வீழ்ந்தபின்பே அறிவு வரும்

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் – சச்சின் பைலட்

காங்கிரஸ் இனி இந்து மக்களை கவராமல் நிலைக்க முடியாது என்ற நிலைபாட்டுக்கு வந்துவிட்டது, திமுகவுக்கு அந்த எண்ணம் இன்னும் வரவில்லை வரவும் வராது

காங்கிரஸ் அளவு அது வீழ்ந்தபின்பே அறிவு வரும்

உழைக்காமலே இருக்கும் சோம்பேறிக்கு சொத்து மேல் ஆசை வரும்

உழைத்து சொத்து சேர்ப்பவனை விட உழைக்காமலே இருக்கும் சோம்பேறிக்கு சொத்து மேல் ஆசை வரும், அப்படி ஒரு சம்பவம் சென்னை படப்பையில் நடந்திருக்கின்றது

ஒரு அதிமுக பிரமுகர் இருந்திருக்கின்றார், அதிமுக பிரமுகர் என்றாலே பணக்காரர்கள் அல்லவா? அப்படி அவருக்கு சொத்துக்கள் நிரம்ப இருந்திருக்கின்றது அவர் காலமாகிவிட்டார்

இந்நிலையில் அவரின் இரண்டாம் மகனும் இறந்த நிலையில் தாயினை ஒரு கும்பல் கடத்தி சென்றிருக்கின்றது, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒரு கும்பல் கடத்துவதை கண்டு போலிசாருக்கு தகவல் சொல்லிவிட்டார்கள்

போலீஸ் அவரின் மருமகளை விசாரித்திருக்கின்றது பின்பு கடத்தியதே அவள்தான் என்பது தெரியவந்திருக்கின்றது

விசாரணையில் மற்ற இரு கொலைகளும் வெளிவந்திருக்கின்றன‌

அதாவது திரண்ட சொத்து மூத்த மகனை பேராசைகாரனாக்கியிருக்கின்றது அவனுக்கேற்ற மனைவியும் வாய்த்திருக்கின்றாள்

முதலில் மாமனாரை அந்த ஜோடி போட்டு தள்ளியிருக்கின்றது பின் இளைய மகனையும் முடித்திருக்கின்றது

இந்நிலையில் சொத்தின் ஒரே இடைஞ்சலான மாமியாரை கையெழுத்து வாங்க கடத்தியிருக்கின்றது, துப்பாக்கி முனையில் மிரட்டும் பொழுது காவல்துறை மீட்டிருக்கின்றது

சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகியிருப்பது கவலைக்குரிய விஷயம், இனி துப்பாக்கி முனையில் வேட்பாளர்கள் வாக்கு கேட்பது நடக்கலாம்

இந்த கொலைகார தம்பதியர் நினைத்தால் மாமியாரையும் வெளிதெரியாமல் சோலி முடித்திருக்கலாம் சொத்து தானாக அவர்கள் கைக்கு சென்றிருக்கும்

இங்கேதான் விதி சிரிக்கின்றது

இந்த மாமியாரும் அடையாளம் தெரியாமல் கொல்லபட்டிருந்தால் அந்த இரு கொலைகளும் வெளிதெரியாமல் போயிருக்கும் அல்லவா?

தர்மத்தின் விதி என்பது இதுதான்

இனி அவர்கள் கொலைகாரர்கள் அந்த சொத்து கொலைகார சொத்து

குடும்பம் நன்றாயிருக்க ஒரு மனிதன் தேடி வைத்த சொத்தே அக்குடும்பத்தை எப்படி அழித்திருக்கின்றது பார்த்தீர்களா?

இது இன்று நேற்றா நடந்தது? மகாபாரத கதையே இதுதானே

ஒரு குடும்பத்தில் பாசம் நிலைக்க வேண்டுமானால் சொத்தோ பணமோ இருத்தலே கூடாது என்பதுதான் எக்காலத்திலும் தத்துவமாக இருந்திருக்கின்றது, அது இக்காலத்திலும் பொருந்துகின்றது

பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த வாலிபர் மீட்பு

குமரிமாவட்டத்தில் பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த வாலிபர் மீட்பு

அதிகாலை கிணற்றின் பக்கமாக சென்றவர்கள் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு பேய் என பயந்து பின்பு மெதுவாக அது ஆசாமி என உணர்ந்து மீட்டிருக்கின்றார்கள்

விசாரணையில் அவர் கனவில் பேய்கள் வந்ததாகவும் அதற்கு பயந்து ஓடும்பொழுது கிணற்றில் விழுந்ததாகவும் சொல்லிகொண்டிருக்கின்றார்

காவல்துறை நம்புமா? அது பலத்த விசாரணையில் இறங்கிவிட்டது

அன்னாருக்கு திருமணம் ஆகியிருந்தால் விசாரிக்க ஒன்றுமே இல்லை அவர் சொன்னது உண்மை என ஒப்புகொள்ளலாம், மாறாக திருமணம் ஆகியிராவிட்டால் சிக்கலே..

முரசொலி நிலம் விவகாரம்

முரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு: ராமதாஸ், சீனிவாசனுக்கு திமுக நோட்டீஸ்

ஆக திமுகவின் மானம் 1 கோடி ரூபாய் மட்டுமே

(பஞ்சமி நிலத்தின் ஆவணங்களை இப்பொழுதே விடுவார்களா? தேர்தல் நேரம் என ஒன்று எதற்கு இருக்கின்றது? உடனே பட்டா போல காட்டுவதற்கு அவர்கள் என்ன மு.க ஸ்டாலினா)