நாமும் சொல்லியிருக்கின்றோம்..

நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்?

ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, ராமன் கலங்கி சொல்வான்

“நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்?

அந்த சீதை பலமிக்கவள், அந்த வில்லை அவளே ஒரு கையில் தூக்கினாள் அதை கண்டபின்பே அவளுக்கு சமமான கணவன் வேண்டுமென வில்லுக்கு நாணேற்றும் பந்தயம் வைத்தான் ஜனகன்

ஆம் அவள் நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் ஆனால் கொல்லவில்லை

அந்த வாலி நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் அவனும் கொல்லவில்லை

இதோ இந்த அனுமன் நினைத்தால் கொன்றிருக்கலாம் , அவனும் கொல்லவில்லை

ராஜ்யத்தை பரதன் எடுத்தான், என் நிம்மதியினை சீதை எடுத்தாள், ராவணனை வாலியினை கொன்ற பழி எல்லாம் நான் சுமந்தேன்

தந்தை கூட இருந்ததில்லை, பிள்ளைகள் கூட வாழவுமில்லை, சுமப்பதெல்லாம் பழி..

பழிசுமக்க மட்டும் பிறந்த பிறப்பா நான்?..”

அந்த காட்சிகள் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றன

இன்றோடு அதற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று

இந்த விவகாரத்த்தில் ஆர்.எஸ்.எஸ் , பாஜக காரணம் என சொல்வதெல்லாம் முழு நியாயமில்லை

பாபர் மசூதி கட்டும் பொழுது ஆர்.எஸ்.எஸ் இல்லை, பாஜக இல்லை

பாபரையும் முழுக்க குறை சொல்லமுடியாது, அந்த பூமி மரியாதைகுரிய பூஜித்தலுக்குரிய இடமாய் அன்றே இருந்தது. பாபர் கடைசியாக வந்த ஆப்கானியர் அவருக்கு முன்பு வந்தவர் எல்லாம் கொள்ளை அடித்து ஓடும் கூட்டமாய் இருந்தனர்

பாபர் இந்தியரில் ஒருவராக ஆள எண்ணினார், இந்தியர் வணங்கும் இடத்தில் தானும் வணங்கி அவர்களின் அன்பை பெற விரும்பினார், அப்படி வந்ததுதான் மசூதி

தொடக்கதில் மசூதிக்குள் இஸ்லாமியரும் வெளியே இந்துக்களின் ராமர் கோவிலுமாக நிலமை அமைதியாய் இருந்திருக்கின்றது

வெள்ளையன் திப்பு சுல்தானை வீழ்த்தும் பொழுதும், அந்த சிப்பாய் புரட்சி அடக்கும் பொழுதும் இந்து இஸ்லாம் மோதல் தனக்கு நல்லதென கண்டான்,

அன்றிலிருந்து வெடித்ததுதான் சிக்கல்

அது அவ்வப்போது எழுந்து வந்த குரல், உறங்கி வந்த கணல்

நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் அந்த சிக்கலின் மூலம் அல்ல, பாஜகவும் அல்ல‌

ஆண்டாண்டு காலம் கேட்ட குரலைத்தான் அவர்களும் சொன்னார்கள், ஆனால் அந்த அத்துமீறிய வன்முறை இடிப்பெல்லாம் ஏற்றுகொள்ளமுடியாது

நாம் சொல்வது இதுதான் இதெல்லாம் வெள்ளையன் விதைத்த விதை அது தேசபிரிவினை நடந்த பின்னும் இங்கு தொடர்ந்தது, அழித்தது

இன்றோடு அதற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று

பெரும் சிக்கலுக்கு இன்று தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது

சுதந்திரத்திற்கு முன்பு 400 ஆண்டுகளாகவும் சுதந்திரத்துக்கு பின் 70 ஆண்டுகளாக ஆக கிட்டதட்ட 500 ஆண்டுகளாக இழுத்துகொண்டிருந்த பெரும் சிக்கலுக்கு இன்று தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது

உலகமே உற்றுபார்த்த வழக்கில் மிக மிக நியாயமாக , தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளை கொண்டு , எல்லா கோணத்திலும் அலசி ஆராய்ந்து எதிர்காலத்தில் சிக்கலே வராத அளவு தீர்ப்பு வழங்கியிருகின்றது உச்ச நீதிமன்றம்

மசூதி வெறும் நிலத்தில் கட்டபடவில்லை, கட்டம் இந்து கோவிலென ஆதாரமில்லை என எல்லா நியாங்களையும் சொல்லிவிட்டு, சூழலின் அடிப்படையிலும் சிக்கலை தீர்க்கும் அடிப்படையிலும் இஸ்லாமியருக்கு வழிபடதானே மசூதி, அவர்கள் எங்கு மசூதி இருந்தாலும் வழிபடலாம் அதற்காக வேறு இடத்தில் அமைக்கலாம், சர்சைகுரிய இடத்தை அரசு எடுத்து அறகட்டளை மூலம் கோவில் கட்டலாம் என தேர்ந்து சொல்லிவிட்டது மன்றம்

1030களிலே டெல்லியில் இஸ்லாமிய ஆட்சி வந்தாலும், பாபர் வந்த 1500க்கு பின்பேதான் அங்கு மசூதி கட்டபட்டிருக்கின்றது அதுவும் ராம் கோட்டை பகுதியில் ஜென்மபூமியில், அந்த மசூதியின் பெயரே ஜெனமமசூதி பூமி

அன்றே அதன் அருகில் இந்துக்களும் கோவில்கட்டி வழிபட்டிருக்கின்றார்கள், 200 ஆண்டுகளில் மொகலாய சாம்ராயம் வீழவும் வந்த வெள்ளையனிடம் மல்லுகட்டியிருக்கின்றார்கள், அவனும் பஞ்சாயத்து செய்திருக்கின்றான், அது பின்பு சுதந்திர இந்தியாவில் வழக்காகி பல வருடம் இழுத்தடித்து மசூதி இடிபட்டு என்னவெல்லாமோ நடந்தது

இன்று இறுதி தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது

சிக்கல் தீர்ந்தது என நிம்மதி அடையும் நேரம் அடுத்த சிக்கலுக்கு அது தோற்றுவாயாய் இருந்துவிட கூடாது என்பதுதான் நம் பிரார்த்தனை, நல்லோர் எல்லோரின் ஆசையும் கூட‌

மத அடிப்படையிலான இம்சைகளுக்கு இதுவே முடிவாகட்டும், இந்த தீர்ப்பில் எதிர்த்து பேசுபவர்களுக்கும் இதை போல ஏகபட்ட மசூதிகளில் முடிவெடுக்க வேண்டு இருக்கின்றது என சொல்வனுக்கும் இனி தேசத்தில் இடமிருக்க கூடாது

இந்த கோவிலும் மசூதியும் எப்படி கட்டபட வேண்டுமென்றால் 120 கோடி மக்களும் இணைந்து கோவில் கட்ட வேண்டும், அப்படியே எல்லோரும் இணைந்து அந்த மசூதியினையும் கட்டி கொடுத்தல் வேண்டும்

இரு ஸ்தலங்களிலும் நாட்டுக்கான பிரார்த்தனை நடக்கட்டும், நாடு நலம்பெறட்டும்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், வருங்கால சந்ததியாவது மத நல்லிணக்கத்தோடு வாழட்டும்

இதில் வெற்றி பெற்றவர் என யாருமில்லை, தோல்வி என எவருக்குமில்லை காலம் அதன் கடமையினை சரியாக செய்திருக்கின்றது

600 ஆண்டுகளில் ஒரு சுழற்சி நடக்கும் என்பார்கள், அதில் வீழ்ந்தது எழும்பும் எழுந்தது வீழும்

அன்று பாபர் இத்தேசத்தை பிடித்து மசூதி கட்ட ஒரு காலம் இருந்தது, இன்று இத்தேசம் அதே இடத்தில் கோவில் கட்டவும் காலமிருக்கின்றது

நேரம் கூடிவருதல் என்பது இதுதான், இது அதற்கான காலம், அது விதித்தபடியே நடக்கின்றது

மிக மிக பரபரப்பான பதற்றமான நொடியினை தேசம் கடந்து கொண்டிருக்கின்றது, அந்த அமைதியும் ஆசுவாசமும் நிலைக்கட்டும்

உண்மையான சவால் இனிதான் இருக்கின்றது, இதில் அழுகைக்கோ இல்லை வெற்றி கொண்டாட்டத்துக்கோ இடமில்லை, காலம் அதன் வழியில் நடத்துகின்றது அமைதியாக கூட நடப்பதுதான் சரி

அமைதியும் ஸ்திரதன்மையும் தொடர்ந்து நிலைக்க பிரார்த்திப்போம்..