விஷயம் புரிந்தது இவ்வளவுதான்

எவ்வளவுதான் படித்தாலும் அந்த செய்தி வடிவேலு காமெடி போல் தலையினை சுற்றவைக்கின்றது

விஷயம் புரிந்தது இவ்வளவுதான்

ஒரு திருப்பூர் பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்தாகியிருக்கின்றது, அம்மணியினை தூத்துகுடிக்காரன் அழைத்து வந்து குடித்தனம் நடத்தியிருக்கின்றான், அம்மணி அருகிலே இன்னொருவனுடன் தனிகுடித்தனம் நடத்தியிருக்கின்றது

ஒரு கட்டத்தில் இது தெரியவர அம்மணி இரண்டாமவனுடன் குடித்தனம் நடத்த கிளம்பி, அடுத்தால் ஒருவனுடன் ரகசிய தொடர்பில் இருந்திருகின்றது

அங்கும் சிக்கலாக இது சங்கிலி தொடர்போல 10க்கு மேற்பட்ட கண்ணிகளில் சிக்கியிருக்கின்றது, எவனோ ஒருவன் போட்டு தள்ளிவிட்டான்

இப்பொழுது 10 பேரையும் குந்த வைத்து பின்னிகொண்டிருக்கின்றது தூத்துகுடி காவல்துறை, அவளை விவாகரத்து செய்த முதல் கணவன் மட்டும் நிம்மதியாயிருக்க, லைசென்ஸ் இல்லாமல் ஆளாளுக்கு குடும்பம் நடத்திய அல்லது முயற்சித்த அனைவரும் கம்பி எண்ணிகொண்டிருக்கின்றார்கள்

கொடுமையிலெல்லாம் பெரும் கொடுமை பெண்ணால் விளையும் கொடுமையே என்பது இதுதான் போலிருக்கின்றது

இரு பெரும் பிராடு செல்வங்கள்

தமிழ்நாட்டில் இரு பெரும் பிராடு செல்வங்கள் இருக்கின்றன..

ஒன்று ஓ. பன்னீர் செல்வம் இன்னொன்று பனிமலர் பன்னீர்செல்வம்

பாலின சமத்துவத்தை பொய் சொல்வதிலும் பேணிகாக்கின்றது தமிழ்நாடு..

கொட்டும் பொய்யினில் ஆணுக்கு பெண் இளைத்ததில்லை என்று கும்மியடி..

இதற்கு மேலும் என்ன ஆதாரம் தர முடியும்?

அந்த கடிதம் கலைஞர் கருணாநிதி எழுதியது என்பதற்கு மகா முக்கியமான ஆதாரம் தருகின்றோம்ஆம், அதில் ஆங்கில நாட்காட்டிபடி வருடமும் மாதமும் தேதியும் சொல்லபட்டிருக்கின்றது, திருவள்ளுவர் ஆண்டோ தமிழ் மாதமோ சொல்லபடவில்லைஇதுதான் அது கலைஞர் கருணாநிதியின் கடிதம் என்பதற்கு பெரும் ஆதாரம்ஆம் அவர் வள்ளுவன் ஆண்டு, தைமாதம் தமிழ்புத்தாண்டு என தமிழர்களைத்தான் குழப்புவார் ஆனால் தன் பிறந்தநாள், பெரியார் நாள், அண்ணா பிறந்தநாள்,கட்சி தொடங்கிய நாள் என எல்லாவற்றையும் ஆங்கில நாட்காட்டி படிதான் செய்வார்தமிழ்நாட்காட்டி பக்கமே வரமாட்டார், அவரின் இருமொழி கொள்கை அப்படி. எழுத ஒரு மொழி காலண்டருக்கு ஒரு மொழிஇன்னொரு ஆதாரம் தருகின்றோம், அவர் தமிழறிஞர்தான் வடமொழி எதிரிதான்,ஆனால் ஸ் எனும் வார்த்தைமட்டும் வடமொழியில் அவருக்கு பிடித்தமான வார்த்தை, அதை அவர் மட்டும் பயன்படுத்த திமுக பொதுகுழு அனுமதி வழங்கியிருந்தது அதனால் “ஸ்”டாலின் என எழுதியிருக்கின்றார்ஆக இனி அது கருணாநிதியின் கடிதம் என்பதை நம்ப உங்களுக்கு மிக எளிதாக இருக்கும் அல்லவா?இதற்கு மேலும் என்ன ஆதாரம் தர முடியும்?

அந்த கடிதம் எழுதபட்டது உண்மை

அந்த கடிதம் எழுதபட்டது உண்மை, அதில் இருப்பது கலைஞரின் கையெழுத்தேஅது 1977ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்பொழுது மிசா முடிந்து தமிழக தேர்தலும் முடிந்து ராம்சந்தர் முதல்வராயிருந்தார்காமராஜரையே விரட்டிய நான் ராம்சந்தரை விடுவேனா என வரிந்துகட்டிய கருணாநிதி ஒரு பெரும் போராட்டம் நடத்தினார், கொஞ்சமும் யோசிக்கா ராமசந்திரன் நான் காமராஜர் போல நல்லவன் இல்லை என் ஆட்சியில் வாலாட்டினால் இதுதான் கதி என சட்டென பிடித்து உள்ளே போட்டார்அந்த கைது நடக்கும் என கருணாநிதி எதிர்பார்க்கவில்லை(இருவர் படத்தில் இக்காட்சி வரும்)அப்பொழுது எழுதபட்டதுதான் இக்கடிதம்(இக்கடிதத்தின் உண்மை தன்மையினை ஏற்றுகொள்கின்றோம்,உதயநிதி பிறந்த மறுநாள் எழுதபட்டிருக்கின்றது, துர்கா ஸ்டாலினை ஷாந்தா என்றுதான் அப்பொழுது அழைப்பார்கள், ஆவணத்திலும் ஷாந்தா எனும் துர்கா என்றுதான் பெயர் உண்டு)ஆனால் அப்பொழுது மாதகணக்கில் எல்லாம் கருணாநிதி சிறையில் இல்லை, சம்பிரதாய எச்சரிக்கைக்கு பின் விடுவிக்கபட்டார்அதற்குள் அதுவும் சென்னையில் இருக்கும் சிறையில் இருந்து சென்னையில் இருக்கும் மகனுக்கு ஏன் கடிதம்?மத்திய சிறைக்கும் கோபால புரத்துக்கும் இடையில் பெரும் மலையும், கடலும் ,பெரும் தொலைவு எல்லாம் இல்லைபின்னரும் ஏன் கடிதம்?ஒருவேளை தான் கைதுசெய்யபட்டது மகனுக்கு தெரிந்திருக்காது காரணம் அவன் பத்திரிகையோ ரேடியோவோ பார்ப்பவனும் அல்ல , முரசொலி கட வாசிப்பவனுமல்ல, வீட்டில் தங்குபவனும் அல்ல, கட்சிக்காரனுடன் பழகுபவனும் அல்ல அதனால் கடிதம் எழுதுவதை தவிர வேறு வழி இல்லை என முடிவு செய்திருப்பாரோ?நடக்கும் காட்சிகளை கண்டால் அப்படித்தான் யூகிக்க முடிகின்றதுஇந்த கோணத்தில் யோசியுங்கள், உங்களின் எல்லா சந்தேகமும் பறந்தே போகும்…

இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி

வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் : எடப்பாடி சீற்றம்

அட, கட்சியின் நிறுவணரையும் முன்னாள் தலைவினையும் இப்படி பகிரங்கமாக
கலாய்க்க தனி தைரியம் வேண்டும்

இதனால்தான் சொல்கின்றோம் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க..

தெரியாமல் சிக்கி கொண்டோமோ என தவிப்பதும் நிஜம்

தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்திலா நெறிகட்டும் என்பார்கள்இதோ கட்டியிருக்கின்றது, முரசொலிக்கு வந்த சிக்கலை சிரமேற்கொண்டு தாங்குகின்றது நக்கீரன்ஸ்டாலின் மிசாவில் கைதானார் என முரசொலி சொல்லாமல் நக்கீரன் சொல்கின்றது, கலைஞர் எழுதிய கடிதமும், சிறையில் ஸ்டாலின் சாட்சியாக நின்ற ஆதாரத்தையும் அது சொல்கின்றதுஇதை முரசொலி மற்றும் கலைஞர் டிவி சொல்லாமல் நக்கீரன் ஏன் சொல்கின்றது?விஷயம் இல்லாமில்லைஅதாவது விஷயம் உண்மை இல்லை என்றால் சந்திசிரித்துவிடும் என்பதால் திமுகவின் அதிகார பூர்வ ஏடுகள் அதை தவிர்க்கின்றனஆம் நக்கீரனின் செய்தியில் சிறையில் நடந்த சில குற்றங்களுக்கு ஸ்டாலின் சாட்சியாக விசாரிக்கபட்டிருக்கின்றார்ஆம் ஸ்டாலின் சிறையில் இருந்தது நிஜம், ஆனால் மிசா கைதியாக இருந்தாரா என்பதுதான் கேள்வி, நக்கீரனோ அவர் சாட்சியாக நின்றார் ஆனால் எந்த வழக்கில் கைதானார் என்பது எமக்கு தெரியாது என நழுவுகின்றதுஇப்படி சிக்கல் வரும் என தெரிந்துதான் பந்தை நக்கீரன் பக்கம் திருப்பிவிட்டது திமுக, நக்கீரன் பழி சுமக்கின்றதுநக்கீரன் ஊழியருக்கு சம்பளம் போடவில்லை என்பதும் போனஸ் கொடுக்கவில்லை என்பதும் கடந்தமாத செய்திகள்இதற்குமேல் நீங்களே எல்லா விஷயத்தினையும் பொருத்திபாருங்கள் அவ்வளவுதான்நக்கீரன் மட்டுமல்ல திமுகவின் அல்லக்கைகள் அனைத்துமே இந்த சிலுவையினை சுமக்கின்றன‌எல்லாம் ஸ்டாலின் சிறையில் இருந்ததை சொல்கின்றன, அது மிசா காலம் என்பதை சொல்கின்றன,ஆனால் ஸ்டாலின்மிசா சட்டத்தின் கீழ்தான் கைதானார் என்பதை நிரூபிக்கமுடியாமல் திணறுகின்றன‌இன்னொரு கடிதம் சென்னை மத்திய சிறையில் இருந்து கலைஞர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதமாம்
அதில் ஸ்டாலில் 1976ல் மிசா கைதியாக இருந்ததை சொல்கின்றாராம்மத்திய சிறைக்கும் கோபாலபுரத்துக்கும் இடையில் 7 கடல் இருப்பதால் கடிதம் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும், கருணாநிதியும் பல்லாண்டுகள் சிறையில் இருந்தார்அதிலும் கருணாநிதி மிசா கைதி என சொல்கின்றாரே தவிர எதற்காக மிசாவில் கைதானார் என சொல்லவே இல்லை என்பதுதான் சோகம்..இன்னமும் வலுவான ஆதாரம் கிடைக்காமல் திமுக திணறுவது நிஜம் , தெரியாமல் சிக்கி கொண்டோமோ என தவிப்பதும் நிஜம்இதை சொன்னதால் நீ இரண்டாம் மாரிதாஸ், மதனின் முகமூடி , நாக்பூரின் அடிமை என நம்மை அவர்கள் திட்டபோவதும் நிஜம்

காலத்தின் சாபம்

இந்திரா, காமராஜரையே கலங்கடித்த திமுக ,மதன் முன்னும் மாரிதாஸ் முன்னும் திணறி கொண்டிருப்பதெல்லாம் காலத்தின் சாபம்

விருதுநகரில் 23 வயது சீனிவாசனை நிறுத்தி காமராஜரை சரித்த திமுக, அப்படி எதிர்தரப்பு இளைஞர்களிடமே தன் நிலையினை பறிகொடுத்துகொண்டிருக்கின்றது

சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்றார் காந்தி, சாகும் நேரம், நான் செய்த தவறிலே பெரும் தவறு பாகிஸ்தானை உருவாக்கியது என்றார் ஜின்னா.

கருணாநிதி சாகும் பொழுது அவர் மனம் என்ன சொல்லி தவித்திருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்