Stanley Rajan’s குறள்

செல்வத்துட் செல்வம் புலிசெல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

தோன்றிற் ஆமைகறியோடு தோன்றுக அக்திலார்
தோன்றியும் தோன்றாமை நன்றி

புலிஎன்பஏனை திமுகஎன்ப இவ்விரண்டும் கண்ணென்ப‌ நான்வாழும் வாழ்வுக்கு

எருமையும் பசுவுமே மாடு தமிழர்க்கு
மாடல்ல மற்ற யவை.

கொலைபழி ஏந்தி தப்புவர் தப்பாதார்
உளவுதுறை அடி சேராதார்

தெய்வத்தால் ஆகா தெனினும் தொண்டை
வற்றிகத்த கூலி வ‌ரும்

வெள்ளதனைய மலர் நீட்டம் மாந்தர்த‌ம்
கூலிக்கு அனைய கத்து

யான் நோக்குங்கால் நிலம்நோக்கும் நோக்காங்கால்
மெல்ல நகும் மோடிஅரசு

அவனுகளும் அவனுக தத்துவமும்…

ராபர்ட் தே நோபிலி எனும் பாதிரி காவி உடை உடுத்தும்பொழுது கிறிஸ்தவருக்கு கோபம் வரவில்லை

அந்த வீரமாமுனிவர் காவி கட்டி நான் காவி கிறிஸ்தவன் என சொல்லும் பொழுது வணங்கினார்கள்

தெற்கே அந்த தேவசகாயம்பிள்ளை என்பவரும் காவி வேட்டி கட்டி நான் கிறிஸ்தவ சன்னியாசி என்றபொழுது கண்ணீர் விட்டார்கள்

இன்றும் வேளாங்கண்ணி கோவிலுக்கும் புளியம்பட்டி அந்தோணியார் கோவிலுக்கும் காவி கட்டி செல்வோருக்கு நீர் கொடுத்து வழியனுப்புகின்றார்கள்

ஆனால் வள்ளுவனுக்கு காவி கட்டினால் கோபம் பொத்துகொண்டு வருமாம், வள்ளுவன் எல்லோருக்கும் பொதுவானவனாம்

எப்படி பொதுவானவர்?

இந்நாட்டு முழு இந்து நாடு, இந்நாட்டு கலாச்சாரம் முழு இந்து கலாச்சாரம். இங்கு பெரும்பான்மையும் மொத்தமும் அவர்கள்தான்

இந்நாட்டை துண்டு துண்டாக உடைத்தால் கூட கோவா தவிர எல்லா பகுதியும் இந்து நாடாகத்தான் மலரும் சந்தேகமில்லை, அதை உறுதியிட்டு சொல்லலாம்

ஆக அந்த நாட்டில் இருந்துகொண்டு மிக சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தை நோக்கி இது எல்லோருக்கும் சமமான நாடு எல்லாமே பொது அடையாளம் என்பதெல்லாம் ஏற்கமுடியாத வாதம்

இன்னொரு நாட்டில் இதெல்லாம் சாத்தியமே அல்ல‌

இந்த நாடும் பொதுவாம், இந்த வள்ளுவனும் பொதுவாம் இன்னும் எல்லாம் பொதுவாம். ஆனால் அவர்களுக்கு மட்டும் சிறுபான்மையினர் சலுகை வேண்டுமாம்

சரி பொதுவாக வைக்கலாம் பொது சிவில் சட்டம் ஏற்றுகொள்வீர்களா என்றால் அய்யய்யோ நாங்கள் சிறுபான்மையினர் என ஓடிவிடுவார்கள்

எதெல்லாம் அவர்களுக்கு பாதகமோ அப்பொழுதுதெல்லாம் இந்நாடு எல்லோருக்கும் சமமானது என கொடிபிடிக்க வேண்டியது, எதெல்லாம் பாதகமோ அப்பொழுதெல்லாம் சிறுபான்மை போர்வைக்குள் ஒளிந்துகொள்ள வேண்டியது

அவனுகளும் அவனுக தத்துவமும்…

அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது

அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது, உன் பங்குதந்தையிடம் சொல்லி உன்னை என்ன செய்கின்றோம் பார் என சில மிரட்டல்கள் வருகின்றன‌

அய்யன்மீர், அவருக்கே ஆயிரம் சிக்கல்கள், ஏகபட்ட பிரச்சினைகள். போதாகுறைக்கு தூத்துகுடி மறைமாவட்டத்தில் சாதி சண்டை வேறு உச்சத்தில் இருக்கின்றது

அதனால் எம்மை பற்றி நீவீர் பிராது கொடுக்க சென்றால் அவர் தன் கஷ்ட நஷ்ட துயரங்களை உங்களிடம் சொல்லி அழும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.

ஒருவேளை நீவீர் எம்மை சபையினை விட்டு தள்ளினாலும் எனக்கு மின்சாரம், ரேஷன், குடியுரிமை,நிலவுரிமை, ஆதார் கார்டு எல்லாம் ரத்து ஆகாது, அதை கொடுப்பது பங்கு சாமியார் அல்ல

சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு

வழக்கம் போல சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு

காவல்கிணற்றில் ரயில் நிலையத்தை மீட்டார்கள் அதாவது காவல்கிணற்றில் முன்பு சில ரயில்கள் நிற்காமல் செல்லும் , அதை மீட்டெடுத்து வெற்றிமுரசு கொட்டினார் தற்போதைய எம்பி ஞானதிரவியம்

ஆனால் அந்த மாபெரும் வெற்றிவிழாவுக்கு அப்பாவு செல்லவில்லை, ஒரு தரப்பு ஏன் என விசாரிக்க அவரின் மகனுக்கு திருமணம் என செய்திவந்தது

திருமணமா? ஏதாவது சிக்குவாரா பார்ப்ப்போம் என தூண்டிலோடு கிளம்பிய கோஷ்டிக்கு பேனர் விவகாரம் கிடைத்துவிட்டது

பணகுடியில் போக்குவரத்தை பேனர் வைத்து இடைஞ்சல் செய்தார் என வழக்கு தொடர வைத்துவிட்டார்கள்

அப்பாவுக்கு இப்பொழுது பல கேள்விகள்

ஏன் பேனர் வைத்து போக்குவரத்தை(?) இடைஞ்சல் செய்தீர் என காவல்துறை கேட்கின்றது, அதென்ன நியூயார்க் பாஸ்டன் போக்குவரத்து சாலையா? என அப்பாவு மனதுக்குள் மட்டும் கேட்டுகொள்ளலாம், சத்தம் போட்டு சொல்லமுடியாது

கட்சி மேலிடத்தில் இருந்தோ தம்பி உதயநிதி படமில்லாமல் என்ன பேனர் என்ற விசாரிப்பும், கனிமொழி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை குரல்கள் வருகின்றதாம்

கடும் கடுப்பில் அமர்ந்திருக்கின்றார் அப்பாவு, எல்லாம் தீர்ப்புவரும் வரைதான் அதன் பின் நானே எம்.எல்.ஏ இதே போலிஸ் எனக்கு சல்யூட் அடிக்கும் என வந்துவிட்டார்

ஆக காவல்துறை கேள்வி கேட்கின்றது, திமுக மேலிடமும் கேட்கின்றது நாமும் பேனரை பார்த்துவிட்டு ஒரு கேள்வி கேட்டுவிடலாம்

மாண்புமிகு அமைச்சர் கேள்விபட்டதுண்டு, அதென்ன மாண்புமிகு தளபதி

தளபதிக்கு தேவை வீரமிகு, வேகமிகு பட்டம் அல்லவா?

மாண்புமிகு தளபதி என்றொரு தளபதி உலகில் எந்த மூலையிலாவது உண்டா?

சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன‌

சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன‌

கொத்தடிமையாய் ஒரு குடும்பத்தை வைத்து அக்குடும்பத்தின் குழந்தையினை வயலில் மேயும் ஆடு மாட்டினை விரட்டடுவது போல் விரட்டி கொன்றிருக்கின்றது ஒரு பண்ணையார் குடும்பம்

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒரு குழந்தை செத்திருக்கின்றது

நாயினை விட சொன்னதற்காக தற்கொலை செய்திருகின்றாள் இளம்பெண் ஆனால் உண்மை வேறாக இருக்கலாம்

ஹரியானாவில் ஆழ்துழை கிணற்றில் விழுந்து செத்திருக்கின்றது ஒரு குழந்தை

இந்த யழவு தொழில்நுட்பமும் இணையமும் வராமலே போயிருக்கலாம், இம்மாதிரி செய்திகள் காதுகளுக்கு வராமலாவது சென்றிருக்கும்

அந்த நாகரீகத்தை கற்று கொடுத்தது யார்?

மேடைகளிலும் சபைகளிலும் நாகரீகம் தேவைதான், மறுக்க முடியாது

ஆனால் அந்த பயல், இவன், அந்த யோக்கியம் இல்லாதவன், காட்டுமிராண்டி பயல், சிவபெருமான் எனும் பயல், விஷ்னு எனும் பயல் என முதன் முதலில் “நாகரீகத்தை” கற்று கொடுத்தது யார்?

ஆக ஈரோட்டு ராம்சாமி திருவள்ளுவரை பேசலாம், புலவர்களை பேசலாம், மாணிக்கவாசகரை பேசலாம்

கடவுள்களை பேசலாம், பார்ப்பான் பாப்பான் என சொல்லலாம், பாப்பான் இருக்கானே அவன விரட்டனும் என நாகரீக கொங்கு தமிழ் பேசலாம்

அந்த நாகரீகத்தை கற்று கொடுத்தது யார்?

நாகரீகத்தை பற்றி திக திமுக அன்பர்கள் பேசலமா? ஒரு தகுதி வேண்டாமா?

எந்த அவதாரத்தையும், புலவனையும், மேதைகளையும், ஞானிகளையும் அவர் வாய்க்கு வந்தபடி பேசினால் அது புரட்சி

மற்றவர் பேசினால் நாகரீகமின்மை.. அப்படித்தானே?

நீங்கள் வணங்கும் அவரை பேசினால் எப்படி வலிக்கின்றது? உங்களுக்கு வலிக்கின்றதல்லவா?

இப்படித்தானே அவர் பேசும்பொழுது மற்றவருக்கும் வலித்திருக்கும்?

நாகரீகத்தை எம்மிடம் தேடுமுன் உங்கள் குருநாதனிடம் தேடிவிட்டு வாருங்கள்..

எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

ராஜிவ் காலம் வரை காங்கிரஸ் தமிழகத்தை சரியாக அணுகியது, அதன் பின்பு சோனியா எடுத்தமுடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமானவை

ஒரு பிரிவினைவாத கட்சியான அதற்கு சோனியா திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தது இன்றுவரை மர்மமே, கருணாநிதி திட்டாத ஒரே டெல்லி தலமை சோனியாவே

சோனியா தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க என்ன செய்தார்? நிச்சயம் 2006ல் இங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்திருக்க வேண்டும், காங்கிரஸ் வளர்ந்திருக்கும், ஆனால் ஏன் சோனியா செய்யவில்லை?

சந்தேகங்கள் இன்னும் வலுக்கின்றன‌

நல்லவரோ கெட்டவரோ மோடி முடிந்த அளவு தமிழ்நாட்டோடு ஒட்ட முனைகின்றார், கோவா தளத்துக்கு சோழன் பெயரிடுகின்றார்

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையோடு வருகின்றார், திருகுறள் முதல் பல விஷயங்களை கணியன் பூங்குன்றனாரை உலக மேடைகளுக்கு எடுத்து செல்கின்றார்

ஆனால் காங்கிரஸ் இதை செய்யாதது ஏன்?

ஏன் சோனியாவின் காங்கிரஸ் திமுகவின் ஊதுகுழலாக மட்டும் இருந்தது, திமுகவினை தாங்கிபிடித்து அது வளராமல் போன மர்மம் என்ன?

எந்த சக்தி மோடி தமிழகத்தோடு ஒட்டுவது போல் சோனியாவினை இங்கு ஒட்டவிடாமல் தடுத்தது

ஏன் மோடி செய்வதை எல்லாம் காங்கிரஸால் செய்யமுடியவில்லை? வேண்டுமென்றே தவிர்த்தது யார்?

இவ்வளவுக்கும் ராஜிவ் உயிர்நீத்த இடம் சென்னை அருகே இருந்தும் சோனியாவும் ராகுலும் அங்கு வராமல் கோபாலபுரம் ஓடியது ஏன்?

உர வழக்கில் அழகிரி தப்பியது எப்படி? கனிமொழி வழக்கில் பைல்கள் காணாமல் போனது எப்படி?

பலத்த மர்மங்கள் அதில் உண்டு, கடைசியாக மாநில கட்சியான திமுகவின் தேர்தல் அறிக்கை காங்கிரசால் அறிவிக்கபட்டு அது மண்ணை கவ்விய கதையும் உண்டு

எங்கோ காங்கிரஸ் திமுகவிடம் வகையாக சிக்கி கிடக்கின்றது, அது திமுகவுக்கு அஞ்சுகின்றது.

திமுகவின் எல்லா கோரிக்கைக்கும் அது தலையாட்டுவதில் ஏதோ பெரும் மர்மம் உள்ளதா இல்லையா?

திமுகவே தமிழருக்கான அமைப்பு நாமெல்லாம் வட இந்திய அமைப்பு என ஒதுங்கி மண்டியிட்டு கிடக்கின்றது காங்கிரஸ்

ஆனால் திமுகவால் பாஜகவினை தொடமுடியவில்லை

திமுக மட்டும்தான் தமிழர் அடையாளமா? தமிழ்நாடு இந்திய அடையாளமில்லையா? வள்ளுவனும் இன்னும் பல விஷயமும் இந்திய பெருமிதம் இல்லையா? என பிஜேபி வரும்பொழுது திமுக தடுமாறுகின்றது, அலறுகின்றது

திமுக தமிழ்நாட்டை தமிழக அடையாளத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றதா? என கேள்வி கேட்கின்றது பாஜக, சரியான கேள்வி. ஆனால் காங்கிரஸ் ஏன் இதுகாலமும் கேட்கவில்லை?

சிக்கல் எம்மிடம் இல்லை உங்கள் கட்சியிடம்தான் உள்ளது, உங்கள் கட்சி செயாததை பாஜக செய்யும்பொழுது வாழ்த்தித்தான் தீரவேண்டும்

ஆக எம்மை திட்டுவதற்கு முன் மோடியினை திட்டுவதற்கு முன் சோனியாவினையும் டெல்லி காங்கிரசையும் நினைத்து பாருங்கள், உங்கள் கட்சிமேலான குற்றசாட்டுக்கள் ஏராளம் உங்கள் மனதிலே உதிக்கும்

ஆக அன்பார்ந்த முகநூல்வாசிகளே

ஆக அன்பார்ந்த முகநூல்வாசிகளே

திமுகவினர் என்ன சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் பணமாம் அவர்கள் கட்சியாம் அதனால் உதயநிதி என்ன அவரின் வேலைகாரனுக்கும் பேனர் வைப்பார்களாம்

ஆனால் வாக்கினை மட்டும் எல்லோரிடம் கேட்பார்களாம்..

இன்றுமுதல் அவர்கள் அடுத்த கட்சியினரை கலாய்க்கும் தகுதியினை இழந்துவிட்டார்கள்..

இனி மோடி பேனர், அதிமுக பேனர் என எதையாவது அவர்கள் கலாய்த்தால் அன்று இதை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள்

அப்படியே நம்ம M.m. Abdulla அண்ணனையும் கருத்தில் கொள்ளுங்கள்

பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி

“தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும்படி செய்தல் வேண்டும் ..” என்றான் பாரதி

பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி, அதுதான் திருகுறளை தாய்லாந்துக்கு கொண்டு சென்றிருக்கின்றது

இதை பாராட்ட வேண்டாம் மாறாக கரித்து கொட்டாமல் இருத்தலே அவர்களுக்கு நலம்

மாறாக வீண் அரசியலாக்கினால், அதெப்படி காவி திருவள்ளுவர் என பொங்கினால் ஆகபோவது ஒன்றுமில்லை அவமானமே மிஞ்சும்

காஷ்மீரில் மூக்கறுபட்டது போல் படுவார்கள்

தமிழர்களுக்கு இவர்கள் ஏக போக முதலாளிகள் என சொன்னவன் எவன்?

இவர்கள் சொல்வதுதான் தமிழர்களுக்கான வரலாறு வரலாறு என வகுத்தவன் எவன்?

பல்லாயிரம் ஆண்டுகால தமிழினத்தை வெறும் 70 ஆண்டுக்கு முன்பு வந்த காட்டுமிராண்டி சித்தாந்தம் வழிநடத்தும் அது சொல்வதுதான் வரலாறு என்றால் அது பைத்தியகராதனம் இல்லையா?

அவர்கள் அய்யன் திருவள்ளுவர் என சொல்லலாம், இவர்கள் “அய்யனார்” திருவள்ளுவர் ஆக்க கூடாதா?

“அய்யனார்..” திருவள்ளுவர் அழகாகத்தான் இருக்கின்றார்…

தெய்வபுலவன் எனும் கடாட்சம் இப்பொழுதுதான் தெரிகின்றது

எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும்

எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும், முன்பு அப்படித்தான் இருந்தது பின்னாளில் யாரும் எதையும் பேசலாம் எழுதலாம் எனும் நிலை வந்ததுதான் மகா சிக்கலுக்கு காரணம்

மிகபெரும் உதாரணம் கருணாநிதியின் திருகுறள் உரையும் தொல்காப்பிய பூங்காவும்

குறைந்தபட்சம் தமிழ்புலவர் படிப்பாவது முடித்திருப்பவனே திருகுறளுக்கும் தொல்காப்பியத்துக்கும் உரை எழுத வேண்டும் 6ம் வகுப்பு பெயிலானவன் எல்லாம் எழுதும் உரை ஏற்கபடாது என்றொரு சட்டம் இயற்றபட்டிருந்தால் இச்சிக்கல் வந்திருக்காது.

இதுகளுக்கு தமிழும் சரியாக தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது அதாவது மூலமே சரியாக தெரியாது

இவர்கள் மொழிபெயர்ப்பும் அதன் பொருளும் எப்படி இருக்கும்? அண்ணா கம்பரசம் எழுதியது போலத்தான் இருக்கும்

பெரியாருக்கு கண்டபடி தமிழ் இலக்கியங்களை விமர்சிக்கும் உரிமையினை கொடுத்தது எவன்?

இலங்கையில் புலிகள் நாங்களே எல்லாம் என ஆட்டம் போட்டு அழிந்தது போல் இங்கொரு கோஷ்டி அதுவாக ஆடி எல்லாவற்றையும் நாசமாக்கியிருக்கின்றது

அம்பேத்கர் சட்டம் இயற்றினாரென்றால் ஒரு தகுதி இருந்தது, தமிழக திராவிர கும்பல்களுக்கு தமிழை கண்டபடி மொழி பெயர்க்க என்ன கல்வி தகுதி அல்லது வேறு தகுதி இருந்தது என்பதுதான் தெரியவில்லை

அரைகுறை படிப்பாளிகளெல்லாம் கீதை, திருகுறளை எல்லாம் கண்டபடி மொழிபெயத்துத்தான் இப்படி ஆகிவிட்டது தமிழ்நாடு.

யார் கொடுத்த அதிகாரம் இது?

இந்த திராவிட கோஷ்டி இவர்கள் அரைகுறை அறிவில் இந்த பைபிளையும் குரானையும் மொழிபெயர்த்திருந்தால் அன்று தெரிந்திருக்கும் செய்தி

அதனால் கவனமாக அந்த பக்கமே செல்லாமல் இங்கே இந்துமத மூல புத்தகங்களை மொழிபெயர்க்கின்றோம் என அழிச்சாட்டியம் ஆரம்பித்துவிட்டார்கள்

மூலமும் தெரியாது, முடிவும் தெரியாது மாறாக அவர்களும் குழம்பி தமிழர்களையும் குழப்பி அரசியல் செய்வது அவர்கள் தொழில்..

இந்த திராவிட கோஷ்டிகள் தமிழர்களின் மதம், கலாச்சாரம் இன்னபிற விஷயங்களுக்கு ஏக போக அத்தாரிட்டிகள் என்பதை ஒழிக்காமல் தமிழகம் உருப்படாது