மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது

மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது, அன்று ஈழத்தில் பிரபாகரனே நீரும் அருந்தாமல் இருப்ப்பான், அவனின் படைகளும் அன்று விரதமே

ஈழமக்களும் அக்கல்லறைகளை அலங்கரித்து அங்கேயே கண்ணீரோடு விழுந்து கிடப்பர், அதை பார்க்கும் நமக்கோ கண்ணீரும் குழப்பமும் மாறி மாறி வரும்

ஆம், அந்த வீரர்கள் இப்படி செத்தால் நாடு அடையலாம் என நம்பி செத்தார்கள், கடைசிவரை துப்பாக்கியினை கீழே வை எனும்பொழுதெல்லாம் அது இக்கல்லறைகளுக்கு நான் செய்யும் துரோகம் என பிரபாகரன் சொல்லும்பொழுது கண்கள் கலங்கத்தான் செய்யும்

அந்த நாள் முதலில் பிரபாகரனின் பிறந்தநாளாக கொண்டாடபடவில்லை, தொடக்ககால புலிகள் 3 பேர்தான் அவர்களில் ஒருவன் சார்லஸ் ஆண்டனி எனும் சீலன் மற்றும் சங்கர்

இதில் சங்கர் படுகாயமுற்று மதுரையில் இறந்தான் அவன் இறந்தது நவம்பர் 25,

சார்ல்ஸ் ஆண்டனி மற்றும் சங்கரின் நினைவாக அன்று பிரபாகரன் அழுவது வழக்கம்

நிச்சயம் சிவகுமரன்தான் முதல் மாவீரன் ஆனால் சீலனின் நட்பு பிரபாகரனுக்கு பாட்சா படத்து சரண்ராஜ் போல் இருந்தது, அதில்தான் பிரபாகரன் உண்ணாமல் அந்நாளில் அழுவான்

பின் தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டி பலிகொடுத்தான்

அது கொடும்புலியோ இல்லை வீரபுலியோ ஆனால் அர்த்தத்தோடு மாவீரர்நாளை அனுசரித்தார்கள்

இங்கே தும்பிகள் தீபாவளி கொண்டாடுவது போல் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள், கேக் வெட்டி விருந்து வைத்து மகிழ்கின்றனர்

இப்படி ஒரு மெண்டல் கூட்டத்தை திமுகவினருக்கு அடுத்தபடியாக தமிழகம் இப்பொழுதுதான் பார்க்கின்றது

புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன்

பழைய கதைகளை எல்லாம் தோண்டி புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன்

உண்மையில் புலிகளின் தலமை சாப்பாட்டு பிரியர்கள், சென்னையில் இருந்தபொழுது அய்யர் வேடத்தில் மிலிட்டரி ஹோட்டலில் வெளுத்துவாங்கிய கிட்டு தன்னை ஈழ பிராமணன் என செய்த சாப்பாட்டு காமெடியும் உண்டு

பிரபாகரனுக்கு தெரிந்த விஷயங்களில் அல்லது தெரிந்த ஒரே விஷயம் சமையலும் உண்பதும் என்பது அவரோடு பழகியவர்களில் பலர் சொல்வது

சந்திரிகா 1995ல் யாழ்பாணத்தில் இருந்து புலிகளை விரட்டியபொழுது புலிகளுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது, அப்பொழுது புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று பிடிபட்டது அது தாய்லாந்தில் இருந்து வந்தது

மிக பெரும் ராக்கெட் லாஞ்சரும் கண்ணிவெடியும் துப்பாக்கியும் இருக்கும் என சோதித்த சிங்கள படை ஆச்சரியத்தில் மூழ்கியது

காரணம் அங்கு இருந்தது உடும்பு கறி, பெட்டி பெட்டியாக இருந்தது

ஆம் இங்கு தின்றது போதாமல் கப்பல் கப்பலாக உடும்பு கறி தின்ற கூட்டம் அது

அந்த போராட்டத்தை முனியாண்டி விலாஸ் அளவுக்கு தின்று தீர்த்தார்கள் என்பது அப்பொழுதே இருந்த ஒரு விவாதம்

அதை மறுபடியும் கிளறி புலிகள் இயக்கம் சாப்பாட்டு மடம், தின்று கெட்டவர்கள் கூடாரம் என நிரூபிக்க படாதபாடு படுகின்றார் சைமன்

இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்

ஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா? அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா? அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா? கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர்.

மற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம்.

கிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை கிளர‌ வேண்டாம். அது சபையில் சொல்லமுடியா விவகாரம்

போராளி சபாரத்தினத்தை சுட்டுகொன்றவரும் கிட்டு தான்.

சக போராளி மாத்தையாவுடன் போட்டி, ஏன் பிரபாகரன் பெயரையும் மிஞ்சி சில இடங்களில் அவர் பிரபலமானார், கொஞ்சநாளில் குண்டுவீச்சில் கால் இழந்தார்,

எப்படி? மகா ரகசியமாக காதலியினை சந்திக்க செல்லும்போது தாக்கபட்டார், பழி மாத்தையா மீது சுமத்தபட்டாலும் பிரபாகரன் அமைதியாகத்தான் இருந்தார், ஏன் என்றால் தெரியவில்லை.

பிரபாகரன் சென்னையில் இருந்தபொழுது கிட்டு ஈழத்தில் பெரும் ஹீரோவானான், பிரபாகரன் பெயர் மங்க தொடங்கிய காலத்தில்தான் அவன் கால் போய் டம்மியானான்

வழக்கமாக துரோகிகளை களை எடுக்கும் பிரபாகரன் கிட்டுவிஷயத்தில் மகா அமைதி, அவர் அனுமதி இன்றி இது சாத்தியமில்லை, பிரபாகரனின் இன்னொரு மோசமான முகம் இது

(இதன் காரணமாக சம்பந்தமே இல்லாமல் நடந்த‌ புலிகளின் “கந்தன் கருணை” படுகொலையினை இன்னொருநாள் பார்க்கலாம் )

அமைதிபடை காலத்தில் காதலி சிந்தியாவுடன் கிட்டுவுக்கு கொழும்பில் திருமணம், தலமை தாங்க யாரை அழைத்தார்கள் தெரியுமா? இலங்கை அதிபர் பிரேமதாசா, ஆனால் அவர் வரவில்லை, பின்னாளில் விருந்துகொடுத்ததாக செய்தி.

அதாவது சிங்கள ராணுவத்தை எதிர்த்து பல புலிகள் செத்த இயக்கத்தின் பிராதன நாயகன் கிட்டு விருந்து உண்டது சிங்கள அதிபருடன்.

அதன் பின் ஊனமுற்றவராக பேச்சு வார்த்தை, அரசியல் துறை என இருந்தார்,

அதன்பின் நடந்ததுதான் விசித்தரம், இந்திய உளவுதுறையுடன் தொடர்பில் வந்தார் கிட்டு, டெல்லி வந்தார் ராஜிவ் கொலைக்கு முன்பான கொஞ்ச காலம் முன்பாக அவரை சந்தித்தார், அமைதிபடை மோதல்களை மறந்து சமாதானமாவோம் என உருகினார், ராஜிவும் அவரை வாசல் வரை வந்து அனுப்பினார், அதாவது புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என நம்பவைக்கபட்டார். பரிதாபம்

இதனால்தான் ராஜிவ் உயிருக்கு ஆபத்தான இயக்கங்கள் பெயரில் விடுதலை புலிகளின் பெயர் நீக்கபட்டது, திருப்பெரும் புதூரில் கூட அவருக்கு பாதுகாப்புகொடுத்த அதிகாரிகள் கையிலிருந்த பட்டியலில் புலிகள் பெயர் இல்லை

ஒரே நேரத்தில் சிங்களனுடம், இந்திய உளவுதுறையிடமும் தொடர்பில் இருந்த “வீரம்” இது

இவர்கள் செய்தால் தந்திரம், இன்னொருவர் செய்தால் துரோகம், ஈனம்.

ராஜிவ் கொலை நடந்தபின் முதலில் இந்திய உளவுதுறை கிட்டுவினை தொடர்புகொண்டது, “நாங்களே அதிர்ச்சியில் இருக்கின்றோம், பிரபாகரன் சாப்பிடாமல் கிடக்கின்றார், பொட்டு அழுது அழுது கண்கள் வீங்கி கிடக்கின்றார்…” என ஒப்பாரி வைத்தார் கிட்டு, இந்திய உளவுதுறை முதலில் நம்பியது

ஆனால் விசாரணையும், புலிகளின் வயர்லஸ் தகவலும் சரியாக புலிகளை வளைக்க, கிட்டுவிடம் இந்திய உளவுதுறை திகைப்பில் கேட்டது “நம்ப வைத்தா கழுத்தினை அறுத்தீர்கள்?”

கிட்டு சொன்னார் “இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்”.

அதன் பின் என்ன செய்தார்? எந்த பிரேமதசா திருமணத்திற்கு விருந்தளித்தாரோ, அவருக்கே வெடிகுண்டு அனுப்பினார், செத்தார் பிரேமதாசா

பின் ஒரு கட்டத்தில் மாத்தையா இந்திய உளவுதுறையிடன் தொடர்பில் இருக்கின்றார் என இவர் புகார் சொல்லி பிரபாகரனால் 1000 போராளிகளுடன் கொல்லபட்டார் மாத்தையா. எப்படியோ கால் போனதற்கு மாத்தையாவினை பழிவாங்கினார் கிட்டு

இந்திய உளவுதுறை தன்னிடம் சம்பளம் வாங்கி ,தனது நாட்டில் பயிற்சி பெற்று, ஆயுதமும் பெற்று, உணவும், உறைவிடமும் பாதுகாப்பும் பெற்று, தன் நாட்டு தலைவரையே கொன்ற கிட்டுமீது கடும் கோபத்தில் இருந்தது, கப்பல் நிறைய ஆயுதங்களுடன் அந்தமான அருகே வந்த கிட்டுவினை கப்பலோடு போட்டு தள்ளியது இந்தியா.

(கிட்டு வந்த கப்பலை இந்தியா அடையாளம் கண்டவிதம் சுவாரஸ்யமானது , புலிகளின் தகவலை இடைமறித்து மிக சரியாக அடித்து நொறுக்கினார்கள்..)

தங்கள் கோபத்தை மிக சரியாக வெளிபடுத்திவிட்டு அமைதி காத்தது இந்தியா, பிரபாகரனுக்கு அடுத்த குறி தான் என்பது புரிந்தது , மெதுவாக தன் அல்லக்கை ஜெகத் கஸ்பர் மூலம் அந்த அறிக்கையினை விட்டான்

“பாதர் கிட்டு என் நண்பன், இந்தியா அவனை கொன்றது ஆனால் நான் இந்தியாவினை பழிவாங்கவில்லை நான் திருந்திட்டன்” என அவன் சொன்னதாக சொல்லி திரிந்தார் பாதிரி

சரி பிரபாகரன் இந்தியாவினை எப்படி பழிவாங்குவான் பாதர் என திருப்பி கேட்கபட்ட கேள்விக்கு பாதிரியிடமும் பதில் இல்லை

இம்மாதிரி ஒருமாதிரி இறுமாப்பான நபர்தான் பிரபாகரன்.

கிட்டு ராஜிவ் பிரேமதாச என இருவரை நம்ப வைத்து கொன்ற படுபாவி.

இப்படி நம்பவைத்து கழுதறுக்கும் துரோகத்திற்கு, உண்ட வீட்டிற்கே குண்டு வைக்கும் நன்றிகெட்ட தனத்திற்கு பெயர்தான் மாவீரம், இப்படி செய்தால் அவர் காவிய நாயகர்.

எத்தனை பச்சை துரோகங்கள், எத்தனை மனித தன்மையே இல்லா நன்றிகெட்ட தனங்கள் இவற்றின் உருவமெல்லாம் காவியம், ஆவியம் என சொல்வதை சீமானோடு நிறுத்தி கொள்ளுங்கள், அல்லது திருமுருகன் காந்தி என்பவனிடம் சொல்லுங்கள்

இன்னும் இங்கு வந்து அவன் வீரம் தெரியுமா? இவன் சாரம் தெரியுமா? என சொன்னால் இன்னும் அதிக தகவலுடன் புலி முகத்திற்கு பின்னால் இருக்கும் துரோக, கோழை முகம் ஒவ்வொன்றாக உரிக்கபடும்.

(இவை எல்லாம் ஏராளமான இடங்களில் இணையத்தில் பதியபட்டவை,இன்றும் இருப்பவை, ஏராளமானோர் எழுதிகொண்டிருக்கும் விஷயம்

சந்தேகமிருந்தால் உங்கள் புலனாய்வு துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்)

கிட்டு இன்று இல்லை, ஆனால் இருந்திருந்தால் நமது சீமானிய குஞ்சுகள் எப்படி கத்தும் தெரியுமா?

கருணாநிதி மற்றும் சோனியாவின் சதிவேலையால் பரிதாபமாக கால் இழந்தார் வீரதிருமகன் கிட்டு

பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை

கொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது

தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை.

யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே

முதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை தொடங்கினார்

பின் அதே தமிழ்தலைவர்கள் பிரபாகரனை ஒதுக்க தொடங்கியபொழுது அவர்களையும் கொன்று கணக்கை சரியாக்கினார்

செட்டி தனபாலசிங்கம் எனும் கொள்ளையனுடன் வங்கிகொள்ளை எல்லாம் அடித்தார், பின்பு செட்டி தன்னை பயன்படுத்தினான் என அவனுக்கும் சூடு

குட்டிமணி குழு இவரை ஆரம்பத்தில் இருந்தே ஒருமாதிரி கையாண்டதால், அவர்கள் சிறையில் இருக்கும்பொழுதே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி மொத்தமாக சங்கு ஊதபட்டது

இப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தே யாரையாவது தனக்கு பயன்படுத்திகொள்வதும், பின் அவர்களை கொல்வதுமாகவே அவரின் நடவடிக்கை இருந்தது

அவரிடமிருந்து உயிர்தப்பிய முதல் நபர் தமிழக ராமசந்திரன், ஆம் “முதலில் தம்பி நீ சண்டையிடு, இந்திய பயிற்சிக்கு வா” என சொன்னதும் அவர்தான், பின் ராஜிவ் தலையிட்டவுடன் ஒதுங்கியதும் அவர்தான்

ராமசந்திரன் மத்திய அரசுக்கு பயந்து ஒதுங்கியதும், பிரபாகரனை சென்னையில் காவலில் வைத்ததும் பிரபாகரனுகு சினமூட்டிய விஷயங்கள்

கொஞ்சகாலம் இருந்திருந்தால் குண்டு ராமசந்திரனுக்குத்தான் வெடித்திருக்கும்

(இந்தியா அவருக்கு தொடக்கதில் இருந்தே பிடிக்காத நாடு, இந்தியா தான் ஒதுங்க இடம் கொடுத்தால் போதும் மற்றபடி ஈழவிவகாரம் பற்றி பேசகூடாது என்பதுதான் அவர் கொள்கை

ஆனால் சிங்களனிடம் அவர் தோற்றுகொண்டிருந்த காலங்களில் சில பயிற்சிகளுக்காகவும், சக இயக்கங்கள் வளர்ந்துவிட கூடாது என்பதற்காகவும் வந்தார்.

சக இயக்கம் வளர்ந்துவிட்டால் அது தனக்கு ஆபத்து என்ற ஒற்றை காரணமே அவர் கடைசியாக வந்து வெறுப்பாக கலந்துகொள்ள காரணம்.

பின் மிக சரியாக சக இயக்கங்களை ஒழித்து, ராஜிவினை கொன்று இந்தியாவினையும் ஈழ விவகாரத்தில் இருந்து விரட்டினார்

மற்றபடி மக்களை பற்றியெல்லாம் அவர் ஒருகாலமும் கவலைபட்டதே இல்லை, ஈழ எதிர்காலம் , மக்களின் வருங்காலம் பற்றி எல்லாம் சிந்தனை இல்லை )

அதன் பின் அவரின் மனதில் இருந்த அந்த மிருகம் மறுபடி விழித்தது

அதன் பின் பிரேமதாசா அமைதிபடைக்கு எதிராக ஆயுதம் கொடுத்தபொழுது பிரேமதாச பிரபாகரன் நட்பு உருவானது, ஆனால் அமைதிபடை வெளியேறியதும் பிரேமதாசவிற்கும் ஒரு குண்டு

இதன்பின் இந்தியா, சிங்களம் என யாருமே பிரபாகரனை நம்ப தயாராக இல்லை, நம்பிய எல்லோரும் கையினை சுட்டுகொண்டு ஓடிவிட்டனர். அவரை நம்ப ஒருவரும் இல்லை

இவ்வளவிற்கும் வடமாராட்சியில் பிரபாகரன் உயிர்காத்தவர் ராஜிவ்காந்தி , பல இடங்களில் பிரபாகரன் உயிரை காத்தவர் மாத்தையா, அமைதிபடை காலங்களில் ஆயுதமாக கொடுத்து அவரை காப்பாற்றியவர் பிரேமதாச‌

பிரபாகரனின் விருப்பம் மேற்குநாடுகளுக்கு சென்றது

அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு ரகசிய பிணைப்பு இருந்தது, அது அமைதிபடை காலத்திலே இருந்தது

வழக்கம் போல் நார்வே குழு, அது இது என மேற்குநாடுகளை பயன்படுத்தி சில காரியங்களை சாதித்துகொண்டிருந்த பிரபாகரனுக்கு சிக்கல் பின்லேடன் வடிவில் வந்தது

பின்லேடனின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கு நாடுகள் களமிறங்கி, உலகளாவிய தீவிரவாத வலைபின்னலை கண்டறிந்தபொழுது பிரபாகரனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் முட்டி கொண்டது

ஈழ அரசியல்வாதி முதல் இந்தியா, ராஜிவ், பிரேமதாச, மாத்தையா என எத்தனையோ பேரினை தனக்கு தக்க உபயோகித்துவிட்டு கொன்ற பிரபாகரனால் மேற்கு நாடுகளிடம் வெல்ல முடியவில்லை.

இறுதியாக ஆண்டன் பாலசிங்கம் மூலம் இரு வாய்ப்புகளை கொடுத்துவிட்டனர், கருணாவும் அப்போது உடனிருந்தார்

அவர்கள் இரு வாய்ப்பினை கொடுத்தார்கள், ஒன்று சாக வேண்டும் அல்லது கிடைக்கும் அதிகாரத்தை எடுத்துகொண்டு ஆயுத ஒப்படைப்பு செய்ய வேண்டும்

பிரபாகரன் முடியாது என சொல்லி கொதிக்க, ஆண்டன் பாலசிங்கம் அமைதியானார், கருணா பிரிந்தே ஓடினார்

வழக்கம் போல தன் தந்திர வித்தையினை மேற்கு நாடுகளிடம் காட்ட நினைத்த பிரபாகரனுக்கு மண்டையில் விழுந்தது கொத்து. ஒரு நாடும் ஏன் என கேட்கவில்லை.

ஆயிரகணக்கான மக்கள் அழிந்தாலும் பிரபாகரன் தப்பிவிட கூடாது என்பதிலே உலகம் கவனமாக இருந்தது

ஆக பிரபாகரனை மாவீரன் என்றெல்லாம் சொல்ல முடியாது, தந்திரக்காரன் என்று வேண்டுமானால் சொல்லலாம், அதுதான் உண்மை

பிரபாகரனை நினைத்தால் ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு

ஏறகுறைய தன்னை நம்பிய அல்லது தன்னை பயன்படுத்த நினைத்த எல்லோரையும் கொன்றுவிட்ட பிரபாகரன் இந்த தமிழக அரசியல்வாதிகளை ஏன் விட்டுவிட்டு செத்துவிட்டார் என்பதே அது.

தன்னை யாரும் பயன்படுதுவதை ஒரு காலமும் அவர் விரும்பியதில்லை, அப்படி செய்தால் அவர்களுக்கு சாவுதான்

கொஞ்சகாலம் இருந்திருந்தால் சைமனை எல்லாம் உருதெரியாமல் அழித்திருப்பார் பிரபாகரன் .

கடைசி காலங்களில் தமிழகம் தன்னை காப்பாற்றும் என நம்பினார், இயக்கத்தை அழிய தமிழகம் விடாது, தமிழக அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் என முழுக்க நம்பினார்

ஆனால் அது நடக்காமல் போனதில்தான் தமிழக போலி அரசியல்வாதிகள் கொடுத்த போலி வாக்குறுதி அவருக்கு விளங்கிற்று, தமிழகத்தில் பெரும் எழுச்சியினை ஏற்படுத்துவதாகவும், பிரபாகரனுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அவரை நம்ப வைத்தது இவர்கள்தான்.

தமிழக ஈழ‌ அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் தன்னை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பதை முள்ளிவாய்காலில்தான் உணர்ந்தார்.

கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தால் இந்த அழிச்சாட்டிய கும்பலை எல்லாம் கொன்றுவிட்டுத்தான் செத்திருப்பார்

விதி அதுவல்ல என்பதால் தன் பெயரை பாவித்தும், தனக்கு தவறான வழிகாட்டி சாகவிட்டு அதில் அரசியல் செய்யும் இவர்களை எல்லாம் கோபத்துடன் நரகத்திலிருந்து பார்த்துகொண்டிருக்கின்றார்,

எத்தனையோ உதவிகளை செய்தவர்களை எல்லாம் கொன்றவருக்கு இந்த தமிழக திடீர் ஈழ அழிச்சாட்டிய அரசியல்வாதிகள் எல்லாம் தூசு.

இவர்களை விட்டுவிட்டோமே என்று அவரின் ஆன்மா சீறிகொண்டே இருக்கும்

தமிழக தலைவிதி என்று நல்லதாக இருந்தது? ஒருகாலமும் இல்லை.

மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன்

மாத்தையா, அவரின் இயற்பெயர் மகேந்திர ராஜா. 1980களில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்

அந்த இயக்கத்து தளபதிகளுக்கு ஒரு பலவீனம் இருந்தது அது 2009 வரை இருந்தது அதாவது பிரபாகரனுக்கு அடுத்து யார் எனும் போட்டி அது

அன்று பிரபாகரனுக்கு அடுத்து கிட்டு இருந்தான், கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் மோதல் நடந்த நிலையில்தான் கிட்டுவின் கால் போனது. அது அந்த இயக்கத்தின் உள்மோதல் என்பதால் பொத்திகொண்டிருந்தார்கள்

கிட்டு ஒரு சிங்கள வீரனின் காலை நல்லூர் கந்தசாமி கொவில் முன் தொங்கவிட்டிருந்தான், தன் வீரத்தை காட்டினானாம், இது தெய்வ நிந்தனை என்றதை அவன் செவிகொடுத்து கேட்கவில்லை

பின் அவன் காலே போனது தெய்வத்து தண்டனை

கிட்டுவின் கால் மாத்தையாவால் போனது அவனுக்கு கட்டளையிட்டது பிரபாகரன் என்பதெல்லாம் அக்கால செய்திகள்

மாத்தையா அதன் பின் பெரும் இடத்துக்கு சென்றான் யாழ்பாணம் அவன் கையில் இருந்தது, ஈழ மோதலில் அமைதிபடையுடன் மோதி பிரபாகரனை காத்தவன் அவனே

ஆனால் அவனுக்கு ஒரு பலவீனம் இருந்தது, சண்டை என்றால் சண்டை மாறாக அமைதிபடையினர் பேசினால் அதையும் கேட்பான்

அமைதிபடையினரும் இந்திய உளவுதுறையும் இதை வைத்து ஆடின, எல்லாம் பாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகமே

கண்ணன் விதுரனிடம் சாதாரணமாக பழகி அது துரியன் கண்ணில்படும் படி பார்த்துகொள்வான், துரியன் கொள்ளும் சந்தேகத்தில் விதுரர் வெளியேறுவார், பலமிக்க விதுரரை அப்படி பிரிப்பான் கண்ணன்

இதையே இந்தியா செய்தது மாத்தையாவுடன் சகஜமாக பழகினார்கள் அவனும் அமைதிபடையினை நோட்டம் விட பழகினான் ஆனால் இந்த பழகலை பிரபாகரனுக்கு இந்திய தரப்பே போட்டு கொடுத்தது

கிட்டு இதை கொண்டு மாத்தையாவினை பழிவாங்க எண்ணினான், பிரபாகரனை கொல்ல ரா முயற்சித்ததாகவும் பிரபாகரன் காரில் குண்டு வைத்ததாகவும் குற்றசாட்டு கூறபட்டது

இக்காலகட்டத்தில் ராஜிவ் கொலை என அமளிதுமளி இருந்ததால் இவை எல்லாம் மெல்லதான் கசிந்தன‌

சந்தேக பிராணியான பிரபாகரன் மாத்தையாவினை சிறை வைத்தான் பின் மாத்தையா படையினர் 300 பேரோடு அவனை கொன்றான் பிரபாகரன்

மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன், இவ்வளவுக்கும் பலமுறை பிரபாகரன் உயிரை காத்தவன் மாத்தையா

300 வீரர்களுடன் மாத்தையா செத்தான், ஆம் அவர்களும் தமிழர்கள். பிரபாகரன் தமிழரை கொல்ல லைசென்ஸ் உண்டு அல்லவா?

மாத்தையா போனபின்பு அந்த இடத்துக்கு வந்தவனே கருணா, அவனுக்கும் பிரபாகரனுக்கும் 2005ல் முட்டியது

ஒருகட்டத்தில் மாத்தையா மாதிரியும் எனக்கு துரோகம் இழைக்கின்றாய் நேரில் வா என பிரபாகரன் சொல்ல 2006ல் கருணாவுக்கு வியர்த்தது உண்மை புரிந்தது

அவன் இந்திய உளவுதுறையிடம் சரணடைந்தான், இந்தியா அவனை நம்பாமல் கோத்தபயாவிடம் ஒப்படைத்தது அதன் பின் நடந்த யுத்ததில் பிரபாகரன் கொல்லபட்டு கருணா அடையாளம் காட்டினான்

மாத்தையா கொல்லபட்ட விதமே கருணாவினை காப்பாற்றி பிரபாகரனை ஒழித்துகட்டியது

மாத்தையா நல்லவன், அவனை கொன்ற பாவம் கருணா வடிவில் திரும்ப வந்து பிரபாகரனை ஒழித்துகட்டியது என்பதுதான் தெய்வத்தின் தீர்ப்பாகவே இருந்தது

பெண் விடுதலை கொள்கை

1984ம் ஆண்டு மத்திய காலங்களில் ஈழமாணவிகள் சிலர் உண்ணாவிரதம் இருந்தனர், தங்களை வேறு பல்கலைகழகத்துக்கு மாற்ற கூடாது என யாழ்பாணத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்

பின்னாளில் திலீபனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்த புலிகள் இப்பெண்களை அனுமதிக்கவில்லை, உண்ணாவிரதம் எல்லாம் வெற்றுபிம்பம் என அப்பெண்களை மிரட்டி அழைத்து சென்றனர்

அதாவது யார் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் எங்கே எப்படி இருக்கவேண்டும் என்பதை புலிகளே தீர்மானித்தனர், இப்பெண்கள் இருந்தால் தவறு, திலீபன் இருந்து செத்தால் அது தியாகம்

சரி இப்பெண்களை மிரட்டி அவரவர் வீட்டுக்கு அனுப்பினார்களா என்றால் இல்லை, தங்களோடே கொண்டு சென்றனர்

ஏன் அப்படி என்றால் அதுதான் கிட்டுவின் தியாக வரலாறு, பெண் விடுதலை கொள்கை

அதில் ஒரு பெண்ணுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்தது அதை தொடர்ந்து மன்மதன் அம்புகளை எய்ய, காரியம் முடிந்தது

அதன் பின்புதான் யோசித்தான் பிரபாகரன் அவனுக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது

அவனும் உமாமகேஸ்வரனும் ஒன்றாய் இருந்து இயக்கம் நடத்தியபொழுது ஊர்மிளா தேவிக்கும் உமா மகேஸ்வரனுக்கும் காதல் வந்தது, ஊர்மிளா அவர்கள் ஆபீசில் டைப் அடிக்கும் பெண்

இதெல்லாம் இயக்கத்துக்கு ஆகாது, காதல் , கல்யாணம் எல்லாம் தமீழம் அமைவதை தடுக்கும் என்றான் பிரபாகரன். முதலில் ஊர்மிளா அதன் பின் தமிழீழம் என்றார் உமா மகேஸ்வரன்

இந்த சண்டை பெரிதாகி இயக்கமே வெடித்து பிரபாகரன் வெளியேறினான், பாண்டி பஜாரில் இருவரும் சுட தெரியாமல் சுட்டதெல்லாம் இந்த விவகாரமே

இந்நிலையில் நாம் திருமணம் செய்தால் உமா மகேஸ்வரன் சிரிப்பானே, அவனை கொன்றுவிடவும் முடியவில்லையே என தவித்துகொண்டிருந்தான் பிரபாகரன்

மதிவதனிக்கோ சிக்கல் காரணம் வாரிசு உருவாயிற்று

பிரபாகரன் அவளை திருமணம் செய்ய தயாரில்லை அவன் அவளை கொன்றாலும் கேட்பாரில்லை

இந்நிலையில்தான் பாலசிங்கம் ஆலோசனை சொல்லி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார், பால்சிங்கம் ராஜதந்திரி மட்டுமல்ல சிறந்த மணமக்கள் நிலையமும் நடத்தியிருக்கின்றார்

பிரபாகரனின் திருமணம் அக்டோபர் 1 , 1984ல் சென்னை போரூர் முருகன் கோவிலில் நடந்தது, மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி ஏப்ரல் 18, 1985ல் பிறந்தான்

ஆம் திருமணமாகி 6 மாதத்தில் பிறந்தான் சார்லஸ் அண்டனி , அதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இளமைஎனும் பூங்காற்று பாடலை பாடியிருந்தான் பிரபாகரன், ஆனால் தப்பி ஓடமுடியாதபடி மதிவதனி பிடிவாதம் காட்டியதாலும், அன்று சென்னையில் இருந்ததால் மதிவதனியினை ஒன்றும் செய்யமுடியாத நிலையிலும் ராமசந்திரன் போன்ற பிம்பங்கள் இருந்ததாலும் வேறு வழியின்றி மதிவதனியினை திருமணம் செய்தான் பிரபாகரன்

ஆனால் இதில் அவரின் தம்பி சீமான் கெட்டிக்காரர் விஜயலட்சுமி உட்பட பல பெண்களிடம் அனாசயமாக தப்பி வந்தவர் அவர்

இந்தியாவுக்கு வாடிக்கையாகிவிட்டது

செயற்கை கோள் ஏவுவது சாதனை என்ற நிலை மாறி இந்தியாவுக்கு வாடிக்கையாகிவிட்டது,

இன்றுஅட்டகாசமாக 10க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் நிறுத்தியிருகின்றது இஸ்ரோ

ஆக இனி விண்வெளிக்கு அதிக செயற்கைகோள்களை அனுப்பிய நாடு எனும் இலக்கினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது தேசம்

வாழ்த்துக்கள்