கர்வா சௌத்

தமிழ்நாட்டில் வரலட்சுமி நோன்பு அல்லது காரடையான் நோன்பு என்றொரு நாள் உண்டு , அதாவது திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் நோன்பு இருப்பார்கள்

வட இந்தியாவில் அப்படி கர்வா சௌத் நோன்பு உண்டு இன்று அனுசரிக்கின்றார்கள்

தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக அந்த நோன்பு அனுசரிக்கபடும் ,

கணவனுக்கு நோன்பிருக்கும் மனைவியருடன், வருங்கால கணவனுக்காக நோன்பு இருக்கும் இளம்பெண்களும் சேர்ந்து நோன்பிருக்கின்றார்களாம்

ஆனால் ஒரு பெண்ணும் ராகுல்காந்தி என்பவருக்காக நோன்பு இருக்கவில்லை என தெரிந்தபின் காங்கிரஸ் பக்கம் சோக அலை வீசுகின்றது

இனி ராமதாஸ் என்ன சொல்வார்?

முரசொலி அலுவலகத்தின் ஒருபகுதி பஞ்சமி நிலத்தில் உள்ளது என ராமதாஸ் சொல்ல, ஆத்திரபட்ட முக ஸ்டாலின் அதன் பட்டாவினை எடுத்து வெளியிட்டிருகின்றார், இனி ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார்

இனி ராமதாஸ் என்ன சொல்வார்?

அந்த சொத்து உன் பெயரில் இல்லையா? இந்த சொத்து உன் மகன் பெயரில் இல்லையா? இந்த சொத்து உன் பினாமி பெயரில் இல்லையா என கேட்டுகொண்டே இருப்பார். முக ஸ்டாலினும் ஒவ்வொரு சொத்து பத்திரமாக காட்டிகொண்டே இருப்பார்

ஒரு திராவிட தலைவரை ரியல் எஸ்ட்டேட் புரோக்கர் அளவுக்கு கொண்டுவந்து விட்டார் மருத்துவர், இந்த பாவம் அவரை சும்மா விடாது.

சாவர்க்கர்

அந்த சாவர்க்கர் மேல் சில சர்ச்சை இருக்கலாம் ஆனால் அவரின் நாட்டு பற்றும் முதலில் அவர் செய்த தீவிர போராட்டமும் மறுக்க கூடியது அல்ல.

நல்ல அறிவாளி, படிப்பு அவருக்கு இயல்பாய் வந்தது. எந்த இந்திய தலைவருக்கும் இல்லா ஒரு வித்தியாசமான குணம் அவருக்கு இருந்தது, அது இந்தியாவினை வரலாற்று பாணியில் நோக்குவது

அலெக்ஸாண்டரை உலகம் மாவீரன் என சொன்ன காலத்தில் அவன் இந்திய எல்லையில் பெற்ற தோல்வியினை நிறுவி சொன்னவர் சாவர்க்கர். இதெல்லாம் ஐரோப்பியரின் கவுரவத்திற்கு வந்த இழுக்காக கருதிய அவர்கள் அன்றே குறி வைத்தனர், இன்னும் ஏராள இந்திய வரலாறுகளை வெளிகொணர்ந்தார் சாவர்க்கார்

1857 சிப்பாய் புரட்சி வெறும் கலவரம் என உலகெல்லாம் பிரிட்டிசார் பூசி மெழுகியபொழுது, அது இந்திய சுதந்திரபோர் என 1907 புத்தகம் எழுதி உலகினை திரும்பி பார்க்க வைத்தவர் சாவர்க்கர் . தன் படை வீரர்கள் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம் சாவர்கருடையது என உத்தரவே பின்னாளில் போட்டார் நேதாஜி

லண்டனில் பாரிஸ்டர் படிக்க சென்றாலும் மனிதர் சும்மா இருக்கவில்லை, இந்திய சங்கத்தை உருவாக்கினார். ஆயுதங்களை உருவாக்கி பயிற்சியளித்தார் அதில் பெண்களும் இருந்தனர்

நிச்சயமாக சொல்லலாம் நேதாஜிக்கு இவ்விஷயத்தில் சாவர்க்கரே முன்னோடி. அவரின் வீரர்கள் இந்தியாவில் ஆளும் கொடூர கலெக்டர்கள் லண்டன் வரும்போது அங்கே தீர்த்துகட்டினர், சிங்கத்தின் குகையில் நுழைந்து அதன் பிடறியினை உலுக்கினார் சாவர்க்கர்

முதலில் தடுமாறிய ஸ்காட்லான்டு யார்டு பெரும் போராட்டத்திற்கு பின் அவரை கைதுசெய்தது, விசாரணைக்கு கப்பலில் இந்தியா வந்தபொழுது கப்பல் ஓட்டை வழியாக தப்பி சாகசமாக பிரான்ஸை அடைந்தார் சாவர்க்கர்

பிரிட்டனில் இருந்தே பிரிட்டிஷாரை சொல்ல கடும் துணிச்சல் வேண்டும் அது அவருக்கு இருந்தது

பின் பிரான்ஸ் பிரிட்டன் அரசுகள் பேசி வழக்கு நடந்து அவருக்கு 50 ஆண்டு சிறை என முடிவானது. நிச்சயம் அவரை சுட்டுகொல்லும் முடிவில்தான் பிரிட்டன் இருந்தது, ஆனால் பிரான்ஸ் விவகாரம் வந்தபின் அதற்கு பல விவகாரங்கள் வந்ததால் தப்பினார் சாவர்க்கர்

இந்திய சுதந்திர போராட்டத்தில் 1911ல் 50 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்ட ஒரே தலைவர் அவர்தான்

கொடூர அந்தமான் சிறையில் அவரை வைத்தார்கள். செக்கிழுத்தார், மரம் வெட்டினார் இன்னும் 6 மாதம் இருட்டறையில் அடைத்தல், தனிச்சிறை என அவரை உடனே கொல்லமுடியாவிட்டாலும் சித்திரவதை செய்து கொல்ல முடிவு செய்தார்கள்

கல்பாணி எனும் படத்தில் வந்த சித்திரவதைகளை அவரும் அனுபவித்தார் . அப்பொழுதும் எழுத பேனாவும் பேப்பரும் கேட்டாலும் கிடைக்கவில்லை. இந்த வலிகள் பின்னாளில் மறக்கும், கூடாது இது மறக்கவே கூடாது என சுவற்றில் கல்லால் எழுதிவைத்தார் சாவர்க்கர். புகழ்பெற்ற கவிதைகள் அங்குதான் அவரால் எழுதபட்டன‌

இதுவரை மிக சரியாக சென்ற அவரின் வரலாறு இதற்கு பின் கொஞ்சம் மாறுகின்றது, மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்ததால் 1921ல் அவருக்கு ரத்னகிரி சிறைக்கு மாற்றம் கிடைக்கின்றது

1924ல் நன்னநடத்தை என விடுதலையும் செய்யபட்டார்

ஏன் விடுதலை செய்யபட்டார் என்றால், அதுதான் வெள்ளையன் தந்திரம். சாவர்க்கர் பற்றி அவனுக்கு தெரியும், காந்தி பற்றியும் தெரியும் இருவரையும் களத்தில் விட்டால் அவனுக்கு வேலை குறைவு

வெள்ளையனின் தந்திரம் அட்டகாசமாக பலித்தது, 1925ல் சாவர்க்கர் இந்து மகாசபையினை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் முதல் இன்றைய பாஜக வரை அதுதான் தாய் இயக்கம்

காந்திக்கும் சாவர்க்கருக்கும் முட்டி கொண்டது. இருவரும் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும் வழி வேறாய் இருந்தது, காந்திய அஹிம்சை பலருக்கு பிடிக்கவில்லை அதில் சாவர்க்கரும் ஒருவர்

இதன் பின் இந்துத்வா பேச தொடங்கினார் சாவர்க்கர், ஆனால் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களை செய்யவும் அவர் தயங்கவில்லை. எல்லா சாதி இந்துக்களும் வணங்க பதித பவன் எனும் ஆலயத்தையும் ஏற்படுத்தினார்

உண்மையில் அன்று சாவர்க்கருக்கு ஆதரவு கூடிற்று, எங்கிருந்தோ வந்தார் ஜின்னா, பாகிஸ்தான் வேண்டுமென்றார். இந்தியா ரத்தத்தில் மிதக்கும் நாள் நெருங்கிற்று. உண்மையில் இந்தியாவிற்கு சுதந்திரம் தரும் திட்டமெல்லாம் அவனுக்கு இல்லை. ஹிட்லர் அடித்த அடியில் பொறி கங்ங்கி இருந்தது, வேறு வழியே இல்லையா என சர்ச்சில் போன்றவர்கள் கேட்டபொழுது இனியும் இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது சாத்தியமில்லை என லண்டன் பாரளுமன்றம் சொன்ன பின்பே சுதந்திரம் வந்தது

ஆனால் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் மிக நுட்பமாக பழிவாங்க பாகிஸ்தானை பிரித்துகொடுத்தான் வெள்ளையன், காந்தியின் உண்ணாவிரதம் எல்லாம் ஜின்னாவிடம்ம் எடுபடவில்லை. டம்மி ஆக்கியிருக்க வேண்டிய ஜின்னாவினை காந்தி வெல்லவிட்டது தவறு

இதன் பின் காங்கிரசுக்கும், சாவர்கருக்கும் பெரும் அபிப்ராய பேதம் வந்தது. சர்ச்சைகள் வெடித்தன . காந்தி கொலைக்கு பின் சாவர்க்கர் தேசவிரோதி ஆக்கபட்டார்

உண்மையில் காந்தியினை கொல்ல சாவர்க்கருக்கு எந்த அவசியமுமில்லை , கொல்லவேண்டும் என்றால் 1947க்கு முன்பே கொன்றிருக்கலாம். அதன் பின் காந்தி இருந்தாலோ இறந்தாலோ ஆகபோவது ஒன்றுமில்லை எனும்பொழுது ஏன் கொல்லபட வேண்டும்?

வரலாற்றின் சில பக்கங்கள் புரியவில்லை. இத்தேசம் பிரிந்து போக ஒப்புதல் அளித்த தலைவர்களில் பட்டேலும் ஒருவர்

காந்தியாவது உண்ணாவிரதம் இருந்து எதிர்த்தார், பட்டேல் சனியன் தொலைந்தது என சொல்லிகொண்டிருந்தார்

ஆனால் காந்திதான் கொல்லபட்டார், பட்டேலுக்கு ஆபத்தே இல்லை, ஏன் என்றால் புரியவில்லை.

மிகவருத்தமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அவரை இந்நாட்டின் எதிரிபோலவே நடத்திற்று, வெள்ளையன் பறித்த அவரின் வீட்டை கூட அது திரும்ப கொடுக்கவில்லை

எந்த சலுகையும் அவருக்கு இல்லை, வெள்ளையன் கொடுத்த சில சலுகைகளை கூட கொடுக்கமறுத்தது காங்கிரஸ்

நிச்சயம் இதெல்லாம் மகா தவறான விஷயங்கள். துளியும் சுயநலமின்றி நாட்டிற்காய் உழைத்து , சுதந்திர இந்தியாவில் ஒரு அரசு பதவிக்கும் ஆசைபடாமல், கட்சி நடத்தாமல் , அமைதியாய் நாட்டுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்த அம்மனிதனை அப்படி நோகடித்திருக்க கூடாது

ஏன் பகைத்தார்கள்?

காஷ்மீர் விஷயத்தில் ஏற்பட போகும் அபாயத்தை அம்மனிதன் முன்பே சொன்னார். பின்னாளில் காங்கிரஸ் அரசு அதில் சிக்கி சீரழிய முன்பே சொன்னேன் அல்லவா? என அவர் சொன்னபொழுது அவர்களுக்கு சகிக்க முடியவில்லை

ஆச்சரியமாக சீனாவின் நயவஞ்சகம் பற்றியும் எச்சரித்தார் சாவர்கர், ஆனால் அவர் மறைந்த பின்பே சீனபடை எடுப்பு நடந்தது

நாட்டிற்காக போராடிய அம்மனிதன் ஒதுக்கபட்டு மூலையில் எறியபட்டதும், பெரும் தியாகம் ஏதும் செய்யாத ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவரானதும் நிச்சயம் இந்நாட்டின் கருப்பு பக்கங்கள்

அதோடு விட்டார்களா? ஒரு கட்டத்தில் மனம்வெறுத்து அம்மனிதன் சாக தீர்மானித்தார். உண்ணாவிரதம் தொடங்கினார், என்னால் செயல்பட முடியா நிலையில் சமூகத்திற்கு பாரமாய் இரேன் என சொல்லி அவர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அரசு தடுக்கவில்லை அவர் செத்தும் போனார்

அந்த சாவர்க்கரை இந்த பெரியார் என்பவரோடு ஒப்பிடுவது கொஞ்சமும் பொருந்தாது

பெரியார் கம்யூனிசம் பேச முயற்சித்தார் அன்றே வெள்ளை அரசு முறைத்தது அவ்வளவுதான் கருப்பு சட்டை போட்டு கம்யூனிசமும் பேசாமல் வெள்ளையனை எதிர்க்காமல் எதனையோ செய்துகொண்டிருந்தார்

சாவர்க்கர் சுதந்திர போராளி, சில பல தியாகங்களை சித்திரவதைகளை தேசத்துக்காக அனுபவித்தவர்

ஆனால் பெரியார் நாட்டை பற்றி கொஞ்சமும் சிந்திக்கவில்லை, திராவிட நாடு கேட்டது முதல் 1947ல் வெள்ளையன் சென்றபொழுது கண்ணீர் விட்டு அழுது துக்கதினம் கொண்டாடினார் பெரியார்

வெள்ளையன் இங்கே வைத்திருந்த தன் விசுவாசமான கூட்டத்தில் பெரியாரே தளபதியாய் இருந்தார். வெள்ளையன் வைத்திருந்த செருப்புகளில் ஒன்று அந்த கூட்டம்

சாவர்க்கரின் நாட்டுபற்றுடனும் அந்தமான் சிறைகாலத்துக்கு முன்பாக அவர் போராடிய போராட்டத்திற்கு அருகில் கூட பெரியாரால் வரமுடியாது

சாவர்க்கரை சிலர் விமர்சிக்கலாம் ஆனால் நாட்டுக்கும் இந்திய தேசியத்துக்கும் ஒரு புல்லையும் புடுங்காத பிரிவினைவாத அழிச்சாட்டிய கூட்டமான திக திமுக கோஷ்டி விமர்சிப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை

இந்தியாவின் ராஜதந்திரம் சிரியாவிலும் சாதித்திருகின்றது

இந்தியாவின் ராஜதந்திரம் சிரியாவிலும் சாதித்திருகின்றது, துருக்கியின் சிரிய தாக்குதலுக்கு மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்

மோடி சம்பிரதாயத்துக்கு கண்டிக்கின்றார் என நினைத்தால் விஷயம் இருந்திருகின்றது

மோடி சிரியாவுக்கு இறையாண்மை உண்டு, துருக்கி தன் அட்டகாசத்தை நிறுத்தவேண்டும் என கண்டித்தவுடன் சிரிய அரசு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டை ஆதரிக்கின்றோம் என்கின்றது

இது இந்தியாவுக்கு மிகபெரும் வெற்றி

ஒரு ஷியா நாடு, ஷியா இஸ்லாமியர் அதிகமுள்ள காஷ்மீர் விவகாரத்தில் இந்திய சார்பு எடுப்பது சர்வதேச அரங்கில் சாதகமான விஷயம்

இடம் பார்த்து அடித்து ஆடுகின்றார் மோடி..

ராமதாஸ் பொறுக்கவில்லை

விக்கிரவாண்டி இடைதேர்தல் தொடர்பாகத்தான் ராமதாஸும் முக ஸ்டாலினும் மோத தொடங்கினார்கள் , வன்னியருக்கான உள் இட ஒதுக்கீடு என தன் அடிமடியிலே ஸ்டாலின் கை வைத்ததை ராமதாஸ் பொறுக்கவில்லை

இடம் பார்த்து முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என திருப்பிவிட்டார், திமுக அது பட்டா நிலம் என நிரூபித்துவிட்டு அடுத்த அடியினை தொடுக்கின்றது

பொதுவாக‌ ஆபிசில் மேனேஜருக்கு டைப் அடிக்கும் பெண் மீதும், கட்டட மேஸ்திரிக்கு சித்தாள் மேலும் ஒரு ஈர்ப்பு வருவது போல சில டாக்டர்களுக்கு நர்ஸ் மேல் வரும்

இதெல்லாம் தொழில் நன்றாக நடக்க வேண்டும் எனும் தொழில் சார்ந்த ஈர்ப்பு அன்றி வேறல்ல‌

பழைய நர்ஸ் ஒருவர் கதையினை திமுக தரப்பு தூசு தட்டுகின்றது, விஷயம் நர்சுக்கு தெரிந்து ஆந்திர மாநில சிவபார்வதி போல அந்த “சின்னம்மா” களத்துக்கு வராத வரை நல்லது

இதற்கு பாமக தரப்பு எந்த நடிகை அல்லது மீடியா பெண்ணை கோர்த்துவிடுமோ தெரியாது, திமுகவின் தொழில் ரகசியம் அவர்களுக்கும் அத்துபடி

மொத்தத்தில் இருவரும் சமூக நீதி மற்றும் பெண் விடுதலையினை நன்றாகவே காத்து கொண்டிருக்கின்றார்கள்

உலக அளவில் கவனிக்கபடுகின்றது

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது உலக அளவில் கவனிக்கபடுகின்றது

உலகமே ஒதுக்கி வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு, அதுவும் ஆபத்து நிறைந்த நாட்டுக்கு பிரிட்டிஷ் இளவரசர் ஏன் வந்தார் என ஆளாளுக்கு கடும் ஆராய்ச்சி அனுமானங்கள்

இந்த வில்லியம்ஸின் தாய் அதாவது பிரிட்டிஷ் இளவரசி டயானா ஒரு காலத்தில் நம்ம ஊர் நயன் தாரா போல அடிக்கடி காதலரை மாற்றிகொண்டிருந்தவர்

அந்நாளைய உலக அழகரான இம்ரான்கானுக்கும் அவர் ரசிகையாய் இருந்தார், இம்ரான்கானும் அவருக்கு ரசிகராய் இருந்தார்

ஒருவேளை வில்லியம்சிடம் பெருமூச்சோடு தன் பழம் நினைவுகளை இம்ரான் “அதெல்லாம் ஒரு காலமப்பா..” என முதல்மரியாதை சத்யராஜ் போல சொல்லியிருப்பாரோ என்னமோ?

நிச்சயம் அந்த ஆட்டோகிராப் கதைகளை கேட்க பிரிட்டிஷ் இளவரசர் வந்திருக்கமாட்டார்,

விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது

நிலவரத்தை கண் கொத்தி பாம்பாக கவனிக்கும் இந்தியா பிரிட்டிஷ் இளவரசர் காஷ்மீர் பற்றி ஒன்றுமே பேசாமல் கிளம்பிசென்றதை பார்த்து தலையாட்டிகொண்டிருக்கின்றது..

நிலைக்கட்டும் முரசொலி அலுவலகம்

“உடன்பிறப்பே, நம் இனமான பத்திரிகையாம், குலம் காத்த கண்மணியாம் , கழகத்து முதல் பிள்ளை இந்த முரசொலி ஏடு இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்கின்றார் ஒரு உத்தமர்

இது பஞ்சமி நிலமா இல்லை தோட்டபுறத்து உத்தமி நிலமா என்பதல்ல விஷயம், இந்த நிலத்தில் குடியிருக்கும் முரசொலிதான் பஞ்சமர் என ஒதுக்கபட்ட மக்களுக்காக ஒலித்திருக்கின்றது, உழைத்திருக்கின்றது, போராடி அவர்களின் உரிமையினை காத்திருக்கின்றது.

பஞ்சம மக்களுக்காக அது சந்தித்த பஞ்சமா பாதகங்கள் கொஞ்சமா நெஞ்சமா உடன்பிறப்பே?

அந்த பஞ்சம பத்திரிகையில் இந்த பஞ்சமனின் பேனா தொடுத்த தீயில்தான் பார்ப்பானியம் ஒழிந்து சமூக நீதி மலர்ந்து அந்த உத்தமரெல்லாம் மருத்துவரானார்கள்

அந்த நன்றி கூட இல்லா அளவு அவர்களை பார்பானியம் வெறியேற்றி மூளை மழுங்கடித்து வைத்திருக்கின்றது உடன்பிறப்பே

இல்லையென்றால் கடந்தவருடம் வரை வானமும் வையகமும் கடலும் இருக்கும்வரை என சவால் விட்டவர்கள் வானத்தையும் கடலையும் ஏறேடுத்தும் பார்க்காமல் ஓடி சென்று சேருவார்களா, சேர்ந்து மானம் கெட்ட தோல்வியினை சந்திப்பார்களா?

அவர்கள் வைத்தியசாலை வைத்திருந்தபொழுது கழக அரசுதான் ஆண்டது, அந்த வைத்தியசாலையின் பட்டாவினை கேட்டதா? இல்லை மிரட்டியதா?

இல்லை, ஏன்? ஒரு ஒடுக்கபட்ட இனத்தின் மருத்துவன் பஞ்சம மக்களுக்கு சேவையாற்றுகின்றான், இதல்லவா நீதிகட்சியும், பெரியாரும் அண்ணாவும் கண்ட கனவு என நாம் மகிழ்ந்திருந்தோம்

ஆனால் ஒரு தாழ்த்தபட்டவனின் ஏடு பஞ்சம மக்களுக்காக முழங்குவதை அந்த நஞ்சுமனம் புரியமறுப்பது ஏன் என்பதுதான் நம் நெஞ்சத்தில் பாய்ந்த குத்தீட்டி, தலையில் தாங்கிய தீ சட்டி.

இதெல்லாம் பஞ்சம நிலத்து சிக்கல் அல்ல, ஒரு பஞ்சமன் எப்படி முரசொலி நடத்தலாம் எழுதலாம் எனும் பார்ப்பானிய வெறுப்பே அன்றி வேறல்ல கழக கண்மணியே

அடலேறே, சிங்கமே, இனம்காக்க வந்த புலியே, தமிழ் காக்க வந்த கட்டிளங்காளையே சொல்.

பஞ்சமர்களுக்காக உழைக்கும் இந்த பஞ்சமனின் முரசொலி பஞ்சமர் நிலத்தில் இல்லாமல் தையலாள் மலர்ந்திருக்கும் தோட்டத்தின் மஞ்சத்து அறையிலா குடியிருக்கும் கண்மணியே?

தோட்டா துப்பாக்கியில்தான் இருக்க வேண்டும், பேனா காகிதத்தின் மேல்தான் நிற்க வேண்டும், பூனூல் பார்ப்பான் மேல்தான் தொங்க வேண்டும், பஞ்சமருக்கான பத்திரிகை பஞ்சமன் நிலத்தில்தான் அமர்தல் வேண்டும், இதில் என்ன குறை கண்டார்கள் என் அடலேறே?

இதெல்லாம் பஞ்சமர் நிலத்தை எப்படி பஞ்சமர் பயன்படுத்தலாம்? அதில் ஒரு பிள்ளையார் கோவிலோ இல்லை மரத்தடி மாமுனிகள் ஆலயமோ கட்டி விபூதி அடிக்கலாமே என்ற ஆரிய பார்ப்பானிய சதி அன்றி வேறல்ல‌

பஞ்சம நிலத்தில் பார்ப்பான் நுழைய அதில் பஞ்சமர் தன் அறியாமை நினைத்து கைகட்டி நிற்கவா அண்ணாவும் பெரியாரும் போராடினார்கள், சொல் உடன்பிறப்பே

ஆண்டாண்டு காலம் மொத்த திராவிட இனத்தையும் ஆக்கிரமித்து ஆட்டம் போட்ட பார்பானியம், பஞ்சமருக்காக உழைக்க, அறிவுசுடர் ஏற்ற நாம் ஒதுங்கியிருக்கும் இந்த ஓரடி இடத்துக்கும் படையெடுக்கின்றதென்றால் இதன் பின்னால் உள்ள மாபெரும் சதியினை, பார்ப்பானிய விஷத்தை நீயே அறிந்து கொள்வாய்

நான்குநேரியில் அவர்களை நாக்குதெறிக்க ஓடவிடுவாய், விக்கிரவாண்டியிலே அவர்களை விக்கி விக்கி கதறவைத்து விரட்டி அடிப்பாய், அதுதான் இந்த பஞ்சம சூத்திரபடை அந்த ஆரிய பார்ப்பானிய அடிமைகளுக்கு கொடுக்கும் மாறா வடுவாக அமையும்

பகை ஒழியட்டும், பஞ்சமர் உரிமை மீளட்டும், பஞ்சம பத்திரிகை முரசொலி பஞ்சமருக்காய் தொடர்ந்து முழங்கட்டும்

வாழ்க தமிழ், வெல்க திராவிடம், நிலைக்கட்டும் முரசொலி அலுவலகம்..”