கொஞ்சமாவது யோசி மை சன்…

“மம்மி ஸ்டாலின் ஜி நல்லவரு, நம்ப பாதுகாப்புல அவருக்கு அவ்வளவு அக்கறை மம்மி..

இல்லை மைசன் அதெல்லாம் இல்லை

ஓ மம்மி, ஹி இஸ் சோ குட்

பின்ன என்ன மை சன், ஒரு நாளாவது உங்க அப்பா செத்த இடத்துக்கு போயிருப்பாரா? ஒரு மாலை போட்டிருப்பாரா? ஏதோ பாஜக எதிர்க்கணும்னு பேசிட்டு இருக்கார் மைசன்

இல்ல மம்மி ஜி ரொம்ப நல்லவரு..

தமிழ்நாட்டுல உள்ளாட்சி தேர்தல் நடக்குதாம், 4 மாநகராட்சி நம்ம கட்சிக்கு வேணும்னு கேட்டுபாரு அப்புறம் ஜி பற்றி தெரியும்

கேட்டேன் மம்மி, மாநில சுயாட்சியாம் மத்தியில கூட்டாட்சியாம், அவங்க ஒல்டு பிரதர் அண்ணா சொன்னாராம்

மை சன், எல்லா பயலும் மாநிலத்துல ஆண்டால் நாம யாரை கூட்டு சேர்த்து மத்தியில ஆளுவோம், கொஞ்சமாவது யோசி மை சன்…”

145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா

145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா : செய்தி

சட்டவிரோதமாக நாட்டில் குடியேறுபவர்களை எந்த ஒரு நாடும் அனுமதிக்காது, சில நாடுகள் நாகரீகமாக வெளியேற்றும்.

சிலவை தண்டனை கொடுத்து தண்டித்து அனுப்பும்

மலேசியா அதில் நல்ல நாடு, பொதுமன்னிப்பு என வழங்கி கவுரவமாக அனுப்பிவிடுவார்கள், பொது மன்னிப்பு வாங்கிவிட்டு தப்பி செல்பவன் பின்னும் ஏதாவது உருவில் வருவான் அதே போல் கள்ள குடியேறியாக இருப்பான்

அரசு மறுபடியும் பொதுமன்னிப்பு வழங்கி அனுப்பிவிடும், அவன் திரும்பவும் வருவான்

எல்லா நாடுகளும் அப்படி அல்ல மென்போக்கு அல்ல‌, ஐரோப்பா போன்றவை வலிக்காமல் அடிக்கும், அமெரிக்கா இப்பொழுது இந்த கடும் முறைக்கு மாறிவிட்டது

இதுவே இன்னொரு நாடு செய்தால் மானிட குலத்துக்கே பாடம் நடத்தும் அமெரிக்கா. ஆனால் அவர்கள் செய்தால் எல்லாம் நியாயம். வல்லவன் வகுத்ததே நாகரீகம்

இந்தியா இதை செய்யத்தான் குடியேற்ற கணக்கு எடுக்கின்றது, கள்ளகுடியேறிகள் அடையாளம் காணபட்டபின் அவர்களை சம்பந்தபட்ட நாடுகளுக்கு அனுப்புவார்கள்

இது உலக நடைமுறை, எல்லா நாடுகளும் செய்யும், அதைத்தான் இந்தியாவும் செய்கின்றது

கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வி

கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வியினை கேட்டிருக்கின்றார் நெல்லை எம்பி ஞானதிரவியம்

அணுவுலை கழிவு மற்றும் இதர சிக்கல்கள் பற்றி கேட்டிருக்கின்றா, அமைச்சரும் அணுவுலை கழிவு பாதுகாப்பாக புதைக்கபடுகின்றது, 40 வருடம் கழித்து மறுசுழற்சி செய்வோம் என பேசியிருகின்றார்

அத்தோடு திருப்தியாய் அமர்ந்துவிட்டார் எம்பி

இது தொழில்நுட்ப ரீதியாக அமைச்சர் கோட்டைவிட்ட விஷயம், அணுவுலை மற்றும் தத்துவபடி 40 ஆண்டு கழித்து அதை திறந்து மறுசுழற்சி எல்லாம் வாய்ப்பே இல்லை

அணுவுலை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவரா அமைச்சர் என பெரும் சிக்கலை திமுக எழுப்பியிருக்கலாம், அமைச்சரை திணறடித்திருக்கலாம்

ஆனால் ” 40 வருடமா? அப்பொழுது எவன் எம்பியாக இருந்தால் எனக்கென்ன? 3 வருடத்தில் தோண்ட மாட்டீர்கள் அல்லவா அதுபோதும் ..” என்ற திருப்தியுடன்
எம்.பி அமர்ந்துவிட்டார்

விஷயம் இதைத்தான் சொல்கின்றது

தகுந்த தரவுகளுடன் மிக துல்லிய முன் தயாரிப்புடன் அணுவுலை பற்றிய ஓரளவு ஞானத்தோடு சென்றிருந்தால் இன்று ஞானதிரவியத்தை உலகமே பார்க்கும்

அவ்வளவு அழகான வாய்ப்பு இது

ஆனால் இப்பொழுது அவரை பார்த்து சர்வாதிகாரி மட்டும் சுறா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியினை வடிவேலு பார்த்து கையசைப்பதை போல அசைத்துகொண்டிருக்கின்றார்

ஆடாது ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை என்பதை

ஆம் , நாம் ஒன்றும் பார்க்காமல் சொல்லவில்லை சுடலை மாடனின் கொடை விழாக்களை நாமும் தள்ளி நின்று பார்த்திருக்கின்றோம்

உண்மைதான், சாமியாடி கடுமையாக ஆடுவார். ஆட்டமென்றால் அகோரமாகத்தான் இருக்கும். அதில் ஆடு வெட்டுவார் , வாழை குலைகளை உரிப்பார் ஆடா ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு சுடுகாட்டுக்கு தனியே செல்வார்

வரும்பொழுது சுடுகாட்டு சாம்பலோ எலும்போ கையில் இருக்கும்

மானிட வாழ்வில் மட்டும் என்ன உண்டு? இதே காட்சிதான்

மனிதன் ஆடுமட்டும் ஆடுகின்றான், வாழ்வில் அவ்வளவு ஆங்காரமாக ஆடுகின்றான். அவனின் மாளிகை என்ன? தோரணம் என்ன? உணவென்ன? ஆடு என்ன? கோழி என்ன? கொண்டாட்டமென்ன?

ஆனால் கடைசியில் சுடுகாட்டுக்கு தனியே செல்கின்றான், சாம்பலே மிஞ்சுகின்றது

இந்த தத்துவமே தென்னகத்து சுடலை மாடன் கொடைகளில் சொல்லபடுகின்றது, இன்னும் ஆழமாக சொன்னால் தெய்வம் மிக சரியாக மானிட வாழ்வினை காட்சியாய் சொல்லி பாடம் நடத்துகின்றது

அதை புரிந்துகொள்ளத்தான் மானிடனுக்கு புத்தியில்லை, மாயை அவன் கண்களை மறைக்கின்றது

சாமி என்னமோ ஆட்டுக்கும் எலும்புக்கும் ஆசைபட்டதாய் அவன் நினைத்து கொடை நடத்துகின்றான்

சாமியோ அவனுக்கு ஞானத்தை போதிக்கின்றது

அவன் அப்பொழுதும் எனக்கு வாழ்வில் அதுவேண்டும் இதுவேண்டும் என கேட்டுவிட்டு எல்லாம் கிடைத்ததும் கிடா வெட்டுவதாக நேர்ந்துவிட்டு வருகின்றான்

சாமி அதை கேட்டுவிட்டு புன்னகைக்காமல் என்ன செய்யும்? ஆயிரம் கொடைகள் கண்டும் அவனுக்கு ஞானம் வரவில்லையே

அனுதினமும் சுடலை மாடன் கோவிலை பார்க்கும் ஒருவனுக்கு என்ன நினைப்பு வரவேண்டும்? சுடுகாடு போகுமட்டும் இச்சாமியே துணை என்றும், என்றேனும் ஒருநாள் மரிக்கபோகும் நாம் அந்த நீர் குமிழி வாழ்வின் தத்துவத்தை அனுதினமும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் எனும் நினைப்பு வரவேண்டும்,

ஆங்காரமும் வீண் கவுரவத்தையும் விட்டொழிக்கும் நினைப்பு வரவேண்டும்.

சுடலைமாடன் கோவிலை ஊரெல்லாம் வைத்திருப்பதும், அதற்கு கொடை நடத்துவதும் அதற்காகவே

விழாக்களை கொண்டாடுங்கள் ஆனால் அதிலுள்ள தத்துவத்தை கொஞ்சமேனும் நோக்குங்கள்

சுடலை அச்சுறுத்தும் சாமியோ இல்லை படு பயங்கர முரட்டுசாமி அல்ல, அது ஒரு ஞான தத்துவ வடிவம்.

அதன் விழாக்களும் கொண்டாட்டமும் ஆடல் பாடலும் எல்லாமும் அதுவே

ஆடாது ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை என்பதை சுடலை சாமியினை விட்டால் எந்த சாமியின் கொடை இவ்வளவு தத்ரூபமாக கண்முன் காட்டபோகின்றது?

6 மீனவர்களும் பத்திரமாக தேங்காய்பட்டணம் வந்துவிட்டார்கள்

கடலில் சில நாட்களாக தவித்த தமிழக மீணவர்களை இந்திய கடற்படை நவீன கடல் கருவிகள் மற்றும் படகுகள் மூலம் காத்து மீட்டு வந்திருகின்றது

அந்த 6 மீனவர்களும் பத்திரமாக தேங்காய்பட்டணம் வந்துவிட்டார்கள்

இதே 6 மீனவனும் செத்திருந்தால் “ஏ இந்திய அரசே உனக்கேன் கப்பல் ? உனக்கேன் ராக்கெட் உனக்கேன் பாராளுமன்றம்..” என பொங்குவார்கள்

ஆனால் அரசு காப்பாற்றிவிட்டால் ஆமை போல் தலையினை உள்ளே இழுத்துகொண்டு இருப்பார்கள்

ஆக யாரும் செத்தால் ஒப்பாரி வைப்பதும், அவர்களை அரசு காப்பாற்றினால் கம்மென்று இருப்பதும் தமிழக திராவிட நீதி..

சுடலை என்பது தென் மாநில காவல் தெய்வம்

சுடலை என்பது தென் மாநில காவல் தெய்வம், தென் தமிழ்நாடு அவரின் கோட்டை

அவர் பெயர் என்னவென யாருக்கும் தெரியாது, சுடலை எனும் மயானத்தில் இருக்கும் சாமி என்பதால் சுடலை சாமி என்றானார்

சிலர் நினைப்பது போல சிவன் சுடுகாட்டில் பிணத்துக்கு தவமிருப்பது போலவும், சாம்பல் பூசி ஆடவே வந்தது போலவும், சுடலையும் அப்படி ஏதோ பிணத்தினை எதிர்பார்க்கும் பேய் எனவும் நினைத்தால் அது சிற்றறிவு

எல்லோர் வாழ்வும் கர்பத்தில் தொடங்கி மயானத்தில் முடிகின்றது, ஒரு மனிதன் வாழ்வினை முடித்து கடவுளில் கலந்துவிடுகின்றான் என்பது இந்து தத்துவம்

ஆம் சிவனில் கலந்துவிடுகின்றான் என்பதைதான் சுடுகாட்டில் சிவன் இருக்கின்றார் ஆடுகின்றார் என்றெல்லாம் சொல்லிவைத்தார்களே தவிர, சிவபெருமான் ஒன்றும் வெட்டியான் அல்ல‌

சுடலைமாடனும் அந்த சாயலே

இன்றும் கொடைவிழாவில் தென்னகத்தில் சுடலை மயானத்திற்கு செல்கின்றார் எனும் தத்துவம் அதுதான்.

மாறாக வேறொன்றுமில்லை மானிட எலும்புகள் அவருக்கு அவசியம் அல்ல‌

எல்லா மனிதனும் கடைசியில் சுடுகாட்டில் சாம்பலாகி வேகாத எலும்புகளாய் முடியபோகின்றவர்கள் எனும் தத்துவத்தை விளக்கவே சாமியின் நள்ளிரவு மயான வேட்டை நடக்கும்

சாமி தனியாகத்தான் சுடுகாட்டுக்கு செல்வார் ஏன்?

அதேதான் என்னதான் ஆடினாலும் ஒருவன் தனியாகத்தான் கடைசியில் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும் எனும் தத்துவம் அது

சுடலை சாமி காவல் தெய்வம் மட்டுமல்ல, மானிட வாழ்வின் தத்துவத்தை விளக்கும் தெய்வமும் கூட‌

சுடலை என்பவர் பேயோடு சுடுகாட்டில் ஆடுவார், பிணத்துக்கு காவல் இருப்பார் என்பதெல்லாம் “ஏ மனிதா என்றாவது ஒருநாள் நீ சுடுகாட்டுக்கு போவாய், அங்கே சுடலை இருப்பார் அதனால் சாவை கண்டு அஞ்சாதே..” என அவனை தைரியபடுத்த கூற பட்ட மொழிகள்

ஆம் நாம் வணங்கும் தெய்வமே சுடுகாட்டில் இருக்கும் பொழுது சாவை கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும் என்ற தைரியம் எல்லோருக்கும் வரும்

அந்த தைரியத்தை ஊட்ட சொன்ன வரிகளே அவையன்றி வேறொன்றுமில்லை

சிவனின் சாயலான சுடலை , புராணங்களில் சிவனின் மகனாக அறியபடுகின்றார். பகவதி அம்மன் இருக்கும் இடமெல்லாம் அவரின் புத்திரனாக அவரும் இருப்பார்

கேரளாவில் அவ்வகையில் குறிப்பாக தென் கேரளாவில் சுடலை சாமிக்கு ஆலயம் அதிகம் அப்படியே குமரி வழியாக நெல்லை தாமிரபரணி வரை எல்லா ஊரிலும் அவரின் ராஜாங்கமே

சுடலை எப்படி இருப்பார் என யாருக்கும் தெரியாது, ஆனால் காவல்காரன் கட்டுமஸ்தான உடலும் கையில் வெட்டரிவாளும் ஏந்தி நிற்பவன் என நம்பிய அக்கால சமூகம் அந்த உருவையே அவருக்கும் கொடுத்துவிட்டது

அவரும் தன்னை நம்பிய மக்களை எல்லாம் காக்கின்றார், தென்னகத்தில் கரண்ட் கம்பம் இல்லா ஊர் இருக்கலாம் ஆனால் சுடலை சாமி இல்லா ஊர் கிடையாது

ஒரு பனை உயரம் கொண்ட ஒத்தபனை சுடலை, மாசான சுடலை எனும் மயான சுடலை, ஊசிகாட்டு சுடலை என பல பெயர்களில் அவர் வருவார்

உஜ்ஜைனி மகா காளி என்பதை உச்சிமா காளி என மாற்றிய தென்னாடு, உஜ்ஜைனி சுடலையினை உச்சி காட்டு சுடலையாக்கியிருக்கலாம்

அந்த சாமி நீதி நெறி தவறாதவர் என்பது நம்பிக்கை. பாதிக்கபட்டவன் யாராயினும் அவரிடம் புகாரளித்தால் அவர் நீதியினை அருள்வார் என்பது நம்பிக்கை

தென்னக சுடலை சாமி ஆலயங்களில் கடாவும் கோழியும் சிலர் பன்றியுமாக வெட்டுவார்கள், பன்னெடுங்காலத்தில் அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு உள்ளிட்ட பல வரலாறுகள் குறிக்கும் பலி கொடுத்தலின் அடையாளமாக அது தொடர்ந்து வரலாம்

வெட்டுவார்களே தவிர அதை உண்பதெல்லாம் மக்கள்தான், சாமியா உண்ணும்? இல்லை

ஆனால் சர்க்கரை பொங்கலில் திருப்தி அடையும் சுடலையும் உண்டு, பக்தனின் பக்தியே அந்த சாமிக்கு முக்கியம்

சுடலை என்பவர் தென்னாடுடைய சிவனின் உக்கிரமான வடிவம், கால பைரவரின் சாயல். சுடுகாட்டில் ஆடும் சிவனின் தத்துவ வடிவம்

தன்னை நம்பும் பக்தர்களை எக்காலமும் காக்கும் தெய்வம், நீதி இருக்குமிடத்தில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக சட்டென வரமளும் தெய்வம்

ஒருமுறை ஜெயலலிதா ஆடுகோழி கோவிலில் வெட்ட தடை எனும்போழுது முதன் முதலில் அவரை எச்சரித்தது தென்னக சுடலையே, அதன் பின் ஜெயலலிதா அத்தடையினை விலக்கினார்.

அந்த மகா சக்திவாந்த தெய்வத்தை, தென்னகத்தின் அய்யனை, சிவபெருமானின் தத்துவத்தை தயவு செய்து துண்டு சீட்டில் தடுமாறும் ஒருவருக்கு சூட்டாதீர்கள்

மீறி அவரை கலாய்க்க இவரை இழுத்தால் “இந்த துண்டு சீட்டு காரனையா”” என் பெயரில் அழைத்தாய் என கோபமாய் வரும் சாமி உங்களை துண்டு துண்டாக்கிவிடும், கவனமாக இருங்கள்..

அதற்கு மேலும் சொல்வதாக இருந்தால் சுடலை என்றால் சுடுகாடு, மயானம் என சொல்லிவிட்டு சொல்லுங்கள் அது பொருத்தமாக இருக்கும் சாமியும் கோபபடாது..

கமல் முதலமைச்சராக நான் விரும்புகிறேன்

கமல் முதலமைச்சராக நான் விரும்புகிறேன் : நடிகை ஸ்ரீபிரியா

இந்த பழைய படங்களில் அதாவது கமல் ரஜினி மற்றும் இந்த நடிகை இணைந்து நடித்த படங்களிலெல்லாம் அம்மணி கமல் பின்னால் அலையும், ரஜினி இந்த அம்மணி பின்னாலே திரிந்து ஏமாந்துவிடுவார்

அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகின்றது என ஏராளமான படங்கள் இந்த வரிசையில் உண்டு

அம்மணி அரசியலையும் அந்த படங்கள் போலவே நினைப்பதுதான் பரிதாபம்

அம்மணி முன்பு தனக்கு தமிழ் தெரியாது என்றும் தினந்தந்தி மூலம் கற்றதாகவும் சொல்லியது, அரசியலையும் தினதந்தி மூலமே கற்றிருக்கும் போலிருக்கின்றது பாவம்..

ஈரானில் போராட்டம் தீவிரமாகின்றது

ஈரானில் போராட்டம் தீவிரமாகின்றது, ஆளும் கோஷ்டியினை விரட்டி அடிப்பதே தீர்வு என மக்கள் போராட வந்துவிட்டார்கள்

1980ல் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் விஷயம் இது, போராட்டம் ஈரானின் காவல்துறையால் கட்டுபடுத்தமுடியவில்லை இனி ஈரானிய ராணுவம் களத்தில் இறங்கும் போல‌

ஈரான் ராணுவம் அமெரிக்கா, இஸ்ரேல் என பெரும் சக்திகளுடன் மோதும் என எதிர்பார்த்தால் அது சொந்த மக்களுடன் மோதபோகின்றது

ராஜதந்திரத்தில் ஈரானை இழுத்துவிட்டு பார்த்துகொண்டிருக்கின்றது அமெரிக்கா

ஈரான் தன் நாட்டு சிக்கலில் இருக்கும் நேரம் பார்த்து சிரியாவில் ஈரானின் முகாம்களை போட்டு அடித்து தகர்க்கின்றது இஸ்ரேல்

ஈரானின் ராணுவம் தன் சொந்த மக்களையே எதிர்க்கும் அளவுக்கு செல்லாது என்பதால் ஈரானில் எதுவும் நடக்கலாம் மாபெரும் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கின்றது உலகம்

மிக முக்கியமாக கால்பந்து பார்க்கும் ரசிகன் போல அமர்ந்திருக்கின்றார் டிரம்ப்..

அங்கிள் சைமன் ஒரு கதை சொல்கின்றார் இப்படியாக‌

அய்யா Jebamani Mohanraj

ஒரு விஷயம் கேள்விபட்டீர்களா? அங்கிள் சைமன் ஒரு கதை சொல்கின்றார் இப்படியாக‌

காமராஜருக்கு துண்டு நிறைய போர்த்தினார்களாம் , அதில் ஒன்றை உங்கள் தந்தை அதாவது நெல்லை ஜெபமணி திருடினாராம்,

அதை காமராஜர் கண்டறிந்து செவிட்டில் அடித்து பிடுங்கி இதெல்ல்லாம் எழை மாணவருக்கு சட்டை தைக்க வாங்கிட்டு இருக்கேன் என சொல்லி அதை எல்லாம் கொண்டு சென்று ஏழை மாணவருக்கு சட்டை தைத்து போட்டாராம் காமராஜர்

நாம் நெல்லை ஜெபமணி தியாகி என்றுதான் கேள்விபட்டிருகின்றோம், “துண்டு துணி” திருடர் என கேள்விபட்டதில்லை.

ஏன் துண்டு திருடினார் தந்தை? உங்களுக்கு ஏதும் விவரம் தெரியுமா?

ஒருவேளை உங்களுக்கு தலை துவட்டிகொள்ள திருடியிருப்பாரோ?

NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்படும்

NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்படும் : அமித்ஷா

நிச்சயம் இது நாட்டில் அவசியம் செய்ய வேண்டிய பணி, ஒரு நாடு நாடாக இயங்க இது மகா அவசியம். மாபெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது என்றோ செய்ய வேண்டிய பணி

இது அசாமையும், வங்கத்தையும் குறிவைக்கும் செயல் என எவனாவது சொன்னால் அதைவிட பைத்தியகாரதனம் இருக்க முடியாது

காஷ்மீரில் எவ்வளவு இந்தியர்கள் எவ்வளவு ஊடுருவல் கோஷ்டிகள் இருக்கின்றன என்பது தெரியாது, பீகார் பக்கம் நேபாளிகள் போக்கு வரத்து உண்டு

தெற்கே தமிழ்நாட்டில் ஈழ அகதிகளின் முறையான கணக்கு இல்லை, திருப்பூரும் சென்னையும் சர்வதேச சமத்துவபுரமாக எல்லா நாட்டு மக்களாலும் நிரம்பி கிடக்கின்றது

யார் இந்தியர்? யார் அந்நிய நாட்டவர் என தெரியாத அளவு குழம்பி கிடக்கின்றது நிலை

சில ஆப்ரிக்கர்கள் தமிழர் போலவே திரிகின்றனர், வங்கதேசத்துக்காரன் வங்கமாநிலத்தவன் போல் அலைகின்றான், பர்மாவின் ரொஹிங்கியா அகதிகளும் அவ்வாறே

நேபாளிகளும் இன்னும் பலரும் வடகிழக்கு மாநிலமக்கள் போலவே வருகின்றனர், இதெல்லாம் இங்கு பாதுகாப்பு உட்பட பல மிரட்டல்களை ஏற்படுத்தும்

இந்நிலையில் மகா அவசியமான பணியினை மத்திய அரசு முன்னெடுக்கின்றது, இது பாதுகாப்பு, மக்கள் நல திட்டம் உட்பட எல்லா விஷயங்களுக்கும் மகா மகா அவசியமானது

விரைவில் கணக்கெடுப்பு முடிக்கபட்டு உரிய ஆவணமில்லாதோரை அகதிகளாக்கி ஐ.நா அகதிகள் குழு மூலமாக பிரச்சினையினை தீர்க்கவேண்டும்