ஒருவிஷயம் உண்மை

ஐடி முடக்கபட்டது என சொல்லி இன்னொரு அடி திறந்தால் ஆயிரகணக்கான நண்பர்கள் அங்கும் வந்துவிட்டார்கள்.

நிச்சயம் நம்மிடம் ஏதோ எதிர்பார்கின்றார்கள். எதையோ இவன் உருப்படியாக சொல்கின்றான் என நம்புகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நினைத்தால் மனம் பதைபதைக்கின்றது

தேவையில்லாமல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டோமோ என்றெல்லாம் கூட யோசனை வருகின்றது, ஆனால் இவ்வளவு ஆயிரம் பேர் வந்து நிற்கின்றார்கள் என்றால் நம்மை நம்புகின்றார்கள் என்பது தெரிகின்றது.

நாம் எழுதுவது அவர்களை எதையோ உணர வைக்கின்றது, தேட வைக்கின்றது அதற்காக‌ வருகின்றார்கள். நன்றி

ஒருவிஷயம் உண்மை

இனி எழுதுவதை நிறுத்தமுடியாது, நிறுத்தினால் கட்டி வைத்து, கல்லால் அடித்து இழுத்து போட்டு உதைத்து எழுத வைப்பார்கள் என்பது மட்டும் புரிகின்றது

பன்றி சுட எதற்கு ஷார்ட் கன்?

உலகத்துலே போர் நடக்கும் இடத்துல பன்றி வேட்டைக்கு போன ஒரே போராளி கூட்டம் நம்ம பிரபாகரன் கூட்டம்தான்

ஈழம்பிடிக்க‌ போரட்டம் நடத்தினார்கள் என நாம் நினைத்தால் அவர்கள் பன்றி பிடிக்க போராடியிருக்கின்றார்கள்

அவன் மாவீரன் பிரபாகரன் என நினைத்தால் அவன் பன்றி வீரன் பிரபாகரனாய் இருந்திருக்கின்றான்

பன்றி பிடிக்கும் படை, மான் பிடிக்கும் படை , உடும்பு பிடி படை, முயல் தூக்கும் படை, ஆமை பிடிக்கும் படை என பல படைபிரிவுகள் இருந்திருகின்றன.

கடல் படை மீன் பிடித்திருக்கின்றது , வான் புலி கொக்கும் குயிலும் பிடித்திருக்கின்றது.

இந்த லட்சணத்தில் இவர்கள் போராட்டத்தை இந்தியா ஒழித்தது என ஒப்பாரி வேறு…அயோக்கிய பயலுகளா

மான் கறியும் பன்றிகறியுமாய் தின்றிருக்கின்றது கோஷ்டி, விடுதலை புலிகளுக்கான அர்த்தம் இப்பொழுதுதான் புரிகின்றது, இது மான் திங்கும் புலி கூட்டமாக இருந்திருக்கின்றது

நரி குறவன்களை விட மோசமான பயலாய் இருந்திருக்கின்றான் பிரபாகரன்..

(சரி பன்றி சுட எதற்கு ஷார்ட் கன்?, அதை பிடித்து முகத்தில் சுடவா?…….)

தமிழ் திரையுலகுக்கான ஆஸ்கர் விருதை இழக்க வைத்து விட்டது

திருச்சி நகைகொள்ளை முருகனை விசாரித்த காவல்துறை தலையில் அடித்து சிரித்துகொண்டிருக்கின்றது

ஆம் அவன் கிட்டதட்ட 100 இடங்களில் கொள்ளை அடித்திருக்கின்றான், அதை கொண்டு தன் அக்கா மகனை வைத்து தெலுங்கில் இரு படம் தயாரித்திருக்கின்றான், ஆனால் வெளிவரவில்லை

அவனுக்கென்ன பைனான்சியர் சிக்கலா? வட்டி பிரச்சினையா? இல்லை அன்பு செழியன் போல ஏதும் மிரட்டலா?

அவன் கொள்ளை அடித்து மறுபடியும் சினிமா தயாரித்திருகின்றான், அப்பொழுதுதான் சிக்கி இருக்கின்றான். கொஞ்சகாலம் பிடிபடாமல் இருந்திருந்தால் ஆக சிறந்த தமிழ் சினிமா ஒன்றை தயாரித்திருப்பானாம்

அன்னார் அரசியலுக்கு ஆசைபடாமல் சினிமாவுக்கு சென்றுவிட்டார் என அமைதியடைய ஒன்றுமில்லை, அவர் சினிமாவில் வெற்றியடைந்து அரசியலுக்கு வர திட்டமிட்டிருக்கலாம் அரசியலில் லைசென்ஸ்டோடு கொள்ளையடிக்கலாம் என்பது அவனுக்கு தெரியாமலா இருந்திருக்கும்

சினிமாவில் அரசியல்வாதி பணம் முதல் ஏராளமான கொள்ளையர் பணம் கிடக்கின்றது அதில் நகைகடை கொள்ளையன் பணமும் கலந்திருக்கின்றது என்பதை வரலாறு குறித்துகொண்டது

எப்படியோ முருகனை அவசரபட்டு கைது செய்து அவனின் ஆகசிறந்த தமிழ்படத்தை தயாரிக்கவிடாமல் செய்து, தமிழ் திரையுலகுக்கான ஆஸ்கர் விருதை இழக்க வைத்து விட்டது

அவரை வாரிசு என்பீர்கள்..

அவரை வாரிசு என்பீர்கள்..

அந்த வாரிசு கடந்த காட்டாறுகள் எத்தனை, அவன் கடந்த நெருப்பாறுகள் எத்தனை என்பதை காணுங்கள்

பாட்டிசைக்கும் குயில்கள் இல்லை அவன் பாதையில், நாகங்கள் நிறைந்திருந்தன. தென்றலை தீண்டியதில்லை அவன் தீயினை தாண்டியிருக்கின்றான்

தயவு செய்து அவன் கதையினை கேளுங்கள்..

கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது

இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு அறிவிப்பு

கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது இன்ப அதிர்ச்சி, சீனாவுக்கு சாவுக்கு ஒப்பான அதிர்ச்சி

தென்னிலங்கையில் ஹம்பந்தோட்டா எனும் இடத்தில் சீனா துறைமுகம் கட்டி தன் பொறுப்பில் எடுத்தது அதில் சீன கப்பல்களுடன் சீன ராணுவ கப்பல்களும் நிற்கும், அமெரிக்கா தன் கப்பலோடு அடிக்கடி அங்கு சென்று இதுவும் கப்பல்தான் உள்ளே விடு என தகறாறு எல்லாம் செய்யும்

சீனா அதை மிக நன்றாக பிடித்து வைத்திருந்தது, கடந்த மாதம் கூட ஒரு சில உளவு கப்பலை சீனா இலங்கைக்கு கொடுத்திருந்தது. அதுவும் அப்பக்கம் சுற்றுகின்றது

இந்நிலையில் சீனாவுக்கான ஒப்பந்தம் ரத்து என கொழும்பு அறிவித்திருக்கின்றது, இத்தகவலை கொழும்பு நிதி அமைச்சு அறிவித்துள்ளது

கோத்தபாய டெல்லியில் இருக்கும் பொழுது இந்த அறிவிப்பு வந்திருப்பது சீனாவுக்கு இந்தியா கொடுத்த அடி

இந்த துறைமுகம் மகிந்த காலத்தில் அதாவது இந்தியாவில் காங்கிரஸ் அரசு இருந்தபொழுது சீனாவுக்கு கொடுக்கபட்டது, அதை தடுக்க காங்கிரஸ் அரசு நினைக்கவில்லை

மோடி அரசு அதை செய்து மீட்டிருகின்றது, இலங்கையில் இந்திராவின் நிலைப்பாட்டை மன்மோகன் சிங் எடுக்கவில்லை மோடி செய்திருக்கின்றார்.

ஆக பாட்சா படத்து கல்லூரி காட்சி போல் கெத்தாக வந்தார் கோத்தபாய, மோடி என் பெயர் மோடி எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என சொன்னவுடன் வியர்த்து விறுவிறுத்து “அண்ணே. சீனாவாண்ணே.. இப்போ விரட்டிரலாம்ணே.. அண்ணே அது உங்க நாடுண்ணே.. பூரா உங்களுக்குண்ணே” என சொல்லிகொண்டிருக்கின்றார் கோத்தபாய‌

நிச்சயம் மோடி அரசின் மிக சிறந்த ராஜதந்திரம் இது, அப்படி என்ன சொல்லி கோத்தபாயவினை வழிக்கு கொண்டுவந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் மகா சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை இந்தியா காட்டி மிரட்டி இருக்கலாம்

தும்பிகள் அது சீமான் என உற்சாகமாக சொல்லும் என்பது வேறுவிஷயம், அப்படி சொன்னால் கோத்தபாய உருண்டு புரண்டு சிரித்துவிட்டு சென்றிருப்பான், சீனா வெளியேறியிருக்காது

விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, விரைவில் கசியும் அப்பொழுது உங்களுக்கு அறிய தருவோம்

மிக பெரும் சாதனையினை மோடி செய்திருக்கின்றார், நிச்சயம் தேசத்துகான நல்ல விஷயம் இது, இலங்கையில் இந்தியாதன் பிடியினை இறுக்கி வைத்திருக்கின்றது

அப்படி என்ன சொல்லியிருப்பார் மோடி, கேட்டால் “ஹா ஹா ஹா உண்மை சொன்னேன்” என ரஜினி ஸ்டைலில் சொல்வார்

அந்த உண்மை மெதுவாக வரும்,

அடுத்து என்ன? ரஜினியின் பாஷா பாடலை மோடிக்கு பாட வேண்டியதுதான்

“ஏ மோடி பாரு, பாரு
கொழும்பில் இவன் பேரை சொன்னா
இந்து கடல் கத்தும் பாருடா..

திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை

நடக்கும் காட்சிகளை கண்டால் ஒன்று புரிகின்றது.

திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை, அதிமுக மிகவும் யோசிக்கின்றது , உட்கட்சி குழப்பம் முதல் பல வகையான குழப்பங்களை அதிருப்திகளை இது உருவாக்கும் என அது மாவட்டம் பிரிப்பு அது இது என சுற்றி வருகின்றது

உள்ளாட்சி தேர்தல் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தும் அது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அஞ்சுகின்றது

திமுக கணக்கு வேறுமாதிரியானது, நமக்கெல்லாம் தளபதி தெரியும் ஆனால் 33 குட்டி தளபதிகளும் அவர்களுக்கு கீழ் பட்டிதொட்டியெல்லாம் சுட்டி தளபதிகள் இருப்பது பலருக்கு தெரியாது

இந்த குட்டி சுட்டி தளபதிகளுக்கு எதிர் தளபதி அதிமுகவில் அல்ல திமுகவிலேதான் உண்டு, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டால் “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ” தொடங்கி “ஆள்வதற்கு நீ மாள்வதற்கு நானா” எனும் கருணாநிதியின் வசனம் கட்சிக்குள்ளே கேட்கும்

அந்த சண்டையில் அறிவாலயம் புகார் மனுக்களாலே நிரம்பும், பெரும் கலகம் வெடிக்கும் என திமுக அஞ்சுகின்றது

இவர்கள் இருவரும் இப்படி யோசிக்க காங்கிரசும் பாஜகவும் டீ குடிக்க சென்றாயிற்று

சாதிய கட்சிகளும் நாம் தமிழர் கோஷ்டியும் சில வார்டுகளை கைபற்றி வெற்றி முழக்கமிடலாம் என திட்டமிடுகின்றன எனினும் அதிலும் தோற்றால் கேவலம் எனும் அச்சமும் அவைகளிடம் உண்டு

சுருக்கமாக சொன்னால் உள்ளாட்சி தேர்தலை தேவையற்ற பந்தயமாக இரு கட்சிகளும் கருதுகின்றன, அதை தள்ளிவிட முடியுமா என மிகவும் யோசிக்கின்றன‌

இதோ திமுக நீதிமன்றம் சென்றாயிற்று, அதிமுக அவர்களை பார்த்து “விஸ்க் .. விஸ்க்.. அப்படித்தான்..” என கண்ணடிப்பது உங்கள் ஞான கண்களுக்கு தெரியலாம்

சமூக நீதி எனும் சொல் தீவிரவாதம் போல, தேசதுரோகம் போல கருதபட வேண்டிய கொடும் விஷயம்

நாட்டை கெடுப்பதே இந்த யழவு சமூக நீதி

எந்த சாதி எந்த மதமாயினும் இந்தியன் என்ற அளவில் அவனை பார்த்து அவன் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்துகின்றோமோ அன்றுதான் இந்த தேசம் உருப்படும்

என் சாதி, என் மதம், என் மொழி என குறுகிய வட்டத்தில் பார்த்து அதை அரசியலாக்கி அந்த மகா குறுகிய கீழ்தரமான தந்திரத்துக்கு சமூக நீதி என பெயரிட்டால் இச்சமூகம் உருப்படாது

கல்வி எல்லோருக்கும் பொதுவாக வழங்கபடுகின்றது, பள்ளி கல்வி எல்லோருக்கும் சமமே, அதில் அறிவாளியும் திறமையானவனை முன்னிறுத்தல் வேண்டும்,

மாறாக இந்த சாதி என ஒடுக்குவதும் உயர்த்துவதும் சமூக நீதி அல்ல சமூக அநீதி

ராணுவத்தில் 50 கிலோ எடை தூக்குபவனை அதற்கேற்ற களத்தில் நிறுத்தவேண்டும் மாறாக இந்த சாதி என்பதற்காக இட ஒதுக்கீட்டில் 5 கிலோ கூட பலமற்றவனை நிறுத்தினால் ராணுவம் சர்க்கஸ் கூடாரமாகும்

ஓடவே தெரியாதவனை இட ஒதுக்கீடு என சொல்லி ஒலிம்பிக்கில் ஓடவிட்டால் என்னாகும்?

நாடு நலம்பெற இந்த சமூக நீதி எனும் அநீதியினை ஒழித்துகட்டல் வேண்டும், இதெல்லாம் என் சாதி, என் இனம் என்ற குறுகிய அரசியல் தந்திரம், இதனால் நாட்டுக்கு விளையபோகும் நன்மை ஏதுமில்லை, மாறாக வீண் அரசியல் குழப்பமே மிஞ்சும்

எல்லோரையும் சோம்பேறியாக்கும் சொல் சமூக நீதி, இதனால் அவர்களிடம் ஒரு உத்வேகமோ கடின உழைப்போ மாற்று சிந்தனையோ ஒரு காலமும் வராது

இட ஒதுக்கீடும் எனும் அநீதி அவர்களை முழு சோம்பேறிகளாக மாற்றும் இப்பொழுது அப்படித்தான் அது அந்த சமூகத்தை ஆக்கிகொண்டிருகின்றது

சமூக நீதி எனும் சொல் தீவிரவாதம் போல, தேசதுரோகம் போல கருதபட வேண்டிய கொடும் விஷயம்

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு

கத்தரிக்காய் வாங்குவது போல மருத்துவ சீட்களை வாங்கினால் இப்படித்தான், நீட் தேர்வு போன்ற கட்டுப்பாடுகள் ஏன் வேண்டும் என்பதும், இந்த இட இதுக்கீடு இம்சைகள் மருத்துவ துறையில் ஏன் இருக்க கூடாது என்பதும் இதனால்தான்

விசாரணை முடிவு தெரியவந்தால் இந்த சாவின் பின்னால் இட ஒதுக்கீடுதான் இருக்கும்

மோடிக்கும் இம்மாதிரி யோசனை வராமல் இருந்தால் நல்லது

இந்த படத்தை வெளியிட்டது யாரெனில் புட்டீனோ வடகொரிய தலைவரோ இல்லை மாறாக டொனல்ட் ட்ரம்ப் எனும் அவர்தான்

ஆம் இரு தினங்களுக்கு முன்பு அவர் மருத்துமனை சென்றார், அவருக்கு என்னாயிற்று என கேள்விகள் வந்த நிலையில். மருத்துவர் என் மார்பு மிக வலுவானதாக இருக்கின்றது என மருத்துவரே சொன்னார், அவரே அசந்துவிட்டார், இதோ என் பலமான உடல் என அவரே டிவிட் செய்துவிட்டார்

இதை அமெரிக்கர் ரசித்து சிரித்து பார்த்து கொண்டிருக்கின்றனர், நம் இம்சை அரசன் படத்து கதைகள் அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

ஹாங்காங் வாசிகள் இந்த படத்தை பிடித்து கொண்டு, மிக பலமான டிரம்ப் எங்களோடு இருக்கின்றார் என இப்படம் பிடித்து ஊர்வலம் செல்ல சீனாவுக்கு கடும் கோபம்

டிரம்பை தொடர்ந்து மோடிக்கும் இம்மாதிரி யோசனை வராமல் இருந்தால் நல்லது, சும்மாவே 56 இன்ஞ் மார்பு என சொல்லிகொண்டிருந்தவர் அவர்..

மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள்

இன்று அப்பாவு என்பவரும் இன்பதுரை என்பவரும் மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள், சமுக்காளம் விரித்து அமர்ந்த நீதிபதிகள் வழக்கு டிசம்பர் 11 வரை ஒத்திவைக்கபடுகின்றது என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

குறிப்பிட்ட ஆசிரியர்களின் வாக்கு பற்றிய சர்ச்சையில் விசாரணை நடத்துகின்றது நீதிமன்றம், அதில்தான் இழுபறி நடக்கின்றது

இனி டிசம்பர் 11ல் என்ன சொல்வார்கள்? டிசம்பர் 21 வரை வழக்கு ஒத்திவைக்கபடுகின்றது என சொல்வார்கள் அவ்வளவுதான்

இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையினை சந்தோஷமாக கொண்டாடமாட்டார்கள் போலிருக்கின்றது.