குற்றத்திற்கு துணை சென்றவர் என்பதில் சந்தேகமில்லை

பேரரிவாளன் ஒன்றும் குற்றமற்றவர் அல்ல, யாழ்பாணம் சென்று புலிகளை சந்தித்தது, இந்திய அமைதிபடைக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் உதவியது என ஏராளம், அன்றே இந்திய ராணுவத்துக்கு எதிராக சாத்தானின் படைகள் என்ற புத்தகத்தை அச்சடிக்க புலிகளுக்கு உதவினார் அவர்

தனுவின் பெல்ட்டில் இருந்த பேட்டரி மட்டுமல்ல, சிவராசனுக்கு வயர்லெஸ் தொடர்பிற்காக‌ சக்திவாய்ந்த கார் பேட்டரி வாங்கி கொடுத்தது, கவசாகி பைக் வாங்கி கொடுத்தது என ஏராள குற்றம் உண்டு

அதாவது இவர் ஒரு புலி, 100% விடுதலை புலி, அதில் சந்தேகமே இல்லை

ராஜிவ் கொலையில் செத்துபோன ஹரிபாபு , ஈழபுலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்பதும், அவர் ராஜிவ் கொலைக்கு பின் ஈழத்தில் குடியேற இருந்ததும் அவரின் காதலி எழுதிய கடிதத்தில் தெரிகின்றது

அவரின் பங்களிப்பு போன்றதுதான் பேரரிவாளனின் பங்களிப்பும், குற்றத்திற்கு துணை சென்றவர் என்பதில் சந்தேகமில்லை

இன்னும் ஒரு இடத்திலும் புலிகளை அவர் கண்டித்ததுமில்லை, அந்த சாகச நாடககாரி அற்புதம்மாளும் ஒரு இடத்திலும் புலிகளால் என் மகன் வாழ்வு நாசமாயிற்று என சொல்லவுமில்லை

அற்புதம்மாள் சாவித்திரியினை விட மிக சிறந்த நடிகை, அவரின் தேர்ந்த நாடக காட்சிகளை பாருங்கள் என் மகன் குற்றமற்றவன் என சொல்வாரே தவிர ஒரு இடத்திலும் என் மகன் குற்றமற்றவன் என புலி பிரபாகரன் சொல்லவேண்டும் என்றோ, புலிகள் என் மகனுக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என சொல்ல வேண்டும் என்றோ சொல்லவே மாட்டார்

ஆம் இதுவரை சொன்னதில்லை சொல்லவும் மாட்டார்

நோயுற்ற கணவன் மகனோ சிறையில், ஆனால் டெல்லிவரை அவரால் வழக்கு நடத்தமுடிகின்றது மகள் திருமணம் பேத்தி திருமணம் வரை பிரமாண்டமாக நடத்தமுடிகின்றது என்றால் எப்படி?

ராஜிவ் கொலையில் சிக்கி தன் மகளை லண்டனில் டாக்டராக்கிய நளினியும், பேரரிவாளன் என்பவனின் தாயும் பெற வேண்டியதை கனிசமாக பெற்றுவிட்டார்கள் பெற்று கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்

ராம்சாமியின் சாதி ஒழிப்பின் விளைவுகள் இதுதான்..

ராம்சாமி இதே நாளில் 1957ல் சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்தினார் என கறுப்பு சட்டைகள் கண்ணீர்விட்டு கொள்கின்றன‌

பாருங்கள், பெரியார் 1930ல் இருந்து 1975 வரை சாதி ஒழித்தார், அவரோடு அண்ணா ஒழித்தார்

இவர்களுக்கு பின் கருணாநிதி 2018 வரை ஒழித்தார்

இப்படி எல்லாம் இவர்கள் சாதி ஒழித்ததின் பலன் என்ன என புரட்டி பார்த்தால், 1930க்கு முன் அதிகம் இல்லா சாதி சங்கங்களும் அன்று அறவே இல்லா சாதி அரசியலும் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றது

எல்லா சாதிக்கும் ஒரு கட்சி அதற்கு ஒரு தலைவன், அவனவனுக்கு கோஷம் போட 4 அல்லக்கை என ஜாதிகள் கன ஜோராக வளர்ந்து நிற்கின்றன‌

பின் பெரியார் எந்த சாதியினை ஒழித்தார் என்பதுதான் தெரியவில்லை, சாதி ஒழிப்பு என சாதிக்கு உரமும் நீரும் கொடுத்து வளர்க்கும் மிகபெரிய விஷயத்தை செய்திருக்கின்றார்கள் அது இன்று ஆலமரமாய் நிற்கின்றது

ஆக சாதி ஒழிப்பேன் என கிளம்பி பார்பானுக்கு எதிராக கொடிபிடித்து ஆயிரம் சாதிகளை வளர்த்துவிட்டு சென்றுவிட்டார் ஈரோட்டு ராம்சாமி, அவரின் அடிப்பொடிகள் அதை சில ஆயிரமாக பெருக்கி வைத்திருக்கின்றன‌

ராம்சாமியின் சாதி ஒழிப்பின் விளைவுகள் இதுதான்..

மும்பையினை நொறுக்கினால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்பது பாகிஸ்தான் கணக்கு

மும்பை இந்தியாவின் மகா முக்கிய பொருளாதார கேந்திரம், கல்கத்தாவினை கம்யூனிஸ்டுகளும் சென்னையினை திராவிட கோஷ்டிகளும் போல மும்பையினை கெடுக்க யாருமில்லை என்பதால் அது அசுர வளர்ச்சியில் முதலிடத்தை பெற்றுவிட்டது

மும்பையினை நொறுக்கினால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்பது பாகிஸ்தான் கணக்கு, கராச்சியில் இருந்து தொட்டுவிடும் தூரம் என்பதால் அடிக்கடி மும்பை பாகிஸ்தானின் இலக்காகும்

அதுவும் 1990க்கு பின் மும்பை குறிவைத்து அடிக்கபட்டது, 1993 குண்டுவெடிப்புகள் மறக்க கூடியவை அல்ல அதன் பின்னும் சிறிதும் பெரிதுமாக ஏகபட்ட வெடிப்புகள், வாஜ்பாயின் வருகைக்கு முன்பு கூட 2003ல் வெடித்தது

அப்படிபட்ட மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த 2008ல் லஷ்கர் இயக்கம் திட்டமிட்டது, 2009 என்பது பின்லேடன் கொல்லபடாத காலம், அல் கய்தாவின் ஆசீர்வாதத்தில் வெறியாட்டங்கள் நடந்த காலம்

நிச்சயம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அதற்கு உதவியது

11 பேர் கொண்ட குழு கராச்சி வழியாக வந்து குஜராத்திய மீன்பிடி படகை கைபற்றி மீணவனை கொன்று ஜாலியாக மும்பை கடற்பரப்பில் வந்து இறங்கியது

இதுவரை அப்படி ஒரு வியூகத்தில் அவர்கள் ஊடுருவில்லை என்பதால் யாரும் எதிர்பாரா தாக்குதல் அது

வந்தவர்களிடம் பெரும் திட்டம் இருந்தது, எதெல்லாம் இலக்கு என மிக சரியாக திட்டமிட்டு வைத்திருந்தார்கள், அவர்களின் இலக்கு ஐரோப்பியர் மற்றும் யூதரை சிறைபிடிப்பது அல்லது கொல்வது

அப்படியே போனசாக இந்தியரையும் கொல்வது

அவர்கள் திட்டபடி மிக சரியாக இயங்கினார்கள், ஒரு கோஷ்டி தாஜ் ஹோட்டலை கைபற்ற ஒரு கோஷ்டி நரிமண் பகுதி யூத குடியிருப்பை வளைத்தது ஒரு கோஷ்டி கவனத்தை திருப்ப ரயில்நிலையத்தில் சுட்டது

ஆம் ரயில் நிலையத்தில் சுட்டது கவனத்தை திசை திருப்பவே

மும்பை அலறியது, நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கை கூடியது, அரசுகள் திகைத்தன மாநில காவல்துறை முழு வீச்சில் இறங்கி நிலமையின் விபரீதம் புரியாமல் சிலரை இழந்தது

இந்த இடத்தில் ஒரு விஷயம் கடுமையாக சொதப்பியது அது மத்திய கமாண்டோ படையினரின் வருகை, உண்மையில் நம்மிடம் அன்று விழிப்பான கமாண்டோ படை இல்லை

ஆளாளுக்கு வீட்டில் இருந்த கமாண்டோக்களை எழுப்பி அவர்கள் குளித்து சாமி கும்பிட்டு சீருடை அணிந்து துப்பாக்கிக்கு எண்ணெய் போட்டு விமானத்துக்கு வந்து அதற்கு பெட்ரோல் போட்டு வர ஒரு நாள் ஆனது

ஆம் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது

எனினும் மகராஷ்ட்ர காவல்துறை நிலைமையினை கட்டுக்குள் வைத்திருந்தது பின் கமாண்டோக்கள் வந்து காட்சிகளை முடித்து வைத்தனர்

ஒருவழியாக கிட்டதட்ட 200 பேரை பலிகொண்டு, 400 பேரை காயபடுத்தி இன்னும் சில காவல் அதிகாரிகளின் உயிர்களோடு அந்த கொடுங்காலம் கடந்தது

உலக அளவில் பெரும் பதற்றத்தை அது ஏற்படுத்தியது, இந்தியா போர் தொடுக்க தயாரனது போல் காட்சிகள் நடந்தன‌

ஆனால் இது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே யுத்தம் நடக்க செய்ய தீவிரவாதிகள் செய்த சதி என இருநாடுகளும் சொல்லிகொண்டு பின்வாங்கின‌

உண்மையில் காங்கிரஸ் அரசு யுத்தத்தை விரும்பவில்லை என்பதுதான் நிஜம், அது பின்வாங்கிற்று

இவ்வளவுக்கும் கசாப் தன்னை தயார்படுத்தியது ஐ.எஸ்.எஐ என சொன்னான், பாகிஸ்தான் அமைச்சரே கசாப் ஒரு பாகிஸ்தானி என சொன்னார்

இதுபோக மும்பையில் இவ்வளவு பெரும் தாக்குதல் நடத்த யார் உதவினார்கள் என்ற பட்டியல் உண்டு, இன்னும் பெரும் ஆதாரம் உண்டு

அமெரிக்கா டேவிட் ஹெட்லி (அது அவனின் போலி பெயர்) எனும் அல்கய்தா உறுப்பினரை பிடித்து இது சம்பந்தமாக காட்டிய தீவிரத்தில் கொஞ்சமும் இந்தியா காட்டவில்லை

இஸ்ரேல் இதன் பின்பு இந்தியாவுடன் மிக நெருங்கி வந்தது , யூத மக்கள் மேல் நடத்தபட்ட தாக்குதலை புரிந்துகொண்டு அது பல காரியங்களை செய்தது. அவைகள் பின் புல்வாமா தாக்குதலில் இந்தியாவுக்கு உதவின‌

தேசத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது, அரசு பாகிஸ்தானுடன் யுத்தம் செய்யவில்லையே தவிர உள்நாட்டு பாதுகாப்பு பலபடுத்தபட்டது, ஐ.என்.ஏ முழு பலத்துடன் உருவாக்கபட்டது கடற்கரையோர பாதுகாப்பு பலபடுத்தபட்டது

இதே பாணியில் ஊடுருவமுயன்ற சில தாக்குதல்கள் வெளிதெரியாமல் முடிக்கபட்டன‌

அதன்பின் பெரும் தாக்குதல் நடத்தமுடியாமல் பாதுகாப்புகள் பலபடுத்தபட்டன, கசாப் தூக்கிலடபட்டான்

எனினும் லஷ்கர் இயக்கத்து தலைவனான சயீத் பாகிஸ்தானில் இன்னும் நலமாய் வளமாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்

மெல்ல தேசம் மெதுவாக மீண்டெழுந்தாலும் இந்திய மண்ணில் புகுந்து அவர்கள் தாக்கியது தேசத்தின் மாபெரும் வலியான வரலாறுகளில் இன்று, பாராளுமன்ற தாக்குதலுக்கு அடுத்த அவமானம் இது

இதெல்லாம் சேர்த்து வைத்துத்தான் பின்பு புல்வாமாவில் இந்தியா மொத்தமாக போட்டு அடித்தது

அவர்கள் ஆண்டாண்டு காலம் உள்ளே வந்து சுடுவார்கள், நாம் எல்லை தாண்டவே மாட்டோம் என்றிருந்த நிலை மாறி திருப்பி அடிக்க 11 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன‌

இனி அவ்வாறான தாக்குதல்கள் நடக்காது என தேசம் நம்புகின்றது, மகா மகா உறுதியான பாதுகாப்பும் உளவுதகவல் பரிமாற்றமும் அதை உறுதிபடுத்துகின்றன‌

கொடுந்தாக்குதல் நடந்தபின்பும் சிலிர்த்தெழுந்தது மும்பை

இந்த தாக்குதலில் உயிரழந்த இந்திய மக்களும் காவலர்களும் தேசத்தின் கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை காட்டிவிட்டு செத்த தியாகிகள், இன்று இந்த அரசு கடல் வளைய பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி

இதன் பின்பே பாதுகாப்பு , உளவு அமைப்புகள் புதுப்பிக்கபட்டு கமாண்டோ படையினர் எந்நிலைக்கும் தயராக வைக்கபட்டனர்.

அந்த தியாகிகளுக்கும் காவலர்களுக்கும் வீரவணக்கங்கள், இந்தியா எந்த தீவிரவாத மிரட்டலுக்கும் அஞ்சாது, எந்த காஷ்மீருக்கா இயக்கம் நடத்தி இந்த படுபாதகங்களை செய்தார்களோ அந்த காஷ்மீரிலே அதிரடியாக தன் பலத்தை காட்டிவிட்டு எதிரிகளுக்கு சவால் விட்டு நிற்கின்றது இத்தேசம்

மும்பையில் இறந்த தியாகிகளும் காஷ்மீருக்காக இறந்த இந்தியர்களே

பாரதம் ஒருநாளும் வீழாது, அற்ப தீவிரவாதிகளும் அவர்களின் கோழைதனமான தாக்குதலும் ஒருகாலமும் வெற்றிபெற இத்தேசம் அனுமதிக்காது

வந்தே மாதரம்.. ஜெய்ஹிந்த்

ஐ.எஸ்.ஐ அறிவு அவ்வளவுதான்

இன்னும் மாவீரன் கசாப், இன விடுதலை போராளி கசாப், வரலாறு கண்ட இரண்டாம் பாபர் கசாப் என ஒரு பயலும் கிளம்பாதது ஆச்சரியம்

இந்த ஐ.எஸ்.ஐ அமைப்பு கூறு கெட்டது என ஏன் உலகம் சொல்கின்றது என்றால் இதற்காகத்தான்

அந்த 11 பேர் கொண்ட குழுவில் கசாப்புடன் 2 புலிகளை கடன் வாங்கி அனுப்பியிருந்தால் அல்லது சில தமிழர்களை அனுப்பியிருந்தால் இன்று எப்படி இருந்திருக்கும்?

தமிழனின் வீரம் உலகிற்கு விளங்கிய நாள், தமிழன் இந்திய ஏகாதிபத்தியத்துக்கு சவால்விட்ட நாள் என கொண்டாடி என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?

கசாப்புடன் அவர்களை தூக்கில் போட்டிருக்க முடியும்? 7 பேர் விடுதலை 9 தமிழர் விடுதலையாக மாறியிருக்கும்

அவர்களும் பரோலில் வந்திருப்பார்கள், பெண் பத்திரிகையாளர் எல்லாம் கட்டி தழுவியிருப்பார்கள், பிரிவினை அழிச்சாட்டிய தலைவனெல்லாம் உச்சி முகர்ந்திருப்பான்

எவ்வளவு தேசவிரோத காட்சிகளை நடத்தியிருக்கலாம், ஆனால் ஐ.எஸ்.ஐ அதை தவறவிட்டது

அட பாராளுமன்ற தாக்குதலிலாவது , அட தமிழ்நாட்டு தமிழன் வேண்டாம், சோமாலியா பக்கம் ஒரு ஆப்ரிக்கனை பிடித்து 4 தமிழை சொல்லி கொடுத்து ஆக ஆக ஆக என்றாவது புலம்ப சொல்லிகொடுத்து இந்திய அரசிடம் தமிழன் என சிக்க வைத்த்தால் எப்படி இருந்திருக்கும்?

அட தாவுத் பாயிடம் கேட்டாலே மும்பை தமிழன் சிலரை கொடுத்துவிட்டு சென்றுவிட போகின்றார்,

பெரும் தாக்குதல் நிறைவேறினால் “அய்யய்யோ தமிழன்…” என கத்த தமிழ்நாட்டு தமிழன் ரெடி

இங்குள்ள தமிழன் அவனையும் அப்சல் குருவையும் தூக்கிலிடவிடுவானா?

யகூப் மேமனுடனோ இல்லை கசாப்புடனோ ஒரு தமிழன் சேர்ந்திருதால் அவர்களை தூக்கிலிட முடியும்?

நிச்சயம் முடியாது, இங்கு ஆடி தீர்ப்பார்கள் , ஆனால் பொன்னான வாய்ப்பினை எல்லாம் கோட்டை விட்டது ஐ.எஸ்.ஐ

ஏன் அப்படி?, ஐ.எஸ்.ஐ அறிவு அவ்வளவுதான் ,இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாப்பில் இருந்த பின்லேடனை அமெரிக்கா போட்டு தள்ளியிருக்க முடியுமா என்ன?

(ஐ.எஸ்.ஐயின் அடையாளம் கண்டீர்களா? ஆடுதான் அது

ஆக சில ஆடுகளை அது தயார் செய்து இந்தியாவுக்குள் அனுப்ப, ஐ.எஸ்.ஐ எனும் ஆட்டை வைத்து உலக நாடுகள் ஆடும் ஆட்டமே தனி

ஆட்டுமூளை ஐ.எஸ்.ஐ அது, அதனால்தான் தமிழனை இழுத்துவிடாமல் சொத்தை திட்டங்களையே இந்தியாவில் செய்து கொண்டிருக்கின்றது)

உலகில் சாவே இல்லாதவர் இருவர்

உலகில் சாவே இல்லாதவர் இருவர் ஒருவர் அனுமார் இன்னொருவர் பிரபாகரன்

அனுமார் அவர் பக்தர்களை காத்துகொண்டிருக்கின்றார், பிரபகனார் சொத்தும் பணவரவும் பிம்பமும் இவர்கள் அரசியலை காத்துகொண்டிருக்கின்றன‌

அனுமானுக்கு ராமன் வரம் கொடுத்துவிட்டு வைகுண்டம் சென்றுவிட்டார், பிரபாகரனுக்கு சாகா வரம் கொடுத்திருப்பது வைகோ, சைமன், பழ.நெடுமாறன் மற்றும் திருமுருகன் காந்தி

சரி பிரபாகரன் எங்கிருக்கின்றான் என்றால் அவன் வைகோ வீட்டு சமையலறை, சீமான் வீட்டு மொட்டைமாடி, நெடுமாறன் கார் டிக்கி மற்றும் திருமுருகன் வீட்டு செப்டிக் டேங் இவற்றில் மறைந்து மறைந்து வாழ்கின்றான்

இனி டெல்லியில் ஆட்சியே வேண்டாம் என இந்தியரும், கொழும்பில் அரசே வேண்டாம் என இலங்கையரும் முடிவெடுத்து ராணுவத்தை கலைக்கும் பொழுது சடாரென வெளிவந்து ஈழம் அமைப்பார்

அதற்கு 500 ஆண்டுகாலம் ஆனாலும் அவர் காத்தே இருப்பார், அட 500 என்ன 50 ஆயிரம் வருடமும் காத்தே இருப்பார் அவருக்குத்தான் சாவே கிடையாதே..

இவனுகளும் இவனுக பிரபாகரனும்..

லட்சம் மாவீரரை மண்ணுக்குள் புதைத்த பிரபாகரனுக்கு ஒரு அஞ்சலி இல்லை, ஆத்ம சாந்திக்கு ஒரு சடங்கு இல்லை என்பதுதான் அவன் செய்த பாவத்துக்கெல்லாம் சரியான தண்டனை

நேதாஜியுடன் பிரபாகரனை ஒப்பிடும் பதர்களை கண்டிக்கின்றோம்

நேதாஜியுடன் பிரபாகரனை ஒப்பிடும் பதர்களை கண்டிக்கின்றோம், இவர்கள் வெற்று மூளைக்காரர்கள்

ஆலய தீபமும் சுடுகாட்டு தீயும் நெருப்பு என்பதால் ஒன்றாகா..

நேதாஜி காந்திக்கு வெடிகுண்டு அனுப்பவில்லை, இந்தியா முழுக்க குண்டு வைக்கவில்லை. சர்ச்சிலுக்கு ஒரு குண்டு மவுண்ட் பாட்டனுக்கு ஒரு குண்டு என அனுப்பவில்லை

இந்தியாவில் நேதாஜியால் வெடித்த ஒரு குண்டு உண்டா? அவரால் கொல்லபட்ட ஒரு இந்திய தலைவனோ அப்பாவியோ உண்டா?

அப்படி செய்தால் நேதாஜி வரலாற்றில் நிலைத்திருக்க முடியுமா?

நேதாஜி அடுத்த நாட்டின் காடுகளில் இருந்து படைதிரட்டி இந்தியா நோக்கி வந்தார், அவரின் திட்டம் சரி, ஆனால் உலக நிலை அவருக்கு எதிராய் சதிசெய்தது

தான் தோற்க போகின்றோம் என்றவுடன் தன் படையினை கலைத்து எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி எஞ்சியிருந்தோரை பத்திரமாக கரையேற்றிவிட்டு மரித்த மகான் அவர்

மக்களை பிடித்து கொண்டு நடுவில் அமரவில்லை

நேதஜி நினைத்திருந்தால் ரங்கூன் , பாங்காக் ஏன் சிட்டகாங் என ஒரு நகரை பிடித்து மக்களை பிடித்து கேடயமாக்கி தன் உயிரை காத்திருக்க முடியும், முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் அதைத்தான் முயற்சித்தான்

ஆனால் உத்தமர் நேதாஜி அதை செய்யவில்லை

நேதாஜி வேள்வி தீ, பிரபாகரன் மயான தீ. இருவரையும் ஒப்பிடவே முடியாது, ஒப்பிட்டு பார்ப்பவன் மனிதனாகவே இருக்க முடியாது

பிரபாகரனும் கருணாநிதியிம் வரலாற்றின் பல பக்கங்களின் ஒன்றாகவே வருவார்கள்

பிரபாகரனும் கருணாநிதியிம் வரலாற்றின் பல பக்கங்களின் ஒன்றாகவே வருவார்கள், வாருங்கள் ஒவ்வொன்றாய் காணலாம்

பிரபாகரன் குட்டிமணி தங்கதுரையிடம் வளர்ந்தவன், அண்ணன்.. என அவர்களிடம் இருந்தே கள்ளகடத்தல், அடிதடி எல்லாம் கற்றவன். கருணாநிதிக்கு அண்ணா துரை.

பிரபாகரன் 5ம் வகுப்பு கருணாநிதி 6ம் வகுப்பு, இருவருக்கும் தமிழை தவிர வேறு மொழி தெரியாது ஆனால் தமிழில் நன்றாக பொய் சொல்லவும் பாசாங்கு செய்யவும் தெரியும்

பிரபாகரன் குட்டிமணி கோஷ்டியில் இருந்து வந்து இயக்கம் ஆரம்பித்தான், கருணாநிதி அண்ணாவுக்கு பின் கட்சியினை கைபற்றினார்

ஈழம் எங்கே என்றால் 5 வருடத்துக்கு முன்பு ஆர்மி கேம்பை அடித்தேன் என்பான் பிரபாகரன், திராவிட நாடு எங்கே என்றால் தண்டவாளத்தில் படுத்தேன் என்பார் கருணாநிதி

அவனுக்கு ஈழநாடு, இவருக்கு திராவிட நாடு

நன்கொடை வசூலிப்பதில் இரண்டுமே கடும் கில்லாடி கோஷ்டி

பிரபாகரன் தன் சக இயக்கங்களை எல்லாம் ஒழித்தான், கருணாநிதி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என பலவற்றை ஒழித்தார்

பிரபாகரன் இயக்கத்தின் தன் ஒருவனை முக்கியபடுத்தினான், இடையில் வளர நினைத்த கிட்டுவின் காலை ஒடித்து முடமாக்கி அருகே வைத்திருந்தான் மாத்தையா கொல்லபட்டான்

கருணாநிதி நெடுஞ்செழியன், மதிவாணன், வைகோ அன்பழகன் என பலரை உருட்டி மிரட்டி வைத்திருந்தது வரலாறு

பிரபாகரன் புலி இயக்கத்தில் வல்வெட்டிதுறை உறவினருக்கே இடம் கொடுத்தான், கருணாநிதி திருகுவளை சொந்தங்களை முன்னிறுத்தினார்

கருணாநிதிக்கு மிசா, பிராபரனுக்கு இந்திய அமைதிபடை

கருணாநிதி இந்திராவுடன் சேர்ந்து ராமசந்திரனுக்கு ஸ்கெட்ச் போட்டார் ஆனால் இந்திராவினை வளரவிடவில்லை

பிரபாகரன் சிங்களனுடன் சேர்ந்து அமைதிபடைக்கு ஸ்கெட்ச் போட்டு பிரேமதாசாவினை தூக்கினான்

பிராபரனுக்கு சந்திரிகா பரம எதிரி, யாழ்பாணத்தை விட்டு அவனை விரட்டியது அவர்தான், கருணாநிதிக்கு ஜெயலலிதா

ஊரனை போராட்டம் என கொல்வதில் கருணாநிதி கரை கண்டவர், பிரபாகரன் அதில் தன்னிகரற்றவன்

இருவருக்குமே யாரையாவது இயக்கம் போராட்டம் என கொன்றுகொண்டே இருப்பதில் அலாதி பிரியம்

ரகசியங்களை காப்பதில் இருவருமே கில்லாடி

ராமசந்திரன் கருணாநிதிக்கு சவால்விட்டார், கருணா பிரபாகரனுக்கு உருவானான்

பிரபாகரனின் சொத்துக்கள் பல கோடி, கருணாநிதியின் சொத்துக்கள் ஊர் அறிந்த கோடி

பிரபாகரன் எதற்கெடுத்தாலும் துப்பாக்கி தூக்கும் ரகம், கருணாநிதி பேனா தூக்கும் ரகம்

கருணாநிதிக்கு கடைசி காலங்களில் மோடி வந்தார், பிரபாகரனுக்கு ராஜபக்சே

இந்த இருவர் முன்னாலும் டம்மியாய் குனிந்து நின்றவர் வைகோ

கருணாநிதி தன் மகனை முன் நிறுத்தினார், பிரபாகரன் தன் மகனை கடைசியில் தளபதியாக்கினான்

கருணாநிதி அரசியல் அதிகாரம் பெற போராடினார், பிரபாகரன் தன் உயிர்காக்க போராடினான்

பால்சிங்கத்தால் பாதுகாக்கபட்டான் பிரபாகரன், முரசொலிமாறனால் காக்கபட்டார் கருணாநிதி

பாலசிங்கம் இல்லாமல் பிரபாகரன் வீழ்ந்தான், மாறன் இல்லாமல் கருணாநிதி தடுமாறினார்.

தமிழின தலைவன் யார் என்பதில் இரண்டு பேருக்குமே போட்டி

பிரபாகரன் வைகோவினை நம்பி கெட்டான், கருணாநிதி வைகோவினை விலக்கி வைத்ததால் பல தேர்தலில் கெட்டார்

இன்னும் யோசியுங்கள் இந்த இருவருக்கும் ஏகபட்ட ஒற்றுமை வரும், இருவரும் கடைசி வரை இந்திய எதிர்ப்பாளிகளே

திமுக அமெரிக்க ஆதரவு இயக்கம் என்பது அக்கால செய்தி, புலிகளின் தொடக்க கால சி.ஐ.ஏ தொடர்பு உலகறிந்தது

இருவரும் நேரம் கிடைக்கும் பொழுது தங்கள் லாபத்துக்காக இந்தியா பக்கம் சரிவார்கள், வயிறாற உண்டுவிட்டு உண்ட இலையாலே திருப்பி அடிப்பார்கள்

அவன் தமிழருக்கான போராளி என இலங்கை தமிழர் வாழ்வினை நாசமாக்கினான், இவர் தமிழகத்தை திசைமாற செய்து படும் மோசமாக்கினார்

இருவருமே தங்களுக்கு பின் போராட இன்னொரு திறமையானவன் இல்லாதவாறு செய்துவிட்டு சென்றுவிட்டார்கள் என்பது வரலாற்று சோகம், இருவரின் அழிச்சாட்டியத்தால் இரு பக்கமும் அடுத்தகட்ட தலமையே இல்லை

இருவருமே தந்திரக்காரர்கள், இருவருமே தமிழருக்கான போராளி என சொல்லிகொண்டார்கள் ஆனால் இருவரும் உண்மையாய் போராடினார்களா என்றால் இல்லை

இருவருமே விடா கண்டன் கொடா கண்டர்கள், இதனால்தான் இருவருக்கும் கடைசிவரை ஒத்துவரவில்லை

காரணம் தான் திருடி பிறறை நம்ப மாட்டாள் என்பது அதுதான்

பிரபாகரன் என்ன வீரம் காட்டினான் என்பதுதான் தெரியவில்லை

மாவீரன் என சொல்ல பிரபாகரன் என்ன வீரம் காட்டினான் என்பதுதான் தெரியவில்லை

எல்லா இயக்கமும் சேர்ந்து பிடித்த யாழ்பாணத்தை மற்ற இயக்கங்களை ஒழித்துகட்டிவிட்டு பிடித்திருந்தான் அவனாக முழுக்க பிடிக்கவில்லை

இந்திய அமைதிபடையினை சிங்களனுடன் சேர்ந்துவிரட்டினான் இன்னொன்று இந்தியதரப்பு தற்காப்பு யுத்தம் போல கைகளை கட்டியபடி போராடியது, இந்திராவோ இல்லை இன்றைய மோடியோ இருந்தால் அன்றே அவனை அடித்து கொன்றிருப்பார்கள்

அமைதிபடை வெளியேறிய சில வருடங்களில் சந்திரகா புலிகளை அடித்து யாழ்பாணத்தில் இருந்துவிரட்டினார், அவர்தான் மாவீரச்சி

அதன் பின் புலிகளால் யாழ்பாணத்தை தொடமுடியவில்லை, ஏகபட்ட வீரர்களை பலிகொடுத்து பிரபாகரன் பிடித்த ஆனையிறவு வெற்றி வீணாய் போனது, ஒரு பிரயோசனமில்லை

பின் 2006ல் தொடங்கிய யுத்தம் புலிகளை மொத்தமாய் சுருக்கி முள்ளிவாய்க்காலில் முடித்தது

இதில் எங்கிருந்து மாவீரம் காட்டினார் பிரபாகரன்?

புலிகளின் வரலாற்றை படித்தால் சில முகாம்களை தகர்த்ததை தவிர எங்கும் வெற்றிபெற்றதாகவோ அதை அரசியலாக்கியதாகவோ தெரியவில்லை

ஒரு இலக்கே இல்லா காட்டுமிராண்டி சண்டை போன்றே நடந்திருக்கின்றது

தமிழகத்தின் இரு மாவட்ட பரப்பளவு கொண்ட பகுதியினைத்தான் புலிகள் ஆண்டனர், அப்பொழுதும் அவர்களுக்கும் சிங்களனுக்கும் புரிந்துணர்வு நிரம்ப இருந்திருக்கின்றது

இதெல்லாம் தமிழக எம்பி, எம்.எல்.ஏக்களே செய்யும் விஷயம்

மற்றபடி புலிகள் பெரும் வீரம் காட்டினர், பெரும் மாவீரன் பிரபாகரன் என்பதெல்லாம் வரலாற்றில் ஊதிபெருக்கபட்ட பிம்பங்கள், அந்த அதிகபடியான பிம்பம் 2009ல் மொத்தமாக சரியும் பொழுது பலரால் ஏற்கமுடியவில்லை என்பது அதுதான்

எல்லாம் வெற்று பிம்பம், காற்றடித்த பலூன் போன்ற ஓவர் பில்டப் அன்றி வேறல்ல

ஈழபோராட்டம் தொடங்கிய விதமும், முடிந்த விதமும் இதுதான்

அய்யா இலங்கையில் சம உரிமை கொடுத்திருந்தால் ஏன் சண்டை வரபோகின்றது, அதனை நீங்கள் தந்திரமாக மறைக்கின்றீர்கள் , நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர்

சிங்கள மக்கள் தொகையில் ஈழதமிழர் 15% முதல் 20% வரை வருவார்கள், வெள்ளையன் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை யாழ்பாணத்தார் படித்தார்கள் நல்ல பதவிக்கு சென்றார்கள்

வெள்ளையன் கிளம்பியதும் வோட்டரசியல் அங்கு ஆரம்பமானது, தாழ கிடந்த பெரும்பானை சிங்கள இனத்தை முன்னிறுத்தும் திட்டம் தொடங்கிற்று

அது இட ஒதுக்கீடு அது இது என வந்து கல்விக்கும் வந்தது, யாழ்பாண மாணவன் பெரும் மதிப்பெண் குவிக்க வேண்டிய இடத்தில் சிங்களன் குறைவாக எடுத்தால் போதும்

இது அநீதி என்றால் இந்தியாவில் பிராமண இனத்திற்கு இழைக்கபட்டதும் அநீதியே

சிங்களனை இவ்விஷயத்திற்கு குற்றம் சாட்டினால் இந்திய அமைப்பையும் சாடி தீர்க்க வேண்டும்?

ஆனால் யாராவது சொல்வார்களா?

இந்தியாவில் இட ஒதுக்கீடு உரிமையாம், செய்தே தீரவேண்டுமாம், ஆனால் சிங்களன் செய்தால் அது தமிழின அழிப்பாம் , கொடுமையாம்

அங்கு போராட வந்த மாணவர்கள் திசை திரும்ப, அவர்களுக்கு ஆதரவாக கடத்தல், கொள்ளை கும்பல்கள் களமிறங்க, அந்த போராட்டம் அப்படியே குண்டர் கும்பலிடம் சென்றது

இந்த கும்பல்களை தங்கள் சுயலாபத்திற்காக வரவேற்று பயன்படுத்தி வாங்கிகட்டிகொண்டனர் ஈழதமிழ் அரசியல்வாதிகள்

அங்கும் ஏராளமான குண்டர் கும்பல்கள் இருந்தன, அக்கும்பல் ஒன்றில் சிறுவயதிலிருந்தே வளர்ந்தவர் பிரபாகரன்

பின் அவரின் போராட்டமும் குண்டர் கும்பலுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையில் நடந்த “கேங்க் வார்” போலவே நடந்து முடிந்தும் விட்டது

ஈழபோராட்டம் தொடங்கிய விதமும், முடிந்த விதமும் இதுதான்

சிங்களன் கொடுமை என சொல்லவரும் முன் அங்கிருந்த நிலையினை பாருங்கள்

இங்கு பிராமணர் இடத்தில் ஈழதமிழரும், சிங்கள இடத்தில் மற்ற சாதியினரும் இருந்தார்கள். கல்வியால் வாழ்ந்த யாழ்பாணம் பொங்கி எழ போராட்டம் வெடித்தது

இங்கு பிராமணாள் ஒரு சத்தமுமில்லை, அவர்கள் கத்தவும் மாட்டார்கள் அதனால் இங்கு அமைதி

இலங்கையில் எல்லோருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கிடைக்க்க வெண்டுமாம், ஆனால் இந்தியாவில் மட்டும் பட்டியல் போட்டு அடிப்பார்களாம், அது புரட்சியாம்

இட ஒதுக்கீட்டை சிங்களன் செய்தால் கொடுமை எனவும், இங்கு நடந்தால் புரட்சி எனவும் சொல்லிகொள்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்

இல்லையெனில் காலம் பல விஷயங்களை உணர்த்தும்

பிராமண எதிப்பு , பிராமண ஒழிப்பு, பிராமண ஆதிக்க தகர்ப்பு என என்னவெல்லாமோ சொல்லி கொண்டிருக்கின்றார்கள்

ஒருவேளை திராவிட நாடு அடைந்திருந்தால் ஹிட்லரின் கொடுமைகள் இங்கும் நடந்திருக்கும் போல‌

இவர்களிடம் தனி நாடு சிக்கினால் உடனே எல்லா பிராமணரையும் விரட்டிவிடுவார்களா?

இவர்கள் உருவாக்கும் சித்திரத்தை கண்டால் சாதிக்கொரு நாடு கொடுக்காமல் பிரச்சினை தீராது போல‌

இலங்கையில் என்ன சிக்கல்?

பெரும்பான்மை சிங்களனுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறாம், திறமை அடிப்படையில் யாழ்பாணத்தானுக்கு கல்வி, வேலை என கொடுக்க வேண்டுமாம்

ஈழசிக்கல் இங்குதான் தொடங்கிற்று

தன் பெரும்பான்மை இனம் தாழகிடப்பதை கண்ட சிங்கள அரசு அவர்களை கைதூக்கிவிட பல இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது, அதுதான் ஈழமாணவர்களை பாதித்து

துப்பாக்கி ஏந்த வைத்தது

அந்த சிங்களின் திட்டத்தை சாடி எல்லா மக்களும் இலங்கை குடிமக்களாக நடத்த வேண்டும் என கண்டித்துவிட்டு, இங்குமட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் பிராமணன் விட்டால் எல்லாவற்றையும் அபகரிப்பான் என கரித்துகொட்டுகின்றார்கள்

சிங்களன் செய்தால் இனவெறி, இவர்கள் தமிழகத்தில் செய்தால் சீர்திருத்தம்

வெறுப்பு அரசியலை வளர்த்த தேசம் எதுவும் உருபட்டதாக சரித்திரமே இல்லை. தமிழகம் இப்பொழுது அப்படித்தான் சீரழிந்துகொண்டிருக்கின்றது

பிராமண எதிர்ப்பு, நாத்திகம் இதெல்லாம் இனி எடுபடாத விஷயங்கள். மாறிவிட்ட காலங்கள்

அதைவிட்டு வேறு விஷயங்களில் அரசியல் செய்தால் சில கட்சிகளின் எதிர்காலத்திற்கு நல்லது

அமைதியான எதிர்காலத்திற்கு இன்னும் நல்லது.

இல்லையெனில் காலம் பல விஷயங்களை உணர்த்தும்