இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ?

இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ?

சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நின்றுவிடுமா? இல்லை பேனா மூடி தொலைந்துவிட்டால் மளிகை கடை மூடபடுமா?

விஜய் சேதுபதி இல்லை என்றாலும் இன்னொருவன் இந்த விளம்பரத்தை செய்வான், அட அவனே இல்லை என்றாலும் மண்டி மக்களை தனாக சென்றடையும்

ஒருவேளை போராடுவதாக இருந்தால் மண்டி அலுவலகம் எங்கிருக்கின்றதோ அங்கு சென்று போனை உடைத்து போராடவேண்டும் அதுவுமில்லை

டிஜிட்டல் தராசு வந்து இரும்பு தராசும் படிகல்லும் காணாமல் போய் அந்த தொழிலே இன்று இல்லை, அதுபற்றி இக்கூட்டம் பேசுமா?

இவர்கள் தொடர்புடைய தொழிலே சணல் உட்பட அழிந்தது ஏராளம் அப்பொழுதெல்லாம் கனத்த அமைதி..

எவன் செத்தாலும் எந்த தொழில் அழிந்தாலும் அமைதி, ஆனால் இவர்களுக்கு ஒன்று என்றால் ஆர்ப்பாட்டம் அழிச்சாட்டியம்

கிரண்டர் வந்தபின் அம்மிகல் கொத்துவோர் போராடுவது போல, டிராக்டர் வந்தபின் மாட்டு உழவுக்காரர்கள் போராடுவது போல அர்த்தமில்லாமல் போராடி கொண்டிருக்கின்றது வணிகர் சங்கம்

இதை எல்லாம் தடுக்கவே முடியாது, அடுத்துவரும் மண்டி 2.0 இதைவிட மோசமானதாக இருக்கும் என்பதால் வியாபார புலிகள் வேறு திட்டம் தீட்டுவதுதான் நல்லது

ஊழ்வினை

குறள்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

பொருள்:

ஊழ்வினையால் தனக்கு நேரப்போவதை தடுக்க, வேறு வழிமுறைகளை ஒருவன் மேற்கொண்டாலும், ஊழ்வினையானது அந்த வழிமுறைகளையே தனக்குத் துணையாக்கிகொண்டு ஊழ்வினைப்பயனை ஊட்டவல்லது என்று கூறப்படுகிறது.

ஊழ்வினைப் பயனை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும், அதிலிருந்து தப்ப இயலாது என்பது கருத்து. ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகார வரி.

(செய்தி வாசிக்கும் அம்மணி திருவள்ளுவரை திருவள்ளூர் என்கின்றது , அதற்கும் ஊழ்வினை சரியில்லை போல‌..)

https://m.facebook.com/story.php?story_fbid=2824821920883700&id=173167532715832

அடுத்த உலக கோப்பையினையாவது வென்றுவரட்டும்

ஆட வேண்டிய ஆட்டங்களில் எல்லாம் உடனே பெவிலியன் வந்துவிடுபவரும், அவ்வளவு முக்கியமில்லா ஆட்டங்களில் ஆடி தீர்த்து சாதனைகளை செய்பவருமான விராட் கோலி எனும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு இன்று பிறந்த நாள்

நிச்சயம் நல்ல ஆட்டக்காரர், சந்தேகமில்லை. ஆனால் அவரின் ஆட்டம் பொறுப்பாக அமையுமா என்றால் இல்லை

நெருக்கடி நிலை என்றால் டக்கென விழுந்துவிடுவார், நெருக்கடி இல்லா ஆட்டங்களில் மட்டும் ஜொலிப்பார்

எப்படியாயினும் டெண்டுல்கரின் சாதனைகளை நெருங்குபவராக அவர்தான் நோக்கபடுகின்றார், ஒரு இந்தியனின் சாதனையினை இன்னொரு இந்தியன் உடைப்பதுதான் சரி

உலகின் பிரமாதமான கிரிக்கெட் ஆட்டக்காரர் என கருதபடும் கோலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

அடுத்த உலக கோப்பையினையாவது வென்றுவரட்டும்

கலைஞர் நிலையும் அதுதான்

ஈழப்போர் முடியும் நேரம் சில தினங்களுக்கு முன் பிரபாகரன் வாய்விட்டு சொன்னான் “எல்லோரும் என் கையில்தான் எல்லாம் இருக்கின்றது என நினைக்கினம், ஆனால் என்ட கை வெறுங்கை”

கலைஞர் நிலையும் அதுதான், ஆனால் கடைசிவரை அதை விரித்துகாட்டாமல் மிக சாமார்த்தியமாக தன் இருப்பையும் பெயரையும் தக்கவைத்துவிட்டு சென்றுவிட்டார்

ஆனால் உபிக்கள் கொடுக்கும் பிம்பத்தில் அவன் இன்று இருந்தால் அழுதே விடுவார்

கன்னியாகுமரி சிலை விவகாரம் அவர் திட்டமிட்டு இந்துத்வாவினை தடுக்க செய்த காரியம் அல்ல, பல்வேறு அவசியங்கள் அவரை இழுத்து சென்றது, அவரும் தனக்கு எது லாபமோ அதை எப்பொழுதும் சரியாக செய்பவர் அல்லவா?

அவ்வளவு தீவிரமாக இந்துத்வாவினை எதிர்த்தவர், மாபெரும் இந்தி எதிர்ப்பு போல் அந்த விவேகானந்தர் மண்டபத்துக்கு எதிராக ஏன் போராடவில்லை என கேளுங்கள்,பதிலே வராது

ஆய்வு களஞ்சியம்

குமரி மாவட்டத்தில் டாக்டர் பத்மநாபன் என்றொருவர் இருந்தார், “ஆய்வு களஞ்சியம் “எனும் பத்திரிகை எல்லாம் நடத்தினார்

அவர் டாக்டர் ஆனால் குறளும் அதுசார்ந்த ஆய்வினையும் பல்லாண்டுகாலம் செய்தார் அதை எழுதினார்.

திருவள்ளுவர் குமரியில் பிறந்தார், நாஞ்சில் நாட்டையொட்டிய வள்ளுவ நாட்டில் அவர் வசித்தார் என ஆதாரத்தோடு எழுதிகொண்டிருந்தார்

ராமசந்திரன் ஜெயா கருணாநிதி என முதல்வர்களை கண்டு வள்ளுவன் குமரியில் பிறந்து மயிலாபூரில் மரித்தார் என வாதிட்டது அவர்தான்

அவரின் வாதத்துக்கு பின்பே அச்சிலை நடவடிக்கை வேகமெடுத்தது

அவர் எதன் அடிப்படையில் வள்ளுவனை குமரிக்காரனாக்கினார் என்றால் அது திருக்குறளில் இருக்கும் குமரி வழக்கு மொழிகள்

“மடி” , “வெள்ளம்”, “இவன் இதனை முடிக்கும்” எனும் வரி போன்றவை மிகுந்த கவனதுக்குரியவை.

“மடி” என்றால் சோம்பல், “வெள்ளம்” என்றால் நீர், ”

அதாவது மற்ற இடங்களில் அவன் முடிப்பான் இவன் முடிப்பான் என்றுதான் சொல்வார்கள்

கன்னியாகுமரி தமிழிலே “யான் முடிக்கும், இவன் முடிக்கும்” என மலையாள சாயலில் சொல்வார்கள்

உணக்கன் எனும் வார்த்தை வேறு மாவட்டத்தில் கிடையாது, உணக்கின் என்றால் உலர்த்துதல் என பொருள் , “உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது” என்பான் வள்ளுவன்

” ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்” என சொல்வான் வள்ளுவன்.

ஆம் பைய என்றால் கன்னியாகுமரி பக்கமே மெதுவாக அல்லது மெல்ல என பொருள்,

மற்ற இடமெல்லாம் மெல்ல அல்லது மொள்ளமா போ என்பார்கள்

இன்னொரு கோணம் மீன்பிடிப்பது, மலேசியர்களை போலவே குமரிமக்களிடமும் மீன்பிடிக்கும் வித்தை உண்டு

அதாவது மின்னும் பொருளை நோக்கி மீன்கள் ஓடிவரும், இதனால் தூண்டில் அல்லது வலைபக்கம் மின்னும் இழைகளை விட்டு மீன்பிடிப்பார்கள்

இதை வள்ளுவன் நுணுக்கமாக ” தூண்டிற்பொன் மீன் விழுங்கிற்று” என்பான்

இதைவிட மகா முக்கிய விஷயம் உண்டு, அந்த குறள் கன்னியாகுமரிக்கு மட்டுமே பொருந்தும்

“பொருட்பெண்டீர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணைந்தழீ இயற்று”

அதாவது பணத்துக்கு உறவு கொள்ளும் விலைமகளுடனான உறவு பிணத்துடன் கலவி கொள்வதற்கு சமம் என்பது பொருள்

அன்றைய கன்னியாகுமரி பக்கம் ஒரு வழக்கு உண்டு கன்னிபெண் மரணமடைந்தால் ஏழை வாலிபனை பொருள் கொடுத்து அறைக்குள் அனுப்பி அவள் உடலில் கலக்க வைத்து அதன் பின்பே தகணம் செய்வார்கள், பிணத்தின் உடலில் இருக்கும் சந்தணம் அவன் மேலும் ஒட்டியிருப்பது உறுதி செய்யபட்ட பின்பே காரியம் நடக்கும்

பிணத்துடன் பொருளாக்காய் செய்யபடும் உறவு அதுதான், அதைத்தான் குறளாக வடித்தான் வள்ளுவன்

வள்ளுவன் குமரிகாரனாய் இல்லாமல் இருந்தால் குமரிக்கே பொருந்தும் இந்த வரிகள் எப்படி குறளில் சாத்தியம்? அது வேறு செய்யுள் இலக்கணம் பாடலில் இல்லவே இல்லையே என அவர் கேட்டபொழுது கலைஞரிடமே பதில் இல்லை..

அந்த வார்த்தைகள் மற்ற மாவட்ட வழக்கு மயிலாப்பூர் வழக்கில் எல்லாம் இல்லவே இல்லை, குமரிக்கு மட்டும் குறளுக்கு மட்டும் வரும் வார்த்தைகள், பொருத்தங்கள்

இப்படி ஏகபட்ட ஆதாரங்களை அந்த பத்மநாபன் சமர்பித்துத்தான் அந்த சிலையினை வடிக்க கலைஞர் ஓடிவர காரணமானார்,

வள்ளுவன் குமரியில் பிறந்தான் அவனுக்கு அங்கோர் சிலை வேண்டும் என ஆசைபட்ட முதல் நபர் அந்த டாக்டர் பத்மநாபன் என்பவர்தான்

அந்த ஆதாரங்களை கலைஞர் ஏற்றுகொண்ட பின்புதான் சிலை 133 அடி ஆனது

அந்த வள்ளுவன் வாழ்ந்த திருநாயனார் குறிச்சி கன்னியாகுமரியில் இருந்து 15 கிமீ தொலைவில் இருப்பதாகவும் வள்ளுவன் மலையில் அவர் ஓய்வெடுத்ததாகவும் குறிப்புகள் உண்டு

அந்த திருநாயனார் குறிச்சி வள்ளுவரே வள்ளுவ நாயனராகி பின் அய்யன் வள்ளுவராகவும் ஆனார்

நாம் இந்த கதையினை ஏன் சொல்கின்றோம் என்றால் அந்த பத்மநாபன் தன் ஆய்வு களஞ்சியம் பத்திரிகையில் தன் முழு ஆய்வினை எழுதினார், அப்பொழுது கன்னியாகுமரியில் சிலை வந்த வரலாற்றையும் எழுதியிருந்தார்

அதில்தான் அவர் ராணடே 1975ல் வள்ளுவன் சிலைக்காக கலைஞருக்கு கடிதம் எழுதிய சம்பவத்தையும் சொல்லியிருந்தார்

நாம் வேலைவெட்டி இல்லா காலங்களில் (இப்பொழுதும் அப்படித்தான் என்பது வேறுவிஷயம்) அதை படித்திருந்தோம், மிக கவனமாக படித்ததால் நம் மனதில் பதிந்தது , அதை உங்களிடம் சொல்லிவிட்டோம், அவ்வளவுதான் விஷயம்

நாம் இதுபோல நிறைய கேள்விபட்டோம், வாசித்தோம் அதனால் சொன்னோம்

ஆனால் ஒருமண்ணும் தெரியாமல் முரசொலயிலும் கலைஞர் டிவியிலும் திமுக பொய் மேடையிலும் வரலாறு பயின்ற பதர்கள் நம்மிடம் என்னவோ பேசிகொண்டிருக்கின்றன‌

இதெல்லாம் திமுக காரனும் சொல்லமாட்டான், ஆர்.எஸ்.எஸ் காரனும் சொல்லமாட்டான். காரணம் இரண்டுமே ஒருமாதிரி கோஷ்டி

அரசியலுக்காக எது படித்தாலும் உருப்படாது மாறாக அரசியலை தாண்டி வாசியுங்கள் உண்மை விளங்கும்

ராணடேவுக்கு வள்ளுவர் மேல் பெரும் அபிமானமா?

வள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டால் தன் கனவு முடிந்தது என நினைத்துகொண்டிருந்தார் கலைஞர், குமரியில் வள்ளுவனுக்கு சிலை வைக்கும் ஆசை எல்லாம் அவருக்கு இல்லை

விவேகானந்தர் நினைவுமண்டபம் பலத்த சர்ச்சைகுள்ளாகி பின் சுபமாக முடிந்தபொழுது திமுக ஆட்சியில் இல்லை இருந்தால் நடந்திருப்பதே வேறு

ஆட்சிக்கு வந்தபின்பும் கருணாநிதி மனம் குமரி பக்கம் செல்லவில்லை, அவர் அதை தொல்லையாக கருதினார், குமரியினை அதிகம் விரும்பியதில்லை அவர்

அங்கு காமராஜரின் வெற்றியும் காங்கிரஸின் எழுச்சியும் அவருக்கு உவப்பானதல்ல, குமரி என் தொல்லை நெல்லை என் எல்லை” என சொல்லிகொண்டிருந்தவர் அவர்.

கலைஞருக்கு முதன் முதலில் கன்னியாகுமரியில் திருவள்ளுவன் சிலை அமைக்க சொல்லி கடிதம் எழுதியது ராணடே,

ஆம் அந்த விவேகானந்தர் மண்டபத்தை ஒட்டிய பாறையில் எட்டு அடிக்கு ஒரு சிலை எழுப்புங்கள் என முதலில் கடிதம் எழுதியது அவர்தான், 1975ல் எழுதினார்

அதை தொடர்ந்துதான் 1976ல் கருணாநிதி குமரியில் சிலை அமைக்கபடும் என அறிவித்தார், அவர் முதலில் அறிவித்த சிலையின் உயரம் 30 அடி

1977ல் ஆட்சியினை கைபற்றிய ராமசந்திரன் நன்றி மறக்காமல் 1979ல் ராணடே முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்

பினி ராமசந்திரனும் விட்டுவிட்டார், காரணம் வள்ளுவர் கோட்டம் அப்பொழுதுதான் திறக்கபட்டிருந்தது

1989ல் வந்த கருணாநிதி மறுபடி போராடி 2000ம் ஆண்டு சிலை திறந்தார், ஆனால் சிலை அமைக்க காரணமான ஆர்.எஸ்.எஸ் பற்றி ஒருவார்த்தையும் சொல்லாமல், ராணடே கடிதம் எழுதியதை கூட மிக நுட்பமாக மறைத்து தானே கனவு கண்டு தானே சிலை அமைத்ததாக அய்யன் திருவள்ளுவனார் என சொல்லிகொண்டார்

ராணடேவுக்கு வள்ளுவர் மேல் பெரும் அபிமானமா என்றால் இன்னொரு கிறிஸ்தவ சிலை அங்கு வந்துவிட கூடாது என்ற கவலை இருந்தது,

விவேகானந்தர் பாறையினையே சேவியர் பாறை என சொல்லி சிலுவை நட்டு அழிச்சாட்டியம் செய்த கோஷ்டிகள் உள்ள இடம் அது,

அவர்கள் இன்னொரு மொட்டை பாறையில் ஆலயம் கட்ட அல்லது வம்புக்கு ஏதும் செய்ய இடம் கொடுத்தல் கூடாது அதே நேரம் இன்னொரு இந்து அவதார சிலையினை வைக்கவும் ராணடே தயாராக இல்லை.

அதில் இன்னொரு இந்து தர்ம சிலை அமைந்தால் நிலமை சிக்கலாகும் அதே நேரம் கிறிஸ்தவ சிலை வந்தால் சர்ச்சையாகும்

மிக தேர்ந்த ராஜதந்திரியான ராணடே வள்ளுவனை இழுத்துவிட்டு காரியத்தை கன கச்சிதமாக முடித்தார்

இதுதான் நடந்த வரலாறு, ஆனால் திமுக உபிக்கள் அவர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்கு வள்ளுவனை கொண்டுவந்தது கலைஞர் என மூக்கு சீந்திகொண்டே இருக்கும்

திருவள்ளுவன் சிலை கன்னியாகுமரியில் அமைய காரணமே அந்த ராணடே எனும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதுதான் வரலாற்று உண்மை

சகலமும் அறிந்த ஞானபண்டிதன் நீ..

ஓளவையே நாம் ஏன் உம்மிடம் வந்து சுட்ட பழம் கேட்டு விளையாடினோம் தெரியுமா?

புரிகின்றது திருகுமரா

நான் மட்டும் உன் வரலாற்றில் இல்லையென்றால் இன்று உன்னை கருப்பு சேலை கட்டி கண்றாவி கோலத்தில் நிறுத்தியிருப்பார்கள், நாமே உன்னை காத்தோம்..

ஞானசம்பந்தனை என் தாய் காத்தாள், அபிராமி பட்டரையும் அப்படியே காத்தாள். மாணிக்கவாசகனை எம் அப்பன் காத்தான்

கம்பனை சரஸ்வதி காத்துகொண்டாள், இளங்கோவடிகளை மணிபல்லவ பூதமும் காவுந்தியடிகளும் ஆரியங்காவு இசக்கியும் காத்தார்கள் ஆனால் பாவம் வள்ளுவன் வசமாக சிக்கி கொண்டான்,

ஆமாம் முருகா, குன்றுதோறும் அமர்ந்து அது கல்குவாரி ஆகாமல் பார்த்துகொண்டவன் அல்லவா நீ? இல்லையென்றால் தமிழ்நாட்டில் ஒரு குன்று இருந்திருக்கும்? சகலமும் அறிந்த ஞானபண்டிதன் நீ..”

பெரும் நாடகம் நடத்தியிருக்கின்றது

சென்னையில் மாஞ்சா நூலால் ஒரு குழந்தை செத்திருக்கின்றது , ஒரு பண்ணைக்காரன் ஒரு குழந்தையினை மிதித்து கொன்றிருக்கின்றான் குழந்தையின் படம் கூட வெளிவரவில்லை..

ஆனால் ஒரு பரப்புமில்லை, ஒரு தலைவனும் கண்டுகொள்ளவுமில்லை, ஒரு மீடியாவும் கண்டுகொள்ளவில்லை..

அந்த அடிமை குடும்பம் கொத்தடிமையாய் இருந்து ஒரு குழந்தையினையும் இழந்திருக்கின்றது, அவர்களுக்கு சல்லிகாசு கொடுக்க யாருமில்லை

ஆக செத்தாலும் தீபாவளி நேரம் சிறுபான்மை குழந்தையாக சாக வேண்டும் என்பது தமிழக விதி

அந்த சுர்ஜித் விஷயத்தில் ஏதோ ஒரு சக்தி பெரும் நாடகம் நடத்தியிருக்கின்றது என்பது உண்மை

முதலுக்கே மோசமாயிருமுங்க…

பாருங்க அண்ணாதுரை.. திருகுறள் இந்து நூல் தான் , அதை எவ்வளவு கஷ்டபட்டு நாமெல்லாம் மறைச்சி வச்சோம்

இவர் பெத்த சிகாமணிய திமுக தலைவராக்கி, அவர் என்னமோ சொல்ல பதிலுக்கு பூரா பயலும் குறளை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி போட்டு நம்ம மூஞ்சில கரிய பூசிட்டு இருக்கான்.. அதுவும் என்னையெல்லாம் இழுத்து போட்டு அடிக்குறானுவ..

நம்ம திராவிட கொள்கை நிலைக்கணுமுண்ணா இவரோட புத்திர சிகாமணிய வாய மூடிட்டு இருக்க சொல்லுங்க, இல்ல முதலுக்கே மோசமாயிருமுங்க…”

ஓர் நாள் அந்த அதிசயம் நடந்தே தீரும்

ஒரு காலத்தில் எல்லா இனங்களும் இந்தியாவினை தேடி வந்திருக்கின்றன, கிரேக்க அலெக்ஸாண்டர் முதல் கடைசியாக வந்த பிரிட்டன் வரை ஏராளமான பேர்

ஏன் வந்தார்கள்?

இந்திய செல்வத்தை தேடி வந்தார்கள், கொள்ளையோ வியாபாரமோ இல்லை ஆட்சியோ ஏன் வந்தார்கள் என்றால் இந்தியா செல்வமான நாடு என தேடி தேடி வந்தார்கள்

ஆப்கன் கொள்ளையர் முதல் பிரிட்டன் கொண்டுசென்ற செல்வம் வரை ஏராளம்

ஆக இந்தியாவில் அன்று ஏகபட்ட செல்வங்கள் இருந்திருக்கின்றன இந்நாடு பணக்கார நாடாய் இருந்தது, ஆனால் மற்ற நாடுகளில் ஒன்றுமே இல்லை

அந்த செல்வம் கொழித்த காலத்தைத்தான், உலகமே தேடிவந்து இந்தியாவினை வணங்கி நின்ற காலத்தைத்தான் பிராமண அட்டகாச காலம் , இந்துமத அட்டகாச காலம் என சொல்லி திரிகின்றனர் பலர்

பின் என்னாயிற்று?

வெள்ளையன் மிக சரியாக இங்கு பிராமண எதிர்ப்பினை விதைத்துவிட்டு சென்றான், அந்த எதிர்ப்பில் இத்தேசம் குழம்பி சரிய ஆரம்பித்தது

தந்திரமான வெள்ளையன் இம்மாபெரும் நாட்டை சரிய வைத்து அப்படியே தவித்த பிராமண இனத்தை தன்னோடு சேர்த்தும் கொண்டான்

அவன் கொண்டு சென்றது இந்திய செல்வங்களை மட்டுமல்ல, இந்திய செல்வத்துக்கு காரணமான பிராமண மூளையினையுமே

ஆனால் பிராமண இனத்தை அதன் மதத்தோடே ஏற்றுகொண்டான் வெள்ளையன், ஆம் அம்மதமே அவர்களுக்கு ஈடில்லா பயிற்சி அளிக்கின்றது என்பது அவன் நம்பிக்கை

சீனிவாச ராமானுஜத்தை, சர்.சிவி ராமனை கடைசிவரை மதம் மாற அவன் சொன்னதே இல்லை, யாரை மதம் மாற்ற வேண்டும் அல்லது முடியும் என்பது அவனுக்கு சரியாக தெரிந்திருக்கின்றது

இன்றும் இங்கு எஞ்சியிருக்கும் பிராமணரில் சிறந்தோரை கொத்திகொண்டு போகவே அத்தேசங்கள் தயாராய் இருக்கின்றன‌

ஆச்சரியமாக அவர்கள் அடைக்கலமான ஐரோப்பாவும் அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன, அத்தேசங்கள் அன்று இந்தியா வாழ்ந்தது போல் பெரும் செல்வத்தில் வாழ்கின்றன‌

ஆனால் இத்தேசம் பிராமண ஆதிக்கம் என சொல்லி பலவற்றை இழந்து, இன்னும் இருப்பதையும் இழக்க தயாராகிவருகின்றது
இதிலும் வெள்ளையனுக்கு பலத்த லாபமே. அவன் கணக்கு துல்லியமானது.

எம்மை பொறுத்தவரை ஒன்றை செய்யலாம், இஸ்ரேலியருக்கு தனிநாடு கொடுத்தது போல உலகில் பிராமணனுக்கும் தனிஒரு நாடு கொடுத்துபார்க்கலாம்

அது நிச்சயம் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொடுக்கும் நாடாக இருக்கும்

இந்த கணிப்பினை நாம் மட்டும்
சொல்லவில்லை மேல்நாட்டு அறிக்கைகள் சொல்கின்றன.

ஓர் நாள் அந்த அதிசயம் நடந்தே தீரும், காலம் அதை செய்யும்