பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள்

தமிழ்நாட்டில் பெரும் புயலாக கிளம்பும் என எதிர்பார்த்த விவகாரம் பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள், ஆனால் வழக்கமாக எல்லா விஷயங்களையும் கடக்கும் தமிழகம் அதையும் கடந்துவிட்டது

விவசாயமே செய்ய கூடாது ஆனால் காய்கறி விலை அரிசி விலை உயர கூடாது, வெங்காய விவசாயமே செய்ய கூடாது ஆனால் விலை உயர கூடாது என உயர்ந்த கொள்கையுள்ள தமிழகம் இப்பொழுதும் அப்படி மாடே வளர்க்க கூடாது ஆனால் சுத்தமான பால் வேண்டும் என எதிர்பார்க்கின்றது

அது எப்படி சாத்தியமாகும்

உயர்சாதி பசுக்கள் கொடுக்கும் பால் விஷம் என்பதெல்லாம் சரியல்ல, எல்லா நாட்டுக்காரனும் அதை குடித்து ஆஜானுபாகுவாக காட்சியளிக்கின்றான்

சிக்கல் பாலில் இருந்து வெண்ணெய் எடுத்துவிட்டு பின் அது நீர்த்து போனபின் அதில் கலக்கும் ரசாயாணங்களில் இருக்கின்றது

சும்ம்மாவே கறந்து சொசைட்டிக்கு வரும் பாலில் தண்ணீர் கலப்பு அதிகம், சொசைட்டி ஊழியர் திருப்பணியில் இன்னும் அதிகம்

இதில் எடுக்க வேண்டிய வெண்ணெய் எல்லாம் எடுக்க மீதி இருப்பது வெறும் நீர், அதில்தான் புகுந்துவிளையாடி கண்டதையும் சேர்த்து என்னவோ செய்து பாலை விஷமாக்குகின்றார்கள்

உற்பத்தி மிக குறைவு மக்கள் தொகை மிக அதிகம்

பின் எப்படி ஆகும் இப்படித்தான் ஆகும்.

இதற்கு வட இந்தியவர்கள் பரவாயில்லை அவர்கள் அதிகம் படிக்காதவர்கள், திராவிட கோஷ்டியினை பொறுத்தவரை பான்பராக் மற்று பசு மூத்திர கோஷ்டிகள்

ஆனால் சுத்தமான பாலும் வெண்ணையும் நெய்யும் அவனுக்குத்தான் கிடைக்கின்றது, அதிகம் படித்த திராவிடம் கலப்பு பாலில் புற்றுநோய் முதல் கண்ட நோயிலும் சாகின்றது

இந்த விஷயத்தில் அவன் சரியாகத்தான் இருக்கின்றான்

இந்த விஷயத்தை திமுக கையில் எடுத்தது பின்பு பசுபாதுகாப்பு போன்ற விஷயங்களை நோக்கி அது நகர்வது போல் தெரிந்ததால் சட்டென்று கீழே எறிந்துவிட்டு மகராஷ்ட்ரம் இலங்கை என அது கத்த தொடங்கிவிட்டது

தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..

இந்தியாவினை எப்படி குளிர்வித்தால் தங்கள் நாட்டில் தலையிட வரமாட்டார்கள் என்பது இலங்கை புத்த பிக்குகளுக்கு தெரிந்துவிட்டது

இலங்கை புத்த பிக்குகளின் கொள்கையும் திராவிட கட்சிகளின் கொள்கையும் ஒன்றே, அதாவது அதிகாரம் தங்களிடம் இருக்க எதையும் செய்வார்கள்

அவ்வகையில் திமுகவின் பகுத்தறிவு நாத்திகவாதமும் இலங்கை பிக்குகளின் புத்தமும் ஒன்று

இதோ ஒரு பிக்கு சிவலிங்கத்துக்கு பிரதோஷசத்தை முன்னிட்டு அபிஷேகம் செய்யும் காட்சி, இப்படியே இருந்தால் அவர்களுக்கு நல்லது

ஆக தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..

சூதாட்டம் என்பது மாபெரும் தீமை

சூதாட்டம் என்பது மாபெரும் தீமை, ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத வழக்கங்களில் மாது, மது, சூதாட்டம் முதன்மையானது என்கின்றது சங்க இலக்கியம்

அந்த இலக்கியத்தில் பரத்தை தன் மகளிடம் தீயவர் செல்வம் ஒழிய “நம்மையும் கள்ளையும் சூதையும் நான்முகன் படைத்தாவாறே” என சொல்வதில் தெரிகின்றது சூதாட்டத்தின் வலி

அந்த சூதாட்டம் ஆசியாவின் நோயாய் இருந்திருக்கின்றது, இங்கு அதை ஒழிக்க சூதாட்டத்தின் கொடுமையினை மகா பாரதமே விளக்குகின்றது

பாரத காவியத்தின் அடிநாதமே சூதாட்டத்தால் எழும் தீமையினை குறித்ததே

இங்கு இந்துமதமும் அதன் தாத்பரிய தத்துவங்களும் மக்களின் மனங்களை ஆலயம், தமிழ்சபை, தெருகூத்து என இங்கு ஆட்சி செய்த காலங்களில் சூதாட்டம் இங்கு சமூக தீமையாக கருதபட்டிருக்கின்றது

மதுபழக்கமும் அவ்வாறே சமூக தீமையாய் இருந்திருக்கின்றது,

பாவத்தை கண்டு அஞ்சுவது போல் மது சூது இரண்டையும் கண்டு இங்குள்ள சமூகம் ஒதுக்கும்படி இந்து தர்மம் நல்வழி காட்டியிருந்திருக்கின்றது

ஆசியாவில் சீனாவில் புத்தமதமும் இன்னும் பல குழப்பங்களும் வாழ்க்கை தர்மத்தை அவர்களுக்கு போதிக்கவில்லை, புத்தமதம் ஒரு மதமாக சொல்லபட்டதே தவிர அதில் புராண கதையோ சம்பவங்களோ எடுத்துகாட்டோ எதுவுமில்லை

இங்கு சூதாடினால் தர்மனை போல் திரிவாய் என்றோ, பெண் ஆசை கொண்டால் ராவணன் போல் அழிவாய் என்றோ சொல்ல புத்தமதத்தில் எடுத்துகாட்டு இல்லை

விளைவு சீனசமூகம் சூதாட்டத்தை தொடர்ந்தது, அதை செல்லுமிடமெல்லாம் தூக்கி திரிந்தது

இன்று அவர்களின் மக்காவ் தீவு சூதாட்டத்தின் சொர்க்கபுரியாக திகழ்கின்றது, மிக மிக ஒரு சிலரே அதில் விதிவிலக்கு மற்ற சீனர்களுக்கு சூதாட்டம் என்பது டீ குடிப்பது போன்ற வாடிக்கை

சும்மாவே சூதாட்டபுரியாக இருந்த தென் சீனத்து மக்காவு தீவினை போர்த்துகீசியன் வந்து கோவா கலாச்சாரத்தை புகுத்தி அதை என்னவோ செய்து வைத்திருக்கின்றான்

அத்தீவு அப்படியே இருக்கட்டும் என்பதுதான் சீன கம்யூனிச அரசின் ஆசையும் கூட‌

மாபெரும் தீயபழக்கமான சூதாட்டம் கடும் உழைப்பாளிகளான சீனர்களின் மிகபெரும் பலவீனம், அதில் அவர்கள் இழக்கும் பனம் ஏராளமாயினும் தொடர்ந்து வரும் பாரம்பரியம் அவர்களை இயக்குகின்றது, இதனால் அவர்கள் இழப்பது ஏராளம்

இன்றே இப்படி என்றால் அக்காலத்தில் எவ்வளவு இழந்திருப்பார்கள்?

இந்து தர்மம் அதிலிருந்து இந்நாட்டு மக்களை காத்திருக்கின்றது, குடியில் இருந்தும் தள்ளி வைத்திருக்கின்றது. அந்த இந்தியா உலக வியாபாரிகள் எல்லாம் ஓடிவரும் செல்வபுரியாய் சொர்க்கபுரியாய் இருந்திருக்கின்றது

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இந்த இரண்டையும் திறந்தன, மதுவும் லாட்டரியும் அவர்களால் அறிமுகமாயின‌

கடவுளே இல்லை என சொல்லும் கோஷ்டி எதை சிந்திக்கும்? எந்த மக்கள் நலனை தேடும்? அவர்களின் சொந்த நலன் போதாதா?

வள்ளுவன் கள்ளுண்ணாமை என அதிகாரம் இயற்றும் அளவு அன்றே குடிபழக்கம் சீரழித்திருக்கின்றது

நெருப்பை நெய்யால் அணைத்தேன் என குடிபற்றி கம்பன் கூட ராமயணத்தில் சொல்கின்றான்

இங்கு லாட்டரிம் எனப்படு சூதாட்டத்தின் ஒரு பிரிவினை ஜெயலலிதா ஒழித்து கட்டினாலும் மதுவினை ஒழிப்பதில் அவருக்கு தயக்கம் இருந்தது, அதையும் ஒழித்திருந்தால் மிக சிறந்த முதல்வராக அவர் இருந்திருக்க கூடும்

இந்துமத பாத்திரங்கள் பக்தியில் கலைகளில் கலந்து எல்லா வீடுகளையும் தொட்டகாலத்தில் குடியும் சூதாட்டமும் கட்டுபடுத்தபட்டிருக்கின்றன‌

பிற்கால பகுத்தறிவு காலத்தில் இந்துமதத்தை புறக்கணிக்க தொடங்கியபொழுது சமூக சீர்கேடு தொடங்கிற்று

குடி இன்று சமூக கடமையாகிவிட்டது, இன்னும் அறம் அறியா ஆட்சிகள் வருங்காலத்தில் வந்தால் சூதாட்டமும் இங்கு சமூக கடமையாகலாம், ஏன் தாய்லாந்து காட்சிகளும் அரங்கேறலாம்

ஒழுக்கமான கட்டுகோப்பான சமூகமாக வாழ அன்றே பல தத்துவங்களை போதித்ததுதான் இந்துமதம் என்பது சீனர்களின் சூதாட்ட விடுதியினையும் தமிழக டாஸ்மாக்குகளையும் பார்த்தால் நினைவுக்கு வருகின்றது

அம்மதம் விஞ்ஞானமும், வாழ்க்கை தத்துவமும், உளவியலும் கலந்த மானிட வாழ்வுக்கு மிக நெருங்கிய மதமாய் இருக்கின்றது என்பது உலகை சுற்றி பார்த்தால் புரிகின்றது

பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை

பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை, எல்லாம் எப்பொழுது வந்திருக்கின்றது என்றால் பிரிட்டன் அரசு 1857ல் இந்தியாவினை எடுத்து கொண்டபின்பே வந்திருக்கின்றது

பூரா சாதி சங்கமும் அவன் காலத்தில்தான் முளைத்து இன்று அரசியலாகியிருக்கின்றது..

அதை இன்றைய அரசியல்வாதிகள் விடாமல் பிடித்து நெருப்பை வளர்த்து குளிர்காய்கின்றார்கள்

இதுக்கெல்லாம் கவலைபடாத பங்கு

“பங்கு இப்படித்தான் நம்ப தலைவர் திமுகவுல இருக்கும் போது கணக்கு கேட்டாரு, அதுக்கு என்ன கணக்கு வேணும் என் புள்ளைங்க கணக்கா அப்படின்னே கேட்டாரு ஒரு தலைவரு. அவரு அல்லக்கை இனி வேட்டிய அவுத்துதான் காட்டணும்னு சொல்லிச்சு, இப்படில்லாம் கேள்வி வர்றது நம்ம கட்சிக்கு புதுசில்ல.

ம்ம்ம்

இதுக்கெல்லாம் கவலைபடாத பங்கு, கடைசியா நானும் ஒரு மகனை பெற்று எம்பி ஆக்கியிருக்கின்றேன்னு சொல்லு

சொல்லிட்டா..

அப்பவும் மகன் பெத்துட்டா நீ ஆம்பிளையான்னு கேப்பாங்க..

கேட்டுட்டா..

மன்னார்குடி குடும்பத்தையே விரட்டிட்டு கட்சி நடத்துற நான் ஆம்பிளையா? இன்னும் ஒரு குடும்பத்துகிட்ட சிக்கி கிடக்குற அவங்க ஆம்பிளையான்னு கேளு, ஒரு பய பேசமாட்டான்..”

ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை

ஈரானில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களை உலக மீடியாக்கள் குறிப்பாக அமெரிக்கா “ஈரானில் மனுகுல நெருக்கடி” என சொல்ல ஆரம்பித்தவுடன் சட்டென தன் நாட்டின் இணைய தொடர்பு உட்பட எல்லா தொடர்புகளையும் துண்டித்தது ஈரான்

ஒரு விஷயமும் வெளிதெரியாமல் பார்த்துகொண்டு கலவரத்தை அடக்கிகொண்டிருக்கின்றது

இந்நிலையில் தகவல் தொடர்பை துண்டித்த ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை விதித்துள்ளது அமெரிக்கா

ஈரான் அதிபர், அதி உச்ச தலைவர், ராணுவ தளபதி என பலரை தொடர்ந்து இப்பொழுது தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடையாம் , இவர்கள் எல்லாம் மனுகுலத்துக்கு எதிரானவர்களாம்

இவர்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து மோடியினை நினைத்து பெருமூச்சு விடுகின்றார்கள்

ஆம் மோடிமேலும் ஒருகாலத்தில் அமெரிக்கா தடை விதித்து “மனுகுலத்துக்கு எதிரானவர்” என சொல்லி விசா மறுத்தது, அதே அமெரிக்க்கா இப்பொழுது மோடிக்கு சிகப்பு கம்பளம் எல்லாம் விரிக்கின்றது

நமக்கும் அப்படி காலம் வரும் என கண்களை துடைக்கின்றது ஈரானிய கோஷ்டி

மோடி எவ்வளவு பேருக்கு ஆறுதல் வழங்குகின்றார் பார்த்தீர்களா?

பாலஸ்தீன இஸ்லாமியர் இந்தியாவுக்கு நன்றி..

உள்நாட்டு இஸ்லாமியரை ஒரு காலமும் நம்ப வைக்கமுடியாது அல்லது நம்பமாட்டார்கள், அதே நேரம் அவர்கள் வாக்கு நமக்கு மகா அவசியமும் இல்லை ஆனால் இஸ்லாமிய நாடுகள் ஆதரவு கடும் அவசியம் என கருதுகின்றது மத்திய ஆளும் தரப்பு

இதனால் வெளிநாட்டு விவகாரங்களில் இஸ்லாமியருக்கு ஆதரவான மிக முக்கிய முடிவுகளை எடுக்கின்றார்கள், இப்பொழுது பாலஸ்தீன் சுயாட்சிபெற்ற தனி இனம் மற்றும் நாடு என ஐநாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினை எதிர்த்து வாக்களித்திருக்கின்றது இந்தியா

ஆக பாலஸ்தீன இஸ்லாமியர் இந்தியாவுக்கு நன்றி..நன்றி என சொல்லிகொண்டிருக்க உள்நாட்டு இந்தியர் தலைகீழாக தொங்கிகொண்டிருப்பதுதான் வினோதம்..