கப்போஸ்தலரனா சைமன் எழுதிய சுவிஷேசம் : அதிகாரம் 2

கப்போஸ்தலரனா சைமன் எழுதிய சுவிஷேசம் : அதிகாரம் 2

பரமபிதாவுக்கு எதிராகவும் வடகிழக்கு தேசத்தின் ஜனங்களுக்கு எதிராகவும் படையெடுக்கும் மேற்றிசை சேனைகளின் அட்டூழியங்கள் அதிகரித்தன. இதனால் பொதுஜனங்கள் அல்லலுற்றார்கள் என்பதை அறிந்த நீதிமான்களுக்கு நிகரான எட்டு ஸ்திரிகள் மேற்திசை சேனைகளுக்கு எதிராக உபவாசம் இருக்கத் தொடங்கினர்.

இதை அறிந்த பரமபிதா உபவாசங்கள் இருப்பதால் மட்டும் பொதுஜனங்கள் மீட்சியடையப் போவதில்லை. என் வார்த்தைகளைக் கேட்டு அதையே விசுவாசித்து அதன்படியே பின்பற்றுவதனால் மட்டுமே அக்காரியம் நடக்கும் என்று அவர்களுக்கு சொல்லுங்கள் என்றார்.

அதன்படியே அவருடைய சீடர்கள் அந்த ஸ்திரிகள் உபவாசம் இருக்குமிடம் சென்ற பரமபிதாவின் வர்த்தைகளை அவர்களுக்கு பிரசங்கித்து அவர்களை பரமபிதாவிடம் கொன்றுசென்றனர். பரமபிதா அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுக்கும் தன் பரமண்டல ஜெபத்தை உபதேசித்தார்.

சில காலத்தின் பின்னர் அந்த ஸ்திரீகளின் ரூபவதியான ஒருத்தியை பரமபிதா அறிந்தார். அதன் காரணமாக அவள் கர்ப்பவதியானாள். ஒரு நாள் நடுநிசியில் பரமபிதாவின் கனவில் தேவதூதன் தோன்றி “மாற்றான் ஒருவனுக்கு மனைவி ஆக வேண்டியவளை நீர் அறிந்ததென்ன?, இது எப்படி கைகூடும்?” என வினவினான்.

பரமபிதா திடீரென விழித்தெழுந்தார். அந்த ஸ்திரீயை தன்முன்னே நிறுத்தி “நீர் தரிசனங்களால் என்னை ஆலிங்கனம் பண்ணி, சொப்பனங்களால் என்னை கலங்கப்பண்ணுகிறாயோ?” என்றார்.

அதற்கு அவர் பிரதியுத்தரமாக….. “பரமபிதாவே என் விசுவாசத்தை சந்தேகம் கொள்வதென்ன? நான் என்னை முழுமையாகவே என் தேவனாகிய உனக்கு ஒப்புக்கொடுக்கத் தயாராய் இருக்கிறேன். இன்னும் கூடவே ஞானத்தையும், விவேகத்தையும் உமக்கு அதிகரித்து உமக்கு முன்னிருந்த ராஜாக்களுக்காகிலும், உமக்கு பின்னிருக்கப் போகும் ராஜக்களுக்காகிலும் இல்லாத ஜஸ்வரியத்தையும், கனத்தையும் உமக்குத் தந்து உமது கோத்திரத்தை இவ்வுலகமெல்லாம் பெருக்குவேன்” என்றாள்.

அவள் அப்படிக் கூறிக்கொண்டே பரிமள தைலத்தை எடுத்து தன் இருகைளினாலும் பரமபிதாவின் பாதங்களைக் கழுவினாள்.

அப்போது பரமபிதா அவளை நோக்கி உன் விசுவாசம் உன்னை மீட்டது. உன் சித்தம் நிறைவேறட்டும் என்றார். அவள் வாக்களித்தபடியே பரமபிதாவுக்கு முப்பது வயதானபோது அவள் தனது மூத்த குமாரனைப் பெற்றெடுத்தாள்.

மேலும் ஒரு குமாரத்தியும் இன்னுமொரு குமாரனுமாக பரமபிதாவின் கோத்திரம் தளைத்தது. பரமபிதா தனது மூத்த குமாரனை தனது சேனைகளின் தலைவனாக்கவும், தன் குமாரத்தியை தன் இராட்சியத்தின் இராஜகுமாரியாக்கவும் எண்ணம் கொண்டார்.

அறிஞர்களையும் புத்திமான்களையும் அழைப்பித்து தம் குமாரர்களுக்கு ஞானங்களைப் போதிக்குமாறு கட்டளையிட்டார். தன் குமாரத்திக்கு வண்ண வண்ணமான ஆடை அணிகலங்ளை அணிவித்து பரமபிதா அழகு பார்த்தார். அதன் பின்னர் தன் குமாரர்கள் உலக ஞானங்களைக் கற்றுத்தேறும்படிக்கு அவர்களை தூரதேசம் அனுப்பி வைத்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s