என்ன அநியாயம் இது?

சென்னை எம்ஜிஆர் நகரில் குடிபோதையில் தன் இரண்டு மாத குழந்தையை கொன்ற தந்தையும் மற்றும் அதை மறைக்க முயன்ற தாயும் கைது

என்ன அநியாயம் இது? இதற்கு கைதா? தண்டனையா?

அந்த தந்தைக்கு கைநிறைய பணம் கொடுத்து உன் மனைவிக்கு என்ன அரசு வேலை வேண்டும் என கேட்பதல்லவா தர்மம்

எங்கே திருமா? சொல்லுங்கள் இவருக்கு 1 கோடி கொடுக்க வேண்டுமா இல்லை ஒரு டோல்கேட்டையே எழுதி வைத்துவிடலாமா?

என்ன நடக்குமோ தெரியவில்லை

விக்ரம் என்றொரு பழைய கமலஹாசன் படத்தில் ஒரு ராஜா இருப்பார், ஆனால் சத்தியராஜ் அந்த ராஜாவினை ஆட்டி வைத்துகொண்டிருப்பார்

அப்படி டிரம்பும் விக்ரம் படத்து அம்ஜத்கானாக மாறிவிட்டார், சிரியாவில் இருந்து வெளியேறுகின்றோம் என அவர் சிலதினங்களுக்கு முன்பு சொன்னதை அவர் மண்டையில் தட்டி மறுத்து சொல்ல வைத்திருக்கின்றது ஒரு சக்தி

சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேறாது அது வடக்கில் ஈராக்கிய ஒட்டிய எண்ணெய் வயல்களுக்கு காவல் இருக்கும் என சொல்லிவிட்டது அமெரிக்கா

டிரம்பினை ஏதோ ஒரு சக்தி ஆட்டி வைக்கின்றது, வடக்கு சிரியாவினை விட்டு நீங்கமாட்டோம் என அடம்பிடித்து அமர்ந்துவிட்டது அமெரிக்கா

ஆக சிரிய ரஷ்ய கூட்டணி ஒரு பக்கம், அமெரிக்க குர்து கூட்டணி ஒருபக்கம் , துருக்கி ஒரு பக்கம் எஞ்சியிருக்கும் ஐ.எஸ் ஒருபக்கம் என யுத்தமேகம் சூழ்கின்றது

என்ன நடக்குமோ தெரியவில்லை, இந்த சுந்தர்.சி படங்களில் வருவது போல குழப்பமான சண்டைகாட்சிக்கு மட்டும் உத்திரவாதம் உண்டு

கோவில் சொத்தை தொட்டவனும் கெட்டான் எடுத்தவனும் கெட்டான்

சென்னை கோட்டையில் இருப்பதால் அமைச்சர்கள் அக்கோட்டை நிலத்தை பட்டா போடமுடியாது, கோவில் நிலங்களை அங்கு குடியிருப்போருக்கு கொடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாதுஆலயம் என்பது தனிபட்ட விவகாரம், அதற்கு அறநிலையதுறை என்றொரு அராஜக துறையினை அமைத்ததே மாபெரும் தவறுஇங்கு மசூதிகளும் வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களும் அவரவரிடம் இருப்பது போலவே இந்து ஆலயங்களையும் அவற்றின் சொத்துக்களையும் ஆலய நிர்வாகத்திடமே விட்டுவிட வேண்டும்அரசுக்குத்தான் அறிவில்லை என்றால் ஆலய சொத்துக்களை பட்டா போட வரிசையில் நிற்பவருக்குமா யோசனை இல்லைசிவன் சொத்து குல நாசம் என்பார்கள், ஆலய சொத்துக்கு ஆசைபட்ட எவனும் வாழ்ந்ததாய் சரித்திரமில்லைமிக பெரிய உதாரணம் ஆப்கானிஸ்தான்அங்கிருந்துதான் வந்து வடக்கத்திய ஆலயங்களை கொள்ளை அடித்து குதிரையிலும் ஒட்டகத்திலும் ஏற்றி சென்றார்கள், கஜினியும் கோரியும் ஆப்கனுக்கு கொண்டு சென்ற கோவில் சொத்துக்கள் ஏராளம்அதை வைத்து என்னவோ செய்தார்கள், கஜினி அணை எல்லாம் கட்டிபார்த்தான்ஒரு மண்ணும் உருப்படவில்லை, இன்றுவரை அது தரித்திர தேசமே. ஏதோ ஒரு சாபம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றதுஇங்கு ஆலயங்களை அசைத்துபார்த்தான் ராபர்ட் கிளைவ், ஆம் இந்தியாவில் வெள்ளையன் ஆட்சியினை தொடங்கி வைத்த அந்த கிளைவ்கொஞ்ச நாளில் அவன் தற்கொலை செய்துகொண்டான்அவன் சாவுக்கு பின் இந்து ஆலயங்களில் கைவைக்க வெள்ளையன் அஞ்சினான், 200 ஆண்டுகாலம் அவன் ஆண்டபொழுது இந்து ஆலயம் பக்கமோ அதன் சொத்துபக்கமோ தலைவைத்தும் படுக்கவில்லைமாறாக வெள்ளையனும் அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றான், மதுரை ஆலயத்துக்கு ஒரு வெள்ளை கலெக்டர் பக்திமானாகவே மாறி இருந்திருக்கின்றான்வெள்ளையன் ஆட்சியில் ஆலயத்துக்கான முழு சுதந்திரத்தை அவன் அளித்திருந்தான்இந்து ஆலயங்களுக்கான சோதனை ஆச்சரியமாக் சுதந்திர இந்தியாவில்தான் வந்தது அதுவும் தமிழக ஆலயங்களுக்கான சோதனை திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான் வந்ததுஇங்கு எல்லாமே நல்ல திட்டம் போலத்தான் தெரியும் ஆனால் கட்சிக்காரனுக்கும் அவன் மூலம் தனக்கும் பலனில்லா ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் திராவிட கட்சி அனுமதிக்காதுகொள்ளை பொருளில் உங்களுக்கு பங்கு உண்டு என்றுதான் படைநடத்தினான் அலெக்ஸாண்டர், திராவிட கட்சிகளும் அந்த பாணியேஅவர்கள் மதுகடை திறப்பார்கள் கட்சிக்காரன் சம்பாதிப்பான் கமிஷன் கட்சிக்கு வரும், அவர்கள் கல்லூரி பள்ளிக்கு அனுமதி கொடுப்பார்கள், கட்சிக்காரன் சம்பாதிப்பான் கப்பம் கட்சிக்கு வரும்இது எல்லா வகையிலும் உண்டுஅறநிலையதுறை என ஆலயசொத்துக்களை ஆட்டையினை போட்டது இப்படித்தான், கட்சி ஆட்சி அமைக்க தொண்டன் பாடுபடுவான் ஆட்சி அமைந்ததும் நலதிட்டம் என அறிவித்து தொண்டனை பலன் பெற செய்வார்கள், தொண்டன் மூலம் கமிஷன் கட்சிக்கு செல்லும்பின் அடுத்த தேர்தலுக்கு வருவார்கள் செலவழிப்பார்கள் சம்பாதிப்பார்கள் அது ஒரு சக்கரம்அப்படித்தான் இந்த அறநிலையதுறையும் அமைத்தார்கள், அது கோவில் சிலை முதல் சொத்துவரை ஆட்டையினை போட்டது, கமிஷன் சரியாக சேரவேண்டிய இடத்தில் சேர்ந்ததுஇப்பொழுது குடியிருப்பனுக்கே சொந்தம் என மொத்தமாக தலைமொழுக பார்க்கின்றார்கள் இது சரியல்ல‌கோவில் சொத்தை தொட்டவனும் கெட்டான் எடுத்தவனும் கெட்டான்கொடுக்கும் அரசுக்கும் நல்லதல்ல, வாங்குபவர்களுக்கும் நல்லதல்ல‌கோவில் சொத்துக்கள் நிலையான வருமானத்தை கோவிலுக்கு கொடுக்கும் வகையில் நிர்மானிக்கபட்டவை, ராஜராஜசோழனின் சாவா மூவா பேராடுகள்” போன்றவைஅது என்ன ஆடுகள் அவற்றுக்கு சாவும் மூப்பும் இல்லை என்றால் எப்படி?அவன் தஞ்சை கோவிலில் வருமானத்துக்கு பல வழி செய்திருந்தான் அதில் ஒன்றுதான் இது, அதாவது அவன் சில ஆடுகளை ஒருவருக்கு அளித்திருந்தான், அவர்கள் ஆட்டின் பால் குட்டிகள் என எடுத்து கொள்ளலாம்ஆனால் ஆலயத்தின் தீப செலவு அவர்களதுஒருவேளை அவர்கள் வேறுநாட்டுக்கோ இல்லை தீபம் ஏற்றமுடியா நிலையோ வந்தால் அரசன் கொடுத்த அதே ஆடுகளின் எண்ணிக்கையில் இன்னொருவருக்கு கைமாற்ற வேண்டும்எப்படி பெற்றார்களோ அப்படி அதே தரத்தில் அதே எண்ணிக்கையில் திரும்ப கொடுத்தல் வேண்டும்ஆம் அந்த ஆடுகளுக்கு சாவும் மூப்பும் இல்லை.எக்காலமும் ஆலய சொத்துக்கள் அப்படியே இருக்க வேண்டும் அதன் பலன் கிடைத்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அக்கால ஏற்பாடுஎல்லா கோவிலின் சொத்துக்களும் அப்படியேஅதன் பலன்களை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் அதில் ஆலயதிருப்பணி நடக்கவேண்டுமே தவிர சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லைஅப்படி யாராவது சொந்தம் கொண்டாடினால் நீங்கள் சேர்த்துவைப்பது சொத்து அல்ல, சந்ததிக்கான பாவம்உதாரணம் வேண்டுமானால் அக்கம்பக்கம் பாருங்கள் இல்லை ஆப்கானிஸ்தானை பாருங்கள்..ஆம் இன்று தரித்திரமாக திரியும் அவர்களெல்லாம் கஜினி முகமதுவுடன் இங்கு ஆலயங்களில் கொள்ளையிட்டவர்களின் வாரிசுகள்,அவர்களை பார்த்து உங்கள் சந்ததிகளை மனதில் வைத்துகொள்ளுங்கள்

தமிழக தினம்

கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது,

உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே.

மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா மன்னர்தான் உண்டு, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு

பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், பிரிட்ட்டிஷ் இந்தியா எனும் வகையில் அவனும் சில உள்ளாட்சி தேர்தல்களை எல்லாம் நடத்திகொண்டிருந்தான், நிலங்களை அளத்தல், ரயில் நிலையம் கட்டுதல் என பல விஷயங்களும் அதில் இருந்தன‌

சுதந்திரம் நெருங்க முதல் பிரிவு மத அடிப்படையில் நடந்தது, இந்தியவில் அப்படி பல மாகாணம் பாகிஸ்தானுக்கு செல்ல, இரு மாகாணம் பங்கிடபட்டன, ஒன்று பஞ்சாப் இன்னொன்று வங்கம்

முதல் பிரிவுகள் இப்படி மத அடிப்படையில் நடந்தன‌

சுதந்திரம் அடைந்த அடுத்த 3 ஆண்டுகளிலே மொழிவாரியாக மாநிலங்களை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பபட்டது, எழுப்பியர் பெரியார் அல்ல, அவர் திராவிட நாடு வேண்டுமென்றாரே தவிர மொழி அவருக்கு பிரச்சினை அல்ல, மொழியினை தொட்டால் திராவிட நாடே இல்லை என்பதால் கமுக்கமாக இருந்தார்.

அன்று அவர் அண்ணா கும்பல் பிரிந்த கலக்கத்தில் இருந்தார், திமுக அன்று ஏதோ சொல்லிகொண்டிருந்தது, ஆனால் முணுமுணுத்துகொண்டிருந்தது, தமிழ்நாடு எனும் பெயரெல்லாம் அவர்கள் கனவில் கூட இல்லை

பொட்ட ராமலு எனும் தெலுங்கர்தான் குளத்தில் முதலில் கல் எறிந்தவர், தனி ஆந்திரம் வேண்டுமென்று முதலில் அடம் பிடித்தவர் அவரே

பின் கமிஷன் அமைக்கபட்டு கன்னடம், கேரள, ஆந்திரம் என அமைக்கபட்டாலும், சென்னை மாகாணம் அதாவது மெட்ராஸ் ஸ்டேட் எனும் பழம்பெயர் தமிழகத்திற்கு தொடர்ந்தது

இப்போது இருக்கும் தமிழகம் இல்லை அது, திருத்தணியும் சென்னையும் ஆந்திரர்களிடமிருந்தது, மபொசி தலமையில் நடந்த போராட்டமே அதனை மீட்டெடுத்தது

கன்னியாகுமரி மாவட்டம் மார்ஷல் நேசமணி தலமையிலான போரட்டத்தில் தமிழகத்தோடு இணைந்தது. தேவிகுளம் பீர்மேடு எனும் தமிழக பகுதிகளை கேரளம் தர மறுத்தது, கன்னடத்திடம் சில பகுதிகளை இழந்தோம்

இது 63 ஆண்டுக்கு இதே நாளில் முன்பு நடந்த சம்பவங்கள்

பின் தியாகி சங்கரலிங்கம் இது தமிழ்நாடு என அழைக்கபடவேண்டும் என சொல்லி போராடி செத்தார், பின்னாளில் அண்ணா தமிழ்நாடு ஆக்கினார்

இன்றும் இந்தியாவில் “நாடு” என அமைந்திருக்கும் மாநிலம் இது மட்டுமே, அன்றிலிருந்தே டெல்லிக்கும் நமக்கும் இடையே சந்தேக பார்வை உண்டு.

திராவிட நாடு அடையமுடியாமல் போன மாபெரும் தோல்வியினை தமிழ்நாடு என சொல்லி முகத்தை துடைத்துகொண்டார் அண்ணா.

உண்மையில் திருப்பதி தொடங்கி திருவனந்தபுரம் வரைக்கும் தமிழக பூமி, கொஞ்சம் பெயர்களை கவனித்தாலே புரியும் திரு என்பதே தமிழக வார்த்தை, தெலுங்கர்களுக்கு சம்பந்தமில்லா வார்த்தை

திருப்பதியும், திரு அனைந்த புரம் எனும் அந்த பகுதியும் தமிழர் நிலமே, சந்தேகமே இன்றி சொல்லமுடியும், இன்றும் திருவனந்தபுரம் வரை உள்ள மலையாளமும், அதற்கு வடக்கே இருக்கும் கொடு மலையாளமே அதற்கு சாட்சி

சரி 60 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கின்றது?

அன்று எங்களுக்கு சென்னையினை விட்டால் வேறு சொல்லிகொள்ள நகரமில்லை என கதறிய தெலுங்கர்கள் ஐதரபாத்தினை பிரமாண்டமாக உருவாக்கினார்கள், அது தெலுங்கானாவிடம் போன்போதும் இன்று அமராவதியினை கன ஜோராக உருவாக்கிகொண்டிருக்கின்றார்கள்

அன்று கன்னடத்தின் மிகசிறிய நகரமான பெங்களூர் இன்று உலகின் முண்ணணி நகரமாயிற்று

நாகர்கோவிலை விட பின் தங்கி இருந்த திருவனந்தபுரம் பெரும் நகரமாயிற்று, கொச்சின், திருச்சூர் எல்லாம் வளர்ந்திருக்கின்றன‌

தமிழகத்தின் நிலை என்ன? வெள்ளையன் விட்டுசென்ற அதே சென்னை, நிச்சயம் மும்பை போல வளர்ந்திருக்கவேண்டிய நகரம் அதற்குரிய இடத்தினை பெறவில்லை, விமான நிலையம் கூட இடிந்துகொண்டே இருக்கின்றது

கன்னடமும், கேரளமும், ஐதராபாத்தும் கட்டங்களில் அசத்த நாமோ இன்னும் வெள்ளையன் கோட்டையிலே சட்டமன்றம் நடத்துகின்றோம்

அவர்கள் இந்தியும் படித்து தங்கள் மொழியினையும் காத்துகொள்ள, நாமோ இந்தியும் படிக்காமல் தமிழையும் காக்காமல் மொழிகொலை செய்துகொண்டிருக்கின்றோம்,

இன்றைய தமிழக தமிழனுக்கு ஒரு மொழியும் உருப்படியாக தெரியாது தமிழ் உட்பட‌

நீர் மேலாண்மையில் அவைகள் எல்லாம் தன்நிறைவு பெற்றிருக்க நாமோ அவன் தரவில்லை, இவன் தரவில்லை என அழுதுகொண்டிருக்கின்றோம், தண்ணீர் வந்தால் கடலுக்கு அனுப்புவோம்

இரு காரணங்களை உறுதியாக சொல்லமுடியும் ஒன்று சினிமா மோகமும் இன்னொன்று அதன் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட அரசியலும்

இந்த இரண்டாலும் தமிழகம் அடைந்திருக்கும் நாசம் கொஞ்சமல்ல, ஆந்திரா ராமராவோடு திருந்திற்று ஆனால் மாநில பிரிவு எனும் பெரும் விலை கொடுத்தது. காரணம் இதுதான் இந்திய அரசியல்

ஒரு மாநில கட்சி வளர்ந்தால் மாநிலத்தையே பிரிக்க மத்திய கட்சிகள் தயங்காது, இது ஒருவகை உத்தி , ராஜதந்திரம்

இன்று ஆந்திராவில் சினிமா நட்சத்திரம் அரசியலுக்கு வரமுடியாது, சிரஞ்சீவியின் வீழ்ச்சி அதனை சொல்கின்றது. சந்திரபாபு சினிமாக்கரர் அல்ல, ஆனால் சினிமா மூலம் கிடைத்த ஆட்சியினை நல்லாட்சியாக மாற்றிகொடுத்துகொண்டிருப்பவர்

கேரளமும், கன்னடமும், தெலுங்கானாவும், சீமாந்திராவும் இன்று வரை தேசிய நீரோட்டத்தில் விலாகது பயணிப்பதும் அவர்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் மகா முக்கிய காரணம். இந்தியர்களாக உணர்கின்றனர், வாக்களிக்கின்றனர் அதே நேரம் தம் மாநில நலனை காத்தும் கொள்கின்றனர்

தமிழகத்தில் தாங்கள் தனிநாட்டில் இருப்பது போல் நாம் இருக்கின்றோம், இந்திய தேர்தல் என்றால் நாம் கலைஞரை அல்லது அம்மையாரை ஆதரிப்போம், அவர்கள் காங்கிரசை அல்லது பிஜேபியினை ஆதரிப்பார்கள்

இதற்கு நேரடியாக மத்திய கட்சிகளை ஆதரித்தால் என்ன என நாம் யோசிக்கமாட்டோம், நாம் அப்படித்தான்

திராவிட அரசியல் அப்படி பல விமர்சனங்களுக்கு உட்பட்டது, இம்மாநிலம் அடைந்திருக்கும் பல கேடுகளுக்கு அவர்கள் காரணம் என்பதை மறுக்க முடியாது, மகா உண்மை

இன்னொன்று யதார்த்த நிலையில் இந்தியா முழுக்க ஒரு கட்சிஆட்சியும் தமிழகத்தில் தனி கட்சி ஆட்சியும் நடப்பது எப்படி தமிழகத்திற்கு நல்ல பலன் தரும்? ஒரு காலமும் தராது. இது யதார்த்த நடைமுறை

இந்தி படிக்கமாட்டோம், ஈழ புலிகள் ஆதரவு என பல விஷயங்களில் தமிழகம் தனிகொடி பிடித்தே தன்னை சீரழித்தது, சரி ஆள்பவர்களாவது ஒழுங்காக ஆண்டார்களா என்றால் ம்ஹூம்.

கொஞ்சம் கூட அரசியல் ஞானமில்லா, கேமராவிற்கு முன் கூத்தடிக்கும் கும்பல் எல்லாம் நாடாளதுடிக்க இவர்களே காரணம், கேரளாவிலும் கன்னடத்திலும் இதெல்லாம் சாத்தியமில்லை, அறவே இல்லை

அட உலகில் எங்கும் சாத்தியமில்லை, பின் தங்கிய சோமாலியாவிலோ, ஆப்கனில் கூட சாத்தியமில்லா முட்டாள்தனம் தமிழகத்தில் மட்டும் சாத்தியமென்றால் திராவிட கட்சிகளே முதல் காரணம்.

மொத்தத்தில் இந்த மொழிவாரி பிரிவினையால் ஒரு மாநிலம் நாசமாக போய்கொண்டிருக்கிறது என்றால் அது தமிழகம் மட்டுமே, ஒரே காரணம் திராவிட கட்சிகள்

இந்த மொழிவாரி பிரிவுக்கு பின் ஒரே ஒரு இந்திய அடையாளம் தமிழகத்தில் நிறுவபட்டது என்றால் அது விவேகானந்தர் பாறை மண்டபம் மட்டுமே, எப்படி அது அமைக்கபட்டது என்றால் ஏக்நாத் ராணடே எனும் மனிதனின் ராஜதந்திரம் எல்லோர் வாயினையும் கட்டிபோட்டது

இல்லை என்றால் வங்கத்து காவி பரதேசிக்கு எங்கள் கடலில் மண்டபமா என கிளம்பியிருப்பார்கள்

ஆக மொழிவாரி மாநிலத்தால் நாம் இழந்தது மகா அதிகம், இன்னும் இழப்போம் இருந்து பாருங்கள்

ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதரை பார்க்கலாம், அம்மனிதருக்கு அன்று வயது 32 இருக்கலாம், பிரமாதமான வசனகர்த்தா கூடுதலாக அரசியல்வாதி

அப்பொழுதுதான் இப்பிரிவினைகள் எல்லாம் நடந்து தமிழ் மாநிலம் உருவாகின்றது,

மற்ற மாநிலங்கள் எல்லாம் தேசிய கட்சிகளை ஏற்றுகொள்ள, தமிழகத்தில் பிரளயமே வெடிக்கின்றது, நேருவே நான்சென்ஸ் என திட்டுகின்றார், பதிலுக்கு அந்த வசனகர்த்தா உனக்கு நோ சென்ஸ் என சொல்ல இந்தியா அதிர்கின்றது

ஒரு கட்டத்தில் தமிழகத்திலிருந்து காங்கிரசை விரட்டி ஆட்சியினை பிடிக்கின்றது அந்த கட்சி, அந்த நபர் முதல்வராகின்றார், அதாவது மாநிலம் அமைந்து 12 வருடம் ஆகியிருந்தது

அதன்பின் அம்மனிதர் பெரும் விஸ்வரூபமெடுத்தார், யாராலும் அவரை தமிழகத்தில் அசைக்கமுடியவில்லை, இந்திராவின் எதிரிகள் கூட அவரை நெருங்கினர்

யோசித்த டெல்லி அவர் கட்சியினையே இரண்டாக உடைத்து இனி என்ன செய்வாய்? என்பது போல பார்த்தது.

இங்குதான் அம்மனிதரின் ஆற்றல் அப்பட்டமாக தெரிகின்றது

என்ன மாயமோ? என்ன மந்திரமோ? உடைந்த கட்சியும் தேசிய கட்சிகளோடு இணையவுமில்லை, அவற்றை வளரவிடவுமில்லை

இந்திரா தமிழகத்தில் போட்டி இட இருந்ததை இரு கட்சிகளும் நுட்பமாக தடுத்ததே இதற்கு பெரும் உதாரணம்.

இருவரும் மாறி மாறி ஆண்டுகொள்கின்றார்களே தவிர, இன்னொரு கட்சி வளரவோ, தேசிய கட்சிகள் நுழையவோ வாய்ப்புகொடுத்ததே இல்லை

இந்த நுட்பத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் கையினை பிசைந்த டெல்லி சில வழக்குகளை போட்டு இருவரையும் ஏதோ செய்யபார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. கூட்டணி வைத்து திருப்திபட்டு கொண்டது, அதுவும் பிரயோஜனமில்லை, கருணாநிதியின் பெரும் ராஜதந்திரமிது

ஆக கிட்டதட்ட 50 ஆண்டுகளாக அம்மனிதர் டெல்லி கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே திகழ்ந்தார், சில இடங்களில் அவை கூட்டு சேர்த்து கட்டியழுகின்றதே தவிர முழு மனதோடு அல்லவே அல்ல‌

இந்த மொழிவாரி தமிழகத்தின் மிக சுவாரஸ்யமான மனிதர் அந்த கலைஞர் கருணாநிதி

தன் கட்சி உடைந்து எதிர்கட்சி ஆனபின்பும் பொது எதிரி யார்? என்பதில் எவ்வளவு கவனமாக இந்த நொடியளவும் இருக்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் கலைஞரின் சாமர்த்தியம்

எல்லா மாநிலங்களையும் ஆளும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் திருவோட்டுடன் நிற்பதும் அவராலே, அவர் ஒருவராலே

இந்த திராவிட ஆட்சிகளால் மாநிலம் அடைந்த நன்மை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்

ஆனால் அப்படி ஒரு வில்லாதி வில்லன் 50 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் சமார்த்தியமாக, அசைக்கமுடியா சக்தியாக பெரும் மாயாவியாக அமர்ந்திருந்தார் என்பது வேறு வகையில் ரசிக்க கூடியது

இது மாறிவிட்ட காலம், அந்நாளில் கொடூரமாக கொள்ளையடித்தவன் அலெக்ஸாண்டர், மாவீரன் என சொல்கின்றோம், காரணம் வென்றுவிட்டான் திறமை

அப்படி இம்மாதிரியான நாகரீகமான உலகில் வாக்குதான் ஆயுதம், அதனை கவர்வதுதான் சாமர்த்தியம்.

அவ்வகையில் கலைஞர் பெரும் சாமார்த்தியசாலி, இனி அவருக்கு பின் இங்கு மாற்றம் நிகழலாம்.

மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தால் நாட்டில் குழப்பமிருக்காது என மத்திய அரசு நினைத்துதான் பிரித்தது, இல்லையேல் இன அடிப்படையில் விபரீத பிரிவினை நடந்திருக்கும்

மற்ற மாநிலங்களில் அந்த கணிப்பு பலித்தது

ஆனால் தமிழகம் டெல்லியின் தீரா தலைவலியாக மாறிபோனது, அது இன்றுவரைக்கும் தொடர்கின்றது, இன்னும் தொடரும்

ஆனால் இதில் தமிழகம் இழந்துகொண்டிருப்பதுதான் அதிகம் , இதனை மக்கள் சிந்திக்கும்பொழுது மாற்றம் நிகழலாம்

அதனை விட்டு தனிதமிழ்நாடு தீர்வு என கிளம்புவார்களாயின், கொஞ்சநாளில் தனி பாண்டிய நாடு, தனி கட்டபொம்மன் பாளையம் என குரல்கள் கேட்கும் காலம் வரும்

மானிட மனம் அப்படிபட்டதுதான், அதாவது பிரிய நினைத்தால் பிரிந்து கொண்டே இருக்கலாம், சேர்ந்து வாழ நினைத்தால் வாழ்ந்துகொண்டே இருக்கலாம்

ஒற்றுமைதான் பலம்

உலகில் ஓரளவு இந்தியாவிற்கு மரியாதை இருக்கிறதென்றால் அதன் பெரும் மக்கள் தொகையும், அது கொடுக்கும் பலமுமே

மொழிவாரியாக பிரிந்தாலும், இந்தியன் எனும் உணர்வில் ஒன்றாய் இருப்பதே உயர்வுக்கு வழி, அமைதிக்கும் வழி.

மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்,

ஆனால் நிச்சயமாக தமிழருக்கு ஒரு நலனும் இல்லை, தொல்லைகள் தான் கூடிகொண்டே இருக்கின்றன,

ஆனால் அவை நிச்சயமாக மாநில அரசியலால் அதிகரித்த தொல்லைகள் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது

இந்த 63 ஆண்டில் கலைஞர் இருந்த அளவும் டெல்லியால் கால்பதிக்கமுடியவில்லை, தூண்ட வேண்டியர்களை தூண்டி, எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரித்து, மிரட்ட வேண்டிய இடத்தில் மிரட்டி, கெஞ்ச வேண்டிய இடத்தில் கெஞ்சி ஒருமாதிரி தமிழகத்தை ஆக்கி வைத்திருந்தார்

எதிர்கட்சியான அதிமுகவும் அவரால் பலன் பெற்றதால் அவருக்கு ரகசியமாக தலையாட்டியது

இப்பொழுது காட்சிகள் திரும்புகின்றன‌

முதன் முறையாக இதுதான் தமிழக தினம் என அதிரவைகின்றார் பழனிச்சாமி, தமிழ்நாட்டுக்கு இது புதிது, இனி பல மாற்றங்களை இம்மாநிலம் சந்திக்க போவது மட்டும் தெரிகின்றது

இந்திய ஜெர்மன் உறவில் இது புது அத்தியாயம்

உலகில் மகா சக்திவாய்ந்த நாடு ஜெர்மன், பெரும் ராணுவபலம் இல்லை எனினும் மிக வலுவான பொருளாதார சக்தி அது. என்ன இருந்தாலும் ஹிட்லரின் பூமி அல்லவா? அதனால் அந்நாடு வலுவான ராணுவம் அமைத்துவிட கூடாது என்பதில் பல நாடுகளுக்கு கடும் ஆசை

ஜெர்மனும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் வளர்ந்து நிற்கின்றது, இன்று ஐரோப்பாவினை ஆட்டிவைக்கும் தேசம் அதுதான். பிரிட்டன் எல்லாம் பிடி இழந்தாயிற்று

எலக்ட்ரானிக்ஸ் நுட்பத்தில் யாரும் இருக்கலாம் ஆனால் மிக கடுமையான விஷயமான கனரக தொழிலில் ஜெர்மன் அன்றும் இன்றும் என்றும் நம்பர் 1. அந்த வித்தையில் அவர்களை அடிக்க ஆளே இல்லை

புதுபுது மெஷின்கள் முதல் எந்திரம் வரை அசால்ட்டாக தயாரித்து தள்ளுவார்கள். எந்திரவியலில் அவர்கள் தொழில்நுட்பமே உலகில் நம்பர் 1 தொழில்நுட்பம்

அப்படிபட்ட ஜெர்மனின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உலகின் சக்திவாய்ந்த பெண்மணி. அந்நாட்டு மக்களும் வேறு தேர்வே இல்லாமல் அவரை கொண்டாடுகின்றனர்

14 ஆண்டுகளாக ஜெர்மன் அதிபராக கோலோச்சும் அந்நாட்டு இந்திராகாந்தி அவர்

அந்த பெரும் தேசத்தின் அதிபரான மார்கெல் இந்தியா வந்திருக்கின்றார், 3 நாட்கள் இங்கு தங்கி பல ஒப்பந்தைகளில் கைசாத்திடுவார்

இந்தியாவும் ஜெர்மனும் பல விஷயங்களை கூட்டாக செய்ய போகின்றது

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பெரும் முயற்சிக்கு பின் இது நடந்திருக்கின்றது, இந்திய ஜெர்மன் உறவில் இது புது அத்தியாயம் என்பதால் உலக நாடுகள் கூர்மையாக

கவனித்துகொண்டிருக்கின்றன

மக்கள் நலமும் அரசுக்கு வரியும் மகா முக்கியம்

விஜய் சேதுபதி மான்டி எனப்படும் பலசரக்கு மளிகைக்கான ஆப்ஸ் விளம்பரத்துக்கு வந்ததை கண்டிக்கின்றார்கள், இதெல்லாம் வியாபாரிகளை ஒழித்துவிடும் இவர் படத்தை ஆண்லைனில் ஓடவிடுவாரா என ஏக இம்சைகள்

இவர்கள் எந்த காலத்தில் இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை, காலத்தோடு ஓடாத எதுவும் நிலைக்காது, மாட்டு உழவுகள் டிராக்டர் முன் நிற்காது

பழைய பாகவதர் கால படங்களை இனி எடுக்க முடியாது

ஏன் பிலிம் கம்பெனியே மூடபட்டு டிஜிட்டல் உலகமாகிவிட்டது அந்த பிலிம் கம்பெனி தொழிலாளர் கதி என்ன?

இந்த ஆப்ஸ் வந்திருப்பது கால மாற்றம், சரி இதனால் தொழில் பாதிக்கபடும் என்பவர்கள் இந்த ஓலா போன்றவற்றால் எவ்வளவு பேர் பாதிக்கபட்டான் அப்பொழுது எங்கே சென்றார்கள்?

டிஜிட்டல் மீடியாவால் மூடபட்ட புத்தக பதிப்பாளர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு என்ன பதில் உண்டு?

மின் மோட்டார், டிராக்டர் வருகையால் ஏர்கலப்பை, சாட்டை, மரகலப்பை, கமலை , மாட்டுக்கு லாடம் கட்டுதல் என எத்தனை ஆயிரம் தொழில்கள் அழிந்தது, யார் கவலைபட்டார்?

அட மிக்ஸி வந்து ஆட்டுக்கல் அம்மி அம்மி கொத்துதல் என எவ்வளவு தொழில் அழிவு? கண்டுகொண்டவர் யார்?

காலம் மாற மாற எல்லாம் மாறும், எல்லா தொழிலிலும் மாற்றம் வரும் அதற்கு தக்க மாறாவிட்டால் நிலைக்கமுடியாது

இந்த மாண்டி நிச்சயம் எளிதானது, விலை குறைவும் சவுரியமும் இருந்தால் மக்கள் அங்குதான் படை எடுப்பார்கள்

மாண்டி இல்லை என்றால் இதே சாயலில் ஆயிரம் ஆப்ஸ் வரபோகின்றது, நாம் முன்பே சொன்னதுதான்

உபர் நிறுவணத்திடம் சொந்த கார் கிடையாது ஆனால் அது பெரும் சாம்ராஜ்யம் வைத்திருக்கின்றது

ஸ்விக்கி போன்றவற்றிடம் ஒரு முறுக்கு கூட கிடையாது ஆனால் உணவு உலகை ஆள்கின்றது

எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்

பல நாடுகளை பார்த்ததால் சொல்கின்றோம், அங்கெல்லாம் முன்பு இப்படி பல சிறுதொழில்கள் இருந்து பின் ஓய்ந்தன‌

ஆளாளுக்கு எங்கோ இருப்பதைவிடுத்து சந்தை அமைப்பில் கூடி ஒன்றாகி நிற்கின்றார்கள்

ஆம் இம்மாதிரி தொழில்நுட்பத்தை எதிர்க்க கூட்டு முயற்சி அவசியம்

ஜவுளி, மளிகை, காய்கறி முதல் கட்டைபீடி வரை ஒரே இடத்தில் கிடைக்கும் பெரும் சந்தைகளை அமைத்தால் மக்கள் உற்சாகமாக வருவார்கள்

ஒன்று முக்கியமானது, மானிட மனம் கொண்டாட்டத்துக்கும் ஊர் சுற்றலுக்கும் ஏங்க கூடியது, மனம் ஒரு குரங்கு என அதைத்தான் சொன்னார்கள்

ஆம் இம்மாதிரி ஆப்ஸ்கள் எல்லாம் அவசரத்துக்கு உதவுமே அன்றி மனிதனை வீட்டை விட்டே வரமுடியாத அளவு முடக்காது அப்படி ஒரு சமூகம் முடங்கவும் முடங்காது

ஷாப்பிங் என்பது ஒரு கொண்டாட்டம்

எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு ஓரளவு செய்தால் இதனை தடுக்கலாம்

மற்றபடி மளிகை கடைக்காரன் கொள்ளை லாபநோக்கில் விலை வைத்தால் இம்மாதிரி மலிவு விலையில் தரமான பொருள்கிடைத்தால் மக்கள் பள்ளம் நோக்கிய வெள்ளமென பாயத்தான் செய்வார்கள்

ஆக விஜய்சேதுபதியினை திட்டி ஒன்றும் ஆகாது. அவர் விளம்பரத்துக்கு வரவில்லை என்றாலும் இவை எல்லாம் மக்களை சென்று அடைந்தே தீரும்

தொழில்நுட்ப சுனாமியினை துடுப்பால் அடக்க முடியாது, மாற்றுவழி தேடுவதே தீர்வு

பம்பு செட் வேண்டாம் அது கமலை இறைப்பதை அழித்துவிடும் என்பதும், டிராக்டர் வேண்டாம் அது ஏர்கலப்பையினை ஒழிக்கும் என்பதெல்லாம் அறிவுடமை ஆகாது

இதில் ஒருவிஷயம் சரியாக இறுக்குதல் வேண்டும்

இம்மாதிரி கம்பெனிகள் நன்றாக சம்பாதித்துவிட்டு வரிகட்டாமல் டபாய்க்கும் உதாரணம் அமெரிக்காவில் இருந்து கூட ஆண்டிபட்டிக்கு ஆர்டர் செய்துவிட்டு கம்மென்று இருக்கலாம் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி வரிகட்டமாட்டார்கள்

அந்த வரியினை சரியாக அரசு பிடித்தால் சிக்கல் இல்லை, எவன் எத்தொழில் செய்தால் என்ன மக்கள் நலமும் அரசுக்கு வரியும் மகா முக்கியம்

எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லை

திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடமாட்டோம் என எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லைநிச்சயம் திப்பு சுல்தான் மைசூர் மன்னனின் பரம்பரை அல்ல, இடையில் அந்த அரசை ஹைதர் அலி கைபற்றுகின்றான், அவன் வாரிசாக திப்பு அமர்கின்றான்ஆனால் மிகபெரும் பொற்காலமாக அவன் காலம் திகழ்ந்திருக்கின்றது இன்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான செல்வம் அவன் ஆட்சியில் இருந்திருகின்றது, ஆட்டோமான் அரசுக்கு பின் உலகில் நோக்கபடும் இஸ்லாமிய அரசனாக அவன் இருந்திருக்கின்றான்நெப்போலியன் தேடிய மாவீரனும் திப்புவேதிப்புவின் வாள்முதல் அவன் படையில் பயன்படுத்திய ராக்கெட் வரை அதிசயமே, அந்த ராக்கெட் வடிவம் இன்றும் அமெரிக்காவில் உண்டு. பின்னாளைய வான் பிரவுணுக்கு அவனே முன்னோடிதிப்பு மதவெறியன் எனபதில் எமக்கு உடன்பாடில்லை. அவன் மற்ற மன்னர்களை சேர்த்துகொண்டு வெள்ளையனை எதிர்க்க எண்ணி மற்ற சமஸ்தான மன்னர்களை அணுகியபொழுதுதான் சிக்கல் வெடித்ததுகேரள மன்னர்களும் இன்னும் பலரும் வெள்ளையனுடன் சேர்ந்து திப்புவினை எதிர்த்ததே சிக்கலுக்கு காரணம்திப்பு இந்து எதிரி அல்ல மாறாக வெள்ளையனுக்கு அஞ்சி அவனோடு வரமறுத்த இந்து மன்னர்களுக்கே எதிரிஅவன் திருச்சி பக்கம் செய்தது அடாவடி அல்ல, இங்கு மதுரை மன்னர்களுக்கும் அவனுக்கும் நல் உறவு இருந்தது, இந்த மருதுபாண்டியர் வேலுநாச்சியார் எல்லாம் அவனோடு நட்புறவில் இருந்தனர் அவன் இந்து எதிரியாக இருந்தால் மருது பாண்டியர் அவன் பக்கம் சென்றிருக்கமாட்டார்கள்காவேரியில் அன்றொரு கொடுமை இருந்தது, இதோ இவ்வருடம் மூன்றுமுறை பொங்கிய மேட்டூர் அணை போல அக்கால காவேரி பொங்கி தஞ்சையினை அழித்தால் மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், உன் காவேரி உன் பழி என சொல்லி பெரும் தொகை வசூலிப்பார்கள் தஞ்சை வாசிகள்திப்பு இதை கண்டித்தே காவேரி கரைகளை திருச்சிபக்கம் உடைத்தான், அந்த தகறாறே அது மத தகறாறு அல்ல‌இச்சர்ச்சை நெடுநாள் நீடித்து பின்பு விஸ்வேஸ்ரய்யா வந்து அங்கு அணைகள கட்டி சொட்டுநீர் இங்கு வராமல் இருக்க வழிசெய்தார், இன்று தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றோம்வரலாற்றில் திப்பு இந்துமத அபிமானியாக இருந்தான், மைசூர் சமஸ்தானத்தின் குலதெய்வமான அந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அள்ளிகொடுத்தான்திருவாடுதுறை ஆதீனம் உட்பட பல ஆதீனங்களுக்கு வந்து நன்கொடை எல்லாம் கொடுத்திருந்தான்அவன் இஸ்லாமியனாயினும் மக்களின் நம்பிக்கைபடி இந்த ஜாதகம் ஜோசியம் பூஜை என்பனவற்றில் அபார நம்பிக்கை இருந்தது, பிராமணர்களை அவன் உயர் இடத்தில் வைத்திருந்தான்மற்றபடி திப்புவின் அயல்நாட்டு போர்களை ராஜராஜ சோழனோடு ஒப்பிட்டு சொல்லாம், ராஜராஜ சோழன் கேரளாவின் அதாவது அன்றைய சேரநாட்டின் பல நகரங்களை கொழுத்தினான், அந்த காந்தளூர்சாலை எல்லாம் அந்த ரகம்அப்பொழுது இந்து ஆலயங்களும் பாதிக்கபட்டன, அதற்காக ராஜராஜ சோழனை இந்து விரோதி என சொல்லமுடியுமா? பா.ரஞ்சித்தே சொல்லமாட்டான்ஆக திப்பு செய்ததெல்லாம் அந்நாளைய போர் வழக்கங்களின்றி இந்து எதிர்ப்பு ஆகாதுஒரு விஷயம் மனதில் வையுங்கள், ஹைதரும் திப்புவும் பூரண இஸ்லாமியராகி இந்து வெறியர்களாக இருந்தால் மைசூர் சமஸ்தானம் என்றோ தூக்கி எறிந்திருக்கும் அவர்கள் இப்படி ஆண்டிருக்க முடியாதுமக்கள் ஒரு இஸ்லாமியனை அரசனாக ஏற்றுகொள்ளும் அளவு அவன் இருந்திருக்கின்றான்திப்புவினை இந்து முஸ்லீம் பிரச்சினையினை கிளறியே வெள்ளையன் வென்றான், அவன் உருவாக்கிய கட்டுகதைகள் எல்லாம் அவ்வகைஇன்றும் சதாம் உசேன், கடாபி , புட்டீன் என தனக்கு பிடிக்காதவர்களை ஒருமாதிரி கெட்ட பெயர் உருவாக்குவது வெள்ளையன் ஸ்டைல், அதுதான் திப்புவுக்கும் நடந்ததுநாம் திப்புவினை இந்திய அரசர்களில் ஒருவனாக வெள்ளையன் அரண்ட மாவீரனாக நெப்போலியனின் மனம் கவர் வீரனாக பார்க்கின்றோம்அவனுக்கு இத்தேசம் மரியாதை கொடுத்தே தீரவேண்டும், அவன் இம்மண்ணின் அடையாளம்எடியூரப்பா இதற்கு இடையூரப்பாவாக இருந்தால் அது மாபெரும் பழியாகும், காலம் அதை துடைத்து திப்புவின் பெருமையினை பறைசாற்றும்வீர சிவாஜியும் திப்புவும் வெள்ளையனை அலறவிட்டவர்கள், அதில் சிவாஜிக்கு சிலை விழா என்பதும் திப்புவினை ஒதுக்குவதும் அப்பட்டமான மதவாத அரசியல்இதை வன்மையாக கண்டிக்கின்றோம், எடியூரப்பா செய்வது மாபெரும் தேசவிரோதம்வெள்ளையன் காலத்து கட்டு கதைகளை நம்பி திப்புவினை எடியூரப்பா ஒதுக்குவாரானால் அவருக்கு தேசகொடியினை ஏற்றவோ இந்திய ஒற்றுமை பற்றி பேசவோ தகுதியே இல்லைநாம் திப்பு பிறந்தநாளை ஒரு இந்தியனாக கொண்டாடியே தீருவோம், அதை எந்த எடியூரப்பா தடுப்பார் என பார்த்துவிடலாம்..