இந்தியாவுக்கு சாதகமான முடிவு

இலங்கை பலாலிக்கு இந்திய பயணிகள் விமானம் சென்றிருகின்றது, அது ஒருவகையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு.

அது பிரிட்டானியர் உருவாக்கிய விமான நிலையம், இரண்டாம் உலகபோரில் ராணுவபயன்பாட்டுக்கு பயன்பட்டது

அந்த விமான நிலையம் வெள்ளையன் காலத்தில் ஆரம்பிக்கபட்டாலும் ஒரு வகையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்தது

இலங்கை இந்தியாவினை மனமார நம்பும் நாடல்ல, தமிழர்களை வைத்து இந்தியா தன் நாட்டில் நுழையும் என சுதந்திரம் அடைந்ததில் இருந்தே எச்சரிக்கையாக இருந்த தேசம் அது, சுதந்திரம் என்ன? 1925ல் சிலோனை இந்தியாவுடன் இணைக்க வெள்ளையன் செய்த காரியத்தை முறித்து போட்டது இலங்கை

அப்பொழுது யாழ்பாண தமிழரும் சேர்ந்து இந்திய இணைப்பை எதிர்த்து முறியடித்தனர்

அதனால்தான் எங்கோ இருக்கும் அந்தமான் இந்தியாவில் இருக்கும்பொழுது இலங்கையால் இருக்கமுடியவில்லை

அந்த இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 1950களின் இறுதியில் அதாவது மலையக தமிழரை விரட்டும்பொழுதே மோதல் தொடங்கிற்று, இலங்கை தமிழருக்கு இந்தியா ஆதரவளிப்பதை அது விரும்பவில்லை

பின்னர் இடம் பார்த்தது , 1971 வங்கப்போரில் இதே பலாலி நிலையத்தை பாகிஸ்தான் பயன்படுத்தலாம் என வலிய அழைப்பு கொடுத்ததது இலங்கை, பலாலியினை பயன்படுத்தினால் யாருக்கு அழிவு?

சாட்சாத் தமிழ்நாட்டை நொறுக்கி போடலாம், இலங்கை அதற்குத்தான் திட்டமிட்டது ஆனால் பாகிஸ்தானிய படைகளை இந்தியா நொறுக்கி போட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை தமிழ்நாடு தப்பியது

இந்த மிரட்டலை தொடர்ந்துதான் இலங்கையினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, கச்சதீவினை கொடுத்து யானைகுட்டியினை வாங்கினார், அப்படியே இன்னும் சில உறுதிகளையும் வாங்கினார்

நமக்கெல்லாம் ஆளில்லா, குடிநீர் இல்லா கச்சதீவை இந்தியா கொடுத்ததுதான் தெரியும் ஆனால் அதன் பின்னால் இருந்த அதாவது பலாலி விமான நிலையத்தை மூன்றாம் நாட்டுக்கு கொடுக்கமாட்டோம் என்ற இலங்கையின் உறுதிமொழி இருந்தது யாருக்கும் தெரியாது

தமிழ்நாட்டுக்கான பாதுகாப்பு கவசம் அது

1975ல் இச்சிக்கல் முடியும் பொழுது 1980களில் அமெரிக்கா திரிகோணமலையில் கால்பதிக்க பார்த்தது, அப்போது இருந்த அதிபர் ஜெயவர்த்தனே அமெரிக்க அடிமை, அவர் பலாலியில் கைவைக்க முடியவில்லை மாறாக திரிகோணமலையில் அமெரிக்காவினை குடியமர்த்த எண்ணிணார்

அப்பொழுதுதான் கொழும்பு கலவரமும் இந்த ஈழபோராளிகள் காலமும் தோன்றின, வாய்பினை சரியாக பயன்படுத்தினார் இந்திரா

சும்மா பேச வா என்றால் ஜெயவர்த்தனே வரமாட்டான், ஆனால் யாராவது அடித்தால் வருவான் அல்லவா? அப்படி அடிகொடுக்க உருவாக்கபட்டதுதான் ஈழ இயக்கம்

அதில் ஜெயவர்த்தனே அடிவாங்கும்பொழுதே தந்திரமாக புலிகளை அமெரிக்கா வளைத்திருந்தது

இந்நிலையில் இந்திரா கொல்லபட ராஜிவும் வந்தார்,இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்தார் அதில் திரிகோணமலை துறைமுகத்து பகுதி இந்திய ஆயில் நிறுவணத்தின் கட்டுப்பாடு என ஒப்படைக்கபட்டது, இன்றும் அவை இந்திய கட்டுபாடே

ராஜிவின் ஒப்பந்தத்தில் தேச நலனும் அமெரிக்க எதிர்ப்பும் இருந்தது, படுபாவி சைமன் அமெரிக்காவின் கூலிபடையாக ராஜிவினை கொன்றுவிட்டான், எல்லாம் அவன் அண்ணன் பிரபாகரனின் உத்தரவு

(இந்தியாவின் உப்பை தின்று இந்தியாவுக்கு பெப்பே காட்டிய புலிகள், அதே பெப்பேவினை அமெரிக்காவுக்கும் காட்டமுயன்றபொழுது சிங்களனுடன் சேர்ந்து புலிகளை ஒழித்து கட்டியது அமெரிக்கா)

அன்று இந்திய அமைதிடையின் வாசலாக இருந்தது இதே பலாலி தளம்

ராஜிவுக்கு பின்பு யாரும் அப்பக்கம் தலைகாட்டவில்லை 1995 வரை இது புலிகள் கட்டுபாட்டில் இருந்தது, சந்திரிகா அதை மீட்டாலும் கண்டுகொள்வார் யாருமில்லை

2009 வரை அல்ல 2014 வரை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை, பொதுவாக காங்கிரஸ் மீது அதுவும் சோனியாவின் கைக்கு காங்கிரஸ் சென்றபின் அவர்கள் மேல் வைக்கபடும் குற்றசாட்டு இதுதான் இந்திரா, ராஜிவ் எடுத்த முயற்சி எதையுமே அவர்கள் தொடரவில்லை, பாதுகாப்பு அஜாக்கிரதைகள் ஏராளம்

ஆனால் மோடி அசத்தினார், இந்திரா விட்டுசென்ற திட்டபடி பலாலியினை இந்திய கட்டுபாட்டில் எடுத்தார், போரில் சீரழிந்த அந்த நிலையத்தை நாமே சீர்படுத்தி பயணிகள் விமான நிலையமாக மாற்றுகின்றோம் என்றார், இதோ மாற்றியாயிற்று

ஆம் பலாலி நிலையம் இந்திய கட்டுபாட்டில் வந்தாயிற்று, 1971ல் பாகிஸ்தான் வந்து தமிழ்நாட்டின் மேல் குண்டு வீசும் அபாயம் போல் இனி இல்லை

தமிழக ஊடகங்களும், ஏடுகளும் இந்த மாபெரும் சாதனையினை திட்டமிட்டு மறைகின்றன, உண்மையில் இது மகா மகா பெரிய விஷயம்

காஷ்மீரை போலவே தீவிரவாதத்தில் இருந்து விடுபட்ட வட இலங்கை சுற்றுலாவில் கொடிகட்டும் என்ற நோக்கு உண்டு, அதை பின்பற்றி விமான நிலையத்துக்காக பல நாடுகள் பலாலியினை குறிவைத்தன, அதை தட்டிபறித்து தன் பிடியில் கொண்டுவந்தது இந்தியா

இதனால் யாருக்கு முழு பாதுகாப்பு என்றால் சாட்சாத் தமிழ்நாட்டுக்கு தமிழருக்கு

இல்லையேல் யுத்தகாலமொன்றில் எதிரிநாட்டு விமானம் அதில் நின்று தமிழரை அதாவது இந்திய தமிழ்நாட்டை தாக்கும் சாத்தியம் உண்டு, கேந்திரம் முக்கியமான அணுவுலை, மகேந்திரகிரி, ஐ,என்,எஸ் கட்டபொம்மன் என இலக்குகள் அதிமுகள்ள தென்னகத்துக்கு கவசமிடபட்டுள்ளது

இதை செய்தது திராவிட பெரியரிய இன்னும் அழிச்சாட்டிய கட்சிகள் அல்ல, மாறாக தேசிய கட்சியான பாஜக, தமிழருக்கான சர்வதேச மிரட்டலை அதுதான் தீர்த்து வைத்திருகின்றது

இவ்வகையில் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்து வட இலங்கை பலாலி விமான நிலையத்தை தன் கட்டுபாட்டில் எடுத்திருக்கும் மோடியின் சாதனை இந்திராவின் தொடர்ச்சி என்றாலும் அதை செய்ய பாஜகதான் வரவேண்டியதாயிற்று

எது எப்படியாயினும் இந்தியாவுக்கு சாதகமான முடிவு இது, வாழ்த்துக்கள்

இப்படி இன்னும் பல ராஜதந்திர வெற்றிகளை இந்தியா உலக அரங்கில் குவிக்கட்டும், தேசம் பாதுகாப்பு பெறட்டும்

இம்மாதிரி விஷயங்களை தமிழக ஊடகங்கள் சொல்ல வேண்டும், ஆனால் சொல்லமாட்டார்கள்

சொன்னால் பாஜகவுக்கு சாதகமாகும் என மறைப்பார்கள், முழுக்க அரசியல் கணக்கு. ஆனால் நமக்கு அரசியல் எல்லாம் தெரியாது, நாட்டுக்கு எது நல்லதோ எது நல்லதாக நடந்ததோ அதை சொல்லிகொண்டே இருப்போம்

எந்த மோடியினை “Go back” “Go Back” என கத்தினார்களோ, எந்த மோடியினை தமிழகத்தின் எதிரி என்றெல்லாம் கரித்து கொட்டினார்களோ அந்த மோடிதான் வட இலங்கையில் இருந்து இதே தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்தை தடுத்திருக்கின்றார்

இதை எல்லாம் அவரால் அவரின் நிலைப்பாட்டால் சொல்லமுடியாது, அவரின் கட்சிக்காரர்களும் ஏனோ சொல்லமாட்டார்கள், ஊடகங்களும் மூச்

ஆனால் நாம் நம் கடமையினை செய்துகொண்டே இருப்போம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s