குங்குமமும் காவியும் கொண்டாடபட வேண்டிய வர்ணங்கள்

காவி நிறம் என்பது ஏதோ தொடகூடா நிறம் என்பது போலவும் அருவருப்பானது என்பது எனவும் பலர் பேசிகொண்டிருப்பது அவர்களை நினைத்தால் பாவமாக இருகின்றது

இந்த இமயமலை என்பதுதான் இந்துமதத்தின் பிறப்பிடம், கயிலாய மலை அங்குதான் உள்ளது, ரிஷிகளும் ஞானிகளும் அங்கிருந்துதான் கிளம்பி வந்து அந்த தத்துவத்தை சொன்னார்கள்

அகத்தியரும் முருகனும் அப்படித்தான் தென்னகம் வந்தார்கள்

சரி அவர்கள் தென்னகம் வந்தால் இமயமலையின் மறுபக்கம்?

ஆம் அங்கேதான் இருக்கின்றது சுவாரஸ்யம், திபெத் மங்கோலியா சைனா என எல்லா இடமும் காவி நிறமும் குங்கும நிறமுமே கலந்தோடிய இந்து தேசமாக இருந்தது, புத்தர் காலத்தில் மாறினார்கள்

ஆனால் கலாச்சாரபடி மாறவில்லை இன்றும் திபெத் புத்தமத குருக்களின் உடை காவியே

இந்நாட்டு இந்துக்கள் நெற்றியில் குங்குமம் இல்லாமல் இருக்காது அது மங்களத்தின் அடையாளம், மஞ்சளும் குங்குமமும் இந்த மண்ணின் மங்கலங்கள்.

எதெல்லாம் சுபமோ எதெல்லாம் ஆசீர்வாதமோ அங்கெல்லாம் குங்குமம் இருக்கும்

அதை சீனர்கள் இன்னொரு வகையில் கையாள்வார்கள் அது சிகப்பு நிறமான பொருட்கள் தங்கள் வீடுகளில் அதிகம் இருக்குமாறு பார்ப்பார்கள், காவி நிறம் அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம்

சீன புத்தாண்டின் பொழுது சீனாவெங்கும் சீனர் இருக்குமிடமெங்கும் ரத்த குங்கும நிறத்திலே ஜொலிக்கும் , அலங்கார பந்து முதல் அன்பளிப்பு வரை அந்த சிகப்பு நிறமே

அன்று அவர்கள் கொடுத்து மகிழும் ஆரஞ்சு பழமும் காவி நிறமே

ஆம் குங்குமமும் காவியும் இயமலையில் இருந்து கிளம்பிய இந்துமதத்தின் அடையாளங்கள், இந்தியர் இந்துவாக அதை தொடர்கின்றனர்

விவேகானந்தர் அந்த காவி உடையில்தான் அமெரிக்காவில் பெரும் அதிசயமாக மிளிர்ந்துவிட்டு வந்தார், அந்த உடை அன்று உலகத்தாரால் வணங்கபட்டது

குங்குமம் இல்லா ஆலயம் உண்டா? நல்ல இந்துக்கள் நெற்றிதான் உண்டா?

இல்லை இந்துக்கள் வீடுகள்தான் உண்டா?

ஆசியின் ஐஸ்வர்யத்தின் அடையாளமாக அது கருதபடுகின்றது

வழிபாட்டில் பிரிக்க முடியாதது அது

திபெத்தும் சீனமும் மங்கோலியாவும் புத்தனின் எழுச்சிக்கு பின்னால் தங்கள் கலாச்சாரத்தில் குங்குமமும் காவியும் பிரியாமல் பார்த்து கொள்கின்றனர்

போதிதர்மனுக்கே காவி கட்டி அழகுபார்க்கும் நாடு சைனா, அவர்களின் கொடியே குங்கும நிறம்

தலாய்லாமா இன்னும் அந்த காவி செவ்வுடையிலே வருவார், பர்மா இலங்கை என அவர்களின் புத்த துறவி நிறமும் காவியே

காவி இங்குள்ள ஞான‌ அடையாளம் குங்குமம் செழிப்பின் அடையாளம் வெண்மை தூய்மையின் அடையாளம்

தமிழரின் அடையாளமாக அதுதான் இருந்தது, ஒரு பெண் நெற்றியில் குங்குமமிட ஏன் சொன்னார்கள்? ஒரு பெண் மகிழ்வாய் இருந்தால் வீடே மகிழ்வாய் இருக்கின்றது என பொருள்

காஞ்சி காமாட்சியும், மதுரை மீனாட்சியும் மங்கல குங்குமத்தின் அடையாளமாய் போற்றபட்ட பூமி இது

துறவியும் அதை பூசினார்கள், இல்லறத்தாரும் பூசினார்கள்.

இன்று அதை வள்ளுவனுக்கு வைத்தால் பொங்குகின்றார்கள் என்பது காலகொடுமை

குங்குமமும் வெண்விபூதியும் தமிழர் கலாச்சார அடையாளமாக இருந்த பூமியில் இந்த கருப்பு சட்டைகள் வந்ததில் இருந்து வந்தது குழப்பம்

பார்க்கவே அருவருப்பான வண்ணம் அது, எல்லா இனமும் கருப்பு என்றாலே ஒதுக்கின, இருளின் வடிவமாகவும், பேயின் நிறமாகவும் , அமங்கல நிறமாகவும் அது கருதபட்டது

எமனும் சனியும் அந்த வடிவமாக போற்றபட்டார்கள். அதாவது ஆபத்து என குறிக்க அது பயன்பட்டது

அந்த கருப்பு நிறத்தினை தமிழரின் அடையாளம் என்பதெல்லாம் பரிதாப உச்சம், பிராமணன் வெள்ளை வேட்டி அணிகின்றான் அவனுக்கு எதிர்ப்பு என கிளம்பிய வெறுப்பு அன்றி வேறல்ல‌

சுத்த பைத்தியகாரதனம் அது

வெண்மை , காவி, சிகப்பு, பச்சை என்பவை அறியபட்ட மங்கள நிறங்களாக இங்கு இருந்தன‌

அதில் இஸ்லாம் பச்சை நிறத்தை எடுத்தது, யூத தொடர்ச்சி அது

இந்திய சீன தர்மங்கள் சிகப்பையும் காவி நிறத்தையும் எடுத்தன, அதே நேரம் தூய்மையின் அடையாளமாக வெண்மை இருந்தது

காவி ஞானத்தின் அடையாளமாகவும், குங்குமம் மங்களத்தின் அடையாளமாகவும் கொண்டாடபட்டது

அந்த ஞான அடையாளத்தைத்தான் திருவள்ளுவனுக்கு சூட்டினோம், அது மகா சரியானது , பொருத்தமானது, அவசியமாக செய்யவேண்டியதும் கூட.

கருப்பு நிறத்தை தூர எறிந்துவிட்டு காவியும் குங்குமமான நம் அடையாளங்களை ஏற்பதே நாம் அறிவுடை சமூகம், கலாச்சாரத்தை காக்கும் சமூகம் என்பதற்கு அடையாளம்

இவ்வளவு வளர்ந்துவிட்ட சீனாவிலும், இன்னும் சிங்கப்பூர் ஹாங்காங்கில் இருந்து உலகை ஆட்டும் சீனர்களிடம் இருந்து சிகப்பை பிரிக்க முடியாது,

சீன அரசிடம் நீதான் கம்யூனிஸ்ட் ஆயிற்றே ஏன் சிகப்பு நிற சென்டிமென்ட் என்றால் பிய்த்துவிடுவார்கள்

சீனர்களிடமிருந்து தமிழர் படிக்க வேண்டியது நிறைய உண்டு, அதில் முக்கியமானது குங்கும நிறம் மற்றும் காவிக்கான முக்கியத்துவம்

ஒரு காலத்தில் நம்மிடம் இருந்து அவர்கள் நிறைய கற்றார்கள், இனி அவர்களிடமிருந்து நாம் திரும்ப கற்க வேண்டிய நேரமிது

குங்குமமும் காவியும் கொண்டாடபட வேண்டிய வர்ணங்கள், நம் கலாச்சார அடையாளங்கள். நம் ஞானமரபின் சின்னங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s