என்னய்யா இது?

என்னய்யா இது?

ராஜிவ்காந்தியினை கொன்ற சைமன் கதையினை விட காமராஜரை கொன்ற கருணாநிதி கதை சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கின்றது

அதே கருணாநிதி இனி நெல்லை கண்ணனையும் சோலி முடித்துவிடுவார் போல..

https://m.facebook.com/story.php?story_fbid=2592425347502205&id=100002042948330

உலகில் எங்குமே நடக்காத ஒரு விஷயம்..

உலக வரலாற்றை ஊன்ற பார்க்கின்றோம்

எகிப்தின் பண்டைய மதம் ஒழிக்கபட்டது, அதை இனி நினைத்து கூட பார்ப்பார் இலர்

பாபிலோனின் தொன்பெருமையும் அதன் பண்டைய மதமும் அடையாளமும் பெரிது, அதுவும் விழுங்கபட்டாயிற்று, இனி அப்படி ஒன்று இருந்ததே அம்மக்களுக்கு அறியமுடியா அளவு நிலை மோசமாயிற்று

ரோமை சாம்ராஜ்யத்தின் பெருமைகளும் அடையாளங்களும் ரோமில் இருந்தன, கிறிஸ்தவம் அதை விழுங்கிற்று, ரோமை மதத்தின் பெருமைகளும் அடையாளமும் புதைக்கபட்டே கிறிஸ்தவம் தன் கட்டுமானத்தை கட்டி முடியும் சூட்டிற்று இனி அதை எடுப்பார் இலர்

கிரேக்கத்தின் நிலையும் அதுவே

அவர்கள் கடவுளும் மதமும் பண்டைய கலாச்சாரமும் எங்கே? எல்லாம் இனி மீளமுடியாதவாறு ஆழபுதைக்கபட்டாயிற்று

கிழக்காசியாவின் நிலையும் அதுவே, பல விஷயங்களின் மேல் சமாதி கட்டியாயிற்று இனி தோண்டி கூட பார்க்கமுடியாது

ஒரு விஷயமோ மதமோ அடையாளமோ விடைபெற்றால் பெற்றதுதான், அதை மீட்டெடுத்தல் என்பது முடியாத விஷயம்

இந்த பரந்த உலகில் அடையாளத்தை இழப்பது சுலபம்,

இழந்த வலியினை கணலாக பாதுகாத்து, நெஞ்சோடு வளர்த்து பல நூறாண்டுகளாக கடத்தி வந்து போராடி மீட்டெடுத்தல் என்பது கொஞ்சமும் சுலபம் அல்ல‌

இந்துமதம் அந்த மாபெரும் சாதனையினை ஓசைபடாமல் செய்திருக்கின்றது

ஆனானபட்ட இஸ்ரேலாலும் முடியாததை கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் அமைதியாக செய்துவிட்டு யானை போல் அமைதியாய் நிற்கின்றது

பெரும் தர்மமும் அதன் வலிமையும் தாங்கி நின்றாலொழிய இந்த மீட்பு சாத்தியமில்லை

அடையாளத்தை தொலைத்த இனமும் மதமும் இந்துமதத்தை நோக்கி ஏக்க பெருமூச்சுவிடுகின்றன, எங்களை மீட்பது யார் என அவை ஓலமிடுகின்றன‌

ஆனால் அவற்றுக்கு விடுதலை இல்லை, அடிப்படையுமில்லை

இந்து மதம் ஆன்மாவில் போதித்து இயற்கையும் அறிவிலும் வாழ்வியலும் ஒட்டிவந்த மதம் என்பதால் அந்த ஆதாரம் லட்சோபலட்சம் ஆண்டுகள் இங்கு காலூன்றிய வலு என்பதால் சிலிர்த்துகொண்டு எழும்புகின்றது

தெய்வத்தின் அனுகூலமின்றி இதெல்லாம் சாத்தியமில்லை, இப்படியான வாய்ப்புகள் மொத்தமாய் கூடுவது தெய்வத்தின் அனுகிரகம் அன்றி வேறல்ல‌

உலகின் மதங்களுக்கெல்லாம் தாய் புதிய பார்வையினை உலகில் பெற்றிருக்கின்றது, ஆயிரம் தத்துவங்களை அது போதிக்கின்றது

நிச்சயம் அது செய்திருப்பது மாபெரும் சாதனை, உலகில் எங்குமே நடக்காத ஒரு விஷயம்..

உலகம் புதிதாய் அதை படிக்க தொடங்கியும் இருக்கின்றது

போராட்டம் நடத்தவா எம்பிக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் வழங்கபடுகின்றது?

கன்னியாகுமரி பகுதியில் சாலை சரியில்லை என்பதற்காக வசந்தகுமாரும் 5 எம்.எல்.ஏக்களும் விரைவில் போராட்டம் செய்தி

மக்களின் பிரச்சினைகளை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத்தான் இவர்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்

ஆனால் இவர்கள் டெல்லியிலும் , சென்னை கோட்டையிலும் செய்யவேண்டிய போராட்டத்தை இந்த முட்டுசந்தில் நின்று செய்தால் என்ன நியாயம்?

ஆக கன்னியாகுமரி மக்களே ரோட்டில் இவர்கள் போராட வந்தால் அடித்து விரட்டி , போராடவேண்டிய இடத்தில் போய் போராடு போ என விரட்டுங்கள்

அதுதான் சரி

ஏன் உங்களுக்கு போராட தெரியாதா? உங்கள் வாக்குகளையும் வாங்கிவிட்டு இவர்கள் ஏன் இந்த நாடக போராட்டத்தை நடத்தவேண்டும்,

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடவா வாக்களித்தார்கள்?

இல்லை போராட்டம் நடத்தவா எம்பிக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் வழங்கபடுகின்றது?

இதெல்லாம் திமுகவின் திராவிட நியாயங்கள்

வடக்கே எவனோ ஒரு சாமியார் கலைஞர் தலையினை சீவுவேன் என்றதும் அய்யய்யோ இந்துத்வா மிரட்டல், அய்யய்யோ பார்ப்பானிய மிரட்டல் என கதறல்

எவனோ வடக்கத்திய சில்லுண்டி மாட்டுகறிக்கு தகறாறு செய்தால் அது பாஜகவின் அராஜகம்,

எங்காவது மபி உபி பக்கம் இரு சாதிகள் மோதி கொண்டால் அது பாஜக பிராமணிய அராஜகம் மற்றும் திட்டமிட்ட சதி

எங்கோ கவுரவ கொலை நடந்தால் அதெல்லாம் பாஜக அராஜகம், சங்கிகளின் கொலைவெறி

அந்த ஸ்டெயின்ஸை கொன்றவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை எனினும் அது ஆர்.எஸ்.எஸ்ஸின் சதி

இப்படி எங்கோ எவனோ செய்வதற்கெல்லாம் பாஜக . ஆர்.எஸ்.எஸ் மோடி அமித்ஷாவெல்லாம்எல்லாம் பொறுப்பு

ஆனால் திமுகவினர் மிக பகிரங்கமாக மாரிதாஸையும் மதனையும் கொலைசெய்வதாக மிரட்டினால் அதற்கும் திமுகவுக்கும் திமுக தலைவருக்கும் தொடர்பே இல்லையாம்,

திமுகவினை தாண்டிய தனிபட்ட விஷயங்களாம்

இதெல்லாம் திமுகவின் திராவிட நியாயங்கள்

பெரிய இடத்து உறவுகள் இப்படித்தான்

அயோத்தி வழக்கை நடத்திய வழக்கறிஞர் கமலஹாசனின் மாமன் மகன் என்கின்றது செய்தி

பொதுவாக அழிச்சாட்டியம் செய்பவர்களின் மாமன் மகன்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள்

நாம் தமிழர், இந்தி எதிர்ப்பு இன்னும் ஏகபட்ட இம்சைகளை செய்யும் பத்திரிகை தினதந்தி, அந்த ஆதித்தனுக்கு பின் சிவந்தி ஆதித்தனும் அதையே செய்தார்

ஆனால் சிவந்தியின் மாமன் மகனான சிவநாடார் டெல்லியில் படித்து இந்தி எல்லாம் படித்து பெரும் தொழிலதிபராகி பெரும் உயரம் சென்றுவிட்டார், இங்கே தினதந்தி தந்திடிவி எல்லாம் அதே கோஷத்துடன் உருண்டு கொண்டிருக்கின்றது ஒன்றும் உருப்படியில்லை

முக ஸ்டாலின் காவியினை ஒழிப்போம் இந்துத்வாவினை ஒழிப்போம் என சொல்லிகொண்டிருக்க அவரின் மாமன் டிவியான சன்டிவி ஜோதிரம், நட்சத்திர விளக்கம், சமய ரீதியான விஷயங்கள் என அடி பின்னிகொண்டிருக்கின்றது, தயாநிதி மாறன் எப்பொழுது பாஜக பக்கம் ஓடுவாரோ தெரியாது

பெரிய இடத்து உறவுகள் இப்படித்தான்

அண்ணாவும் கருணாநிதியும் இதையா சொல்லி கொடுத்தார்கள்?

பத்திரிகையாளர் மதனுக்கும் , மாரிதாஸ் என்பவருக்கும் திமுக பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுவது ஏற்கமுடியாதது

அரசியல் என்றால் விமர்சனங்கள் வரும், விமர்சனத்துக்கு கொலைமிரட்டல் என்பதெல்லாம் கோழை அரசியல்

பஞ்சமி நிலத்தின் மூலபத்திரம் இன்னும் வரவில்லை, பட்டாவினை காட்டிவிட்டு பத்திரத்தை காட்டமாட்டேன் என்பதெல்லாம் சரியல்ல‌

மிசாவில் ஸ்டாலின் கைதான ஆதாரம் இன்னும் ஒருவரும் கொடுக்கவில்லை, அமெரிக்காவில் இருக்கின்றது அண்டார்டிக்காவில் இருக்கின்றது என்பதெல்லாம் முறையான பதிலா?

சாதாரண கேள்விகளுக்கே கொலைமிரட்டல் வரை செல்லும் திமுகவிடம் ஆட்சி சிக்கினால் என்னவெல்லாம் செய்வார்கள்?

இவர்கள் எல்லோரையும் விமர்சிப்பார்கள், ஆனால் இவர்களை யாரும் எதுவும் விமர்சித்தால் நியாயமான ஆதாரங்களை கேட்டால் கொல்வோம் என்பது என்ன வகை?

தமிழ்நாட்டு அரசியல் இவர்களுக்கு மட்டும் குத்தகைக்குவிடபட்டிருகின்றதா என்ன?

மத்திய அரசை,மாநில அரசை எல்லாம் கண்டிக்கும் திமுக தலமை தன் சொந்தகட்சிக்காரனை இன்னும் தட்டி வைக்காததும் கண்டிக்காததும் மகா சோகம்

தொண்டனை கொலைவெறியினை தூண்டிவிடும் தலைவன் அல்லது தொண்டர்களின் கொலைவெறியினை தட்டிவைக்கா தலைவன் என குரல்களும் கண்டிப்பும் ஸ்டாலினை நோக்கி திரும்புகின்றது

மாரிதாஸுக்கும் மதனுக்கும் சிறு சிராய்ப்பு நேர்ந்தாலும் திமுகவும் அதன் தலமையும்தான் பொறுப்பு

திமுகவினரின் மிரட்டல் ஒரு தீவிரவாத கும்பலின் , கட்டபஞ்சாயத்து கும்பலின் மிரட்டல் தொணியில் இருக்கின்றது என்பது வெறுக்கதக்க ஒன்று

இவர்களின் வரலாறும் மோசமானது இந்திரா மேலான தாக்குதல் முதல் ராஜிவ் கொலையில் சிக்கியது வரை, அதன் பின்பும் ஏராளமான கொலைபழிகள் உண்டு

தா.கிருட்டினன் கொலை முதல் மதுரை பத்திரிகையாளர் கொலை, லீலாவதி கொலை போல ஏதும் அசட்டுதனமாக திட்டமிட்டால் திமுக என்றொரு கட்சிக்கே கேடாய் முடியும்

திமுக தலமை இதை உணர்வது நல்லது இல்லையேல் அது கொடுக்கும் விலை மிக அதிகமாய் இருக்கும்.

நாங்களே தமிழ்நாட்டின் ஏகபோக பிரதிநிதிகள், நாங்கள் எல்லோரையும் விமர்சிப்போம் விரட்டுவோம் ஆனால் எங்களை யாரும் கேள்விகேட்டால் கொல்வோம் குத்துவோம் என்பதா திராவிட கொள்கை?

அண்ணாவும் கருணாநிதியும் இதையா சொல்லி கொடுத்தார்கள்?

ஊழல் மட்டுமல்ல கொலையும் செய்ய கற்றுகொடுத்த இயக்கமா திமுக?

மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில்

மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில் எல்லோரும் அறிந்த ஒன்று, அந்த மலையும் அதில் இருக்கும் அற்புதமான குகையும் பிரசித்தி பெற்றவைஅந்த குகை உலகின் அற்புதமான இடங்களில் ஒன்று, அதில் நின்றாலே ஒருவித தெய்வீக தன்மை மனதில் குடியேறும், ஏன் அக்கால முனிகள் குகையினை தேடி தவமிருந்தார்கள் என்பது அந்த இடத்தில் அற்புதமாக தானே புரியும்அந்த பத்துமலை வளாகம் இப்பொழுது தன் தெய்வாம்சத்தை கூட்டிகொண்டே செல்கின்றதுஅந்த வளாகத்தில் சிவன் கோவில் ஒன்று மீனாட்சியம்மன் சந்நிதி, அறுபடை வீடுகளுக்கான சந்நிதி என ஏற்கனவே உண்டு,சனிபகவானுக்கும் தனி கோவில் உண்டுஇப்பொழுது ஆஞ்சநேயருக்க்கும் அப்படியே திருப்பதி ஏழுமலையானுக்கும் தனி கோவில் அமைத்திருக்கின்றார்கள்அந்த பெருமாள் கோவில் சிறியது ஆனால் பெரும் பீடமாக அதை எழுப்பி அதில் அழகான ஆலயம் அமைத்திருக்கின்றார்கள், பெருமாள் 12 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சிதருகின்றார்நேற்று அந்த கும்பாபிஷேகம் நடந்தது, அறை நண்பன் அழைப்பின் பேரில் சென்றாயிற்றுசும்மா சொல்ல கூடாது, அக்காலத்து மன்னர்கள் இப்படித்தான் பெரும் செலவில் கும்பாபிஷேகம் நடத்தி இருப்பார்கள் என்று தோன்றிற்று,அவ்வளவு விற்பனர்கள் தனியாகசாலையில் பல நாட்களாக யாகம் நடத்தி அந்த யாகத்தின் பலனை நேற்று கும்பாபிஷேமாக முடித்தார்கள்கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது வானிலிருந்து ஹெலிகாப்டர் பூவெல்லாம் தூவியது, மென்மையான அப்பூக்கள் மெதுவாக கீழிறங்கிய காட்சி அவ்வளவு அழகானதுசைவ வைணவம் என்றெல்லாம் இல்லை, இந்த வளாகத்தில் முருகன், சிவன், திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் ஆஞ்சநேயர் என எல்லோருக்கும் கோவில் என வைத்துவிட்டார்கள்,அருகில் ஒரு குகையில் ராமாயண காட்சிகள் எல்லாம் சிலையாய் இருக்கின்றன‌அந்த கும்பாபிஷேகத்தை காண அவ்வளவு அழகாயும் உருக்கமாகவும் இருந்தது, கும்பாபிஷேகம் நடக்க நடக்க அழகான செய்திகளை உருக்கமாக சொல்லிகொண்டே இருந்தார்கள்அந்த ஆலயத்தில் திருவரங்க பெருமாள் பள்ளிகொண்ட கோலமும் அழகாய் வரையபட்டிருக்கின்றது, பத்மாவதி தாயாருக்கு தனி சந்நதி உண்டுமலேசிய இந்துக்களை போல ஆலயங்களை பராமரிக்கவும் முடியாது, சம்பிரதாயங்களை பின்பற்றவும் முடியாதுசிறிய ஆலயம் என்பதால் பராமரிக்க எளிது என்றல்ல, மிக சிறந்த கவனத்தை அதில் செலுத்துகின்றார்கள், பழமை மாறாமல் புதுமைக்கு வருவது என்பது அவ்வளவு அழகான விஷயம் அதை செய்கின்றார்கள்தமிழக இந்து ஆலயங்கள் பிரமாண்டமானவை எனினும் மலேசிய இந்துமக்கள் தொகையினை விட தமிழக இந்து மக்கள்தொகை பல கோடிகள் அதிகம் என்பதால் அங்கும் அதை அழகாக செய்யலாம்ஆனால் அறநிலையதுறை எனும் அரக்கனை வீழ்த்தாமல் சாத்தியமில்லைமலேசியாவில் இந்து ஆலயங்களில் சுதந்திரமானவை, பக்தர்கள் தேவஸ்தான போர்டுகள் மூலம் அப்படி பராமரிக்கின்றார்கள், காலத்தால் பிந்திய ஆலயங்கள் எனினும் அவ்வளவு அழகு அவ்வளவு பொலிவு அவ்வளவு சுத்தம்முறையான பூஜைகள், துல்லியமான அர்ச்சனை மந்திரங்கள், சர்வ சுத்தமான சாங்கியங்கள்அப்படிபட்ட ஆலயங்களில் தெய்வம் வாழும் , அதை வழிபடும் பக்தர்களும் வாழ்வார்கள்மலேசியாவில் எல்லா ஆலயங்களும் சிறப்பானவை, ஆனால் தெப்பகுளம் மட்டும் மிஸ்ஸிங்.பத்துமலை அடிவாரத்தில் ஒருகுளம் இருக்கின்றது, மீன்கள் பெருகிகிடக்கின்றன , அதை தெப்பமாக்கலாம், சொல்லமுடியாது அவர்களிடமும் பெரும் திட்டம் இருக்கலாம்கும்பாபிஷேக காட்சிகளும் புது ஆலயமும் அக்கால தமிழக மன்னர்கள் செய்த திருப்பணி காலத்துக்கும் காட்சிகளுக்கும் இழுத்து சென்றன, எப்படி எல்லாம் சிரமபட்டு உருவாக்கி இருப்பார்கள்? எவ்வளவு மக்களும் உழைப்பும் கலைகளும் வித்தைகளும் கொட்டபட்டிருக்கும்எவ்வளவு விற்பனர்கள் உழைத்திருப்பார்கள்?நினைவு அப்படியே வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சென்றது, அது திருசெந்தூருக்கு அடுத்தபடி குறிப்பிடதக்க முருகன் ஆலயம். ஆனால் ஏனோ பெரும் அடையாளமில்லை இவ்வளவுக்கும் அருணகிரி நாதர் பாடிய தலம், குகை ஆலயம் அதுஅது வரலாற்றில் மிக மிக முந்தியது, திருசெந்தூர் ஆலயத்தை போன்றே பழமையானது, விஷயம் என்னவென்றால் அது நாயக்கமன்னர்களின் ஆட்சியிலும் பாண்டியனின் ஆட்சியில் நீடித்திருக்கின்றதுவள்ளியூரில் ஒரு பாண்டிய அரசன் இருந்திருக்கின்றான் அவனின் கட்டுபாட்டில் ஏதோ ராஜதந்திர உரசலில் அந்த ஆலயம் திருசெந்தூர் அளவு தெரியாமல் போய்விட்டது எனினும் முருக பக்தர்களுக்கு அது திருதலமேவள்ளி பிறந்தது அந்த பகுதியாக இருக்கலாம், காரணம் அதனை அடுத்த மலை குறத்திமலை என்றுதான் இன்றும் அழைக்கபடுகின்றதுவள்ளியினை முருகன் அந்த பகுதியில் தான் மணந்திருக்க வேண்டும், ஏகபட்ட அடையாளங்கள் அங்கு சாட்சியாய் நிற்கின்றதுதிருப்பதி திருகாளத்தி என அடுத்தது பண்டைய சைவ வைவண தலங்கள் உள்ளது போல நம்பிமலை நம்பியாழ்வார் ஆலயமும் வள்ளியூர் முருகபெருமான் ஆலயமும் அமைந்திருப்பது பன்னெடுங்கால தொடர்ச்சிஅங்கு பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்திருக்கின்றனர், சரவண பொய்கை மற்றும் தெப்ப குளமெல்லாம் உண்டு, அதற்கு நீர்வழி பாதையும் செய்திருக்கின்றார்கள்அங்கு வருடாவருடம் தெப்ப திருவிழா நடைபெறும், ஆனால் சில ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகளை செய்யும் டிவிஎஸ் நிறுவணம் இழுத்துகொண்டிருப்பதால் இந்த ஆண்டும் தெப்பதிருவிழா இல்லை என்கின்றார்கள்கார்த்திகை மாதம் முருகபெருமானை அந்த ஆலயம் கொண்டாடும் அழகே சுவாரஸ்யமானது அந்த நிகழ்வின் கொண்டாட்டமே தெப்ப திருவிழாஅது தள்ளிசெல்வது அம்மக்களுக்கு வருத்தமே, நேற்றைய கும்பாபிஷேகம் காணும் பொழுது அதுவும் நினைவுக்கு வந்ததுநிச்சயம் பத்துமலை பகுதி தமிழர் மலேசியாவுக்கு குடிவந்தபின்பே இப்படி மாறி வந்திருக்கும் கிட்டதட்ட 300 ஆண்டுகள் முன்னால் கூட அது இப்படி இருந்திருக்கமுடியாதுஅருமை தமிழகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஆலயங்கள் கூட முறையாக பேணபடவில்லை என்பது ஒருவித வலிகாலம் எல்லாவற்றையும் சரி செய்யும்அந்த பத்துமலை எல்லா நாட்டு மக்களும் வரும் இடம், உலகின் ஒவ்வொரு இனத்தையும் அங்கு பார்க்கலாம், மிகபெரும் சுற்றுலா தலமும் கூட‌எனினும் ஆலயத்தில் நுழையும் வெளிநாட்டவர் சில சம்பிரதாயங்களை கடைபிடிக்க போதிக்கபடுகின்றது அவர்களும் மகிழ்வாக ஏற்கின்றார்கள், ஐரோப்பியர் அமெரிக்கரும் நெற்றியில் குங்கும விபூதியுடன் வலம் வருவதும், வெள்ளை குழந்தைகள் ஓடி வந்து ஆரத்தி தட்டை வணங்குவதும் வாடிக்கைஎம்மை நோக்கி ஒரு ஜப்பானிய பெண் வந்தாள் இந்த உறங்கும் புத்தர் எங்கே என விசாரித்தாள், நாமோ இது இந்து ஆலயம், உறங்கும் புத்தர் வேறு பவுத்த ஆலயங்களில் இருப்பார் என சொல்லிபார்த்தோம்அவளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எமக்கு ஜப்பானிய மொழி தெரியவில்லை,ஆனாலும் அவள் அந்த புத்தனை விடுவதாக இல்லை, கையில் வைத்திருக்கும் படம் அதாவது அவளின் டூரிஸ்ட் கம்பெனி கொடுத்த படத்தை காட்டினாள்நாம் அவளுக்கு 10 நிமிடம் பாடம் எடுத்தோம், அவளோ கடைசியில் “ஸ்லீப்பிங் புத்தா ஐ லைக்” என சொல்லிவிட்டு குகைக்குள் ஓடிவிட்டாள், அது ராமயண காட்சிகளை சிலையாய் அமைத்திருக்கும் சிலை, பல நூறு சிலைகள் உண்டு, பார்க்க வேண்டிய இடம் அது.கடைசியில் நாம் கிளம்பும்பொழுது எதிரே வந்தாள் , “, வாட் எ பியூட்டி,. வாட் எ புத்தா, ஹிஸ் டிசிப்பிள் ஆல்சோ கியூட்” என மிக மகிழ்வாய் சொல்லிவிட்டு அவள் எடுத்த படத்தை காட்டினாள்அதில் கும்பகர்ணன் சிலை முன் அவள் சிரித்து கொண்டிருந்தாள், அச்சிலை மகா பிரமாண்டமானதுஆம் உறங்கி கொண்டிருந்த கும்ப கர்ணன் அவளுக்கு தூங்கும் புத்தனாய் தெரிந்திருக்கின்றான், அருகில் நின்ற அரக்கர்கள் புத்தனின் சீடனாய் தெரிந்திருக்கின்றார்கள்உறங்கும் விஷ்ணுவினை தூங்கும் புத்தனாய் மாற்றிகொண்டது புத்தமதம், அவளுக்கோ உறங்கும் கும்பகர்ணன் புத்தனாய் தெரிந்திருக்கின்றான்அவளுக்கு விளக்கி சொன்னால் மட்டும் புரியவா போகின்றது?”ஆம் இவரே தூங்கும் புத்தன், இதை பெரிதாக மாட்டி அனுதினமும் வணங்கு” என சொன்னோம் , “டெபனட்லி டெபனட்லி” என சொல்லிவிட்டு மான்குட்டி போல ஓடிகொண்டிருந்தாள்