பல கணக்குகள் புரிந்து கொள்ளமுடியாதவை

வாழ்வில் நாம் பார்த்தவரை பல கணக்குகள் புரிந்து கொள்ளமுடியாதவை

தன் மாட்டுவண்டியிலே மகனை தன்னை அறியாமல் நசுக்கி கொன்ற தந்தையினை கண்டிருக்கின்றேன், கடைசி காலம் வரை அந்த வலி அவரிடம் இருந்தது

3 வயது குழந்தை அது ஜூஸ் பாட்டிலில் ஆசிட் ஊற்றி வைத்திருந்தான் தகப்பன், அது தெரியாமல் எடுத்து குடித்த குழந்தைக்கு உள் உறுப்பெல்லாம் காலி, இன்று அது மருத்துவ சிகிச்சைக்காக ஏங்கி நிற்கின்றது, வயது 7 ஆனாலும் மாதமொறு அறுவை சிகிச்சை வேளைக்கு ஏகபட்ட மருந்து

அந்த பெரும் பணக்காரருக்கு லாரி மட்டும் 25 இருந்தது, சில டிராக்டர்களும் இருந்தன. தன் மனைவியோடு அவர் புல்லட்டில் சென்றபொழுது தன் சொந்த டிராக்டர் வயலுக்கு செல்வதை மறித்து சில விஷயங்களை சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது அந்த டிராக்டர் டயரிலே விழுந்து செத்தார் அவர் மனைவி

ஆசை ஆசையாய் வெளிநாட்டு மகனுக்கு வீடு கட்டிவைத்தார் தந்தை, அவன் பிணமாக‌
வந்தபொழுது “உனக்கு கட்டி வச்ச வீடுய்யா..” என அவர் அழுதது இன்னும் காதிலே உண்டு

300 பவுண் நகை செய்து, அவளையும் பொறியாளராக்கி மாபெரும் மாளிகைகட்டி வைத்திருந்தாள் அந்த தாய், அவளின் மகளுக்கோ அரைமுழ கயிறே தேவையாய் இருந்தது

மகனுக்காய் 3 மாடி வீடு கட்டி வைத்திருப்பார் தந்தை அந்த மொட்டைமாடியில் இருந்து விழுந்து செத்திருப்பான் குழந்தை

குழந்தை ஒன்று வராதா? என கோவில்களிலும் மருத்துவமனையிலும் காத்திருக்கும் தம்பதிகள் பல நூறு, வந்த குழந்தை பிரிந்துவிட்ட வருத்தத்தில் சில நூறு

ஒன்றா இரண்டா மானிட துயரங்கள்?

எவ்வளவோ பெற்றோரின் வலிகளை பார்த்திருக்கின்றோம், அவைகளில் பெரும்பாலானவை யாரையும் குற்றம் சொல்லமுடியாதபடி நடந்துவிடுகின்றன‌

ஆசை ஆசையாய் அவர்கள் செய்த விஷயங்களே அவர்களுக்கு எமனாக விடிகின்றன‌

பாகனையே மிதித்து கொல்லும் யானை, தன் எஜமானையே முட்டி கொன்றுவிட்டு வருந்தி நிற்கும் மாடு

ஆற்றுவெள்ளம் வராதா என ஏங்குகின்றோம், வெள்ளம் வந்தபின் பலரை பலிகொடுக்கின்றோம்

மகிழ்ச்சியாய் வெளிகிளம்பும் பலரில் சிலர் திடீரென திரும்பமுடியா இடத்துக்கு செல்வதென்ன?

ஒரு குடும்பத்துக்கு துக்கம் உறவுகளால் வருகின்றது, இன்னொரு குடும்பத்துக்கு அக்கம் பக்கத்தால் வருகின்றது, சிலருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களால் திடீரென வருகின்றது

சில குடும்பங்களுக்கு தங்களாலேயே வந்துவிடுகின்றது

இதற்கெல்லாம் என்ன காரணம் என உணரும் சக்தி மானிடருக்கு இல்லை .

ஏன் வந்தது? எதற்காக வந்தது? அந்த நொடிக்கு மிக சரியாக எல்லோரையும் அங்கு நிறுத்திய சக்தி என்பது யாருக்கும் தெரியாது

ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்பது மட்டும் நிஜம்

பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்த குழந்தையொன்று அதன் பின் பல குழந்தைகளை காக்க வழிசெய்தது

கும்பகோணத்தில் செத்த பிஞ்சுகள் ஓலை கொட்டைகையின் ஆபத்தை சொல்லி பல்லாயிரம் குழந்தையினை காப்பாற்றியது

ஒவ்வொரு சாவும் பலருக்கு எச்சரிக்கை செய்து வாழவைக்கும் சாவாகவே அமைந்துவிடுவது வாழ்வியல் சோகம்..

பல விஷயங்கள் மனதை குழப்புகின்றன, பல வகையான சிந்தனைகள் வந்து வந்து விலகுகின்றன‌

இச்சிறுவனும் இன்னும் பலநூறு குழந்தைகளை காக்க வந்த சித்தர்களின் வடிவம் அன்றி வேறல்ல‌

அனுதினமும் குழந்தைகள் பிறக்கின்றன சாகின்றன, ஒவ்வொரு மருத்துவமனையிலும் காண கிடக்கும் காட்சி அது

ஆனால் தேசத்தையே கலங்க வைத்து ஒரு இளம்பிறப்பு மறைவது என்பதும் பெரும் தலைவர்களெல்லாம் அவனுக்கு இரங்குவது என்பதும், தேசமே ஒருவனுக்கு பிரார்திப்பது என்பதும் சாதாரணம் அல்ல‌

அவன் வணங்கதக்கவன், கடந்த பிறவியில் ஏதோ ஒரு விஷயத்தின் தொடர்ச்சியாக இங்கு வந்து பிறந்து எல்லோரையும் கலங்க வைத்துவிட்டு சென்றிருக்கின்றான்

ஏதோ ஒரு பெரும் அசம்பாவிதம் அவனால் காக்கபட்டிருக்கின்றது, அந்த தாய் ஒரு தெய்வகுழந்தையினையே பெற்றிருக்கின்றாள், காலம் அவளுக்கு உணர்த்தும்

ஆம், ஒவ்வொரு தாயும் தன் குழந்தையினை கட்டி அணைத்தபடி அவனுக்கு கண்ணீரோடு கைகாட்டுகின்றாள், தன் காலை தன் குழந்தை அணைத்து நிற்க முந்ந்தானையால் முகத்து கண்ணீரை துடைத்தபடி அவனுக்காய் அழுகின்றாள்

ஒவ்வொரு தந்தையும் தன் வீட்டின் ஒவ்வொரு பாதுகாப்பையும் அழுதபடியே உறுதி செய்கின்றான்

தேசம் இனி பாறைகளை துரித்கதியில் உடைக்கும் எந்திரம் மகா அவசியம் என உணருகின்றது, வெள்ளம் நிலச்சரிவு என்பது மட்டுமல்ல பாறைகளை வேகமாக உடைக்கும் நுட்பமும் பேரிடர் மேலாண்மையில் சேர்க்கபடுகின்றது

எல்லாம் இந்த சுஜித் எனும் சாமியால் வந்தது

கடந்த பிறவியில் ஜீவசமாதி அடையாமல் மறைந்த ஆத்மா ஒன்று மறுபிறப்பு எடுத்து ஜீவசமாதியுடன் தன் பிறவிகடனை முடித்து கொண்டது, ஏதோ ஒரு மகானின் ஆத்துமம் இது

ஆன்மீக கண்ணில் நோக்கினாலன்றி புரியாது

கோதுமை மணி நிலத்தில் மடிந்தால்தான் அது செடியாய் பலன் கொடுக்கும் என்பார் இயேசு, அந்த மகானின் வாக்கு இதோ நிறைவேறிற்று

அந்த தாயின் வியாகுலத்தை உணரமுடிகின்றது , தசரதனும், கன்னி மரியாளும் கரைந்து போன சோகமது

அந்த பிஞ்சு சாமியினை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கின்றது உலகம்

கண்காண அவனை பறிகொடுத்திருக்கலாம், கண்காண முடியாமல் அவன் காக்க போகும் உயிர்கள் ஏராளம், அதிலெல்லாம் அவன் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

நரகாசுரன் எப்படி பறையன் ஆனார்?

பகவான் விஷ்ணு எங்கள் சாதி என ஒரு பயலும் கொடிபிடிக்காத நிலையில் நரகாசுரன் எப்படி பறையன் ஆனார்?

மெதுவாக நரகாசுரன் மட்டுமா இல்லை வெறு யாரும் உங்கள் சாதியில் உண்டா? என கேளுங்கள், ஆம் இயேசுநாதரும் பரிசுத்த ஆவியும் அரேபிய முல்லாக்களும் எங்கள் சாதி என ரகசியமாக கண்ணடிப்பார்கள்

சூர்யாவின் அடுத்தபடம் “சூரரை போற்று”

சூர்யாவின் அடுத்தபடம் “சூரரை போற்று”

சூர்யாவின் கெட்ட நேரம் இன்னும் தொடர்கின்றது, படத்து பெயரே சரியில்லை.

சூரசம்ஹாரம் செய்ய இப்பொழுதே ஒரு கோஷ்டி கிளம்பிகொண்டிருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஏம்பா சிவகுமாரா, உங்கள் பெயர் சிவகுமரர், உங்கள் பிள்ளைகளின் பெயர் சரவணன் (சூர்யா) மற்றும் கார்த்தி

ஆனால் போற்றுவது சூரனையா? கொஞ்சமாவது நியாய தர்மம் வேண்டமா?

சரி, உம்மேல் தமிழகம் விபூதி அடிக்க போவது உம் விதி என்றால் யார் என்ன செய்ய முடியும்?

ஆக சூரரை போற்று என சூர்யா கோஷ்டி சொல்லட்டும், பதிலுக்கு “சிவகுமாரை தூற்று”, “சூர்யாவினை தூற்று” என தமிழகம் கிளம்ப தயாராக இருக்கின்றது

மயானம் சொல்லும் உண்மை இதுதான்

அந்த சிறுவனின் உடல் அடக்கம் செய்யபட்டாயிற்று, அந்த மயானம் சொல்லும் உண்மை இதுதான்

அந்த ஆழ்குழாய் கிணற்றை சரியாக மூடாமல் மண் அள்ளி போட்டு ஏதோ மூடியிருக்கின்றார்கள், 7 வருடமாக சிக்கல் இல்லை

ஆனால் உள்ளூடு வெற்றிடமான அந்த ஆழ்குழாய் மழை மற்றும் சில மாறுபாடுகளில் மறுபடி திறந்து பலிவாங்கிவிட்டது

இதனால் ஆழ்துளையினை மூடுபவர்கள் ஜல்லிகல் கலவை போட்டு மூடுவதுதான் சரியான தீர்வு, மேலோட்டமாக மூடிவைப்பது பின்னாளில் பலியெடுக்கலாம் ஜாக்கிரதை

அவ்வளவுதான் விஷயம்..

மோகன் சி லாசரஸ் என்பவர் எங்கோ இந்து மக்களை கிறிஸ்தவத்தில் கொண்டுவரவேண்டும் என பேசியிருப்பதாக சிலர் சொல்லிகொண்டிருகின்றார்கள்

வரலாற்றை ஆழ கவனித்தால் அதாவது கிறிஸ்துவத்தின் தொடக்கத்தை கவனித்தால் ஒன்று புரியும்

கிறிஸ்தவ அன்பர்கள் கோபிக்க கூடாது,
அட கோபித்தாலும் பரவாயில்லை போங்கடா டேய்

அதாவது இயேசு கிறிஸ்து தனிமதம் தொடங்க வந்தவர் அல்ல, அவருக்கு அந்த ஆசையும் அறவே இல்லை

அவரை பழைய எலியாஸின் சீடராக இல்லை அவரின் மறுபிறப்பாக மக்கள் கருதினார்கள், சிலுவையில் அவர் கத்தும் போது கூட அவன் எலியாஸை அழைக்கின்றான் என சொன்ன யூதர்கள் உண்டு

இயேசு சாகும்பொழுது கூட யூதருக்காக மன்றாடி செத்தார், யூதர்மேல் அவருக்கான பாசம் அப்படி. தன்னை சிலுவையில் கொல்லும்பொழுதும் அவர்களை அவர் பழிக்கவில்லை சபிக்கவில்லை

அப்படிபட்ட இயேசு உயிர்த்து 40 நாட்கள் பூமியில் சுற்றியபொழுதும் அவர் யூதருக்கு சவால்விடவில்லை, அம்மதம் தளைக்க எண்ணிணார்

தொடக்கத்தில் அவரின் சீடர்கள் யூதருக்கு இயேசுவினை பற்றி சொன்னார்கள் மாறாக மதம் மாற சொல்லவே இல்லை. இயேசு சொன்ன வழியில் யூதமதத்தை பின்பற்றுங்கள் என்பதே அவர்கள் போதனையாய் இருந்தது, கிறிஸ்தவம் யூதத்தின் ஒரு பிரிவாகத்தான் இருந்தது

யூதரை தாண்டி யாருக்கும் முதலில் இயேசு போதிக்கபடவில்லை

சிக்கல் பால் எனும் யூதர் சபைக்குள் வரும்பொழுது தொடங்கிற்று, யூதர்கள் கிறிஸ்துவத்தை தழுவுவதும் யூத சடங்குகளை கைவிடுவதும் யூதருக்கு வெறுப்பாயிற்று

யூதமதத்தை கிறிஸ்தவம் அழித்துவிடும் என எண்ணிய அவர்கள் இயேசுவினை மீறி அதை அடுத்த மக்களுக்கு திருப்பிவிட்டார்கள், இதில் பால் முக்கியமானவர்

கிறிஸ்தவம் அடுத்த மக்களை நோக்கி குறிவைத்து செல்ல நிம்மதி பெருமூச்சு விட்டது யூதமதம்

கிறிஸ்தவம் அந்த வேகத்தில் ரோம், கிரேக்கம் உட்பட பல மதங்களை சுவடின்றி ஒழித்து போட்டது, ஆனால் யூத மதத்தை தொடவே இல்லை

ஆம் எந்த கிறிஸ்தவம் தனக்கு எதிராக எழும்பியதோ, எந்த கிறிஸ்தவம் ரோம் மற்றும் கிரேக்க மதங்களை ஒழித்தது போல யூதமதத்துக்கும் சவால் விட்டதோ அந்த மதத்தை தன் பாதுகாவலாக்கியது யூதம்

ஆம் இன்றும் சிந்தனையே இல்லா கிறிஸ்தவன் யூதனை பழிக்கமாட்டான், அறிவுள்ள சில ஐரோப்பியர் அடிக்கடி அவர்களை போட்டு சாத்தினர், ஹிட்லர் அதில் முக்கியமானவன்

கிறிஸ்து வந்தபின் எதற்கு யூதம்? எதற்கு அந்த மதம் என ஐரோப்பா அன்று கேட்ட கேள்வி எல்லாம் இன்று மறைக்கபட்டுவிட்டன‌

நிச்சயம் கிறிஸ்தவனுக்கு பைபிளில் பழைய ஏற்பாடு தேவையே இல்லை, ஆனால் வலிய புகுத்தபட்டது ஏன்?

அதுதான் விஷ ஊசி அல்லது மெல்ல கொல்லும் விஷம் அல்லது போதை

2 ஆயிரம் ஆண்டுக்கு முன் யூதன் ஏற்றிவிட்ட ஊசி இன்று எதில் நிற்கும் தெரியுமா?

இஸ்ரேல் ஒரு ஆசீர்வதிக்கபட்ட கர்த்தரின் நாடு, ஜெருசலேம் யூதனுக்கு சொந்தம்

இதுதான் வரலாறு, முக்கால உண்மையும் கூட‌

ஆக இந்த தமிழக கிறிஸ்தவர்களுக்கு அறிவும் கிடையாது சிந்தனையும் கிடையாது வரலாறும் தெரியாது

இந்நாடு கிறிஸ்தவநாடானால் அதனால் இஸ்ரேலுக்கும் இன்னும் பலருக்கும் எவ்வளவு லாபம் என்பதும் தெரியாது அல்லது மறைப்பார்கள்

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினால் ஐரோப்பிய அடிமை நாடு கூடுதலாக இஸ்ரேலிய ஆதரவு நாடு ஒன்று உருவாகும்

அதுதான் இவர்கள் நோக்கம், உண்மையில் இது இவர்களுக்கே தெரியுமா என்றால் பலருக்கு தெரியாது

இதிலும் உள் அரசியல் உண்டு, கத்தோலிக்க நாடுகளை சில பிரிவினை கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளுக்கு பிடிக்காது. இதனால் அவர்களுக்குள்ளான சண்டை உலகெல்லாம் பரவி அதில் மீன்பிடிப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம்

ஐரோப்பிய வியாபாரம் கத்தோலிக்க கிறிஸ்தவ தலமையில் கன ஜோராக நடந்ததையும், சிலுவை போர்களின் தோல்வியும் இன்னும் போப் இருக்கும் வரை இஸ்ரேலுக்குள் யூதன் செல்லமுடியாது என கணித்த யூத மூளைகளின் உருவாக்கமே பிரிவினை சபைகள்

அதிலிருந்து தொடங்கியதுதான் கத்தோலிக்கம் மற்றும் அல்லேலூயா மோதல், யூதரின் பக்கம் கொஞ்சம் சாய்ந்தான் நெப்போலியன் அதன் பின் நடந்ததுதான் போப்பின் அதிகார குறைப்பும் இன்னும் ஏராளமும்

போப் சரிந்தபின்பே பிரிட்டனும் அமெரிக்காவும் மேல்நிலை பெற்றன.

கம்யூனிச புரட்சி என்பது மன்னர்களை ஒழிக்க நடந்தது மன்னனும் மதமும் சரியும் இடத்தில் குழப்பம் அதிகமாகி சூழல் கெடும் நாடு ஸ்திரதன்மை இழக்கும் என்பதே கணக்கு

(இதனால்தான் கடைசிவரை கம்யூனிஸ்டுகளை எதிர்த்தே வந்தான் ஹிட்லர், அவன் சொன்னது உணமை என்பதை காலம் காட்டிற்று )

மெக்ஸிகோ கிறிஸ்தவர் உள்ளே வரகூடாது என சொல்லும் அமெரிக்கா வடக்கு கன்டா எல்லையில் ஒரு சுவரும் கட்டாது, காரணம் இதுதான்.

இதெல்லாம் கிறிஸ்தவ அரசியல், சரி இந்த போதகர்கள் பக்கம் வரலாம்

இந்த நல்லவர்கள் இந்துக்களை விட்டுவிட்டு இயேசு வழியில் 2 கோடி யூதர்கள் உலகில் இருக்கின்றார்கள் அவர்களை மனம் திருப்பினால் என்ன?

2கோடி யூதரையும் மனம் திருப்பிவிட்டு அந்த யூதமதத்தை ரோம, கிரேக்க பாபிலோனிய மதம் போல அழித்துவிட்டு கிறிஸ்துவத்தை மலர செய்து பாலஸ்தீன மக்களுக்கு நியாயம் கொடுத்தால் என்ன?

அதெல்லாம் செய்யமாட்டார்கள்

இயேசு எதை செய்தாரோ அல்லது செய்ய நினைத்தாரோ அதை சுத்தமாக செய்யாமல் விட்டுவிட்டு இயேசு எதை செய்யாமல் தவிர்த்தாரோ அதை நற்செய்தி என சொல்லி ஒப்பாரி வைப்பது இவர்கள் ஸ்டைல்

இயேசுவே அக்கால இஸ்ரேலை விட்டு அதுவும் யூதேயா எனப்படும் பகுதியினை விட்டு அரை இன்ஞ் நகர்ந்தவரல்ல‌

ஆனால் இவர்கள் ஆடும் ஆட்டம் கடும் அழிச்சாட்டியம்

எல்லாம் கிறிஸ்தவத்தில் ஊடுருவி அதை யூதமதத்துக்கு எதிரே வராமல் திருப்பிவிட்ட யூத கிறிஸ்தவ உளவாளிகளின் தந்திரம்

அதை அறியாமல் இங்குள்ளவன் புலம்பினால் புலம்பிகொண்டே இருக்கட்டும்

கேட்டால் செத்தபின்பு உனக்கு மீட்பு உண்டு, ரட்சிப்பு உண்டு என்பார்கள். எல்லோரும் செத்த பின்பு என்ன நடந்தால் என்ன? வாழும் பொழுது அமைதி வேண்டாமா? மகிழ்ச்சி வேண்டாமா? என்றால் அவர்களிடம் பதில் இருக்காது.

உண்மையில் கிறிஸ்து ஒரு ஞானி, அவர்களை யூதர்களும் புரிந்து கொள்ளவில்லை தமிழக கிறிஸ்தவர்களும் புரிந்து கொள்ளவில்லை அவர் கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக தரு போல் இங்கு மாற்றபட்டிருக்கின்றார் அதில் பலரின் வியாபாரம் கன ஜோராக நடந்து கொண்டிருகின்றது என்பதன்றி வேறல்ல விஷயம்

அதனால் தங்களுக்கு பயிற்றுவிக்கபடி யூதரை விட்டுவிட்டு இன்னும் பலரை விட்டுவிட்டு இந்துக்களைத்தான் குறிவைப்பார்கள் இப்போதகர்கள், அவர்களிடம் கவனமாய் இருப்பது நல்லது

மீறி சென்றால் ஐ.எஸ் இயக்கம் போல உங்களையும் ஆக்கிவிடுவார்கள், எமக்கு தெரிந்து இக்கும்பல் ஏராளமானோர் வாழ்வினை அழித்திருக்கின்றார்கள், எந்த சிக்கலுக்கும் இவர்களிடம் தீர்வே இல்லை, செய்வதெல்லாம் மூளை சலவை அன்றி வேறல்ல..

ஜாகீர் நாயக் இஸ்லாமில் மட்டும் உண்டென நம்புவீர்கள் என்றால் உங்களை ஒன்றும்ச் செய்ய முடியாது, கிறிஸ்துவத்தில் பல நாயக்குகள் பசுதோல் போர்த்திய புலியாக வலம் வருவார்கள் என்பதுதான் உண்மை

அதிகம் வேண்டாம் கொச்சியிலும் மும்பை பகுதியிலும் சில யூதர்கள் இன்றும் உண்டு, அவர்களிடம் சென்று இந்த கோஷ்டியில் ஒரு பயல் நற்செய்தி சொல்லிவிடட்டும் பார்க்கலாம்.

தங்கள் அடையாளத்தை வழக்கொழித்து கிறிஸ்துவத்தை ஏற்று இன்று அந்நாடுகள் இஸ்ரேலுக்கு காவலாய் இருப்பது போல கிழக்கே இந்தியா சைனா மற்றும் இதர நாடுகளையும் அப்படி ஆக்கிவிட வேண்டும் என்பதில் பல சக்திகள் குறியாய் இருக்கின்றன‌

கிறிஸ்துவத்தின் மூலம் ஆசியா முழுக்க ஊடுருவலாம் என மேற்குலகமும் திட்டமிடுகின்றது

அந்த சதி தெரியாமல் சிக்கி கொண்ட ஆடுகள் இன்னும் பல பலியாடுகளை தேடி திரிகின்ன்றன அவ்வளவுதான் விஷயம்..

எம்மதமாயினும் விதிப்படியே வாழ்க்கை

அத்திவரதர் குருடரை பார்க்க வைப்பார், முடவரை நடக்க வைப்பார் அத்திவரதரை பார்த்தால் வாழ்வின் சிக்கல் எல்லாம் சரியாகும். அத்தி வரதர் உங்களை ரட்சிப்பார் என யாரும் பேனர் கட்டி அழைக்கவில்லை

வீடு வீடாக கத்தவில்லை, துண்டு நோட்டீஸ் அடிக்கவில்லை

அத்திவரதர் சாஸ்திரபடி வந்தார், கூட்டம் வந்து அலைமோதிற்று

சரி இது கிறிஸ்தவ குடும்பம் அல்லவா? இயேசுவோ இல்லை அவரின் அடிபொடிகளோ வந்து ஏன் காக்கவில்லை என கேட்க யாருக்கு தெரியாது?

எம்மதமாயினும் விதிப்படியே வாழ்க்கை, அதை மீறவும் மாற்றவும் யாராலும் முடியாது

அப்படி முடிந்திருந்தால் கெத்சமணி தோட்டத்திலே இயேசு அழுதிருக்கமாட்டார், அவர்களிடம் அகபட்டு சிலுவைக்கு வந்திருக்கவும் மாட்டார்

பெரியார் கோஷ்டிகளுக்கு செருப்படி விழுவதாக செய்திகள் சொல்கின்றது

ஈழத்தில் கால் வைத்திருக்கும் பெரியார் கோஷ்டிகளுக்கு செருப்படி விழுவதாக செய்திகள் சொல்கின்றது

இந்திய ராணுவத்தையெ விரட்டி அடித்த பூமி அது, டெல்லியினை எதிர்த்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற புலிகளுக்கு திராவிட இயக்கங்களை விட்டால் வேறு தெரிவு இருக்கவில்லை

இன்னொன்று சில அந்நிய சக்திகள் குறித்து கொடுக்கும் புள்ளியில் திராவிட கழகமும் புலிகளும் இந்திய எதிர்ப்பு என சரியாக கைகுலுக்கினார்கள்

மற்றபடி பெரியார், அம்பேத்கர் இன்னபிற இம்சைகள் ஈழத்தில் கால் வைத்துவிட கூடாது என்பதில் யாழ்பாணமும் புலிகளும் இன்னும் பலரும் கடும் விழிப்பாய் இருந்தார்கள்

இப்பொழுது போர் ஓய்ந்துவிட்ட நேரம், புலிகளும் இல்லை

இந்நேரம் பார்த்து ஈழத்தில் கால் ஊன்ற சென்ற கருப்பு சட்டைகளுக்கு செருப்பு அடி விழுகின்றது

ஆம் ஈழதமிழன் கொஞ்சமேனும் மானமும், தன் இனத்தின் மதத்தின் கலாச்சாரத்தின் மேல் கடும்பற்றும் கொண்டவன், அதற்கு ஆபத்துவரும் பொழுது சாகவும் தயங்காதவன்

அவனை தமிழக தமிழனாக நினைத்து கொண்டு தமிழனுக்கு மதமில்லை என சொல்ல சென்ற கும்பல்களை போட்டு அடித்துகொண்டிருக்கின்றான்

ஈழதமிழருக்கும் கருப்பு சட்டைகளுக்குமான சண்டைகள் முற்றுகின்றன, புலிகளுக்காக எவ்வளவு செய்தோம் தெரியுமா என கருப்பு சட்டைகள் பட்டியலிடுகின்றன‌

விரைவில் ஈழதமிழருக்காக ராஜிவ்கொலைக்கு துணை போனது திராவிட இயக்கங்கள், ராஜிவினை நாங்கள்தான் ஈழதமிழருக்காய் கொன்றோம் என இவர்கள் கிளம்பினாலும் கிளம்பலாம்

அட ராஜிவினைத்தான் எவ்வளவு பேர் கொன்றிருக்கின்றார்கள் அங்கிள் சைமன் உட்பட..