நல்லதே நடக்கும் என நம்புவோம்..

ராம் ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக இறுதி வாதம் இன்று நிறைவு பெறுகின்றது, அதன் பின் வாதமே கிடையாது, தீர்ப்பு விரைவில் வழங்கபடும்

அந்த மசூதியின் தரவுகள் குழப்பமாகவே இருக்கின்றது, காரணம் பாபர் வருமளவும் அதாவது 1500களுக்கு முன்பு அங்கு அந்த மசூதி இல்லை,

ஆனால் பாபருக்கு முன் பெரும் கோவில் ஏதும் அங்கு காணபடவில்லை எனினும் அப்பகுதி ராமனின் கோட்டை என்றே அழைக்கபட்டிருக்கின்றது

இன்றும் பாருங்கள் அது மேடான பகுதியே

அதில் குழந்தை ராமன் அதாவது பால ராமன் கோவில் ஒன்று சிறியதாக இருந்திருக்கின்றது

அந்த காலகட்டம் வித்தியாசமானது ஆப்கன் மன்னர்கள் வருவதும் ஆலயங்களை கொள்ளையிடுவதுமாக இருந்திருக்கின்றார்கள்,

அந்த பால ராமன் கோவில் அதில் இடிபட்டு மறுபடியும் வழிபாடுகள் தொடங்கும் பொழுது பாபர் வந்திருக்கலாம்

புத்தமும் இந்துமதமும் மாறி வந்த பகுதியில் அந்த வளாகம் ஜெருசலேம் போல மாறி மாறி உருமாறி வந்திருந்தாலும் அந்த பகுதியின் பெயர் ராமா கோட்டை என்பது மாறவில்லை என்பது கவனிக்கதக்கது

பாபர் தளபதி மசூதி கட்டும் பொழுது கூட அது “பிறந்த இடத்து மசூதி” ((Masjid-i Janmasthan) என்றுதான் அழைக்கபட்டதற்கான வரலாறு உண்டு, யார் பிறந்த இடத்து மசூதி என பாபர் கோஷ்டி சொல்லி வைத்திருந்தால் சிக்கலே இல்லை

ஆனால் அவர்களும் சொல்லவில்லை

அந்த மசூதியின் உண்மை பெயர் அதுதான், அப்பகுதியில் அது Masjid-i Janmasthan என்றுதான் அழைக்கபட்டது

இந்து ஆலயத்தின் மேல் கட்டபட்ட மசூதி அது என்பது 500 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்துவரும் வாதம்

வெள்ளையன் அந்த மசூதிபக்கம் இந்துக்களும் வழிபட அனுமதி கொடுத்து பிரித்தும் கொடுத்திருந்தான், எனினும் இந்த இந்து இஸ்லாம் மோதல் தன் ஆட்சிக்கு நல்லது எனவும் கண்டான்

வாதங்கள் மோதல்கள் என மாறி மாறி சென்ற விவகாரம் கரசேவகர்களின் தாண்டவத்துக்கு பின் கோவில் இருந்த இடத்தில் கோவில் வேண்டும் என்றும் மசூதி இருந்த இடத்தில் மசூதி வேண்டும் என வரிந்து கட்டல்கள்

இடையில் அகழாய்வு எல்லாம் நடந்து பெரும் கட்டடம் இருந்தது என்ற முடிவும் வந்தது

அது ராமர் கோட்டை என அழைப்படுவதும், பாபர் பிறந்த இடத்து மசூதி என அதற்கு பெயர் சூட்டியதும் அதற்கு முன் இடிபாடுகளுடன் சிறிய பால ராமன் கோவில் இருந்ததும் உண்மை

பாலராமன் கோவிலுக்கு முன் அது புத்த விகாரையாக இருந்திருக்கலாம் என்பதும் வாதம் ஆனால் அது எந்த அளவு உண்மை என தெரியவில்லை

நிச்சயம் இந்த தீர்ப்பு இந்தியாவினை அதிரவைக்கும் அதை தாண்டி உலக அதிர்வினையும் கொடுக்கும்

நல்லதே நடக்கும் என நம்புவோம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s