பட்டேலை கொண்டாடுபவர்கள் இந்த மாமனிதனையும் கொண்டாடினால் என்ன?

இந்த தேசத்தின் பெரும் அடையாளம் அப்துல் கலாம், அப்படியே இன்னொரு கலாமும் இங்கு உண்டு. இருவருமே கல்வியின் அடையாளங்கள். இருவருமே நாட்டுபற்று மிக்க இந்தியர்கள்

அந்த பெரிய கலாமின் பெயர் அபுல் கலாம். சுதந்திர போராளி, வெள்ளையனுக்கு நான் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் அதாவது சுதந்திரமானவன் என்ற பெயரை தன்னோடு சேர்த்து அபுல் கலாம் ஆசாத் ஆனார். மவுனாலா ஆசாத் என்றும் அறியபடுவார்.

மவுலானா என்றால் மதபெரியவர் என பொருள்.

மிக சிறுவயதிலே போராட வந்தவர். அவர் களத்தில் இருக்கும்பொழுது நேரு கூட போராட வரவில்லை. நேருவுக்கு இவர்தான் சீனியர். 35 வயதிலே காந்தி இவரை காங்கிரஸ் தலைவராக்கினார்

அபுல் கலாமிடம் நாட்டுபற்று ஓங்கி இருந்தது, பெரும் போராட்டங்களை எல்லாம் நடத்தினார், பத்திரிகை நடத்தினார், சிறை சென்றார் தியாகம் பல புரிந்தார். எல்லாம் கூடிவரும் வேளையில் ஜின்னாவின் பாகிஸ்தான் குரல் எழும்பியது

அபுல் கலாம் என்ன செய்யபோகின்றார் என தேசமே எதிர்பார்த்தது. அவரோ இந்தியாவோடு இருப்போம் பிரிவினை ஆபத்து என சொல்லி இந்தியனாய் இருந்தார்

பிரிவினைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இந்நாட்டை பிரிப்பது இருவர் ஒருவர் ஜின்னா இன்னொருவர் பட்டேல் இருவரும் இறங்கிவரவேண்டும் என பேசிய ஒரே தேசாபிமானி இந்த அபுல் கலாம் ஒருவரே

பிரிவினை நடக்கும்பொழுது கலவரங்களை கண்ட காந்தி உண்ணாவிரம் இருந்தபொழுது அபுல் கலாமும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் அவை எல்லாம் ஏனோ மறைக்கபட்டன‌

இப்படி அவர் போராடினாலும், ஒரு இஸ்லாமியன் பாகிஸ்தான் வேண்டாம் என போராடினாலும் பாகிஸ்தான் பிரிந்தது, பலுஸ்சிதான் சிங்கம் கான் அப்துல் கபார்கான் எங்களை பாகிஸ்தானுடன் விடாதீர்கள், நாங்கள் இந்தியாவோடுதான் இருப்போம் என கெஞ்சியபொழுது கண்ணீர் விட்டார் அபுல் கலாம்

கிழக்கு வங்கத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தது போல பலுசிஸ்தானை இந்தியாவிடம் கொடுங்கள் என அபுல் கலாமும் இன்னும் சில நாட்டுபற்றுமிக்க இஸ்லாமியரும் கேட்டது வெள்ளையன் காதிலும் விழவில்லை பட்டேல் காதிலும் விழவில்லை

அபுல்கலாமின் இதயத்தை பாதித்த சம்பவம் இவை, அனாலும் தாங்கிகொண்டார்

பிரிந்து போகும் பாகிஸ்தான் உருப்படாது, அங்கு அடக்குமுறையே ஆளும் ஜனநாயகம் வாழாது என சொல்லி வழியனுப்பினார். அது இன்றளவும் நடக்கின்றது

சுதந்திர இந்தியாவின் கல்வி அமைச்சர் அவர்தான். நேரு போலவே அவருக்கு உலக நடப்பும், கல்வியின் அவசியமும் தெரிந்திருந்தது, பெரும் விஞ்ஞான கூடங்கள் இங்கு அமைய வேண்டுமென விரும்பினார்

இன்று இந்தியாவின் அறிவு கூடமாக கருதபடும் ஐஐடி அவர் கனவுபடி உருவானது அவர்தான் அமைத்தார்

சாதி,மதம்,இனம் கடந்த அறிவார்ந்த மாணவ சமூகம் வேண்டுமென்பது அவரின் விருப்பம்

அந்த ஐஐடி இன்றளவும் இந்தியாவின் நம்பர்1 இடத்தில் இருக்கின்றது

நாடெல்லாம் பல்கலைகழகம் அமைய பாடுபட்டார். இன்று காணும் பல்கலை கழக மானிய குழு அவரால்தான் அமைக்கபட்டது.

மருத்து கல்லூரிகள் அமைக்கவும், அதற்கு பல்கலை கழகம் அமைக்கவும் அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். இந்நாட்டில் காணும் மருத்துவ புரட்சிக்கும் அடித்தளம் அவரே

11 ஆண்டு காலம் அற்புதமான பணிகளை கல்விக்காக செய்தார், அந்த அடித்தளத்தில்தான் அப்துல் கலாம் போன்றவர்கள் பின்னாளில் வந்தனர்

அபுல்கலாம் ஆசாத் எனும் மாமனிதன் அமைத்த பாதையில் பின்பு வந்தவர்தான் அப்துல் கலாம்

இந்த இரு கலாம்களும் மறக்க முடியாதவர்கள், இத்தேச தியாகிகள்

காங்கிரஸ் கட்சி ஒரு தவறு செய்கின்றது, நேரு சாஸ்திரி காமராஜர் என தங்கள் கட்சியின் பிம்பங்களை காட்டும் அது அபுல் கலாம் ஆசாத் போன்ற மாமனிதர்களை நினைவு கொள்ள தவறுகின்றது

அதனை சரிபடுத்துதல் வேண்டும்

அவர் செய்த சாதனைகளுக்காக அன்றே பாரத ரத்னா வழங்கபட இருந்தது , ஆனால் நான் அக்குழுவில் உறுப்பினராக இருப்பதால் எனக்கு நானே விருது கொடுத்தது போல் ஆகிவிடும் என மறுத்தார் அப்பெருமகன்

அவருக்கு பாரத ரத்னா அவர் மறைவுக்கு பின்பே கொடுக்கபட்டது, 1992ல் அதுவும் ராமசந்திரனுக்கு பிறகு

காங்கிரஸ் செய்த பல தவறுகளில் பெரும் தவறு இது.

அவருக்கு மதபற்று இருந்திருந்தால் ஜின்னா எல்லாம் எழும்பியிருக்கவே முடியாது. இந்தியனாக அபுல் கலாம் நின்றிருந்ததால் ஜின்னா பாகிஸ்தான் தந்தையாக உருவானார்

இவ்வளவிற்கு மிக சிறந்த இஸ்லாமிய அறிஞர் அபுல் கலாம், மார்க்க அறிவும் ஞானமும் அவரிடம் குவிந்திருந்தது, அன்றைய நாளில் இஸ்லாமிய தலைவரும் அவரே

சில புத்தகங்கள் கூட எழுதியிருந்தார்.

ஆனால் நாடு வேறு மதம் வேறு. நான் இந்திய குடிமகன் மதத்தால் இஸ்லாமியன் என்பதில் உறுதியாக நின்றார்.

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், நேரு போலவே கொண்டாடபட வேண்டிய பெருமையும் புகழும் அபுல் கலாமிற்கு உண்டு , நேருவுக்கு சமமான சாதனையினை, தியாகத்தை அவரும் செய்திருக்கின்றார். இந்நாட்டிற்காக வாழ்ந்திருக்கின்றார்

தன் மிகசிறந்த தொலைதூர திட்டங்களால் இத்தேசத்திற்கு மகத்தான அடித்தளத்தினை அமைத்திருக்கின்றார்.

நவம்பர் 11 அவரின் பிறந்த நாள், அது தேசிய கல்வி நாள்.

ஆனால் அப்படி ஒரு நாள் இருப்பதையோ இத்தேசம் கொண்டாடுவதையோ யாராவது கண்டோமா?

ஏன் ஐஐடி மாணவர்கள் கூட அவரை நினைப்பதில்லை

நவம்பர் 14 குழந்தைகள் நாள் என கொண்டாடும் தேசம் , நவம்பர் 11ஐ மறந்துவிடுகின்றது, இது நிச்சயம் வருந்ததக்கது.

பாஜக அபுல் கலாமினை கொண்டாடாடது ஆச்சரியம் அல்ல, ஆனால் காங்கிரஸ் ஏன் புறக்கணிக்க வேண்டும்?
சரி காங்கிரஸ்தான் நினைவு கூறவில்லை, பாஜக செய்தால் என்ன?

நேருவினை நினைவு கூறுபவர்கள் இம்மாமனிதனை ஏன் புறக்கணிக்க வேண்டும்? அவரையும் கொண்டாடினால் என்ன? நிச்சயம் செய்ய வேண்டும்

பட்டேலை கொண்டாடுபவர்கள் இந்த மாமனிதனையும் கொண்டாடினால் என்ன?

இனியாவது அப்பெருமகனின் புகழை மறைக்காமல் இத்தேசம் நினைவு கூறட்டும் ,
இல்லாவிட்டால் பெரும் நன்றிகொ

ன்ற பாவத்திற்கு ஆளாகிவிடுவோம்

காலம் எவ்வளவு விசித்திரமானது

காலம் எவ்வளவு விசித்திரமானது

இங்கு நாத்திக அல்லக்கைகள் கடும் கடவுள் மறுப்பு பேச காங்கிரசும் இன்னும் பல பெரும் கட்சிகளும் மெல்ல நாத்திகத்தை சீர்திருத்தம் என பேச தொடங்கின‌

இன்று பாஜக அடித்த அடியில் திமுகவும் காங்கிரஸும் மெல்ல ஆத்திகம் பக்கம் சாய்கின்றன

இந்தியா செய்ய 70 ஆண்டுகள் ஆகியிருகின்றது

சோவியத் யூனியன் சிதறியதும் ரஷ்யர்கள் செய்த முதல் வேலை இடிந்து கிடந்த தங்கள் ஆலயங்களை சீர்படுத்தியதே

இது ஆட்சிமாற்றம் நடந்த பல நாடுகளில் சர்வ சாதாரணம் , குறைந்தபட்சம் தங்கள் இந்த மதத்து நாடு என்றாவது அறிவிப்பார்கள்

இழந்தை மீட்பார்கள், அதுவரை தொடமுடியா விஷயங்களை சீர்படுத்துவார்கள்

எல்லா நாடுகளும் உடனே செய்வதை இந்தியா செய்ய 70 ஆண்டுகள் ஆகியிருகின்றது, அதிலும் தாமதமாக இருந்திருகின்றோம் அல்லது அப்படி வைத்திருந்தார்கள்

மறைந்த சேஷனுக்கு உலகளாவிய அஞ்சலி காட்சிகள்…

அவரும் அவர் எச்சரிக்கையும்

இந்திய நாட்டின் அரசியலமைப்பில் கைவைத்தால் திமுக பொறுக்காது : ஸ்டாலின் எச்சரிக்கை

370ம் சட்டபிரிவு நீக்கம், ராமர் கோவில் தீர்ப்பினை எல்லாம் இவரை கேட்டுகொண்டுதான் , இவர் ஒப்புதல் பேரில்தான் செய்தார்கள் என்பது வரலாறு

அந்த பாகிஸ்தான் மேலான தாக்குதலும் இவராலே ஒப்புதல் அளிக்கபட்டது இல்லாவிட்டால் நடந்திருக்காது.

ஏன் சீனத்து ஜின்பெங் என்பவரே “அய்யா சாமி வரலாமுங்களா?” என இவரிடம் கேட்டுவிட்டுத்தான் மாமல்லபுரம் வந்தார்.

அவரும் அவர் எச்சரிக்கையும்

புரிய முயற்சித்தால் தலைதான் சுற்றும்

மனித கழிவினை மனிதனே அகற்றுவதா இது சமூக கொடுமை அல்லவா? இதை கண்டித்த இயக்கம் இது, சமூக நீதி இயக்கம் இது என சொல்வதும் திமுகவினரே

அந்த நித்யா என்பவர் கலைஞருக்கு எல்லாமுமாய் இருந்தான், கருணாநிதிக்கு எல்லாம் அவனே அனுதினமும் எடுத்து போட்டதுவரை அவனே என கண்ணை கசக்கியும் கொள்கின்றனர்

மனிதனை மனிதன் இழுப்பது சுயமரியாதை இல்லை அதனால் கைரிக்சாவினை திமுக ஒழித்தது கலைஞர் ஒழித்தார் என்கின்றார்கள்

சங்காராச்சாரியார் பல்லாக்கு பவனி கூட மனிதனை மனிதன் சுமப்பதா என திமுக கேட்டதால் நின்றுவிட்டதாம்

அதே நேரம் தன் சக்கர நாற்காலியினை தள்ளிய அந்த ட்ரோலி பாய்ஸ்க்கு கலைஞர் வீடெல்லாம் கொடுத்தார் என்கின்றார்கள்

அவனுக கொள்கையே புரியவில்லை, புரிய முயற்சித்தால் தலைதான் சுற்றும்

உண்மைகள் உறங்காது, பொய்மையும் கயமையும் வெல்லாது

18 வயதில் கருணாநிதி ஏ பார்ப்பானியமே, ஏ பண்ணையாரே, ஏ காங்கிரஸே என கேள்வி கேட்டால் அது புரட்சி, திராவிட எழுச்சி

அதே கேள்விகளை மதன் ரவிசந்திரன் என்பவர் இளவயதிலே கேட்டால் அவரை வேலையினை விட்டு விரட்டுவார்கள், ஓட ஓட அடிப்பார்கள்

மாரிதாஸ் கேட்டால் கொல்வோம் என்பார்கள்

ஆக வரலாறு கூறும் உண்மை என்ன?

அன்றே அண்ணாவினையும் கருணாநிதியினையும் பிராமண மற்றும் இந்துசமூகத்தால் ஓடவிட்டு அடித்திருந்தால் தமிழகத்தில் இவ்வளவு குழப்பம் மிஞ்சி இருக்காது

ஆக பிராமண மற்றும் இந்து சமூகத்துக்கு பெருந்தன்மை இருந்தது, தங்களிடம் உண்மை உண்டு என்ற நம்பிக்கை இருந்தது அவர்கள் போக்கில் இருந்தார்கள்

இன்றை திமுகவிடம் உண்மையும் இல்லை , பெருந்தன்மையுமில்லை அது அஞ்சி பதறுகின்றது

உண்மைகள் உறங்காது, பொய்மையும் கயமையும் வெல்லாது.