எல்லோருக்குமான உணவினை உறுதி செய்வோம்

கொடுமைகளில் எல்லாம் பெரும் கொடுமை பசி கொடுமை, பசியினை போல ஒரு பெரும் பிணி இல்லைஎல்லா உயிரும் இப்பூமியில் வாழ மகா அவசியம் உணவு, அதுவும் மனிதன் இச்சமூகத்தை இயக்க அவசிய தேவை உணவு, மானிட வாழ்வு அதற்காகவே ஓடுகின்றது உழைக்கின்றதுமனிதன் உணவுக்காக ஓடி ஓடியே உலகத்தை மாற்றினான், உணவில்தான் உலகின் எல்லா முன்னேற்றங்களும் வந்தன, உணவு தேவை மட்டும் இல்லையெனில் அவன் இன்றொரு மிருகமாக காடுகளில் தூங்கிகொண்டிருப்பான் இந்த பூமி இப்படி மாறி இருக்காதுமதங்களும் ஞானிகளும் உணவின் தேவையினை அவசியத்தை உணர்ந்து உணவு தானத்தை வலியுறுத்தினர்இது எல்லா மதங்களிலும் உண்டு, எல்லா இனங்களிலும் உண்டு, எல்லா ஞானிகள் வாக்கிலும் உண்டுஇந்துமதம் அதை மிக நுட்பமாக வலியுறுத்தும், அவர்களின் எல்லா வழிபாடும் பிரசாதம் கொடுத்துத்தான் நிறைவுபெறும்படையலிடுவது முதல் பிரசாதம் வரை பசிபோக்கும் கருத்துக்களை வலியுறுத்தியது இந்துமதம், அதன் தொடர்ச்சித்தான் சீக்கிய குருத்துவாரா உணவு தானம் முதல் வள்ளலார் வரைதானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது தமிழகம் சொல்லும் ஒன்று, வள்ளுவன் முதல் பாரதி வரை அதை பாடினர், காமராஜர் பள்ளிகளுக்கும் கொண்டுவந்தார்இந்தியாவில் பெரும்பாலும் பஞ்சம் என்பது வெள்ளையன் ஆட்சிக்கு முன்பு இல்லை, அப்பொழுது வந்த பஞ்சகாலங்களை கூட சமாளிக்கும் அளவு இங்கே வழி இருந்தது, ஏதோ ஒரு கூழோ கஞ்சியோ குடித்து சமாளித்தார்கள்இந்தியாவில் பஞ்சம் என்பது வெள்ளையன் காலத்தில் வந்தது, அந்த கிழக்கிந்திய கம்பெனி சுரண்டிய சுரண்டலில் ஏற்பட்ட செயற்கை பஞ்சத்தின் கோர காட்சிகளை கண்டுதான் ராபர்ட் கிளைவே தற்கொலை செய்தான்காலணி ஆதிக்கம் வந்தபின்பே உணவு பஞ்சம் பல நாடுகளில் வந்தன அதுவும் இரு உலகபோர்கள் உலகில் பெரும் உணவு பஞ்சத்தை கொண்டுவந்தன‌பஞ்சம் என்றால் பெரும் பஞ்சம், உலகம் கொஞ்சம் மீண்டெடுழுந்தது. 1945ல் உலகில் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும், உணவு உற்பத்தி பெருக வேண்டும் என்ற நோக்கில் ஐநாவில் உலக உணவு மற்றும் வேளான்மைதுறை அக்டோபர் 16ல் தொடங்கபட்டது அது உலக உணவு நாள் ஆயிற்றுஒவ்வொரு நாட்டிலும் சமூகமும் அரசும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்கின்றன, வளர்ந்த நாடுகளின் நிலையே வேறுஅங்கும் வறியவர்கள் உண்டு ஆயினும் சமூகம் அவர்களின் உணவினை உறுதி செய்கின்றது, உணவகங்களில் காசு இல்லாதவர்களுக்காக ஒரு மேஜை உண்டு, வழியில்லாதோர் அங்கு சாப்பிடலாம் அதற்கான தொகையினை அங்கு அந்நேரம் உண்ணும் மற்றவர்கள் பகிர்ந்து அளிப்பார்கள்அரபு நாடுகள் பணக்கார கோலம் பூண்டபின் அங்கு உணவுக்கு உத்திரவாதம், போரில் சிக்கிய நாடுகளை தவிர‌கிழக்கே சீனாவும் ஜப்பான் போன்ற நாடுகளின் கவனமே தனி, சீனா ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எல்லாம் விளையவைத்து தன் நாட்டு பசியினை போக்குகின்றதுஇந்தியா 1940களில் கடும் பஞ்சத்தில் சிக்கியது, உலகபோரும் வெள்ளையனின் ஏனோதானோ மனநிலையும் அதற்கு காரணம், இவ்வளவுக்கும் வங்கம் பஞ்சாப் தஞ்சை கோதாவரி டெல்டா என வளமான பகுதிகளை கொண்ட நாடு இதுஅந்த போர்கொடுமையில்தான் சப்பாத்தியும் பரோட்டாவும் தென் இந்தியா வந்தது, அதுவரை தமிழருக்கு அந்த உணவு அந்நியமேசுதந்திர இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மேல் எழுந்தது, அதில் நேருவும் அவரின் உணவு கொள்கையும் மறக்க முடியாது, அணைகளை கட்டி விவசாயத்தை பெருக்கி பஞ்சத்தைபோக்கினார்கள்தமிழகத்தில் பெருமகன் காமராஜர் அதை செய்தார் பெரும் அணைகளை கட்டி விளைச்சலை பெருக்கி பசிபோக்க எண்ணினார், பள்ளி குழந்தைகளின் பசி உணர்ந்த ஒரே தலைவன் அவரே, அதற்காக அவர் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் இன்றும் உலக நாடுகள் பலவற்றில் உண்டு”வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்” என மனமார நம்பியவர் அவர்அவர் காலத்தில் உலக பஞ்சம் மற்றும் காஷ்மீர் போரினால் ஏற்பட்ட பஞ்சத்தை வைத்து இங்கு அரசியல் செய்து அவரை வீழ்த்தினர் என்பது வேறு விஷயம்இன்று நமக்கெல்லாம் உணவு கிடைக்கின்றது, அது ஆர்கானிக்கா இல்லையா மகா சுவையான விருந்தா இல்லையா என்பதல்ல விஷயம், பசியால் வாடுவோர் என யாருமில்லை130 கோடி மக்களுக்கும் இன்று ஓரளவு உணவு பாதுகாப்பினை இத்தேசம் உறுதி செய்திருக்கின்றது, இது மாபெரும் சாதனை. இதற்கு அடிதளமிட்டது நிச்சயம் நேருதான், இன்றிருக்கும் அரசும் அதை மேம்படுத்துகின்றதுஇந்தியர் என்றல்ல திபெத்தியர், வங்க அகதி, ஈழ அகதி என எல்லா நாட்டுமக்களையும் வரவேற்று உணவளித்து காக்கின்றோம்நிச்சயம் இந்தியர் ஆசீர்வதிக்கபட்டவர், இப்பொழுதெல்லாம் எல்லா நாட்டு அரிசியும் காய்கறியும், மாமிசமும் எல்லா வகை உணவும் இந்தியாவில் கிடைக்கின்றது, குக்கிராமங்கள் வரை உணவு தட்டுப்பாடு இல்லைஉற்பத்தியும் நுகர்வும் இறக்குமதியும் ஏற்றுமதியும் அந்த சமநிலையினை காக்கின்றன, அரசு அதில் சரியாக இருக்கின்றதுஉணவின் அருமை தெரியவேண்டுமானால் ஒரு நேரம் விரதம் இருந்து பாருங்கள் அல்லது எதுவுமே கிடைக்கா காட்டில் ஒரு நாள் பசியோடு அமர்ந்து பாருங்கள், கையில் பணமோ கார்டோ இல்லாமல் நகருக்குள் சுற்றி பாருங்கள்அப்பொழுது தெரியும் உணவின் அருமைஅப்படியும் தெரியவில்லை என்றால் தமிழக டிவிக்களை மாற்றிவிட்டு உலக செய்திகளை பாருங்கள்ஒரு சொட்டு பாலுக்காக அழும் ஆப்ரிக்க குழந்தை, ஒரு துண்டு ரொட்டிக்காக ஏங்கி நிற்கும் சிரிய குழந்தை, ஒரு கவளம் உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் போன்றவர்களை பாருங்கள் உணவின் அருமை கண்ணீரோடு புரியும்நல்ல அரசும், விவசாய வசதிகளும் உற்பத்தியும் இல்லா நாடுகள் அப்படித்தான்..நாமெல்லாம் எவ்வளவு ஆசீர்வாதமான நாட்டில் இருக்கின்றோம் என்பது அப்பொழுதுதான் புரியும், நாம் பணக்காரனா ஏழையா என்பதல்ல விஷயம் ஆனால் நமக்கான உணவு உறுதி செய்யபட்டிருக்கின்றதுஇந்தியாவில் காணப்படும் ஒரு கொடுமை உணவு விரயம், உணவகமோ பந்தியோ நான் பணம் கட்டுகின்றேன் நான் மொய் வைக்கின்றேன் என அள்ளி போட்டு யானை புகுந்த வயலாக ஆக்கி அதை தூர எறிகின்றார்கள்இது பல இடங்களில் நடக்கின்றது ,உணவு வீணாகின்றதுபுனிதமான உணவினை வீணாக்குவது பெரும் பாவத்தில் ஒன்றுஉணவு விவசாயியின் உழைப்பில் வருகின்றது , இப்பூமி அதைவிளைய வைக்கின்றது, வானம் நீர் தெளித்து வளர்க்கின்றது, கடலும் அள்ளிகொடுக்கின்றதுஇவை எல்லாம் மாபெரும் இறைவனின் ஆசிகள், அந்த ஆசீர்வாதத்தை வீணடித்தல் கூடாதுஎல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும், உலகில் பசி பட்டினி ஒழியட்டும் என பிரார்த்திப்போம்இந்தியாவில் பசி ஒழிந்திருக்கின்றது அது இன்னும் ஆதரவற்றோர், முதியவர், ஏழைகள், நோயுற்றோர் என எல்லோரும் நிறைவு பெறும் அளவு ஒழிக்கபட வேண்டும்அந்த பசியினை போக்கும் விவசாயியும் காக்கபடல் வேண்டும்உணவிட்ட அவதாரங்களான கண்ணன் , இயேசு முதல் குருநாணக் வள்ளலார் வரையும், கரிகாலன் முதல், அந்த பென்னிகுயிக் முதல், நேரு காமராஜர் முதல் இன்று மாபெரும் அணைகட்டி திறந்த மோடிவரையும்பசுமை புரட்சி விஞ்ஞானிகள் முதல் கிராமத்து விவசாயி வரையும் பசிபோக்கும் அனைவரையும் நன்றியோடு நினைப்போம்அளவோடு உண்போம், அடுத்தவரையும் உண்ணவைப்போம் , எல்லோருக்குமான உணவினை உறுதி செய்வோம் என்பதே இந்நாளின் நிலைப்பாடுசங்கம் இப்பொழுதெல்லாம் சைவமாகிவிட்டது, மீன்குழம்பெல்லாம் இல்லை. என்னமோ தெரியவில்லை காய்கறிகளில்தான் இப்பொழுதெல்லாம் ஒரு சுவை தெரிகின்றது.எந்த ஆடும், கோழியும், மீனும் நமக்காக கொல்லபடவில்லை என்பதில் ஒரு நிம்மதியும் கூட

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s