நிலத்தடி நீரை அள்ள தொடங்கிவிட்டார்கள்

கூடங்குள அணுவுலையின் பெருந்தேவைக்கு நிலத்தடி நீர் பயன்படுவது குறித்து வேதனை பட்டிருக்கின்றார் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை

ஆம், கூடங்குள அணுவுலை என்பது பக்ரா நங்கலையே திறந்துவிட்டாலும் போதாத அளவு தேவையுடையது, இந்நிலையில் 3ம் மற்றும் 4ம் அணுவுலை கட்டுகின்றார்கள்

முன்பு பேச்சிபாறை அணையில் இருந்து நீர் கொண்டு செல்ல திட்டமிடபட்டது குமரி மக்கள் எதிர்ப்பால் அது கைவிடபட்டு தாமிரபரணியினை திருப்ப முயற்சித்து அதுவும் தோல்வி

பின் கடல்நீரை சுத்திகரிக்க போகின்றோம் என கிளம்பினார்கள், இப்பொழுது கடலில் நீர் இல்லாததால் நிலத்தடி நீரை அள்ள தொடங்கிவிட்டார்கள்

இதில் பெரும்பாலும் தனியார் கான்ட்ராக்டர்களே பெரும் பொர்வெல் அமைத்து நீரை வாருகின்றார்கள்

பொதுவாக ராதாபுரம் பூமி நிலத்தடி நீரை மட்டும் நம்பும் பூமி, அங்கு நல்ல அணையினை கட்டுங்கள் என்றால் அரசியல்வாதிகள் கோஷ்டியுடன் குளிக்க நீச்சல் குளம் அளவுக்கு அணைகட்டுவார்கள்

அதை வெற்றிகரமாக மழை வந்ததும் திறப்பார்கள், ஆனால் மூடும் நாளை சொல்லமாட்டார்கள் காரணம் திறந்த அன்று இரவே அணை காலி

அப்படிபட்ட பூமி அது

அந்த பூமியில் இன்பதுரை இந்த நீர் திருட்டை பார்த்து இதனால் அக்கம் பக்கம் விவசாயிகள் கதறுவதை கண்டு வேதனைபடுகின்றார்

நாமும் ராதாபுரம் தொகுதி முழுக்க மினரல் வாட்டர் வியாபாரிகளும், பள்ளி முதலாளிகள் நீச்சல் குளம் பூங்காவுக்காக
பல இடங்களில் நிலத்தடி நீரை திருடுவதை சுட்டி காட்டலாம்

அவர் இன்னும் அதிக வேதனைபடுவார் பாவம், அதனால் சொல்லவேண்டாம்

அற்புதமான ஏற்புரை

எங்கே எதை எப்படி பேசவேண்டும் என்பது அழகாக அவருக்கு தெரிகின்றது

அற்புதமான ஏற்புரை.. வாழ்த்துக்கள்

(ஆக தமிழ்நாட்டு பத்திரிகையாளரிடம் வேண்டுமென்றேதான் வம்பிழுக்கின்றார் போல…)

https://m.facebook.com/story.php?story_fbid=2616478758430197&id=100002042948330

முன்னாள் புலி கருணாவின் குரல்

கோத்தபாய ஆட்சிக்கு வந்ததும் ஒரு குரல் உரக்க கேட்கின்றது அது முன்னாள் புலி கருணாவின் குரல்

பிரபாகரனின் மெய்காப்பாளனாக இருந்து பின் பிரபாகரனிடம் இருந்து உயிர்தப்பிக்க கோத்தபாயாவிடம் சரணடைந்த அந்த கருணாவின் குரல்

அன்னார் மிக பகிரங்கமாக பிரபாகரன் மரணம் அடைந்தது உண்மை, அதனால் அவருக்கு வீரமரணம் என அஞ்சலி செலுத்துவதுதான் சரி என பேசிவிட்டார்

இன்னும் ஒருவாரத்தில் மாவீரர் தினம் வரும் நிலையில் மனிதர் இப்படி பேசுவது எல்லாம் அலரி மாளிகையில் கோத்தபாய காலடி எடுத்து வைத்த முகூர்த்தம்

ஆக அங்கிள் சைமனுக்கும் வைகோவுக்கும் இன்னும் சிலருக்கும் தமிழின துரோகி ஒருவர் கிடைத்துவிட்டார் , இனி பாருங்கள் பிரபாகரனை விட்டுவிட்டு கருணாவுக்கு அஞ்சலி செலுத்த கிளம்புவார்கள்

தேவையும் அத்திவாசியமுமே ஒரு சமூகத்தை போராட வைக்கும்

தேவையும் அத்திவாசியமுமே ஒரு சமூகத்தை போராட வைக்கும், மற்றபடி ஒரு பயலும் போராட வரபோவதில்லை

தாங்கமுடியா கெடுபிடிகளிலும் , இனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலையிலும் ஒரு சமூகம் பொங்கி எழும்

ஈரானிய சமூகம் அப்படி பொங்கி பெரும் போராட்டம் நிகழ்கின்றது, கடும் இறுக்கமான ஈரானிய அரசின் துப்பாக்கி சூட்டில் 36 பேர் இறந்தாயிற்று

இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்தமாதம் ஈராக்கிய மக்களின் கிளர்ச்சியினை எப்படி ஒடுக்குவது என ஈரான் பாடம் நடத்திவிட்டு வந்தபின் சொந்த மண்ணிலே அதை எதிர்கொள்வது

40 ஆண்டுகால புரட்சி ஈரானை முதன் முறையாக ஆட்டிபார்க்கின்றது மக்கள் போராட்டம், ஆக நேரடி போர் இல்லாமல் செய்யவேண்டியதை செய்து ஈரானிய மக்களே அந்நாட்டு அரசோடு போராட வைத்துவிட்டது அமெரிக்கா

உலகை கவனிக்கின்றோம், மக்கள் போராட்டம் பெரிதாக நடக்கும் நாடுகளில் பெரும்பான்மை நாடுகள் பெட்ரோல் வளமிக்க நாடுகள்

வளமிக்க நாடுகளின் மக்கள் வறுமையால் போராட வருகின்றார்கள் என்றால் அதன் காரணம் வல்லரசுகளின் அரசியல் ஆட்டமன்றி வேறேன்ன?

இந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கானது

ஒவ்வொரு மாதத்திலும் அஷ்டமி இந்துக்களுக்கு விஷேஷமானது, அதில் இந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கானது

கால பைரவர் காவலின் வடிவமாக கருதபடுபவர், சனிக்கே அவர்தான் குரு என்பதால் 12 ராசிக்காரர்களும் சனியின் பிடியில் இருந்து விடுபட அவரை வணங்கலாம் என்கின்றது சோதிட சாஸ்திரம்

கால பைரவர் சிவனின் ருத்ரகோல சாயல், அந்த கால பைரவர் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயரில் வணங்கபடுவார், தென்னகத்து சுடலை சாமி கூட அந்த கால பைரவரின் ருத்திரகோல சாயலே..

பொதுவாக கார்த்திகை மாதம் தீமைகளை வேரறுக்கும் அவதாரங்கள் பிறந்த மாதம். முருகன் , கால பைரவர் மற்றும் அய்யபன் வரை கொண்டாடபடும் மாதம்

அவ்வகையில் இன்று இந்துமக்கள் காலபைரவருக்கான சிறப்பு வழிபாட்டை மேற்கொள்கின்றார்கள்

கால பைரவர் எல்லோருக்கும் காவலாய் இருப்பார், அதுவும் எப்படி இருப்பார் என்றால் நாயினை போல காவல் இருப்பார் கலங்காதே என்றது இந்துமதம்

நாயிடம் உள்ள நற்குணங்களில் வாலாட்டி நன்றியாய் இருந்தலும், உயிரை கொடுத்து காத்தலும் குறிப்பிடதக்கவை

இதனால்தான் நாயினை கால பைரவர் என்றே அது அழைத்தது, இன்றும் நாயினை பைரவரின் வடிவம் என சொல்வதன் தத்துவம் அதுவே

நன்றியும் கடும் காவல் பண்பும் கொண்ட நாயினை தெய்வத்தின் இடத்திற்கு உயர்த்தவும் அது தயங்கவில்லை

நாயின் காவலிலும் விசுவாசத்திலும் நன்றியிலும் தெய்வத்தை காண சொன்னது இந்துமதம்

அவர்கள் ஆலயத்தில் வைக்கபடும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு இறை தத்துவம் உண்டு, மனிதனை தாண்டி விலங்கிலும் கடவுளின் தன்மையினை கண்ட மதம் அது.

இந்த சாயல் உலகில் எந்த பூமியிலுமில்லை இந்த தர்ம பூமியில் மட்டுமே சாத்தியம்

நேர்மையும் நெஞ்சில் சுத்தமும் பொதுநலமும் கொண்டோர் அழைக்காமலே கால பைரவர் வருவார் என்கின்றது சாஸ்திரம், நீதி கிடைக்காமல் தவிப்போர் கால பைரவரிடம் முறையிட்டால் அது நடக்கும் என்பது ஐதீகம்

கால பைரவரின் அம்சமான சுடலைமாடனிடம் இப்படி முறையிடும் வழக்கம் தென்னாட்டில் இன்றும் உண்டு

காசி கால பைரவரின் மகா முக்கிய ஸ்தலமாகும், காசி எனும் புண்ணிய நகரை அவர்தான் காத்து கொண்டிருக்கின்றார் என்பது ஐதீகம்.

காசியினை காக்கும் எல்லோருக்கும் கால பைரவரின் கடாட்சம் கிடைக்கும் என்பார்கள், மோடி காசிக்கு பல நற்காரியங்களை செய்திருக்கின்றார் இன்னமும் செய்வார்

அந்த கடாட்சம் மோடிக்கும் கிடைத்திருக்கின்றது,

இந்நாட்டை காத்து நிற்கும் கால பைரவரின் சாயலான‌ மோடிக்கு அந்த பகவான் எல்லா நலமும் வளமும் காவலும் அருளட்டும்

முடிந்தால் அதை வாங்கிபோட்டு லாபமாக்க வேண்டியதுதானே?

ஏர் இந்தியாவினை மோடி விற்கின்றார் என ஒரே ஆர்ப்பாட்டம், இதில் எவனாவது ஏர் இந்தியாவில் பயணிப்பவனா அந்நிறுவணத்தை காக்க முயன்றவனா என்றால் இல்லை, பாதி பயலுக்கு ஏர் இந்தியா விமானமே தெரியாது

பாரத் பெட்ரோலியத்து ஊழியர்களின் கவர்னருக்கு நிகரான சம்பளம் பற்றி ஒரு பயலும் பேசமாட்டான்

துபாய் ஏர் ஷோ காற்று வாங்கி கிடக்கின்றது, 2 விமானங்களே விற்கபட்டிருப்பதில் உலக தயாரிப்பு நிறுவணங்களே கதிகலங்கி போய் இருக்கின்றன‌

தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை விட மோசமாகிவிட்டது விமான போக்குவரத்து, அவ்வளவு சிரமங்கள், பல நாடுகள் அந்த துறையினையே தலைமுழுகிவிட்டன‌

உலக நிலவரம் இங்கும் எதிரொலிக்கும் பொழுது ஆளாளுக்கு சத்தம் மட்டும் கேட்கின்றது, அய்யகோ ஏர் இந்தியாவினை விற்கின்றார்கள் என ஒப்பாரி

முடிந்தால் அதை வாங்கிபோட்டு லாபமாக்க வேண்டியதுதானே? செய்யமாட்டான்

விஷயம் மூடி மறைக்கபடுகின்றது

விக்ரமின் மகன் துருவ் கார் ஏற்றி சில ஆட்டோக்களை நசுக்கியதாக செய்திகள் வருகின்றன, ஆனால் விஷயம் மூடி மறைக்கபடுகின்றது

விக்ரம் கலைஞர் கருணாநிதி வீட்டு சம்பந்தி என்பது கூடுதல் தகவல்

1 ரூபாய் சில்லறை பிரச்சினை என்றாலே மொத்த தமிழ்நாட்டையும் கதற வைக்கும் ஆட்டோ சங்கங்கள் இப்பொழுது அவர்கள் போக்கில் மீட்டருக்கு மேல் அமைதி காக்கின்றார்கள்

இந்திரா சமாதியில் சோனியா அஞ்சலி

இந்திரா சமாதியில் சோனியா அஞ்சலி

இந்திராவோடு இந்திராவின் கொள்கைகளையும் தேசம் புதைத்துவிட்டது, சோனியாவுக்கும் அதில் பங்கு உண்டு

ஆம் இந்தியா ஒரு அதிரடி தலமையினையே விரும்பியது, இந்நாட்டின் எதிர்பார்ப்பு அது. மிசாவினை தாண்டி இந்திரா அசைக்கமுடியா இடத்துக்கு வந்ததும் அப்படித்தான்

ஆனால் சோனியா தடுமாறினார், ஒருவிதமான மென்மையான போக்கை கொண்டிருந்தார், மாநில கட்சிகளின் பிடிக்குள் அடங்கினார்

கருணாநிதி “சோனியா சொக்க தங்கம்” என சொல்லவும் இந்தியாவே அட இந்த ஆளே சோனியாவினை பாராட்டினால் உண்மை என்னவாக இருக்கும் என கலங்கி அத்தோடு காங்கிரஸை மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டது

ஆம் இந்திராவின் அதிரடிகளை எதிர்பார்த்து காத்திருந்த இந்தியாவுக்கு சோனியா ஏமாற்றத்தை கொடுத்தார், அந்த இடத்தை மோடி அபாரமாக பிடித்து கொண்டார்

இந்திராவின் சமாதியில் சோனியா அஞ்சலி செலுத்திய காட்சி அதைத்தான் சொல்கின்றது, ஆட்சி ஒன்றுக்காக மாநில அழிச்சாட்டிய கட்சிகளுன் கூட்டனி சலுகை மெத்தனம் மவுனம் என இருந்த காங்கிரஸ் தூக்கி எறியபட்டு புதைக்கபட்டிருக்கின்றது

மாநில கட்சிகளை ஆட்சிக்கு கொண்டுவந்து அவை செய்த அநியாய இமாலய ஊழலை மவுனமாக அனுமதித்த காங்கிரஸ் இன்று தற்கொலை செய்திருக்கின்றது

நாட்டு நலனை இந்திரா பாணியில் முன்னிறுத்தியிருந்தால் இந்த வீழ்ச்சி வந்திருக்காது

இந்திராவோடு காங்கிரஸையும் தகணம் செய்துவிட்டு அதற்கு அஞ்சலியும் செய்கின்றார்கள் அவ்வளவுதான் விஷயம்

போலீஸ் அனுமதி கிடைக்குமா?

சபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு – போலீஸ் அனுமதி கிடைக்குமா?

போலிஸ் அனுமதி கிடைக்குமா என்பது தெரியாது, ஆனால் சிதம்பரம் கோவிலில் நடந்தது போல் நடக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

திமுக வெளிநடப்பு

சோனியா, ராகுலுக்கு பாதுகாப்பு குறைக்கபட்டதை கண்டித்து பாராளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

தமிழ்நாட்டை காக்க வோட்டு வாங்கினார்களா? சோனியாகாந்தியினை காக்க வோட்டு வாங்கினார்களா என்பது தெரியவில்லை

முன்பு ராஜிவ் கொலையில் வசமாக சிக்கிய திமுக இப்பொழுது அதற்கு பரிகாரம் தேடுகின்றது போல, ஆக சர்வாதிகாரி பாவமன்னிப்பு பெற்றுகொண்டிருக்கின்றார்