ஐரோப்பிய யூனியனின் குழு ஒன்று காஷ்மீர் வந்துள்ளது, வந்து தால் ஏரி உட்பட பல இடங்களை சுற்றிபார்த்து கொண்டிருக்கின்றது
காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கபட்டு அமைதியாக்கபட்டுவிட்டது இனி எல்லா நாட்டு மக்களும் வரலாம் என காட்சிகளை உருவாக்குகின்றது இந்தியா
ஐரோப்பிய யூனியன் தலைகளும் பரவாயில்லை என சொல்லிவிட்டு கிளம்புகின்றன
இப்பொழுது யாரை கேட்டு இவர்கள் வந்தார்கள் மத்திய அரசு அழைத்ததா இல்லை காஷ்மீர் டூரிசமா இல்லை தனியார் அமைப்புக்களா என சர்ச்சை வலுக்கின்றது
மத்திய அரசு வாய்திறக்கவில்லை திறக்கவும் திறக்காது
எனினும் விரைவில் இந்தியா வர இருக்கும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் பயணதிட்டத்தின் முன்னோடியாக இது பார்க்கபடுவதால் மோடி ஏஞ்சலா சந்திப்பு காஷ்மீரில் நடக்கலாம் என்கின்றார்கள்
இதனால் ஏஞ்சலா தஞ்சாவூருக்கு வருவார், அங்கு மேட்டி சட்டை அணிந்தபடி மோடி தஞ்சாவூர் சரஸ்வதி மகால் ஓலை சுவடிகளை ஜெர்மானியர் கைபற்றிய விவரம் அதிலிருந்த தகவல்களை ஹிட்லர் சோதித்த விவரம் உச்சமாக தஞ்சை பெரியகோவில் கல்வெட்டை ஒரு ஜெர்மானியன் படித்து ராஜராஜ சோழனை தமிழருக்கு சொன்ன விவரம் எல்லாம் பேசுவார் என எதிர்பார்த்தது நடக்காது போலிருக்கின்றது
அதனால் என்ன, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகின்றாராம், ஆம் முக ஸ்டாலின் போல ராசியுள்ள அதே சார்லஸ்
அவர் இந்தியா வரும்பொழுது சென்னை கோட்டையில் இல்லை ஆற்காடு கோட்டையில் வைத்து இல்லை பாஞ்சாலங்குறிச்சியில் வைத்து பிரிட்டிசார் இங்கு கால்பதித்த வரலாற்றை மோடி விளக்காமல் விட்டுவிடுவாரா என்ன?