்சிகுள்ள நுழைச்சிருக்க முடியாது..”

கனவு காண்பது மட்டுமல்ல, கனவிலே வரலாற்றையும் மாற்றி மகிழ்வான் தமிழன். இந்த மகோரா எனும் சனியன் அப்படி தமிழகத்தை கெடுத்து வைத்திருக்கின்றது

எப்படியோ நல்ல வேளையாக அவர் கட்டபொம்மன் படத்தில் நடிக்கவில்லை நடித்திருந்தால், அது வெளிநாட்டில் திரையிடபட்டிருந்தால் உலகம் என்ன சொல்லியிருக்கும்.

நல்ல வேளையாக இந்திய மானம் தப்பியது.

நெல்லை சீமையின் பெரும் வீரனும் இந்நாட்டின் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரனுமான அந்த கட்டபொம்மனுக்கு வீர வணக்கம்.

இன்றும் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் எனும் கடற்படை கேந்திரமாக இந்நாட்டையும் தென்னகத்தையும் காத்து நிற்கின்றான் அந்த மாவீரன் கட்டபொம்மன்

இதன் விளைவுகள் இனிதான் தெரியும்

முன்பு இந்திய அமைதிபடையினை எதிர்க்க பிரபாகரனும் சிங்கள பிரேமதாசாவும் கைகோர்த்தது போல சிரியாவிலும் காட்சிகள் மாறிவிட்டன‌

துருக்கியினை எதிர்க்க சிரிய அரசும் குர்துகளும் ஒப்பந்தமிட்டாயிற்று இதன் குர்து பின்னணியில் இருப்பதும் அதே அமெரிக்கா

எந்த அமெரிக்கா?

அன்று இந்திய அமைதிபடையினை விரட்ட சிங்களனும் விடுதலைபுலிகளும் ஒன்றாக வேண்டும் என மிரட்டி சம்மதிக்க வைத்து ஆயுதமும் கொடுத்த அந்த அமெரிக்கா

சிங்களனை எதிர்த்து துப்பாக்கிய தூக்கிய போராளிகளை எல்லாம் ஆதரித்து உணவும் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்த தேசம் இந்தியா

ஆனால் இந்திய ராணுவத்தை எதிர்த்து சிங்களனுடன் சேர்ந்தனர் புலிகள்

இதன் பெயர் மானங்கெட்ட தனம் என்பதன்றி வேறென்ன? ஆனால் இதுதான் மாவீரமாம்

பின் அந்த மாவீரம் 2009ல் அமெரிக்கா கைவிட்டதும் மண்டை கிழிந்து மல்லாக்க கிடந்தது.

இப்பொழுது துருக்கிக்கு எதிராக சிரியாவும் குர்தும் சேர்ந்திருக்கின்றன, இதன் விளைவுகள் இனிதான் தெரியும்

புலிகளின் மாயகோட்டை சரிந்தது

2006ல் புலிகளை தடை செய்தது அமெரிக்கா, அதை தொடர்ந்து கனடாவும் ஐரோப்பிய யூனியனும் தடை செய்தது

போர்காலங்களில் சிங்கப்பூர் தடை விதித்தது

சீனாவில் எக்காலமும் தடை அது போக இலங்கைக்கு கப்பல் கப்பலாக ஆயுதம் அளித்தது

ரஷ்யாவும் ஈரானும் பாகிஸ்தானும் கூட இலங்கைக்கு உதவின‌

ஆக உலகமே சேர்ந்து ஒரு அடாவடி கூட்டத்தை இலங்கையில் அடித்து கொன்றது, ஆனால் இந்தியாவும் காங்கிரசும் கருணாநிதியும்தான் இனத்தை அழித்தார்கள் என ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்கின்றது

இன அழிப்பு என்பது என்ன என்பதை ஐ.நாவுக்கான இலங்கை தூதர் இப்படி குறிப்பிட்டார்

“எம் நாட்டில் யாழ்பாணம் எனும் தமிழர் நகரில் நாம் தாக்கவில்லை, கொழும்பு தமிழருக்கும் கிழக்கு மாகாண தமிழருக்கும் சிக்கல் இல்லை,

நாம் வன்னி தமிழ்மக்களை கொடூர புலிதீவிரவாதிகளிடம் இருந்து விடுவிக்க போர் நடத்தினோம், புலிகளே அவர்களை பிடித்து வைத்து அழிவினை கொடுத்தனர், புலிகள் அவர்களை விடுவித்திருந்தால் போரே நடந்திருக்காது

புலிகளை கொன்று அம்மக்களை காப்பாற்றியபின் எந்த தமிழரை எம் ராணுவம் தொட்டது?”

இந்த வாதத்துக்கு யார் எதிர்பதில் கூறமுடியும்? உலக நாடுகள் ஏற்றுகொண்டன. ராஜபக்சே தப்பித்தது இப்படித்தான்

உண்மை இப்படி இருக்க இங்கிருந்து கொண்டு இனபடுகொலை , இந்தியா இனபடுகொலை செய்தது என ஏக ஒப்பாரி

புலிகளை ஒழித்த பொன்சேகா சொன்னார்

“எம் ராணுவத்தினர் சிலருக்கு லஞ்சம் கொடுத்து அதில் ஊடுருவித்தான் புலிகள் பலமாயிருந்தனர், பணம் ஒன்றே அவர்கள் ஆயுதம்.

எம் கருப்பு ஆடுகளை களை எடுத்தபின் புலிகளின் மாயகோட்டை சரிந்தது

மற்றபடி தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் கோமாளிகள், சிரிக்க வைக்கும் விஷயமாக சொல்லிகொண்டே இருப்பார்கள்”

யார் யாரோ டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்நாடு இது

யார் யாரோ டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்நாடு இதுகருணாநிதி எல்லா பல்கலைகழங்களிலும் வாங்கினார், ராமசந்திரன் வாங்கினார், ஜெயா வாங்கினார்அட இயக்குநர் சங்கரும் , விஜயும் கூட வாங்கினார்கள். அதன் பின் நம் பழனிச்சாமி வாங்காவிட்டால் எப்படி?இதுவே இப்பொழுது கருணாநிதி இருந்தால் எப்படி கலாய்ப்பார் தெரியுமா?பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டத்துடன் “வசூல் ராஜா” எனும் பட்டத்தையும் சேர்த்து “டாக்டர் வசூல் ராஜா” என‌ கொடுத்தால் நன்றாக இருக்கும்..இப்பொழுதுள்ள தலமையிடம் அதெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது, கேட்டால் ” அவர் ஊசி போடுவாரா? மருந்து தெரியுமா? மாத்திரை தெரியுமா? அவர் எங்கே நீட் எழுதினார்? எங்கே எம்பீஸ் படித்தார்” என சீரியசாக கேட்டு வெறுப்பேற்றும்..

ஆக அப்பாவி உணர்வாளர்களே..

உலகம் முழுக்க இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் இன்னும் அது போன்ற சாயல் கொண்டவர்களுக்கு ஒன்றை சொல்லிகொள்கின்றோம்

உலகெல்லாம் ஒருவித கண்காணிப்பு தமிழர்கள் மேல் புலிகும்பலாலும் இந்த தும்பி மற்றும் இன்னபிற கும்பல்களின் அழிச்சாட்டியத்தால் நிலவுகின்றது, பரபரப்பான காட்சிகள் அரங்கேறுகின்றன , சிலரை மிக துல்லியமாக குறிவைத்து தூக்குகின்றார்கள்

வெளியில் இருந்தால் வெளிநாட்டினரிடம் சிக்குவோம் , நசுக்கி பிழிந்துவிடுவார்கள் என்றுதான் அங்கிள் சைமனே உள்ளே செல்ல ஆசைபடுகின்றார்.

ஆக அப்பாவி உணர்வாளர்களே..

உண்மையான நாட்டுபற்றோடும் அவரவர் வாழும் நாட்டுக்கு விசுவாசமாகவும் இருங்கள், டமில் உணர்ச்சி கொந்தளிப்பில் பெரும் சிக்கலில் சிக்கிவிட வேண்டாம்..