நிலைக்கட்டும் முரசொலி அலுவலகம்

“உடன்பிறப்பே, நம் இனமான பத்திரிகையாம், குலம் காத்த கண்மணியாம் , கழகத்து முதல் பிள்ளை இந்த முரசொலி ஏடு இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்கின்றார் ஒரு உத்தமர்

இது பஞ்சமி நிலமா இல்லை தோட்டபுறத்து உத்தமி நிலமா என்பதல்ல விஷயம், இந்த நிலத்தில் குடியிருக்கும் முரசொலிதான் பஞ்சமர் என ஒதுக்கபட்ட மக்களுக்காக ஒலித்திருக்கின்றது, உழைத்திருக்கின்றது, போராடி அவர்களின் உரிமையினை காத்திருக்கின்றது.

பஞ்சம மக்களுக்காக அது சந்தித்த பஞ்சமா பாதகங்கள் கொஞ்சமா நெஞ்சமா உடன்பிறப்பே?

அந்த பஞ்சம பத்திரிகையில் இந்த பஞ்சமனின் பேனா தொடுத்த தீயில்தான் பார்ப்பானியம் ஒழிந்து சமூக நீதி மலர்ந்து அந்த உத்தமரெல்லாம் மருத்துவரானார்கள்

அந்த நன்றி கூட இல்லா அளவு அவர்களை பார்பானியம் வெறியேற்றி மூளை மழுங்கடித்து வைத்திருக்கின்றது உடன்பிறப்பே

இல்லையென்றால் கடந்தவருடம் வரை வானமும் வையகமும் கடலும் இருக்கும்வரை என சவால் விட்டவர்கள் வானத்தையும் கடலையும் ஏறேடுத்தும் பார்க்காமல் ஓடி சென்று சேருவார்களா, சேர்ந்து மானம் கெட்ட தோல்வியினை சந்திப்பார்களா?

அவர்கள் வைத்தியசாலை வைத்திருந்தபொழுது கழக அரசுதான் ஆண்டது, அந்த வைத்தியசாலையின் பட்டாவினை கேட்டதா? இல்லை மிரட்டியதா?

இல்லை, ஏன்? ஒரு ஒடுக்கபட்ட இனத்தின் மருத்துவன் பஞ்சம மக்களுக்கு சேவையாற்றுகின்றான், இதல்லவா நீதிகட்சியும், பெரியாரும் அண்ணாவும் கண்ட கனவு என நாம் மகிழ்ந்திருந்தோம்

ஆனால் ஒரு தாழ்த்தபட்டவனின் ஏடு பஞ்சம மக்களுக்காக முழங்குவதை அந்த நஞ்சுமனம் புரியமறுப்பது ஏன் என்பதுதான் நம் நெஞ்சத்தில் பாய்ந்த குத்தீட்டி, தலையில் தாங்கிய தீ சட்டி.

இதெல்லாம் பஞ்சம நிலத்து சிக்கல் அல்ல, ஒரு பஞ்சமன் எப்படி முரசொலி நடத்தலாம் எழுதலாம் எனும் பார்ப்பானிய வெறுப்பே அன்றி வேறல்ல கழக கண்மணியே

அடலேறே, சிங்கமே, இனம்காக்க வந்த புலியே, தமிழ் காக்க வந்த கட்டிளங்காளையே சொல்.

பஞ்சமர்களுக்காக உழைக்கும் இந்த பஞ்சமனின் முரசொலி பஞ்சமர் நிலத்தில் இல்லாமல் தையலாள் மலர்ந்திருக்கும் தோட்டத்தின் மஞ்சத்து அறையிலா குடியிருக்கும் கண்மணியே?

தோட்டா துப்பாக்கியில்தான் இருக்க வேண்டும், பேனா காகிதத்தின் மேல்தான் நிற்க வேண்டும், பூனூல் பார்ப்பான் மேல்தான் தொங்க வேண்டும், பஞ்சமருக்கான பத்திரிகை பஞ்சமன் நிலத்தில்தான் அமர்தல் வேண்டும், இதில் என்ன குறை கண்டார்கள் என் அடலேறே?

இதெல்லாம் பஞ்சமர் நிலத்தை எப்படி பஞ்சமர் பயன்படுத்தலாம்? அதில் ஒரு பிள்ளையார் கோவிலோ இல்லை மரத்தடி மாமுனிகள் ஆலயமோ கட்டி விபூதி அடிக்கலாமே என்ற ஆரிய பார்ப்பானிய சதி அன்றி வேறல்ல‌

பஞ்சம நிலத்தில் பார்ப்பான் நுழைய அதில் பஞ்சமர் தன் அறியாமை நினைத்து கைகட்டி நிற்கவா அண்ணாவும் பெரியாரும் போராடினார்கள், சொல் உடன்பிறப்பே

ஆண்டாண்டு காலம் மொத்த திராவிட இனத்தையும் ஆக்கிரமித்து ஆட்டம் போட்ட பார்பானியம், பஞ்சமருக்காக உழைக்க, அறிவுசுடர் ஏற்ற நாம் ஒதுங்கியிருக்கும் இந்த ஓரடி இடத்துக்கும் படையெடுக்கின்றதென்றால் இதன் பின்னால் உள்ள மாபெரும் சதியினை, பார்ப்பானிய விஷத்தை நீயே அறிந்து கொள்வாய்

நான்குநேரியில் அவர்களை நாக்குதெறிக்க ஓடவிடுவாய், விக்கிரவாண்டியிலே அவர்களை விக்கி விக்கி கதறவைத்து விரட்டி அடிப்பாய், அதுதான் இந்த பஞ்சம சூத்திரபடை அந்த ஆரிய பார்ப்பானிய அடிமைகளுக்கு கொடுக்கும் மாறா வடுவாக அமையும்

பகை ஒழியட்டும், பஞ்சமர் உரிமை மீளட்டும், பஞ்சம பத்திரிகை முரசொலி பஞ்சமருக்காய் தொடர்ந்து முழங்கட்டும்

வாழ்க தமிழ், வெல்க திராவிடம், நிலைக்கட்டும் முரசொலி அலுவலகம்..”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s