இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி?

சரி சரி இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி? அவரு செயிலுக்கு போன கதைதான் ஊருக்கே தெரியுமே..

அந்த சர்காரியா கமிஷன் , ஜெயின் கமிஷன் என்ன சொல்லுதுண்ணு கொஞ்சம் பார்க்குறது

ஏ..புள்ள Devi Somasundaram எம்புட்டு நேரம் இந்த கமிஷனையே பாக்குறவ… இந்த கமிஷன விட்டுபுட்டு அந்த கமிஷனையெல்லாம் கொஞ்சம் புரட்டி பாக்குறது..

ரைசிங் ஸ்டார்

“இந்த ஜின்பெங் இன்டியா டமில்நாடு போனார், இப்போ அமெரிக்காவுல டமில்நட் மினிஸ்டருக்கு ரைசிங் ஸ்டார் பட்டம் கொடுக்குறாங்களாம்? என்ன இதெல்லாம்

மிஸ்டர் பிரசிடென்ட், அந்த மினிஸ்டர் சோ பிட்டி, காலெமெல்லாம் குனிஞ்ச்சே நின்னாரு,அவங்க பாஸ் அப்படி வச்சிருந்தாங்க, இன்னொரு லேடிபாஸ் முதுகிலே மிதிச்சி காலுக்கு கீழே வச்சிருந்தாங்க‌

ஓ சேட்..

அவர் இப்போதான் கொஞ்சம் நிமிர்ந்து பார்குறாறு, அப்பவும் முதுகுல வலி இருக்குதாம் ட்ரீட்டென்ட் வந்திருக்காரு, வாழ்க்கை எல்லாம் குனிஞ்சே நின்ன மேன் நிமிரும் போது மனிதாபிமானமா அவர ஊக்கபடுத்த ரைசிங் ஸ்டார் பட்டம் குடுங்குறாங்க அவ்வளவுதான் பிரசிடென்ட்..

ஆல் ரைட்.. இது அடிமை முறை ஒழிச்ச அமெரிக்க லிங்கன் மண், அந்த முன்னாள் அடிமைக்கு நல்லா டீரிட்மென்ட் கொடுத்து அனுப்புங்க பாவம்…”

கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்பு

கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்புகமலாஹாசனின் தாயார் பெயர் ராஜலெட்சுமி, இந்த தசவாதாரம் படத்த்து தலைப்பு பாடலில் மிக பொருத்தமாக இந்த பெயர்களை சொன்னார் வாலி”ராஜலட்சுமி நாயகன் சீனிவான்தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் தான்”இத்தோடு முடித்தால் அவர் என்ன வாலி, அவர் வைணவர் அல்லவா? தஞ்சை கோவிலும் சோழனும் சைவம் அல்லவா?அதனால் அடுத்தவரி இப்படி சொல்வார்”நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”அதாவது ரங்கராஜன் என்பது வைணவ கடவுளையும் குறிக்கும் அதே நேரம் வாலியின் சொந்த பெயரும் அதுதான்..பாடல் தொடரும் “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..” அது கமலஹாசனின் நாத்திகத்துக்கு செவிட்டில் அடிப்பது போன்ற வரி..நிச்சயம் அற்புதமான கவிஞன் வாலி, இந்த சிலை திறக்கபடும் பொழுது அவரின் சுவாரஸ்யமான‌ வரிகள் நினைவுக்கு வருகின்றன..

பொதுவாக்கெடுப்பு

தயவு செய்து குஷ்பு பதிவுகளை நிறுத்துங்கள் என கேட்கும் குரல்கள் அதிகரித்துகொண்டே இருப்பதால் சங்கம் ஆழ்ந்த கவலையில் இருக்கின்றது.

இதுபற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கின்றது சங்கம், உங்கள் வாக்குகளை செலுத்தலாம்..

உன் அல்லக்கைகளை கூட்டிட்டு வெளியே போடா.. 

இங்கே பாரு முருகேஷா…

உங்க கலைஞரையும் டல்பதியினையும் திட்டனும்னு இங்க யாரும் நேர்ந்துட்டு வரல‌

திமுகவின் இந்து மற்றும் இந்திய எதிர்ப்பை மட்டும்தான் பதிவு செய்வோம், மற்றது எமக்கு தெரியாது

உன் தளபதி உளறி ஊரே சிரிக்கும்போது நானும் சிரிக்கவில்லை என்றால் நன்றாயிராது

அவ்வளவுதான் முருகேஷா..

எவன்டா அது அல்லக்கை, திமுகவினர் வெளிவந்தால் நான் செல்லாக்கசு என சொன்னது? அடேய் ஒரு பய இல்லன்னாலும் நாம் எழுதுவொம் புரியுதா?

உன் அல்லக்கைகளை கூட்டிட்டு வெளியே போடா..

ஆக இருவருக்குமே ஒரே சிக்கல் போலிருக்கின்றது..

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு சிக்கல் மிக நெருக்கடியாயிற்று, அவர் தப்புவது சிரமமே

பொருளாதாரம் ஒருபக்கம் என்றாலும் காஷ்மீரில் இந்திய காட்டிய அதிரடியும் அதை உலக அரங்கில் எடுத்து செல்லமுடியாமல் இம்ரான்கான் தோற்றதும் பெரும் காரணம்

காஷ்மீர் பாகிஸ்தானின் நிலம் , அது எங்கே என வெடிக்கும் குரலுக்கு இம்ரானிடம் பதில் இல்லை

இங்கே அவரின் கூட்டாளி முக ஸ்டாலின் என்பவர் பஞ்சமி நில சிக்கலில் இருக்கின்றார், பஞ்சமி நிலம் எங்கே என கேட்டால் அவரிடமும் பதில் இல்லை

ஆக இருவருக்குமே ஒரே சிக்கல் போலிருக்கின்றது..

அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும்

அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும், சூரியனின் 7 குதிரைகள் என்பது 7 வண்ணம், ராமனும் கண்ணனும் நீலம் என சொன்னது நீல நிறம் அதிகம் சிதறடிக்கப்படுவதால்

இதனால் வானமும் கடலும் நீல நிறமாய் தொந்தோன்றுவதால் என்பதோடு நிற்காது

7 வண்ணங்களுக்கும் ஒரு சக்தி உண்டு, அவை மானிடரை பாதிக்கும், அவற்றின் நல்ல சக்தியினை பெற காலை நேரம் உகந்தது, அவற்றை விலகி வைக்க கிரகண நேரமும் இன்னும் உச்சி நேரமும் உகந்தது

வானில் மற்ற கிரக அமைப்புகள் பொறுத்து பூமியில் அந்த ஒளிக்கதிர் பல விளைவுகளை கொடுக்கும், என்றெல்லாம் வரும்

அதாவது சூரிய நமஸ்காரம் முதல் கிரகணம் வரை, ஒவ்வொரு வகையான நிறத்தை இந்துமதம் குறிப்பிட்டு சொல்வது வரை ஏகப்பட்ட விஞ்ஞான விஷ்யங்கள் உண்டு

சர் சி.வி.ராமன் அதில் ஒரு தொடக்க புள்ளியினைத்தான் சொன்னார், இன்னும் அதில் சொல்லப்படா விஷயங்கள் ஏராளம் உண்டு

அதை இந்துமதத்தையும் விஞ்ஞானத்தையும் சரியாய் உணரும் இன்னும் பலர் வந்து வருங்காலத்தில் நிரூபிப்பார்கள் , பெரும் பரிசுகள் பெறுவார்கள்

அதில் இந்துமத மென்மையும் அதன் அறிவார்ந்த தன்மையும் குன்றின் மேல் விளக்காக ஜொலித்து கொன்டே இருக்கும்