சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன‌

பெரியார் கோஷ்டிக்கும் ஜெகத் கஸ்பருக்கும் சிங்கப்பூர் அரசு விசா மறுத்ததாக செய்திகள் வருகின்றன‌

முன்பே தோசை மதிமாறன் அங்கே ஒரு சர்ச்சையில் சிக்கினார், விஷயத்தை பார்த்து கொண்டிருந்தது சிங்கப்பூர் அரசு, இதுபோக இதெல்லாம் ஒரு மாதிரி கோஷ்டி என்பதால் அடித்துவிரட்டி விட்டார்கள்

நன்றாய் இருக்கும் நாடு இந்த கயவர்களை விட்டால் கெட்டுவிடும் என்பது அவர்களுக்கு புரிந்திருகின்றது, சிங்கபூரிலும் இட ஒதுக்கீடு சமூக நீதி கேட்டு இம்சையினை தொடங்கிவிட்டால் என்னாகும்?

அடுத்து என்ன?

சிங்கப்பூர் இந்துத்வ பார்பானிய அடிமை அரசு ஒழிக, அதுதானே? அதேதான்.

விஞ்ஞான ரீதியான குழப்பமாக இருகின்றதே…சோ கன்பியூசன்

நாமும் ரஞ்சன் கோகாய் போல அந்த நீதிபதி குன்ஹா போல ஆழமாக நாமும் அலசலாம்

ஸ்டாலினுக்கு திருமணமானது அக்டோபர் 20, 1975

மிசாவில் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டது 1976 பிப்ரவரி 1 என்கின்றது உடன்பிறப்பு கோஷ்டிகள்.

மிசா முடிந்தது மார்ச் 23, 1977, அதன் பின்பு சில வாரங்கள் கழித்துதான் ஸ்டாலின் விடுதலையானார்

கருணாநிதி கடிதம் எழுதியது 1977 நவம்பர் 28 அதாவது மூன்றாம் கலைஞர் பிறந்த மறுநாள்,

(மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தது 1977 நவம்பர் 27)

இப்பொழுது ஐன்ஸ்டீனே திணறும் விஞ்ஞான குழப்பம் வரலாம், அவரின் சார்பியல் தியரி புரிந்தாலும் இனிவரும் குழப்பங்கள் புரியாது

அதாவது அக்டோபர் 20, 1975ல் மணவாழ்வில் நுழைந்துவிட்டார் ஸ்டாலின் என்றாலும் உதயநிதி பிறக்க 2வருடம் ஆகியிருக்கின்றது

ஆஆஆ.. 2 வருடம் தாயின் வயிற்றில் இருந்த அபூர்வ குழந்தையா உதயநிதி?

சரி ஏப்ரல் 1977ல் ஸ்டாலின் வெளிவந்தாலும்.. அட வெறும் 5 மாதத்தில் பிறந்த குறை பிரசவமா உதயநிதி?

இதில் கலைஞர் வேறு கடிதம் எல்லாம் எழுதியிருக்கின்றார்

விஞ்ஞான ரீதியான குழப்பமாக இருகின்றதே…சோ கன்பியூசன்

மாரிதாஸ் வீடியோவில் என்ன சொல்லபோகின்றார்

ஆளாளுக்கு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளின் ஆதாரம் இதோ என காட்டுகின்றார்களே தவிர,

இங்கு என்ன நடந்தால் அமெரிக்காவுக்கு என்ன? திமுகவினர் எச்சிறையில் இருந்தால், எங்கு எவளை வைத்திருந்தால் அவர்களுக்கென்ன என்ற கேள்விகளை காணவே இல்லை

அது வரவும் வராது, நம்மவர் சிந்தனை அவ்வளவுதான்,

சென்னைக்கு அமெரிக்க கப்பல் வந்தால் அப்படியா என்பார்கள்? ஏன் எதற்கு என்ற சிந்தனை எல்லாம் இல்லை

தமிழகத்தை அமெரிக்கா கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன?

இதுதான் அரசியல் உளவு, நடப்பதை ஒன்றுவிடாமல் கண்காணிப்பார்கள் யாரை வளைத்தால் இந்தியாவில் எதை செய்யமுடியும் என மிக துல்லியமாக கணிப்பார்கள், அவர்களுக்கு உதவ வேண்டிய விதத்தில் வெளிதெரியாமல் உதவுவார்கள்

ஈரோட்டு ராமசாமியினை பிரிட்டிஷ்காரன் அப்படி கையாண்டான், அவனுக்கு அடுத்த வல்லரசான அமெரிக்கா திமுகவினை அப்படித்தான் கையாண்டது, இல்லையேல் முதலாளித்துவ நாடு பாட்டாளி அண்ணாவினை கட்டிபிடிக்க என்ன உண்டு?

பதிலுக்கு சோவியத் யூனியனும் என்னவோ செய்து காமராஜரை எல்லாம் தழுவியது

பார்பதற்கு ஒன்றுமில்லா சம்பவங்கள் போல் இருந்தாலும் இவை எல்லாம் ஆழமாக கவனித்தால் சொல்லும் செய்திகள் ஏராளம்

இப்படிபட்ட கண்காணிப்புகள் இருப்பதால்தான் தமிழகம் இந்தியாவோடு ஒட்டுவதை பல சக்திகள் விரும்பாது, அவர்களுக்கான உத்தரவு எங்கிருந்தோ வரும்

இந்துமதத்தை தமிழனிடமிருந்து ஒழி அவன் இந்தியனாகமாட்டான், இந்தி படிப்பதை ஒழி அவன் இந்தியனாகமாட்டான், வட இந்தியனையும் தமிழனையும் கலக்கவிடாதே, ஈழபோராட்டத்தில் இந்திய ராணுவத்தையே எதிர்த்து நில் போன்ற கட்டளைகள் எல்லாம் அங்கிருந்துதான் வரும்

இந்திரா, ராஜிவ் எல்லாம் விரட்டபட்டது அப்படித்தான், இங்கு தேசியம் வளரகூடாது என்பது மேலிட கட்டளை

அதன் தொடர்ச்சிதான் சர்வதேச ஆயுதகண்காட்சியில் மோடி மீதான கருப்பு பலூன் இம்சைகள்

ஆனால் இம்மாதிரி விஷயங்களை காஷ்மீரிலே கையாள கற்றுகொண்ட மத்திய அரசு தமிழகத்தை மிக அழகாக கையாள்கின்றது

முள்ளை முள்ளால் எடுக்கின்றார்கள், செய்யவேண்டியதை சரியாக செய்கின்றார்கள்

சில மறைமுக ஆட்டங்களை அப்படி மறைமுகமாகத்தான் ஒடுக்கமுடியும், அந்த பணிதான் நடக்கின்றது

இதை எல்லாம் விடுங்கள், ஒரு தகவலுக்காக சொன்னோம் அவ்வளவுதான், இந்த அமெரிக்க‌ கேபிள் சாதார விஷயம் அல்ல‌

இதனால்தான் அமெரிக்க தூதரகமே ஈரானில் இருக்க கூடாது என விரட்டி அடித்தார் கோமேனி, இன்றும் ஈரான் தனித்து நிற்கின்றது. சென்னை அமெரிக்க தூதரகம் ஒழுங்காக விசா மட்டும் கொடுக்கும் என நினைத்தால் உங்கள் நினைப்பு தவறு.

சரி மாரிதாஸ் வீடியோவில் என்ன சொல்லபோகின்றார், பதிலுக்கு திமுகவினர் எந்த நீதிமன்றம் செல்கின்றார்கள் எனபார்ப்போம்

சர்வாதிகாரி அந்த கருப்பு ஆட்டை எப்படி கண்டறியபோகின்றார்

இனி முக ஸ்டாலின் தானாக கட்சியினையும் அரசியலையும் விட்டு ஓடாமல் விஷயம் தீராது போலிருக்கின்றது

ஸ்டாலின் இருப்பது தங்களுக்குத்தான் அனுகூலம் என எதிர்கட்சிகள் திட்டமிடும், உண்மை அதுதான்

கிரிக்கெட்டில் நல்ல அணி தடுமாறும் பேட்ஸ்மேனை அவுட் செய்யாது, மாறாக சும்மா நிற்கும் அவனை அவுட் ஆகாமல் பார்த்துகொள்ளும், காரணம் இவனை அவுட்டாக்கி அடுத்து வந்தவன் அடித்துவிட்டால் சிக்கல்

ஆக இதெல்லாம் பாஜக, அதிமுக வேலை போல் தெரியவில்லை, திமுகவின் உள்வீட்டு சதிபோலவே தெரிகின்றது

சர்வாதிகாரி அந்த கருப்பு ஆட்டை எப்படி கண்டறியபோகின்றார் என்பதுதான் அவருக்கான சவால்

சமாளிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா?

“பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்!” – கே.எஸ்.அழகிரி.

1991ல் காங்கிரசால் ராணுவ காவல் போடபட்டிருந்தால் மசூதியே இடிபட்டிருக்காதே அய்யா?

சமாளிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா?

முக ஸ்டாலினுடன் சேர்ந்தால் அறிவு கெட்டுவிடும் என்பது இதுதான்…

பொய் சொல்ல மட்டும் உருவாக்கபட்ட இயக்கம்

திருசெந்தூர் கோவிலுக்கு எல்லோரும் நுழையும் உரிமையினை வாங்கி கொடுத்ததது திராவிட கழகம் என்றொரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது

தமிழகத்தில் மிக சில ஆலயங்களிலே இக்கொடுமை இருந்தது, திருசெந்தூர் கோவில் அந்த வரிசையில் இல்லை

மதுரையில் வைத்தியநாத அய்யரும் பசும்பொன் தேவரும் அக்கொடிய நடைமுறையினை போராடி நீக்கியிருகின்றார்கள், மதுரைக்கு நாத்திகம் பேசசென்ற பெரியார் அடித்து விரட்டபட்டிருக்கின்றார்

திருசெந்தூர் ஆலயம் எல்லா மக்களும் நுழையும் வகையில்தான் இருந்தது, அது பெரும்பாலும் நாடார்கள் கையில்தான் இருந்தது, இன்றும் அப்படியே

அய்யா வைகுண்டர் காலத்தில் அவரே அங்குதான் ஞானம் பெற்றார் என்கின்றது வரலாறு

வேறு எங்கு இந்த கறுப்புசட்டைகள் உரிமை வாங்கி கொடுத்தன?

ஈரோட்டுபக்கம் ஏதும் திருசெந்தூர் இருக்குமோ என்னமோ? விசாரித்து பார்த்தால் தெரியும்

பொய் சொல்ல மட்டும் உருவாக்கபட்ட இயக்கம் திராவிட கழகம் என்பதை தவிர சொல்ல ஒன்றுமிலை

மாரிதாஸின் வீடியோவுக்கும் வரவேற்பு

இந்த ரஜினி, விஜய் அஜித் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மாரிதாஸின் வீடியோவுக்கும் வந்திருக்கும் போல‌

இன்று மாலை மிசா பற்றி சிறப்பு வீடியோ வெளியிடுவதாக சொல்லியிருக்கின்றாராம், தமிழ் கூறும் நல்லுலகம் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றது, தமிழ்தெரியா மற்றமொழி இந்தியரும் டிரான்ஸ்லேட்டர் சகிதம் அமர்ந்துவிட்டார்களாம்

மனிதர் போகிற போக்கில் இனி மெரீனாவில் வீடியோ, நேரு உள் அரங்கில் வீடியோ என கிளம்பினாலும் கிளம்பலாம்

ஆக‌…..விஷயம் இதுதான்

மாரிதாஸ் விரட்டினார் ஓடினார்கள், மதன் விரட்டினான் ஓடினார்கள்

ஓடினார்கள் ஓடினார்கள் கலைஞர் சமாதிவரை ஓடினார்கள்..

அடுத்து அங்கே கடல் இருப்பதால் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கின்றார்கள்..