மாவீரன் மகிந்த ராஜபக்சே வாழ்க..

அடுத்த இனம் தமிழ் பேசும் அழகே அழகு..

அங்கிள் சைமன், வைகோ போன்றோர் தூக்குகயிறை தேடும் நேரம் இது…

எப்படியோ மோடிக்கு ஐடியா கொடுத்துவிட்டார் ராஜபக்சே, இனி மோடி சும்மா இருப்பாரா என்ன?

மாவீரன் மகிந்த ராஜபக்சே வாழ்க..

https://m.facebook.com/story.php?story_fbid=1565185243530329&id=629999347048928

என்னமோ போங்கடா…

அடேய், ராஜராஜ சோழன் கடைசி காலத்தில் தஞ்சை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து செத்தானாம், எமக்கென்னமோ அவன் கருவூர் சித்தரின் ஞான திருஷ்டியில் இதை எல்லாம் பார்த்து தற்கொலை செய்ததாகவே தோன்றுகின்றது

அதென்ன ராவணன் குரூப்ஸ்? துரியோதனன் என்ன பாவம் செய்தான்? அவனை ஏன் சாதியினை விட்டு நீக்கினீர்கள்? கட்ட பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பினை சொல்லி கொடுத்ததே அவன் தானே

என்னமோ போங்கடா…

ஓ.. மூவேந்தரும் நீங்களா? இந்த கடையேழு வள்ளல் எல்லாம் நாடாரில் இல்லையா?

அதானே வள்ளல்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, நமக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

தயவு செய்து அந்த கடையேழு வள்ளல்களை மட்டும் தொட்டுவிடாதீர்கள் நாடு தாங்காது..

ரஜினி அரசியலுக்கு வருவது என்பது

புராணத்தில் ஒரு காட்சி உண்டு, தசரதனுக்கும் பரசுராமனுக்கும் முட்டிகொள்ளும். பரசுராமன் தசரதனை தொலைத்துவிடுவது என வருவான்

பரசுராமனின் கோபம் பொல்லாதது என உணர்ந்த தசரதன் விசுவாசமித்திரரிடம் சரணடைகின்றான் அவர் ஒரு யோசனை சொல்கின்றான்

“மன்னா பரசுராமனை வெல்ல நம்மால் முடியாது ஆனால் அவன் தர்மத்துக்கு கட்டுபடுவான், ஆம் மணகோலத்தில் நிற்பவர்களை கொல்ல கூடாது என்பது தர்மம், ஆகையால் அவன் வரும் பொழுது நீ மணகோலத்தில் நில் அவன் கொல்லமாட்டான்”

இதனால் நாளுக்கொரு திருமணம் செய்து மணகோலத்தில் நின்றாராம் தசரதன், அனுதினமும் அவரை வந்து பார்த்தான் பரசுராமன், தசரதனின் மனைவிகள் கணக்கு ஆயிரகணக்கில் சென்றது,

வெறுத்து போன பரசுராமன் தன் அவதாரத்தையே முடித்துவிட்டு கிளம்பினான், தசரதன் தப்பினான்

இப்படியாக இந்த ரஜினி என்பவரை அரசியலுக்கு இழுக்க கோடாரியோடு அலைகின்றது டெல்லி, வீட்டில் இருந்தால் மனைவி இன்னொரு கோடாரி

இவர்களிடம் இருந்து தப்ப இந்த படம் முடிந்தபின் அரசியல் இந்தபடம் முடிந்தபின் அரசியல் என ஓடிகொண்டே இருக்கின்றார் ரஜினி

ரஜினி அரசியலுக்கு வருவது என்பது தசரதனை பரசுராமன் பழிவாங்க காத்திருந்த கதைதான் வேறொன்றுமில்லை

ரஜினி தன் வார்ததைகளை திருத்தி கொள்வது நல்லது

ரஜினி பாஜகவாக இருக்க வேண்டிய அவசியமில்லை, காவி கட்டி இமயமலைக்கு செல்வதெல்லாம் அவரின் சொந்த விருப்பம்ஆனால் இஸ்லாமும் கிறிஸ்தவமும் தோன்றுமுன்னே அந்த தெய்வீக குறளை எழுதிய வள்ளுவன் இந்து முனி அல்லாமல் யார்?அதை ஏன் அவர் சொல்லவில்லை, ஆன்மீகத்தில் கரைந்தவர் என்றவகையில் அவருக்கு அது நன்றாக தெரியும், ஆனால் திமுகவினையும் கலாநிதி மாறனையும் பகைத்து தன் படத்தை கெடுக்க அவர் விரும்பவில்லை என்பது மட்டும் தெரிகின்றதுமவுனமாக அதை கடந்திருக்கலாம் மாறாக வள்ளுவன் சிக்கமாட்டார் என சொன்னது சரியல்ல. வள்ளுவன் ஒரு இந்துவாக இருக்கும் பொழுது இன்னும் சிக்க என்ன வேண்டி இருக்கின்றது?கவிதாலாயா நிறுவணத்தின் ஐகானே வள்ளுவன் சிலை, அக்கம்பெனி தொடக்கத்திலெல்லாம் வள்ளுவன் வந்து அகரமுதல எழுத்தெல்லாம் ஒலித்துவிட்டே படம் தொடங்கும்கவிதாலாயா நிறுவணத்தால் வளர்ந்த ரஜினி இப்படி பேசுவது கொஞ்சமும் நியாயமும் மனசாட்சியுமில்லா விஷயம்இதுவே கன்னடத்தில் அந்த பசவய்யா ஒரு இந்து அல்ல என அவரால் சொல்லிவிட முடியுமா?”தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்பது வள்ளுவன் வாக்கு..நல்ல ஆன்மீகவாதி பொய்யுரைப்பானாகில் அதன் விளைவுகள் சரியிராது, ரஜினி தன் வார்ததைகளை திருத்தி கொள்வது நல்லது

ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார்

“காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

ஆதிபகவனின் அருளால் ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார், இனி எம் சிலைக்கோ எமக்கோ குறிப்பாக திமுகவினரிடம் சிக்கி படாத பாடு படும் எம் குறளுக்கோ ஆபத்தில்லை

மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திப்போம்

திருவிழா முடிந்த ஊரில் பந்தலை , மின் விளக்குகளை பிரிப்பது போல தன் எஸ் 400 உட்பட பல விஷயங்களை சிரியாவில் இருந்து அகற்றுகின்றது ரஷ்யா

ஐ.எஸ் தலைவனை போட்டு தள்ளியாகிவிட்டதால் இனி ஐ.எஸ் பயம் இல்லை, குர்துகளும் சைலன்ட் மோடுக்கு போயாகிற்று, அமெரிக்கா அமைதி என்பதால் அரசுக்கு எதிரான போராளிகளும் மல்லாக்க படுத்தாயிற்று

இதில் டிரம்பே முன்பு தீவிரவாதிகளுக்கு எதிராக எமது யுத்தம் என்ற நிலையில் இருந்து சிரிய எண்ணெய் வயல்களுக்கு அதாவது வடக்கே ஈராக்கையொட்டிய எமது எண்ணெய்க்கு (ஆம் அவருடையதாம்) நாம் பாதுகாப்பு அவ்வளவுதான் எம் தேவை என சொல்லிவிட்டார்

ஆக தன் நிலையினை அமெரிக்கா தெளிவாக சொல்லிவிட்டது

அவன் புத்தியே அதுதான் , சரி பங்காளி அவன் வாலாட்டினா சொல்லு என கிளம்புகின்றது ரஷ்யா

அமெரிக்க படை முழுவதும் அகலவில்லையே என்றால் “அவனுக போக மாட்டானுக கொஞ்சம் எண்ணெய்தானே எடுத்துட்டு போகட்டும் விடு” என சொல்லிவிட்டது ரஷ்யா

ஆக சிரியபக்கம் அமைதி, ரஷ்யா ஒதுங்குவதில் இஸ்ரேலுக்கு ஏக மகிழ்ச்சி, இனி சிரியாவில் அடிக்கடி அடிக்கலாம் என குதூகலம்

ரஷ்யாவுக்கு நிதி உட்பட பல சிக்கல், ஆண்டு இறுதி உட்பட பல விஷயங்களில் அது திரும்புகின்றது என்கின்றன செய்திகள்

எப்படியோ சிரியாவில் அமைதி திரும்பினால் எல்லோருக்கும் மகிழ்ச்சி, திரும்பிய மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திப்போம்

இது உலக போராகி உலகம் அழிந்து இயேசு வரவில்லை என்ற சோகத்தில் இருக்கின்றன அல்லேலூயா கோஷ்டிகள்..

சிட்டிபாபுவினை சாகும்வரை அடித்த அதிகாரி யார் என சொல்லவுமில்லை, ஏன்?

மிசாவில் உள்ளே சென்றது திமுகவினரே, அதிமுகவினர் இந்த வகையிலே வரமாட்டார்கள் அவர்கள் அரசியலே வேறு, மிசாவினை வரவேற்ற ஒரே தலைவர் அன்று மிஸ்டர் ராம் சந்தர் ஒருவர்தான்

எமக்கு என்ன சந்தேகம் என்றால் திமுகவில் மிசாவாசிகள் நிறையபேர் உண்டு, அவர்களில் ஒருவர் கூட ஸ்டாலின் மிசாவில் எங்களோடு இருந்தார் என ஏன் சொல்லவில்லை?

அவர்கள்தானே சொல்லவேண்டும் மாறாக செத்துபோன சிட்டிபாபு என்பவரா வந்து சொல்வார்?

ஸ்டாலினும் எந்த அதிகாரி தன்னை கைது செய்தார் என சொல்லவுமில்லை

சிட்டிபாபுவினை சாகும்வரை அடித்த அதிகாரி யார் என சொல்லவுமில்லை, ஏன்?