ஆய்வு களஞ்சியம்

குமரி மாவட்டத்தில் டாக்டர் பத்மநாபன் என்றொருவர் இருந்தார், “ஆய்வு களஞ்சியம் “எனும் பத்திரிகை எல்லாம் நடத்தினார்

அவர் டாக்டர் ஆனால் குறளும் அதுசார்ந்த ஆய்வினையும் பல்லாண்டுகாலம் செய்தார் அதை எழுதினார்.

திருவள்ளுவர் குமரியில் பிறந்தார், நாஞ்சில் நாட்டையொட்டிய வள்ளுவ நாட்டில் அவர் வசித்தார் என ஆதாரத்தோடு எழுதிகொண்டிருந்தார்

ராமசந்திரன் ஜெயா கருணாநிதி என முதல்வர்களை கண்டு வள்ளுவன் குமரியில் பிறந்து மயிலாபூரில் மரித்தார் என வாதிட்டது அவர்தான்

அவரின் வாதத்துக்கு பின்பே அச்சிலை நடவடிக்கை வேகமெடுத்தது

அவர் எதன் அடிப்படையில் வள்ளுவனை குமரிக்காரனாக்கினார் என்றால் அது திருக்குறளில் இருக்கும் குமரி வழக்கு மொழிகள்

“மடி” , “வெள்ளம்”, “இவன் இதனை முடிக்கும்” எனும் வரி போன்றவை மிகுந்த கவனதுக்குரியவை.

“மடி” என்றால் சோம்பல், “வெள்ளம்” என்றால் நீர், ”

அதாவது மற்ற இடங்களில் அவன் முடிப்பான் இவன் முடிப்பான் என்றுதான் சொல்வார்கள்

கன்னியாகுமரி தமிழிலே “யான் முடிக்கும், இவன் முடிக்கும்” என மலையாள சாயலில் சொல்வார்கள்

உணக்கன் எனும் வார்த்தை வேறு மாவட்டத்தில் கிடையாது, உணக்கின் என்றால் உலர்த்துதல் என பொருள் , “உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது” என்பான் வள்ளுவன்

” ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்” என சொல்வான் வள்ளுவன்.

ஆம் பைய என்றால் கன்னியாகுமரி பக்கமே மெதுவாக அல்லது மெல்ல என பொருள்,

மற்ற இடமெல்லாம் மெல்ல அல்லது மொள்ளமா போ என்பார்கள்

இன்னொரு கோணம் மீன்பிடிப்பது, மலேசியர்களை போலவே குமரிமக்களிடமும் மீன்பிடிக்கும் வித்தை உண்டு

அதாவது மின்னும் பொருளை நோக்கி மீன்கள் ஓடிவரும், இதனால் தூண்டில் அல்லது வலைபக்கம் மின்னும் இழைகளை விட்டு மீன்பிடிப்பார்கள்

இதை வள்ளுவன் நுணுக்கமாக ” தூண்டிற்பொன் மீன் விழுங்கிற்று” என்பான்

இதைவிட மகா முக்கிய விஷயம் உண்டு, அந்த குறள் கன்னியாகுமரிக்கு மட்டுமே பொருந்தும்

“பொருட்பெண்டீர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணைந்தழீ இயற்று”

அதாவது பணத்துக்கு உறவு கொள்ளும் விலைமகளுடனான உறவு பிணத்துடன் கலவி கொள்வதற்கு சமம் என்பது பொருள்

அன்றைய கன்னியாகுமரி பக்கம் ஒரு வழக்கு உண்டு கன்னிபெண் மரணமடைந்தால் ஏழை வாலிபனை பொருள் கொடுத்து அறைக்குள் அனுப்பி அவள் உடலில் கலக்க வைத்து அதன் பின்பே தகணம் செய்வார்கள், பிணத்தின் உடலில் இருக்கும் சந்தணம் அவன் மேலும் ஒட்டியிருப்பது உறுதி செய்யபட்ட பின்பே காரியம் நடக்கும்

பிணத்துடன் பொருளாக்காய் செய்யபடும் உறவு அதுதான், அதைத்தான் குறளாக வடித்தான் வள்ளுவன்

வள்ளுவன் குமரிகாரனாய் இல்லாமல் இருந்தால் குமரிக்கே பொருந்தும் இந்த வரிகள் எப்படி குறளில் சாத்தியம்? அது வேறு செய்யுள் இலக்கணம் பாடலில் இல்லவே இல்லையே என அவர் கேட்டபொழுது கலைஞரிடமே பதில் இல்லை..

அந்த வார்த்தைகள் மற்ற மாவட்ட வழக்கு மயிலாப்பூர் வழக்கில் எல்லாம் இல்லவே இல்லை, குமரிக்கு மட்டும் குறளுக்கு மட்டும் வரும் வார்த்தைகள், பொருத்தங்கள்

இப்படி ஏகபட்ட ஆதாரங்களை அந்த பத்மநாபன் சமர்பித்துத்தான் அந்த சிலையினை வடிக்க கலைஞர் ஓடிவர காரணமானார்,

வள்ளுவன் குமரியில் பிறந்தான் அவனுக்கு அங்கோர் சிலை வேண்டும் என ஆசைபட்ட முதல் நபர் அந்த டாக்டர் பத்மநாபன் என்பவர்தான்

அந்த ஆதாரங்களை கலைஞர் ஏற்றுகொண்ட பின்புதான் சிலை 133 அடி ஆனது

அந்த வள்ளுவன் வாழ்ந்த திருநாயனார் குறிச்சி கன்னியாகுமரியில் இருந்து 15 கிமீ தொலைவில் இருப்பதாகவும் வள்ளுவன் மலையில் அவர் ஓய்வெடுத்ததாகவும் குறிப்புகள் உண்டு

அந்த திருநாயனார் குறிச்சி வள்ளுவரே வள்ளுவ நாயனராகி பின் அய்யன் வள்ளுவராகவும் ஆனார்

நாம் இந்த கதையினை ஏன் சொல்கின்றோம் என்றால் அந்த பத்மநாபன் தன் ஆய்வு களஞ்சியம் பத்திரிகையில் தன் முழு ஆய்வினை எழுதினார், அப்பொழுது கன்னியாகுமரியில் சிலை வந்த வரலாற்றையும் எழுதியிருந்தார்

அதில்தான் அவர் ராணடே 1975ல் வள்ளுவன் சிலைக்காக கலைஞருக்கு கடிதம் எழுதிய சம்பவத்தையும் சொல்லியிருந்தார்

நாம் வேலைவெட்டி இல்லா காலங்களில் (இப்பொழுதும் அப்படித்தான் என்பது வேறுவிஷயம்) அதை படித்திருந்தோம், மிக கவனமாக படித்ததால் நம் மனதில் பதிந்தது , அதை உங்களிடம் சொல்லிவிட்டோம், அவ்வளவுதான் விஷயம்

நாம் இதுபோல நிறைய கேள்விபட்டோம், வாசித்தோம் அதனால் சொன்னோம்

ஆனால் ஒருமண்ணும் தெரியாமல் முரசொலயிலும் கலைஞர் டிவியிலும் திமுக பொய் மேடையிலும் வரலாறு பயின்ற பதர்கள் நம்மிடம் என்னவோ பேசிகொண்டிருக்கின்றன‌

இதெல்லாம் திமுக காரனும் சொல்லமாட்டான், ஆர்.எஸ்.எஸ் காரனும் சொல்லமாட்டான். காரணம் இரண்டுமே ஒருமாதிரி கோஷ்டி

அரசியலுக்காக எது படித்தாலும் உருப்படாது மாறாக அரசியலை தாண்டி வாசியுங்கள் உண்மை விளங்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s