ஈழ பிரச்சினை இங்கு 1984ல் தான் நுழைந்தது

ஈழ பிரச்சினை இங்கு 1984ல் தான் நுழைந்தது, அதுவரை தொப்புள் கொடியுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

பொதுவாக ஈழ தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழருக்கும் பொருந்தாது அவர்கள் மேம்போக்கு மனநிலை படைத்தவர்கள், சாதிய பாகுபாடும் உண்டு. இங்கிருந்து மலையகத்துக்கு சென்ற தமிழக தமிழர்கள் அதாவது தாழ்த்தபட்ட தமிழர்கள் அவர்களுக்கு இன்றும் உவப்பானர்கள் அல்ல‌

பிரபாகரனின் ஈழ வரைபடத்தில் மலையகம் கிடையாது, அந்த 1957 மலையக மக்களை திருப்பி அனுப்பியதில் தமிழக கோபம் ஈழதமிழர் மேல் இருந்தது, அண்ணா கடல் திடல் என பேசிகொண்டிருந்தது அப்பொழுதுதான்

இம்மாதிரி ஒரு நிலை இருந்தது ஆனால் ராமநாதபுரம் டூ ஈழம் அப்பொழுதே கடத்தலுக்கு பிரசித்தி. குட்டிமணி தங்கதுரை கடத்தல்கார கேங்க்ஸ்டர்கள், அவர்களின் சீட கோடி பிரபாகரன்

1975க்கு பின் ஆயுத போராட்டம் வந்தபொழுது இங்கிருந்து அதாவது சிவகாசிக்கு வந்து பிரபாகரன் வெடிபொருள் வாங்கி சென்ற காலமும் உண்டு, குட்டிமணி பிரபாகரன் கோஷ்டி இலங்கையில் வங்கி கொள்ளை அடிப்பதும் போலீஸ் தேடும்பொழுது தமிழகத்துக்கு தப்புவதுமாக காட்சிகள் நடந்தன‌

இதில் 1984 கலவரம் திருப்புமுனை அப்பொழுது அகதிகள் வந்தார்கள், இந்திரா நரசிம்மராவை அனுப்பி நேரடியாக கொழும்பில் தலையிட்டார்

அப்பொழுதுதான் இந்திரா திட்டபடி அமிர்தலிங்கம் தமிழகம் வந்தார், ஏற்கனவே திராவிட நாடு அடைந்து சமத்துவ சமதர்ம பூமி அமைந்து பிராமணரை ஒழித்து கட்டி தமிழை வாழவைத்துகொண்டிருந்த அதாவது ஒரு மண்ணாங்கட்டி அரசியலும் இல்லாமல் இருவருமே ஊழலில் திழைத்துகொண்டிருந்த, கருணாநிதியும் ராம்சந்தரும் ஊழல் பேர்வழி என இந்திராவுக்கு அடங்கி இருந்த காலத்தில் வந்தார் அமிர்தலிங்கம்

கலைஞர் போஸ்டர் ஓட்டினார், ஆனால் ராம்சந்தர் கார் அனுப்பி அமிர்தலிங்கத்தை ஏர்போர்ட்டிலே தூக்கினார்

இதிலிருந்துதுதான் 1984ல் இருந்துதான் ஈழ அரசியல் இங்கு தொடங்கியது, பயிற்சிகாக் 4 கோஷ்டி இந்தியா வந்தது தமிழகம் மற்றும் டேராடூனில் பயிற்சி கொடுக்கபட்டது, இலங்கை திரும்பியதும் மற்ற கோஷ்டிகளை ஒழித்துவிட்டு பிரபாகரன் ஏக போக சக்கரவர்த்தியானான்

இதில் இன்னும் ஏராளம் வரும் சுருக்கமாக சொன்னால் பிரபாகரனை அமெரிக்கா வளைத்துபோட்டு ஆட்டத்தை ஆரம்பித்தது

அமெரிக்கா என்றால் யாரெல்லாம் வருவார்கள்? தமிழக அல்ட்ராசிட்டிஸ் எல்லாம் அமெரிக்க அடிமை அல்லவா? முதலில் ராமசந்திரனும் பிரபாகரனும் கோர்க்கபட்டார்கள் ஒரு கட்டத்தில் ராம்சந்தர் நழுவினர் பின் மறைந்தார்

அதன் பின் முரசொலிமாறன் தோளில் கைபோட்ட புலிகள் திமுகவின் நண்பர்களாயினர், வழிகாட்டல் எல்லாம் மேற்குலக சக்தி

பிரபாகரன் இந்தியாவினை எதிர்க்கின்றார், திமுகவும் டெல்லியினை எதிர்க்கின்றது ஆக தனி தமிழ்நாடு அகண்ட தமிழ்நாடாக மலரட்டும் என்ற கோணமெல்லாம் இதில்தான் வந்தது

இதற்கு ஒரு செக் வைக்கவும் திரிகோணமலை இந்திய வசமாகவும் இந்திய ராணுவம் அனுப்பபட்டது அதை சிங்கள அமெரிக்க துணையோடு புலிகள் விரட்டினர்

வைகோ திமுகவில் இருந்ததாலும் இயல்பாகவே வைகோ இந்திய எதிரி என்பதாலும் புலிகளுக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருந்தது இதில் திகவும் சேர்ந்தது

அந்நாளைய தேசியவாதி பழ.நெடுமாறன் பின்பு இதில் இணைந்தது சோகம்

சொந்த நாட்டு அமைதிபடையினையே தனக்காக எதிர்த்த கருணாநிதியும் தமிழகமும் தன்னை கைவிடாது என நம்பிய பிரபாகரன் ராஜிவ் கொலைக்கு துணிந்தான், அதன் பின்னும் தமிழகம் தன்னை காக்கும் என நம்பினான்

ராஜிவ் கொலைக்கு பின் தமிழகத்தில் கலவரம் வரும் கஷ்மீர் போல் நெருக்கடி வரும் அதில் சிக்கும் இளைஞர்கள் ஆத்திரத்தில் புலி கோஷ்டியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவனிடம் இருந்தது

ஆனால் கருணாநிதி அதன் பின் விலகினார், வைகோ தனிகட்சி தொடங்கி ஆதரித்தார்

ஜெயா எக்காலமும் புலி எதிரியே, அவரும் சோ ராமசாமியும் புலிகளின் ஹிட் லிஸ்டில் இருந்தனர், ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் பம்மியதால் தப்பினர்

1997ல் ஆனையிறவில் புலி வென்று ஈழம் அமைக்க முயன்றபொழுது வாஜ்பாய் அரசு உறுமியது வைகோ திமுக எல்லாம் வாய் பொத்தியது, அதில் மிகவும் சோர்ந்தான் பிரபாகரன்

அதன் பின் அவனின் திட்டம் தமிழ்க சினிமாக்காரர்களை வளைத்து தமிழ்நாட்டில் புதிய வகையில் ஆதரவு திரட்டுவதாக இருந்தது, 1999ல் அந்த முடிவுக்கு வந்தான்

தமிழக சினிமா கோஷ்டிக்குள் புலி பணம் வந்தது, ஐரோப்பிய ஈழதமிழர் என புலிகள் சினிமா தயாரித்தனர், அந்த தொடர்பிலே தமிழக சினிமா கும்பல் காவடி எடுத்து இலங்கைக்கு ஓடியது

மணிரத்னம் சுஜாதா கமல் ரஜினி தவிர எல்லா பயலும் சென்றதாக குறிப்பு உண்டு, நடிகைகள் யாரும் செல்லவில்லை. அவ்விஷயத்தில் பிரபாகரன் கவனமாய் இருந்தான்

ராஜ்கிரண்,மகேந்திரன் என பலரும் சென்றது அப்பொழுதுதான், சேரனை வளைத்துபோட புலிகள் முயன்றனர் லாவகமாக தப்பினார் அவர்

இக்கோஷ்டியில் பாரதிராஜாவோடு சென்றான் சைமன், அவன் புலிகளுக்கு சினிமா பாடமே நடத்தினான், உண்மையில் அவன் யாரென்றே பிரபாகரனுக்கு தெரியாது

பின் சில புலிகளை பிடித்து நான் தம்பி என அண்ணன் கதை எடுத்தேன், தமிழ்படம் எடுத்தேன் அண்ணனை பார்க்காவிட்டால் போகமாட்டேன் என ஒரே அடம்

பின் பிரபாகரனை காண ஏற்பாடாயிற்று, அதுவும் புலி சீருடையில் பிரபாகரனுடன் நிற்பேன் என அடம் பிடித்திருக்கின்றார் அதெல்லாம் முடியாது என ஒரு படம் மட்டும் எடுத்தார்கள், சந்திப்பு நடந்தது 2 நிமிடமே

இப்பொழுது சைமன் அள்ளிவிடும் கதை எல்லாம் அடிமட்ட புலிகளிடம் இவர் ஒட்டு கேட்டது

அப்பொழுது சைமன் இன்னொரு காரியமும் செய்தான் அது புலிகள் உடையில் படம் எடுத்தது இன்னும் பல ஆயுதங்களுடன் போஸ் கொடுத்தது

ஆனால் மேல்மட்ட புலிகள் அந்த படங்களை அனுமதிக்கவில்லை என்பதால் சோகமாக பிரபாகரன் படத்தோடு திரும்பினான்

அத்தோடு 2006ல் யுத்தம் வெடிக்க ஈழகதவு மூடபட்டு புலிகளும் கொல்லபட்டனர்

புலிகள் செத்தபின் புலிகளின் கோடிகணன்னான சொத்துக்கு சண்டை வந்தது அக்கோஷ்டிதான் பிரபாகரன் வந்தால் சொத்துக்களை தருவோம் என சொல்லிகொண்டிருப்பது அக்கோஷ்டிக்கு கணக்கு எழுத சீமான் மூலம் தமிழக எழுச்சிக்கான செலவு என எழுத சைமன் கிடைத்தான்

அதன் பின் சைமனை சசிகலா கணவன் நடராஜன் வளைத்தார், திமுகவுக்கு எதிரான அம்பாக மாறினான் சைமன்

பின் வைகுண்டராஜன் வளைத்து விஜயகாந்துக்கு எதிராக நிறுத்தினார், வடுக வந்தேறி கோஷம் அப்பொழுது வந்தது

இந்திய உளவுதுறையும் அவனை சீண்டி விட்டு ஆடியது

இப்படி யார் காசு கொடுக்கின்றார்களோ அவர்களுக்காக குரைத்த சைமன் இப்பொழுது யாருக்கு குலைப்பது என தெரியாமல் குழம்பி புலிகளை முனியாண்டி விலாஸ், மிலிட்டரி ஹோட்டல் அளவுக்கு சொல்லிகொண்டிருக்கின்றார்

இதனால் உச்ச மகிழ்ச்சியில் இருப்பது ராஜபக்சேவும் கோத்தபாயாவுமே, அவர்கள் விரும்பியது இதனைத்தான்.

ஆம் சீமானின் அல்ட்ராசிட்டியால் வைகோ, மணி, நெடுமாறன் போன்றவர்கள், பண்ருட்டி ராமசந்திரன் போல நேரடியாக புலியுடன் பழகியவர்கள் எல்லாம் அமைதியாய் ஓரமாய் நிற்கின்றார்கள் அல்லவா, இதுதான் சிங்களன் எதிர்பார்ப்பு

இந்திய உளவுதுறை எதிர்பார்ப்பும் அதுவே…

கடலடியிலும் காவல் நிலையம் அமைக்க உலகம் தயாராகிகொண்டிருக்கின்றது

எவ்வளவுதான் பாதுகாப்பிட்டாலும் திருட்டு கடத்தல் கோஷ்டி புது புது பாதைகளில் கடத்தலை செய்யத்தான் செய்யும்

ஆம் போதைபொருளை நம்ம ஊரில் பருத்தி விளைவிப்பது போல் விளைவிப்பவை கொலம்பியா மெக்ஸிகோ நாடுகள், நம்பர் 1 சரக்கு என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விலை அதிகம்

ஆபத்தான பொருள் என்பதால் பாதுகாப்பும் அதிகம்

ஆனால் பணத்தில் கொழிக்கும் கும்பல் எப்படி எல்லாமோ அனுப்பும், கர்ப்பிணி பெண்ணின் உடலை கிழித்து உள்ளே வைத்து தைத்து அனுப்புதல், லேட்பாப்புக்குள் வைத்து அனுப்புதல் மருத்துவகுழு மருந்து பொருளோடு அனுப்புதல் என அவை கடும் சவால் எடுக்கும்

கொலம்பியா மெக்ஸிகோ அரசுகள் எல்லாம் அவர்கள் சொற்படி ஆடுவதால் அரச விமானங்கள் கூட கடத்தலுக்கு பயன்படும் ஆனால் வெளிநாடுகள் பிடித்துவிடும்

அடுத்து கப்பலில் கடத்தினாலும் பிடித்தார்கள்

இதனால் சொந்தமாக நீர்மூழ்கி கப்பல் வாங்கி அதில் கடத்தலை ஜரூராக செய்திருக்கின்றது கோஷ்டி

மிக சாமார்த்தியமாக சிறு நீர்மூழ்கியில் ஏற்றி கடத்தியிருக்கின்றார்கள் சில பல தடவை அது ஸ்பெயினின் கடலடி ரேடாரில் சிக்கியிருக்கின்றது அவர்கள் திமிங்கலம் என விட்டுவிட்டார்களாம்

நேற்று இது திமிங்கலம் மாதிரி வளைந்து செல்லவில்லை புள்ளி வைத்து இழுத்தது போல் நேராக செல்கின்றதே என சந்தேகபட்ட ஸ்பெயின் கடற்படை இவர்களை பிடித்து விசாரிக்க உலகம் அதிர்ந்தே விட்டது

எத்தனை கிலோ இதுவரை கடத்தினார்கள் என்ற தகவலை கேட்டு ஆடிபோய் இருக்கின்றது ஐரோப்பா

ஆம் 5000 கிமீ தூரத்தில் இருந்து அசால்ட்டாக கடத்தி வந்திருக்கின்றது கோஷ்டி , எப்படியோ தமிழ் சினிமா கோஷ்டிகளுக்கு ஒரு காட்சி கிடைத்தாயிற்று

இனி என்னாகும்?

இனி கடலடியிலும் காவல் நிலையம் அமைக்க உலகம் தயாராகிகொண்டிருக்கின்றது,

ஆசிரமத்தில் அரசியல் கலந்தால் இப்படித்தான்

காவேரி விவகாரம் முடிந்ததாலும் காவேரியில் நீர்வரத்துக்கு சிக்கல் இல்லை என்பதாலும் சோர்ந்து போயிருந்த கன்னட கோஷ்டிகள் கடும் உற்சாகத்துடன் புதிய போர்கோலம் பூண்டுவிட்டன‌

ஆம் இம்முறை அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பவர் நித்தி சாமி

கிராபிக்ஸ் நித்திக்கு கன்னடத்தில் இடமில்லை என பெரும் போராட்டம் வெடித்துவிட்டது, சாமியும் சும்மா இருக்காமல் மேற்கிந்திய தீவில் இருந்து வீடியோ போட்டு வெறுப்பேற்றுகின்றார்

தன் வழக்கமான மந்தகாச புன்னகையினை வீசியபடி அவர் பதில் வீடியோ அனுப்பி இவர்களை வெறுப்பேற்ற இவர்கள் மறுபடி நித்தி படத்தை எரிக்க விவகாரம் பெரிதாகின்றது

நித்தி தன் வழக்கமான சிரிப்பில் இருந்து கொஞ்சம் சீரியசாகி தன் ஆன்மீகம் எப்படியும் வளரும் என்றும் இந்தியா பற்றி தனக்கு கவலை இல்லை என்றும் உளறிவிட்டார், பின் வார்த்தையினை வாபஸ் வாங்கினார்

ஆனால் இந்தியா பற்றி தனக்கு கவலை இல்லை என அவர் சொன்னதை பிடித்த கோஷ்டிகள் ஆண்டி இந்தியன் நித்தி என கத்திகொண்டிருக்கின்றன‌

இன்று இன்னும் நித்தியின் வீடியோ வெளிவரவில்லை அது வெளிவந்தபின் அடுத்த காட்சி அரங்கேறும்

விரைவில் நித்தியின் பிடாடி ஆசிரமத்தார் பிடரியில் அடிபட ஓடிவருவார்கள் என்பது போலவே காட்சிகள் நடக்கின்றன‌

விஷயம் வேறொன்றுமில்லை முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் நித்திக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தமும் ரகசிய காப்பு பிரமாணமும் நடந்திருக்கின்றது, பாஜக அரசு அதை கேட்டு விரட்டி விரட்டி அடிக்கின்றது , இதனால் நித்திக்கு எதிராக முணுமுணுத்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் பகிரங்கமாக வந்து நிற்கின்றார்கள்

இதுதான் நிஜம்

ஆசிரமத்தில் அரசியல் கலந்தால் இப்படித்தான்

ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு

ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு, 1980களில் இருந்து வரும் சென்டிமென்ட் அது

ஆம் அவரின் படத்தின் தொடக்கபாடலை எஸ்.பி பாடினால் படம் ஹிட் ஆகும் இன்னொருவர் பாடினால் படம் படுத்துவிடும் என்பது

அதை ஏகபட்ட படங்கள் நிரூபித்தன, பாபா அதை சரியாக சொன்னது, கபாலியும் காலாவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்தன‌

மறுபடி எஸ்பி பாடிய பேட்டை ஹிட் ஆனது, இதோ தர்பாரிலும் எஸ்பி குரல் வந்தாயிற்று, பாடலை கேட்கும் பொழுதே படம் ஹிட் என தெரிகின்றது

ரஜினி நிச்சயம் அதிசயம் ஆனால் அவருக்கு 40 வருடமாக பாடும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அதைவிட அதிசயம்

ஆச்சரியமாக ரஜினி குரலில் மாறுபாடு இருந்தாலும் எஸ்பி குரல் அப்படியே இருக்கின்றது

எஸ்பி குரலுக்கு வயதே ஏறவில்லை என்பதுதான் விசித்திரம்..

அக்குரல் ரஜினியினை இன்னும் சினிமாவில் இளமையாக வைத்திருக்கும் மாயவித்தையினை அழகாக செய்கின்றது

அதே 1980களின் குரல் அப்படியே இருப்பதும் ரஜினிக்கு பொருந்துவதும் அவருக்கு வரம்..

தர்பார் பாடலின் வரியான “இன்னைக்கும் ராஜா நான் கேட்டுபாரடா..” எனும் அந்த அழகான வரி எஸ்பிக்காக எழுதபட்டிருக்கின்றது

ஆம் அவர் என்றைக்கும் ராஜா..

Self Balancing Scooter

இந்தியா இப்பொழுது வேகமாக உலகளாவிய வசதிகளுக்கு மாறிவருகின்றது , அப்படி போலிசாருக்கு “Self Balancing Scooter” எனப்படும் இரு சக்கர வாகனம் வழங்கபட்டிருக்கின்றது

இது சாலையோரங்களிலும் ரயில் நிலையம் போன்றவற்றிலும் பயன்படுமாம், நடப்பதற்கு பதில் விரைவாக செல்லுமாம்

இதில் உயரதிகாரிகளுக்கு காய்கறி வாங்கவும், டீ சிகரெட் வாங்கவும் நம்ம ஊர் காவலர்கள் பயணிப்பார்களா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை, அதெல்லாம் கேட்க கூடாது

இவ்வாகனம் ரயில் நிலையத்தினுள்ளும் விமான நிலையத்துள்ளும் சரி, மற்ற இடங்களில் இவைகளில் பயணிக்கும் அளவா சாலை தரம் இருக்கின்றது?

ஒவ்வொரு பள்ளத்திலும் இறங்கி இதை சுமந்து மறுபடி பயணித்து மறுபடி பயணிப்பதற்குள் போலிசாரின் வயிறு கரைந்துவிடாதா?

ஒருவேளை தமிழ்நாட்டு காவல்துறையின் திட்டம் அதுவாகத்தான் இருக்குமோ என்னமோ?

கூட்டு நடிப்பு அணி

இலங்கையில் முள்ளியாக்கால் துயரம் நடந்தபொழுது இந்திய ராணுவம் அனுப்பபட்டிருக்க வேண்டும்,

அனுப்பி அம்மக்களை மீட்டுவிட்டு அந்த பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இழுத்து வந்து டெல்லியில் போட்டுவிட்டு இந்திய அமைதிபடை அங்கு நிறுத்தபட்டிருக்க வேண்டும்

இந்திரா இருந்தால் அதை செய்திருப்பார், ஏன் மோடி இருந்திருந்தால் கூட சாத்தியம்

ஆனால் அன்று கள்ளமவுனம் காத்த இதே கூட்டணி இன்று ஒன்றாக மகராஷ்டிரத்துக்கு அழுகின்றார்களாம்

இவர்களும் இவர்கள் கூட்டணியும், இது கூட்டணி அல்ல, கூட்டு நடிப்பு அணி.

இந்த நல்லவர்களை தேசம் விடலாமா?

தமிழக பிரச்சினையினை பேசுங்கள் என 39 இம்சைகளை எம்பியாக்கி அனுப்பி வைத்தால் அவை காஷ்மீருக்கும் மஹராஷ்டிரத்துக்கும் பேசிகொண்டிருக்கின்றன‌

அட இந்த நல்ல தேசிவாதிகளா திமுக எனும் பிரிவினைகட்சியில் இருக்கின்றார்கள்?

அந்த பிரிவினைவாத கட்சிக்கு இந்தியா உவப்பானதா? இல்லையே

ஆனால் இவர்கள் இந்தியாவின் மற்ற மாநிலம் பற்றி எவ்வளவு கவலைபடுகின்றார்கள், இந்த நல்லவர்களை தேசம் விடலாமா?

இவர்கள் காங்கிரஸிலோ அல்லது பாஜகவிலோ சேர்ந்து தேச கடமை ஆற்றினால் என்ன..?

நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான்

நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான் அங்கிள் சைமன் சென்று ஆமைகறி உண்டார் அதை குறித்து வைத்துகொண்டார்கள்

ஒருவேளை புலிகள் நாகலாந்து, மணிப்பூர் அப்படியே சீன பக்கம் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அங்கிள் நாய்கறி, பூனை சூப், குரங்கு வறுவல், தேள் பொறியல், பாம்பு பிரை எல்லாம் உண்டு வந்திருப்பார், அதை வரலாறு குறித்து வைத்திருக்கும்..

அதை வருங்காலத்தில் படிக்கும் மகனுக்கும் பேரன் பேத்திகளுகும் எப்படி இருக்கும்?

அந்த வம்சமே நாய்கறி வம்சம், பாம்பு சூப் வம்சம் ஆகியிருக்காதா?

நன்றி அறிவிப்பு நாள்

அமெரிக்காவில் இப்பொழுது அதாவது நவம்பர் கடைசி வாரம் நன்றி அறிவிப்பு வாரம் என கொண்டாடபடும், இன்று அவர்களுக்கு நன்றி அறிவிப்பு நாள், அது தேசிய விடுமுறை

இன்று தங்கள் வாழ்வில் தங்களுக்கு உதவிய அல்லது உதவும் எல்லோருக்கும் நன்றி சொல்லி ” Thanks Giving Day” என கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள், அதன் தாக்கம் ஐரோப்பாவிலும் இருக்கின்றது

ஐரோப்பாவில் இருந்துதான் அதை அவர்கள் களவாடினார்கள் என்பது வேறு விஷயம், பொதுவாக ஐரோப்பியருக்கு ஜனவரியில் தொடரும் வேலை ஆண்டு நவம்பரில் முடியும், டிசம்பர் முழுக்க கொண்டாட்டம் அது கிறிஸ்மஸ் பண்டிகையோடு முடிந்து மறுபடி ஜனவரியில் வேலை செய்ய வருவார்கள்

அந்த விடுமுறை கொண்டாட்டம் தொடங்கும் முன்பாக இந்த வருடம் முழுக்க தங்களுக்கு உதவியர்களுக்கு நன்றி சொல்கின்றார்களாம்

இந்தியாவில் இந்த வழக்கத்தை நாம் பூஜா கொண்டாட்ட நாட்களில் காணலாம், ஆயுத பூஜை என்பது இந்த வழக்கமே, ஆம் அவர்கள் மனிதர்களுக்கு மட்டும் நன்றி தெரிவிப்பார்கள், நாமோ சக மனிதருக்கும் அதோடு நம் தொழிலுக்கு உதவும் ஆயுதங்களுக்கும் நன்றி தெரிவிப்போம்

இன்னும் பொங்கல் நாளில் ஆடுமாடுகளுக்கும் சூரியனுக்கும் கூட நன்றி தெரிவிப்போம்

ஆக நன்றி தெரிவிப்பதில் அவர்களுக்கு சுயநலம் அதிகம், தங்களுக்கு உதவிய மனிதருக்கு மட்டும் நன்றி தெரிவிப்பார்கள்

நாம் நமக்கு வழிகாட்டிய பெரியவர்களுக்கு அந்நாளில் காலில் விழுந்து நன்றி சொல்வோம், அத்தோடு விடுவோமா? நம்முடன் இருக்கும் ஜடபொருளிலும் , ஐந்தவிறிவு விலங்கிலும் இறைவனின் இயக்கத்தை கண்டு அவைகளுக்கும் நன்றி செலுத்துவோம்

அட ஊர் ஊருக்கு நடக்கும் திருவிழாவும், கொடை விழாக்களும் என்ன? அவை ஆலய தெய்வத்துக்கு நடக்கும் நன்றி அறிவிப்பு விழா.

ஆம் ஒவ்வொரு செயலிலும் , நமக்கு நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திலும் எதெல்லாம் துணைக்கு வருமோ அதெல்லாம் கடவுளின் அருள் என கருதி அவற்றினை வணங்கி அதன் மூலம் கடவுளுக்கே நன்றி சொல்லும் சமூகம் இது

நன்றி செலுத்துவதில் இந்திய சமூகம் ஒருபடி மேலேதான் இருக்கின்றது

ஐரோப்பிய அமெரிக்கரின் இப்பண்டிகை நமது பொங்கல் மற்றும் ஆயுதபூஜா கொண்டாட்டத்தின் சாயல் அன்றி வேறல்ல, அவர்களுக்கு முன்பே நன்றி பண்டிகை கொண்டாடும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் நாம்.

பாத பூஜை

சபரிமலை அய்யப்ப சுவாமி உலகெல்லாம் பக்தர்களை இழுக்கும் பெரும் சாஸ்தா என்பதால் மலேஷியாவிலும் அவர்களுக்கு பக்தர்கள் அதிகம்.

இயல்பாகவே மலேஷிய இந்துக்களுக்கு பக்தி அதிகம் என்பதால் இவ்வருடம் ஆயிரகணக்கான மலேசிய சாமிகள் சபரிமலைக்கு வரலாம் என்கின்றார்கள்,

அடுத்த்த இரு மாதத்துக்கான‌ ஏர் ஏசியா விமான நிறுவணத்தின் டிக்கெட் விற்பனையும் அதை உறுதிபடுத்துகின்றது

அறை நண்பனும் சாமியாகிவிட்டான், செய்தி பார்த்தால் கூட “அமித்சாமி, மோடி சாமி, ஸ்டாலின் சாமி” என அழைக்கும் அளவுக்கு பக்தி பழமாகிவிட்டான்.

அவனுடன் ஏகபட்ட அய்யப்ப சாமிகள் தொடர்பில் இருக்கின்றன, அவர்களுக்கான பக்தி முயற்சிகளும் விரதங்களும் பிரார்த்தனைகளும் அட்சிதம் பிறழாமல் கடைபிடிக்கபடுகின்ற.

அவற்றில் ஒன்று பாத பூஜை

அதாவது வயதில் குறைந்த சாமிகள் அல்லது மற்ற பக்திமிக்கோர் வயதில் மூத்த சாமிகள் காலை மஞ்சளும் பூவும் கலந்த நீரால் கழுவி பூஜிக்க வேண்டுமாம்

பொதுவாகவே பாதபூஜை ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது, குடும்பத்தில் மூத்தவருக்கும் பெரியவருக்கும் செய்யபடும் பூஜையின் அர்த்தம் அதுவே,

இக்கால்கள் இக்குடும்பத்துக்காய் ஓடி உழைத்த கால்கள், இக்குடும்ப கோவிலுக்காக ஓடிய தேர்கால்கள் என்பதே அதன் பொருள்

ஆம் பாரத பண்பாட்டுபடி சில நாட்களில் கணவனுக்கு மனைவி செய்யும் பாத பூஜையும், தாய்க்கு மகன் அக்காலங்களில் அனுதினமும் செய்த பாத பூஜையும் இக்கணக்கே..

(அக்காலத்தில் சில இந்து குடும்பத்து மகன் தன் தாயின் கலை கழுவி அந்நீரை காலையிலே சில சொட்டு அருந்துவானாம்..)

சபரிமலை பயணத்துக்கான காலங்களில் நடைபெறும் இந்த பூஜை அவ்வரிசையே, இது குரு சாமிகளுக்கு இளம் சாமிகள் செய்வது,

மற்ற சாமிகளுக்கும் அடுத்தவர்கள் இந்த பாத பூஜை செய்யலாம் என்கின்றார்கள்

இந்த பாதபூஜை பாரம்பரியமிக்க‌ இந்துமதத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது. ஆம் இந்த பாதங்களே கடவுளுக்காக ஓடுகின்றன, அவருக்காய் நடக்கின்றன அந்த பாதங்களை தொட்டு வணங்குவதில் புண்ணியம் உண்டு என்ற ஏற்பாடு அது

சபரிமலைகான கடும் பயணத்தில் கல்லிலும் முள்ளிலும் மிதிக்க வேண்டிய பாதங்கள் அவை, குளிரிலும், வெயிலிலும் பாறையிலும், நீரிலும் நடக்க போகும் பாதம் அவை என்பதால் அந்த பாதங்களை கண்ணீரோடும் பக்தியோடும் வணங்குகின்றனர்

சபரிமலை எனும் மகா புனிதமான சன்னிதானத்தி பதியபடும் பாதங்கள் அல்லவா? அதனால் அந்த பாதங்களுக்கு மஞ்சள் நீரும் , பூ கலந்த வாசனை நீருமாக ஊற்றி வணங்குகின்றார்கள் இந்துக்கள்

அந்த பூஜை செய்யபடும் பொழுது அவர்கள் மனம் சபரிமலை சாஸ்தாவிடம் ஒன்றிவிடுகின்றது, சாமியே சரணம் அய்யப்பா என கோஷம் ஒலிக்க செய்யபடும் பூஜை அந்த சாஸ்தாவுக்கே செய்யபடுவதாக எண்ணி மனமார செய்கின்றார்கள் அந்த பக்தர்கள்

சபரிமலைக்கு செல்லமுடியாதவர்களும் அய்யப்பனை எண்ணி செய்யும் பக்தி முயற்சி அது

இது பாரத பண்பாட்டின் அடையாளம், குருக்கள் காலில் பக்தர்கள் விழுவது அப்படியே

இக்கால்கள் பகவானுக்காக ஓடி உழைக்கும் கால்கள் எனும் நன்றியே அது

காந்தி காலிலும் நேரு காலிலும் இந்நாட்டு மக்கள் அப்படித்தான் விழுந்து வணங்கினர், ஆம் அவை தேசத்துக்காய் நடந்த கால்கள்

இதில் மானகுறைவு என்றோ, இழிவு என்றோ , அடிமைதனம் என்றோ எதுவுமில்லை. ஆன்மீகமத்தின் முதல்படியே நான் என்ற அகந்தையினை ஒழிப்பது

ஆலயத்தில் குருக்களின் காலில் விழுந்து வணங்குவது அக்குருவில் கடவுளின் சாயலை கண்டே, அந்த கால்கள் ஆலயத்துக்காக ஓடும் கால்கள் எனும் நன்றியால் மட்டுமே

இதில் சுயமரியாதை இழுக்கு, பகுத்தறிவு முழுக்கு, மூட நம்பிக்கை என எதுவுமில்லை இதெல்லாம் நன்றிகடன், மனமார செய்யும் நன்றிகடன்.

மாறாக வாக்குக்கும் சீட்டுக்கும் பதவிக்கும் கும்பிட்டு காலில் விழுவதே பகுத்தறிவும், சுயமரியாதையுமாகும்.

அய்யப்ப பக்தர்கள் விரதங்களிலும் அவர்களின் சம்பிரதாய சடங்குகளிலும் இந்துக்களின் பாரம்பரிய அறிவும் அவர்களின் பக்தியும் அதற்கான முயற்சிகளும் பல இடங்களில் தெரிகின்றன‌

எம்மை பொறுத்தவரையில் பாதபூஜை என்பது சரியானதே, பகவான் இயேசு கிறிஸ்துவே அதை செய்தார்

ஆம் தான் கொல்லபடும் முன் கடைசி நாளில் தன் கைகளால் தன் சீடர்களின் பாதங்களை கழுவி,, தன் உடையால் அதை துடைத்து முத்தமும் இட்டார்

இந்த பாதங்களே உலகெல்லாம் நடந்து தன்னையும் தன் உயர்ந்த கொள்கைகளையும் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க போகின்றன என என்பதை உணர்ந்து அக்காரியத்தை அவர் செய்தார்

அந்த வழக்கம் இயேசுவின் புதுமுயற்சி அல்ல, யூதரில் ஒரு வழக்கமாயிருந்தது அறிவில் சிறந்தோருக்கும் யூத ஞானிகளுக்கும் மற்ற சாமான்யர் கொடுக்கும் மரியாதை அது

இயேசுவுக்கே ஒரு பெண் அப்படி பாதபூஜை செய்த காட்சி உண்டு

அதே பூஜையினை தன் சீடருக்கும் திருப்பி செய்தார் மகான் இயேசு கிறிஸ்து, பணிவின் உச்சத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் எப்படி இருக்க வேண்டும் என செய்கையால் போதித்தார்

இன்றும் இச்சடங்கு பெரிய வியாழன் அன்று உண்டு , பாதிரிகள் செய்வார்கள், போப்பாண்டவரும் செய்வார்

யாரும் உயர்ந்தவர்கள் அல்ல, மனிதனுக்கு பணிவு வேண்டும், அதுவும் கடவுள் காரியங்களில் இருக்கும் மனிதர்களின் பாதங்கள் வணங்கதக்கவை எனும் தத்துவம் அது

அந்த உன்னத தத்துவத்தைத்தான் அய்யப்ப பக்தர்களும் குருசாமிக்கு செய்துகொண்டிருக்கின்றார்கள் ,

அய்யப்ப பக்தர்களின் கால்களுக்கு மற்றவர்களும் செய்கின்றார்கள்

தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க அரசியல்வாதி என திரியும் கால்களை விட அந்த கால்கள் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவை

அவை ஆலயத்துக்கு நடக்கின்றன, பக்தியும் ஆன்மீகமும் வளர்ந்து மானிட இனம் ஞானம் பெற நடக்க்கின்றன, அந்த பாதங்களை எவ்வளவு வணங்கினாலும் தகும். அந்த வணக்கம் அந்த பகவானை சேருமன்றி மானிடரை சேரா

சபரிமலை விரத காலங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு தத்துவத்தை போதித்துகொண்டே நகர்கின்றது, அந்த கருப்பு ஆடை தான் இயல்பான வாழ்விலிருந்தும் , கொண்டாட்ட சமூகத்தில் இருந்தும் ஒதுங்கி இருகின்றேன் என்பதை காட்டுகின்றது

அந்த பக்த கூட்டத்தையும் அதன் சடங்குகளையும் ஆழ கவனித்தால் ஏகபட்ட ஞானமிக்க விஷயங்கள் இருக்கின்றன.