உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்

உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்

ஆக தமிழ்நாட்டில் நடக்க போகும் ரகசிய கலவரம் மற்றும் பூகம்பத்துகான நாள் டிசம்பர் 2ல் அறிவிக்கபடும்

எப்படியோ உள்ளாட்சி தேர்தல் நடத்தபடுவது உறுதியாகிவிட்டது, இனி பரபரப்பு மற்றும் காமெடியான காட்சிகள் பல அரங்கேறும், தமிழர் எல்லோரும் இனி மகா பிசி..

அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம்

அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம் என ஆளாளுக்கு கேட்கின்றார்கள்

விஷயம் இதுதான்

அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது

அப்பொழுது மாணவ காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், 6ம் வகுப்பினை தாண்டாத கலைஞருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்பதும், ஆட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகவில்லை அதற்குள் என்ன சாதித்தார் என்பதுமாக ஏக கேள்விகள், அது போராட்டமாக வெடித்தது

உச்சமாக ஒரு கழுதை கழுத்தில் டாக்டர் என எழுதிகட்டி அண்ணாமலை பல்கலைகழகத்தில் உலவவிட்டனர்

கலைஞர் அதன் பின் அந்த பட்டத்தை வாங்கியிருக்க கூடாது, நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்

ஆனால் அவரோ சென்றார், டாக்டர் ஆனார் திரும்பினார்

அன்று மாலைதான் அந்த கோரம் நிகழ்ந்தது, எல்லாம் முடிந்த பின்பும் போராட்டகாரர்களை அடக்குவதாக விடுதியில் காவல்துறை புகுந்தது, பெரும் அராஜகம் நிகழ்ந்தது

மறுநாள் அருகிலிருந்த குளத்தில் பிணமாக மிதந்தான் உதயகுமார், போராட்டம் தீவிரமானது

உதயகுமாரின் தந்தை ஆசிரியர், ஆனால் அவரே வந்து பார்த்துவிட்டு இது என் மகன் அல்ல என எழுதி கொடுத்தார், அவ்வளவு இறுக்கமான காலம் அது

அது உதயகுமார் இல்லை என்றால் அவன் எங்கே? என மாணவர்கள் போர்கொடி தூக்கினர், ஆனாலும் ஹேவியஸ் மனு எல்லாம் தாக்கல் செய்யவில்லை

இது சட்டமன்றத்தில் எதிரொலித்தபொழுது மாணவர்கள் தன்னை கொல்ல சதி செய்ததாகவும், செத்தது உதயகுமார் இல்லை என காவல்துறை அறிக்கை கொடுத்ததாகவும் சொன்னார் முதல்வர் கலைஞர்

அதன் பின் அரசு ஒரு கமிஷனை அமைத்தது, என்.எஸ் ராமசாமி என்பவர் அதன் தலைவர்

விசாரணை இந்த ஜெயா ஆறுமுகசாமி கமிஷன் போல நடந்தது, ஆளாளுக்கு விசாரித்தார்கள்

முடிவில் இறந்தது உதயகுமார்தான், ஆனால் அது எதிர்பாராதது அதற்கும் போலிஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என முடித்து கொண்டது

அதாவது தானே செத்தான் உதயகுமார் என்பது போல் எல்லோரும் முடித்துவிட்டார்கள்

இது 1971ல் நடந்தது, 1978ல் ராமசந்திரன் முதல்வரானதும் இந்த விவகாரம் வெடித்தது, அதை தொடங்கியவர் உதயகுமாரின் தம்பி மனோகரன்

அவர் ராமசந்திரனுக்கு கடிதம் எழுதினார், அதில் அந்த சம்பவத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர் பல வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் பின் அது நடக்காமல் போனதாகவும், தனக்கு வேலைவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறபட்டது

கலைஞர் உதயகுமார் குடும்பத்தை ஏமாற்றிய வகையினை பாரீர் என அதிமுக கும்பல் அதை ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபட்டது

அதன் பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன‌

இப்பொழுது அதெல்லாம் பழங்கதை, திமுகவினரிடம் கேட்டால் அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவே இல்லை, இது பார்ப்பண ஆரிய சதி என சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்

இதில் என்ன சோகம் என்றால் இன்றளவும் அந்த உதயகுமாரின் படமோ இல்லை வேறு ஆதாரமோ எங்கும் கிடைக்காது, அந்த அளவு சுத்தமாக துடைத்துவிட்டார்கள்

இன்னும் சில ஆண்டுகளில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சாதிப்பார்கள், இல்லை அது நடந்தது என சொன்னால் நாம் கேடுகெட்ட ஜென்மம் ஆகிவிடுவோம்

ஏதாவது புரிகின்றதா?

“இந்த கேடுகெட்ட ஜென்மங்களால் நான் படும் அவலத்தை நினைச்சி பார்க்குறப்போ, அதை வேதனையோடு பதிவு செய்கிறேன், அதை மறக்க முடியாது. ஆனால் நான் கவலை படவில்லை..”

ஏதாவது புரிகின்றதா?

கவலைபடாவிட்டால் ஏன் காலகாலத்துக்கு மறக்கமுடியாமல் அவலத்தை வேதனையோடு பதிவு செய்ய வேண்டும்?

அன்னார் வேதனைபடுவாராம் ஆனால் கவலை படவே மாட்டாராம்..இதெல்லாம் திராவிட தனிமொழி நமக்கெல்லாம் புரியாது

https://m.facebook.com/story.php?story_fbid=3502234563127896&id=100000241608911

இட ஒதுக்கீட்டின் கொடுமை

அதாவது மதியில்லா மாறா விஷயம் என்னவென்றால், அவர்கள் ஒழுங்காக கஷ்டபட்டு படித்து எல்லோரும் 50 மார்க் வாங்குமிடத்தில் அவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றார்கள்

இட ஒதுக்கீட்டின் கொடுமை அப்படி ஆனால் அவர்களை அதுதான் புடம் போடுகின்றது

அவர்களுக்கு உங்கள் கோஷ்டி கொடுமை என நினைத்து செய்த நல்ல விஷயம் அதுதான்.

இதனால் அவர்களுக்கு எதுவும் கடினமே அல்ல, தாண்டி செல்கின்றார்கள், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் குழம்பி தற்கொலை செய்கின்றார்கள்

அதாவது மதிகெட்ட மாறா, உம்மை இட ஒதுக்கீட்டில் ராணுவத்தில் சேர்த்து துப்பாக்கி கொடுத்து போருக்கு அனுப்பி, முறையாக கடும் பயிற்சிபெற்ற வீரனையும் அனுப்பினால் எப்படி இருக்கும்?

அவன் யுத்தத்தில் தூள் கிளப்புவான், நீர் ஒரு மண்ணும் புரியாமல் உம்மை நீரே சுட்டு செத்துபோவீர் அல்லவா? அப்படித்தான்

ராஜபக்சே

அந்த மனிதர் எளிய இலங்கை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்துக்காரர், அக்குடும்பம் சிங்கள பூர்வீகமும் அல்ல, இந்தோனேஷியாவில் இருந்து பன்னெடுங்காலத்துக்கு முன்பு இலங்கைக்கு வந்து ராஜாவுக்கு விசுவாசமான இனமாக இருந்தது, அதனால் ராஜ விசுவாசிகள் என பொருள்படும் ராஜபக்சே எனும் பெயர் வந்தது

அந்த குடும்பத்தின் வழி வந்தவர்கள் அனைவருமே கருணாநிதி குடும்பம் நிதியினை சுமப்பது போல, நேரு குடும்பம் காந்தியினை சுமப்பது போல ராஜபக்சே எனும் பட்டத்தை சுமப்பார்கள்

அந்த வம்சாவழிகளில் ஒருவர் இலங்கை அமைச்சராக இருந்தார் அவர் பெயர் டி.ஏ ராஜபக்சே அந்த ராஜபக்சேவின் இரண்டாம் மகனே மகிந்த ராஜபக்சே, இதுபோக 3 சகோதர்களும் உண்டு

மகிந்த ராஜபக்சே விவசாயத்தில் ஈடுபாடு உடையவர் எனினும் படித்தார் நூலகர் உட்பட பல பணிகலை செய்தார், பின் சட்டம் படித்து வழக்கறிஞருமானார், அப்படியே அரசியல் பக்கம் வந்தார்

பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார், 2006ம் ஆண்டு இவர் தேர்தலில் தோற்க வேண்டிய தருணம், ஆனால் ரணிலை வீழ்த்த மகிந்த ஒரு பிள்ளைபூச்சி என வெல்ல வைத்தது புலிகள்

ஆம் ராஜபக்சேவினை எளிதாக கையாளலாம் என்றே புலிகள் கணக்கிட்டு வெல்ல வைத்தனர்

ராஜபக்சே புலிகள் தொடங்கிய மாவிலாறு பிரச்சினையில் தாக்க சொன்னார், புலி பின்வாங்கிற்று தொடர்ந்து அடிக்க சொன்னார்

வழக்கமாக எல்லா சிங்கள அதிபர்களும் ஒரு கட்டத்தில் பின் வாங்குவார்கள் ஆனால் ராஜபக்சே நிறுத்தவில்லை இது புலிகளுக்கு முதல் அதிர்ச்சி

ராஜபக்சே மிக திறமையாக அந்த யுத்தத்தை நடத்தினார், 20 ஆண்டுகாலம் இலங்கை ராணுவத்தில் இருந்த தன் தம்பி கோத்தபாயாவினை அமெரிக்காவில் இருந்து திரும்ப அழைத்து யுத்தம் நடத்தும் பொறுப்பினை வழங்கினார்

ஆம் வேறு யாரையும் அவர் நம்பவில்லை, சிங்களரில் புலிக்கு விலைபோன கோஷ்டியும் புலிகளுக்கு அஞ்சிய கோஷ்டியும் நிறைய இருந்தது.

இந்தியா, சீனா, அமெரிக்கா என வல்லரசுகளை முள்ளிவாய்க்காலில் தலையிடாதபடி செய்தது அவரின் ராஜதந்திரங்களில் ஒன்று

இன்று அதிபராகியிருக்கும் கோத்தபாயவும் ராஜபக்சேவுமே யுத்தத்தை நிற்காமல் முன்னெடுத்தெனர், புலிகளுக்கு தெரிந்தது ஆயுதபாஷை அதில் பேசினால் போதும் என மகா உறுதியாய் நின்றார் மகிந்த‌

30 ஆண்டுகாலம் இலங்கையினை ஆட்டிபடைத்த அந்த கொடும்புலியினை தன் உயிருக்கு அஞ்சாமல் புலிகளின் தற்கொலை தாக்குதலுக்கு அஞ்சாமல் கொன்றொழித்ததில் பெரும் அதிசயம் கொடுத்தார்

உலகின் இரும்பு தலைவர்களில் ஒருவரானார், உலகின் மகா இறுக்கமான புலிகளை அவர் சுத்தமாக ஒழித்துகட்டியதில் உலக புகழ்பெற்றார்

பின் ஆட்சியினை விட்டாலும் இன்று கோத்தபாயா மூலம் மறுபடியும் இலங்கையினை ஆள வருகின்றார்

பிரேமதாசா, ராஜிவ் என யாரை எல்லாமோ சாய்த்த புலிகளால், இந்திய ராணுவத்தை திணறடித்த புலிகளால் ராஜபக்சேவின் மயிரை கூட தொடமுடியவில்லை, அவ்வளவு சாதுர்யமாக தப்பினார் மகிந்த‌

அந்த இலங்கையின் இரும்பு மனிதனுக்கு இன்று பிறந்த நாள்

“ஏ புலி உறுமுது ..புலி உறுமுது” என்ற பாட்டு அவருக்கே பொருந்தும், அப்படித்தான் வேட்டைகாரனாக புலிகளை ஒழித்தார்

அனாரிக தர்மபால, பண்டார நாயக, ஜெயவர்த்தனேவுக்கு பின் இலங்கையின் மகா சக்திவாய்ந்த அந்த மகிந்த ராஜபக்சேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பழனிச்சாமியினை முதலில் தவறாக எடைபோட்ட ஸ்டாலினுக்கும் மகிந்தாவினை குறைத்து எடைபோட்ட புலிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை

அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள்

நீ ஆயிரம் பிறை கண்டு ஆயிரம் புலிகளை உங்கள் நாட்டில் கொல்லுங்கள், தயவு செய்து அங்கிள் சைமன் ஒரு புலி என கருதி கொன்றுவிட வேண்டாம், காரணம் அவர் இல்லை என்றால் இங்கு அரசியல் காமெடிக்கு பலத்த சிக்கல் ஏற்படும்

அவர் ஒரு ஓரமாக ஏய் ராஜபக்சே ஏங்ங்கோத்தா என சொல்லிகொண்டிருப்பார் அதை எல்லாம் சீரியசாக எடுக்கவேண்டாம் , கேட்டு சிரித்துவிட்டு செல்லவும் என கேட்டுகொள்கின்றோம்…

இலங்கையில் தாமரையினை மலரவைத்திருக்கும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இதோ பதவி வந்ததும் செய்துவிட்டார்

நெல்லை பாராளுமன்ற எம்பி ஞானதிரவியம் தன் ஊர் பகுதி மக்களுக்கு தன் சொந்த நிலத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதன் மேற்பகுதியினை கவனமாக மூடி குடிநீர் வழங்க தொடங்கியிருகின்றார்

இவ்வளவு காலமும் அந்த ஊர் இருந்தது, அவர்களுக்கு தாகமும் இருந்தது,ம் அவரும் இருந்தார், அவரிடம் நிலமும் இருந்ததும், நிலத்தடியில் நீரும் இருந்தது ஆனால் அவரிடம் பதவி இல்லாததால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை

இதோ பதவி வந்ததும் செய்துவிட்டார்

இனி பதவி போனதும் ஓ. பன்னீர் செல்வம் பாணியில் மக்களுக்கு குடிநீர் தரமாட்டேன் என அழிச்சாட்டியம் செய்யாதவரை நல்லது

அனுராதாபுரத்தில் இலங்கை ஜனாதிபதியாக முடிசூட்டிகொள்கின்றார் கோத்தபாய‌

இலங்கை அனுராதாபுரத்தில் இலங்கை ஜனாதிபதியாக முடிசூட்டிகொள்கின்றார் கோத்தபாய‌

ஆம் அனுராதபுரம் புராதானமிக்கது, புத்தமதத்தின் விகாரைகள் அங்குதான் நிரம்பி இருந்தன ஒரு காலத்தில் மட்டுமல்ல இன்றும் இலங்கை பவுத்தத்தின் தலமை பீடம் அதுவே

அந்த அனுராதாபுரத்தைத்தான் ராஜராஜ சோழன் நொறுக்கினான், நொறுக்கி எரித்து போட்டு வந்தான், அது மீண்டெழ நெடுங்காலமாயிற்று

இலங்கை சரித்திரமான அந்த எல்லாளன் எனும் தமிழனை சிங்கள‌ துட்ட காமினி தோற்கடித்த இடமும் அதுதான், பிரபாகரன் கருவான இடமும் அதுதான்

ஆக புலிகொடி ஏந்தி சோழன் நொறுக்கிய‌ அனுராதபுரத்தில் வந்து கோத்தபாய பதவி ஏற்றால் என்ன அர்த்தம்? யாருக்கு சவால் விடுகின்றார் என அர்த்தம்?

புலிகொடி யார் கையில் இருக்கின்றது? அங்கிள் சைமன் கையில் இருக்கின்றது

அய்யய்யோ அங்கிள் சைமன் எங்கே போயிவிட்டீர்,

இதோ வந்துவிட்டா..ங்கோத்தா.. யோவ் ங்கோத்தாய்யாய்யா.. கோத்தா

தற்கொலை செய்த அனிதாவுக்கு திமுக சார்பில் சிலை திறப்பு

தற்கொலை செய்த அனிதாவுக்கு திமுக சார்பில் சிலை திறப்பு

அண்ணாமலை பல்கலைகழகத்தில் கொல்லபட்ட உதயகுமாரும் மாணவரே, இந்தி எதிர்ப்பு போர் என திமுகவால் களத்துக்கு கொண்டுவந்து கொல்லபட்ட பலர் மாணவர்களே

பத்மநாபாவோடு செத்ததிலும் சில மாணவர்கள் உண்டு

ஒன்றா இரண்டா திமுக காலத்து மாணவர் சாவுகள்?

திமுகவுக்காக ஓடி ஓடி உழைத்த தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேருக்கு ஒரு செங்கல் உண்டா?

இல்லை

இவர்களுக்கு அனுகூலம் என்றால் தற்கொலைகளை தேடிபிடித்து அரவணைப்பதும் , இவர்களுக்கு ஆகாது என்றால் மகா அமைதியாய் இருப்பதும் திராவிட பெரியார் கொள்கைகள் எனப்படும்

யாராவது சாக வேண்டும் அதில் அரசியல் செய்யவேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் சரியான விஷயம் அல்ல..

சாககிடக்கும் ஏர் இந்தியாவினை கொல்வதுதான் சரி

சாககிடக்கும் ஏர் இந்தியாவினை கொல்வதுதான் சரி, உலகெல்லாம் பட்ஜெட் ஏர்வேஸ் வந்தபின் பல நாடுகளின் ஏர்வேஸ் இப்படித்தான் கதை முடிக்கபடுகின்றது

பாரத் பெட்ரோலியத்தில் ஒவ்வொருவனும் வாங்கும் சம்பளம் அரேபிய எண்ணெய் கிணறையே வாங்கும் அளவு பெரியது, அதை குறைத்து முயற்சிக்கலாம்

ஆனால் கொடிபிடிப்பார்கள் போராடுவார்கள் இல்லா அழிச்சாட்டியம் எல்லாம் செய்வார்கள், மிக நிதானித்த அரசு சரியான காரியங்களை செய்திருகின்றது

ஏர் இந்தியா நிச்சயம் வேறுவழி இல்லா விஷயம், உலக நிலவரம் இது. இந்த பாரத் பெட்ரோலியம் என்பதை சம்பளத்தை குறைத்து சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் தள்ளிவிடுகின்றார்கள்

இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது

இப்பொழுது நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லை தகறாறு முட்டி கொண்டிருக்கின்றது, இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது

இந்தியாவின் வட எல்லையாக இமயமலையில் படர்ந்திருக்கும் நாடு நேபாளம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் ஒரே ஒரு இந்துநாடாக அது அரணாக இருந்தது, எதையுமே சரியாக செய்ய தெரியாத காங்கிரஸ் அரசு ஈழத்தில் குழப்பியது போல் நேபாளத்திலும் குழப்ப, அந்த குழப்பத்தை சீனா மிக சரியாக தன் கம்யூனிஸ்ட் அடிபொடிகள் மூலம் பயன்படுத்தி அங்கு தன் பிடியினை இறுக்கிவிட்டது

பழைய நம்பகமான இந்து நேபாளம் இப்பொழுது இல்லை கம்யூனிஸ்டுகள் எனும் குழப்பவாதிகளின் கூடாரமாகி சீனாவுக்கு ஏவல் வேலை செய்யும் தேசமாயிற்று

இப்பொழுது இந்தியா வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் காலா பாணி எனும் தங்கள் பகுதி சென்றுவிட்டதாகவும் அது தங்கள பகுதி எனவும் வாளை உருவுகின்றது நேப்பால்

அந்த இடம் திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரும் பகுதி, இதுகாலமும் சிக்கல் இல்லை இப்பொழுது மத்திய அரசு இந்தியாவின் புதிய வரைபடைத்தை சொல்லும் பொழுது வருகின்றார்கள்

கலாபாணி என்பது அந்த ஆறும் கிராமமும் கொண்ட பகுதி இந்தியாவின் ஜார்கண்டை ஒட்டி வரும், ஏற்கனவே மதராசிகள் தங்கள் நாட்டை அதாவது பீகார் மற்றும் உபிமக்கள் நேபாளத்தை ஆக்கிரமிக்கின்றார்கள் எனும் சர்ச்சை நடக்கும் நிலையில் இப்பொழுது நேரடியாக இந்தியா ஆக்கிரமிக்கின்றது என்கின்றது நேப்பாள்

இந்தியா அது எங்கள் பகுதிதான், தேவைபட்டால் இதுபற்றி பேசலாம் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது

உண்மையில் அதன் அருகில் ஒரு கணவாய் உண்டு, திங்கர் பாஸ் என்பார்கள், அதை கடந்தால் அப்பக்கம் திபெத்துக்கு அதாவது சீனாவுக்கு செல்லலாம்

இங்குதான் இப்பக்கம் இந்தியாவும் அப்பக்கம் நேபாளத்தை முன்னால் நிறுத்தி பின்னால் சைனாவும் ஆடுகின்றன