அவனுகளும் அவனுக தத்துவமும்..

வள்ளுவன் சில சீர்திருத்த கருத்தை சொன்னானாம் அதனால் ஆத்திகன் இல்லையாம்

இந்த ராமானுஜர் சொல்லா சீர் திருத்தமா? அய்யா வைகுண்டர் சொல்லா சீர்திருத்தமா?

அதற்காக அவர்கள் இந்து இல்லை என்றாகிவிடுமா?

முத்துராமலிங்க தேவர் மதுரை அய்யருடன் சேர்ந்து ஆலயத்தில் தாழ்த்தபட்ட மக்களை அனுமதிக்க போராடி வென்றார், அதற்காக தேவரும் அய்யரும் இந்துமத எதிர்ப்பாளர் ஆகிவிடுவார்களா?

அவனுகளும் அவனுக தத்துவமும்..

ஆட்டு கடா பகை, கிடாரி உறவு

படத்தில் இருப்பது கனிமொழிக்கு அடுத்து இருப்பது மாபா பாண்டியராஜனின் மனைவிஅதாவது மாபா பாண்டியராஜனின் மனைவியும் திமுகவினரும் சேர்ந்து பல தொழில்கள் செய்வர் அதில் ஒன்று அரசியல்,ஜெகத் கஸ்பர் என்பவர் பாதிரி உடையில் அலையும் இன்னொரு தொழிலதிபர்ஆக முக ஸ்டாலினும் பாண்டியராஜனும் முட்டுவார்கள், இன்னொரு பக்கம் கனிமொழியும் லதா பாண்டியராஜனும் கொஞ்சுவார்கள்ஆட்டு கடா பகை, கிடாரி உறவு என்பது இதுதான் போல..

அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்

வள்ளுவர் சிலைக்கு சாணி அடித்தவனை விட்டுவிட்டு அதை சுத்தம் செய்து மாலையும் ருத்ராட்சமும் அணிவித்ததை கண்டித்து ஆர்பாட்டம் செய்ய போகின்றாராம் திருமா அதாவது சாணி அடித்தது சிக்கல் இல்லையாம் ஆனால் ருத்ராட்சம் அணிவித்தது தவறாம் சரி அம்பேத்கருக்கு ஏன் நீல நிற கோட்? அவர்தான் புத்தமதம் சென்றுவிட்டாரே? புத்தமதத்தில் காவியும் வெள்ளுடையும் அணிவார்கள் மொட்டை அடிப்பார்கள், அந்த கோலத்தில் அம்பேத்கரை நிறுத்த திருமா தயாரா? அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்

அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது

சரி வள்ளுவரை அப்படியே விடாயிற்று இனி அவர் 1331ம் குறள் சொன்னாலும் கண்டுகொள்வார் யாருமில்லை

இப்பொழுது அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது, இருவரும் முதல் பந்தை வீசிவிட்டு ஆழம் பார்க்கின்றார்கள்

இது கட்சி மோதலாக வெடிக்குமா இல்லை ஜாதி மோதலாக வெடிக்குமா என்பது தெரியவில்லை

இருபக்கமும் வரிந்து கட்டுவதால் நாமும் இம்சை அரசன் வடிவேலு போல “ம்ம்ம் ஆரம்பியுங்கள்” என சொல்லிவிட்டு அமர்ந்து விட்டோம், ஆட்டம் களை கட்டுவது போல் தெரிகின்றது

இப்பக்கம் மாவீரர் ஜெயக்குமார், அதிரடி வீரர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டென அடிக்கும் செல்லூர் ராஜூ என்ற பலம் வாய்ந்த அணி உள்ளது

அப்பக்கம் ஸ்டாலினின் வலது இடது அல்லக்கை கரமான துரைமுருகன் மெடிக்கல் விடுப்பில் சென்றிருப்பது பலவீனம் இருந்தாலும் தென்னரசு, ஆர்.எஸ் பாரதி போன்ற திராவிட வீரர்கள் களத்தில் உண்டு

இவர்கள் களத்திலும் இவர்களுக்கான கோச் ஸ்டாலின் உதயநிதி மற்றும் எடப்பாடி எல்லாம் மைதானத்தின் வெளியே அமர்ந்து தாக்குதல் உத்தியினை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

எப்படியும் நடுவர் நம்பக்கம் என்பதால் எடப்பாடி தரப்பு கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கின்றது

அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்

முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் : ஸ்டாலின்

பின் எதற்கு அன்றைக்கு பட்டாவினை மட்டும் அவ்வளவு அவசரமாக வெளியிட்டார்?

மூல பத்திரம் கேட்டால் அதைமட்டும் ஆணையத்திடம் மட்டும்தான் கொடுப்பேன் என்பதெல்லாம் என்ன வகை?

பட்டா வெளியிட்டது போல் மூலபத்திரத்தையும் வெளியிட்டால் என்ன?

நாம் இதை அன்றே சொன்னோம் , பட்டாவினை காட்டி சிக்கலில் மாட்டுகின்றார் அன்னார் என்றோம், இதோ இன்று நடந்திருக்கின்றது.

ஸ்டாலினின் இயல்பான பதற்ற குணத்தை மிக அழகாக தூண்டிவிட்டு ஆடுகின்றார் ராம்தாஸ்., டல்பதி வசமாக அவரிடம் சிக்கிகொண்டார்.

“என் அப்பன் கட்டடம் பஞசமி நிலத்தில் இல்லை” எனும் புது மொழி இதுதான்

இதுதான் நீதியா?

அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது சரி, வள்ளுவன் சிலைக்கு விபூதி பூசியெதெல்லாம் மாபெரும் குற்றம், எவ்வளவு பெரும் குற்றம். ஆனால் ராஜிவ் கொலையாளி சைமனையும், இந்து மதங்களை மிரட்டும் பலரையும் வெளியில் விட்டு வைத்திருப்பது என்ன வகை? இந்து மதத்தை ஒழிப்போம் என சொல்லி திரிபவன் மாநாடு நடத்துபவன் ஜெபிப்பவனெல்லாம் வெளியேதான் இருக்க வேண்டுமா? இதுதான் நீதியா?

திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ்

கவனியுங்கள், அவ்வளவு ஆங்கிலம் கலந்த தமிழ், திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ் இது அல்ல, பார்ப்போர் நகைப்பர்.

திமுகவின் முந்தைய இரு தலைவர்களும் தமிழில் மிக சரியாக இருந்தார்கள், ஒவ்வொரு வார்த்தையிலும். முழு தமிழிலும் தவிர்க்கமுடியா இடத்தில் ஆங்கிலத்தில் சொல்லி தமிழிலும் சொல்லும் நுட்பம் அவர்களிடம் இருந்தது

அவ்வளவு கவனமாக இருந்தது அந்த இரு தலமையும், ஏனென்றால் தமிழ் தமிழ் என சொல்லி வளர்ந்த இயக்கம் அது..

பொதுவாக திமுக தலமைகளின் ஸ்பெஷாலிட்டியே சுவாரஸ்ய பேச்சும் அழகான தமிழும்.

அந்த இரு தலமையும் அதில் பேச்சிலும் எழுத்திலும் அப்படி ஜொலித்தது

தமிழ் மிக அழகாய் வருமாரும் பார்த்துகொண்டது, அவர்களின் மூலதனமே அது அல்லவா?

இங்கு மா.பா பாண்டியராஜனுக்கு மிசாவில் பதில் சொல்வதாக நினைத்து தன் பலவீனங்களை பட்டியலிடுகின்றார் ஸ்டாலின்

தமிழ் வளர்க்க வந்த கட்சியின் தலைவர் இப்படி ஆங்கில கலப்புடன் உளறுவது நிச்சயம் சரி அல்ல‌

அதுவும் வார்த்தைகளை கவனியுங்கள் “போலிசு அலோவ் பண்ண மாட்டேங்குறான்”

ஆக எடப்பாடி வலையில் அட்டகாசமாக விழுந்துவிட்டார் அன்னார், பரிதாபம்

https://m.facebook.com/story.php?story_fbid=517682779072811&id=100024932807586

ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது

ஆளாளுக்கு திருகுறள் பற்றி பேசுகின்றார்களே தவிர, அது அன்றே ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது என சொல்வார் யாருமில்லை

ஒரு மோதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் திருகுறள் காட்டிய அதிசயங்கள் சில உண்டு என்கின்றன தமிழ் பண்டைய செய்திகள்

அன்று ஒரு தமிழ்படைப்பு அங்கீகாரம் பெற மதுரை தமிழ்சங்கத்தில் அது மேடை ஏற்றபட வேண்டும், அந்த சங்கம் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்தது

குறளை இலக்கிய வகையில் ஏற்கமுடியாது என சங்கம் வாதிட்டு அது குளத்தில் எறியபட்டதாகவும் தெய்வமே அதை மீட்டு சங்கபலகைக்கு கொண்டு வந்ததாகவும் பழந்தமிழ் குறிப்புகள் சொல்லும்

மதுரை ஆலயத்தில் திருகுறள் வைக்கபட்டபொழுது பல ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்ந்ததாகவும் அதை பாடலாக பாடி வைத்ததாகவும் தமிழ் இலக்கியத்தில் செய்திகள் உண்டு..

அதன் பின் குறளை சிறப்பித்து பாட அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். சங்கப் புலவர்கள் ஆளுக்கொரு பாடலைப் பாடி நூலைச் சிறப்பித்தனர்.

அசரீரியாக – ஆகாயவாணியாக – ஒரு பாடல் மலர்ந்தது.

இடைக்காடர் மற்றும் ஔவை ஆகியோர் ஆளுக்கொரு பாடல் தர மொத்தம் 55 பாடல்கள் ஆயின. இது திருவள்ளுவ மாலை என்ற சிறப்புப் பெயர் பெற்று இன்றும் இலங்குகிறது.

இந்த 55 பாடல்களில் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாரும் ஒருவர். அவர் கீழ்க்கண்ட வெண்பாவைப் பாடினார் :

“புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்பல் – நிலவு பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள் மாலைக்கும் பெயர்”

அருமையான இந்தப் பாடலை அளித்த தமிழாசிரியர் கிழார் வாழ்ந்த செங்குன்றூர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஊர் என்று அவரைச் சிறப்பித்து கொங்கு மண்டல சதகம் 28ஆம் பாடல் கூறுகிறது:

பாடல் இதோ:

“நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை குலவு மதுரைத் தமிழா சிரியர்செங் குன்றூர்கிழார் வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே”

பாடலின் பொருள் : பூவுலகத்தில் பல கலைஞானங்களில் சிறந்த புலவர், திருவள்ளுவர் என்று கூறிய மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாருங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாம்.

திருவள்ளுவ மாலையில் உள்ள அசரீரி கூறிய பாடல் இது:

“திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க உருத்திர சன்மர் என உரைத்து வானில் ஒருக்கஓ என்றதுஓர் சொல்”

கலைமகள் திருக்குறளைப் புகழ்ந்து பாடிய பாடல் இது:

“நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு”

இறையனார் திருக்குறளைப் புகழ்ந்து ஈந்த பாடல் இது:

“என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து
தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்”

ஆம் அன்றே அது இந்துநூல் என நிரூபிக்கபட்டு வழக்கு முடிந்துவைக்கபட்டது,

ஒரு பயலாவது அதுபற்றி சொல்வான் என எதிர்பார்த்தால் சொல்லவே இல்லை

டிவி மீடியாவுக்கு செல்லும் பாஜக கோஷ்டியும் அதுபற்றி பேசவே இல்லை, தாமரை முதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் இருந்து மலரட்டும்

தமிழகத்தில் திமுக அதிமுக தயவில் ஏதோ வாழ்கின்றது

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது

ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், ஈரோட்டு ராம்சாமி அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது.

மக்களாட்சி என்பது ரோமர் காலத்தில் இருந்தது பின் ஆங்காங்கு முயற்சிக்கபட்டு தோற்றது பிரெஞ்ச் புரட்சியும், போலந்து வழியும் கொஞ்ச நாளில் முடியாட்சிக்கு மாறின‌

ஆனால் ரஷ்ய புரட்சி பலமாற்றங்களை செய்தது

1917ல் ரஷ்யாவில் எழுந்த செங்கொடி, உலகெல்லாம் போலவே இந்தியாவிலும் பறந்திருக்கலாம், வாய்ப்பு இருந்தது . ஆனால் இங்கு அணியபட்டிருக்க வேண்டிய செஞ்சட்டை கருப்பு சட்டையானது

பின் அது திராவிட கட்சிகளாகி ஆட்சிக்கும் வந்தது. சர்வ நிச்சயமாக இங்கு பொதுவுடமை கொடியே கேரளா போல பறந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி அமையவில்லை, ஈரோட்டு ராம்சாமி முதலில் கம்யூனிசம் பேசியது ஆனால் வெள்ளையன் மிரட்டவும் கறுப்பு சட்டை போட்டு என்னமோ குழப்பியது காரணம் ராம்சாமிக்கும் நிறைய சொத்து இருந்தது

இதனால் கடவுள் மறுப்பை மட்டும் ரஷ்யாவிடம் இருந்து பெற்று சொத்தை மட்டும் பாதுகாப்பதில் குறியாய் இருந்தார் ராம்சாமி

அவர்கள் போப்பையும் கிறிஸ்துவத்தையும் எப்படி எல்லாம் விமர்சித்தார்களோ ராம்சாமி அதில் இந்துமதத்தையும் புராணத்தையும், பிராமணியத்தையும் பொருத்தினார், அவ்வளவுதான் புரட்சியாளர் ஆனார், சுய அறிவு என்பதெல்லாம் இல்லை

ராம்சாமியினை விடுவோம், செங்கொடி பறந்த காலத்திற்கு செல்லலாம்

எப்படிபட்ட சாதனைகளை எல்லாம் அந்த செங்கொடி செய்தது

ஜார் மன்னன் எனும் கொடுங்கோலனை வீழ்த்தி, ரஷ்புடீன் எனும் சாமியாரை விரட்டி மக்களே மக்களை ஆள்வார்கள் என உயர்ந்தது அந்த கொடி

வர்க்கபேதமற்ற சமூகத்தை உருவாக்க தத்துவம் சொன்ன மார்க்ஸின் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்த சமூகத்தின் அடையாளமாக, மத சாமியார்களின் கட்டுபாட்டினின்று தன்னை விடுவித்த சமூகத்தின் அடையாளமாக அது உயரபறந்தது

அதுவரை தொழிலாளர் என்போர் விலங்குகளில் ஒருவர் என எண்ணபட்ட உலகிற்க்கு , தொழிலாளி என்பவன் வாழபிறந்தவன் என சொல்லி அவனுக்கு உயர்ந்த வாழ்வு அளித்தது அந்த கொடி

அந்த கொடியின் கீழான ஆட்சியில்தான் தொழிலாளர்கள் நிம்மதியாக சுவாசித்தனர், நிம்மதியாக வாழ்ந்தனர். முதலாளிகளுக்கும் நில சுவாந்தார்களுக்கும் மட்டுமே கிடைத்த வசதிகள் அத்தொழிலாளிகளுக்கும் கிடைத்தன‌.

விவசாயியும், சுரங்க தொழிலாளியும் கப்பல் ஏறி உல்லாச பயணமாக விடுமுறை கொண்டாடியது எல்லாம் அந்த ஆட்சியில்தான்

கூட்டுறவு பண்ணைகள் எல்லாம் உருவானது அங்குதான்

அந்த தொழிலாளிகள் வாழ்வாங்கு வாழ்வதை கண்ட மற்ற நாட்டு மக்களும் சிந்திக்க, பல அரசுகள் அஞ்சின, பல அரசுகள் சலுகைகளை அள்ளி கொடுத்தன‌

இன்று தொழிலாளர் உலகம் காணும் ஓய்வூதியம், பணிக்கொடை, வேலை பாதுகாப்பு, இன்னும் பிற படிகள் உட்பட பாதுகாப்புகள் எல்லாம் அதன் மூலம் உலகம் பெற்றுகொண்டவையே

இந்த உலகிற்கு எவ்வளவு பெரும் பாதுகாவலாய் நின்றது அந்த செங்கொடி.

ஹிட்லர் எனும் அரக்கனை அந்த செஞ்சேனைதான் வீழ்த்திற்று, ஹிட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகை காத்தது நிச்சயம் அந்த பொதுவுடமை படை

அந்த வெற்றிக்கு பின்புதான் இந்தியா உட்பட்ட நாடுகளின் விடுதலை சாத்தியமானது, ஒருவேளை பிரிட்டன் அல்லது ஹிட்லர் வென்றிருந்தால் இந்திய விடுதலை சாத்தியமே இல்லை

சோவியத் யூனியனின் எழுச்சியே உலக சரித்திரத்தை புரட்டி போட்டது. அதன் பாதுகாவலிலே மக்களுக்கான அரசுகள் எழும்பின‌

சீனா, வியட்நாம், அந்நாளைய வடகொரியா எல்லாம் அப்படித்தான் ஆட்சிமாற்றம் கண்டது

சோவியத் இருக்கும் தைரியத்தில்தான் சேகுவேராவும், காஸ்ட்ரோவும் உருவானார்கள். அமெரிக்கா நொடியில் நசுக்க திட்டமிட்ட கியூபாவினை காத்து நின்றது சோவியத் யூனியன்

எகிப்து சூயஸ் கால்வாயினை கைபற்றி பிரிட்டனை அடித்து விரட்டி தன் சொத்தை தனதாக்கி கொள்ள உதவியதும் அதுவே

அந்த சோவியத் இருந்த தைரியத்தில்தான் அரபு நாட்டில் பாலஸ்தீன் எழுச்சியும் அந்த போராட்டமும் வலுபெற்றது, பாலஸ்தீன் இருப்பிற்கு சோவியத் மகா முக்கியம்

வங்கப்போரில் இந்தியாவினை அமெரிக்காவின் மிரட்டலில் இருந்து இந்தியாவினை காத்து நின்றதும் அந்த செங்கொடியேதான்.

இந்திராவின் இந்தியா எழுச்சிபேறவும் அது இன்று ஓரளவு பாதுகாப்பான தேசமாக நிற்கவும் அந்த செங்கொடி தேசம் கொடுத்த உதவிகள் கொஞ்சமல்ல‌

பெண் விடுதலையினை உலகிற்கு சொன்னதும், பால்காரி தெரஸ்கோவாவினை விண்வெளிக்கு அனுப்பியதும், மகளிர் நலனில் உலகிற்கு முன்மாதிரியாய் இருந்தது அந்த செங்கொடி நாடுதான்

விவசாயிகள் எப்படி காக்கபட வேண்டும்? முதலாளித்துவம் எப்படி கட்டுபடுத்தபட வேண்டும் என உலகிற்கு சொன்ன தேசம் அது

அத்தேசம் இருக்கும் வரை உலகின் தேசிய இனங்கள் அப்படியே இருந்தன. சோவியத் வலுவான காலத்தில் உலகில் நடந்த ஒரே தவறு திபெத் ஆக்கிரமிப்பு , அதற்கு ஆயிரம் காரணங்கள், மற்றபடி எல்லா இனங்களும் ஒரு வித பாதுகாப்போடே இருந்தன.

முதலாளித்துவ சக்திக்கு நிரகான சக்தியாக சோவியத் உலகை காத்தது.

எகிப்தின் கர்ணல் நாசர் போல பல ஜாம்பவான்கள் தணித்து நின்றனர்.

மதவெறி கும்பல் உலகில் எங்கும் தலை தூக்கிவிடாமலும், முதலாளித்துவ கைகூலிகளின் படை உருவாகிவிடாமலும் காத்து நின்றது செங்கொடி

காலத்தின் கோலத்தில் செங்கொடி கீழிறங்கிய பின்பே இவ்வுலகில் நடக்க கூடா விஷமெல்லாம் நடந்தன,

உலகமே மாறியது சதாம் போன்றவர்கள் கொல்லபட்டனர். வல்லான் வகுத்ததே நீதியானது. ஈழம் போன்ற பகுதிகள் எரிய தொடங்கின

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், அந்த செங்கொடி மட்டும் மிக வலுவாக பறந்துகொண்டே இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால், சிரியா, ஆப்கன் போன்ற கொலை கூடங்கள் எல்லாம் உதித்திருக்காது

இன்றைய உலகின் நிலையற்ற தன்மை வந்திருக்காது, புட்டீன் இன்று ஓரளவு சமநிலைபடுத்தியிருகின்றார்

12 மணிநேர வேலை, வேலை செய்தால் தான் கூலி மற்றபடி ஒரு சலுகையுமிலை என்றிருந்த தொழிலாளார் உலகினை நேரடியாகவும் மறைமுகமாகவும் மாற்றி காட்டியது அந்த செங்கொடி தேசம்

ஆனால் இன்றோ மறுபடி உலகம் அந்த கொத்தடிமை முறை நோக்கி செல்கின்றது. அது ஐடி முதல் எல்லா தொழில்களிலும் தெரிகின்றது

ஓவர்டைம் அது இது என சொல்லி எல்லா தொழிலாளர்களும் பிழியபடுகின்றார்கள், சனி ஞாயிறு இரவு பகல் என்பதெல்லாம் இல்லை.

மறுபடி அந்த தொழிலாளர் அடிமை முறை நோக்கி இந்த உலகம் சென்றுகொண்டிருக்கின்றது.

கம்யூனிசம் ஒன்றும் மார்க்ஸ் முதலில் சொன்னது அல்ல, பொதுவுடமை கோட்பாடு பைபிளிலே இருக்கின்றது. ஆதி கிறிஸ்தவர்கள் அப்படி பொதுவுடமை வாழ்வுதான் வாழ்ந்திருக்கின்றார்கள், என்று கிறிஸ்தவம் ரோமாபுரியினை கைபற்றியதோ அதன் பின்புதான் சிக்கல் தொடங்கியிருக்கின்றது

அந்த பொதுவுடமை வாழ்வினை கடவுள் இல்லை என்ற புள்ளியில் மறுபடியும் வாழ கொடி உயர்ந்தது நவம்பர் 7, 1917

அந்த தேசம் நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, சோவியத் மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று மிக்க நலமாக வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றார்கள்

ஆனால் மானிட சுபாவம் வித்தியாசமானது. ஆளுக்கொரு சிந்தனை ஆளுக்கொரு விருப்பம் என உள்ள மனிதர்கள் பொதுவுடமை கொள்கையினை கொஞ்சம் மறக்க தொடங்கினார்கள். இன்னொன்று முன்னோர் கண்ட சிரமும் அவர்கள் பட்ட பாடுகளும் அடுத்தடுத்த தலைமுறைக்கு தெரியவில்லை

விளைவு சோவியத் சிதறியது

ஆனாலும் பழைய சோவியத் முடிமக்களுக்கு அந்த செங்கொடி பறந்த காலம் மகா சொர்க்கமாக, மிகுந்த நல்லாட்சி நடந்த காலமாகவே தெரிகின்றது

அந்த நாளால்தான் கியூபா முதல் வடகொரியா வரை உலக அரங்கில் நிற்க முடிகின்றது, சீனா எல்லாம் ஆசிய சக்தியாக நிற்க முடிகின்றது

உலக அரசியலை விடுங்கள், பிரணாய் விஜயனும் இங்கு அமர்ந்திருக்கும் பழனிச்சாமியும் முதல்வராக அமர அந்த செங்கொடி கொடுத்த நம்பிக்கையே காரணம்.

நகைப்பாக இருக்கலாம், ஆனால் அதிமுகவின் மூலம் திமுக திமுகவின் மூலம் திக, திகவின் மூலம் பெரியார் என சென்றால் நிச்சயம் அந்த செங்கொடிதான் காரணம்

செங்கொடி உயர்ந்திருக்காவிட்டால் இவை எல்லாம் நடந்திருக்காது

அவ்வகையில் உலகின் ஒவ்வொருவர் தலைவிதியினையும் மாற்றிகாட்டிய நாள்

யார் நினைக்கின்றார்களோ இல்லையோ, மானிடத்தை நேசிக்கும், சமத்துவத்தை நேசிக்கும் யாரும் அந்நாளை கொண்டாடலாம்

மானிட குலத்தின் மகத்தான நாள் அந்த நவம்பர் 7.

அன்று உலகமே கொண்டாடிய பொழுது ஹிட்லர் மட்டும் மாற்றி சொன்னான், இது அரசனை ஒழிக்கும் புரட்சி, அரசனை ஒழித்துவிட்டு குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி அவ்வளவே மற்றபடி கம்யூனிசம் ஒரு நாள் காணாமல் போகும் அது மானிட சிந்தனைக்கு விரோதமானது என்றான்

அது உண்மைதான் போலிருக்கின்றது, உலகில் எங்கெல்லாமோ அது விடைபெற்றுவிட்டது இந்தியாவில் கூட இப்பொழுது சுருங்கிவிட்டது, தமிழகத்தில் திமுக அதிமுக தயவில் ஏதோ வாழ்கின்றது.

யார் சொன்னா?

“என்னய்யா ரஜினிய தூக்கிட்டு வாங்கண்ணு சொன்னா ஜி.கே வாசனை பிடிச்சிட்டு வந்திருக்காங்க..

பங்காளி, ஜிகே வாசன் அப்பாவும் ரஜினியும் கூட்டாளிங்களாம், அதுனால இவர வச்சி அவர பிடிச்சிரலாமாம்

யார் சொன்னா?

தமிழ்நாடு பாஜக‌

அவங்க சொன்னா முழு தப்பா மட்டும்தான் இருக்கும், வேற ஏதாவது செய்ங்க..”