வழக்கு இனி 29ம் தேதிக்கு ஒத்திவைப்பாம்

ராதாபுரம் தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக டெல்லியில் அப்பாவு என்பவரும் இன்பதுரையும் மல்லுகட்டுகின்றனர், வழக்கு இனி 29ம் தேதிக்கு ஒத்திவைப்பாம்

ராமர்கோவில் கட்டி ராமருக்கு பட்டாபிஷேகமும் நடந்தபின்பே இந்த வழக்கு முடிவுக்கு வரும் போலிருக்கின்றது

அப்பாவுக்கு ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இன்பதுரைக்கு ஆஜரான அஸ்திரம் முகுல் ரத்தோஹி

ஆம் இருவரும் மகா பெரும் விலை வாங்கும் வழக்கறிஞர்கள், சாமான்யர்களால் இவர்களை நெருங்க முடியாது

ஆனால் கூடங்குளம் அணுவுலை உட்பட மகா முக்கிய வாதங்களில் தமிழகத்துக்கான‌ ஆஜரான வழக்கறிஞர்கள் யார் தெரியுமா? யாருக்கும் தெரியாது, அவர்கள் புளியோதரை வக்கீல்களாக எங்கோ அமர்ந்திருக்கலாம்

ஆக தங்கள் கட்சிக்காரனுக்கு வரிந்து கட்டி செலவழிக்கும் கழகங்கள், தொகுதியின் பிரச்சினைக்கு என்ன செய்தன என்றால் ஒன்றுமே இல்லை என்பதுதான் மகா சோகம்

வீரமணி சூழ்ச்சி தெரியாமல் சிக்கிகொண்டார்

மலேசிய ஹைகமிஷன் திமுகவாலோ இல்லை பெரியாரிய கோஷ்டிகளாலோ நடத்தபடுவது அல்ல, அது இந்திய அரசினால் நிர்வகிக்கபடும் அமைப்பு

அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களே, காரணம் தமிழர் நிரம்பிய ஒரு நாட்டுக்கு தமிழரை தூதராகவும் நிறைய தமிழர்களை கூட அமர்த்தவும் இந்தியா விரும்பாது, அது அரசியல்

அப்படிபட்ட இந்திய தூதரகம் வீரமணியினை பற்றி தெரியாமலா அழைத்திருக்கும்?

இவரை அழைத்தால் அவர் கிளம்புவார், இங்கு எதிர்ப்புவரும் அது வீரமணிக்கு வாழ்நாள் அவமானகிவிடும் என தெரிந்தே அழைத்து அடித்திருக்கின்றார்கள்

வீரமணி சூழ்ச்சி தெரியாமல் சிக்கிகொண்டார்

வீ ஆர் சோ சாரி மிஸ்டர் பிரேவ் பெல்..

மண்டையில் முடிதான் இல்லையென்றால் மூளையுமில்லை போலிருக்கின்றது

மண்டையில் முடிதான் இல்லையென்றால் மூளையுமில்லை போலிருக்கின்றது

நம்பிக்கை இல்லாமல்தான் கோவிலுக்கு செல்வார்களாம், கையில் கயிறு கட்டுவார்களாம்

அட கோயமுத்தூர் கோமுட்டி தலையா, நம்பிக்கை இருப்பதால்தான் கோவில் செல்கின்றார்கள் , கயிறு அணிவார்கள். நம்பிக்கை இல்லாதவன் ஏன் செல்ல போகின்றான்?

எங்கே இஸ்லாமியரின் குல்லாவினை, கிறிஸ்தவர் கழுத்தில் தொங்கும் சிலுவை கையில் இருக்கும் பைபிளை பார்த்து “நம்பிக்கை இல்லாததாதால்தான் இதை எல்லாம் வைத்திருக்கின்றீர்கள் அப்படித்தானே..” என இவர் கேட்டுவிடட்டும் பார்க்கலாம்

சினிமா படபிடிப்பின் பொழுதும் பூஜை போடுவார்கள், அன்னார் அங்கு ஈஈஈஈ என இளித்துகொண்டு நிற்பார், படபிடிப்பு முடிந்ததும் பூசனி உடைப்பார்கள்

அதை இனி இவர் தலையில் உடைக்க சொல்ல வெண்டும்

https://m.facebook.com/story.php?story_fbid=1320945061419541&id=100005121782617

பிரிட்டன் ராணிக்கு பெருந்தன்மையும் நியாயமு நாகரீகமும் தெரிந்திருகின்றது

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஏகபட்ட பிள்ளைகள் அதில் டயானாவின் கணவர் சார்லஸ் மட்டும் நமக்கு தெரியும், முக ஸ்டாலின் போல சதா நித்தியகால இளவரசராக இருந்தார் ஆனால் ஸ்டாலின் தலைவராகிவிட்டார் சார்லஸ்க்கு இன்னும் நேரம் வரவில்லை

அந்த சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ, அன்னார் ராஜகுடும்பம் என்பதால் ஏகபட்ட நண்பர்கள் உண்டு, அவர்களுடன் ஆட்டம் பாட்டமெல்லாம் உண்டு

அதில் சிலர் இவரை இழுத்துபோட்டு அமெரிக்காவில் பெரும் குற்றங்களை புரிந்திருக்கின்றனர், அவனை இழுத்தால் அவன் இளவரசரை கைகாட்டுவான், பிரிட்டிஷ் இளவரசை கைது செய்ய சில கட்டுபாடுகளும் இழுபறிகளும் உண்டு என்பதால் அவன் தப்பிவிடுவான்

இதை எப்படி கையாள்வது என திகைத்த அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்.பி.ஐ மூலம் ஆதாரத்தோடு பிரிட்டன் ராணியிடம் போட்டு கொடுத்துவிட்டது

ராணி மகனை அழைத்து நாட்டாமை படத்து விஜயகுமாராக தீர்ப்பு சொல்லி அவரை குடும்பத்தை விட்டு தள்ளிவைத்து ராஜகுடும்பத்தில் இருந்து விலக்கி சாதாரண மனிதர் என அமெரிக்காவிடமே ஒப்படைத்துவிட்டார்

அன்னார் இனி அமெரிக்க சட்டபடி தண்டிக்கபடுவார்

உலகையே ஆண்ட சாம்ராஜயத்தின் வாரிசினை ராணி குற்றத்துக்காக தண்டித்து அனுப்புகின்றார், அவர் நினைத்தால் காப்பாற்றலாம் ஆனால் நீதியினை செய்கின்றார்

உலகையே கட்டி ஆண்ட சாம்ராயத்தின் ராணி அப்படி

உலகபந்தில் ஊசி வைத்து குத்தினால் தெரியகூடிய பகுதி, அதில் ஒரு ராஜா இருந்தார். ராஜா என்று கூட சொல்லமுடியாது முக்காலியில் அமர்ந்திருந்தார் 4 வது காலாக யாராவது தாங்குவார்கள்

அவரின் பிள்ளைகள் எத்தனை கொலை செய்தாலும் அசரமாட்டார், பிள்ளைகள் திகாரில் இருந்தாலும் பார்த்து உருகி உருகி அழுவார்

பிரிட்டன் ராணிக்கு பெருந்தன்மையும் நியாயமு நாகரீகமும் தெரிந்திருகின்றது

ஆக பிரிட்டன் ராணி தங்கபதக்கம் சிவாஜி போல இருக்கின்றார் தமிழகத்து ராஜா பாபநாசம் கமலஹாசன் போல

இருந்திருக்கின்றார்

இதற்கெல்லாம் என்ன காரணம்?

ஈரானும் ஈராக்கும் செழிப்பான நாடுகள், வளங்களுக்கு குறைவில்லை

ஆட்சிமாற்றத்துக்கு பின் தங்களுக்குள் மோதின , பின்னணியில் இருந்தது அமெரிக்கா

பின் ஈரானை விட்டுவிட்டு ஈராக்கை குறிவைத்து அடித்தது அமெரிக்கா, ஈராக் நாசமானது அதற்கு தலைவனுமில்லை நல்ல வழிகாட்டியுமில்லை

நிலைகுலைந்த ஈராக்கை பார்த்துகொண்டே ஈரானையும் தன் நாடகங்கள் மூலம் திணறடித்து அதையும் குழப்பியாயிற்று

இன்று ஈராக்கிலும் ஈரானிலும் உள்நாட்டு போராட்டங்கள் கட்டுபடுத்தமுடியா அளவு செல்கின்றது

இதற்கெல்லாம் என்ன காரணம்? அவற்றின் வளம் ஒருபக்கம் இருந்தாலும் அந்நிய அமெரிக்காவின் கைகூலிகள் இரு தேசங்களிலும் அதிகம்

அவர்கள் மக்களை ஒன்றுசேர விட மாட்டார்கள், இல்லா சித்தாந்தம் பேசுவார்கள், குழப்பங்களை உண்டாக்குவார்கள் நாட்டை நாசமாக்குவார்கள்

ஈராக் நிலை குலைந்து கிடக்கின்றது, ஈரான் அந்நிலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது

சொந்த நாட்டு அபிமானமும், சுயபுத்தியும் , எதிர்கால திட்டமிடலும் இல்லா கூட்டத்தை அந்நிய கைகூலியாக்குதல் எளிது அந்நாட்டை நாசமாக்குதல் எளிது

இந்தியாவிலும் அதை செய்ய சில கும்பல்கள் கடும் முயற்சி செய்கின்றன, ஆனால் அவைகளின் முயற்சி ஒரு காலமும் வெற்றிபெறாது..

உலக நிலவரங்களை பார்த்து இந்தியராகிய நாம் பாடம் கற்க வேண்டும்

இந்தியாவே நமக்கான பாதுகாப்பு, அத்தேசம் வலுவாக நிற்பதே நம் நல்வாழ்வுக்கான அஸ்திவாரம்

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்

வளமான குற்றாலம் தென்காசி போன்ற பசுமையான பகுதிகள் எல்லாம் அவர்களுக்கு, ராதாபுரம் கூடங்குளம் போன்ற வறண்ட ஏரியாக்கள் நெல்லைக்கு

இனி தமிழ்நாட்டின் ராஜஸ்தான் எது என கேட்டால் தயக்கமின்றி நெல்லையினை சொல்லிவிடலாம்

மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை

மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை விதிக்கபட்டுள்ளது

மலேசியா இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வாழும் அமைதியான நாடு.

சமீபத்தில் கூட இந்திய மலேசிய முறுகல் லேசாக வந்து அதன் பின் இயல்பு நிலை திரும்பிற்று

ஆயினும் தடைக்கு என்ன காரணம் என வீரமணியிடம் கேளுங்கள் “ஆரிய பார்பானிய இந்துத்வா சதி” என பதில்வரும்,

மலேய அரசுக்கும் பார்ப்பானியத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் இதை பெரியார் அன்றே சொன்னார் என்பதோடு ஓடிவிடுவார்கள்