ஒரு பிரபாகரன் விசுவாசி, சீமானின் விஷ விழுது ஒன்று விவாதித்தது
அதிகம் பேசுகின்றாய் இனதுரோகி நீ, ஈழம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
அந்த குடியுரிமை பறிப்பு சட்டம், தரபடுத்துதல் சட்டம், மாணவர் போராட்டம் ஆயுதபோராடமாக மாறிய காலம், சிவகுமாரனின் போராட்ட காலமுதல் தெரியும்
யாரவன் சிவகுமாரன்? சும்மா கதை விடாதே
அவன் தான் முதல் தற்கொலைபோராளி, யாழ்பாண உலகதமிழ்மாநாட்டை தொடர்ந்து 7 தமிழர் செத்த வேகத்தில் போராட வந்தவன்?
அப்படியா கதை விடாதே, தஞ்சாவூரில் மட்டும்தான் மாநாடு நடக்கும், நீ பொய்யன்.
சரி, சிவகுமாரனை தெரியாது, குட்டிமணி தங்கதுரை தெரியுமா?
அவர்கள் யார்? சிங்கள ராணுவ தளபதிகளா?
இல்லையப்பா முதலில் ஆயுதம் தூக்கியவர்கள்
அப்படியா, பிரபாகரன் ஒரு இடத்திலும் அவர்களை பற்றி சொல்லவில்லை, மாலதி படையணி, சார்லஸ் ஆண்டனி படையணி, கிட்டு படையணி வைத்திருந்தார், குட்டி மணி அணி, செல்லகிளி அணி எல்லாம் கிடையாது, அதனால் அப்படி ஒரு தமிழரே கிடையாது நீ பொய்யன்.
சரி நீ என்ன சொல்ல வருகின்றாய்
பிரபாகரன் தமிழருக்காய் போராடி செத்த மாவீரன், பாவி சோனியா,துரோகி கலைஞரால் வீழ்த்தபட்ட நெப்போலியன்.
அப்படியானால் மற்ற போராளிகள் எல்லாம் யாருக்காக போராட வந்தார்கள்? அர்ஜெண்டினா விடுதலைக்கா? அல்லது கம்போடிய சுதந்திரத்திற்கா? அவர்கள் ஏன் பிரபாகரனால் கொல்லபட்டார்கள்?
யாரை சொல்கிறாய்?
உமா மகேஸ்வரன், சபாரத்தினம், பத்மநாபா.
இல்லை அவர்களை எல்லாம் பிரபாகரன் கொல்லவில்லை, நீ பொய்யன், வடுக வந்தேறி
அய்யா சென்னையில்தான் பத்மநாபா கொல்லபட்டார் தெரியுமா?
அப்படியா? யார் அந்த பத்மநாபா? என்ன கிழித்தார் ஈழத்தவருக்கு
ஓஓஓ நீ அந்த வகையராவா? உனக்கு பத்மநாபா தெரியாதா?
தெரியாது
சபாரத்தினம்?
தெரியாது
அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம்
தெரியாது,
ஜெயவர்த்தனே இனவாதம், அதுலத்முதலி இனவெறி அவர்கள் திட்டம் எல்லாம் தெரியுமா?
நீ எவ்வளவு பெரிய பொய்யன், மகிந்த ராஜபக்சே மட்டும்தான் இனவெறியன், ஜெய்வர்த்தனே எல்லாம் எனக்கு தெரியாது.
மாத்தையா பற்றி தெரியுமா?
தெரியாது? எனக்கு ஏன் இவர்களை தெரிந்திருக்க வேண்டும்?
உனக்கு ராஜிவ்காந்தியாது தெரியுமா? சைமன் கொன்றானே அந்த ராஜிவ்காந்தி..
(இதோடு அவர் முறைத்துவிட்டு நீ வந்தேறி, தெலுங்கு வந்தேறி இனதுரோகி என சொல்லிவிட்டு போனவர்தான், இன்னும் காணவில்லை.
ஒரு மண்ணாங்கட்டியும் தெரிவதில்லை, தன்னை தவிர யாரும் போராட கூடாது எனும் புலிகளின் கொலைவெறி தெரிவதிலை, படித்தவர்களை கண்டாலே புலிகள் கொன்றகதையும் தெரியவில்லை
இவர்கள்தான் சீமான் தலமையில் பொற்கால தமிழகம் படைக்கபோகின்றார்களாம், விளங்கும்டா….”)